Showing posts with label vidiyal. Show all posts
Showing posts with label vidiyal. Show all posts

Saturday, 20 April 2019

காகம் கேட்கிறது


தளம் கலை இலக்கிய இதழ்- பக்கம்-93-97
விந்தனின் ஓ மனிதா! தொகுப்பிலிருந்து... (1977-ல் வெளியிடப்பட்டது)
காகம் கேட்கிறது
கொஞ்ச நாட்களாக உங்களை இந்த சோஷலிஸ பைத்தியம்பிடித்து ஆட்டி வைக்கிறது. எங்களையும் நீங்கள் சோஷலிஸ்டுகள்என்று சொல்லி எது கிடைத்தாலும் அதை நாங்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதாகப் போற்றி வருகிறீர்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை யென்றால், நீங்கள் சோஷலிஸம்பேசும் அளவுக்குத்தான் உண்மை!
அதாவது, கீழே ஏதாவது இருந்து, அதைக் கொத்திக் கொண்டு மேலே போக முடியாமலிருந்தால், நாயோ பூனையோ வந்து விரட்டி விட்டுத் தின்றுவிடக் கூடாதே என்பதற்காகக் கா, கா, காஎன்று கரைந்து நாங்கள் பக்க பலத்துக்காக மேலும் கொஞ்சம் கூட்டம் சேர்ப்போம். உங்களுக்கு முன்னால் அதைக் கலந்துண்டு’, எங்களை சோஷலிஸ்ட்டுகளாகவும், காட்டிக்கொள்வோம். கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலே போக முடிந்தாலோ?-அதைக் கொண்டுபோய் ஒரு மரக்கிளையின்மேல் வைத்து, அது தவறிக் கீழே விழுந்துவிடாதபடி அதன்மேல் ஒரு காலை ஊன்றிக்கொ்டு, சக காக்கைகள் பகிர்ந்துண்ண அவற்றைச் சிறகால் அடித்து விரட்டிக் கொண்டு, அதை நாங்களே, நாங்கள் மட்டுமே எங்கள் அலகால் பிய்த்துப் பிய்த்துத் தின்று தீர்ப்போம்.
இந்த விஷயத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ஓர் அபூர்வ ஒற்றுமை என்னவென்றால், நீங்களும் கீழே உள்ளவரை சோஷலிஸம் பேசிவிட்டு, மேலே போனதும் அதை மறந்து விடுகிறீர்கள்; நாங்களும் கீழே எதையாவது வைத்துத் தின்ன நேர்ந்தால் சோஷலிஸ்ட்டுகளாக இருக்கிறோம்; மேலே வைத்துத் தின்ன முடிந்தால் சுதந்திராவாகி விடுகிறோம்.
அடாடா! இந்த அழுமூஞ்சி உலகத்தையே  ஆனந்த உலகமாக்கப் போகும் சோஷலிஸத்தில் நமக்குள்ளே என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!
அது போகட்டும்; இது என்ன சங்கதி? - உங்களில் சிலர் உண்பதற்காக காடை, கவுதாரி போன்றவற்றைப் பிடிக்கிறார்கள், அதை நான் பார்த்திருக்கிறேன். வளர்ப்பதற்காகக் கிளி, மைனா போன்றவற்றைப் பிடிக்கிறார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். எங்களையோ?-யாரும் எதற்காகவும் பிடிக்கவுமில்லை; பிடிப்பதாகத் தெரியவுமில்லை. அப்படியிருந்தும் இந்தக் காக்கா பிடிக்கும் கலைஎன்று உருவாகி வளர்ந்தது?...
அதைப் பற்றி நீங்கள் யோசித்தீர்களோ இல்லையோ, நான் யோசித்தேன், அப்படி யோசித்தேன் . கடைசியில் அந்தக் கதைதான் என நினைவுக்கு வந்தது. எந்தக் கதை?’ என்கிறீர்களா?-சொல்கிறேன்:
தங்களைப் பற்றியே. இன்னும் சரிவர ஆராய்ந்து தெரிந்து கொள்ளாத உங்களில் சிலர், எங்களைப் பற்றி இப்போது ஆராய்ந்து வருகிறார்களல்லவா? அவர்கள் எங்கள் இனத்தைத் திருட்டுப் பறவை இனத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இது ஏன்?’ என்று எனக்குப் புரியவில்லை. யாரோ படைத்த பொருட்களுக்குச் கச்சேரி பிரமாதமாயிருந்தது. இந்த சீசனிலேயே ஏ ஒன் கச்சேரி உங்களுடையதுதான்என்று எல்லாரும் பேசிக் கொண்டார்கள்!என்று காக்கா பிடித்துக் கொண்டே உள்ளே நுழைகிறீர்கள்.
ஏன் ஐயா, என் மானத்தை இப்படி வாங்குகிறீர்? இந்த சீசனிலேயே அந்த ஒரு கச்சேரிதான் எனக்குக் கிடைத்தது. அதுவும் கடைசி நிமிஷத்தில் கான்சலாகி விட்டது! என்கிறார் அவர்.
அப்போதுதான் அன்றைக்கு முதல் நாள் அவருடைய கச்சேரி நடக்காமற்போனது உங்களுக்குத் தெரிகிறது. ஹிஹி, அப்படியா? நான் வரேன்!என்று போன சுவடு தெரியாமல் திரும்பிவிடுகிறீர்கள்.
இது ஒரு விதம்.
அலுவலகத்தில் பத்தோடு பதினென்றாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மானஜர் தம் அறையிலிருந்தபடி, “யார் அங்கே?” என்கிறார். அவர், ‘எள்என்பதற்குள் என்ணெயையே கொண்டு போய்க் கொடுத்துவிட வேண்டுமென்பதற்காக, “இதோவந்து விட்டேன்,” என்று நீங்கள் எல்லாரையும் முந்திக்கொண்டு ஓடுகிறீர்கள். எங்கேயோ போயிருந்த ஹெட் கிளார்க்கைத் தேடிப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் மானேஜருக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள். நான் இவரையா கூப்பிடச் சொன்னேன்?” ஸ்டெனோவையல்லவா கூப்பிடச் சொன்னேன்?” என்கிறார் அவர். ஹிஹி, ஸ்டெனோவையா? இதோ கூப்பிடுகிறேன்!என்று பிடரியை ஒரு காரணமுமில்லாமல் தடவிக்கொண்டே திரும்புகிறீர்கள்.
இது இன்னொரு விதம். காகம் கேட்கிறது.
ஆக, எல்லாக் கலைகளிலும் உள்ள நுணுக்கம்இந்தக் கலையிலும் இருக்கிறது. அந்த நுணுக்கம் தெரிந்தவர்களே இதிலும் வெற்றிபெற முடிகிறது; அல்லாதவர்களே இதிலும் வெற்றிபெற முடிகிறது; அல்லாதவர்கள் தோல்வியையே தழுவ நேருகிறது.
ஓமனிதா! ஒரு பாவமும் அறியாத என்னை இந்தக் காக்கா பிடிக்கும் கலையில் சம்பந்தப்படுத்தியதோடு நீ நின்றாயா?-இல்லை; தெருவில் நீ அடித்துப் போடும் எலிகளையும், உன் காலடியில் சிக்கிச் செத்துக்கிடக்கும் தவளைகளையும் அப்புறப்படுத்தி நான் துப்புரவாக்குகிறேன் என்பதற்காக நீ என்னை ஆகாயத் தோட்டிஎன்ற சிறப்புப் பெயரால் வேறு அழைத்துத் தொலைகிறாய்!
இதில் தோட்டிஎன்னத்துக்கு, ‘தோட்டி?’ அதற்குப் பதிலாக ஆகாயத் தொண்டன்என்றோ, ‘ஆகாய ஊழியன்என்றோ அழைத்தால் என்னவாம்?
எப்படி அழைப்பாய்? ‘தொழிலுக்கு ஒரு ஜாதி, ஜாதிக்கு ஒரு தொழில்; என்று அந்த நாளிலேயே கண்டவனாயிற்றே நீ! நாளதுவரை ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் சவரத் தொழிலாளிஎன்றும், ‘சலவைத் தொழிலாளிஎன்றும் அரிஜன்என்றும் பழைய பெயர்களுக்குப் பதிலாகப் புதிய புதிய பெயர்களைக் கூட்டி, ஜாதிக்கு ஒரு தொழிலையும், தொழிலுக்கு ஒரு ஜாதியையும் நவீன முறையில் வளர்த்து வருபவனாயிற்றே நீ!
இந்த நிலையில் தன் ஜாதிக்கு விரோதமாகச் சவரத் தொழிலை மேற்கொண்டு தொழிலுக்கு ஒரு ஜாதியில்லை?’ என்பதை நிரூபிக்க உங்களிடையே உள்ள ஒரு முதலியாரோ, ஒரு நாயுடுவோ எங்கே முன் வரப் போகிறார்?
சலைவைத் தொழிலை மேற்கொண்டு, ‘ஜாதிக்கு ஒரு தொழில் இல்லைஎன்பதை நிரூபிக்க ஒரு சர்மாவோ, சாஸ்திரியோ எங்கே துணியப் போகிறார்?
என்னை ஆகாயத் தோட்டிஎன்று இழித் துரைக்கும் மனிதனே! உங்களிடையே உங்களில் ஒருவனாக நடமாடும் தோட்டியை நீ நகர சுத்தித் தொழிலாளி’, என்று சொல்லிவிட்டால் சமூகத்தில் அவனுக்குள்ள இழிவு அவனை விட்டுப் போய்விடுமா?
ஒரு நாளும் போகாது.
அதனால்தான் வைசியரான மகாத்மா, தாமே தோட்டி வேலைசெய்து காட்டினார். அவரையே டாக்டர் அம்பேத்கார் கேட்டார்:
அரிஜனங்கள் கடவுளின் மக்கள்என்றால் மற்றவர்கள் யாருடைய மக்கள்?”
இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘புறப்புரட்சி மூலம் யாரும் எதையும் சாதிக்க முடியாது; அகப்புரட்சி மூலமே சாதிக்க முடியும்என்று தெரியவில்லையா?
அந்த அகப் புரட்சியை நீ எப்போது செய்யப் போகிறாய்?
அதைச் செய்தால், ‘ஜாதி இருக்காது; ஜாதி இல்லாவிட்டால் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற முடியாது; தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டால் எம்.எல்.ஏ. வாகவோ, அமைச்சராகவோ ஆக முடியாது; ஆகாவிட்டால் ஜனநாயகம் பிழைக்காதுஎன்கிறாயா?
அதுவும் சரி; எது பிழைத்தால் என்ன, எது பிழைக்கவிட்டால் என்ன?-நீ பிழைத்தால் சரி!
சுயநலத்தில் பிறந்த சோஷலிஸம்இப்படி இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...