விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.
பாகம் 1
இந்தியரசின் இவ்
அறிவிப்புக்கு என்னதான் காரணம்? தமிழீழ அரசை அமைப்பதற் -கான முயற்சியில் புலிகள் ஈடுபட்ட வண்ணமேயுள்ளார்களாம்; அதற்குத் துணை -போகும் நடவடிக்கைகளில் ஈடபடக்கூடியவர்கள் இந்தியாவிலும்
உள்ளார்களாம்;
இவ்விதம் துணைபோகும் நடவடிக்கைகளை சட்டவிரோதமான
தாக்குவதுதான் இத் தடை நீட்டிப்பிற்கான காரணமாம். இதுதான் காரணமாக இருந்தால் தடை
நீட்டிப்பில் எந்தத் தவறுமில்லை. அந்நிய நாடொன்றின் உள்நாட்டு விவகாரங் -களில், அந்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாகத் தலையிடும் உரிமை எவருக்கும்
இல்லை. இந்திய அரசுக்கும் இல்லை இந்திய மக்களுக்கும் இல்லை. அவ்விதம் தலையிடுவதாக
இருந்தால் அது அனைத்துலக,
(U.N.O) அல்லது குறிப்பிட்ட சில நாடுகளுக்கான அமைப்புகளின் (SCO) ஊடாக மட்டுமே முடியும். தேசிய தன்னாட்சி உரிமை தேச இறமை என்பன கண்டிப்பாக
பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில்
செயற்படும் தமிழ் இனவிய தேசியவாதக் குழுக்களில் சில தமிழ்நாட்டைத் தாயகவும்
தமிழீழத்தை சேயாகவும் குறிப்பிட்டிருந்தன, அத்துடன் சேர்த்து தமிழ்
நாட்டையும்,
தமிழீழத்தையும் இணைக்கும் கடல் பகுதியை ‘தமிழ்க்
கடல்’ எனவும் பிரகடனப் படுத்தியிருந்தனர். தமிழீழத் தேசியம் இவர்களின் தத்துக்
குழுந்தையா என்ன?
யார் யாருடனோ பேரம்பேசி தமிழீழத்தை தத்தெடுத்து விட்டார்களா? தமிழீழக் கடற்பரப்பினுள் உள் நுழைந்த தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள்
கைது செய்ததையும்;
தி.மு.க ஆட்சிக் காலத்தில், இலங்கையிடம்
ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை,
மீண்டும் இந்தியா மீட்டுக் கொள்ளவேண்டும் என்பதற்காக
அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததுவும், அது இன்னமும் தொடர்வதையும் யாவரும் அறிவர் இந் நடவடிக்கையையிட்டு தமிழீழத்
தேசியம் எவ்விதம் செயற்பட்டது? கச்சதீவு தமிழீழ தேசத்துக்கே உரியது
என்பதே தமிழீழத்தின் நிலைப்பாடாகும். தமிழீழத்தின் தேசிய தன்னாட்சியுரிமையில்
கைவைக்கும் உரிமை யாருக்குமேயில்லை. அவ்விதம் கைவைப் -பவர்கள் நிச்சயம்
தண்டிக்கப்படுவார்கள்,
அது யாராக இருந்தாலும் என்ன?
வியட்நாம், லாவோஸ்,
கம்பூச்சியா ஆகிய நாடுகளின் தேசியத்தை உருவாக்குவதில்
சீனாவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப் பெரும் பங்கிருந்தது. ஆனால், அதற்காக சீனா இந்நாடுகளை தனது சேய் என்று என்றுமே சொன்னதில்லை. சீன, வியட்நாம் ஆகிய இருநாடுகளுக்கிடையிலும் தற்போது கடல் பரப்பினில் தீவுக்கூட்டம்
ஒன்றின் இறமை தொடர்பான உராய்வுகள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் தத்தமது இறமைகளை
விட்டுக் கொடுக்காத முறையில் தமக்குள்ளான முரண்பாடுகளை தீர்க்கும் முயற்சிகளில்
ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தமிழ் இனத் தேசியவாதிகள்
தமிழீழத் தேசியத்தின் இறமையை ஏற்றுக்கொள்ளத்
தயராய் இல்லை.
தமிழீழத்தின்
போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் வயிற்றுப்
பிழைப்பு நடத்திவருகிறார்களே தவிர, தமிழீழத் தேசியத்தின் வளர்ச்சியில்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தப் பங்கும் வகிக்கவில்லை.
(1) இந்திய சமாதானப்
படைக்கும் (IPKF), விடுதலைப்
புலிகள் இயக்கத்திற்கும் இடையேயான யுத்தத்தின் போது, IPKFஐ இலங்கையில் இருந்து வெளியேற்ற இவர்கள் கொடுத்த ஆழுத்தங்கள் என்ன? இவ் யுத்தத்திற்கு காரணமான
இந்திய தேசிய காங்கிரஸுடனான நட்பைத் தொடர்ந்து பேணிவருவது ஏன்?
(ஆ) 1983இல் இருந்து
முள்ளிவாய்க்கால் பேரழிவுவரை நடந்த இனப் படுகொலைகளை -யிட்டு இவர்கள் எடுத்த
நடவடிக்கைகள் என்ன?
1983
நடவடிக்கைகளையிட்டு இந்திய மத்தியரசும், இந்திய காங்கிரஸ்
கட்சியும் இலங்கைத் தமிழர்க -ளுக்கு சாதகமான சில நடவடிக்கைகள் எடுத்தன. ஆனால் அவை, திராவிட இன தேசியவாதிகளினதோ, தமிழினத் தேசியவாதிகளினதோ அரசியல்
நிர்ப்பந்தங்களாலல்ல. இந்தியத் தேசியத்தின் இறமை கருதி மத்தியரசால்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
முள்ளிவாய்க்கால்
படுகொலைகளுக்குப் பின் 10 வருடங்கள் கடந்தும் ஸ்ரீ றிலங்கா அரசாங்கத்தால், ஐ.நா சபையால் பிரேரிக்கப்பட்ட சாதாரண துயர் துடைப்பு நடவடிக்கை -களை இட்டுங்கூட கூட எதுவும்
நடைபெறவில்லை. ஐ.நா சபையின் பிரேரணணகளில் எதையும் இந்திய மக்களிடையே குறிப்பாக
தமிழ் மக்களிடைய ஜனரஞ்சகப் படுத்தி, அது தொடர்பாக இந்திய மத்தியரசுக்கு மக்கள்
அழுத்தங்களை கொடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின தேசிய
வாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்வோர்கள் வகுப்பறையின் பின் வரிசை மாணவர்கள் ‘வந்துள்ளேன்
சார்’ ‘வந்துள்ளேன் சார்’
என உரத்த குரலில் எம்பிநின்று கூச்சல் போடுவது போல்
இவர்களின் தமிழீழ தேசிய உணர்ச்சியும் அடங்கிவிடுகிறது. அவ்வளவு தான்.
(இ) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக (1977 இல் இருந்து) இலங்கையில்
இருந்து தமிழ் அகதிகள் வெளியேறிய வண்ணமே உள்ளார்கள். சமீபத்திய குண்டுவெடிப்பைத்
தொடர்ந்து இவ் வெளியேற்றம் இன்னமும் அதிகரிக்கப்போவது நிச்சயம். இவ்விதம்
வெளியேறியவர் -களில்,
இந்தியாவில் உள்ளவர்களைத் தவிர, பிற நாடுகளின் அகதிகளுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு நிரந்தரத் தீர்வு
கிடைத்துவிட்டது. ஒன்றில் குடியுரிமை, அல்லது Green card உரிமை,
அல்லது சட்டவிரோதக் குடியேறிகளல்ல என்ற உத்தரவாதத்துடன் காத்திருப்புப்
பட்டியலில் சேர்க்கப்படும் உரிமை கிடைத்துவிட்டது.(அவுஸ்ரேலியா மட்டும்
விதிவிலக்காக -வுள்ளது) ஆனால் இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகள் இன்னமும் “கள்ளத்தோணி
-களாகவே” கருதப்படுகிறார்கள். சட்டவிரோதக் குடியேறிகள்” என்பதுவே
இவர்களுக்கான சட்டரீதியான அங்கிகரமாகும். எப்போதும் நாடுகடத்தப்படலாம், எப்போதும் சிறைபிடிக்கப் -படலாம், எப்போதும் தடுப்புமுகாமில்
அடைக்கப்படலாம்,
விசேட காரணங்கள் எதுவும் கூறத்தேவையில்லை “சட்ட
விரோதக் குடியேறிகள்”
என்ற அடையாளமே போதுமானது. இதுதான் இந்திய ஜனநாயகம்.
இத்தனைக்கும்
இலங்கையில் வாழும் மலையகத்தமிழர்களில் ஒரு பகுதியினரை பிரஜா -உரிமை யற்றவர்கள்
ஆக்கியது இலங்கை, இந்திய அரசுகளேயாகும். இலங்கைச் சட்டம் இவர்களை பதிவுப்பிரஜைகளென
அடையாளங் காட்டுகிறது. இவர்களில் பலர் இந்திய அகதி முகாம்களிலும் உள்ளார்கள்.
இவர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி இந்தியப் பிராஜா உரிமை வழங்கவேண்டியது இந்தியரசின்
கடமையாகும். ஆனால், எதுவும் ஆகவில்லை.
இந்திய வாழ் இலங்கை
அகதிகளுக்கான நிரந்தரத் தீர்வுதான் என்ன? இந்தியத் தேசியத்தின்
அரசியல் தேவைதான் இதை நிர்ணயிக்கின்றதா? இலங்கை, தமிழீழம் ஆகிய தேசங்களின் இறையான்மையில் தலையிடுவதற்காவென நிரந்தரமாக ஒதுக்கீடு
செய்யப்பட்ட மக்கள் அணிதான் இவ் அகதிகளா? தமிழ் நாட்டின் நிலைப்பாடும் இதுதானா? அகதிகளின் உரிமைப் பிரச்சனை உலகளாவிய ஒரு மனிதாபிமான உரிமைப் பிரச்சனை என்பதை
நிளைவு கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டு தமிழ்
இனவாதிகளின் குறிக்கோள் என்ன? அவர்களின் நிரந்தர மௌனத்துக் -கான காரணம்
என்ன? அவர்கள் வெறும் அரசியல் வயிற்றுப்போக்குவாதப் போலிகள் என்பதற்கு அகதிகளை
ஒட்டிய அவர்களின் நிலைப்பாடு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறிலங்கா அரசால், இந்திய மீனவர்களின் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை எதிர்த்துப் போராட
திராணியற்ற,
முதுகெலும்பற்ற திராவிட இனத் தேசியவாதிகளும், தமிழ் இனத் தேசியவாதிகளும் தமிழீழ தேசியத்திற்கு துணை நிற்பார்களென இந்தியரசு
கருதுவது உண்மையல்ல. ஆகையினால் இத் தடை அவர்கள் மீதான அச்சத்தால் ஏற்பட்டதல்ல.
உண்மை வேறெங்கோ இருக்கிறது. அதை ஆராய்வோம்.
இன்றைய இந்தியத் தேசிய அரசின் (அது BJP அரசாக
இருக்கலாம் காங்கிரஸ் அரசாக இருக்கலாம்) உடனடிக் குறிக்கோள் (2018-2025 வரை);
தான் தெற்காசிய வல்லரசாக மாறவேண்டும் என்பதுதான் உலகின் பிற
வல்லரசுகளுடன் (U.S, N.A.T.O, ருஷ்யா,
சீனா) தான் நட்பாக இருக்கவேண்டும், அவற்றின் தெற்காசியச் செயற்பாடுகள் அனைத்தும் தன்னூடாக அமையவேண்டும், தன்னை மீறி அமையக்கூடாது என்பதுதான் இன்றைய இந்தியத் தேசியரசின்
குறிக்கோளாகும். இதில் எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் இன்றைய இந்தியத் தேசியரசு
தயாரியில்லை. தனது இன்றைய அரசியல் குறிக்கோளுக்கு எதிரான அனைத்துத் தெற்காசிய அரசியல்
போக்குகளையும் இன்றைய இந்தியத் தேசியரசு வெறுக்கின்றது. இப்போக்குகளை தெற்காசிய
அரசியல் களத்தில் இருந்து முற்றாக தூக்கியெறிய
வேண்டும் என்பதே இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இவ் அரசியல் போக்குகளில்
ஒன்றாக விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது பட்டியலில் சேர்ந்துள்ளது. தடைக்கான
உண்மையான காரணம்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான
இந்திய அவாவேயாகும்.
இது
இரண்டாம் பாகமாக வெளியாகும்.
தடை
தொடரும் என்ற முடிவுக்குப் பின்னால் பெரும் அரசியல் காரணங்கள் எதுவுமே -யில்லையென்றும், ராஜீவ் காந்தி கொலையால் ஏற்ப்பட்ட கடுங்கோபம் இன்னமும் இந்திய அரசியல்
இயக்கங்களைவிட்டு மறையாததுதான் அதற்கான காரணம் என்று கூறுவோரும் உண்டு.
சிரிப்புக்கிடமான விளக்கம்.
‘தேசத்தின்
தந்தை’ எனவும்,
‘மஹாத்மா’ எனவும் பிரகடனப்படுத்தப்பட்ட
காந்தியைக் கொன்ற இயக்கத்தை தேசபக்தி இயக்கமென தூக்கிக் கொண்டாடுவது யார்? இந்தியாவின் சுதந்திரத்துக்காக தீவிரமாகவும், மாறுபட்ட
முறையிலும்,
மிகுந்த அர்ப்பணிப்புடனும் போராடிய சுபாஷ் சந்திரபோஷிற்கு
நடந்தது என்ன?
அவரின் அவலத்துக்கான காரணம் யார் அல்லது எது என்பதுகூட
இன்னமும் வெளிவரவில்லை. தேசியத் தலைவர்களுக்கு இந்திய அரசியல் கொடுக்கும் மதிப்பு
இவ்வளவுதான். அடுத்ததாக இந்திராகாந்தி அவர்களின் கொலை. சீக்கியர்களுக்கு எதிராக
இந்திராவால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைக்கான எதிர்வினையே இந்திராகாந்தி
அவர்களின் மரணமாகும். நடத்தியது ஒரு சீக்கியரே. இதற்கான சீக்கியர்களையோ,
பஞ்சாபிகளையோ அல்லது அவர்கிளைடையே காணப்படும் பஞ்சாபிய தேசிய இயக்கங்களையிட்டோ ‘இந்திய
தேசியவாதிகள்’
தமது தொடர் கோபத்தை வெளிப்படுத்தவில்லையே, ஏன்?
அது
போன்றதுதான் ரஜீவ் காந்தி அவர்களின் கொலையும். ஏனெனில், தமிழீழ தேசியப் பொருளாதார, தமிழீழ இராணுவப் பாதுகாப்பு ஆகிய இருவிடயங்களிலும் பிரபாகரன் தற்சார்பு
கோட்பாட்டை மிக இறுக்கமாகவும், வழுவல் நழுவல் இன்றியும்
பின்பற்றினார். யாரையும்,
எதற்காகவும் சார்ந்து நிற்கவில்லை. இது விடயத்தில் அவர் ஓர்
உலகளாவிய முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இந் நிலைப்பாட்டை இந்தியரசு வரவெற்றது.
தனது தெற்காசிய ஆதிக்க நிலைக்கு பிரபாகரன் தடையாக இருக்கமாட்டார் என்பதையும்,
வெற்றிகொள்ள உதவியாகவும் இருப்பார் என நம்பியது. இதனால்
தமது சொந்த நாட்டின் தமிழ் நாடு தேசத்தின் இறையாண்மை பற்றி எதுவித அக்கறையுமற்ற
சில ‘போராளிகள்’
(வை.கோ, நெடுமாறன் போன்றவர்கள்) வழர்வதையும்
வாழ்வதையும் ஊக்கப்படுத்தியது. இவர்களின் ஊடாக புலிகள்
இயக்கத்தை ‘இந்தியத் தேசியத்தின்’
துணைப்படையாக மாற்ற முற்பட்டது. ஆனால், இந்திய அரசு தோற்றுப்போனது. இத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதுபோனமையின்
விளைவதான் விடுதலைப் புலிகள்-IPKF மோதலாகும். அங்கும்
பிரபாகரன் வென்றுவிட்டார்.
ஆனால்
பிரபாகரனுக்கு பின்னைய விடுதலைப் புலிகள் இயக்கம்; இன்று, அமெரிக்க-மேற்கு
ஐரோப்பிய சார்பு நிலையை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் இன்றைய நிலைப்பாடு, மூலோபாய வகைப்பட்டதா அல்லது தந்திரோபாய
வகைப்பட்டதா என்பது புரிய இன்னும் சில காலம் எடுக்கலாம். அனால், இந்தியரசும் அதன் புலனாய்வுப் பிரிவுகளும் வி.பு.இ அமெரிக்க-மேற்கு முகாமைச்
சேர்ந்தவர்கள்தான் என்பதை முடிவெடுத்துவிட்டன. ஆகவே தடை நீடிக்கப்படுகிறது.
குறிப்ப:-
இன்றையத் தெசிய அரசு எனும் பதத்தின் அர்த்தம் BJP அரசாக இருந்தாலும்
காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதேயாகும்
தொடரும்
பாகம்
2 :- விடுதலைப்
புலிகள் மீதான தடையும்
தெற்காசியப் பிராந்திய இராணுவ
மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவும்.
இக்கட்டுரையாக முழுமையாக புரிந்து கொள்வதற்காக அடிக்குறிப்பு
ஒன்று இணைக் கப்படும். இது பாகம் 3ஆக அமையும். பாகம் 2 நான்கு நாளில் வெளிவரும். பாகம்
3, இன்றிலிருந்து 10 நாட்களில் வெளிவரும். வாசகர்களின் கருத்துப் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.
அடிக்குறிப்புகள்: I
(1) பாக்கிஸ்தான் உருவாகிய
தகவல்
(2) லோக்மான் திலகரின் இயக்கம்
பற்றிய குறிப்புகள்
(3) சுபாஷ் சந்திரபோஸ்
தலைமையிலான இயக்கம்
(4) காந்தி பிரித்தானியத்
தொடர்பு
(5) இஸ்லாமியர்களால் இந்தியா
ஆளப்பட்டது பற்றிய குறிப்புகள்
(6) சிலுவை யுத்தம்
(7) ஒரு நாடு இரு தேசங்கள்
(8) பங்காள தேஷ உருவானது பற்றி
(9) பங்காள தேஷில் இந்தியாவின்
இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கை
(10) காஷ்மீர் விவகாரம்
(11) இரு நாடுகளும் அணு ஆயுத
நாடுகளாக மாறிய விபரங்கள்
(12) SEATO பற்றி
(13) U.N.O தடை பற்றிக் கூறல்
(14) இந்திய-பாக்கிஸ்தானிய
யுத்தங்கள்
(15) இம்ரான் கானின் ஆட்சி
(16) S.C.O-பாக்கிஸ்தான் இந்திய
இணைப்பு
(17) One way One
road?-பாக்கிஸ்தான் ஊடாகச் செல்ல-துறைமுகம் விபரம்
(18) சீன-பாக்கிஸ்தான் கடன்
(19) I.M.F
(20) பலுஸ்திஸ்தான்
(21) BRIC
(22) ஆப்பானிஸ்தான்
(23) இஸ்ரேல் பாலஸ்தீனிய உறவு
நன்றி.
No comments:
Post a Comment