Friday 24 May 2019

கொழும்புக் குண்டுவெடிப்பின் காரணகாரியத் தொடர்புகள்.


கொழும்புக் குண்டுவெடிப்பின் காரணகாரியத் தொடர்புகள்.
மேலோட்டமாகத் தெரியும், காரணம்:-
கிறிஸ்துவ ஆலயங்களில் சிலவற்றிலும், கொழும்பு நகரின் பிரபல ஹோட்டல்கள் சிலவற்றிலும் நடந்த குண்டுவெடிப்புகளுக்கான காரணகாரியத் தொடர்புகளைத் தேடும் அரசியல் ஆய்வுகள், விவாதங்கள் இன்னமும் தொடர்கின்றன. கிறிஸ்துவ ஆலயங்களிலன குண்டு வெடிப்புகளான காரணத்தை இஸ்லாமிய இயக்கத்தின் மீது சுமத்தி அனைவரும் அமைதி அடைந்து விட்டார்கள் போலும். சுவிஸ்லாண்டில் இஸ்லாமிய பள்ளிவாசலின் மீதான குண்டுவெடிப்புக்கான பதில் தாக்குதலே இலங்கைக் குண்டு வெடிப்புகள் என காரணமும் கற்பித்தாகிவிட்டது. ISIS எதற்காக இலங்கையை தேர்ந்தெடுத்தது? ஹோட்டல் -களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தமிழ்-சிங்கள-இஸ்லாமிய இன மோதல்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், நான்காவது அணியாக கிறிஸ்தவர்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் ISIS-க்கு ஏன் ஏற்பட்டது? சிங்கள கிறிஸ்துவர்கள், தமிழ் கிறிஸ்துவர்கள் என்பதுடன், பறங்கியர் (Burghers) எனும் ஒரு தனியான இனக் குழுமம் இலங்கையில் உண்டு என்பதையும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டும். இவர்கள்  கிறிஸ்தவர்கள். ஆகவே சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், பறங்கியர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய ஐந்து இனக்குழுமங்கள் மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
அவ்விதமானல் இலங்கையை ஒரு இன, மத போராட்டக் களமாக மாற்றவேண்டும் என்பதுதான் ISIS-யின் குறிக்கோளா? இவ்விதமானதோர் குறிக்கோள் ISIS-க்கு உண்டாக முடியுமா? உண்டாக வேண்டிய அவசியம் என்ன? அவசியம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்விதமானால் ISIS பயன் படுத்தப்பட்டிருக்கின்றது என்று கருதலாமா? பயன்படுத்த்யது யாராக இருக்கும்? இலங்கைக்கு வெளியில் அவர்களைத் தேட வேண்டாம், தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். தேடுவோம்:
காரணம் 1)  சிங்கள சமூகத்தில் ஆழப் புதைந்திருக்கும் கரவாஸ்-கொவிகம முரண்பாடு.
இதன் அர்த்தம், ISISஐ பயன் படுத்தியவர்கள் இலங்கைக்குள்ளேயே உள்ளார்கள். யார் அவர்கள்? வேறுயாருமல்ல பௌத்த, சிங்கள தேசியவாதிகள்தான். ஏன்? விவரத்துள் செல்ல முன்பாக சிந்திக்க வைப்பதற்காக ஒரே ஒரு கேள்வி. 70% பௌத்தர்களைக் கொண்ட (சிங்கள இனத்தில்) சிங்கள கிறிஸ்தவர்களை விலத்திவைத்த பௌத்த சிங்களத் தேசிய -வாதம் எப்போது தோன்றியது? ஏன் தோன்றியது?
தோற்றுவித்தவர் அநகாரிக தர்மபாலா எனும் பௌத்த துறவி. இவர் ஒரு முன்னாள் கிறிஸ்தவர். கரவாஸ் எனும் சிங்களப் பிரிவைச் சேர்ந்தவர். கிறிஸ்துவ அதிகார பீடத்தினதும் காலனியல் வாதிகளினதும் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே கரவாஸ் சிங்களவர்களாகும். இவர்களுக்கும் நியம’(தூய) சிங்களப் பௌத்தர்களாக அழைக்கப்படும் உடரட்ட’(மலை) சிங்களவர்களுக்கும், (கொவிகம) இடையேயான முரண்பாடுகளின் செயற்பாடுதான் சிங்கள தேசியத்தின் வரலாறாகும். சிங்கள பௌத்த தேசியம் அல் (non) பௌத்த சிங்கள தேசியம் ஆகிய இரண்டினதும் கலவையே சிங்கள தேசியமாகும்.
ஐரோப்பியரின் ஆதிக்கத்தில் இருந்து இலங்கை சுதந்திரம்அடையும்வரை இலங்கையின் பெரும்பகுதி நிலப்பரப்பு கரவாஸ் சிங்களவர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. சுதந்திரத்தின்பின் இரு சாராருக்கும் இடையே இருந்த முரண்பாட்டில் ஒரு சமரசம் ஏற்படுத்தப்பட்டது. ஏற்படுத்தியவர்கள் பிரித்தானியர்கள். இது ஒரு வகைத் திணிப்பாகவே நடந்தது.
1950-களில்தான் வெளிப்படையான அரசியல் அரங்கினில் கரவாஸ் தேசியவாதம் பின்தள்ளப்பட்டு சிங்கள-பௌத்த தேசியவாதம் பிரதான அரசியல் போக்காக மாறுகிறது. இவ்விதம் பிந்தள்ளப்பட்டதற்காக இலங்கைப் பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்கா சுடுக் கொல்லப் படுகிறார். இருந்தும் இம் முரண்பாடு சிங்கள அதிகாரவர்க்கத்துள் இன்னமும் மிக தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டேயுள்ளது.
1950களின் பின் 1960-கள்வரை இவ்விரு அதிகார பீடங்களுக்கும் இடையே மூன்று இராணுவச் சதிகள் ஏற்கனவே நடந்துள்ளன. கரவாஸ்பகுதி தோல்வி கண்டுவிட்டது.  இலங்கையின் பிரதம மந்திரி (கொவிகம) ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவின் வாக்குரிமை -யைப் பறித்தது, கரவாசிய  J.R.ஜெயவர்த்தனாவேயாகும். ஐரோப்பிய முகாமினது குறிப்பாக அமெரிக்கா-பிரித்தானிய, மற்றும் NATO-வினது ஆதரவைப் பெற்றது கரவாஸ் பகுதியேயாகும். இந் நிலைமை இன்றுவரை தொடர்கிறது.
 சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள், தொடர்ச்சியாக நடைபெற்று -வரும் இவ் இராணுவ சதியின் மற்றோர் முன்னெடுப்பாகும். மஹிந்த ராஜபக்க்ஷவை பிரதம மந்திரியாகக்கொணர எடுத்தசதி முயற்சியின் தொடர்ச்சிதான் கொழும்பு குண்டுவெடிப்பாகும். மஹிந்த ராஜபக்‌ஷ, ஜே.வி.பி தலைவர் ஆகிய இருவரும் கரவாஸ் பிரிவைச் சேர்ந்தவர்களே. ஆனால் இவர்கள் இருவரும் கொவிகம சிங்களவர்களின் தலைவர்களாகவும் வருவதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். ஆனாலும்  கொவிகம சிங்களவர் கள் இவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த, S.W.R.D பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகாபண்டாரநாயக்காவுக்கும் (இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி) மஹிந்த ராஜபக்‌ஷ்விற்கும் இடையேயான பிணக்கிற்கு இதுவும் ஒரு காரணமாகும். ராஜபக்‌ஷவை பிரதமராக்குவது என்பது, கரவாஸை(றணில் விக்கிரசிங்க) மேலும்  தனிமைப்படுத்துவது என்பதேயாகும். ஆனால். கொவியாஸ் தோல்வி கண்டு விட்டது, . கரவாஸ் அதிகாரபீடம் காப்பாற்றப்பட்டுவிட்டது. அத்தோல்வியின் விளைவுதான் இக் குண்டு வெடிப்புகளாகும்.
சிறிலங்காவின் ஆட்சி அதிகாரக் கட்டுமானதில் கரவாஸ் ஆதிக்கத்தை மேலும் பலவீனப்படுத்துவதற்காகத்தான் ISIS பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதுதான் ஒரே காரணமா? வேறு காரணங்கள் இல்லையா? அகக் காரணம் என்ற பக்கத்தில் இது ஒன்றுதான் உடனடிக் காரணியாகும். ஆனால் புறக்காரணம் என்ற பக்கத்தில் வேறோர் காரணமும் உண்டு.
காரணம் 2) தெற்காசிய இராணுவ சமநிலையை நேர்படுத்துதல்
இது, தெற்காசிய இராணுவ சமன்பாட்டைப் பொறுத்ததோர் பிரச்சனையாகும்.
தெற்காசிய இராணுவச்சமநிலை யென்பதென்ன? தராசின் ஒரு நெம்பில் இந்தியரசும் மறு நெம்பில் பாக்கிஸ்தான், வங்காளதேஷ், சிறிலங்கா, பர்மா, மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய அரசுகளும் உள்ளன. இன்றைய நிலையில் இந்தியாவின் நெம்புதான் அதிக சுமையுடன் காணப்படுகிறது; கீழ் நோக்கிச் சாய்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஜப்பான் ஆகிய நாடுகள் இத் தராசின் தற்போதைய நிலையை பேணவே முயற்சிக்கின்றன. சீனாவும், ருஷ்யாவும், BRICS இனதும் SCO வினதும் பங்களிப்பின் மூலம் இத் தராசின் ஓர் அரசுப் (இந்திய அரசுப் பக்கம்) பக்கத்தையும், பல் அரசுப்பக்கத்தையும் சம நிலைக்குக் கொண்டுவரவே விரும்புகின்றன. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சிறிலங்கா அரசு, பக்கிஸ்தான் அரசின் துணையுடன் பல் அரச தட்டில் ISIS -ஐயும் ஏற்ற முற்படுகின்றது.
இதன் மூலம் பௌத்த சிங்கள தேசியவாதம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்த முற்படுகின்றன.
முதல் மாங்காய்:- உள்நாட்டில், ஐரோப்பிய முகாமுடன் நெருங்கி உறவாடிவரும் கரவாஸ் அணியைப் பலவீனப்படுத்துவது. றணில் விக்கிரமசிங்க அணியையும், தமிழீழத் தேசியத்தின் இரு அணிகளையும்.
இரண்டாவது மாங்காய்:- தெற்காசிய இராணுவ சமநிலையில் இந்திய ஆதிக்க நிலையைப் பலவீனப் படுத்துதல்.
மூன்றாவது மாங்காய்:- இந்தியரசுக்கும் தமக்கும் இடையே அடிக்கடி நடக்கும் இராணுவ சூதாட்டத்தில் ISIS-ஐயும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ளல்.
காரணம் 3) இலங்கை இஸ்லாமியர் நிலை:-
1915-இல் இருந்தே இஸ்லாமியர்கள், ஒரு மதப்பிரிவென்ற முறையில் அடக்கப்பட்டே வந்துள்ளனர். சிங்கள பௌத்த தேசியத்துடன் முரண்பட்டு நிற்பதுவும், இலங்கைத் தமிழ்த் தேசியத்துடன் ஒரு நட்புறவைப் பேணுவதுமே இவர்களின் பொதுவான போக்காக இருந்து வந்துள்ளது. மலையத் தமிழர்களுடன் என்றுமே இவர்களுக்கு எந்த முரண்பாடும் இருந்ததி -ல்லை. ஆனால் தமிழீழ தேசிய இனவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பின்னர் இவர்கள் தம்மைத் தனித்தேசியமாக வழர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இத் திசைநோக்கித் துரிதமாக வளரவும் ஆரம்பித்தார்கள். 20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியிலேயே பாக்கிஸ் -தானை தளமாகக் கொண்ட வஹாபிஸத்துடன் இணைந்து கொண்டார்கள். புலி எதிர்ப்பை மனதில் கொண்டு சிறிலங்கா அரசும் கண்டுங் காணாத ஒரு போக்கைக் கடைப்பிடித்தது.  இவர்களின் வளர்ச்சிக்குத் துணைபோகவும் செய்தது. ஆகவே இஸ்லாமியத் தேசியவாதக் குழுக்கள் ISISஆல் தோற்றுவில்லப்பட்டவையல்ல.. ஆனால் பரஸ்பர நன்மை கருதி நண்பர்களாகியிருக்கலாம். இவ்விரு நண்பர்களும் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக் -கவில்லை என்பதையும், அதேபோல் சிறிலங்கா அரசு ISIS உடன் எந்த முரண்பாட்டையும் வழர்ந்துக்கொள்ள விரும்பவில்லை என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
முடிவாக:- எதுஎப்படியோ பௌத்த-சிங்கள தேசியவாதம் தனது எதிரியை நண்பனாக்கிக் கொண்டுள்ளது. எதிரியை நண்பனாக்கிக் கொண்டும், நண்பரை எதிரிகளாக்கிக் கொண்டும் அல்லல்படுவது இனவியத் தேசியவாதங்களின் பொதுவான குணாம்சமாகும் ஆகையினால் -தான் இனவியல் தேசியவாதங்கள் சாத்தியமில்லை, அல்லது வேலைக்காகாது எனும் கருத்து முன்வைக்கப்பட்டுவருகிறது.

சாத்தியமில்லாத இனவியத் தேசியம்  எனும் கட்டுரையைப் படிக்கவும். https://vidiyalgowri.blogspot.com/2019/05/ethnonationalism.html


கரவாஸ்-கொவியா முரண்பாடு பற்றிய விரிவான விளக்கத்தையும், இலங்கையின் இஸ்லாமியர் ஒரு தனித்தேசியமாக உருத்திரண்டுவரும் நிலைபற்றியும் தெற்காசிய இராணுவ சமநிலைபற்றியும் விரிவாக, அறிந்து கொள்ள கீழ்வரும் 3 கட்டுரைகளையும் வாசிக்கவும்.
கட்டுரை I
3-2) மஹிந்த இராணுவம் எதற்காகப் பலப்படுத்தப்படுகிறது.
3-2-1) இராணுவச் சதிக்கு அஞ்சியா?
கட்டுரை II
3-2-5) இஸ்லாமிய ஆயுத குழுக்களுக்கு அஞ்சியா?
கட்டுரை III
3-2-6) ஆசிய வல்லரசுகளின் கடும்போக்கிற்கா?
இக்கட்டுரைகள் இரண்டும் பின் வரும் நூலின் சில பகுதிகளாகும்.
வடிவங்கள் மாறலாம்! போராட்டம் தொடரும்......-சமூகவியல் ஆய்வு,
ஆசிரியர்-கைமண்.
பதிப்பு-மறுநிர்மாணம்,
First Edition: July 2011, Publishers-Maru Nirmanam ©
கைமண் எனது புனைபெயராகும். நூல் பெறவிரும்புவோர், கீழ்வரும் marunirmanam@gmail.com, மற்றும் vidiyalillam@yahoo mail.co.in முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்.
நூலின் PDF பிரதி உண்டு. e-mail இல் அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்ளவும்.
இம் மூன்று கட்டுரைகளும் PDF வடிவிலும் உண்டு. உள்ளதனால் முகநூலிலோ, டுவிட்டரிலோ அனுப்பிவைக்க முடியாதுள்ளது. ஆகவே ஈ-மெயிலில் அனுப்புகிறோம். உங்கள் மெயில் முகவரியை அனுப்பி வைக்கவும். நன்றி.
-------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...