Saturday, 31 March 2018

பனாரிஸம் என்பது என்ன


ப(f)னாரிஸம் என்பதென்ன?


“மஹிந்த பதவி இறக்கப்பட்டாரா? அல்லது தோற்கடிக்கப்பட்டாரா? எனும் முந்தைய கட்டுரையின் மையக்கருத்துரு ப(f)னாரிஸமேயாகும். இக்கருத்துருவை வெளிப்படுத்தும் அச்சொட்டான தமிழ்பதம் எதுவென்று தெரியாததால் ஆங்கிலப் பதத்தையே பயன்படுத்துகிறேன். ப(f)னாரிஸம்பற்றிய எனது புரிதலென்ன என்பதை முதலில் பகிர்ந்து கொள்வோம்.

ப(f)னாரிஸம் என்பது ஒருவகை சிந்தனைப் பிறழ்வாகும். இது தனித்தனி மனிதர்களினது சிந்தனைப் பிறழ்வாகவும் இருக்கலாம், சமூக நிறுவனங்களினது சிந்தனைப் பிறழ்வாகவும் இருக்கலாம். அச் சிந்தனைப் பிறழ்வின் கூறுகளாவன.  

v  ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதில் அதீத தீவிரமாக இருத்தல்.-extremism

v  அக் குறிக்கோளில் கண்மூடித்தனமான, பகுத்தறிவு பூர்வமற்ற நம்பிக்கையாளனாக இருத்தல். –irrationals

v  அகவயமான, பகுத்துணர்வற்ற தன்முனைப்பு.

v  அக் குறிக்கோளை அடைவதற்காக, நடைமுறையில் உள் சமூக நியமங்கள், சமூக விழுமியங்கள், வழிவழிவந்த செயல் ஒழுங்குகள்(protocol) ஆகிய எவற்றையுமே மதிக்காது விடல். அவற்றைப் பாதுகாத்துவரும் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகிய அனைவரையும் பகைவர்களாக நோக்கல். arrogant

v  குறிக்கோளைக் இலட்சியமாகக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையே குறிக்கோளைவிட அதிகமாக நேசித்தல். வழிமுறைகளில் உள்ள காதலால், வழிமுறைகளே குறிக்கோளுக்கு எதிராகச் செல்லக்கூடிய முறையில் நடந்துகொள்ளல். முடிவில் குறிக்கோளில் கோட்டைவிடுதல். Giving primary importance to means instead of goal

v  எந்த மாற்றுக்கருத்தையும், மாற்று வழிமுறைகளையும், மாற்றுச் சிந்தனைப் போக்கையும் சகித்துக் கொள்ள முடியாதநிலையில் இருத்தல். Intolerance

v  தான் தனித்துவிடப்பட்டுவிட்டேன், பிறர் அனைவரும் தனக்கும், தனது குறிக்கோளுக்கும் எதிரானவர்கள் என்ற மனப்பிராந்தி(monomania)
இவைதான் ப(f)னாரிஸத்தின் சிந்தனைப் பிறழ்வுகளாகும். தனிநபர்களாக நோக்கும்போது ப(f)னாரிஸத்தின் சில எடுத்துக்காட்டுகள்.

Ø  நீடித்த நாட்கள் நீடிக்கும் ஒருதலைக் காதலும், இக்காதலின் மன அழுத்தத்தினால் தன்னை அல்லது தனது சோடியை அல்லது தன்னையும் தனது சோடியையும் உடல் சித்திரவதைக்குள்ளாக்கலும் அழித்துக் கொள்ளலும். இது காதல் ப(f)னாரிஸம்.

Ø  குடும்ப வளர்சிக்காக எதையெதையெல்லாம் செய்யக்கூடாதோ அதைஅதையெல்லாம் செய்து இறுதியில் தன்னையும் தனது குடும்பத்தையும் மீழமுடியாதஆபத்தில் அல்லது நெருக்கடிக்குள் சிக்கவைத்தல். -இது குடும்பபாச ப(f)னாரிஸம்.

Ø  நுகர்வில் வெறித்தனம், அடக்கவொண்ணா புதிய பொருள்விருப்பு, எவ்வளவு வரவுவந்தாலும் போதாநிலை. கடன்மேல் கடன்படல். மீழ முடியா கடனில் சிக்கித் தவித்தல்.-இது நுகர்வு ப(f)னாரிஸம்.

ப(f)னாரிஸத்தன்மை மிக்க ஆழுமை மிகு ஒரு அரசியல் தலைவன் அல்லது அரசியல் அமைப்பு சமுகத்தில் பிரதானபங்கு வகிக்கும் நிலை வரும்போது, அவர்களின் செல்வாக்கினால் சமூகத்தில் பின்வரும் ப(f)னாரிஸ குணாம்சங்களைக் கொண்ட இயக்கங்கள் உருவாகின்றன.

1.   மரபின மேலாதிக்கவாத ப(f)னாரிஸம் (Ethnic or racial supremacist fanaticism). இது குருதியினவாதமாக(racism) மாறுவதில் முடிவடையும்.

2.      தேசியஇனவாத அல்லது தேசபக்த ப(f)னாரிஸம் (Ethno-Nationalistic or patriotic fanaticism)
3.   அரசியல் குழும, சித்தாந்த ப(f)னாரிஸம் (Political group, ideological fanaticism).

4.   மதவாத ப(f)னாரிஸம் (Religious fanaticism). மத மாறா மரபியல்வாதம் Fundamentalism ஒரு எல்லைக்கு அப்பால், மதத்திணிப்புமிக்க அல்லது பிறமதங்களை அழிக்கும் தன்மைமிக்க மதவாத ப(f)னாரிஸமாகின்றது.

5.      மத எதிப்புவாத ப(f)னாரிஸம் (Anti- Religious fanaticism)

முதலில் வரும் நால்வகை ப(f)னாரிஸங்களும் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நான்கு நாடுகளினதும் ஆளும் தேசிய இனக்கட்சிகளிலும், ஆளப்படும் தேசிய இன அமைப்புகளிடையேயும்  கோலோச்சிவருவது அனைவரும் அறிந்ததே. மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் குழும, சித்தாந்த ப(f)னாரிஸம் எது? இடதுசாரிக் கருத்துக்களையும், பெரியாரிய கருத்துக்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு எழும் தேசியஇனவாதத்தின் நாசகாரப் பரிமாணமே அரசியல், சித்தாந்த ப(f)னாரிஸமாகும். அரசியல் வார்த்தையில் சொல்வதானால் பல்வேறுவகை தேசியஇனவாதங்களின் நாசகாரப்பரிமாணங்களில் ஒருவகைதான் ப(f)னாரிஸமாகும். ப(f)னாரிஸத்திற்க்கும் காட்டுமிராண்டித் தனத்துக்கும்(Barbarism) இடையேயான இடைவெளி மிகச்சொற்பமே.

லோகன் (அ.கௌரிகாந்தன்)   5/2/2015 வியாழன்

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...