Tuesday, 13 March 2018

மியான்மரின் ஹோஹின்யாவும் சிறிலங்காவின் மலையகமும்- 
                                                             ஒரு    ஒப்புநோக்கு

நான்காம் உலகின் நான்கு படையணிகள்

முதலாளித்துவம், தனது உலகளாவிய வளர்ச்சிப்போக்கில் ஒருபுறத்தில், சமூகவழர்ச்சிக்கு அவசியமான வளர்திசைக் குணாம்சம்கொண்ட ‘தேசிய இனங்கள்’ எனும் சமூகக்குழுமங்களை உருவாக்கியது, அவ் உருவாக்- கம் இன்னமும் தொடர்கிறது.
மறுபுறத்தில்; “வந்தேறிகள்”, “மதமாறிகள்” ,“அகதிகள்” எனும் மூவகை சமூகக் குழுமங்களை உருவாக்கியது. இவ் உருவாக்கமும் இன்னமும் தொடர்கிறது. இவை ஒவ்வொன்றும் இருகூறுகளாகப் பிரிந்துகாணப் படுகின்றன. “ஆக்கிரமிப்பு வந்தேறிகள்”---–“அடிமைகுடிமை வந்தேறிகள்”; “ஆக்கிரமிப்பு மதமாறிகள்”----- “அடிமை குடிமை மதமாறிகள்”; “வர்க்க-சமூக மேலோங்கி அகதிகள்”------ வர்க்க-சமூக அடிமை குடிமை அகதிகள்” இதில் முன்னவர்கள் வளர்தடைக்குணாசம் கொண்டவர்கள். பின்னையவர்கள் வளர்திசைக்குணாம்சம் கொண்ட- வர்கள்; முதலாளித்துவத்திற்கு எதிரான உலகளாவிய போராட்ட சக்தியாக அணிதிரண்டு வருபவர்கள்.
நான்காவது உலகின் போர்ப்படையில் இம்மூவரும் சக்திமிக்க உலக ளாவிய தனித்தனித் படையணிகளாகும். நான்காம்உலகின் பிரதான படையணியான தேசிய இனவிடுதலைப் போராட்ட அணியின், துணைப்படைகளாகும்.
“மியான்மரின் றோஹின்யாவும், ஸ்ரீ லங்காவின் மலையகத் தமிழர்களும்-ஓர் ஒப்புநோக்கு” எனும் கட்டுரை இலங்கையிலும், பர்மாவிலும் காணப்படும் “அடிமை-குடிமை வந்தேறிகளின்” படையணியைப் பற்றி ஆராய்கிறது.
               மியான்மரையும், சிறிலங்காவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுவும் அவசியம்; ஹோஹின்யா முஸ்லீம்களையும் மலையகத் தமிழர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுவும் அவசியம்; இலங்கை முஸ்லீம்களையும் றோஹின்யா முஸ்லீம்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுவும் அவசியம். இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டவையானாலும், அவை தனித்தனியான விவகாரங்களாகும். முன்னைய ஒப்பீட்டில், இலங்கையின் ஒடுக்கப்பட்ட தெசிய இனங்களும், சிங்கள மக்களும், பௌத்த-சிங்கள பேரகங்காரவாத அரசிற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான படிப்பினைகளை மியான்மரின் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். (இவ் இரு நாடுகளிலும் பெளத்தர பேரகங்காரவாதம் தோன்றுவதற்கும் நிலைத்து நின்று வளர்வதற்குமான அக, புற சுழல்களும் தேவைகளும், குறிக்கோள்களும் கிட்டத்தட்ட ஒன்றேதான். பௌத்த குருதியினக் குழுமம் தவிர பிற இனக்குழுமங்களை அடக்குதல், நாடுபூராவிலும், இடதுசாரி இயக்கங்களின் வழர்ச்சியைத் தடுத்து நிறுத்துதல் ஆகியனவே அப்பொதுவான குறிக்கோள்களாகும்). ஆகவே, இவ்விதமானதோர் ஒப்பீட்டுஆய்வு, சிங்களமக்கள் உட்பட இலங்கைமக்கள் அனைவருக்கும் பலனுள்ள பல படிப்பினைகளைத் தரக்கூடியதாக இருக்கும். சிங்கள பௌத்தர்கள் எவ்விதம் ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராகப் போராடியுள்ளா ர்களோ, போராடிவருகிறார்களோ, அதே போன்று பர்மிய பௌத்தர்களும் பர்மிய அரசுகெதிராக நீண்டநெடிய போராட்டங்களை நடத்தியுள்ளார்கள், நடத்தி வருகிறார்கள். பர்மிய இடதுசாரிகளில் ஒரு பகுதியினர் ஆயுதம் ஏந்திய போராளிகள் என்பதைக் குறிப்பிடவேண்டும். ஆனால், இரு நாட்டிலும் பௌத்த குருதியினப் பேரகங்காரவாத அரசு தொடர்ந்து வளர்ந்த வண்ணமேயுள்ளது. ஏன்? ஆராயவேண்டும். இவ் அரசைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதற்கு இரு பகுதிகளின் பௌத்த ஜனநாயக வாதிகளால் கூட முடியவில்லை. ஏன்? ஆராய வேண்டும்.
ஆனால், மியான்மரின் ஹோஹின்யாவும், சிறிலங்காவின் மலையகமும் எனும் ஒப்பீட்டாய்வு தேசிய இனச்சிக்கல் தொடர்பாகவும் தேசிய இனங்களை வரையறை செய்வது தொடர்பாகவும் தெற்காசியா எங்கணும் நிலவும் கோட்பாட்டு மயக்கத்தையும் அரசியல்த் தவறுகளையும் களைந்தெறிய உதவுக் கூடும். இதன்மூலம், காலனியல்காலத்தில், காலனிய இம்சைகளின் காரணத்தால் தத்தமது பரம்பரைப்/பாரம்பரிய பிறந்த மண்ணைவிட்டு தமக்கு அந்நியமான வெவ்வேறு பகுதிகளுக்கு அல்லது நாடுகளுக்கு பொருளாதாரப் பிளைப்புத்தேடி குடியேறிய அல்லது காலனிவாதிகளால் குடியேற்ற ப்பட்ட மக்களின் இன்றைய தேசிய அந்தஸ்து தொடர்பான பொதுப்புரிதலை உருவாக்கவும் உதவுக்கூடும்.

களையப்படவேண்டிய அக் கோட்ப்பாட்டு மயக்கம் எது?
ஒரு இனக்குழுமமானது Ethnic Group, தேசம்(Nation) எனும் அந்தஸ்தை அல்லது குறைந்தது தேசிய இனக் குழுமம் Ethno-National Group எனும் தேசிய அந்தஸ்தைப் (National Status) பெற வேண்டுமானால், அவ்-இனக்குழுமத்திற்க் நிலமானிய சமூக அமைப்புக்கு முன்னைய பாரம்பரிய வரலாற்றுடன் கூடிய பாரம்பரியப் பிரதேசமொன்று இருக்கவேண்டு மென்பதையும் ஒரு நிபந்தனையாக ஏற்றுக் கொண்டி ருப்பதே அக்கோட்பாட்டு மயக்கமாகும். தேசியவாத ஒடுக்குமுறைக்குச் சேவை புரியும் இக்கோட்பாடு களையப்படவேண்டும்.

தேசிய இனங்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும், அல்லது போராட வேண்டுமெனும் கருத்தை உணர்வுபூர்வமாக முன்வைக்கும் ஜனநாயகவாதிகளில் பெருமளவினரும், அனைத்து வகைத் தேசியவாதிகளும் இவ்விதத் தப்பிதக் கண்ணோட்டம் கொண்ட வர்களாகவே உள்ளனர். ஏனெனில் தேசியவாதம் எப்போதுமே இட்டுக்க ட்டப்பட்ட, பாரம்பரிய, புராணிய பெருமிதங்களின் அடிப்படையிலேயே கட்டிஎழுப்பப் படுகிறது.
இக் கருத்தின்படி இலங்கையின் மலையகத் தமிழர்களும், மியான்மரின் றோஹின்யர்களும் தேசிய-இனக் குழுமம்(ethno-national group) எனும் குறைந்தபட்சத் தேசிய அந்தஸ்தைக்கூடப் பெறத் தகுதியற்ற வர்களாகிறார்கள். ஏனெனில் மலையகத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து பிரித்தானியரால் கொண்டு வரப் பட்டவர்களாகும். தேசியவாத நோக்கின்படி (பண்பாட்டு மரபு வழியிலும், பிரதேச மரபுவழியிலும்) பார்த்தால் அவர்கள் இந்திய வம்சாவழியினராகின்றனர். இதன்படி, அவர்களின் தற்போதைய வாழிடமான இலங்கையில், அவர்கள் 200 வருடங்களுக்கும் குறைவான மரபுவழிப் வாழ்விடத்தைக் கொண்டவர்க ளேயாகும்.  இக் குறிகியகால(200வருடம்) மரபுவழி வாழ்விடத்தை மலையகத் தமிழர்களுக்குச் சொந்தமானதென கருதமுடியுமா?  இது 2000வருட மரபுவழித்தாயகத்தையுடைய பௌத்த-சிங்களத் தேசிய-இனக்குழுமத்தின் தாயகத்தை ஆக்கிரமிப்பதாக ஆகிவிடாதா? எனும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸாம், மிசோராம், நாகலாந்து பகுதிகளில் வாழும் பழங்குடியினர் அங்குவாழும் பிற இந்தியக்குடிகளை “இந்தியனே திரும்பிபோ!” என்று கூறுவதை சரியென ஏற்றுக்கொள்பவர்களும் உள்ளனர். இது சரியென்றால் றோஹின்யர்கள் வெளியேற் றப்படுவதுவும் சரிதான், மலையகத் தமிழர்கள் வெளியேற்ற ப்படுவதுவும் சரிதானா? 
மியான்மரின் றோஹின்யா விவகாரத்திலும் இதேகேள்வி எழுகிறது. 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இலங்கையும், இந்தியாவும், பிரித்தானியரின் ஆட்சியின் கீழேயே இருந்தன. ஆனால் ஒரே ஆட்சிக் கட்டுமானமாக இருக்கவில்லை. தனித் தனியாகவே ஆளப்பட்டன. அது போலவே இந்தியாவும் பர்மாவும் (இன்றைய மியான்மர்) பிரித்தானியர்க ளால் தனித் தனியாகவே ஆழப்பட்டன காலனியல் கட்டுமானத்துக்குப் பொருத்தப்பாடான முதலாளித்துவ வளர்ச்சியை, இலங்கையில் முன்னெடுத்துச் சென்றது எவ்விதம் பிரித்தானியர்களாக இருந்தார்களோ அதுபோலவே பர்மாவிலும் அவர்களாகவே இருந்தார்கள்.
இலங்கைத் தீவு முழுமையும் பிரித்தானியர்களின் ஆளுமைக்குக் கீழ் வந்த காலத்தில், நான்கு மக்கள் பிரிவினர்தான், இயல்பாகவே தேசியஇனக் குழுமங்களாக வளரக்கூடிய நிலையில் இருந்தனர். சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், பறங்கியர்கள் ஆகியோரே அவர்களாகும். இயல்பாகவே தேசிய இனக் குழுமமாக வளரமுடியாத நிலையில் இருந்தோர் - பழங்குடி மக்கள் நிலை - வேடர்கள் எனும் மக்கள் பிரிவு மாத்திரமேயாகும். இவ் ஐந்து மக்கள் பிரிவினரிலும் சிங்களவர்கள், தமிழர்கள் எனும் இரு பிரிவினர் மாத்திரமே மிக நீண்ட பிரதேச பாரம்பரிய த்தையும், மிக நீண்ட பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், மிக நீண்ட மொழிப் பாரம்பரியத்தையும் இலங்கைக்குள்ளேயே உள்ளவர்களாக இருந்தனர். இவ்விருவரினது பாரம்பரியமும் புராணகாலத்தையும் தாண்டிச் செல்கிறது. தமிழ் மொழிப் பாரம்பரியம் தனித்துவமிக்கதாக இருந்தாலும் அது இலங்கைக்கென்று தனியா னதல்ல, அது இந்தியத் தமிழர்களின் மொழிப்பாரம்பரியத்துடன் இணைந்ததாகவேஉள்ளது. இப்பாரம்பரியம் புராணகாலத் தையும் தாண்டி சங்ககாலம்வரை செல்லக்கூடியளவிற்க்கு நீண்டது. ஆனால், சிங்கள மொழிப் பாரம்பரியமோ இலங்கைக்கென்று தனியானது. சிங்கள மொழி வேறு எந்த நாட்டிலும் இல்லை. இருந்தும் இப்பாரம்பரியம் குவேனிகாலம்வரை செல்கின்றது. இதனால்தான் குருதியின வழிக் குழுமமான சிங்களவர்கள் தம்மை விசேடத்துவம்  மிக்கதோர் மொழிவழி மரபுக் குழுமமாகவும் அறிமுகப்படுத்திக் கொள்வது சாத்தியமானது. அத்துடன் சிங்களர்களின் பௌத்தமும், தமிழர்களின் சைவமும் இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டதாகவும், இஸ்லாமும், கிருஸ்துவமும், அரேபிய, ஐரோப்பியப் பாரம்பரியங்களைக் கொண்டனவாகவும் இருந்தன என்பதுவும் கவனிக்கப்படவேண்டும்.

வேடர்கள்:- இவர்கள் தொன்மைப் பிரதேச பண்பாடும், தொன்மைப் பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்டவர்கள். மொழி வளர்ச்சி இல்லை. சிங்கள மொழியே இவர்களின் தொடர்பு மொழியாக உள்ளது. புராணங்களில் இழிவாகச் சித்தரிக்கப்படுபவர்கள். இவர்களின் ஆதிப்பொதுவுடமை எனும் மிக உயர்வான பாரம்பரியத்தை தேசியவாதிகள் கண்டுகொள்வதில்லை. அதை ஒரு பாரம்பரிய பெருமிதமாக ஏற்றுகொள்வதில்லை. இவர்களின் தொன்மைப் பண்பாடு ஆதிப்பொதுவுடமைச் சமூகக் கட்டுமானத்தின் மூலக்கூறுகளை உள்ளடக்கியதொன்றாகும். இதனால் இன்றைய சமூகத்திற்குரிய வர்க்க வேறுபாடுகள் இவர்களிடையே வளர்ச்சிபெறவில்லை. தேசியவாதத்தின் தலைமையணி, முதலாளித்துவ, நிலவுடமை வர்க்கங்களாக இருந்தாலும், எங்கும் எப்போதுமே தேசியவாதத்தின் படையணி, சிறு உடைமை வர்க்கங்களேயாகும்( விவசாயிகள், மூளைஉழைப்பாளர், சிறு பண்ட உற்பத்தியாளர்கள், சிறு வியாபாரிகள்). வேடர்கள் மத்தியில் இவ்வர்க்கங்கள் தோன்றாத படியாலும், எண்ணிக்கையில் இவர்கள் மிகக் குறைவானவர்களாய் இருந்ததாலும் தேசியவாத இயக்கங்கள் இவர்களிடையே தோன்றவில்லை. தோன்றக் கூடிய வாய்ப்புகளும் இல்லை. மைமரிலும் இதே நிலையில் பல பழங்குடியினக் குழுமங்கள் உள்ளன.
முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அவர்களில் ஒரு பகுதியினர் அரேபிய வர்த்தகத்தின் பரவலுடன் நேரடியாக அரபு நாடுகளில் இருந்து சுயவிருப்புடன் வந்தவர்களாகவும் இன்னோர் பகுதியினர் தென் இந்தியாவில் இருந்து சுயவிருப்புடன் வந்தவர்களாகவும் காணப்படு கின்றனர். மலே முஸ்லீம்கள் என்றோர் பகுதியினரும் உண்டு. இலங்கைப் பெண்களுடனான திருமண உறவின் மூலம் புதிதாகத் தோன்றிய ஒரு மதவழி இனக்குழுமமே முஸ்லீம்களாகும். இவை ஐரோப்பிய காலனியல் காலத்துக்கு முற்பட்ட நிகழ்வுகளாகும். இவர்கள் மதமாற்றத்தால், தமது சொந்தப்பாரம்பரியத்தையும், தொன்மையையும் அரேபியத் தொன்மையிடம் இழந்தவர்களானார்கள். இன்று முன்னூறு வருடத்திற்கு உட்பட்ட பிரதேசப் பாரம்பரியம் மட்டுமே உள்ள மதவழி இனக்குழுமமாகக் காணப்படுகிறார்கள். காலனியல் கால மதமாற்றம் என்பது மக்களைத் தொன்மைநீக்கம் செய்தலும், பாரம்பரிய நீக்கம் செய்வதுமேயாகும். காலனியல் ஆக்கிரமிப்பின் பண்பாட்டுத்துறை ஆயுதங்களில் ஒன்றுதன் மதமாற்றமாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பறங்கியர்: இவர்களும், ஐரோப்பிய ஆக்கிரமிப்பின் பின்னர் உருவான இனக்குழுமமாகும். முஸ்லீம்களைப் போலவே இவர்களும் மதம் மாறிகளே. இதனால், தாம் வாழும் மண்ணில் தமது மதத்தின் தொன்மைப் பண்பாடு எனக்கூற எதுவும் இல்லாதவர்கள். ஆனால் இவர்கள், உலக ஆதிக்கக் குருதியினமான வெள்ளையினத்தின் ஓர் கலப்பினமாக இருப்பதால், இவகளுக்கென்று தனியான தொன்மையின்மை நிலையானது, தேசிய அந்தஸ்தைப் பெறுவதை நோக்கிய வளர்ச்சிக்கு ஒரு தடையாக இல்லை.
கிறிஸ்துவ தேசியவாதம்:
கிறிஸ்துவ மதமாற்றம் தமிழரிடையேயும், சிங்களவரிடையேயும் நடைபெற்றது. ஆனால் இம் மதமாற்றம் கிறித்துவ-மதவழி இனக்குழுமம் ஒன்றை இலங்கையில் இதுவரை உருவாக்கவில்லை. தமிழ் மேட்டுக் குடியினரிடையே இருந்த கிறிஸ்துவத் தமிழர்களும், சைவத் தமிழர்களும்; சிங்கள மேட்டுக் குடியினரிடையே இருந்த கிறிஸ்துவ சிங்களர்களும், பௌத்த சிங்களர்களும் ஒற்றுமையாக இருந்தது இதற்கோர் காரணமாக இருக்கலாம்.
மற்றோர் காரணமும் இருந்துள்ளது: சிங்கள மக்கள் மன்னர் காலத்தில் இருந்து அந்நிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடிவந்திருந்தாலும், அனகாரிக தர்மபாலவால் பிறப்பிக்கப்பட்ட பௌத்த-சிங்களத் தேசியவாதம், தொட்டில் குழந்தை நிலையில் இருந்து இன்று வரையான காலம்வரை காலனியல் ஆதிக்கத்தினதோ, ஏகாதிபத்தியத்தினதோ, வல்லரசுகளினதோ அரசியல் அதிகாரத்துக்கு எதிராகவோ, பொருளாதார அதிகாரத்துக்கு எதிராகவோ போராடிய தேசியவாதமல்ல. அவ்விதமானதோர் வரலாறே இதற்கில்லை. பண்பாட்டுத்துறையில் அந்நிய ஆதிக்கத்திற்கெதிராக போராடிய வரலாறுஉண்டு. காலனியல் அதிகாரத்துடனும் ஏகாதிபத்தியத் துடனும் பகைமை முரண்பாட்டை வளர்த்துக்கொள்ளாமல் இருந்த வண்ணமே, அரசியல் அதிகாரம் உள்ளடக்கிய அனைத்து நாட்டு வளங்களும் இலங்கையின், வேறு தேசிய இனங்களின் கைகளுக்குச் செல்லாமல் அனைத்தையும் பௌத்த-சிங்கள தேசியத்தின் கைகளுக்குள் கொணரவேண்டும் என்பதே இதன் குறிக்கோளாக இருந்து வருகின்றது. ஆகையினால் ‘கிறிஸ்துவ’ ஏகாதிபத்தியம் பௌத்த தேசிய வாதத்தை தனது நண்பனாகவே கருதியது. கிறிஸ்துவதமிழ், கிறிஸ்துவசிங்கள தேசிய இனக் குழுமங்கள் தோன்றாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அநகாரிக தர்மபாலா பௌத்த-சிங்கள தேசிய இனவா தத்தின், தாயானால், வெள்ளைக்கார மறுமலர்ச்சியாளர்கள்தான் அதன் தந்தை.
இலங்கையில் வளர்ந்துவரும் தேசிய இன குழுமங்களில் ஒன்றான தமிழ்த் தேசிய இனக் குழுமம், 1980கள்வரை, பாரம்பரிய பிரதேச மற்றும் மொழிவழிக் குழுமமாகத்தான் தன்னை அறிமுகப்படுத்தி வருகிறதே தவிர மதவழிக் குழுமமாகத் தன்னை அடையாளப்ப டுத்துவதில் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. இது தமிழ்த் தேசியத்தின் முற்போ க்குக் குணவியல்பாகும். கிறிஸ்துவ மதவழி தேசிய இனக் குழுமம் இலங்கையில் தோன்றாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இருந்தும், கிறிஸ்துவ, இஸ்லாம் மதமாற்றத்தினதும், சோழர்கால இந்து தமிழ் ஆக்கிரமிப்பினதும் எதிர்வினையாக,  குருதியினவழிக்குழுமமாக மட்டுமேயிருந்த சிங்கள இனவழிக் குழுமம் பௌத்த-சிங்கள இனவழிக்கு ழுமமாக மாறியது. பௌத்தம் தமிழர்களாலும் பின்பற்றப்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.
ஆனால், மியான்மரின் பர்மிய-பௌத்த பேரகங்காரத்துக்கு எதிராக போராடிவரும் ஆயுதக் குழுக்களில் கிறிஸ்துவ ஆயுதக்குழுவும் அடங்கும் என்பதைக் குறிப்பிட வேண்டும். இது இவ்விதம் சாத்தியமானது மியாமரின் நிலைப்பற்றிய  பதிவில் இதைநோக்குவோம்.

இலங்கையின் நான்காவது தேசிய இனம்:
18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரித்தானியர்கள் புதியதோர் இனக் குழுமத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தார்கள். இக் “குடியேற்றி” இனக்குழுமம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இந்திய வம்சாவழித் தமிழர்களென வெளிப்படையாகவும், கள்ளத்தோணிகளென உள்ளரங்கி லும் அழைக்கப்பட்டார்கள். இவர்கள், இலங்கைக் குடியுரிமை மறுக்க ப்பட்டார்களாகவும் வாக்குரிமை அற்றவர்களாகவும் இருந்தனர். இம் மறுப்புகளால் இவ் இனக்குழுமம், இலங்கையின் தேசிய இனக் குழுமங்க ளில் ஒன்றாக, இயல்பான முறையில் நான்காவது தேசிய இனமாக-வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. ஜனநாயக உரிமைமறுப்புகளால், இயல்பான வளர்ச்சி சாதியமாக வில்லை. அதற்கான ஆர்வத்தையும் இக்குழுமம் வெளிப்படுத்தவில்லை. அதாவது, தன்னை அவ்விதம் வழர்த்துக் கொள்வதற்கான போராட்டங்களிலும் பெரியளவிற்கு ஈடுபாடுகாட்டவில்லை. ஒரு தனித்துவமான வர்க்கமாகத் தன்னை வழர்த்துக் கொள்வதில் அதிக நாட்டங்காட்டி அதில் வெற்றியும் பெற்றது. ஆனால், அந்தளவிற்கு ஒரு தேசியஇனமாக வழர்த்துக்கொ ள்வ்தில் நாட்டங் காட்டவில்லை.

அடுத்த பக்கத்தில், தொடர்ச்சியான பல போராட்டங்களின் ஊடாக, ஒரு மொழிவழித் தேசிய இனமாக வளர்ந்து வந்த மரபுவழித் தமிழ் இனக் குழுமத்துடன் இரண்டறக் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் இல்லாதிருந்தது. இவ்வித கலப்பு இருவிதமானதாக இருந்திருக்கலாம்..
முதலாவது வகைக்கலப்பு: இலங்கைத் தமிழர்களின் வாழ் பிரதேசமும் “இந்திய வம்சாவழித் தமிழரின்” வாழ் பிரதேசமும் ஒரே தொடர்சியான நிலப்பரப்பாக இல்லாதிருந்தமை, இருந்தும் கடுமையாக முயற்சிகள் எடுத்துக் கொண்டால் இரு பிரதேசங்களையும் ஒன்றிணைத்திருக்க முடியும். அவ்விதம் ஒன்று படுத்துவதென்பது சிங்கள தேசிய இனக் குழுமத்தின் பாரம்பரிய பிரதேசத்தை அபகரிப்பதாகவே நோக்கப்பட்டிருக்கும். இதற்கான துணிச்சலோ, மனோ நிலையோ இருவகைத் தமிழர்களிடையேயும் இருக்கவில்லை என்று கூறலாமா அல்லது பேரழிவுகளைத் தணிப்பதற்காக இது தவிர்க்கப்பட்டது எனக் கூறலாமா? அல்லது வேறேதாவது காரணங்கள் உள்ளனவா?

இரண்டாவது வகைக்கலப்பு: இந்திய வம்சாவழித் தமிழர்கள், இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பிரதேசத்தை நோக்கி நகர்தல், தமதுதனித்துவ ங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒழுங்குக ளுடன் இலங்கைத் தமிழர்களுடன் சங்கமித்திருக்கலாம். சங்கமிப்பு தவறென்று கூறமுடி யாது. உடனடியாக சாத்தியமில்லாது போகலாம். அதற்கான நீண்டகால அவகாசம் தேவைப்படலாம், அதாவது உடனடி சங்கமிப்பாக இல்லாமல் படிப்படியான சங்கமிப்பாக இருக்கலாம். உடனடிச் சங்கமிப்பதைத் தவிர்த்து இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்தில் வாழ்ந்த வண்ணமே படிப்படியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். மலையகத் தமிழர்களின் ஒட்டுமொத்த நிலையில் ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடி  ளவிற்கு இக் கலப்பு நடக்கவில்லை. நிலவும் மொழிவழி, மதவழி ஒருமைப்பாடு முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
எவ்விதமும் மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தம்மை உருவகப்படுத்திக் கொள்வதில் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவிற்கான வெற்றிபெறவில்லையென்றே கூறவேண்டும். இதற்கான காரணங்கள் பலவாகஇருக்கலாம், இலங்கையின் அரசியல் சிந்தனைப் போக்கில் ஆழவேரூன்றியுள்ள ‘இவர்கள் வந்தேறு குடிகளெனும்’ தாழ்வுநிலைப் பொதுப்புத்தியே இதற்கான பிரதான சித்தாந்தக் காரணமா?

பாரம்பரிய பிரதேசமின்மையைக் காரணங்காட்டி, தேசிய இனமாக பரிமாணம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்டுள்ள, இவ்வித இனக்குழுமங்களை, மறு(புதிய) காலனியல் ஆதிக்கத்தின் நவ- தேசிய அடிமைகளாக வைத்திருப்பது தொடரப்போகிறதா. 18ஆம் நூற்றாண்டின் ஒட்டமோ சாம்ராஜ்யத்தாலும், 19-ஆம் நூற்றாண்டின பிரித்தானிய சாம்ராஜ்யத்தாலும் உருவாக்கப்பட்ட இந்த ‘வந்தேறி’ குடிகளின் பிரச்சனைக்கு தீர்வேயில்லையா? இது தொடரத்தான் போகிறதா?
         இல்லை, இல்லவேயில்லை, இனியும் தொடரவிடமாட்டோம்! என உலகிற்குக் கேடகக் கூடியதாக உரக்கக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர், “வந்தேறிகளும்”, “ இந்திய வம்சாவழியைனருமான” றோஹின்ய முஸ்லீம்கள்.
         ஆசியாவை நோக்கிய ஒடுக்கப்பட்ட வந்தேறிகளின் புயல் மையம்: றோகின்யா
         இலங்கையின் மலையகத் தமிழர்கள் செய்யத்தவறிய ஒரு வரலாற்றுக் கடமையை செய்ய முன்வந்து விட்டனர் றோஹின்ய முஸ்லீம்கள். மிகவிரைவில்  அவர்களுக்குத் துணையாக அணிதிரளத் தயாராகிவிட்டனர் ஈரான்வாழ் குருதிஷ்திய ‘வந்தேறிகள்’. அமெரிக்க யுகம் என அழைக்கப்படும் 21ஆம் நூற்றாண்டு, “சுதேசிகளை”ஒடுக்கும் வந்தெறிகளின் கொடூரத்தை அனுபவித்தது. அரேபிய உலகில் யூதர்கள், தென் ஆபிரிக்காவில் வெள்ளையர்கள், அவுஸ்ரேலியாவில் வெள்ளையர்கள், மெக்ஸிக்கோவில் அமெரிக்கர்கள் ஆகியவை” “ஒடுக்குகின்ற வந்தேறிகளுக்கான” சில எடுத்துக்காட்டுகளாகும். ஆனால், ஆசியாவின் உலகம் என பொருளாதார வல்லுனர்களாலும், நான்காம் உலகினரின் உலகம் என வல்லரசு எதிர்ப்பாளர்களாலும் அழைக்கப்படும் 21ஆம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்ட ‘வந்தேறிகளும்’ தமது தேசிய அந்தஸ்த்தை நிலைநிறுத்த வீரியத்துடன் யுத்தமுனை புகுந்துள்ளார்கள். இது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும். இப்புதிய அத்தியாயத்தை எழுதப்போவது அமெரிக்கவாழ் கறுப்பின மக்களாகவே இருப்பர் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், தோழர் மா-ஓவும் எதிர்பார்த்தனர். ஆனால், ‘ஒடுக்கப்பட்ட வந்தேறிகள்’ புயலின் மையம் ஆசியாவை நோக்கி நகர்ந்துள்ளது. இப் புதிய அத்தியாயத்தைத் தொடக்கிவைத்த றோஹின்ய முஸ்லீம்களின் நிலையை நோக்குவோம்.
இவர்களில் ஒரு பகுதியினர் பிரித்தானிய காலனியல் காலத்துக்கு முன்னரேயே இந்தியாவிலிருந்து பர்மாவில் குடியேறியவர்களாகும். மற்றோர்பகுதியினர் மலையகத் தமிழர்களைப்போல பிரித்தானியர் காலனிகாலத்தில் குடியேறத் தூண்டப்பட்டவர்களாகும். ஆனால், பெரும் தோட்டத் தொழிலாளர்களாக அல்ல, கட்டுமானக் கூலிகளாக. பின்நா ளில் இவர்கள் அனைவரும் ஒன்றுகலந்து விவசாயிகளாகினர். இவர்கள் அனைவரும் வங்கமொழியத் தாய்மொழியாகக் கொண்ட வங்க முஸ்லீ ம்களாகும். இது நடந்தது பாக்கிஸ்தான் என்ற தனிநாடு உருவாகமுன்னர். பாக்கிஸ்தான் என்ற தனிநாடு உருவாகிய பின்னர் பெருமளவிலான குடியேற்றங்கள் நடைபெறவில்லை. இது போல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தமிழர்கள் பர்மாவில் குடியேறினர். இவர்கள் தாமாகக் குடியேறியவர்களாகும். கூலி அடிமைகளாகக் கொண்டுசெல்லப் பட்டவர்களல்ல. பர்மிய அரசாங்கமும் இவ்வித குடியேற்றங்களை ஊக்குவித்தது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னும் முன்னுமான காலங்களில் பர்மாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கியிருந்ததே இதற்கான காரணமாகும். இன்னமும் கூட பர்மாவில் 35 விழுக்காட்டினர், 135 வகையான பழங்குடி மக்கள் என்ற நிலையிலேயே வாழ்கிறார்கள். இதில் றோஹின்யா மக்கள் பழங்குடி மக்களாகக்கூட வகைப்படுத்தப் படவில்லை. இவர்கள் நாடற்றவர்கள், அந்நியர்கள் என்றே வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகள் “சுதந்திரம்” பெற்றதன் பின்னர், இவ்விதம் குடியேறிய பர்மியவாழ் தமிழர்கள் தமது தாய் நாடு திரும்பி னார்கள். இவர்களின் தாய்நாடுகளும் இவர்களை ஏற்றுக்கொண்டன. தாய்நாடு, தாய்மதம் என்பதெல்லாம் மலையகத் தமிழர்கள் விடயத்தில் பொய்த்துப்போன மாதிரி றோஹின்ய முஸ்லீம்கள் விடயத்திலும் பொய்த்துப்போயின. 1940களில் இருந்து இன்றுவரை நடைபெற்றுவரும் இனஒழிப்பு நடவடிக்கைகளினால் பங்காளதேசத்தில் மட்டும் அகதிக ளாக இருக்கும் றோஹின்ய முஸ்லீம்களின் எண்ணிக்கை ஆறு இலட்ச மாகும். இவ்வளவு கடினமான நிலையிலும் றோஹின்ய முஸ்லீம்கள் தமது தேசியஇன அந்தஸ்த்துக்கான கோரிக் கையையும், போராட்ட த்தையும் இதுவரை கைவிடவில்லை; தொடர்கிறார்கள். இந்தியாவின் வடமாநிலங்களையும், பங்காளதேசத்தையும் ஒட்டியுள்ள, ரக்கின் மாநிலத்தின் வடபகுதியான றோஹின்யா தனிமாநிலமாக வேண்டும் என்பதை இவர்களின் கோரிக்கையாகும். இதற்காக இவர்கள் ரக்கின் மாநில பௌத்தர்களுடனும், பர்மிய அரசுடனும் 1940களில் இருந்தே போராடி வருகிறார்கள். 1947இல் முதல் ஆயுதப் போராட்டம் ஆரம்பமா னது. எவ்வளவோ இழப்புகளின் பின்னர், இன்னமும் அவலமான வாழ்க்கையில் இருந்து விடுபடவில்லை. ஆனால், றோஹின்யா மாநில அமைவை ஒரு சர்வதேச விவகாரமாக்குவதில் அசைக்கமுடியாத வெற்றிபெற்றுள்ளார்கள். 

தேசிய இனமாகப் பரிமாற்றம் பெற்றுவரும் நிலையில் உள்ள, “ஒடுக்க ப்படும் வந்தேறிகளான” இலங்கையின் மலையகத் தமிழர்க ளினதும், “ஒடுக்கப்படும் வந்தேறிகளான” றோஹின்ய முஸ்லீம்க ளினதும் தற்போதைய நிலையை ஓரளவிற்கு ஒப்பிட்டு நோக்கினோம். இருவரி னது நிலையும் வெவேறாக இருப்பது புரிகிறது. இவ்வேறுபாட்டி ற்கான காரணம் என்னவென்பது சற்று ஆளமாகப் பார்க்கப்படவேண்டும்.     
.


No comments:

Post a Comment

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் - இந்தியளவில்

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் இந்தியளவில் I - அக உறவுகளில் I - அ ) வளர்திசை        நிகழ்வு 2018 இல் நடைபெற்ற தேர்தல்களின்...