Showing posts with label "Gowrikanthan". Show all posts
Showing posts with label "Gowrikanthan". Show all posts

Monday, 29 April 2019

விடியலின் மே தினச் சூளுரைகள்


மே தினச் சூளுரைகள்

பாட்டாளி வர்க்க எழுச்சிக்கான அடையாள நாளான மே தினத்தில் ” “விடியலும்” தனது நிலைப்பாட்டை முன்வைக்கின்றது.
 தத்தமது நாடுகளில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை  நிறுவியுள்ளவர்களுக் கும்,  நிறுவும் முயற்சியில் அரசியல் அமைப்புரீதியாக ஈடுபட்டு வருபவர்களுக்கும், அரசியல் அமைப்புரீதியாக இல்லாவிட்டாலும் குழுக்களாகவும், தனிநபர்களாகவும் நிலவும் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசுகளின் செயற்பாடுகளுக்கும், அவ்வித அரசை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவாகச் செயற்பட்டு வருபவர்களுக்கும் “விடியல்” தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தனது நேசக்கரங்களையும் நீட்டுகிறது.
தம்மை சோஷலிஸ்டுகளாகக் கூறிக்கொண்டும், தாம் அவ்விதம் இருப்பதாகக் காட்டிக் கொண்டும் இருப்பவர்கள் ஏராளம். இன்றைய தெற்காசிய சூழலில், ஒரு சோஷலிஸ்டின் பிரதான செயற்பாடு வர்க்க சர்வாதிகார அரசின்  அமைவில் பங்களிப் -பாளனாக இருக்கவேண்டும் என்பதேயாகும். உலகின் எப்பகுதியை எடுத்துக் கொண்டா -லும் இதுதான் ஒரு சோஷலிஸ்டின் அடிப்படைக் குணாம்சமாகும். ஆனால், இவ் அடிப்படைக் குணாம்சம் தெற்காசியாவில் பிரதான குணாம்சமாகவும் ஆகியுள்ளது. ஆகிவருகிறதெனக் கூறினால் அது மழப்பல்வாதமாகும், ஆகியுள்ளது என்பதே உண்மை -யாகும். இதனால் தான், ‘விடியல்தெற்காசிய அரசியலின் சிந்தாந்தக் கட்டுமானம் ஓரியல்மைய ஐந்தியல் கோட்பாடுஎனும் கோட்பாட்டை முன்வைத்து வருகின்றது. இங்கு மைய இயல் என்பது சோஷலிஸம் (பாட்டாளிவர்க்க இயல் எனவும் கூறலாம்); பிற ஐந்து இயல்களும்:-
1. நாடடுப் பற்றியல் (Patriotism)
2. தேசிய இயல் (Nationalism)
3. சாதிய ஒழிப்பியல் (Cast eradionism)
4. மதச் சார்பின்மை இயல் (Secularism)
5. பெண்ணியம் (Feminism)
தெற்காசியா, இவ் அறுவகைப் போராட்டத்தின் கொதிகலனாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இதைவிட, சுற்றுச் சூழல் பாதுகாப்பியல் (environment protectionism) எனும் ஒரு கோட்பாடும் உண்டு.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் முக்கியத்துவம் மிக்கதோர் சமூக இயக்கமாகும். ஆனால், இவ் போராட்டம் சோஷலிஸத்தை தனது மையவியலாகக் கொள்ளவேண்டுமென்பது கட்டாயமல்ல. இவ்விதம் இல்லையானால் இப்போராட்டம் வளர்தடைத் திசையை(Negative) நோக்கிச் செல்லுமென அஞ்சவேண்டியதுமில்லை. வர்க்க சார்பற்ற இயற்கை ஆர்வலர்களும், மிதவாத(Moderate) பூர்ஷவாக்களும், இப் போராட்டத்தை வளர்திசைத்(Positive) தன்மை பெற்றதாகப் பாதுகாத்து வருகிறார்கள், தொடர்ந்தும் பாதுகாத்து வருவார்கள். இப்போராட்டம் ஒரு அரசியல் அதிகாரவர்க்கத்தை தோற்றுவிக்காது என நம்பலாம்.
ஆனால், ஏனைய ஐந்தியல் மையப் போராட்டங்களும் அவ்விதமானவை யல்ல. இவை இரட்டைத் தன்மை பெற்றவை; வீரியமிக்க வளர்திசைக் குணாம்சங் -களும்,  சமூகத்தின் வளர்ச்சியை சிதைத்து சின்னாபின்னமாக்கும் வளர் தடைக் குணாம் -சங்களும் கொண்டவை; மக்களில் பெரும்பான்மையோரை தம்மை நோக்கி ஈர்க்கும் தன்மையும் கொண்டவை; இவ் ஐந்தியல்களும் ஒன்றைவிட்டு இன்னொன்றைப் பிரிக்க முடியாதளவு நெருக்கமான உறவு கொண்டவை;  மக்களைத் தம்மை நோக்கி, ஈர்ப்பதில் இவ் ஐந்து இயல்களும் பெரும் முற்போக்கு பாத்திரம் வகித்தாலும், இவ் ஈர்ப்பு வர்க்க பேதங்களைக் கடந்ததாக இருப்பதால் இவ் ஐந்தியல் போராட்டங்களும் வளர்தடைத் தன்மைபெறுவதுவும் துரிதமாக நடைபெறத் தொடங்குகிறது. இவ் வளர்த்தடைத் தன்மை படிப்படியாக மக்கள் விரோத, சோஷலிஸ விரோத புதிய அரசியல் அதிகார அடுக்கு -களைத் தோற்றுவிக்கின்றது. இவ்ஐந்தியல் போராட்டங்களும் வளர்ததடைத் தன்மை பெறுமானால், தெற்காசிய சமூகத்தின் முற்போக்கு இயக்கங்கள் அனைத்துமே செயலிழந் து, இச் சமூகம் பிற்போக்கியங்களின் விளைநிலமாகிவிடும். சோஷலிஸத்திற்கான போராட்டமும் கூட மந்தகதி அடைந்து விடும். 
1960களின் பின், அதாவது சோஷலிஸத்தின் உலகளாவிய வீழ்ச்சியின் பின், அதைத் தொடர்ந்து அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் உலகளாவிய அளவில் வெற்றிபெற் -றதன் பின், இவ் ஐவகைப் போராட்டங்களினதும் வளர்தடைத் தன்மை துரிதமாக வளரத்தொடங்கியுள்ளது. ஏகாதிபத்தியங்கள் இவ்வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன. ஆப்ரிக்காவும் தெற்காசியாவுந்தான் அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாகும். இவ் ஐந்தியல் போராட்டங்களையும் மீளவும் சோஷலிஸத்துக்கான போராட்டங்களின் நண்பர்கள் என்ற நிலைக்கு கொணரவில்லையானால், இவ் ஐந்தியல்களும் சமூகவிரோத வெறித்தனங்களாக மாற்றமுறும்.
1) ஆக்கிரமிப்பு எதிரர்ப்புத் தன்மை கொண்ட நாட்டுப்பற்றியல், ஆக்கிரமிப்பியலாக, நாடுகளுக்கு இடையேயான யுத்தவியலாக மாறும்.
2) மக்கள் ஜனநாயகத் தன்மைகொண்ட தேசிய இயல் இனவியத் தேசிய (ethno nationalism) வெறியாக மாறும்.
3) மதவாத நிராகரிப்பு மதசார்பின்மை இயல்.
(அ)  வரட்டுத்தனமான கடவுள் நிராகரிப்புக் கோட்பாடாக மாறலாம் (இன்றைய தி.க), அனைத்து மதங்களையும் நிராகரித்து அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைக்கூடிய ஒரு புதிய மதவாத இயக்கம் ஒன்று உருவாகலாம். (இவ்விதம் தோன்றிய மதவாத மதசார்பின்மை இயல் தான் இஸ்லாம்),
(ஆ) அலலது மதச் சீர்திருத்த இயக்கங்கள் உருவாகலாம். (சித்தாத்தரின்-பௌத்தம், விபுலானந்தர், வள்ளலார் ஆகியோர்) இவை காலப் போக்கில் புதிய மதவாதிகளை உருவாக்கலாம்.
4) சாதிய ஒழிப்பியல்                                                    (அ) ஒடுக்கப்பட்ட சாதியினரிடையே இருந்து ஒரு மேட்டுக்குடி உருவாகும். இம் மேட்டுக்குடி ஒட்டுமொத்த சாதியக் கட்டுமான மேட்டுக்குடியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். இவர்கள் மெள்ளமெள்ள சாதிய ஒழிப்பினைக் கைவிட்டு சாதிய சமத்துவஇயலை நோக்கி வேகமாக பயணிப்பார்கள். சாதிய சமத்துவ இயலின் மறுபக்கம் சாதிகள் இருக்க -வேண்டும்  என்பதாகும். பாராளுமன்ற அரசியல் மேட்டுக்குடிகளாகவர எத்தனிக்கும் (பலர் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்) அனைத்துத் தலைவர்களும் இவ்விதமானவர்களே.
ஆ) ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஓரிரு பிரிவினர் தாமே ஒடுக்கும் சாதிப்பிரிவினராக மாறுவது.
5) பெண்ணியம்:- முதலாளித்துவம் மனம், உடல், உட்பட அனைத்தையும் வர்த்தகப் பண்டமாக்கி விடுவதில் மிகப்பெரும் வெற்றிபெற்று வருகிறது. காதலும், காமமும், “பெண்மையும்இதற்கு விதிவிலக்கல்ல. இவ் வர்த்தகத்தில் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடும் உரிமை வேண்டுமெனும் கருத்தும் பெண்ணியத்தின் ஒரு போக்காக வளர்ந்து வருகிறது. இது தடுக்கப்படவேண்டும்.
தந்தைவழி சமூகத்தால் திணிக்கப்பட்ட விகாரக் காமத்தையும், பாலிய வன்முறைகளயையும், பாலிய சமத்துவமின்மையையும் சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் உடைத்தெறிவதே பெண்ணியத்தின் பிரதான குறிக்கோளாக இருந்த நிலை தொடரவேண்டும்.

சோஷலிஸ்டுகளின் தெற்காசியச் சமூகக் கடமையாக விடியல்பின்வரும் சூளுரைகளை முன்வைக்கின்றது.

1) சோஷலிஸ சிந்தனையையும், சோஷலிஸ சமூக சக்தியையும் வளர்த் தெடுப்ப -தையே எமது பிரதான உடனடிக் கடமையாகக் கொண்டு செயற்படுவோம்.
2) முன்கூறிய ஐந்து இயல்களுக்கான அணிகளுள் உள்ள சோஷலிஸட் எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக எதுவித சமரசமின்றி கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங் -களை முன்னெடுப்போம்.
சோஷலிஸ்ட் அல்லாதவர்களுக்கு எதிராகவல்ல, சோஷலிஸ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக, அனைத்துப் பிற்போக்குவாதிகளுக்கும் எதிராகவல்ல, சோஷலிஸ எதிர்பாளர் -களுக்கு எதிராக என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
3) (அ) சாதி ஒழிப்பியல், பெண்ணியம் ஆகிய இரு துறைகளிலும் சோஷலிஸ்டுகள் தமது தலைமையிலான போராட்ட இயக்கங்களை அமைப்பதற் கானசமூக சூழல் உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்வோம்.
   (ஆ) ஆனால் ஏனைய மூன்று துறைகளிலும் அதற்கான சமூக சூழல் இன்னமும் பரலாகத் தோன்றவில்லை. ஆகவே எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதையிட்டு விடியலால் எதுவும் கூறமுடியாதுள்ளது. இம் மூன்று அணிகளிலுமுள்ள மக்கள் ஜனநாயக அணீயினருடனும், தேசிய ஜனநாயக அணியினருடனும் அரசியல் நட்புறவை வளர்த்துக் கொள்வோம்!


Saturday, 20 April 2019

காகம் கேட்கிறது


தளம் கலை இலக்கிய இதழ்- பக்கம்-93-97
விந்தனின் ஓ மனிதா! தொகுப்பிலிருந்து... (1977-ல் வெளியிடப்பட்டது)
காகம் கேட்கிறது
கொஞ்ச நாட்களாக உங்களை இந்த சோஷலிஸ பைத்தியம்பிடித்து ஆட்டி வைக்கிறது. எங்களையும் நீங்கள் சோஷலிஸ்டுகள்என்று சொல்லி எது கிடைத்தாலும் அதை நாங்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதாகப் போற்றி வருகிறீர்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை யென்றால், நீங்கள் சோஷலிஸம்பேசும் அளவுக்குத்தான் உண்மை!
அதாவது, கீழே ஏதாவது இருந்து, அதைக் கொத்திக் கொண்டு மேலே போக முடியாமலிருந்தால், நாயோ பூனையோ வந்து விரட்டி விட்டுத் தின்றுவிடக் கூடாதே என்பதற்காகக் கா, கா, காஎன்று கரைந்து நாங்கள் பக்க பலத்துக்காக மேலும் கொஞ்சம் கூட்டம் சேர்ப்போம். உங்களுக்கு முன்னால் அதைக் கலந்துண்டு’, எங்களை சோஷலிஸ்ட்டுகளாகவும், காட்டிக்கொள்வோம். கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலே போக முடிந்தாலோ?-அதைக் கொண்டுபோய் ஒரு மரக்கிளையின்மேல் வைத்து, அது தவறிக் கீழே விழுந்துவிடாதபடி அதன்மேல் ஒரு காலை ஊன்றிக்கொ்டு, சக காக்கைகள் பகிர்ந்துண்ண அவற்றைச் சிறகால் அடித்து விரட்டிக் கொண்டு, அதை நாங்களே, நாங்கள் மட்டுமே எங்கள் அலகால் பிய்த்துப் பிய்த்துத் தின்று தீர்ப்போம்.
இந்த விஷயத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ஓர் அபூர்வ ஒற்றுமை என்னவென்றால், நீங்களும் கீழே உள்ளவரை சோஷலிஸம் பேசிவிட்டு, மேலே போனதும் அதை மறந்து விடுகிறீர்கள்; நாங்களும் கீழே எதையாவது வைத்துத் தின்ன நேர்ந்தால் சோஷலிஸ்ட்டுகளாக இருக்கிறோம்; மேலே வைத்துத் தின்ன முடிந்தால் சுதந்திராவாகி விடுகிறோம்.
அடாடா! இந்த அழுமூஞ்சி உலகத்தையே  ஆனந்த உலகமாக்கப் போகும் சோஷலிஸத்தில் நமக்குள்ளே என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!
அது போகட்டும்; இது என்ன சங்கதி? - உங்களில் சிலர் உண்பதற்காக காடை, கவுதாரி போன்றவற்றைப் பிடிக்கிறார்கள், அதை நான் பார்த்திருக்கிறேன். வளர்ப்பதற்காகக் கிளி, மைனா போன்றவற்றைப் பிடிக்கிறார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். எங்களையோ?-யாரும் எதற்காகவும் பிடிக்கவுமில்லை; பிடிப்பதாகத் தெரியவுமில்லை. அப்படியிருந்தும் இந்தக் காக்கா பிடிக்கும் கலைஎன்று உருவாகி வளர்ந்தது?...
அதைப் பற்றி நீங்கள் யோசித்தீர்களோ இல்லையோ, நான் யோசித்தேன், அப்படி யோசித்தேன் . கடைசியில் அந்தக் கதைதான் என நினைவுக்கு வந்தது. எந்தக் கதை?’ என்கிறீர்களா?-சொல்கிறேன்:
தங்களைப் பற்றியே. இன்னும் சரிவர ஆராய்ந்து தெரிந்து கொள்ளாத உங்களில் சிலர், எங்களைப் பற்றி இப்போது ஆராய்ந்து வருகிறார்களல்லவா? அவர்கள் எங்கள் இனத்தைத் திருட்டுப் பறவை இனத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இது ஏன்?’ என்று எனக்குப் புரியவில்லை. யாரோ படைத்த பொருட்களுக்குச் கச்சேரி பிரமாதமாயிருந்தது. இந்த சீசனிலேயே ஏ ஒன் கச்சேரி உங்களுடையதுதான்என்று எல்லாரும் பேசிக் கொண்டார்கள்!என்று காக்கா பிடித்துக் கொண்டே உள்ளே நுழைகிறீர்கள்.
ஏன் ஐயா, என் மானத்தை இப்படி வாங்குகிறீர்? இந்த சீசனிலேயே அந்த ஒரு கச்சேரிதான் எனக்குக் கிடைத்தது. அதுவும் கடைசி நிமிஷத்தில் கான்சலாகி விட்டது! என்கிறார் அவர்.
அப்போதுதான் அன்றைக்கு முதல் நாள் அவருடைய கச்சேரி நடக்காமற்போனது உங்களுக்குத் தெரிகிறது. ஹிஹி, அப்படியா? நான் வரேன்!என்று போன சுவடு தெரியாமல் திரும்பிவிடுகிறீர்கள்.
இது ஒரு விதம்.
அலுவலகத்தில் பத்தோடு பதினென்றாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மானஜர் தம் அறையிலிருந்தபடி, “யார் அங்கே?” என்கிறார். அவர், ‘எள்என்பதற்குள் என்ணெயையே கொண்டு போய்க் கொடுத்துவிட வேண்டுமென்பதற்காக, “இதோவந்து விட்டேன்,” என்று நீங்கள் எல்லாரையும் முந்திக்கொண்டு ஓடுகிறீர்கள். எங்கேயோ போயிருந்த ஹெட் கிளார்க்கைத் தேடிப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் மானேஜருக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள். நான் இவரையா கூப்பிடச் சொன்னேன்?” ஸ்டெனோவையல்லவா கூப்பிடச் சொன்னேன்?” என்கிறார் அவர். ஹிஹி, ஸ்டெனோவையா? இதோ கூப்பிடுகிறேன்!என்று பிடரியை ஒரு காரணமுமில்லாமல் தடவிக்கொண்டே திரும்புகிறீர்கள்.
இது இன்னொரு விதம். காகம் கேட்கிறது.
ஆக, எல்லாக் கலைகளிலும் உள்ள நுணுக்கம்இந்தக் கலையிலும் இருக்கிறது. அந்த நுணுக்கம் தெரிந்தவர்களே இதிலும் வெற்றிபெற முடிகிறது; அல்லாதவர்களே இதிலும் வெற்றிபெற முடிகிறது; அல்லாதவர்கள் தோல்வியையே தழுவ நேருகிறது.
ஓமனிதா! ஒரு பாவமும் அறியாத என்னை இந்தக் காக்கா பிடிக்கும் கலையில் சம்பந்தப்படுத்தியதோடு நீ நின்றாயா?-இல்லை; தெருவில் நீ அடித்துப் போடும் எலிகளையும், உன் காலடியில் சிக்கிச் செத்துக்கிடக்கும் தவளைகளையும் அப்புறப்படுத்தி நான் துப்புரவாக்குகிறேன் என்பதற்காக நீ என்னை ஆகாயத் தோட்டிஎன்ற சிறப்புப் பெயரால் வேறு அழைத்துத் தொலைகிறாய்!
இதில் தோட்டிஎன்னத்துக்கு, ‘தோட்டி?’ அதற்குப் பதிலாக ஆகாயத் தொண்டன்என்றோ, ‘ஆகாய ஊழியன்என்றோ அழைத்தால் என்னவாம்?
எப்படி அழைப்பாய்? ‘தொழிலுக்கு ஒரு ஜாதி, ஜாதிக்கு ஒரு தொழில்; என்று அந்த நாளிலேயே கண்டவனாயிற்றே நீ! நாளதுவரை ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் சவரத் தொழிலாளிஎன்றும், ‘சலவைத் தொழிலாளிஎன்றும் அரிஜன்என்றும் பழைய பெயர்களுக்குப் பதிலாகப் புதிய புதிய பெயர்களைக் கூட்டி, ஜாதிக்கு ஒரு தொழிலையும், தொழிலுக்கு ஒரு ஜாதியையும் நவீன முறையில் வளர்த்து வருபவனாயிற்றே நீ!
இந்த நிலையில் தன் ஜாதிக்கு விரோதமாகச் சவரத் தொழிலை மேற்கொண்டு தொழிலுக்கு ஒரு ஜாதியில்லை?’ என்பதை நிரூபிக்க உங்களிடையே உள்ள ஒரு முதலியாரோ, ஒரு நாயுடுவோ எங்கே முன் வரப் போகிறார்?
சலைவைத் தொழிலை மேற்கொண்டு, ‘ஜாதிக்கு ஒரு தொழில் இல்லைஎன்பதை நிரூபிக்க ஒரு சர்மாவோ, சாஸ்திரியோ எங்கே துணியப் போகிறார்?
என்னை ஆகாயத் தோட்டிஎன்று இழித் துரைக்கும் மனிதனே! உங்களிடையே உங்களில் ஒருவனாக நடமாடும் தோட்டியை நீ நகர சுத்தித் தொழிலாளி’, என்று சொல்லிவிட்டால் சமூகத்தில் அவனுக்குள்ள இழிவு அவனை விட்டுப் போய்விடுமா?
ஒரு நாளும் போகாது.
அதனால்தான் வைசியரான மகாத்மா, தாமே தோட்டி வேலைசெய்து காட்டினார். அவரையே டாக்டர் அம்பேத்கார் கேட்டார்:
அரிஜனங்கள் கடவுளின் மக்கள்என்றால் மற்றவர்கள் யாருடைய மக்கள்?”
இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘புறப்புரட்சி மூலம் யாரும் எதையும் சாதிக்க முடியாது; அகப்புரட்சி மூலமே சாதிக்க முடியும்என்று தெரியவில்லையா?
அந்த அகப் புரட்சியை நீ எப்போது செய்யப் போகிறாய்?
அதைச் செய்தால், ‘ஜாதி இருக்காது; ஜாதி இல்லாவிட்டால் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற முடியாது; தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டால் எம்.எல்.ஏ. வாகவோ, அமைச்சராகவோ ஆக முடியாது; ஆகாவிட்டால் ஜனநாயகம் பிழைக்காதுஎன்கிறாயா?
அதுவும் சரி; எது பிழைத்தால் என்ன, எது பிழைக்கவிட்டால் என்ன?-நீ பிழைத்தால் சரி!
சுயநலத்தில் பிறந்த சோஷலிஸம்இப்படி இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...