Showing posts with label South Asian Revolution. Show all posts
Showing posts with label South Asian Revolution. Show all posts

Wednesday, 5 June 2019

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.


விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.
பாகம் 1
இந்தியரசின் இவ் அறிவிப்புக்கு என்னதான் காரணம்? தமிழீழ அரசை அமைப்பதற் -கான முயற்சியில் புலிகள் ஈடுபட்ட வண்ணமேயுள்ளார்களாம்; அதற்குத் துணை -போகும் நடவடிக்கைகளில் ஈடபடக்கூடியவர்கள் இந்தியாவிலும் உள்ளார்களாம்; இவ்விதம் துணைபோகும் நடவடிக்கைகளை சட்டவிரோதமான தாக்குவதுதான் இத் தடை நீட்டிப்பிற்கான காரணமாம். இதுதான் காரணமாக இருந்தால் தடை நீட்டிப்பில் எந்தத் தவறுமில்லை. அந்நிய நாடொன்றின் உள்நாட்டு விவகாரங் -களில், அந்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாகத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை. இந்திய அரசுக்கும் இல்லை இந்திய மக்களுக்கும் இல்லை. அவ்விதம் தலையிடுவதாக இருந்தால் அது அனைத்துலக, (U.N.O) அல்லது குறிப்பிட்ட சில நாடுகளுக்கான அமைப்புகளின் (SCO) ஊடாக மட்டுமே முடியும். தேசிய தன்னாட்சி உரிமை தேச இறமை என்பன கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் செயற்படும் தமிழ் இனவிய தேசியவாதக் குழுக்களில் சில தமிழ்நாட்டைத் தாயகவும் தமிழீழத்தை சேயாகவும் குறிப்பிட்டிருந்தன, அத்துடன் சேர்த்து தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் இணைக்கும் கடல் பகுதியை தமிழ்க் கடல்எனவும் பிரகடனப் படுத்தியிருந்தனர். தமிழீழத் தேசியம் இவர்களின் தத்துக் குழுந்தையா என்ன? யார் யாருடனோ பேரம்பேசி தமிழீழத்தை தத்தெடுத்து விட்டார்களா? தமிழீழக் கடற்பரப்பினுள் உள் நுழைந்த தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் கைது செய்ததையும்; தி.மு.க ஆட்சிக் காலத்தில், இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை, மீண்டும் இந்தியா மீட்டுக் கொள்ளவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததுவும், அது இன்னமும் தொடர்வதையும் யாவரும் அறிவர் இந் நடவடிக்கையையிட்டு தமிழீழத் தேசியம் எவ்விதம் செயற்பட்டது? கச்சதீவு தமிழீழ தேசத்துக்கே உரியது என்பதே தமிழீழத்தின் நிலைப்பாடாகும். தமிழீழத்தின் தேசிய தன்னாட்சியுரிமையில் கைவைக்கும் உரிமை யாருக்குமேயில்லை. அவ்விதம் கைவைப் -பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், அது யாராக இருந்தாலும் என்ன?
வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா ஆகிய நாடுகளின் தேசியத்தை உருவாக்குவதில் சீனாவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப் பெரும் பங்கிருந்தது. ஆனால், அதற்காக சீனா இந்நாடுகளை தனது சேய் என்று என்றுமே சொன்னதில்லை. சீன, வியட்நாம் ஆகிய இருநாடுகளுக்கிடையிலும் தற்போது கடல் பரப்பினில் தீவுக்கூட்டம் ஒன்றின் இறமை தொடர்பான உராய்வுகள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் தத்தமது இறமைகளை விட்டுக் கொடுக்காத முறையில் தமக்குள்ளான முரண்பாடுகளை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தமிழ் இனத் தேசியவாதிகள் தமிழீழத்  தேசியத்தின் இறமையை ஏற்றுக்கொள்ளத் தயராய் இல்லை.
தமிழீழத்தின் போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் வயிற்றுப் பிழைப்பு நடத்திவருகிறார்களே தவிர, தமிழீழத் தேசியத்தின் வளர்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தப் பங்கும் வகிக்கவில்லை.
(1) இந்திய சமாதானப் படைக்கும் (IPKF), விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையேயான யுத்தத்தின் போது, IPKFஐ இலங்கையில் இருந்து வெளியேற்ற இவர்கள் கொடுத்த ஆழுத்தங்கள் என்ன? இவ் யுத்தத்திற்கு காரணமான இந்திய தேசிய காங்கிரஸுடனான நட்பைத் தொடர்ந்து பேணிவருவது ஏன்?
(ஆ) 1983இல் இருந்து முள்ளிவாய்க்கால் பேரழிவுவரை நடந்த இனப் படுகொலைகளை -யிட்டு இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? 1983 நடவடிக்கைகளையிட்டு இந்திய மத்தியரசும், இந்திய காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழர்க -ளுக்கு சாதகமான சில நடவடிக்கைகள் எடுத்தன. ஆனால் அவை, திராவிட இன தேசியவாதிகளினதோ, தமிழினத் தேசியவாதிகளினதோ அரசியல் நிர்ப்பந்தங்களாலல்ல. இந்தியத் தேசியத்தின் இறமை கருதி மத்தியரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் 10 வருடங்கள் கடந்தும் ஸ்ரீ றிலங்கா அரசாங்கத்தால், ஐ.நா சபையால் பிரேரிக்கப்பட்ட சாதாரண துயர் துடைப்பு நடவடிக்கை -களை இட்டுங்கூட கூட எதுவும் நடைபெறவில்லை. ஐ.நா சபையின் பிரேரணணகளில் எதையும் இந்திய மக்களிடையே குறிப்பாக தமிழ் மக்களிடைய ஜனரஞ்சகப் படுத்தி, அது தொடர்பாக இந்திய மத்தியரசுக்கு மக்கள் அழுத்தங்களை கொடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின தேசிய வாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்வோர்கள் வகுப்பறையின் பின் வரிசை மாணவர்கள் வந்துள்ளேன் சார்’ ‘வந்துள்ளேன் சார்என உரத்த குரலில் எம்பிநின்று கூச்சல் போடுவது போல் இவர்களின் தமிழீழ தேசிய உணர்ச்சியும் அடங்கிவிடுகிறது. அவ்வளவு தான்.
(இ) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக (1977 இல் இருந்து) இலங்கையில் இருந்து தமிழ் அகதிகள் வெளியேறிய வண்ணமே உள்ளார்கள். சமீபத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இவ் வெளியேற்றம் இன்னமும் அதிகரிக்கப்போவது நிச்சயம். இவ்விதம் வெளியேறியவர் -களில், இந்தியாவில் உள்ளவர்களைத் தவிர, பிற நாடுகளின் அகதிகளுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது. ஒன்றில் குடியுரிமை, அல்லது Green card உரிமை, அல்லது சட்டவிரோதக் குடியேறிகளல்ல என்ற உத்தரவாதத்துடன் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் உரிமை கிடைத்துவிட்டது.(அவுஸ்ரேலியா மட்டும் விதிவிலக்காக -வுள்ளது) ஆனால் இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகள் இன்னமும் கள்ளத்தோணி -களாகவேகருதப்படுகிறார்கள். சட்டவிரோதக் குடியேறிகள்என்பதுவே இவர்களுக்கான சட்டரீதியான அங்கிகரமாகும். எப்போதும் நாடுகடத்தப்படலாம், எப்போதும் சிறைபிடிக்கப் -படலாம், எப்போதும் தடுப்புமுகாமில் அடைக்கப்படலாம், விசேட காரணங்கள் எதுவும் கூறத்தேவையில்லை சட்ட விரோதக் குடியேறிகள்என்ற அடையாளமே போதுமானது. இதுதான் இந்திய ஜனநாயகம்.
இத்தனைக்கும் இலங்கையில் வாழும் மலையகத்தமிழர்களில் ஒரு பகுதியினரை பிரஜா -உரிமை யற்றவர்கள் ஆக்கியது இலங்கை, இந்திய அரசுகளேயாகும். இலங்கைச் சட்டம் இவர்களை பதிவுப்பிரஜைகளென அடையாளங் காட்டுகிறது. இவர்களில் பலர் இந்திய அகதி முகாம்களிலும் உள்ளார்கள். இவர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி இந்தியப் பிராஜா உரிமை வழங்கவேண்டியது இந்தியரசின் கடமையாகும். ஆனால், எதுவும் ஆகவில்லை.
இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கான நிரந்தரத் தீர்வுதான் என்ன? இந்தியத் தேசியத்தின் அரசியல் தேவைதான் இதை நிர்ணயிக்கின்றதா? இலங்கை, தமிழீழம் ஆகிய தேசங்களின் இறையான்மையில் தலையிடுவதற்காவென நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மக்கள் அணிதான் இவ் அகதிகளா? தமிழ் நாட்டின் நிலைப்பாடும் இதுதானா? அகதிகளின் உரிமைப் பிரச்சனை உலகளாவிய ஒரு மனிதாபிமான உரிமைப் பிரச்சனை என்பதை நிளைவு கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டு தமிழ் இனவாதிகளின் குறிக்கோள் என்ன? அவர்களின் நிரந்தர மௌனத்துக் -கான காரணம் என்ன? அவர்கள் வெறும் அரசியல் வயிற்றுப்போக்குவாதப் போலிகள் என்பதற்கு அகதிகளை ஒட்டிய அவர்களின் நிலைப்பாடு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறிலங்கா அரசால், இந்திய மீனவர்களின் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை எதிர்த்துப் போராட திராணியற்ற, முதுகெலும்பற்ற திராவிட இனத் தேசியவாதிகளும், தமிழ் இனத் தேசியவாதிகளும் தமிழீழ தேசியத்திற்கு துணை நிற்பார்களென இந்தியரசு கருதுவது உண்மையல்ல. ஆகையினால் இத் தடை அவர்கள் மீதான அச்சத்தால் ஏற்பட்டதல்ல. உண்மை வேறெங்கோ இருக்கிறது. அதை ஆராய்வோம்.
இன்றைய இந்தியத் தேசிய அரசின் (அது BJP அரசாக இருக்கலாம் காங்கிரஸ் அரசாக இருக்கலாம்) உடனடிக் குறிக்கோள் (2018-2025 வரை); தான் தெற்காசிய வல்லரசாக மாறவேண்டும் என்பதுதான் உலகின் பிற வல்லரசுகளுடன் (U.S, N.A.T.O, ருஷ்யா, சீனா) தான் நட்பாக இருக்கவேண்டும், அவற்றின் தெற்காசியச் செயற்பாடுகள் அனைத்தும் தன்னூடாக அமையவேண்டும், தன்னை மீறி அமையக்கூடாது என்பதுதான் இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இதில் எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் இன்றைய இந்தியத் தேசியரசு தயாரியில்லை. தனது இன்றைய அரசியல் குறிக்கோளுக்கு எதிரான அனைத்துத் தெற்காசிய அரசியல் போக்குகளையும் இன்றைய இந்தியத் தேசியரசு வெறுக்கின்றது. இப்போக்குகளை தெற்காசிய அரசியல் களத்தில் இருந்து முற்றாக தூக்கியெறிய வேண்டும் என்பதே இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இவ் அரசியல் போக்குகளில் ஒன்றாக விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது பட்டியலில் சேர்ந்துள்ளது. தடைக்கான உண்மையான காரணம்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவேயாகும்.
இது இரண்டாம் பாகமாக வெளியாகும்.
தடை தொடரும் என்ற முடிவுக்குப் பின்னால் பெரும் அரசியல் காரணங்கள் எதுவுமே -யில்லையென்றும், ராஜீவ் காந்தி கொலையால் ஏற்ப்பட்ட கடுங்கோபம் இன்னமும் இந்திய அரசியல் இயக்கங்களைவிட்டு மறையாததுதான் அதற்கான காரணம் என்று கூறுவோரும் உண்டு. சிரிப்புக்கிடமான விளக்கம்.
தேசத்தின் தந்தைஎனவும், ‘மஹாத்மாஎனவும் பிரகடனப்படுத்தப்பட்ட காந்தியைக் கொன்ற இயக்கத்தை தேசபக்தி இயக்கமென தூக்கிக் கொண்டாடுவது யார்? இந்தியாவின் சுதந்திரத்துக்காக தீவிரமாகவும், மாறுபட்ட முறையிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் போராடிய சுபாஷ் சந்திரபோஷிற்கு நடந்தது என்ன? அவரின் அவலத்துக்கான காரணம் யார் அல்லது எது என்பதுகூட இன்னமும் வெளிவரவில்லை. தேசியத் தலைவர்களுக்கு இந்திய அரசியல் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான். அடுத்ததாக இந்திராகாந்தி அவர்களின் கொலை. சீக்கியர்களுக்கு எதிராக இந்திராவால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைக்கான எதிர்வினையே இந்திராகாந்தி அவர்களின் மரணமாகும். நடத்தியது ஒரு சீக்கியரே. இதற்கான சீக்கியர்களையோ, பஞ்சாபிகளையோ அல்லது அவர்கிளைடையே காணப்படும் பஞ்சாபிய தேசிய இயக்கங்களையிட்டோ இந்திய தேசியவாதிகள்தமது தொடர் கோபத்தை வெளிப்படுத்தவில்லையே, ஏன்?
அது போன்றதுதான் ரஜீவ் காந்தி அவர்களின் கொலையும். ஏனெனில், தமிழீழ தேசியப் பொருளாதார, தமிழீழ இராணுவப் பாதுகாப்பு ஆகிய இருவிடயங்களிலும் பிரபாகரன் தற்சார்பு கோட்பாட்டை மிக இறுக்கமாகவும், வழுவல் நழுவல் இன்றியும் பின்பற்றினார். யாரையும், எதற்காகவும் சார்ந்து நிற்கவில்லை. இது விடயத்தில் அவர் ஓர் உலகளாவிய முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இந் நிலைப்பாட்டை இந்தியரசு வரவெற்றது. தனது தெற்காசிய ஆதிக்க நிலைக்கு பிரபாகரன் தடையாக இருக்கமாட்டார் என்பதையும், வெற்றிகொள்ள உதவியாகவும் இருப்பார் என நம்பியது. இதனால் தமது சொந்த நாட்டின் தமிழ் நாடு தேசத்தின் இறையாண்மை பற்றி எதுவித அக்கறையுமற்ற சில போராளிகள்’ (வை.கோ, நெடுமாறன் போன்றவர்கள்) வழர்வதையும் வாழ்வதையும் ஊக்கப்படுத்தியது. இவர்களின் ஊடாக புலிகள் இயக்கத்தை இந்தியத் தேசியத்தின்துணைப்படையாக மாற்ற முற்பட்டது. ஆனால், இந்திய அரசு தோற்றுப்போனது. இத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதுபோனமையின் விளைவதான் விடுதலைப் புலிகள்-IPKF மோதலாகும். அங்கும் பிரபாகரன் வென்றுவிட்டார்.
ஆனால் பிரபாகரனுக்கு பின்னைய விடுதலைப் புலிகள் இயக்கம்; இன்று, அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய சார்பு நிலையை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்றைய நிலைப்பாடு, மூலோபாய வகைப்பட்டதா அல்லது தந்திரோபாய வகைப்பட்டதா என்பது புரிய இன்னும் சில காலம் எடுக்கலாம். அனால், இந்தியரசும் அதன் புலனாய்வுப் பிரிவுகளும் வி.பு.இ அமெரிக்க-மேற்கு முகாமைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை முடிவெடுத்துவிட்டன. ஆகவே தடை நீடிக்கப்படுகிறது.
குறிப்ப:- இன்றையத் தெசிய அரசு எனும் பதத்தின் அர்த்தம் BJP அரசாக இருந்தாலும் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதேயாகும்
தொடரும்
பாகம் 2 :- விடுதலைப் புலிகள் மீதான தடையும்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவும்.
இக்கட்டுரையாக முழுமையாக புரிந்து கொள்வதற்காக அடிக்குறிப்பு ஒன்று இணைக் கப்படும். இது பாகம் 3ஆக அமையும். பாகம் 2 நான்கு நாளில் வெளிவரும். பாகம் 3, இன்றிலிருந்து 10 நாட்களில் வெளிவரும். வாசகர்களின் கருத்துப் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.
அடிக்குறிப்புகள்: I
(1) பாக்கிஸ்தான் உருவாகிய தகவல்
(2) லோக்மான் திலகரின் இயக்கம் பற்றிய குறிப்புகள்
(3) சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இயக்கம்
(4) காந்தி பிரித்தானியத் தொடர்பு
(5) இஸ்லாமியர்களால் இந்தியா ஆளப்பட்டது பற்றிய குறிப்புகள்
(6) சிலுவை யுத்தம்
(7) ஒரு நாடு இரு தேசங்கள்
(8) பங்காள தேஷ உருவானது பற்றி
(9) பங்காள தேஷில் இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கை
(10) காஷ்மீர் விவகாரம்
(11) இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக மாறிய விபரங்கள்
(12) SEATO பற்றி
(13) U.N.O தடை பற்றிக் கூறல்
(14) இந்திய-பாக்கிஸ்தானிய யுத்தங்கள்
(15) இம்ரான் கானின் ஆட்சி
(16) S.C.O-பாக்கிஸ்தான் இந்திய இணைப்பு
(17) One way One road?-பாக்கிஸ்தான் ஊடாகச் செல்ல-துறைமுகம் விபரம்
(18) சீன-பாக்கிஸ்தான் கடன்
(19) I.M.F
(20) பலுஸ்திஸ்தான்
(21) BRIC
(22) ஆப்பானிஸ்தான்
      (23) இஸ்ரேல் பாலஸ்தீனிய உறவு
நன்றி.

Sunday, 19 May 2019

சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு


சமதர்ம குவிமைய ஐந்தியல்

கோட்பாடு-ஒரு பார்வை

மீழ் வலியுறுத்தல்

அனைத்துத் தெற்காசிய நாடுகளின் அரசியல் கட்டுமானங்களினதும் தேசியத் தன்மை சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இன வெறித்தன(Fanatic), சாதிய வெறித்தன, மொழி வெறித்தன, மத வெறித்தன அரசியலே இந் நாடுகளின் தேசிய அரசியலின் ஆதிக்க அரசியலாக காணப்படுகின்றன.
அரசியலரங்க மேலாண்மை:
பாக்கிஸ்தானில் உருது-இஸ்லாம் வெறித்தனம்(Fanatism); பங்காளதேஷில் இஸ்லாமிய வெறித்தனம்; இந்தியாவில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத வெறித்தனம்; இலங்கையில் சிங்கள-பௌத்த வெறித்தனம். கூடவே, தெற்காசிய நாடுகளில் சுனி-சியா வெறித்தனமும் கருக்கொண்டுள்ளது, ஆனால் இன்னமும் பிரசவமாகவில்லை. தெற்காசியா இச் சுனாமிக்குத் தப்பிக்கும் என்று கூறுவதற்கில்லை. பாக்கிஸ்தான், பங்காளதேஷ், மியன்மார் ஆகிய மத வெறித்தன அரசுகள், சுனி-சியா வெறித்தனத்தின் சிறந்த மருத்துவச்சியாகச் செயற்பட்டு வருகிறார்கள்.
அரச நிறுவன மேலாண்மை:
பாக்கிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளினது அரசுகளும், முற்றுமுழு இன-தேசிய வெறித்தன அரசுகளாக (Ethno-Nationalist Fanatic State) உருவெடுப்பதில் அபார வெற்றி பெற்றுள்ளன. புறத்திலிருந்தோ, மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ மேற்கொள்ளப்படும் எவ்வகைச் சீர்திருத்தங்களாலும் இவ் இனவியத்-தேசிய வெறித்தன அரசுகளை தேசிய அரசுகளாக (Nation States) மாற்றிவிட முடியாது. அக்காலம் மலையேறிவிட்டது. இவ்வகை சீர்திருத்தங்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் விலுக்கு இறைத்த நீர் போலவே முடியும். இந்த உண்மையை ஒடுக்கப்பட்ட இனவியத்-தேசிய குழுமங்களின் அரசியல் தளபதிகள் (Ethno-Nationalist Groups’ Political commanders)  புரிந்து கொண்டார்களோ இல்லையோ, அனைத்து வல்லரசுகளும் புரிந்து கொண்டு விட்டன.
இதனால், இம்மூன்று அரசுகளுடனும் நட்புக் கொள்வதில், அனைத்து வல்லரசுகளும் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முனைப்புக்காட்டி வருகின்றனர். மேற்கூறிய இனவியத்- தேசிய வெறித்தன அரசுகள், தமது நாடுகளின் தேசியங்களை மட்டும் அடக்கவில்லை; தத்தமது நாட்டின் தேசப்பற்றையும் தமது காலில் போட்டு மிதித்து, ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாகத் தம்மையும், தமது நாட்டையும் ஆக்கிக் கொண்டுள்ளன. இதனால், இவ் அரசுகள் நாட்டுப் பற்றாளர்களாலும் (Patriots), இனவியத்- தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளாலும் (Ethno-National Groups), தனித் தேச உருவாக்கத்தில்(Nation state) ஈடுபட்டுள்ள மக்கள் ஜனநாய்கப் போராளிகளாலும் அழிக்கப்படவேண்டிய அரசுகளாக மாறிவிட்டன. மிகப்பெரும் பிரயத்தனங்களுடன் “தேச அரசுகளாக” வேடமிடப்பட்டுள்ள இவ் இனவியத்--தேசிய அரசுகளை (Ethno-Nationalist State), ஜனநாயக வழிமுறைகளில் தேச அரசுகளாக (Nation State) மாற்றியமைத்தல் என்பது இனி என்றுமே சாத்தியமற்றது.
இதனால், இவ் இன-தேசிய வெறித்தன அரசுகளின் சாம்பல் மேட்டில் புதிய தேச அரசை அல்லது பல் தேச அரசுகளின் கூட்டை(Federation) உருவாக்குவதைத் தவிர மாற்று வழியெதுவும் இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. ஆனால், இது சாத்தியமாக வேண்டுமானால், நாட்டுப் பற்றாளர்களினதும் (Patriotic forces), இனவியத்-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளினதும் (Ethno-National Groups), தனித் தேச உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனநாயகப் போராளிகளினதும் ஒருங்கிணைவு ஒரு கட்டாய நிபந்தனையாகும்.
இனவியத்-தேசிய குழுமங்களைக் கண்டு கொள்ளாததால் நேபாளப் புரட்சி பாரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்தது; நாட்டுப் பற்றாளர்களையும், இனவியத்-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளையும், மக்கள் ஜனநாயகப் போராளிகளையும் கண்டுகொள்ளாததால் தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய இராணுவ அழிவையும் , அரசியல் பின்னடைவையும் சந்தித்தது, தமிழர்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்தனர்; பெரும் ஜனநாயக எழுச்சியை நடத்திக் காட்டிய மியான்மர், அங்குள்ள இனவியத்- தேசிய குழுமங்களின் எழுச்சியைக் கண்டு கொள்ளவில்லை. அதுபோல் இவ் இனவியத்- தேசிய குழுமங்கள் தமது நாட்டில் –மியான்மரில் நடைபெற்ற ஜனநாயக எழுச்சியைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் இன்று இவ் இரு எழுச்சிகளும் மிகப்பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. மியான்மர் எனும் இஸ்லாமிய அகதிகளை இன ஒழிப்புச் செயவதில் சிங்கள பௌத்த இனவாதிகளுக்குத் தாம் சளைத்தவர்களல்ல என்பதைக் காட்டிவிட்டது. இந்தியாவில் காஷ்மீர், மிசோராம், மணிப்பூர், ஜார்க்கண்ட்,  திரிபுரா போன்ற இனவியத்-தேசிய குழுமங்கள் தமது சமஸ்டி எழுச்சியையும் இந்திய தேசப்பற்றையும் பொருத்திச் செல்வதில் நிதானம் காட்டிவருவதால், அவர்கள் சமீபத்தில் பாரிய அழிவுகள் எதையும் சந்திக்காமல் அனைத்து வழிகளிலும் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான்வாழ் இனவியத்-தேசிய குழுமங்களினது நிலையும் இதுதான். இதுவரை கூறப்பட்ட நாடுகளின் அரசுகள் அனைத்தும் இனவியத்- தேசிய வெறித்தன அரசுகளேயாகும். (Ethno-Nationalist Fanatic State). தேசிய அரசுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாதவை.
இந்தியரசின் தனித்துவம்:
ஆனால் இந்தியரசு இவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் கட்டுமானத்தையும் தனது மேலாதிக்கத்தில் கொணர்வதில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத வெறித்தனம் (Brahmanetic–Hindutuva-Sanskrit Fanatism) இன்னமும் வெற்றி பெறவில்லை. வெற்றியின் முதல்படிநிலையையே  அடையமுடியாமல் இருக்கும் நிலையில், பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இனவியத்-தேசிய வெறித்தன அரசு எனும் (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) நிலையை அடைய முடியாது. இவ்வித வெற்றி இந்திய மண்ணில் சாத்தியப்படாதென்றே தோன்றுகிறது. ஏனெனில், இனவியத்-தேசிய வெறித்தன அரசின் முழுமையான ஆதிக்கம் எப்போது சாத்தியமாகுமானால், அரசின் இராணுவம் முழுமையாக அல்லது கிட்டத்தட்ட முழுமையாக, அல்லது கிட்டத்தட்ட முழுமையாக குறிப்பிட்ட அவ் இனவியத்-தேசியத்தின் கைகளில் குவியும் போது மாத்திரமே இது சாத்தியமாக்கும். அதற்கான வாய்ப்பு இந்தியாவில் இல்லை. குறிப்பாக, சீக்கியர்களும், நேபாளியர்களும், வங்காளிகளும், தமிழர்களும், கேரளாக்காரர்களும், வட கீழ் மாகாணத்தவர்களும் இந்திய இராணுவத்தில் இருக்கும் வரை இது சாத்தியமில்லாதது. 
 இந்தியாவின் தனித்துவத்துக்கான பிற
 காரணங்கள் :                                                            1) இந்தியாவில் துரிதமாகவும், பெரும் தடங்கல்கள் இன்றியும் வளர்ந்துவரும் ஏகாதிபத்திய-நிலபிரபுத்துவ- முதலாளித்துவக் கூட்டு தன்னுடன் கூடவே சாதியக் கட்டுமானத்தையும் வளர்த்து வருகிறது. இந்திய-அளவில் வளர்ந்துவரும் இச்சாதியக் கட்டுமானம் இந்தியா துண்டாடப்படுவதையும் அனுமதிக்காது, இந்திய அரசு பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) உருவாவதையும் அனுமதிக்காது.                                                                         2) இந்தியாவின் அனைத்துவகை மேட்டுக்குடியினரும்(குறிப்பாக- பார்ப்பனிய-பனியார்-மார்வாடிக் கூட்டும், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், திரிபுரா, அருணாச்சல் பிரதேஷ், டெல்லி ஆகிய மாநில மேட்டுக்குடிகளும் இந்தியாவின்  “மூத்தண்ணன்” கொள்கையையே அனைவரிலும் விட அதிகமாக விரும்புகின்றனர். இந்தியாவின் வல்லரசுக்கனவின் அடித்தளம் இவர்கள்தான். இவர்களுக்கு ஒரு பலமான மத்திய-அரசு வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதோரும் இதில் ஒன்றுப்பட்டே உள்ளனர். ஆனால் அவ்வித அரசு பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத கூட்டு இனவியத்-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) இருக்கவேண்டும் என்பது பார்ப்பனிய-பனியா கூட்டின் விருப்பம், அவ்விதம் இருக்கக் கூடாது என்பது பார்ப்பனியர்கள் அல்லாத சாதி-இந்துக்களின் விருப்பம். இவை இரண்டும், இணைவு காணமுடியாத நிரந்தரமான எதிரும் புதிருமான விருப்புகளாகும். ஆகையினால், இலங்கை போன்றோ, பாக்கிஸ்தான் போன்றோ முழும்மையானதொரு இராணுவசர்வாதிகார அரசாக பரிமாணம் பெறும் வாய்ப்புகள் இந்திய இனவியத்-தேசிய வெறித்தன அரசுக்கு இல்லை                                                3) மார்க்ஸியம், எவ்விதம் உலகத் தொழிலாளர்களினதும், பிற உழைக்கும் மக்களினதும், முரணற்ற மனித நேயர்களினதும், இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவில், இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத முறையில் இயற்கையை மனைத ஆழுமையின் கீழ் கொணர்வது என்று சிந்திக்கும் மனிதர்களினதும், வழிகாட்டும் தத்துவமாகத் திகழ்கிறதோ அது போல், பிராமணியந்தான் இந்திய மேட்டுக்குடிகளின் வழிகாட்டும் தத்துவமாகும். இம் மேட்டுக் குடிகளின் பார்ப்பனர் அல்லாதோர் பிரிவு, பிராமணியர்களின் பதவி மேலாண்மைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள், ஆனால் பிராமணியத்துக்கு எதிராக போராடுவதில்லை, என்றுமே போராடியதுமில்லை. பிராமணியர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிராமணியத்தைத் தமதாக்கிக் கொள்ளவே முயன்றுவருகிறார்கள். இது சாத்தியமில்லாதது. நிற பேதத்தையும் விட சாதிபேதம் மிகக் கெட்டியானது.
பிராமணர்கள் மாத்திரந்தான் பிராமணிஸ்டுகள் என்பதில்லை. இந்தியாவின் மேட்டுக்குடிகள் அனைவருமே (பட்டியலின மேட்டுக்குடிகள் உட்பட) பிராமணியர்கள் அல்லாத பிராமணிஸ்டுகளாக பரிணாமம் பெற முயற்சித்து வருகிறார்கள். பிராமணியத்தை ஒரு தத்துவமாக, ஒரு கருத்தோட்டமாக ஏற்றுக்கொண்ட சாதிய, வர்க்க மேட்டுக்குடிகள் அனைவரும் பிராமணிஸ்டுகளாகிவிடுவார்கள் என நம்புகிறார்கள். “திடகாத்திரமான” ஜாதிய இந்துக்களாக விளங்குவதற்கு இந்த மாற்றம் அவசியமாகின்றது. 
ஆனால், இந்த ஜாதி இந்துக்கள், பிராமணியயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயராயில்லை. பிராமணியத்தை சம்ஸ்கிருத நீக்கம் செய்ய முற்படுகிறார்கள். இது சாத்தியமற்றது. ஏனெனில் பார்பனியத்தின் தாய்மொழி சம்ஸ்கிருதமே. இங்குதான் மொழி முக்கியத்துவம் பெறுகிறது. பிராமணிய-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசின் உருவாக்கத்திற்கு மொழி பெரும் தடையாக அமைகிறது. (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மேட்டுக் குடிகள் மொழி விடயத்தில் ஒத்த கருத்துக்கு வரமுடியாமை, இன-தேசிய வெறித்தன அரச உருவாக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளது.
இந்திய பிராமணியரல்லா மேட்டுக்குடியின் முன் பின் முரணான கொள்கைதான் மத்திய மாநில அரசுக்களுக்கிடையேயான உறவுகளை சீர்செய்ய முடியாமல்  காலத்துக்குக் காலம் தெருச்சண்டைகளில்  ஈடுபட்டுவருவதற்கான காரணமாகும்.                                                                    4)  பிராமணி-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மாறுவதற்கு தடையாக இருக்கும் மற்றோர் காரணி இந்தியாவின் மாநில சுயாட்சி முறையாகும். 
இதுவரை கூறிய காரணங்களால் தெற்காசியப் பிராந்தியம் பின்வரும் போராட்டங் களின் கொதிகலனாக மாறிவரும் நிலை தொடர்ந்து வளர்ந்து சென்ற வண்ணமே யுள்ளது.
Ø  நாடுகள் தமது சுதந்திரத்துக்காக நடத்தும் போராட்டங்கள்……நாட்டுப்பற்றியல்(Patriotism)
Ø  இனவாதத்-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராட்டங்களும்-சமஸ்டிஇயல் (Fedaralism), அவர்களின் தனித் தேச உருவாக்கத்திற்கான போராட்டங்களும்………தேசப்பற்றியல் (Nationalism)
Ø  மதசார்பின்மைக்கான போராட்டங்கள்……மதசார்பின்மையியல் (Secularism)
Ø  சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், பாரபட்சங்களுக்கும் எதிரான போராட்டம்……சாதிமறுப்பியல்(Anti-Casteism)
Ø  ஆண் பேரகங்கார ஒழிப்புப் போராட்டம். ……பாலின சமத்துவ இயல் Gender Equalitarianism
Ø  சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலுக்கும் சூறையாடல்களுக்கும் எதிராக உழைக்கும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டங்கள்……. வர்க்கவியல் அல்லது சமதர்மவியல்( Classism/Socialism)
ஆக எமது பிராந்தியத்தில் அறுவகைப் போராட்டங்களும், இவ் அறுவகை போராட்டங்கள் தொடர்பான அறுவகை இயல்களும் உள்ளன. இப் போராட்டங்களினதும், இவ் இயல்களினதும் இருத்தலும் அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளும் இயல்பானவையும் தவிர்க்க முடியாதனவையுமாகும். இவ் வேறுபாடுகள் பகைமையானதாக மாறாது, ஏனெனில், இவை அனைத்துக்கும் அடிப்படையாகத் திகழ்வது வர்க்க ஒடுக்குமுறையேயாகும். இன்னோர் வார்த்தையில் கூறினால் இவை அனைத்தும் வர்க்க ஒடுக்குமுறையை முறைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்தனி அடக்குமுறைகளாகும். ஆகவே இவ் அறுவகை அடக்குமுறைகளுக்கெதிரான அறுவகைப் போராட்டங்களும், அறுவகை இயல்களும் ஒன்றையொன்று தழுவிச் செல்லவேண்டியது கட்டாயமானதாகின்றது. தழுவிச் சென்றால் மட்டும் போதாது இவ் ஆறு இயல்களிலும் ஓரியல் அனைத்து இயல்களினது குவிமையமாக விளங்குகின்றது. அக் குவிமைய இயல் எது என்பதே கேள்வி. மூன்று சாத்தியப்பாடுகள் உண்டு. 1) சமதர்ம குவிமையம் 2) நாட்டுப்பற்றியல் குவிமையம் 3) தேசப்பற்றியல் அல்லது சமஸ்டியியல் குவிமையம்.
முன்சொன்ன அறுவகைப் போராட்டங்களும் முன்பின் முரணற்ற முறையில் முன்செல்ல வேண்டுமானால், சமதர்மமே குவிமைய இயலாக அமையவேண்டும். ஏனெனில். இவ் ஐவகை அடக்குமுறைகளும் வர்க்க ஒடுக்குமுறையை முறைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்தனி அடக்குமுறைகளாக இருப்பதே இதற்கான காரணமாகும். இதுதான் சமதர்ம மைய ஐந்தியல் கோட்பாடென முன்வைக்கப்படுகின்றது.
அனைத்துவகைப் போராளிகளும் சமதர்மந்தான் தமது குறிக்கோள் என்றே கூறிக்கொள்கிறார்கள். சொல்லளவில் சமதர்மத்தை நிராகரிப்பார் யாருமிலர். இது அவர்களின் மனதின் மொழியாக இருந்தால், இக்கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். அதேபோல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுவதுதான் தமது குறிக்கோள் என்று அனைத்துவகை இடதுசாரிகளும் கூறிக்கொள்கிறார்கள். மக்களின்  விடுதலையை நிராகரிக்கும் இடதுசாரியென யாருமிலர். இது அவர்களின் மனதில் இருந்துவரும் கூற்றாக இருந்தால், அவர்களுக்கேஉரிய இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் முன்முயற்சியாளர்களாகவும், எடுத்துக்காட்டாளர்களாகவும் திகழ வேண்டும்.
அறுவகைப் போராளிகளும் “சமதர்ம மைய ஐந்தியல் கோட்பாட்டை” முறையாகப் பின்பற்றினால்தான், தெற்காசியா எங்கணும் கோரத்தாண்டவம் ஆடித்திரியும் பண்பாட்டுத் தேசியவாதம் எனும் இனவாதத்-தேசிய வெறியாட்டத்தை Ethno-Nationalist Fanatism வெற்றிகொள்ளமுடியும். அணு ஆயுத பயன் பாட்டில் இருந்து எமது பிராந்தியத்தை மீட்கமுடியும்.







In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...