Saturday, 31 March 2018


முன்னுரை

தேசியவாதத்தின் நாசகாரப் பரிமாணங்கள் எனும் நூலின் முன்னுரைக்கு முந்திய பகுதி கீழ்வரும்URl இல் இதே வலைப்பூவில் உள்ளது யக்ஞம்: இத்தாலிய ஜெர்மானியத்தேசியவாதங்களின்நாசகாரப் பரிமா...    https://vidiyalgowri.blogspot.in/2018/03/blog-post_22.html

நண்பா! மிகமிகச்சுணங்கிவிட்டது!

         20-ஆம் நூற்றாண்டு ஐரோப்பியப் பாசிசவியலை ஓர்அரசியல் விவகாரமாகமட்டும் பார்க்காது அதைஒருவகைச் சமூகஉருவாக்க மாகப் பார்க்கவேண்டும். இதன்மூலமே பாசிசவிய லின் குணவியல்பு களையும், அதன்பல்வேறுவிதமான ஆபத்தானபோக்குகளையும், அதன் கனகாத் திரத் தன்மையையும், அதன்அறிவியல் மூலத்தையும் எம்மால்புரிந்து கொள்ளமுடியும். அந்நோக் கத்தைப் பூர்த்திசெய்ய இந்நூல் துணைபுரியுமென எதிர்பார்க்கிறது.

பாசிசவியல், வரைவு இலக்கணம்  இல்லாக் கதம்பம்

  குறிப்பிட்டதொரு அரசியல்வளர்ச்சியில், இணக்கமின்மை யைக்காண்பவர்கள், அதை நிராகரிப்பதற்கான விமர்சனங்களுக்கா கவும், தம்மைஎதிர்ப்பவர்களை அல்லது தம்மால் எதிர்க்கப்படு பவர்களை மனிதத்தன்மையே இல்லாதவர்களென்று தள்ளிவைக்க வுமே இப்பதத்தை எழுந்தமேனியில் பிரயோகித்து வருகிறார்கள்.
         பாசிசவியல்பற்றிய முழுமைபெற்ற, திருப்பதிகரமான வரைவுஇலக்கணம் எதுவுமே இன்றுவரை முன்வைக்கப்படவில்லை. இந்நூலின் நோக்கம் இவ்விதமானதோர் வரைவுஇலக் கணத்தை முன்வைக்கமுயல்வதல்ல. அதுமுடியாதகாரியம். பாசிசவியலின் நிகழ்காலச் சுபாவம் பற்றி ஓர் இணக்கமானகருத்து இன்னமுங்கூட ஏற்படவில்லை. இவ்விதம் இருந்தும் இப்பதம் பலராலும் பலஇடங்க ளிலும் எவ்விதத்தயக்கமுமின்றி தாராளமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதில் எதுவிதக் குறைவையும் காணமுடியவில்லை.
        அநேக சந்தர்ப்பங்களில்பாசிசவியல்எனும்பதம் அரசியல் ஏற்றுக்கொள்ளாமையை வெளிப்படுத்தும் பாணியிலேயே குறிப்பிடப்ப ட்டு வருகின்றது. இதனால் இதன்அர்த்தத்தைப் புரிந்துகொள்ளலென்பது மேலும் அதிகக் கடினமானதாக இருந்து வருகின்றது.
இவ்வித பயன்படுத்தல்களுக்கு கீழ்வரும் உதாரணமொன்றே போதுமானது.
         2ஆம் உலக யுத்தத்திற்குப்ன்னைய சோவியத்வெளியீடுகள் ஹிட்லரின்A1ஜெர்மனியை, பாசிச ஜெர்மனியென்றே குறிப்பிட்டுவந்தன. இவ்விதமான விளக்கத்தை ஹிட்லரேA1 ஆட்சேபனை எதுவுமின்றி ஏற்றுக்கொண்டிருந்தார். இவ்விதம் கூறுவதற்கெதிராக எவரும் சவாலுக்கு வரவில்லை. 1970-களில், மேற்குஜெர்மன் அரசாங்கம் பாசிசவியலென்ற சொற்பதத்தால் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்விளக்கம் பிறரைப் பயமுறுத்துவதற்கான ஒன்றானதாகவே அமைந்திருந்தது. 1940\களிலும் 1970களிலும் இருந்த ஜெர்மானியஅரசாங்கங்கள் இரண்டும் தமக்குள் கொண்டிருந்த பொதுத்தன்மைகள்தான் என்ன? இவை இரண்டையும் பாசிசஅரசுகளாக ஆக்கியதெது? வேண்டு மென்றே குருடர்களாக இருப்பவர்களைத்தவிர ஏனையஅனைவரும் இதற்கானபதிலை அறிந்தவர் களாகவேஉள்ளனர். இரு அரசுகளுக்கும் இடையேஇருந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுஇயல்பு இவைஜெர்மன்அரசுகள் என்பது மாத்திரமேயாகும்.    இங்கு நடந்ததென்ன?
 பாசிசவியல்எனும் பதம் பிரச்சாரத் தேவைகளுக்காகவும் சில அரசியல் குறிக்கோள்களை வென்றெடுப்பதற்காகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும்கூட இவ்விதந்தான் பயன்படு த்தப்பட்டு வருகின்றது. இவ்வித பயன்படுத்தல்கள் நிறுத்தப்ப ட்டுவிடும் என்று கருதுவதற்கான காரணங்கள் மிகக்குறைவானதாகவே உள்ளன. இதனால் பாசிசவியலின் சுபாவத்தைப் புரிந்துகொள்வதில் குழப்பங்கள் நிலவுவது ஆச்சரியப்படத் தக்கதொன்றல்ல.
         குறிப்பிட்ட தொருவகை அரசியல் வளர்ச்சியில், இணக்கமின்மையைக் காண்பவர்கள், அதை நிராகரிப்பதற்கான விமர்சனங்களுக்காகவே பாசிசவியல் என்ற சொற்பதத்தை எழுந்த மேனியில் பிரயோகித்துவருகிறார்கள். அதுமாத்திரமல்ல தம்மை எதிர்ப்பவர்களை அல்லது தம்மால் எதிர்க்கப் படுபவர்களை மனிதத்தன்மையே இல்லாதவர்களென்ற தரத்திற்கு தள்ளிவைக்கப் பயன்படுத்தி வருகிறார்கள்.
எனவே இப்பதமானது தப்பான வழிவகைளில் பயன்படுத்தப்ப டுவதென்பது நித்திய நிகழ்வாகவே இருந்துவருகின்றது. ஆகையினால் மக்களின் வெவ்வேறு பகுதியினரும், குறிப்பாக அரசியல், பொருளாதார, சமூகவியல், வரலாற்றுத்துறை மாணவர்கள் பாசிசவியலின் குணவியல்புகள்பற்றி இன்னமும்கூட குழம்பிப்போய் இருப்பது ஆச்சரியத்துக்குரிய்தல்ல.
         அநேகசந்தர்ப்பங்களில் இவ்விதம் பயன்படத்துபவர்களின் நோக்கம் இடையிடையே வெற்றிபெற்றும்வருகின்றது. ஆனால், மகிழ்ச்சிகரமான விடயம் என்னவென்றால், அது எப்போதும் வெற்றிபெறக்கூடியதாக அமைந்திருக்கவில்லை என்பதேயாகும்.

இலங்கையின் பாசிசவியல்

         சிங்கள இனத்தைக்காக்க நற்பண்புகளும், தளராஉறுதியும்மிக்க மக்கள்குழுவும், நற்பண்பு பொருந்திய வீரத்தலைவனுமே இன்றைய தேவையாகும் ஆரியஇனத்தின் அழிவைத் தடுக்கப்போரிடும் ஹிட்லர்A1 போன்று அத்தலைவன் அமையவேண்டும். பாசிசம்பற்றிய தர்க்கம் ஹிட்லர்A1ரின் காலத்திலியே இலங்கையில் ஆரம்ப மாகிவிட்டது.
         ஆயுதப்போராட்டம் இலங்கைவரலாறுக்குப் புதிதாகஇருக்கலாம். ஆனால்தமிழ்த் தேசியம்புதிதல்ல, வைரவிழாகொண்டாடும் தகுதி அதற்குண்டு. 1983வரை பாசிசமும்தமிழ்த்தேசியம்மும் எந்த இடத்திலும் எவராலும் தொடர்புபடுத்தப் படவில்லை. ஆனால் தமக்கோர் ஹிட்லர்A1 தேவையென சிங்கள - பௌத்த பேரகங்காரவாதம்6, ஹிட்லர்A1இன் காலத்திலேயே பகிரங்கமாக முன்வைத்திருந்தது.
         1980கள்வரை, சிங்கள-பௌத்தபேரகங்காரவாதத்தின்6 வர்க்கமூலத்தையும், வரலாற்று மூலத்தையும், கருத்தியல்மூ லத்தையும் கண்டுகொள்வதற்குரிய ஆய்வுமுறையை அறிமுகம் செய்துள்ளவர்களில் அநேகர் சிங்களவர்களேயாகும். இதில்பிரதா னமானவர் குமாரிஜெய வர்த்தனாK2வாகும். இவர்இலங்கையின் வர்க்கமுரண்பாடுகள்எனும் நூலில் முன்வைத் துள்ளவ்வை அப்படியே தரப்படுகின்றன. சற்று நீண்டதாக இருந்தாலும்லும் அவசியப்ப டுகின்றது.                                                       
         ‘1910களின் இலங்கை வகுப்புவாதவெறிI ஜெர்மனியிலும், இத்தாலியிலும் ஏற்பட்ட பாசிசவெறியை ஒத்திருந்தது. பல உள்ளுரேடுகள் ஹிட்லர்A1, முசோலினிM2 ஆகியோரது வெளிநாட்டு க்கொள்கைகளுக்கு ஆதரவான விபரங்களைவெளியிட்டன. பல தேசியவாதிகளும், தொழிற்சங்கத்தலைவர்களும், சிங்கள ஆரியபௌராணிகவரலாற்று மாயையால் புத்துணர்வு பெற்றனர். இவ் வடிவங்கள் தமது சொந்தப் பிரச்சாரத்துக்கும் பயன்படுமென்று இவர்கள் கண்டனர்.
         1939 இல் ..குணசிங்காG3 கொழும்பில் சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நிகழ்த்தினார். அதில்சிஙகளவராகிய நாம்அனைவரும் ஒரேகொடியின்கீழ் அணிதிரளவேண்டும் எனப் பிரகடனம்செய்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயத்துறை அமைச்சர் டி.எஸ்.சேனநாயக்கS1 முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடையபேச்சு சிங்களமக்களைத் தூண்டிவிடும் ஆற்றல் வாய்ந்த தாக இருந்தது. “(சிங்களராகிய) எம்உடலில் ஓடுவது ஒரேகுருதி. நாம் ஒரேகுருதியினத்தவர். நாம் தனிச்சிறப்புள்ள மக்கள். தன் மதம் 5500 ஆண்டுகளுக்குத் நிலைக்குமென்று புத்தர் கூறினார். புத்தமதத்தின் பாதுகாவலர்கள் என்றமுறையில் நாமும் அதேயள வுகாலம் நிலைத்து வாழ்வோம்.(டெயிலிநியூஸ்,17ஏப்ரல், 1939)                                              இதுபோன்ற உணர்வுகள் சமகாலத்திய தொழிற்சங்க ஏடுகளிலும் வெளியிடப்பட்டன. இவ்விதம் வெளியிடப்பட்டதோர் கடிதம் சிங்களமக்கள், மேய்ப்பனில்லாத மந்தைபோல வாழும் விதிபற்றிக் கவலைப்படுகிறது. சிங்களக் குருதியினத்தைக்24 (அழிவிலிருந்து)காக்க நற்பண்பு களும், தளராஉறுதியும்மிக்க மக்கள்குழுவும், நற்பண்பும் வீரமும் பொருந்திய வீரத்தலைவனுமே இன்றையதேவையாகும் ஆரியஇனம் அழிவதைத்தடுக்கப் போரிடும் கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் ஹிட்லர் A1போன்று  அமையவேண்டும்?     (பக்கம் 47-48,வீரயா 17 ஏப்ரல் 1936).
         1948 ஆம்ஆண்டு ஆகஸ்டிலும் டிசம்பரிலும் பாராளுமன்றத்தில், பிரஜா உரிமைச்சட்டம்III விவாதிக் கப்பட்டபோது இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் இச்சட்டங்களின் வகுப்புவாத நோக்கங்களை அம்பலப்படுத்தினர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான என்.எம்.பெரேறாஇச்சட்டங்கள் முழுமையான வகுப்புவாத நோக்கம் கொண்டவையெனக் கூறினார்.
         இவ்வகை இனவாதம் ஹிட்லர்A1வகை இனவாதமாகவே முடியும். நாட்டுத் தலைவரென்று தன்னைக்கூறிக்கொள்ளும் ஓர் அரசியல்வாதி, இத்தகையதோர் சட்டத்துக்கு ஆதரவளிக்கும்படி கேட்பாரென நான் நினைக்கவேயில்லை. கடவுளால் தேர்ந்தெடுக்க ப்பட்ட, உலகிலிருந்து வேறானதோர் தனிச்சாதியாக எம்மைக் கற்பனை செய்வதை அனுமதிக்கமுடியாது. நாம் மட்டுமே இந்நாட்டின் பிரஜைகளாகஇருக்கும்பேறுபெற்றவர் என்பதுவும்தவறு.                        
         மேலும் கூறுவதாவது: ‘இத்தகைய மறுமலர்ச்சிப்போக்கினைப் பிரதிபலித்த மற்றோர் நூல், டி.சி.விஜயவர்த்தனா எழுதியபுத்த கோயிலில் கிளர்ச்சி எனும் 700 பக்க நூலாகும். கொண் இந்நூலில் வெளிப்படையாக சிங்கள இனமேலாதிக்கக்கருத்துக்கள் காணப்படுகின்றன. பல்வேறுவிடயங்கள் பற்றிக்கூறும்இந்நூலின் முக்கியசெய்தி சிங்களவருடையபுனிதஉரிமைகள்பற்றிய தாகும். 40வருடங்களுக்கு முன்னர் அநகாரிகதர்மபாலA2 கூறியது மீண்டும் அழுத்திக் கூறப்பட்டது.
      இலங்கையின் வரலாறு சிங்கள இனத்தின் வரலாறேயாகும். 2500 வருடங்களுக்கு முன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் மகத்தான கடமை இவர்களுக்கு வழங்கப்பட்டது. 1956ஆம்ஆண்டு மூன்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன; இலங்கை வரலாற்றினதும், சிங்களவரினதும், பௌத்தமத்தினதும் 2500வருட நினைவே அதுவாகும்” …..எனவே சிங்களஇனத்தின் தோற்றம் உள்நோக்கங்கொண்டு முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். இவ்இனம் தன்னுடைய தோற்றத்திலிருந்தே உலகஇரட்சகரால் 2500ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றப்பட்டதீபத்தை 5000ஆண்டுகளுக்கு எடுத்துச்செல்லவிதிக்கப்பட்டுள்ளது.  (மேலதுபக்கம்32,பக்96)                                                                                                                 
        அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்ற, அரசு, மொழிப் பிரச்சனையைப் பயன்படுத்துகிறதென இடதுசாரிப் பேச்சாளர்களில்பலர் கூறினர். அனில் முன்சிங்கா, 1947, 1952ஆம் ஆண்டுத் தேர்தல்களை ஒப்பிட்டு 52ஆம் ஆண்டுத்தேர்தலின் பிரதானசுலோகமான, “சிங்கள மொழியைப் பாதுகாப்பீர், என்ற அறைகூவல் 42ஆம்  ஆண்டில் இடம்பெறவேயில்லையென்று கூறினார்அதிகாரத்தைக்கைப்பற்ற குறிப்பிட்டஒருசிலர் இதனைத்தேர்தல் பிரச்சனையாக்கினர் என்பதைத் தவிர வேறெவ்வாறு இதனை விளங்கிக்கொள்ளலாமென வினவிய அவர், (M.E.P) எம்..பி XVIIIயின் சமவுடைமைபற்றிக்32 கூறியது:         
         அவர்கள், ஒருஇனத்தவர்க்கு மட்டுமே சமவுடமை32 தேவையானதென நம்புகின்றனர் ஹிட்லர்A1, முசோலினிM2 போன்ற வர்களிடமின்றி இத்தகைய சமஉடமையினை நான் வேறெங்கும் அறியேன். (ஹன்சாட்,11ஜுன்,1956பக்கம்110) முதலாளித்துவ சிந்தனை யின் தோற்றத்துடனேயே பாசிசச்சிந்தனைகளும் இலங்கைச் ‘சிங்களத் தேசியர்களிடையே’ தோன்றிவிட்டன.     
         இன்னோர்விடயத்தையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. 1915ஆம்ஆண்டு, சிங்களத்தேசியர் இஸ்லாமியர்கள்மீது நாடுபரந்த இனஒழிப்பை மேற்கொண்டார்கள். இது ஜெர்மனியின் தூண்டு தலின்பேரில் தமதுஆட்சிக்கெதிராகக் கலகம்செய்யும்நோக்கத்துடன் நடத்தப்பட்டதென்றே ஆங்கிலேயர் கருதினர். இதனால் இக்கலவரத் தலைவர்களுக்கு சாவுத்தண்டனை விதிக்கப்பட்டது.
         பாசிசவியல் ஓர் போரக்குணமிக்க தேசியவாதமென்ற21 கருத்து நிலவிய காலத்தில், ஐரோப்பிய தேசியங்களில் பெரும்பான்மை யானவை ஹிட்லரையும்A1 முசோலினியையும்M2 போற்றிப்புகழ்பா டிக்கொண்டிருந்த காலத்திலிருந்தே, தாம் பாசிசவியல் ஆதரவாளர்கள் என்பதை சிங்கள-பௌத்த பேரகங்காவாதிகள்6 பெருமையுடன் பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தனர். நிலைமை இவ்விதம் இருக்க க்கூடியதாக, தம்மை பாசிசவியல் எதிர்ப்பு ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் இலங்கையர்களில் சிலர் 100ஆண்டுகால வரலாற்றுடன் பூதாகரமாக வழர்ந்துனிற்கும்,  சிங்கள பௌத்த பாசிசவியலைக் கண்டு கொள்ளாது விடுதல்தான் ஆச்சரியமானது.

                                        பாசிசவியல் பற்றிய புரிதலின் அவசியம்: இலங்கை நிலை

            2ஆம் உலகயுத்தத்தின்பின்பிருந்து, பாசிசவியல் மனிதகுலத்திற்கே விரோதமானதெனப் பரவாலாகப் புரிந்து கொள்ளப்பட்டுவருகிறது. இதனால், மையநாடுகளின் தலைவர்களில் இருந்து விழிம்புநிலை நாடுகளின் தேசியவாதத்21தலைவர்கள்வரையான பலபாசிசவாதிகள் அனைவரும் சமூகப்புரட்சிக்கும் தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் எதிரான தமதுதீவிரப்போக்கை உருமறைப் புச்செய்து கொண்டுள்ளார்கள். ‘தேசியஜனநாகம்’ ‘சுதேசியப்பபண்பாடு’ ‘தாயகமீட்புமரபுமீட்புமதவழிப்பண்பாடு’ ‘உலகஅமைதிபேணல்’ ‘இறமைக்காப்பு’ ‘தேசியஒற்றுமைபேணல்வல்லரசிய எதிர்ப்புபயங்கரவாதஒழிப்பு’ ‘இன, மதபாரம்பரியமீட்புசமவுடமை32 நிலைநாட்டல், கம்யூனிஸ எதிர்ப்பு, இனவிடுதலை, பாரம்பரிய பெருமிதமீட்புப் போன்றபல்வேறு வார்த்தை ஜாலங்கினுள் தமது பாசிசக்குணாம்சத்தை மூடிமறைத்து க்கொண்டு தம்மவர்களையும் உலகையும் ஏமாற்றிவருகிறார்கள். இந் நாடுகளினது தேசியவாதத்தலைவர்கள் மாத்திரமல்ல, இந் நாடுகளின் ஒடுக்கப்பட்ட தேசியஇனங்களின் விடுதலைக்கான போர்க்கள த்திலுள்ள தேசியவாதத்தலைவர்களும் இவ்விதமே நடந்து கொள்கிறார்கள்.
      இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே ஒவ்வொருகுடிமகனும் (தமிழன், இஸ்லாமி யன், சிங்களவன்) அரசியலில் தான் எங்கேநிற்கிறேன், என்பதையும் தனது உண்மையான நிலைப் பாடென்னஎன்பதையும், தன்னைவழிநடத்தும் கருத்தியலென்ன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் பாசிசவியல்பற்றிய புரிதல் அவசியமாகின்றது.
         பாசிசவியல்த் தத்துவமும், கண்ணோட்டமும், செயல்முறையும் மேட்டுக்குடி9 யினருக்கு சேவைசெய்தபோதிலும் அவை மேட்டுக்குடி9யினரின் சிந்தாந்தமல்ல. இது ஒடுக்கப்படும் தேசிய இனத்தினில் உள்ள இடைப்பட்ட வர்க்கங்களின் சித்தாந்தமேயாகும். அவசியம்கருதி ஒடுக்கும் தேசியத்தினதும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தினதும் மேட்டுக்குடி9யினர் இதை விருப்புடன் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். உழைக்கும் மக்களை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

         தமிழ் நாட்டு நிலையில்  

         தமிழ்நாட்டின் அரசியல்சூழலும் சமூக-பொருளாதாரச்சூழலும் பாசிசஆபத்துக்கள் மிக்க தொன்றாகவே காட்சியளிக்கின்றன. பலகோணங்களிலும், பலபரிமாணங்களிலும் இவ் ஆபத்துக்கள் உணரப்படுகின்றன. நீண்டவரலாறு இருந்தாலும், தமிழ்நாட்டில் இன்னமும் ஒரு எதிரோட்டஅரசியலாக மாத்திரமேயுள்ள சனாதன தர்மதேசியவாதம்21 பாசிசச்சமூகக் கட்டமைப் பாகமாறிவிடுமோ என்றோர்அச்சம் இடதுசாரி, தலித்திய, கிறிஸ்த்துவ இஸ்லாமிய இயக்கங் களால் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
         தமிழ்த்தேசியம்21 பாசிசவியல்க் கூறுகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடாது என்பதில் நாம்மகவும் எச்சரிக்கையாக இருக்க வெண்டியுள்ளதுஎனக் கருதுவோர்களும் உள்ளார்கள். தமிழ் மரபுவழித்தேசியம்21, தமிழ் குருதியினவழி தேசியவாதமாக21 மாறுவதை அனுமதிக்கக் கூடாது.
          தமிழ்த் தேசியத்தை21யல்ல, நாம் தமிழ்ப் பாசிசத்தையே மறுக்கிறோம். வரலாறு கற்பித்துள்ள பாடங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்21தை நாம் கட்டமைக்கவேண்டும். இங்கும் ஒரு இரத்தக் களரியையும், மீண்டும் ஒரு அதிகாரத்துவ அடுக்குச் சமூகத்தையும் உருவாக்கக் கூடாதென்பதே நமது கரிசனம்எனவும் கூறப்படுகிறது.
         தலித் இயக்கத்தினுள் பாசிசவியல் புகுந்துவிடுமோ என்றும் சிலர் அஞ்சுகிறார்கள். இது தர்க்கரீதியான ஆதரங்களுடன்கூடிய நியாயமானபயமாகவும் தென்படுகின்றது. தலித்இயக்கமே ஒரு பாசிசஇயக்கமாக மாறிவிடுமோ என்றோர்பயமும் நிலவுகிறது. இது நடைமுறைச் சாத்தியமா? மனுதர்மம் ஒரு சாதியபாசிசவியலாகும். அதற்கெதிரான தலித்தியமும் அவ்விதமாகுமென எதிர்பார்க்கமுடியாது.
     இஸ்லாமியர்கள், தமதுஅதிருப்தியை வெளிக்காட்டும்நோக்குடனும், எவருமே கண்டுகொள் ளாதமுறையில் மூடிமறைக்கப்பட்டுவரும் தமதுபிரச்சனைகளை விவகாரமாக்கும் நோக்குடனும், தமது தற்காப்பை உறுதிசெய்யும் நோக்குடனும் எழக்கூடிய எதிர்ப்பியக்கங்களின் தீவிரத்தன் மைகள், இன்னோர்வ கைப் பாசிசவியல்ப் போக்கை இந்தியாவிலும், இலங்கையிலும் தோற்றுவிக்குமோ என்றோர் பயமும் நிலவுகிறது.
         இவ்விதமாக இந்தியாவில் மேலிருந்தும், கீழிருந்தும் பாசிச அச்சுறுத்தல்கள்/ அபாயங்கள் தோன்றக்கூடுமென்ற முன்னெச்சரிக்கை தமிழ்நாட்டின் அனைத்து மட்டங்களிலும் நிலவுகின்றன. இது மட்டமல்ல, தமிழ்நாட்டு ஆளும்வர்க்க நலன்பேணும் கட்சிகள், மக்களிடையே வளர்ந்துவரும் போர்குணாம்சத்தை திசைதிருப்பு வதற்காக பாசிசவியல் இயக்கங்களைத் தோற்றுவிக்கவும் கூடும்.
         தனித்தனி நடவடிக்கைகளையிட்டு இவ்விதமான அச்சங்கள் ஏற்கனவே முன்வைக்கப் பட்டுள்ளன. இவை அடிப்படையில்லாத அச்சங்களல்ல. தமிழ்நாட்டின் அரசியல்நிலையும், சமூகப்பொருளாதார நிலையும் இதற்குவாய்ப்பானதாகவே அமைந்துள்ளதனால் பாசிசத்தை ப்பற்றிய புரிதல் அவசியமானதாகவுள்ளது.
         தமிழ்நாட்டு மக்கள் மேய்ப்பனில்லாத மந்தையாக ஆகவுள்ளனர். மக்கள்நலன்பேணும் அரசியல் தலைவர்களுமில்லை, ஆன்மீகத் தலைவர்களுமில்லையென்றநிலை உருவாகிவருகின் றது. இதன்அர்த்தம் மேய்ப்பனின்இடம் வெற்றிடமாகஉள்ளதென்பதல்ல, தலைமைக்கு தகுதியில்லாதவர்களும் மக்களைத் தவறாகவழிநடத்து பவர்களும் அதிகாரத்தில் வேரூன்றியுள்ளனர் என்பதேயாகும். இதுதான் ஆபத்தான நிலைமையாகும். மக்கள் தமக்கென்றோர் தலைமையை உருவாக்குவதில் வெற்றிபெறுவார்களா? அல்லது வெவ்வேறுவகை பாசிசங்களின் எடுபிடிகளாக மாறுவார்களா? என்பதே இங்குள்ள அச்சமாகும்.
         வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி அதிகரிப்பு,  சாதியமேலாதிக்கச்செயல்கள், மக்களின் நியாயமான அநீதிமறுப்பு நடவடிக்கைகள் சமூக விரோதச்செயல்களாக முத்திரைகுத்தப் படும்போக்கு, மக்களின் தலைக்குமேல் கூரியவாளாக தொங்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டங்கள், தங்குதடையற்று நடந்துவரும் பண்பாட்டுச்சீரழிவுகள், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் அடாவடித்தனங்கள், மலிந்துகாணப்படும் ஊழல், அதிகாரிகளின் பொறுப்பற்ற, கண்ணியமற்ற நடவடிக்கைகள், சமூகஅவலங்க ளையிட்டு மக்களிடையே நிலவும் எல்லைமீறிய போறுதி, தனிநபர் விவகாரங்களுக்காக அதிகரித்துவரும் கொலைகளும் சுயசாவுகளும், அரசியல் கட்சிகளுடன் இணைந்து கைகோர்த்துச்செல்லும் அதிகாரத்துவம், மூன்றாந்தர இதழ்களின் ஆதிக்கம், அடிமட்டபாமர மக்கள் நடிகர்களினதும், சாதிமான்களினதும்செல்வாக்கு மண்டலத்துள் சிக்கியுள்ள அவலநிலை, ஆகியவற்றின் ஒட்டுமொத்த தொகுப்புத்தான் தமிழ்நாடாகும்.
         சரியானதோர் தலைமை தோன்றத்தவறுமானால், சரியானதோர் தலைமை தோன்றாதுவிடுமானால், இன. மத, சாதிப் பூசல்களும், தீவிரவாதமும் பயங்கரவாதமும், நிலவும் அநீதியான ஒழுங்குகளைக் குதறியெறியும் போக்கும், ஆளும்வர்க்கத்தில் இருந்து ஆளப்படும் வர்க்கம்வரை பரந்து வியாபித்திருக்கும் பல்வேறுவகையான கோஷ்டிச் சண்டைகளுந்தான் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் செல்நெறியாக அமையக்கூடும். இச் செல்நெறி தமிழ் நாட்டைச் சின்னாபின்னமாக்கிவிடும். ஒன்றில் தோன்றக்கூடுமென எதிர்பார்க்கப்படும் சரியான தலைமையால் இச் செல்நெறி தடுத்து நிறுத்தப்படவேண்டும். இல்லாவிடில் அக்கடமையை பாசிசம் தனது பாணியில் நிறைவேற்றும்.
         பெரும்பான்மை மக்களின்ஆதரவுடன் தமிழ்நாட்டு ஆளும்வர்க்கமே பாசிசஅரசை நிறுவவும்கூடும். அது எந்தக்கட்சி யினூடாகச் செய்யப்படுமென்பதைக் கூறமுடியாது. ஆனால் அதற்குரிய அனைத்துத்தகமைகளும் பெற்றவர்க்கத்தினர் தமிழ்நாட்டில் உள்ளனர். தனியார்படை நடத்தி ராஜாக்களாக பவனிவரும் வர்க்கங்களையும், அதிகாரிகளை கைக்கருவிகளாகப் பயன்படுத் துபவர்களையும் தெரியாதாஎன்ன? இவை பயமுறுத்தல்களல்ல. வரும்ஆபத்தை உணர்த்தலேயாகும். சிலரின்கூற்றுப்படி வந்துவிட்டஆபத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கலாம்.
         சரியான தலைமையின் தோற்றத்திற்கான காலம் சுணங்கிவிட்டதென்ற கருத்தும் நிலவுகிறது. எவ்விதமிருந்தாலும், முன்சொன்ன நிலைமைகளின் காரணத்தால் தமிழ்நாட்டின் முன்னேறியநபர்கள் பாசிசம், தேசியம், சாதியம் ஆகியனபற்றியும் இவை மூன்றுக்கும் இடையேயான பரஸ்பரத்தொடர்புகள் பற்றியுமான தமதுபுரிதல்களை மேலும் அதிகரித்துக் கொள்வது அவசியம். இதுதொடர்பாக நடந்துவரும் கருத்துப்பரிமாற்றலில் இந்நூலிற்குமொரு பங்களிப்பிருக்குமென எதிர்பார்க்கலாம்.

உலகளாவிய நிலை

         உலகளாவியமுறையில் தட்டிக்கேட்பாரெவருமின்றி அமெரிக்காதான் உலகம் முழுமையையும் அதட்டிவதைத்து ஆதிக்கம்செலுத்தும் தனியொரு உலகளாவியசக்தியாக வளர்ந்து வருகின்றது. இவ்வளர்ச்சி தடுத்துநிறுத்தப்படுவது நிச்சயம். அவ்விதம் தடுத்துநிறுத் தப்படும்போது, நிகழ் நூற்றாண்டின் பாசிசத்தலை மைநாடாக அமெரிக்கா மாறப்போவது உறுதி. இந்நிலைமை உலகின் பல்வேறுபகுதிகளிலும் பாசிசவாதிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்ப தாகவே அமையும். அமெரிக்காவின் தலைமையில் ஏதோவொரு பெயரில் பாசிசஉலக முன்னணியொன்று தோன்றக்கூடும். இம் முன்னணி வளரத்துடிக்கும் பல தேசிய இனங்களைஅடக்கவும், சிலதேசியஇனங்களை பாசிசப்படையணிகளில் சேர்த்துக்கொள்ளவும் முற்படும். இது பாசிசவியல் பற்றிய உலகளாவிய  புரிதலின் அவசியத்தை உணர்த்துகிறது.
         பாசிசவியலானது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதொரு சுதந்திரமறுப்பு முதலாளித்துவ நெறிமுறையாகும். இருந்தும் இது ஓரங்கட்டப்பட்ட நடுத்தர அணியினராலேயே வளர்க்கப்படுகிறது. இதனால் பாசிசவியல், தனது ஆரம்பத்திலும், வளர்ச்சிக் கட்டத்திலும் முற்போக்கானதாகவும், அனைத்துப் பிரச்சனைகளினதும் தீர்வுக்கான ஒரே மார்க்க மாகவே தோன்றும். மக்கள்திரளின் ஆதரவையும், பங்களிப்புகளையும் கூடப்பெற்றிருக்கும். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர்தான் அதன் உண்மையான உருவம் தெரியவரும். அப்போதுதான் மக்கள் விழிப்படைவர். தாம் பயன்படுத்தப்பட்டுவிட்டதை உணர ஆரம்பிப்பர். பாசிச இயக்கத்துக்கு எதிரான பரந்துபட்ட எதிர்ப்பு தோன்ற ஆரம்பிக்கும். எல்லோரும் என்றோ ஓர்நாள் பாசிசவியலை எதிர்த்து எழுவார்களென்பது உண்மையே, ஆனால்  சுதந்திரமறுப்புக் கருத்தி யலான பாசிசவியலை அடித்துவீழ்த்தும் துணிவும், முரணற்ற நிலையும் ஒருங்கே அமைந்த சுபாவம் எல்லோரிடமும் இருக்காது. சமுதாயத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல் தேசியம்21, இனம்24, மதம், சாதி என்று தனித்தனியாகப் பார்த்திடும் பற்றுகளின் குறுகிய தன்மையிலிருந்து விடுபட்டு முழுமையான ஜனநாயக உணர்வுகளுடனான இயக்கங்கள் மிகக் குறைவாகத் தோன்றுவதே இதற்கான காரணமாகும். ஆகவே, இப்பற்றுகளுக்கும் பாசிசவியலுக்கும் இடையேயான தொடர்பு மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள ப்படவேண்டும். அப்போதுதான் வெற்றிபெறமுடியும்.
         தேசியம்21,‘இனம்24’,தேசியஇனம்,‘தேசியவாதம்21 ஆகியவற்றி ற்கும் பாசிசவியலுக்கும் இடையேயானதொடர்பை ஆராய்வதற்க்கும் வெளிக்கொணர்வதற்க்கும் இந்நூல் முயற்சித்துள்ளது. மதம்பற்றி மிகமேலோட்டமாகவே சொல்லப்படுகிறது. ‘சாதிபற்றி எதுவுமே யில்லை. இடம், காலம் இரண்டிலும் இந்நூல் திட்டவட்டமான எல்லைகளைக்கொண்டது. இடம்-ஐரோப்பா, காலம்-இரு உலக யுத்தங்களிற்கும் இடைப்பட்டது. ஐரோப்பியத் தேசங்கள் தோற்றம் பெற்றகாலம். இந்திய, இலங்கை நிலமை பின்னணியாக இல்லாததால் மதம், சாதி ஆகியவைபற்றி எதுவுமே இல்லை.
         நூலின் காலஎல்லைக்குள் நடந்த சமூகநிகழ்வுகளைவைத்துக் கொண்டுதான் தோழர்ஸ்ராலின்J1 தேசியஇனம்பற்றிய வரைவுஇலக்க ணத்தை முன்வைத்தார். இவ் வரைவுஇலக்கணத்தைக் கால, இடஎல்லைகளற்ற நித்திய, சர்வவியாபக வரைவுஇலக்கணமாக்கி இன்றுவரை இருட்டினில் மிதப்பவர்களைக் காணக்கூடிதாயுள்ளது. தோழர்ரொகிலியாட்டியினால்T1 அக்காலகட்ட சூழலுக்குப் பொருத்த மான தெனக்கருதி முன்வைக்கப்பட்ட பாசிசவியல்பற்றிய கீழ்வரும் வியாக்கியானத்திற்கும் இந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. நிதிமூலத னத்தின் அதியுச்ச ஏகாதிபத்தியத்தன்மையும் இனியில்லையென்ற ளவிற்கான பிற்போக்குத்தன்மையும் கொண்ட வெளிப்படை யான பயங்கரவாத சர்வாதிகாரமே பாசிசவியலாகும்   இவ் வரைவுஇலக்க ணத்துடன் நின்றுவிடக் கூடாது. இன்றைய பாசிசவியல் உலகளவில் இருகூறுகளாகப் பிரிந்துள்ளது. ஒன்று: ஒடுக்கும் தேசியங்களின் குருதியினவழிப்24 பேரகங்காரவாதம்6. இது அம்மணமாக நிற்கும் பாசிசமாகும். மற்றையது: குருதியினவழிப் பேரகங்காரவாதத்திற்கு எதிராகப்போராடிவரும் ஒடுக்கப்பட்ட தேசியஇனங்களிடையே ஒழிந்து மறைந்து காணப்படும் பாசிசவியல்.
        
No comments:

Post a Comment

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் - இந்தியளவில்

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் இந்தியளவில் I - அக உறவுகளில் I - அ ) வளர்திசை        நிகழ்வு 2018 இல் நடைபெற்ற தேர்தல்களின்...