Showing posts with label அகதிகள். Show all posts
Showing posts with label அகதிகள். Show all posts

Monday, 20 May 2019

சுயமரியாதை இன்றேல் சுதந்திரம் இல்லை


சுயமரியாதை இன்றேல் சுதந்திரம் 

இல்லை


சுயமரியாதையும் இல்லாத, தனிமனித சுதந்திரம் கூட இல்லாத, அகதிகள் என்றோர் புதிய சமூகத்தட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இது உலகளாவிய ஒரு சமூகத்தட்டாகும். இதர்க்கு தேச எல்லைகள் கிடையாது. தேச எல்லைகளுக்குள் கட்டுப்பட்டிருக்கும் மக்கள் குழாம்களுக்கு உள்ள சமூக அரசியல் கட்டுமானங்கள் எதுவுமே இவர்களுக்கு இல்லை. உலகெங்கணும் வாழும் அகதிகள் தமது சொந்த நாட்டின்( தம்மை அகதிகளாக்கிய நாட்டின்) அரசியலுடன் ஒன்றிப்போனவர்க ளாகவோ அல்லது பகைத்துக் கொண்டவர் களாகவோ வாழ்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. பட்டும் படாத நிலையே உள்ளது. அவ்விதம் ஒன்று இல்லையே என்பதற்காக எவரையும் இட்டுக் கவலைப்படவும் முடியாது. இவர்கள் வாழும் நாடுகளில் உள்ள இவர்களின் குருதியினத்தவராலோ, மரபினத்தவராலோ இவர்கள் தழுவிக்கொள்ளப்படவுமில்லை. அங்கும் அந்நியமானவர்களாவே நிற்கிறார்கள். இவர்கள் தஞ்சம் அடைந்துள்ள நாடுகளில் இருந்துகூட இவர்கள் துரத்தப்படலாம். வேறு நாடுகளுக்குத் துரத்தப்படலாம். கடந்த பத்து வருடங்களாக, இவர்களை வெளியேற்றிய எந்தவொரு நாடும் இவர்களை திருப்பிக் கூப்பிட்டதாக இல்லை. அகதிகள் உருவாக்கம் இனி நடக்காது என்று கூறுவதற்கும் இல்லை. அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே யுள்ளன. இவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள வர்க்கப் பிரிவுகளுடன் இணையும் நிலையிலும் இவர்கள் இல்லை. இங்கும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. இவர்களின் வரலாற்றுக் கடமைகளும் சமூகக் கடமைக ளும் என்ன?


முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் காலத்தில் தேச உரிமைகளும், தேச அங்கிகாரமும் இல்லாத ஒரு மக்கள் குழாம் உருவானது. இவர்களை பின்நாளில் தேசிய இனங்களாக வளர்ச்சி பெறவைப்பதில் முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னைய கால மார்க்ஸிய தத்துவாதிகளும், அரசியல் தலைவர்களும் பெரும் பங்காற்றினார்கள். இதன்மூலம் ஒரு பெரும் உலக நெருக்கடிதீர்த்துவைக்கப்பட்டது.ஆனால்,இன்றைய நிலையில் அகதிகள் பிரச்சனைக்கான தீர்வைக்காண்பதில் எவருக் கும் அக்கறையில்லா நிலையே தெரிகிறது. ஐ.நா சபை அகதிகளைப் பரமரிப்பதிலும், அகதிகள் உருவாவதற்கான காரணங்களைத் தவிர்ப்பதிலுலும் பட்டும்படாத முறையிலான அக்கறைகாட்டிவந்தது. ஆனால், பாலஸ்தீனிய அகதிகள் விடயத்தில் ஐ.நாவின் தலையீட் டைக் கண்டித்து அமெரிக்கா ஐ.நாவில் இருந்து விலகிக் கொண்டது. இது அகதிகளுக்கு பெரும் பாதிப்பாகும். அகதிகளின் செவிலித்தாய் பலவீனப்படுத்தப் பட்டுவிட்டாள். அதேபோல், மக்கள் சீனத்துக்கும், மியான்மருக்கும் இடையே நடந்த சமீபத்திய பேச்சுவார்த் தையின் போது மியான்மரில் இருந்து வெளியே -ற்றப்பட்ட அகதிகளின் நிலைபற்றிப் பேசப்படவேயில்லை. இலங்கை-மக்கள் சீன உறவிலும் அதுவே நடக்கின்றது.


அகதிகள் விடயத்தில் முதலாழித்துவ வாதிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அகதிகள் விவகாரத்தில் ஒரு அரசியல் தீர்வும், அத்தீர்வை நியாயப்படுத்தக் கூடிய ஒரு தத்துவார்த்தப் பார்வையும் அவசியம். அதை உருவாக்குவதற்கான விவாதங்கள் அவசியமாகின்றன. தம்மை வஞ்சித்த முதலாழித்துவத்தையும் அதன் உலகளாவிய வலைப்பின்னலையும் தூக்கி எறியவும், அறுத்தெறியவும் அகதிகள் தயாராகவேணடும். அதுதான் அவர்களின் அகதிகள் நிலைக்கான ஒரே தீர்வாகும். உலக கம்யூனிஸ இயக்கம் இதற்கான பாதையை வகுப்பதில் நாட்டங்காட்டவேண்டும். உலகின் எந்தவொரு பகுதியிலும் பரதேசிகள் என்று எவரும் இருக்கக்கூடாது.


அகதிகளின் உருவாக்கலில் செழிப்பைக் காணும் அனைத்துத் தேசங்களும் ஒழிந்து போகட்டும்!அக்திகளற்ற ஒரு உலகம் உருவாகட்டும்!


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...