Showing posts with label Ethnic national chauvinist. Show all posts
Showing posts with label Ethnic national chauvinist. Show all posts

Wednesday, 12 June 2019

விடுதலைப் புலிகள் மீதான தடையும் , இந்திய அவாவும்.


விடுதலைப் புலிகள் மீதான தடையும்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவும்.
தயவுசெய்து கீழ்கண்ட இரு கட்டுரைகளினதும் தொடர்ச்சியாக இக்கட்டுரையைத் தொடரவும்
(1) பாக்கிஸ்தான்-இந்திய மோதல்
(1).அ) பாக்கிஸ்தான் உருவாக்கம(1)
பிரிட்டிஷ் காலனியல் வாதிகளால் பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டதன் குறிக்கோளே தெற்காசியாவில் இந்துத்துவ இந்தியா ஒரு தனி வல்லரசாக என்றைக்குமே உருவாகக் கூடாது என்பதுதான். பிரிட்டிஷார், லோகமான் திலகரின் தலைமையிலான(2) இந்தியா -வையும் விரும்பவில்லை. சுபாஷ் சந்திரபோஷ் தலைமையிலான(3)  இந்தியாவையும் விரும்பவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான தீவிர இந்துத்துவ நிலைப்பாடு எடுத்த திலகரின் இயக்கத்தை முடியடிப்பதற்காகவே காங்கிரஸ் தீவிரவாதம் மிதவாதம் என் இரு பிரிவாக்கப்பட்டது. காங்கிரஸின் மிதவாதப்பிரிவை வளர்ப்பதற்கான வேலைத் திட்டத்துடன் மோகன்தாஸ் கரம்சந் காந்தி பிரித்தானியரால் அனுப்பிவைக் கப்பட்டார். லண்டனில் வைத்தே(4) இவ் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
அதேபோல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான, சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸில் இருந்து விரட்டப்பட்டதும், அவர் வெளிச்செல்ல நிர்பந்திக்கப்பட்டதும் மோகன்தாஸ் கரம்சந் காந்தியின் கைங்கரியமே. சுபாஷ் சந்திரபோஸ் விரட்டப்பட்டதன் நோக்கம், இந்தியா தம்மைவிட்டுப் பிரிந்து ஜப்பான், ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளின் பாசிஸக் கூட்டுடன் இணையக் கூடாது என்பதேயாகும்.
ஐரோப்பியர் இந்தியாவை ஆக்கிரமிக்க முன்னர் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி புரிந்து வந்தது இஸ்லாமிய மன்னர்களேயாகும்.(5) எந்தவொரு இஸ்லாமிய மன்னர்களும் பிரித்தானியர்களிடம் சரணடையவில்லை. போரிட்டுத் தோற்றார்கள். சிலுவை யுத்தத்தின்(6) தொடர்ச்சி இந்தியாவிலும் நடைபெற்றது எனவும் கூறலாம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நவகாலனிய இந்தியா, இந்துத்துவ இந்தியாவாக இருப்பதையும் விரும்பவில்லை, மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவாக இருப்பதையும் விரும்பவில்லை. இது ஏகாதிபத்தியங் -களின் பொதுவான குணாம்சமாகும்.
இவர்கள், காலனி நாடுகளில் மரபுவழி மதவாத/இனவாதத் தேசியங்கள் சுயாதீனமாக அதிகாரத்துக்கு வருவதையும் விரும்பமாட்டார்கள். மதசார்பற்ற ஜனநாயக தேசியர்கள் அதிகாரத்துக்கு வருவதையும் விரும்பமாட்டார்கள். மதவாதத்/இனவாதத் தேசியவாதிகளே அதிகாரத்துக்கு வரவேண்டும், அதற்காக அவர்களை ஊக்குவிப்பார்கள்; அதேநேரம் அவர்கள் தம்மை மீறாமலும் பார்த்துக் கொள்வார்கள்; மீறினால் இவ்வகைத் தேசியவாதிகள் கட்டுப்படுத் தப்படுவார்கள் இல்லையேல் அழிக்கப்படுவார்கள். இதுவே ஏகாதிபத்தியங்களின் கொள்கையாகும். இன்றும் இதுவே தொடர்கிறது.
அக் கொள்கையின்படி 1940களில் இந்திய நாட்டைக் கூறுபோட்டார்கள். இதற்காக;
அம்பேத்கார்(7) அவர்களின் தலைமையிலான இந்திய ஜனநாயக சக்திகளால் முன்வைக்கப்பட்ட ஒரு நாடு இருதேசங்கள்எனும் தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கையை முறியடித்தார்கள்.
சாவக்கரின்(8)  “ஒரு நாடு, ஒரு தேசம்”,  என்னும் இந்துத்துவ தேசியவாதக் கொள்கையையும் தூக்கியெறிந்தார்கள்.  
இவை இரண்டுக்கும் மாற்றாக, “இரு நாடுகள், இரு தேசங்கள்” எனும் பிரிவினைவாதக் கொள்கையை முன்வைத்தார்கள். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை இந்தியாமீது திணித்தார்கள். இதற்காக மோகன்தாஸ் கரம்சந் காந்தி காந்தியையும்  ஜவர்லால் நேருவையும் தம்முடன் நெருக்கமாக இணைத்துக் கொண்டார்கள்.
இதன் மூலம், பிரித்தானியா தெற்காசியாவை இரு பகமைத் மதவாதத் தேசியவாதக் கூறுகளாக (வஹாபிஸம், இந்துத்துவம்) நிரந்தரமாகப் பிரிப்பதில் மட்டும் வெற்றிகாண -வில்லை;  இந்துத்துவ தேசியவாதத்தை இரு கூறுகளாக நிரந்தரமாக பிரிப்பதிலும் வெற்றி -பெற்றார்கள். ஒன்று தீவிரவாத இந்துத்துவம்(RSS(9))- குறியீடுIcon சவாக்கர், மற்றையது மிதவாத இந்துத்துவம் (காங்கிரஸ்) குறியீடுIcon காந்தி- .
இந்தியப் புவிப்பரப்பு பாக்கிஸ்தான், பங்காளதேஷ், இந்தியா எனும் மூன்று துண்டுகளாக் -கப்பட்டன. இதில் பாக்கிஸ்தானும், வங்காள தேஷும் இணைக்கப்பட்டு-பாக்கிஸ்தான் எனும் நாடுஉருவாக்கப்பட்டது. ஒரெ மதப்பிரிவினர் என்பதைத் தவிர ஒரு தேசமாக திரள்வதற் -கான வேறு எக்காரணமும் இருக்கவில்லை. உண்மையில் பாக்கிஸ்தான் ஒரு தேசமாக இருக்கவில்லை. அது இருநாடுகளின் இணைப்பான ஒரு நாடாகும்.. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் வளர்ந்தன.
பங்காளதேஷ் தனித் தேசமாக ஆவதற்கான போராட்டங்கள் வளரத் தொடங்கின, இந்தியரசின் நேரடி இராணுவ துணையுடன் வங்காளதேஷ் தனித் தேசமாகியது. (10)  
இந்தியரசின் இந்நடவடிக்கை தனது இரு குறிக்கோள்களை நோக்கியதாக இருந்தது.
முதலாவது: பாக்கிஸ்தானைப் பலவீனப்படுத்துவது.
இரண்டாவது: வங்காளதேஷை தனது இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் கொணர்வது. முதலாவது குறிக்கோளில் பாதிவெற்றி. பாக்கிஸ்தான பலவழிகளிலும் பலவீனப்பட்டது, ஆனால் பாக்கிஸ்தானை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்த முடியவில்லை.
பாக்கிஸ்தானின் இராணுவப் பலவீனங்கூட, தற்காலிகமானதே. “பலவீனப்படுத்தப்பட்ட” பாக்கிஸ்தான் நிரந்தர அணு ஆயுத நாடாக மாறியது. (11)
அதேநேரம் இரண்டாவது குறிக்கோள் 100%மும் தோல்வி. பங்காளதேஷின் இஸ்லாமி -யத்தன்மையை மாற்றுவதற்காக இந்துத்துவ இந்தியா பங்காளதேஷில் மேற்கொண்ட டவடிக்கைகள் பங்காளதேஷ் இஸ்லாமியரிடையே மாத்திரமல்ல, இந்திய இஸ்லாமிய -ரிடையேயும் இந்துத்துவ இந்தியத் தேசியத்தின் மீது வெறுப்பை உருவாக்கியது. தெற்காசிய இஸ்லாமியர்களுக்கும் இந்துத்துவ இந்திய தேசியத்திற்கும் இடையேயான உறவு மேலும் கசப்புமிக்கதாக மாறியது. (12)
காஷ்மீர் விவகாரம்(13) தொடர்பாக பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவின் தீவிர முறுகல்நிலை கருத்தியல் நாட்டமுள்ள அரசியல் ஆர்வலர்கள் அனைவ -ரும் அறிந்ததே. இன்று இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளாகும். இதனால், தெற்காசியாவில் ஓர் அணுஆயுத யுத்தம் மூழக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. பாக்கிஸ்தான் இரு துண்டுகளாக்கப்படும்வரை பாக்கிஸ்தான் அரசுக்கும் மேற்கு வல்லரசுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்துவந்தன. பாக்கிஸ்தானை இராணுவமயப் படுத்துவதற்காகவே மேற்கு நாடுகளின் தலைமையில் SEATO(14) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மேற்கு நாடுகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையேயான இராணுவ உறவு பலவீனப்பட்டே உள்ளது. U.N.Oவின் சமீபத்திய தடை பலவீனப்படுத்தலின் உச்சகட்டமாகும். (15) இதன் அர்த்தம் பாக்கிஸ்தான் இராணுவ ரீதியாகப் பலவீனப் பட்டுப்போயுள்ளதென்பதல்ல. இந்திய-பாக்கிஸ்தானிய யுத்தங்களின் போது(16) இருந்ததை விட, பாக்கிஸ்தான் இன்று அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியில் பலப்பட்டேயுள்ளது.
(1) அரசியல் - (அ) இராணுவ எதேச்சதிகாரம் இலைமறை காய் நிலைக்கு உள்ளாகி, இராணுவத்தின் துணையுடனான ஜனநாயகம்ஆட்சி பீடமேறியுள்ளது. (17)
(1-ஆ) எதிர்பார்க்கும் இந்திய எதிர் பாக்கிஸ்தான் அணு மோதலில் பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்ததுவும் அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதும்.
(1-இ) S.C.O வின் நிரந்தர உறுப்பினராகச் சேர்ந்துள்ளதுவும், இதன் மூலம் S.C.O வின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒழக சம்மதித்தவும்; இந் நிபந்தனைகளில் ஒன்று உறுப்பினர்களிடையே இராணுவ மோதல் இருக்கக் கூடாது என்பதுவுமாகும். இந்தியாவும் இணைந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். (18)
2) பொருளாதார ரீதியாக:       (1) சீன அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் one way one road(19) திட்டத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி இணைந்துள்ளதாகும். இதன் மூலம் மேற்காசியாவுக்கான பெரும் வர்த்தக துறைமுகமாகவும், தரைவழிப் பாதையாகவும் பாக்கிஸ்தான் மாறவுள்ளது. இது பாக்கிஸ்தானின் பொருளாதாரக் கட்டுமானத்துக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் நெம்புகோலாகும். இருந்தும் உடனடிப்பலனும், நீடித்த பயனும் அடையப் போவது சீன மக்கள் ஜனநாயகக் குடியரசேயாகும். இதனால் பாக்கிஸ்தான் பொருளதாரத்தின் பாதுகாப்பிற்கு சீனா பல நன்மைகளைச் செய்துள்ளது, இனியும் செய்யவுள்ளது. கடன் தள்ளுபடியும், கடன் வழங்கலும் இவற்றுள் சிலவாகும்.(20) (I.M.F) உலக நிதி நாணயம்(21) ஆச்சரியப்படும் அளவிற்கு இவ் உதவிகள் அமைந்துள்ளன.
3) இராணுவ ரீதியாக:-

(1) ஐ.நா.சபையில் உலகப் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட Jaish-e-Mohammed தலைவர் Masood Azhar

இவ் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். பாக்கிஸ்தான் சியாட்டோவில் இருந்து விலகிய நாள் முதல் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற கருத்தையும், பாக்கிஸ்தான் அரசு சில பயங்கரவாதி இயக்கங்களின் வளர்ப்புத் தந்தை என்ற கருத்தையும் அமெரிக்கா, நேட்டோ (NATO(22)), இந்தியா ஆகிய மூன்று அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக, Masood Azhar தடைசெய்யப்பட வேண்டிய பயங்கரவாதத் தலைவர் என ஐ.நா சபை கொள்ளவேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 2019ஆம் ஆண்டில் இக்கருத்து வெற்றிபெற்றது. ஆனால் இதையொட்டி பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை யாராலும் எடுக்கப்பட -வில்லை என்பதையும், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.
அமெரிக்கா தொடர்ந்து பாக்கிஸ்தானைக் கண்டித்து வருகிறது. ஆனால், நடவடிக்கைகள் இல்லை. இதற்கான காரணங்கள் மூன்று.
(1) ஆப்கானிஸ்தானிய அரசுக்கு எதிரான தலிபான் போராளிகளை அடக்குவதற்கான கொரில்லாக்களை, அமெரிக்காவும், இந்தியாவும் பாக்கிஸ்தானில் வளர்த்து வருகின்றன.
(2) பலுஸ்திஷ்தானின்(23) தனிநாட்டுக் கோரிக்கைக்காகப் போராடும் கொரில்லாக்கள் அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஆதரவைப் பெற்றிருப்பதுடன், அமெரிக்க ஆதரவு கொரில்லாக்கள் ஈரானியப் படைகளையும் அடிக்கடி தாக்கி வருகிறார்கள்.
ஆகவே பாக்கிஸ்தானின் இராணுவக் கட்டுமானத்தில் ஆழவேரூன்றியுள் கொரில்லாத்துவத்தை அப்புறப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ இல்லை. பாக்கிஸ்தானை அரசியல் ரீதியாகத் தனிமைப் படுத்துவதற்கான ஒரு அரசியல் நடவடிக்கையே இதுவாகும்.
வேறோர் காரணமும் உண்டு. தெற்காசிய இராணுவச் சமநிலையில் ஓர் அமைதியை ஏற்படுத்தும் நிலையில் அமெரிக்காவோ நெட்டோவோ இல்லை. அவர்களின் குறிக்கோள் தெற்காசியப் பிராந்தியம், பாக்கிஸ்தானிய இராணுவ-இந்திய இராணுவ பதட்ட பூமியாக தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதேயாகும். இந்நிலையை உருவாக்கியதே இவர்கள்தான் என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால் இன்று பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத நாடுகளாகி விட்டன. இவர்களிடையேயான இராணுவ மேலாண்மைக்கான மோதல் அணு ஆயுத யுத்தமாக மாறுமானால் தெற்காசிய இராணுவ சமநிலை மாத்திரமல்ல, உலக இராணுவ சமநிலையே மாற்றமுறும். இம் மாற்றம் இவ்விரு வல்லரசுகளின் (USA & NATO) இருத்தலையேகூடப் பாதிக்கலாம். ஆகவே பாக்கிஸ்தான்-இந்தியா ஆகிய இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைக்கு இத் தீர்மானம் உதவக்கூடும் என எண்ணுகிறர்கள். தாமே மூட்டிவிட்ட தீயை தாமே தணிக்கப் பார்க்கிறார்கள்; அணைக்க அல்ல, ணிக்க.
அதேநேரம், சீனா, ருஷ்யா ஆகிய இரு வல்லரசுகளின் நோக்கம் தீயைத் தணிப்பதல்ல, அதை முற்றாக அணைப்பதேயாகும். ஐ.நா.வின் இத்தீர்மானத்துக்கு இவ்விரு வல்லரசு களும் ஆதரவு தெரிவித்ததன் உள்நோக்கம் இதவாகத்தான் இருக்கலாம்.
     U.S, NATO கூட்டா, அல்லது BRICS(24), SCO கூட்டா வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    SCOவில் இந்தியாவும் உள்ளது பாக்கிஸ்தானும் உள்ளது. அப்போதுதான் தெற்காசி -யாவில் இந்து-முஸ்லீம் பகமைப்போக்குத் தணியும். அப்போதுதான் தெற்காசியாவில் இராணுவச் சமநிலை ஏற்படும். அப்போதுதான், அணு ஆயுதப் பதற்றநிலையில் இருந்து தெற்காசியா விடுபடும். இவ் உயர்ந்த குறிக்கோளுடன்தான் U.S, NATO கூட்டுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதப்படும், பிரபாகரனுக்குப் பிந்தைய விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதானால், அது வரவேற்கக்கூடியதே.
   ஆனால், உண்மை அதுவல்ல என்பதை ஆப்கானிஸ்தானைப்(25) பொறுத்தும் பலுஸ்திஸ்தான் குறித்தும் இஸ்ரேல்-பலஸ்தீன உறவு(26) குறித்தும் இந்துத்துவ இந்திய தேசியத்தின் நடவடிக்கைகள் அம்பலமாக்கியுள்ளன. U.S, NATO கூட்டின் போடுதடியான ஆப்பானிஸ்தான் அரசை தலிபான்களிடம் இருந்து பாதுகாக்கவேண்டிய அவசியமும், அவசரமும் இந்திய தேசியஅரசுக்கு ஏன் ஏற்பட்டது?
   தெற்காசிய பிராந்தியத்துள் நுழைவதற்கான வாசல்கள் எதுவுமற்றப் போன நிலையில் மேற்கு வல்லரசுகள் ஆப்கானிஸ்தானையே நம்பியிருக்கின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் பாதுகாப்பாகச் செயற்பட முன்வந்துள்ளது ஏன்? பலுஸ்தீஸ்தா -னைப் பிரித்தெடுப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டது ஏன்? ஈரானுக்கு எதிராகவும் பாக்கிஸ்தானுக்கு எதிராகவும் ஒரு அமெரிக்க ஆதரவு கொரில்லாத் தளத்தை பலுஸ்தீஸ்தானத்திலும், பாக்கிஸ்தானிலும் உருவாக்குவது ஏன்? இஸ்ரேல்-பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நெருக்கடியை ஏற்படுத்திவந்த ---------------- நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக அறிவித்தது. இதன் காரணமாக இஸ்ரேல்-பாலஸ்தீன உறவு மீழவும் ஒரு இராணுவ மோதலாக மாறியுள்ளதை இந்தியா அறியவில்லையா? இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு உலகளாவிய யுத்த முனையை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும், ஆப்கானிஸ்தான் அரசுடனும் முன்னணி அமைத்திருப்பது ஏன்?
SAARC(27) கை உடைத்து  BIMSTEC(28)  எனும் அமைப்பை தெற்காசிய நாடுகளின் மீது திணிப்பது ஏன்? தெற்காசிய நலனையும், அமைதியையும் புறக்கணித்து அமெரிக்க நலனின் தெற்காசிய பிரதினிதியாகச் செயற்படுவது ஏன்?
தொடரும்

அடிக்குறிப்புகள்: I
(1)   பாக்கிஸ்தான் உருவாக்கம்
(2) லோக்மான் திலகரின் தலைமையிலான் இந்தியா.
(3) சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்தியா.
(4) காந்தி பிரித்தானியத் தொடர்பு
(5) இஸ்லாமியர்களால் இந்தியா ஆளப்பட்டது பற்றிய குறிப்புகள்
(6) சிலுவை யுத்தம்
(7) அம்பேத்கார்(7)
(8) சாவக்கரின்(8)
(9) RSS(9))-
(10) வங்காளதேஷ் தனித் தேசமாகியது. (10)  
(11)  பாக்கிஸ்தான் நிரந்தர அணு ஆயுத நாடாக மாறியது. (11)
(12)  இஸ்லாமியர்களுக்கும் இந்துத்துவ இந்திய தேசியத்திற்கும் இடையேயான உறவு     மேலும் கசப்புமிக்கதாக மாறியது. (12)
 (13) காஷ்மீர் விவகாரம்(13)
(14) SEATO பற்றி(14)
(15) U.N.O தடை பற்றிக் கூறல்(15)
(16) இந்திய-பாக்கிஸ்தானிய யுத்தங்கள்(16)
(17) இம்ரான் கானின் ஆட்சி(17)
(18) S.C.O-பாக்கிஸ்தான் இந்திய இணைப்பு(18)
(19) one way one road(19)
(20) சீன-பாக்கிஸ்தான் கடன்.(20)
(21) I.M.F.(21)
(22) (NATO(22)
(23) பலுஸ்திஸ்தான்(23)
(24) BRICS(24)
(25) ஆப்பானிஸ்தான்(25)
(26) இஸ்ரேல் பாலஸ்தீனிய உறவு(26)
(27) SAARC(27)
(27) BIMSTEC(28)  




In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...