சந்திரிகா-மோடி உரையாடல்
கற்பனை
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னாலிருந்து
ஸ்ரீ லங்காவின் “கிங் மேக்கராகக்”
கருதப்படும் சந்திரிகா குமாரதுங்க
சமீபத்தில் இந்தியாவந்ததுவும், புத்தகயாவில் இந்தியப் பிரதமரும், சந்திரிகாவும் இணைந்து
பௌத்த ஹிந்து ஒன்றிணைப்புக்கான ஒன்றுகூடலொன்றை நடத்தியதுவும் அனைவரும் அறிந்ததே. மேற்படி
ஒன்றுகூடலின்போது சந்திரிகா குமாரதுங்க அவர்கள் ‘வருமுன்காப்போம்’
எனும் அறிவுறுத்தலை உலகின் அனைத்துத் தலைவர்களுக்கும் பறைசாற்றினார். பல அறநெறிக் காவலர்களால்
வலியுறித்திவரப்படும் இவ் அறிவுறுத்தலை, இன்று வைத்திய உலகமும் வலியுறுத்தி வருகிறது.
தெற்காசியாவெங்கணும் காணப்படும் பண்பாட்டுத்
தேசியங்கள் மத வெறித்தன்மை(fantastic) பெற்றுவரும் இன்றைய சூளலில் சந்திரிகா அம்மையார்
இவ் அறிவித்தலை இந்தியாவில் வைத்து வலியுறித்தியது எதற்காக? கௌதமரின் மண்ணில் அவர்
ஞானாதோயம் பெற்றாரா? அல்லது இந்தியப் பிரதமர் மோடிக்கு ஞானோபதேசம் செய்கிறாரா? இவ்விருவருக்கும்
இடையே நடந்த ஒரு மனந்திறந்த உரையாடலைக் கற்பனைசெய்துகொள்வோம். அக்கற்பனை உரையாடலை படித்துப்
பார்ப்போம்.
சந்திரிகா:-
உருது மொழிதான் அட்சிமொழியென வங்காளிகளிடம்
சொல்லப்போய், பாக்கிஸ்தான் தனது கிழக்குப்
பகுதியை இழந்ததையும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு மொழியென்றால் இரு தேசம் எனும் கோட்பாடு
பாக்கிஸ்தானில் நிஜமாகிவிட்டது. நாமும் பாக்கிஸ்தானும் விட்ட தவறுகளை நீங்களும் இழைத்துவிடாதீர்கள்.
ஹிந்தி மட்டும் அரசமொழி என்ற கோட்பாட்டைத்தான் சொல்கிறேன். வருமுன் காத்துக் கொள்ளுங்கள்!
மோடி:-
எம்மை எடுத்துக்கொள்ளுங்கள், காந்தியார்
காலத்தில் இருந்து இன்றுவரை, ஹிந்தி மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுவருவதில் வாழைப்பழத்தில்
ஊசி ஏற்றியதைப் போன்றே செயல்பட்டுவருகிறோம். இதில் கணிசமான வெற்றியும் பெற்றுள்ளோம்,
மிகவிரைவில் நீங்கள் பெற்றது போன்ற முழுமையான வெற்றியை அடைவோம்.
சந்திரிகா:- (ஏளனமாக) ம்ம்………….பறவாயில்லையே,
இந்திமொழியை ஆட்சிமொழி யாக்குவதிலான உங்கள் தோல்வியை என்னிடமே மிகத் திறமையாக மறைக்
கிறீர்களே. 59வருடங்களாகியும் இன்னமும் உங்களால் வெற்றிபெற முடியவில் லையே? உங்களால்
இதில் வெற்றிபெற முடியாது. இதுதான் உண்மை.
மோடி:- ( ஆசனத்தில் இருந்து கோபத்துடன் முன்னோக்கி
நகர்ந்து) பிறமொழிபேசும் மக்களின் தேசிய எழுச்சிகளை(ஏழனமாக) அடக்கும் தைரியமும், அதற்குரிய
அரச பலமும் எம்மிடமில்லையென்று எண்ணுகிறீர்களா? காஷ்மீரிலும் பிற வடமாநிலங் களிலும்
எங்கள் கைவண்ணத்தை உற்றுப்பாருங்கள் நாம் யாரென்ற உண்மை புரியும். அல்லது இலங்கை, பாக்கிஸ்தான்,
பர்மா, நேபாளம் ஆகிய நாடுகளின் தேசிய இனச்சிக்கல்களில் நாம் தலையிடுவதுபோல் எமது விடயத்தில்
வேறுயாராவது தடையிடக்கூடுமென நாம் அஞ்சுவதாக எண்ணுகிறிர்களா? எமது வல்லரசுத் தனத்தின்
வீரியத்தை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, அதனால் தான் உங்கள் நாட்டுத் தலவர்கள்
அனைவரும் தமிழீழ அச்சநோயால் (Thamileela phobia) நடுங்கிப்போய் நிற்கிறீர்கள். இந்தியாவின்
தலைவரென்ற முறையில் என்னை நம்புங்கள், அச்சம் தவிருங்கள்.
சந்திரிகா:-
இந்தியாவின் வல்லரசவீரியத்தை
சந்தேகிக்கவில்லை. நீங்கள் வீரியமிக்க வர்கள்தான். உலக நாடுகளுடனான உறவைக் கையாள்வதில்
சாம, தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தும் திறனும், அதற்குரிய வளங்களும் உங்களிடம்
உண்டு. உங்கள் வல்லரசுத்தனம் வளர்நிலையிலேயே உள்ளது. இரு முனை உலகின் உருவாக்கத்தால்
உங்கள் காட்டில் தற்போது மழைபெய்வதையும் நானறிவேன். தமிழீழ அச்சநோயில் (Thamileela
phobia) இருந்து எம்மை உங்களால்தான் காக்கமுடியும் என்பதையும் நான் அறிவேன். ஆனால்……
மோடி:
(இடையில் குறுக்கிட்டு) பாராட்டுங்கள்,
எம்மைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள். அப்புறம் எதற்க்கு ஆனால்?
சந்திரிகா:- உங்கள் வல்லரசுத்தனம் அந்நியச்
சந்தையில், அதுவும் குறிப்பாக இந்தியாவின் அயல்நாடுகளின் சந்தையில் விலைபோகக் கூடியதொரு
சரக்கேதவிர அது உள்நாட்டுச் சந்தைக்கேற்ற சரக்கல்ல. ஹிந்தியை அரசமொழி ஆக்குவதில் உங்கள்
அரசு பலவீனமானது என்பதே உண்மையாகும். அது உங்களால் முடியாதொன்றாகும்.
மோடி:- என்ன இது இடதுசாரிகள் போல் பேசுகிறீர்கள்?
ஓ…. நீங்கள் மெத்தப் படித்தவரல்லவா? உலகாளாவிய ஆய்வுநிறுவனமொன்றில் பொறுப்புள்ள ஆய்வாளராகவும்
பணியாற்றிவரல்லவா? எமது நாட்டிலும் இவ்விதந்தான் அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால்
உளறுவாயர்களாகவே உள்ளனர். இருக்கட்டும், “சமாதானத்திற்கான யுத்தம்” என்ற பெயரில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அதிக கொடுமைகளை
செய்தவர் என்ற முறையில் நான் உங்களை மதிக்கிறேன். உங்கள் காரணத்தைச் சொல்லுங்கள்.
சந்திரிகா:- எம் போன்றவர்களுக்கு( தேசிய-இன(ethnic),
மத, மொழி பேரகங்காரவாதிகள்) உதவிபுரியும் இந்தியா பெலவீனப்பட்டுவிடக் கூடாதே என்பதே
எனது ஆதங்கமாகும். மற்றும்படி உங்களில் குற்றங்காண்பது எனது எண்ணமல்ல.
மோடி:- இந்திய இந்திய இடதுசாரிகளின் குதர்க்கங்களின்
மீதான வெறுப்பில் சற்றுக் கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கருத்தைக் கூறுங்கள்.
சந்திரிகா:- ஒரு அரசு, தனது ஆட்சிப் பரப்பில்
வாழும் மக்களின் மத, மொழி, தேசிய, தேசிய-இன(ethnic) உரிமைகளை அடக்குவதில் வெற்றிபெறவேண்டு -மானால்,
அதற்கான முதல் நிபந்தனை, அது ஒரினத் “தேச-அரசாக” (Mono
ethnic Nation-state) இருக்க வேண்டும் என்பதேயாகும். தனிச் சிங்ஹள மசோதாவும், பௌத்த
மதத்தை அரச மதம் ஆக்கியதுவும் பௌத்த-சிங்ஹள ”தேச-அரச” உருவாக்குதைச்
சாத்தியப் படுத்தியுள்ளது. பாக்கிஸ்தான், பங்காளதேஷ், பர்மா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும்
இந்நிபந்தனை நிறைவேற்றப்ப ட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலும் நேபாளத்திலும் இந்நிபந்தனை
இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இவ்விரு நாடுகளிலும் இருப்பது பல்-இனத் தேச-அரசேயாகும்.
Multi Ethnic Nation-State இந் நிலையில் ஹிந்தியை அரசமொழி ஆக்குவது என்பது சாத்தியமில்லாததாகும்.
மோடி;- ஒரினத் தேச-அரசாக (Mono ethnic
Nation-state) இருப்பதற்கும், பல்-இனத் தேச-அரசாக இருப்பதற்கும் Multi Ethnic
Nation-State இடையேயான வேறுபாடுகளை வறையறுத்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.
சந்திரிகா:- அரசினதும் அரசாங்கத்தினதும்
கிட்டத்தட்ட அனைத்துப் பதவிகளும் பௌத்த-சிங்ஹளவர்களின் கைகளிலேயே உள்ளன. அவர்களின்
தய்மொழியான சிங்ஹளமும். பௌத்த மதமும் அரச மொழியாகவும் அரச மதமாகவும் , இருக்கின்றன.
இந்த நிலையை மாற்றுவதானால் ஒன்றில் ஸ்ரீ லங்கா அரசு இயந்திரத்தை பாரியளவிற்கு பலவீனப்படுத்தவேண்டும்
அல்லது புதியதோர் அரசு இயந்திரம் (அரசாங்கம் அல்ல) ஏற்படவேண்டும். ரஜீவ்-ஜெயவர்த்தனா
ஒப்பந்தம் அமூல்படுத்த முடியாதநிலையில் இருப்பதற்கான காரணம் இதுதான். இணக்கப்போக்கான எந்த ஒப்பந்தங்களும் சாத்தியமாகாது.
இதை நீங்களும் நன்கு புரிந்து கொண்டுள்ளீர்கள்.
ஆனால் உங்கள் நிலை அவ்விதமானதல்ல. இந்திய
பல்லின-தேச அரசு(Nation-state) பல் வேறுபட்ட மொழிவளி இனப்பிரிவைச் சார்ந்தவர்களால்
( different varieties of linguistic ethnic people) ஆக்கப்பட்டதாகும். இதனால் ஒரு
மொழியைமாத்திரம் ஆட்சிமொழி யாக்கும் முயற்சியில் உங்களால் வெற்றிபெற முடியாது.
மோடி:- ஹிந்தி இந்தியா மட்டுமல்ல, ஹிந்து
இந்தியாவும் எமது குறிக்கோள் என்பதை அறிந்துமா, இவ்விதம் கூருகிறீர்கள்.
சந்திரிகா:- ஆம், உங்கள் நாட்டுச் சூள்நிலையில்
ஹிந்து இந்தியா எக்காரணத்தைக் கொண்டும் ஒரு
ஒரினத் தேச-அரசாக (Mono ethnic Nation-state) இருக்கமுடியாது. ஏனெனில் ஹிந்தி இனம்
தவிர்ந்த இந்தியாவின் பிற மொழிவழி இனங்கள் (ligustic based ethnic groups) அனைத்தையும்
தள்ளிவைத்தால் தேச அரசில் வெடிப்புகள் ஏற்படும், இந்த வெடிப்புகள் இராணுவத்துள்ளும்
பரவும். புலிகளுடனான யுத்தத்தில் நாம் வெற்றிபெற்ற
பின்னர், எமது இராணுவத்தில்கூட கரவாஸ், கொவிகம எனும் சாதிய மோதல் மேலெழவில்லையா? இம்
மோதல் வெடிக்கும் முன்பாகவே அதைச் சுமூகமாகத் தீர்த்துவைத்த நீங்கள் இதை மறக்கலாமா?
இவ்வித வெடிப்புத் தோன்றினால் அரசின் கைகளில் இருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த ஆளில்லா
நிலைகூட உருவாகலாம். இந்த ஆபத்தை விலைகொடுத்து வாங்கப் போகிறீர்களா? வருமுன் காத்துக்கொள்ளுங்கள்.
மோடி:- உங்கள் பார்வையில் ஒரு அர்த்தம் இருக்கிறதுபோலவே
தெரிகிறது, ஆனால், இந்திய சமுகத்தின் இந்தியத்தன்மையைக் கட்டிக்காப்பதில் சாதியத்திற்கு
ஒரு பெரும்பங்குண்டு. அச் சாதியம் இந்திய பல்லின தேச-அரசைப் பாதுகாக்கும், ஆகவே இவ்வித
ஒரு அச்சம் எமக்கு அவசியமில்லை.
சந்திரிகா:- உண்மைதான், இந்தியாவில் சாதியம்
இன்னமும் ஒரு பலமுள்ள சமூக சக்தியாக விளங்குகிறது என்பதுண்மைதான். ஆனால், தேசியம்,
இனவியம், பெண் ணியம், நுகர்வியம் ஆகியனவற்றின் அசூர வளர்ச்சியின் முன்னால் சாதியத்தின்
வீச்சு அல்லது ஆளுமை பலவீனப்பட்டு வருகிறது என்றே தோன்றுகிறது. ஆகவே சாதியம் மொழித்திணிப்புக்குத்
துணைக்குவருமெனநம்பி ஹிந்தித் திணிப்பில் இறங்குவது நல்லதாகத் தெரியவில்லை.
மோடி:- நன்றி, நன்றி. சாதியத்தினதும் இந்துப்
பண்பாட்டினதும் சக்தி என்னவென்பது எமக்குத்தெரியும். அன்றாட விவகாரம் பற்றிய உரையாடல்களுக்குச்
செல்வோம்.
எழுதியது—15/09/2015 எனதுமுகநூலில் பதிவிட்டது 17/09/2015