Saturday 5 September 2020

Dollar drops

https://tamil.goodreturns.in/world/dollar-denominated-trade-between-russia-and-china-dropped-under-50-020308.html

Monday 22 June 2020

Equality now

https://www.linkedin.com/posts/equality-now_the-global-movement-to-end-fgm-promising-activity-6676810202618068993-xq9M

Self motivation

https://www.linkedin.com/posts/ovilia-fernandes-6619a112_activity-6680756984578478081-G1kX

Wednesday 10 June 2020

முதலாழித்துவ தகவ்மைப்பு


முதலாழித்துவ பொருளாதாரத்தின் ஒரு அங்கத்தின் வீழ்ச்சி முதலாழித்துவத்தை முற்றாக சேதப்படுத்திவிடுமென அதாவது மூலதன அதிக்கத்தை சிதைத்துவிடுமென எதிர்பார்க்க முடியாது. மூலதன ஆதிக்கம் இன்னோர் துறையூடாக வளரும். இக் கட்டுரை இந்நிகழ்வுப் போக்கை மிகத் தெழிவாக விளக்குகிறது.




https://www.facebook.com/mass.muthu.9822/posts/2568908186708040

இயற்கையின் நண்பராவோம்!!

Tuesday 9 June 2020

மார்க்ஸியர்களின் பேதங்கள்


 மார்க்சிய அணி பன்றிக்குட்டிகளாகப் பெருகிவருவது உண்மைதான், ஆனால் அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இதே நிலைதான். ஆராய வேண்டிய பிரச்சனை பன்றிக்குட்டிகளை ஒன்றுபடுத்துவது பற்றியதல்ல, மாறாக இப்பரவல் நிலை நிலைத்து நிற்பற்கும் தொடர்வதற்குமான காரணங்கள் என்ன என்பதை ஆராய்வதேயாகும்.
          எனது கருத்து இந்தியத் தேசியம், தேசம் ஆகியனபற்றியும். இந்தியாவில் காணப்படும் பல்வகை இனக்குழுமங்கள், சாதியக் குழுமங்கள் ஆகியன பற்றியும் ஒரு அல்லது ஓரிரு பொதுவான கருத்து இன்னமும் உருவாகவில்லை என்பதேயாகும். பன்றிக்குட்டிகள் போல் சில நூறு கருத்துக்கள் உள்ளன. பூர்ஷ்வாக்களும், அதிகாரத்துவ வர்க்கத்தினரும்  bureaucrats, பிரபுத்துவ வர்க்கத்தினரும், ஆழும் வர்க்க புத்தி ஜீவிகளும் இது விடயத்தில் ஒத்த கருத்துக்கு வரமாட்டார்கள், ஒத்த கருத்து உருவாவதை அனுமதிக்கவும் மாட்டாரகள்.
         மார்க்சிய சிந்தனையாளர்கள்தான் தேசம், தேசியம், தேசிய இனவியம், சாதியம், ஆணியம் ஆகிய விடயத்தில் ஒரு ஒத்த கருத்துக்கு வரவேண்டும். அது வரையும் மார்க்ஸிய பன்றிக்குட்டிகள் பெருகிக் கொண்டேயிருக்கும், இது தவிக்கமுடியாததாகும்.  

antiracist Seilanka

Tuesday 2 June 2020

மார்க்சிசம் வர்க்கபேத சமூகத்தை விமர்சிப்பதற்கான ஒரு அறிவிவியல் ஆயுதம் மட்டுமல்ல


httஅமைப்பு முறையின்றி மார்க்சியம் படிப்பது மார்க்சியம் தெரிந்த உதிரிகளைத்தான் உருவாக்கும்!!!

இக்கூற்று இரு விதமான மார்க்சியர்கள்பற்றிக் கூறுகின்றதா?
இருவிதமான மார்க்சியர்கள் இருக்கமுடியாது. மார்க்சிசம் வர்க்கபேத சமூகத்தை விமர்சிப்பதற்கான ஒரு அறிவிவியல் ஆயுதம் மட்டுமல்ல, அது வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குமானதோர் அறிவியல் ஆயுதமுமாகும். விமர்சிப்பது தவறல்ல, விமர்சிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடுவதுவும் தவறல்ல. அது அவனின் உரிமை, நீ கற்றதின் படிதான் நில் என்று அவனை யாரும் அல்லது எதுவும் நிர்பந்திக்க முடியாது. அதற்காக அவனை இழிசனனாகக் கருதமுடியாது. உதிரி பாட்டாளிவர்க்கம் எவ்விதம் இழிவானதல்லவோ, அவ்விதமே இவர்களும் இழிவானவகள் அல்ல. அவர்கள் மார்க்ஸிஸ்ட அல்ல, அவ்வளவுதான். அவர்களின் புத்திஜீவித்தனத்தை மார்க்சியர்கள் முடிந்தால் பயனபடுத்திக்கொள்ளலாம் அவனின் சம்மதத்துடன்.
தொழிலாளிவர்க்கத்தின் தொலைதூர, நீடித்த, நிரந்தர சமூக-அரசியல் இலட்சியத்திற்காக தன் அர்ப்பணிப்புடனும், சுய சிந்தனையுடனும், தன்னிச்சைத்தனத்தைக் களைந்து, அமைப்புரீதியான ஒழுங்குகளின் கீழ் செயல்படுபவனே மார்க்சிஸ்ட் ஆகும். அமைப்புரீதியான ஒழுங்குகள் என்பது இயங்குநிலையிலுள்ள ஏதாவதோர் மார்க்சிய அமைப்புடன் இணைந்ததாகத் தான் இருக்கவேண்டியது என்பதல்ல; ஒவ்வொரு தெற்காசிய நாடுகளிலும் ஆகக் குறைந்தது ஐந்துக்கு மேற்பட்ட மார்க்ஸிய அமைப்புகள் உள்ள இன்றை நிலையில், பல பத்து தனிநபர் மார்க்ஸிஸ்டுகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந் நாடுகளின் சமதர்மப் புரட்சி தொடர்பான ஒரு பொது நெறி உருவாகுவரை இந்த நிலை தொடரும்.
ps://www.facebook.com/manokaran.karan.79/posts/1509225512581899

Monday 18 May 2020

China India dialogue a must

Look what I shared: China India Dialogue @MIUI| http://chinaindiadialogue.com/in-the-esteem-of-future-generations

Sunday 17 May 2020

உலக பொருளாதார த்தின் தடுமாற்றம்

Look what I shared: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு உலகப் பொருளாதாரம் எப்படி மீளும்? - 4 வாய்ப்புகள் - BBC News தமிழ் @MIUI| https://www.bbc.com/tamil/global-52646980

Look what I shared: கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரத்தில் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் - அதிர்ச்சி தரும் தகவல் - BBC News தமிழ் @MIUI| https://www.bbc.com/tamil/global-52695306

Tuesday 5 May 2020

மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?

மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?

karal marks 2

அவன்
மானுடத்தின் வக்கீல்
அன்று
அவன் பெயரை
எழுதக் கூட
அனுமதிக்காமல்
மொழி
முடமாக்கப்பட்டது
இன்றோ
சூரியன் கூட
அவன் பெயரை
உச்சரிக்காமல்
உதிக்க முடியவில்லை
அவன் இருந்த போதோ
தூசிக்கப்பட்டான்
இன்று
அவன் புதைகுழியின்
புல்லும் கூட
பூஜிக்கப்படுகிறது.
அழகைப் பார்த்து நான்
பிரமித்திருக்கிறேன்
என்னை
அறிவால் பிரமிக்கவைத்தவன்
அவன் தான்
அவன் கண்களில்…
உலகின் இருட்டையெல்லாம்
விரட்டியடிக்கும்
வெளிச்சம்
அவன் தான்
மனிதகுலத்தின்
இறந்த காலத்தையெல்லாம்
ஜெயித்து முடித்த சிந்தனையாளன்
கடவுளின் சிறைச்சாலையிலிருந்து
மனிதனை விடுவித்த
மகான்
அவன் தடுத்திராவிட்டால்
சரித்திரம்
தற்கொலையின் விளிம்புக்குத்
தள்ளப்பட்டிருக்கும்
பழைய சித்தாந்தங்கள்
முதலாளித்துவத்தின் புண்களை
முத்தமிட்டன
நிகழ்காலத்தின்
நிர்வாணம் மறந்து
அடுத்த ஜென்மத்திற்க்கு
ஆடை நெய்தன
ரொட்டியை இறைவன்
தயாரிக்கிறான்
அதில் புசிப்பவன் பெயரையும்
பொறிக்கிறான் என்றன
இலக்கியமும் கலையும்
இந்த
ஓட்டைச் சமூகத்தோடு
ஒத்துப்போகத்தானே
ஓதின ?
நீதி நூலெல்லாம்
கொழுந்து விட்டெரியும்
கோபத்தின்
இடுப்பை ஒடிக்கும்
ஏற்ப்பாடல்லவா ?
சிருஷ்ட்டிக்கப்பட்ட
செயற்கை இருட்டு
மனிதனைப்
பிறவிக் குருடென்றே
பேசவைத்தது
மார்க்ஸின்
சம்மட்டி அடியில்
மனிதகுலம்
தன்
துருக்கள் உதிர்ந்து துலங்கியது.
எழுந்திரு மனிதனே
உனக்கு
முன்னும் பின்னும்
இன்னொரு பிறவி
என்பதே இல்லை
நீ என்பதன்றோ
நிஜம்
சொர்க்கச் சிந்தனையை
நிறுத்தி விடு
வர்க்கச் சிந்தனையை
வளர்த்துவிடு
வியர்வைக்கு விலை
பரலோகத்தில்லை
இகலோகத்தில் உண்டென்று
இயம்பு”-
அவன் குரல்
அகிலத்தின் சுவர்களைஅசைத்தது
பழைய விருட்சங்களின்
விஷவேர்களைச் சென்று
விசாரித்தது
அவன்
பட்டபாடுகள் எத்தனை ?
அதோ
அந்த
அறிவின் பிதாமகன்
வறுமையின் மடியில்
வசித்த நாட்கள்…..
இரைப்பையைப்
பசிக்கு விற்றுவிட்டு
அவன்
அறிவுக்குச் சாப்பாடு போட்ட
அந்த நாட்கள்
ஜென்னியின் மார்பில்
பாலையும் துக்கத்தையும்
சேர்த்துப் பருகும் அந்த சின்னக் குழந்தை
கட்டுரை அனுப்புவதற்காய்
அடமானம் கிடக்கும்
குழந்தையின் காலணிகள்
உலகத்து வறுமையை
ஒழிக்க வந்தவனுக்கு
சுயவறுமை என்ன
சுடவா செய்யும் ?
அவனுக்கு
அஞ்சலி செலுத்தினால்
இருதய ரத்தம்
இன்னும் சிவக்காதோ ?
இனி எந்த தேசமும்
மின்சாரத்தையும்
மார்க்சையும்
ஒதுக்கி விட்டு
உயிர்வாழ முடியாது.

பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற ஆசான் கார்ல் மார்க்ஸ் குறித்து கவிஞர் வைரமுத்துவின் கவிதை.

இருநூறாவது பிறந்த நாள் நிறைவை முன்னிட்டு.

முகநூல் பதிவிலிருந்து
https://senkodi.wordpress.com/2018/05/05/karl-markx-200/

பேராசான் மார்க்ஸின் பிறந்த நாள் நினைவாக

இன்று மாமேதை, பேராசான் மார்க்ஸின் 202 ஆவது பிறந்த நாள். உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்க விரும்பிய அந்த மாபெரும் மேதையின் கனவு இன்னும் நனவாகவில்லை. அதை நோக்கிய நகர்வில் இருக்கிறோமா என தன்னைத் தானே ஆய்வு செய்வதும், அந்த திசையில் பயணிப்பதை உறுதி செய்வதுமே நம்மையும், சமூகத்தையும் மேன்மைப் படுத்தும்.
கயூனிஸ்டுகள் யாரும் மார்க்ஸை கடவுளாக கருதுவதில்லை. மூலதனம் நூலை வேதமாக கொள்வதில்லை. ஏனென்றால் கடவுள், வேதம் போன்ற சொற்களின் பொருள், நடப்பு உலகை அப்படியே தக்க வைப்பதிலும், அதை புரட்சிகரமாக மற்றியமைப்பதை எதிர்ப்பதிலுமே தங்கி இருக்கிறது. அதனால் கம்யூனிஸ்டுகள் மார்க்ஸை கடவுளாகவும், மூலதனம் நூலை வேதமாகவும் ஒருபோதும் கருதுவதில்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் அல்லாத மக்கள் சொற்களுக்கு இவ்வளவு நுணுக்கமாக பொருள் நுணுகி தெளிவதில்லை. அதேநேரம், ஒரு மனிதனின் மேன்மையைக் குறிக்க அதிகஅளவாக கடவுள் எனும் சொல்லால் குறிப்பது மக்களின் நடப்பில் இருக்கிறது. இந்த அடிப்படையில் மட்டுமே இந்தக் காணொளியின் தலைப்பு பொருத்தப்பாடு உடையது.
வேண்டுமானால் கம்யூனிசத்தின் உயிர் என்று கொள்ளலாம். மார்க்ஸின் உயிர் அல்ல, அது 65 ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் அந்த ஆண்டுகளில் அவர் கைக்கொண்டிருந்த கண்ணோட்டம், ஆய்வுமுறை, அதற்காக படிக்க, அறிந்து கொள்ள அவர் செலவிட்ட உழைப்பு ஆகியவையே கம்யூனிசத்தின் உயிராக இருக்கிறது. அந்த உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது, மலர்ந்து கொண்டிருக்கிறது, மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
மார்க்ஸும் மூலதனம் எனும் நூலும், முதலாளித்துவவாதிகளாலேயே தவிர்க்கவே முடியாமல் உச்சரிக்கப்படும் பெயர்களாக இருக்கின்றன. ஏனென்றால் அவரின் சமூக அறிவியல் கண்டுபிடிப்புகள், தப்பிக்கவே முடியாதபடி கற்பனாவாதிகளின், தனியுடமைவாதிகளின் உச்சந் தலைகளில் கூர்மையாய் இறங்குகிறது. வரலாற்றியல் பொருள்முதல் வாதம் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. அது எப்படி என்று அறிய வேண்டுமானால் மார்க்சியத்தை பயில்வது மிகவும் இன்றியமையாதது. புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு மார்க்ஸை அறிவதற்கான தொடக்க அறிமுகம் தான் இந்தக் காணொளி.
பாருங்கள், பரப்புங்கள்.
https://senkodi.wordpress.com/2020/05/05/v7-2020-marx-bd/

கொரோனா : எதிர்காலம் எப்படி இருக்கும் ? வணக்கம். லாக் டவுனில் இருக்கிறேன். இந்த இடைவெளி அல்லது இடைவேளை எத்தனை நாட்கள் தொடரும்? எனக்குத் தெரியவில்லை. இடைவெளியின் காலத்தைத் துல்லியமாக கணிப்பதைக் காட்டிலும், இந்த இடைவெளி நம் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது பற்றி கவலைப்படுவது பயனுள்ளதாக இருக்குமெனக் கருதுகிறேன். எனவேதான் வலைப்பூ என்ற இந்த முயற்சி. பயனுள்ளதெனக் கருதினால் பகிருங்கள். நன்றி. மருதையன். 0000 இனி வரும் காலம்….. ஏப்ரல் இறுதி வரை லாக் டவுனை நீட்டிப்பது என்று பல மாநிலங்கள் அறிவித்து விட்டன – தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மோடியின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றன. லாக் டவுன் தளர்த்தப்படுவதையே கார்ப்பரேட் முதலாளிகள் பலர் விரும்புகிறார்கள். இதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தொழில்கள் திவாலாகிவிடும் என்றும் 22 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்களுக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவென்பதால் மக்கள் தொகையில் சுமார் 15 கோடி அளவில் உள்ள அவர்களை வேலைகளில் ஈடுபடுத்தலாம் என்று முதலாளிகள் சங்கமான பிக்கி கோரியிருக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே பிரதமரின் தொகுதியான வாரணாசியில் குழுந்தைகள் பசிக்கு புல்லைத் தின்னும் வீடியோக்கள் வெளிவந்தன. அவர்கள் செங்கல் சூளையில் வேலை செய்யும் தலித் சமூகத்தினரின் குழந்தைகள். உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் (life and livelihood) தொடர்பு இருக்கிறது என்ற உண்மை, அதைப் பார்த்த பின்னரும் பிரதமருக்குப் புரியவில்லை. முதலாளி வர்க்த்தின் முறையீடு ஒலிக்கத் தொடங்கிய பின்னர்தான், “ஜான் பி ஜஹான் பி” என்று பஞ்ச் டயாலாக் மாறியிருக்கிறது. ஏப்ரல் மத்தியில் வட மாநிலங்களில் ரபி பருவ அறுவடைக்காலம் தொடங்குகிறது. எனவே, விவசாயிகளின் பெயரைச் சொல்லி பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படக் கூடும். இது உலகு தழுவிய பெருந்தொற்று (Pandemic). எனவே இது விசயத்தில், எல்லா அறிவிப்புகளும் இடைக்கால ஏற்பாடுகளாக மட்டுமே இருக்க முடியும். 0000 உலகு தழுவிய பெரும் தோற்று நோய்களை பொருத்தவரை கடைசியாக உலகம் எதிர்கொண்ட பேரழிவு – ஸ்பானிஷ் ப்ளூ. 1918 மார்ச் முதல் 1920 வரை அந்த நோயின் தாக்கம் உலகெங்கும் வெவ்வேறு அளவுகளில் நீடித்திருக்கிறது. 1918 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் முதல் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்திய சிப்பாய்கள் மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள். அவர்களில் 7 பேர் வழியாகத்தான் இந்தக் காய்ச்சல் இந்தியாவுக்குள் வந்தது. அதன் பின்னர் ரயில் போக்குவரத்தின் வழியாக இந்தியா முழுதும் இந்த வைரஸ் பரவியது. மூன்று அலைகளாக உலகம் முழுதும் இந்த காய்ச்சல் பரவியது. முதல் அலை 1918 ஜூலை வரை நீடித்தது. இரண்டாவது அலை ஆகஸ்டில் தொடங்கி 1918 இறுதி வரை நீடித்தது. முடிந்தது என்று கருதி கட்டுப்பாடுகளை பல நாடுகள் தளர்த்திய நிலையில், மூன்றாவது அலை 1919 சனவரியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கி அமெரிக்கா பிரான்சு, ஜப்பான் எனப் பரவியது. 1920 மார்ச் வரை இது நீடித்தது என்று மதிப்பிடுகிறார்கள். இந்த இரண்டாவது, மூன்றாவது அலைகளில்தான் பெருந்தொகையான மக்கள் இறந்தனர். இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களில் காந்தியும் ஒருவர் இரண்டாவது அலையில் நோய்த் தொற்று ஏற்பட்ட ஆயிரம் பேரில் 4.7 பேர் பிரிட்டனில் இறந்தனர். அதே நேரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை நோய்த் தொற்று ஏற்பட்ட ஆயிரம் பேரில் 20 பேர் இறந்திருக்கின்றனர். இந்தியாவின் மரண விகிதம் மிக அதிகமாக இருந்ததற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. அன்று மருத்துவ வசதிகள் அனேகமாக இல்லாமல் இருந்தன. இந்தியாவில் இருந்த மருத்துவர்களையும் போர்முனைக்கு அனுப்பிவிட்டது பிரிட்டிஷ் அரசு. 1918 இந்தியாவைத் தாக்கிய மாபெரும் பஞ்சம் இதனுடன் சேர்ந்து கொண்டது உணவுப் பஞ்சத்தின் விளைவாக நோய் எதிர்ப்பு ஆற்றல் இழந்த மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையிலும் தானியங்கள் அனைத்தையும் போர்முனைக்கு அனுப்பி மக்களைப் பட்டினியில் தள்ளியது பிரிட்டிஷ் அரசு. “அன்றைய நிலையை காட்டிலும் இன்று மருத்துவம் மேம்பட்டிருக்கிறது உணவு உற்பத்திக்கும் குறைவில்லை. ஆனால் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் ஆழமாகி இருக்கின்றன. சமூக இடைவெளியை பராமரித்தல், ஊரடங்கை கடைப்பிடித்தல், தரமான மருத்துவம் ஆகிய அனைத்துமே வசதிபடைத்தவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடும். சாதாரண இந்திய மக்களைப் பொறுத்தவரை இவை இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. அன்றைக்கு இருந்தது காலனி அரசாங்கம். இன்று இருப்பது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் . இந்த வேறுபாடு நடை முறையில் என்ன மாற்றத்தைக் காட்டப் போகிறது என்பதைக் காலம் தான் கூற வேண்டும்” என்று எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் எழுதியிருக்கிறார் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அமித் கபூர். “காலம்” என்பது இதையெல்லாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும் நாம்தான். கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தேசிய அவசர நிலையை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார். அதே நாளில் அமெரிக்க பெடரல் அரசின் சார்பில், இந்த நோய்த்தொற்றை சமாளிப்பதற்கான 100 பக்கத் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது பொதுமக்களின் பார்வைக்கு அல்ல என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் படி இயல்புநிலை திரும்புவதற்கு குறைந்தபட்சம் 18 மாதம் பிடிக்கும் என்று குறிப்பிடுகிறது. https://www.nytimes.com/2020/03/17/us/politics/trump-coronavirus-plan.html ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு விலக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் எந்தெந்த அளவில் கடைப்பிடிக்கப்பட்டால், எத்தனை லட்சம் பேருக்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்று கேரளா மாநில அரசின் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஏப்ரல்10 ஆங்கில இந்து நாளேட்டில் வெளியாகியிருக்கிறது. https://www.thehindu.com/news/national/kerala/coronavirus-3-pronged-steps-post-lockdown/article31303428.ece இந்தியாவிலேயே இந்த நோயை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரியாக செயல்பட்டுள்ள மாநிலம் என்ற வகையில் கேரள மாநிலத்தில் இந்த அறிக்கையை நாம் கவனத்துடன் பரிசீலிக்கலாம். எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் மிதமான அளவில் கடைப்பிடிக்கப் பட்டால் ஏப்ரல் 2021 இல்தான் இப்பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு “இயல்பு நிலைக்கு” திரும்ப இயலும் என்று கணிக்கிறது அந்த அறிக்கை. ஸ்பானிஷ் ஃபுளூவுக்குப் பிந்தைய ஒரு நூற்றாண்டில், உலக முதலாளித்துவம் இயற்கையை அழிக்கும் வேகமும், நாடு கடந்து செல்வோரின் வேகமும் அதிகரித்திருப்பதால், புதிய நோய்கள் உருவாகும் வேகமும், தொற்றுப் பரவலின் வேகமும் அதிகரித்திருக்கிறது. அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மருத்துவத்துறை ஆய்வின் வேகமும் அதிகரித்திருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் மீது ஏகாதிபத்திய வல்லரசுகள் செலுத்தும் நேரடி, மறைமுக செல்வாக்கின் காரணமாக, பொய்களையும் வதந்திகளையும் பரப்பும் வேகமும் அதிகரித்திருக்கிறது. எனவே, நமது கணிப்புகள் இந்த வரம்புகளுக்கு உட்பட்டவையாகவே இருக்க முடியும். 000 ஸ்பானிஷ் ஃபுளூவுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பது குறித்து ஒரு செய்தி உண்டு. அந்த காய்ச்சல் ஸ்பெயினில் தோன்றவில்லை. முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளில், குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் இந்தக் கொள்ளை நோய் பரவி லட்சக்கணக்கானவர்களை பலி கொண்டிருந்தது. இருப்பினும் உண்மையை வெளியிட்டால், சிப்பாய்களின் கலகத்துக்கும், புரட்சிக்கும் அது வழி வகுத்துவிடும் என்பதால் “தேச நலனை முன்னிட்டு” அன்றைய ஏகாதிபத்திய அரசுகள் உண்மையை இருட்டடிப்பு செய்தன. ஸ்பெயின் அரசு அந்தப் போரில் ஈடுபடவில்லையாதலால் தங்கள் நாட்டில் பரவிவரும் விநோத காய்ச்சல் பற்றிய செய்தியை அந்நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டன. எனவே அது “ஸ்பானிஷ் ஃபுளூ” வாகிவிட்டது. அன்று உலகமுழுவதும் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4 முதல் 5 கோடி. அதில் இந்தியாவில் மட்டும் 1.7 கோடி. மரண விகிதத்தின் அடிப்படையில் அந்த நோய்க்கு பெயரிடுவதாக இருந்தால், அதனை இந்தியன் ஃபுளூ என்றுதான் அழைத்திருக்க வேண்டும். “தேச நலனை முன்னிட்டு” செய்யப்படும் இருட்டடிப்புகள் தொடரத்தான் செய்கின்றன. இன்றைக்கும் கூட இந்த விநோதக் காய்ச்சல் பற்றி டிசம்பர் 30 அன்றே அபாயச் சங்கு ஊதிய லி வென் லியாங் என்ற கண் மருத்துவரை சீன அரசு ஒடுக்கத்தான் செய்தது. பிப்ரவரி 7 அன்று கொரோனாவுக்கு அவரே பலியானார். அமெரிக்காவில் டிரம்பின் வர்த்தகத்துறை ஆலோசகர் பீட்டர் நெவாரோ ஜனவரி 29 அன்றே இந்தக் கொள்ளைநோய் 5 லட்சம் அமெரிக்கர்களை காவு கொள்ளும் என்று டிரம்பை எச்சரித்திருக்கிறார். ஜனவரி 30 அன்று சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் எம் அசார் எச்சரித்திருக்கிறார். தேவையில்லாமல் பீதியைக் கிளப்புவதாக டிரம்ப் அவரை எள்ளி நகையாடியிருக்கிறார். இவையனைத்தையும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/04/11/us/politics/coronavirus-trump-response.html ஜனவரி 30 ஆம் தேதியன்றே இந்தியாவின் முதல் கொரோனா தொற்று கேரளத்தில் கண்டறியப்பட்டு விட்டது. ஆனால் மார்ச் 25 அன்றுதான் மோடியின் 21 நாள் ஊரடங்கு தொடங்குகிறது. இந்த ஊரடங்கை அறிவிக்காமல் இருந்திருந்தால் பல லட்சம் பேர் தொற்றுக்கு இலக்காகியிருப்பார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது பெருமையுடன் அறிவிக்கிறது. இது ஒரு ஊகம். போதுமான அளவுக்கு பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்படாத வரை நோய்த் தொற்று பரவவில்லை என்ற கூற்றை எந்த அடிப்படையில் நம்புவது? மருத்துவமனையின் வாசலில் பல்லாயிரக்கணக்கில் நோயாளிகள் கூடவில்லை. இந்த நோயினால் ஆங்காங்கே மக்கள் இறப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வரவில்லை. இந்த அடிப்படையில் நோய் பரவல் இல்லை என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். ஏதோ சில காரணங்களினால் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் போல இங்கே பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் நிம்மதி தான். இல்லையேல் வரவிருக்கும் நிலைமையை எண்ணிப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது. இயல்பு நிலை திரும்ப ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று கூறுகின்ற கணிப்புகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பீதியூட்டும் நடவடிக்கைகள் என்று சிலர் கருதிக்கொள்ளலாம். பெருந்தொற்றுகள் அலை போல வரக்கூடியவை, கோவிட் கிருமி உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவும்போது பிறழ்வு (mutate) க்கு உள்ளாவதால், தடுப்பு மருந்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது, சோதனைக்கான கருவிகள் போதுமானவையாக இல்லை என்பன போன்ற பல காரணங்கள் பிரச்சனையை சிக்கலாக்குகின்றன. எனவே நாளை லாக் டவுன் அகற்றப்பட்டால், நாளை மறுநாள் இயல்பு நிலை திரும்பி விடும் என்று நம்புவது மிகையானது. எனவேதான், இடைவெளியின் காலத்தைத் துல்லியமாக கணிப்பதைக் காட்டிலும், இந்த இடைவெளி நம் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும். வருங்காலத்தில், பல அரசியல், சமூக விவகாரங்களை பரிசீலிப்பதற்கு கொ.மு – கொ.பி என்ற புதியதொரு அளவுகோல் வந்தே தீரும். முதலாளித்துவ சமூக அமைப்பும், அரசுகளும் நமது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உருவாக்கி வைத்திருக்கின்ற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதற்கான சூழலை, இந்த பெருந்தொற்று நோய் ஏற்படுத்தியிருக்கிறது. சமூக ரீதியான பிரச்சனைகளான பொதுச் சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றுக்கு தனிநபர் சார்ந்த தீர்வுகளை முன்தள்ளி வந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், மருத்துவமனைகளை தற்காலிகமாகவேனும் தேசிய மயமாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். “பக்கத்து வீட்டுக்காரன் செத்தாலும், சக தொழிலாளி வேலைநீக்கம் செய்யப்பட்டாலும் அது அவன் பாடு, நீ கவலைப்படாதே” என்று உபதேசித்து வந்த முதலாளித்துவம், “ஆப்பிரிக்காவில் யாரேனும் தும்மினால் அமெரிக்கா கவலைப்படவேண்டும் என்ற அறவுணர்ச்சியை” திடீரென்று கண்டுபிடித்திருக்கிறது. அறிவுச்சொத்துடைமையைக் காட்டி பல உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்தியை தடுத்து வந்த அமெரிக்க வல்லரசு ஒரு மாத்திரைக்காக இந்தியாவை சார்ந்து நிற்கிறது. மையப்படுத்துதலும் கண்காணிப்பும் பாசிச மயமாவதும் அதிகரிப்பதை கொரோனா சாத்தியமாக்கியிருக்கிறது. நோய்த் தொற்று முடிந்த பின்னரும் சமூக இடைவெளி அதிகரிக்கவிருக்கிறது. கொரோனாவுக்குப் பிந்தைய உலகத்தின் மீதான மேலாதிக்கத்துக்கான போட்டி தீவிரமடையவிருக்கிறது. வரைமுறையற்ற பல்லுயிர் அழிப்பின் விளைவாக விதவிதமான தொற்றுநோய்கள் வரவிருக்கின்றன. அணு ஆயுதங்களோ, புவி சூடேறுதலோ மனித குலத்தை அழிப்பதற்கு முன் தொற்று நோய்கள் அழிக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது. உழைக்கும் வர்க்கம் பல முனைத் தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும். எது எதிர்பாராத நிகழ்வு எது முதலாளித்துவத்தின் திட்டமிட்ட சதி என்று பிரித்தறிய முடியாத சூழலில் சிக்கி இருக்கிறோம். உருவாகி வரும் புதிய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைப் புரிந்து கொள்வதும், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதும், செயல்படுத்துவதும், கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதை விடக் கடினமான முயற்சிகள். முயற்சிப்போம். மருதையன் Share this: TwitterFacebookWhatsAppEmailPrintTumblrPinterestTelegram கொரோனாஉலகப்போர்கொரோனாகோவிட் 19தொற்றுமருதையன்லாக்டவுண்ஸ்பானிஷ் ஃப்ளு Published by மருதையன் View all posts by மருதையன் Post navigation Next நிர்மலா மாமியின் பழைய சோறும் மோடியின் நவராத்திரி தருமமும் Leave a Reply Your email address will not be published. Required fields are marked * COMMENT NAME * EMAIL * WEBSITE NOTIFY ME OF NEW COMMENTS VIA EMAIL. NOTIFY ME OF NEW POSTS VIA EMAIL. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. கோப்பகம் கோப்பகம் வகைகள் வகைகள் பதிவு புள்ளிவிவரம் 3,381 பார்வைகள் தேடல் SEARCH FOR: Search … அண்மை மறுமொழிகள் puthunilaa on நிர்மலா மாமியின் பழைய சோறும் ம… செல்வகுமார் on நிர்மலா மாமியின் பழைய சோறும் ம… prakash on நிர்மலா மாமியின் பழைய சோறும் ம… rudhran on நிர்மலா மாமியின் பழைய சோறும் ம… Blog at WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: Cookie Policy :)

Communism. - ppt video online download

Communism. - ppt video online download: Definition of Communism A political or economic system in which the major resources and means of production are owned by the community rather than by individuals

Tuesday 14 April 2020

அநியாய மரணங்கள், தடுப்போமா?


உலகில் தினமும் மக்கள் தொகையில் பிறப்பு/ இறப்பு விகிதம் ஒனலறு இருக்கிறது.
இதில் தினமும்
வயதானவர்கள் இயற்கையாக இறக்குறார்கள்
வயதானவர்கள் மருத்துவமின்றி இறக்கிறார்கள்
வயமானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்
வயதானவர்கள் தற்கொலை செய்யகிறார்கள்
வயதாவர்கள் விபத்தில் இறக்கிறார்கள்
மற்றவர்கள்
வீதிவிபத்தில் இறக்கிறார்கள்
வேலை விபத்தில் இறக்கிறார்கள்
தற்கொலை செய்து இறக்கிறார்கள்
போதைப்பொருளால் இறக்கிறார்கள்
பலவகைப்பட்ட நோயால் இறக்கிறார்கள்
பலர் கொல்லப்படுகிறார்கள்
குழந்தைகள் பிறந்து இறக்கின்றன
இறந்து பிறக்கின்றன
வைத்தியர்களின் தவறால் இறக்கின்றன
காவல்த்துறையின் விபத்தால் இறக்கின்றன
போரினால் இறக்கின்றன
இந்த ஆயுத வியாபாரிகளினால் முரண்பாடுகள்
உருவாக்கப்பட்டு ஆயுதவியாபாரத்திற்காகவும்
உலகத்தில் நான் தான் எதையும் தீர்மானிப்பேன் என்ற வல்லாதிக்க சக்திகளின் கட்டுக்கடங்காத மனிதநேயமற்ற செயல்களினால் பேரளிவுகள் தவணைமுறையில் பல இலட்சம் மக்களை கொன்று குவித்தது. இதற்கு மூலவேர் யார் ?
எனது அறிவிற்கு
1967ல் ஸ்ரேல் நடத்திய யுத்தம்?
1979ல் ஈரான் மீது நடந்த யுத்தம்?
1982ல் சப்ரா சற்றிலா அகதிகள் முகமில் குண்டு?
1984ல்அவ்கான் யுத்தம்?
1986ல் லிபிய நுத்தம்?
1988ல் இத்திபத்தா யுத்தம்?
1990ல் குவைத் -ஈராக் யுத்தம்
1990 இன் பின் பல நாடுகள் உருவாக்கம்?
2010இல் வட ஆபிரிக்காவிலிருந்து ஆரம்பம்?
2016 இல் மத்தியகிழக்கின் போரில் மாற்றம்?
2020 புதிய பரிமாணமாணமாக வைரஸ்?
அடுத்து Internet இல்லையென்றால் உலகம்?

Siva Abctamilnet


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...