Wednesday 28 November 2018

மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும்.


மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும்.
             தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், தமது இன்னுயிர்களை இழந்த போராளிகளுக்கும், தாமே விரும்பி தமதுயிரைத் தற்கொடை செய்துகொண்ட புலிப் போராளிகளுக்குமான வீரவணக்கத்தை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
        அவர்கள் தமது இலட்சியத்தை நிறைவேற்ற, பின்பற்றிய கொள்கைகளும் நடைமுறைகளும் என்னவாக இருந்தாலும் சரி, அவர்களின் இலட்சியம் உயர்வானது; அவர்களின் ஈட்டல்கள் வளர் திசைத்தன்மைபெற்றவை. தமிழீழத் தேசம் நடைமுறைக்கு வரும்வரை நிலைத்து நிற்கக்கூடியவை.
    ஆனால், அவர்களின் இலட்சியம் இன்னமும் நிறைவேறவில்லை. அவர்கள் விட்ட இடத்தில் இருந்து, அவர்கள் விட்ட தவறுகளைத் தவிர்த்து, தமிழீழ இலட்சியம் நிறைவேற உளைப்பதுதான் அவர்காலத்திய போராளிகள் அனைவரினதும் சமுக மற்றும் தேசியக் கடமையாகும். முன்னோர்களினது மட்டுமல்ல, புதிய தலைமுறையினரது கடமையும் இதுதான். இதற்காக சபதமெடுக்கும் நாளாக, மன உறுதியைப் பலப்படுத்தும் நாளாக இந் நாளை எடுத்துக் கொள்வோம்.
அனைதுத் தமிழீழ மாவீரர்களா அல்லது புலி மாவீரர்களா?
      ஆனால், இவ்வித சபத மெடுக்கும் நாளாக, புலி மாவீரர் நாள் அமைந்திருப்பது தவறு  என்பதுவே எனது கருத்தாகும். காரணத்துக்குள் செல்கிறேன். இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் போராட்டம் தனது வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வளர்திசைத் திருப்புமினைகளைக் கண்டுள்ளது. அவையாவன:
1)  1-வது வளர்திசைத் திருப்புமுனை:            இலங்கைத் தேசியத்தில் இருந்து தமிழ்த் தேசியம் பிரிந்து, தனி அரசியல் அணியாக மாறியது. பெயர்: தமிழ் காங்கிரஸ். இத் திருப்புமுனைத் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம்.
2) 2-வது வளர்திசைத் திருப்புமுனை:                    முழு இலங்கையிலும் 50க்கு50 எனும் நிலையில் இருந்து சமஸ்டி எனும் கோரிக்கையாக மாறியது. இத் திருப்புமுனைத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்.
3)  3-வது வளர்திசைத் திருப்புமுனை:          பாராளுமன்ற எல்லைக்குள் மட்டுப்பட்டிருந்த சமஸ்டிக்கான போராட்டம், வெகுஜனப் போராட்டமாக மாறியது. இத் திருப்புமுனைத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்.
4) 4-வது வளர்திசைத் திருப்புமுனை:   சமஸ்டிக்கோரிக்கை தனிநாடுக் கோரிக்கையாக மாறியது. வெகுஜனப் போராட்டம் பாரளுமன்றத் தன்மையில் இருந்து விடுபட்டது. வட்டுக்கோட்டை மாநாட்டை அதற்கான நாளாக வைத்துக்கொள்ளலாம். இத் திருப்புமுனைத் தலைவரும்  எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள்தான். இம் மூன்று மாபெரும் திருப்புமுனைகளுக்கும் காரணமாய் இருந்தது தந்தை செல்வாதான்.
5)   5வது வளர்திசைத் திருப்புமுனை:     போர்க்குண்மிக்க வெகுஜனப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்றது. இத் திருப்புமுனைத் தலைமை தமிழீழ மாணவர் பேரவையாகும்.
6) 6-வது வளர்திசைத் திருப்புமுனை:           மஹாவம்சப் பேரகங்காரவாத அரசியல் அணியினருக்கு எதிராக நடந்துவந்த ஆயுதப் போராட்டம் அரச படைகளுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளாக மாறியது. 1983 இல் யாழ்/ திந்நவேலியில் நடந்த இராணுவத் தாக்குதலை திருப்புமுனையாகக் கொள்ளலாம். திருப்புமுனைத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும்.
7)    7-வது வளர்திசைத் திருப்புமுனை:           முறைசாரா யுத்தம் (கொரில்லா யுத்தம்), முறைசார் யுத்தமாக (நிரந்திர படைகளினூடான யுத்தம்) மாறியது இதுதான் தமிழீழப் போராட்டத்தின், இதுவரை இல்லாதளவிற்கான மிக உயர்ந்த திருப்புமுனையாகும். இப்போதுதான் தமிழீழ அரசுக்கான அத்திவாரம் அமைகின்றது.
. ஆனையிறவு மூகாமின் மீதான தாக்குதலை இத் திருப்புமுனைக்கான நிகழ்வாகக் கொள்ளலாம். இத் திருப்புமுனைத் தலைவரும் பிரபாகரன்தான்.
8)   8-வது வளர்திசைத் திருப்புமுனை:                    1970 களில் இருந்தே சிறி லங்கா அரசுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த அரசியல் இராணுவ மோதல்கள் கூர்மையடைந்து இந்திய அரசுடனான மோதலாக மாறியது. ஸ்ரீ லங்கா அரசால், இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இந்திய சமாதானப் படையுடனான மோதலைத்தான் குறிப் பிடுகிறேன். இத் திருப்புமுனைத் தலைவர் பிராபகரன் மட்டுந்தான் என்றோர் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறு, இத் திருப்புமுனைத் தலைவர்கள் பிரபாகரனும், ஜே வி.பிஇயக்கத் தலைவரும், ஸ்ரீ லங்கா அரசின் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுமே ஆகும். இப்போராட்டத் தையொட்டிய மூவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாக இருந்தாலும் மூவரும் இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். இவ் இருவரில் ஜே.வி.பியின் போராட்டந்தான் அதிக அரசியல் தாக்கத்தை உருவாக்கியது.
9)   9-வது வளர்திசைத் திருப்புமுனை:     இந்தியாவுடனான யுத்தம் முடிந்தது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு தற்காலிக இணக்கம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான ஒரு அரசியல் உடன்பாடு உருவானது. அக் கட்சியின் தலைமையில் தமிழீழ அரசாங்கம் ஒன்று உருவானது. இதுதான் இலங்கை தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளின் உயர்ந்த கட்ட வழச்சியாகும். உயர்ந்த கட்டம் என்பதற்க்குப் பதிலாக உச்ச கட்டமெனக் கூறலாம். பாதுகாப்பானதொரு இயக்கம்-தீர்மானகரமான(decisive) சக்தி; அவ் இயக்கத்தின் கீழானதொரு இராணுவம்-அடிப்படை basic சக்தி; இவ் இரண்டின் அனுசரணையுடனான ஒரு அரசாங்கம்-பிரதான main சக்தி. வேறென்ன வேண்டும். பிரதான சக்தியான அரசாங்கம் இராணுவத்தால் நியமிக்கப்பட்ட அரசாங்கமாகவே இருந்தது; அது ஆரம்பத்தில் அவ்விதந்தான் இருக்கும். இவ் ஒன்பதாவது வளர்திசைத் திருப்புமுனைத் தலைவரும் பிரபாகரனேயாகும்.
அதைப்படிப்படியாக மக்கள் ஜனநாயக அரசாங்கமாக மாற்றுவதுதான் புலிகள் இயக்கத்தின் முன்னால் இருந்த கடமையாகும். இவ்விதம் நடந்திருந்தால் தமிழீழத் தேசியம் தனது வழர்ச்சியின் இரண்டாம்கட்ட உச்ச நிலையை அடைந்திருக்கும்.
ஆனால், அவ்விதம் நடக்கவில்லை. மாறாக தலைவர் பிரபாகரன் அவர்களால் தொடங்கப்பட்ட இரண்டாவது உள்நாட்டு யுத்தம் இவ்வளர்ச்சியைத் தடுத்தது. புலிகளின் இராணுவம் பிரபாகரன் தலைமையில், தமிழீழ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்தியது. தமிழீழ அரசாங்கத்தின் பிரதானிகள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு முகவரிநீக்கமும் செய்யப்பட்டனர்; சிலர் உயிர் நீக்கமும் செய்யப்பட்டனர். உயிர் நீக்கம் செய்யப்பட்டவர்களுள் மாத்தையாவும் ஒருவர். யோகி, மூர்த்தி ஆகியோர் முகவரி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய ஏஜெண்டுகள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். இதற்கான பகிரங்க ஆதரம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
தமிழீழ உள்நாட்டு யுத்தத்தை நியாயப் படுத்துவதற்காகவும், அது பற்றிய விமர்சனங்களை அடக்குவதற்காகவும், ஸ்ரீ லங்கா அரச படைகளுக்கு எதிரான முறைசார் யுத்தத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது. அவர்களை வலிந்து சண்டைக்கு இழுக்கும் வேலைத்திட்டங்கள் பின்பற்றப்பட்டன. இவ்வித சூளலை எதிர்பார்த்திருந்த ஸ்ரீ லங்கா இராணுவம் முழு மூச்சுடன் யுத்தத்தில் இறங்கியது, அடிவாங்கிய இந்தியா இலங்கை இராணுவத்துக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை முடமாக்கியது, பிரபாகரனை அரசியல் கோமா நிலைக்கு உள்ளாக்கியது, தமிழ் மக்களிடையே அச்சத்தை ஆழப்பதிப்பதற்காக தெற்காசியாவே இது  வரை கண்டிராத ஒரு இனஒழிப்பையும் நடத்தி முடித்தது.
         மாவீரர் பட்டியலுக்கு உரியவர்கள்யார்?
        இக் கேழ்விக்குப் போகுமுன்னர், 9வது திருப்புமுனை எனும் பகுதியில் பிரபாகரனால் நடத்தப்பட்ட இரண்டாவது தமிழீழ உள்நாட்டு யுத்தம்பற்றிக் குறிப்பிடிருந்தோம், அவ்விதமானால் முதலாவது உள்நாட்டு யுத்தம் எது? 7-வது வளர்திசைத் திருப்புமுனை. எனும் பகுதிக்குச் சென்று தொடரவும்.
        கொரில்லா யுத்தத்தை மரபுவழி யுத்தமாக மாற்றியது காலப் பொருத்தமானதா என்றோர் கேள்வியை எழுப்பித் தொடர்வோம். அதாவது 7வது திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற காலம் பொருத்தமானதா? இல்லை. இங்கோர் அவசரத்தன்மை காட்டப்பட்டுள்ளது. எவ்விதம்?
        1983 ஜுலைக் ‘கலவரந்தான்’ இலங்கையில் நடந்த முதலாவது இன ஒழிப்பாகும். இது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு தாக்குதலாகும். முஸ்லீம் மக்களும் விதிவிலக்கல்ல. தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் மாத்திரமல்ல, இலங்கையெங்கணும் நடந்தவோர் இன ஒழிப்பாகும். 1977 இன் இனத் தாக்குதல் குறிப்பிட்ட, வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன் அமைப்புரீதியாக நடத்தப்பட்டதாகும். ஆனால், 1983 அவ்விதமல்ல, அனைத்து சிங்கள இனவாதிகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். பௌத்த மதபீடங்கள், பாதுகாப்புப் படையினர், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கொள்ளையர்கள் இத்தியாதிகள் அனைவரும், அவரவர்களுkகு எட்டிய ஆயுதங்களுடன் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். சொந்தக் குரோதங்கள், பொருளாதாரப் போட்டிகள், நில அபகரிப்புகள், காம இட்சைத்தீர்ப்ப்கள், தநிநபர் பழிவாங்கல்கள் அனைத்தும் நிறைவேறின. இலங்கைத் தேசியர்கள் உட்பட இலங்கையர்களிடையே இன, மத, சாதிய ஒற்றுமையை விரும்பும் அனைவரும் திகைத்துப்போய் இருந்தார்கள். இவ்வித ஒரு நிகள்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், இலங்கைத் தேசியர்களிடையேயும் தமிழ்பேசும் மக்களிடையேயும் தமிழீழப் போராளிகளின் ஆயுத எழுச்சிக்கு ஆதரவான போக்குகள் உருவாகின. இது அனைத்துப் பகுதிகளிலும் கொரில்லாத் தாக்க்குதல் அவசியம் எனும் மன நிலையை அனைத்து தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் உருவாக்கியது. சிங்கள நண்பர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவானது. பாதிக்கப்பட்ட ஜே.வி.பி இயக்க நண்பர்களில் பலரும் இதற்குள் அடங்குவர். அதுமட்டுமல்ல, ஜே ஆரால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை எதிர்த்து இயக்கங்கள் உருவாகும் சூளலும் உருவாகிறது.
        இச் சுளலைப் பயன்படுத்தி தென் இலங்கையிலும் தமது அணிகளை உருவாக்கும் பணிகளில் தமிழ் இயக்கங்கள் ஈடுபட ஆரம்பித்தன, வளர்ந்தும் வந்தன. புளட், ஈபிறஎல் எப், ஈறோஸ் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆற்.ஜெயவர்த்தனா ஒரு அமெரிக்கப் பற்றாளராக இருந்ததால், இந்திய மத்திய அரசும்,ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்தது. முன் கூறிய இயக்கங்களுக்கு ஆதரவு செலுத்தவும்  ஆரம்பித்தன. எதிர்க் கட்சியாகச் செயற்படும் முரிமையும், பாராளுமன்ற உரிமையும் மறுக்கப்படுவதால், தமிழர்விடுதலைக் கூட்டணி இந்தியாசெல்கிறது. இங்குதான் பிரபாகரன் மன அவஸ்தைக்கு உள்ளாகிறார். தன்னால் தொடர்ந்து சீண்டப்பட்டுக் ஒண்டிருந்த இவ் இயக்கங்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தத்தையே நடத்த விரும்புகிறார். தமிழீழப் பிரதேசத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொணர் வதற்காக தமிழீழத்தை முறைசார் யுத்தப்பிரதேசமாக மாற்றுகிறார். பிற இயக்கங்களின் இருத்தலைச் சாத்தியமற்றதாக்குகிறார்.
        வெற்றியும் பெறுகிறார், ஆனால் தன்னைப் பொறிக்கிடங்கினுள் அடைத்துவிடுகிறார். கொரில்லா யுத்தத்தை இலங்கையின் சாத்தியமான இடங்களுக்கும் பரப்பி அதன் பலாபலன்களைப்பொறுத்து, பிற இயக்கங் களையும் இணைத்தவண்ணம், முறைசார் யுத்தம் என்ற கட்டத்திற்குச் சென்றிருக்கலாம். அப்போது எதிரி தனது படைகளை ஒரு இடத்தை நோக்கிக் குவிப்பது சாத்தியமாகி இருக்கமுடியாது. கெடுவான் கேடு நினைப்பான் என்பதை நிருபித்துவிட்டார்.
       இப்போது மாவீரர் பட்டியலுள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியவர்கள் யார்? எனும் கேள்விக்குச் செல்வோம்.
1)     தாமிழீழ மாணவர் இயக்கக் கால (5வது வளர்திசைத் திருப்புமுனை) உயிர்த்தியாகிகள் விடுபட்டது ஏன்? அனைவரும் அறிந்த உதாரணம் உரும்பிராய் சிவகுமார்.
2)   6வது மற்றும் 7வது காலகட்டங்களில் அனைத்து இயக்கங்களும் பாதுகாப்பு நிலைகளுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்புப் படைகளுக்கு சேதங்களை உருவாக்கியுள்ளன. வவுனியா பொலிஸ் தாக்குதல்-புளொட்; யாழ்தேவித் தாக்குதல்-ரெலோ; காரைநகர் தாக்குதல்-ஈபிஆறெல் எஃப் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். இவ் உயிர் தியாகிகள் விடுபட்டது ஏன்? தமது துணிச்சலான நிலைப்பாட்டிற்காக உலகமே போற்றிய குட்டிமணி, தங்கத்துரை என்னவானார்கள்.
3)   9வது திருப்புமுனையின் பின்பான காலப்பகுதியில் நடந்த தமிழீழ உள்நாட்டு யுத்தத்தின் போது மரணமடைந்தவர்களை துரோகி பட்டியலுக்குள் உள்ளடக்குவது என்ன நியாயாம். எடுத்துக்காட்டு மாத்தையா?
4)   அதேபோல் முதலாவது உள்நாட்டு யுத்தத்தின் போது மரணித்தவர்களை எந்தக் கணக்கில் வைப்பது? குறிப்பாக ரெலோ இயக்கப் போராளிகள்.
5)   எந்த இயக்கத்தையும் சாராமல் தாம் சாகப்போகிறோம் என்பதைத் தெரிந்தும், போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்பதற்காக, ஆயுதப் படையினரிடம் தமது இன்னுயிரை இழந்தவர்களும் உள்ளனர்.
      இவ் ஐந்து பிரிவினரின் ஒட்டுமொத்தக் கணக்கு நிச்சயமாக ஆகக் குறைந்தது ஆயிரத்தைத் தாண்டும். தமிழீழ வரலாறு இவர்களை மறந்து விடுதல் நியாயமா? நிச்சயமாக போராளிகளுக்குச் செய்யும் அநீதியேயாகும். ஆகவே நவம்பர்-27 விடுதலைப் புலிப் போராளிகளுக்கான நினைவுநாளே தவிர தமிழீழப் போராளிகள் அனைவருக்குமான நினைவுநாளல்ல. ஆகவே புலிகளிம் மாவீரர் நாளில் நேரெதிரான இரு விடயங்கள் நடைபெறுகின்றன ஒன்று போற்றப்பட வேண்டியவர்களில் தம்மவர்கள் போற்றப்படுகிறாரகள், பிறர் திட்டமிட்டு மறைக்கப்படுகிறார்கள். புலிகள் இன்னமும் தம்மால் கடைப்பிடிக்கப்பட்டுவந்த தமிழீழ உள்நாட்டு யுத்தப்போக்கை இன்னமும் கைவிடவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.







Sunday 11 November 2018

நவீன யங்கிகள்


நவீன யங்கிகள்
              இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் அதிகாரத்தைப் பறித்ததுவம், மலையக மக்களை வர்க்க, தேசிய அடிமைகளாக்கியதுவும், முஸ்லீம் மக்களை அவர்களின் இயல்பான குடியிருப்புகளில் இருந்து துரத்தியடித்ததுவும் இந்தியாவா? 1950 களுக்கு முன்னரேயே இவை முடிக்கப்பட்டுவிட்டன. யூ.என்.பி அரசாங்கமே இவற்றை நடத்திமுடித்துவிட்டது. உலகளவிலான முதன்மை வல்லரசான அமெரிக்காவினதும், அதன் நேசநாடுகளின் (குறிப்பாக பிரித்தானிய, NATO) ஏஜெண்டுகளாகச் செயற்பட்ட கட்சிதான் இந்த யூ.என்.பி கட்ட்சியாகும். இக் கட்சிதான் இலங்கையில் முதன்முதலின் ஆரிய மேன்மைபற்றிப் பேசியது. சிங்கள-பௌத்த மக்களைப் பாதுகாக்க இலங்கைக்கு ஒரு ஹிட்லர் தேவையென முழங்கியதும் இவர்கள்தான். மஹாவம்சத்தை பேரகங்காரத்தன அரசியல்மயப்படுத்தியதுவும் இக்கட்சியைச் சார்ந்தவர்கள்தான். அதற்குத் துணைபுரிந்தது அமெரிக்க-பிரித்தானிய மதவாதிகள்.
            
      அதுவரை பிராந்திய வல்லரசாக வளர எத்தனித்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கும், இலங்கைக்கும் எதுவித தொடர்பும் இருக்கவில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் செய்த கைங்கரியத்தை இந்திய பிராந்திய வல்லரசு தனது கைகளில் எடுத்துக் கொள்கிறது.
         
         ஆனால் இக்கட்டுரை உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும், பிற்பகுதியைமட்டும் வலியுறுத்துவது ஏன்? இலங்கையில் தேசிய இனச்சிக்கல்களை யார்தோற்று வித்தார்களோ, இவ் அடக்குறையை அரசியல் யாப்பாக்க யார் ஆக்கினார்களோ( விவாதத்திற்குரிய யாப்பை கொணர்ந்தது “அமெரிக்கன் டிக்கி அல்லது யங்கி” யென அழைக்கப்பட்ட ஜே ஆர் ஜெய்வர்த்தனா அல்லாமல் வேறுயார். எதற்காக இந்த ஓரவஞ்சனை? அறியாமையா? தெற்காசியப் பிராந்தியத்தை தனது ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்கான அமெரிக்கத் திட்டத்திற்கான ஆதரவா?
          தெற்காசிய இறமை பாதுகாக்கப்படவேண்டும். இந்தியாவின் பெரியண்ணன் நிலவுடைமைப் பெரியண்ணன் நாட்டாமைத்தனமும் வேண்டாம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பெரியண்ணன் நாட்டாமைத்தனமும் வேண்டாம். இரண்டு பெரியண்ண ன்களையும் உலகைவிட்டு அடித்துத் துரத்துவோம். புதிய “அமெரிக்கன் டிக்கிகளும் அல்லது யங்கிகளும்” எமக்குத் தேவையில்லை.

https://www.facebook.com/kaakamEnaiyam/posts/498498803982895 எனும் முகநூல் கட்டுரைக்கான பின்னூட்டல்

Thursday 8 November 2018

அரசியல் நெருக்கடியல்ல, இராணுவ எதிர்ப்புரட்சி



        ஸ்ரீ லங்காவின் இன்றைய நெருக்கடியில் இந்தியா என்ன செய்யக் கூடும் என்பதை ஆராய்வதற்கு இரு   விதமான களங்கள் உண்டு. முதலாவது: உள்நாட்டுக் களம்; இரண்டாவது தெற்காசியக் களம்.

        உள்நாட்டுக் களம்:-   உள்நாட்டுக் களத்தில் இந்தியா என்ன விதமான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பது இன்னமும் 08/11/2018வரை பகிரங்கத்திற்கு வரவில்லை. இந்தியாவுக்கே இன்னமும் தெரியவில்லை. இந்தியா தடுமாறுகிறது போலும். இலங்கையில் நடப்பது ஒரு அரசியல் நெருக்கடிபோல் தோற்றமளித்தாலும் உண்மையில் அதுவோர் இராணுவ எதிர்ப்புரட்சியேயாகும். இதை இந்தியா நன்கறியும். அமெரிக்காவும் அறியும், நேட்டோவும் அறியும், SCO வும் அறியும். அதேபோல் எந்த நாட்டின் இராணுவமும் இவ் இராணுவ எதிர்ப்புரட்சியில் நேரடியாகத் தலையிடமாட்டாது என்பதையும் அனைவரும் அறிவர். தன்னாலும் அது முடியாது என்பதை இந்தியாவும் நன்கறியும். முடியாதென்பதல்ல பிரச்சனை, மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
          இன்று நேற்றல்ல முள்ளியவளை இனப்படுகொலையின் போதே இராணுவம் இவ் இராணுவ எதிர்ப்புரட்சியில் வெற்றிபெற்று விட்டது. அவ் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதில் ஒரு சிறு விட்டுக்கொடுப்பைக்கூட இராணுவம் செய்யவில்லை. தமிழீழப் பிரதேசம் இன்னமும் நேரடி இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்த்தான் உள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அங்குசெயற்படவில்லை. இதனால், தெற்காசியாவின் மிகச்சிறந்த பேரகங்காரவாத இராணுவ மென்ற பாராட்டுதலையும் அங்கிகாரத்தையும் அமெரிக்கா உட்பட உலகநாடுகளிடம் இருந்து பெற்றுவிட்டது. இவ் இராணுவம் பலவீனப்படுமானால் இலங்கை இறமைபெற்ற நாடாக மாறிவிடும் என்பது அனைத்து வல்லரசுகளுக்கும் தெரியும். ஆகவே இவ் இராணுவத்தை  பலவீனப்படுத்தும் முயற்சியில் எவரும் இறங்கத் துணிய மாட்டார்கள். மாறாக முடிந்தால் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொணரமுயலாம். அவ்வித மானால் நடைபெற்றுவரும் இவ் அரசியல் சர்ச்சைக்கான காரணம் என்ன? யார்? எது?

      ஸ்ரீ லங்கா இராணுவமேதான் என்பதே இதற்கான பதிலாகும். இலங்கையை உண்மையிலேயே ஆழ்வது இராணுவந்தான் என்றால், இவ்வித அரசியல் நெருக்கடியை உருவாக்கவேண்டிய காரணம் என்ன? பலவுண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.

      1வது காரணம்:- ஐ.நா சபையால் இராணுவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட கௌரவச் சிதைவை தடுத்துநிறுத்துவதில் “சிறிசேன-றணில்” அரசாங்கம் காட்டிவரும் இயலாமைத்தனம்.

         1989 மே 16 கோரக்கொலைகளுக்காக ஸ்ரீ லங்கா இராணுவத்தின் மீது ஐ.நா சபை குற்றஞ் சாட்டியுள்ளது. அக் குற்றச்சாட்டு இன்னமும் தொடர்கிறது. சமீபத்தில் றோஹின்ய இஸ்லாமியர்களை இன ஒழிப்புச் செய்ததற்காக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி மீது, உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக ஐ.நா சபை சமீபத்தில் அறிவித்துள்ளது. இத் தகவல் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்திருக்கலாம். கையாலாகாத சிறிசேனா-றணில் அரசாங்கம் இருந்துமென்ன இல்லாவிட்டாலென்ன என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
           2வது காரணம்: வாடகைக்கு அமர்த்தப்பட்ட தமிழ்த் தேசிய மிதவாதிகளின் கையாலாகத்தனம்.
       தமிழீழ மக்களிடையேயும், மலையகத் தமிழ் மக்களிடையேயும் மீளவும் தோன்றக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட, “தலைதூக்கக்கூடும்” என எதிர்பார்க்கப்படும் “தீவிரவாதத்தை”க் கட்டுப்படுத்துவதற்காகவும், தமிழ்தேசிய மிதவாதத்தை (அதுவும் கொழும்புசார் மிதவாதத்தை) அனைத்துத் தமிழீழ மக்களின் அரசியலாக ஜனரஞ்சகப் படுத்துவதற் காகவும் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களே இன்றைய தமிழ் எம்பிக் களும், மாகாணசபை உறுப்பினர்களுமாகும். இதற்காக இம் மிதவாத அரசியல்த் தலைவர்களுக்கு அளப்பரிய “நவீன் அடிமைத்தன அரசியல் அந்தஸ்தும்” பொருளாதாரச் சலுகைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இம் மிதவாத தமிழ்த் தலைவர்கள் தமது எஜமானர்களின் எதிர்பார்ப் புகளை எள்ளவும் நிறைவேற்றவில்லை. தமது வர்க்க நலனை அதிலும் குறிப்பாக தமது கொழும்புசார், ஐரோப் பியசார் வர்க்க நலனை உயர்த்திக் கொள்வதிலேயே நாட்டங்காட்டி னார்கள். தாம் நினைத்தைவிட தம்மை உயர்த்தியும்  கொண்டார்கள்.
       ஆனால், அடுத்தபக்கத்தில் தமிழ் பேசும் மக்களோ தம்மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை மெதுவாக, ஆனாலும் மிகப் பரவலாகவும், முறைப்படுத்தப்பட்ட முறையிலும் வளர்த்தெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இம் மக்கள் எழுச்சிகள் தான்தோன்றித்தனமானதோ, எந்த அரசியல் ஸ்தாபனங்களின் சுயநலனுக்காக ஆனதோ அல்ல. அவை அமைப்புரீதியாக வளர்ந் துவருகிறன. சிறைக்கைதிகள் விடுதலைக்காகவும், கிழக்கு மாகாண குடிநீர்கொள்கைக்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு நில மீட்புக் கெதிரா கவும், நடைபெற்றுவரும் போராட்டங்கள் அவற்றில் சிலவாகும். விலைபோன மிதவாதிகள், இப்போக்கை தடுத்து நிறுத்துவதில் கையாலாகதவர்களாகவே உள்ளனர். கையாலாகதவர்களைக் கழட்டி விடுவது தப்பா? இது இராணுவத்தின் வாதம்.
  3வது காரணம்:இஸ்லாமி யர்களைக் கையாளும் விவகாரம்.
       தமிழீழம் எழுச்சி பெற்றதன் பின்பான காலத்தில் இருந்து இன்றுவரையான காலத்தில் தமிழீழத்தில் மூன்று வகையான இஸ்லாமிய இன ஒழிப்புநடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
முதலாவது: IPKF ஆல் நடத்தப்பட்டது. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளல் அவ்வளவு சிரமமானதல்ல. இந்தியரசின் இஸ்லாமிய போபியா(Phobia) பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.
இரண்டாவது: தமிழ்ழ அரச உருவாக்கத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தால், உலகறியவும் இரகசியமாகவும் நடத்தப்பட் டவை. இதற்கான காரணகாரியத் தொடர்பை அவர்களும் சொல்ல வில்லை, எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் இராணுவ எதேச்சதிகாரப் போக்காக இருக்கலாம் எனக் கருதுகிறேன். அல்லது ஏதோவோர் அந்நிய சக்தியின் தேவைக்காக நடந்திருக்கலாம்.
மூன்றாவது: சிறிசேன-ரணில் மிதவாத அரசாங்கத்தால் சமிபகாலமாக இலங்கை முழுவதிலும் நடந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புத் தாக்கு தல்கள். இதற்குப் பின்னால இருப்பது றணிலின் கட்சியே என்பதை சிறிசேனாவே ஒத்துக்கொண்டுள்ளார். றணில் மீதான குற்றச்சாட்டில் இதுவும் ஒன்று. இதற்கான காரணம் என்ன? அல்லது காரணங்கள் என்ன? யுத்தத்தில் பின்பான காலத்தில் இலங்கை முதலாளித்துவம் துரிதமாக வளர்ந்து வருகிறது. அந்நிய மூலதனங்களின் பாய்ச்சல் மிகவும் துரிதமாகவும் அதிகமாகவும் ஏற்பட்டுவருகிறது. இவ் வளர்ச் சியில் சிங்களவர்களைத்தவிர வேறு எவரும் பங்குகொள்ளக்கூடாது என விரும்புவது இயல்பானது; அதுதான் பேரகங்காரவாதமாகும். ஆகவே இவ்விருப்பத்தை நிறைவேற்றுவதில் இஸ்லாமியர்கள் எதிரிகளாக இருக்கக்கூடும் எனபதுதான் காரணமாக இருக்கும். அவ்விதம் இருந்தால் இத் தாக்குதல்களில் இராணுவத்துக்கும் பங்கு இருக்கும். றணிலின் மீது பழிபோடுவதற்கான காரணம் என்ன? ஆதாரங்கள் இல்லை ஆனாலும் ஊகிக்கலாம்.

ஊகம் : பிரித்தானியருக்குப் பின்பான இலங்கை எவ்விதம் தமிழ் பேசும் மக்களின் சித்திரவதை(அரசியல்) சிறைக்கூடமாக இருந்து வருகின்றதோ, அது போலவே பிரித்தானியருக்குப்பின்பான இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையும் இருந்து வருகின்றது. பிரித்தனியரின் தூண்டுதலால் பாக்கிஸ்தான் தனிநாடாகப்பட்டாலும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் சிறைவாச(அரசியல்) நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உறவுகள் மேலும் கசப்பானதாகவே மாறின. அமெரிக்காவால் ஊதிவளர்க்கப்பட்ட இந்திய- பாக்கிஸ்தான் முரண்பாடு, இந்தியவாழ் இஸ்லாமியர்களின் நிலையை மேலும் மோசமடைய வைத்தது. இந்திய இஸ்லாமியர்கள் பகைமைநாட்டின் ஏஜெண்டுகளெனக் கணிக்கப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டது. ஆக, இந்தியாவில் நிலவும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுக்கான காரணம் பிரித்தானியாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுமேயாகும்.

        பிரித்தானியரின் வழிகாட்டலில் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் ஆரம்பிக்கும்வரை, இந்திய தேசியவாதம் தீவிரத்தன்மை மிக்கதாகவும், இந்துமதம் சார்ந்ததாகவுமே செயற்பட்டுவந்தது. இதை எதிர்கொள்வதற்காகவே, பிரித்தானியர், காந்தியின் தலைமையில் மிதவாதத் தேசியத்தையும், ஜின்னாவின் தலைமையில் இஸ்லாமியத் தீவிரவாதத் தேசியத்தையும் வழர்த்துவந்தனர். இது அன்று.
        இன்று, இந்தியாவுக்குத் தொல்லைகொடுப்பதற்காக இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கான முயற்ச்சி நடக்கிறதா என்றோர் கேள்வி எழுகிறது. றணிலின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் (UNP) தோறுவித்தது பிரித்தானியர்தான். அன்றிலிருந்து இன்றுவரை அக்கட்சி பிரித்தானிய, அமெரிக்க நலன் பேண் கட்சியாகவே செயற்பட்டுவருகின்றது. இன்று இவர்கள் றணிலுக்காக பரிந்துபேச வருவதைக் காணவில்லையா? UNP ஒரு கல்லில் இருமாங்காய விழுத்த முற்படுகிறது. முதலாவது, சிறிலங்கா இராணுவத்தை தொடர் நெருக்கடிக்குள் வைத்திருப்பது, இதன் மூலம் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் இறமைக்கு நெருக்கடி கொடுப்பது, அதாவது அமெரிக்க, பிரித்தானிய தலையீட்டிற்கு வழிவகுப்பது. இரண்டாவது, இஸ்லாமியப் பேரகங்காரவாதத்தை வளர்ப்பதுவும் அதை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவது, இதன்மூலம் இந்திய- ஸ்ரீ லங்கா நட்புக்கு குந்தகம் ஏற்படுத்துவது.  

         பாக்கிஸ்தானின் பலுதிஸ்தான் தேசிய எழுச்சியையும், இந்தியாவின் காஷ்மீர் தேசிய எழுச்சியையும் பயன்படுத்தி இந்திய- பாக்கிஸ்தானிய நட்புக்கு குந்தகம் விளைவிப்பதுவும்; றோஹின்யா முஸ்லீம்களுக்கு அகதி அந்த்ஸ்தது வளங்கும் விவகாரத்தில் இந்தியாவின் நிலையைப் பயன்படுத்தை இந்தியாவை இஸ்லாமிய நாடுகளிடையே இருந்து, குறிப்பாக சவுதி அரேபியாவில் இருந்து தனிமைப்படுத்த முற்படுவதுவும்; ஆசியாவில் வஹாபிஸத்தை பரப்புவத்ற்கான ஒரு கொரில்லா தளமாக இந்தோனேசியாவைப் பயன்படுத்தி வருவதுவும் இந்தியாவிற்கு எதிராக வஹாபிஸத்தை ஊக்குவிக்கும் அமெரிக்க செயற்பாட்டிற்கான உதாரணங்களாகும்.

            4வது காரணம்: ஸ்ரீ லங்காவின் அரசியல் அரங்கின், ஆதிக்க நிலையிலிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான பேரகங்காரவாதக் கூட்டை சற்றே தள்ளிவைப்பதே மைத்திரி-றணில் கூட்டின் உடனடிக் குறிக்கோளாக இருந்தது. பத்து வருட காலத்திற்கு மேலாக நிலவிவந்த யுத்தகால முறுகல் நிலை இலங்கை முதலாளித்துவத்தின் சுமுகமான வளர்ச்சியை பாதித்திருந்தது. சண்டையும் சமாதானமும் மாறிமாறி இருந்தால்தான் பேரகங்கார முதலாளித்துவம் செழிப்பாக வளரும். இது ஒரு இராணுவ பிரச்சனை மட்டுமல்ல், பொருளாதரப் பிரச்சனையும் பொருளாதாரத்திற்கு வளிவகுக்கும் அரசியல் பிரச்சனையுமாகும். ஆனால், இச் சமாதானம், சண்டைக்கான தகமையை இழந்துவிடாத முறையிலானதாக அமையவேண்டும். மஹிந்தவின் இணக்கத்துடன் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் சம்மதத்துடன், இராணுவ பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் சமாதானம் உருவாக்கப்பட்டது. மைத்திரி-றணில்-சம்பந்தன் கூட்டரசாங்க உருவாக்கப்பட்டது. தேசிய பேரகங் காரவாதச் செயற்பாடுகளும், இனவெறி மதவெறி https://vidiyalgowri.blogspot.com/2018/03/f-f.html எனும் கட்டுரையைப் பார்க்கவும். அரசியல் உசுப்பல்களும் நிறுத்தப்பட்டன அல்லது அடக்கிவாசிக்கப் பட்டன. மஹிந்தவின் அரசியலை மைத்திரி-றணில்-சம்பந்தன் கூட்டு பவுத்திரமாகப் பாதுகாத்து வந்தது. இராணுவத்தின் அனுசரணையுடன் என்பது மீழவும் அழுத்தமாகக் கூறப்படவேண்டும்.

     ஆனால், இனவெறியின் தற்காலிக முடக்கம் அல்லது மிதவாத ஆடைபோர்க்கப்பட்ட இனவெறி, இலங்கை முதலாளித்துவம் எதிர் பார்த்த நன்மைகளை இலங்கையின் முதலாழித்துவத்திற்குச் செய்ய வில்லை. முன் கூறியது போல் தமிழ் மிதவாதிகளால், தமிழ் முதலாளித்துவம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது உண்மை. ஆனால், தமிக்ஷ் மிதவாதம் பெற்ற இவ் வரப்பிரசாதங்கள் நிலைத்து நிற்க மாட்டா. இன்னோர் 1983 இவற்றைச் சூறையாடிவிடும். வெளிநாடுக ளில் சொத்துக்கள் குவித்த தமிழ் மிதவாதிகளின் சொத்துக்கள் மட்டும் தப்பும். அது வெறுவிடயம். எமது தர்க்கம் சிங்களமிதவாதம் எவ்விதம் தோற்றுப்போனது எனபதுதான்.
      இன, மத வெறி உசுப்பல்களின் தணிவு( அதாவது தேசியவாதத் தின் தணிவு) இலங்கை மக்கள் மத்தியில் வர்க்க உணர்வை  வளர்ச்சி பெறவைத்தது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில். தமிழர்களிடையே நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக,  சிங்கள மக்கள் மத்தியில் இருந்தும் குரல்கள் எழுந்தன. மலையக மக்கள்மத்தியில் இருந்து அடிப்படை ஊதியம் தொடர்பான கோரிக்கை எழுந்ததுவும், மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர்களை மட்டும் வஞ்சிக்கவில்லை, சிங்களவர்களையும் வஞ்சிக்கினறது என தமிழ், சிங்கள அமைப்புகள் கூட்டாக அறிக்கை விட்டதுவும் அனைவரும் அறிந்த சிலவிடயங் களாகும். இன்னும் பல உண்டு. இவற்றையெல்லாம் கண்ணுற்ற, ஸ்ரீ லங்கா இராணுவத் தளபதி, இவ்வருட ஆரம்பத்தில், இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு நிலை என பகிரங்கமாக அறிக்கை விட்டதை நினைவில் கொள்ளவும்.     
      இதன் விளைவு, சிங்கள, தமிழ் மிதவாதம் இரண்டுமே ஒழிக! மஹாவம்சப் பேரகங்கார வாதத் தீவிரவாதம் மீண்டும் ஓங்குக!! என இராணுவம் முழங்கத்தொடங்கியுள்ளது. இராணுவத்தினால் வழிநடத் தப்படும் இவ் அரசியல் பொம்மலாட்டங்கள் மூலம் இம்முழக்கம் வெற்றிபெறவில்லையானால், இராணுவத்தின் துப்பாக்கிகள் முழங்கும். இராணுவம் தனது இறைமையை விட்டுக்கொடுப்பதற்கான நிலையில் இல்லை, அதற்கான தேவையும் அதற்க்கு இல்லை. அவ்விதம் முழங்குமானால் உடனடிநிலையில், அல்லது முதள் கட்டநிலையில் அது தமிழ், சிங்கள மிதவாதிகளுக்கு எதிரானதாகவே இருக்கும். இதுதான் இன்றைய “அரசியல் நெருக்கடிக்கான” தீர்வாக இருக்கும். இத்தீர்வில் இந்தியாவின் நேரடிப் பங்கு எதுவும் இருக்காது.
       ஆனால், அமையவிருக்கும் தீர்வு தெற்காசிய இராணுவ, நிதியிய சமநிலையை(பொருளாதார அல்ல)-Financial, தேற்காசியாவிற்கு பாதிப்பானதாக மாற்றுமானால், இந்தியாவும் சீனாவும் மூர்க்கமாகத் தலையிடும். இதில், சீனாவின் தலையீட்டைவிட இந்தியாவின் தலையீடே அதிகமானதாகவும் துரித பயனை எதிர்பார்த்ததாகவும் இருக்கும். அது பற்றி தெற்காசிய இராணுவ, நிதியிய சமநிலைகளும் இலங்கை அரசியலும் னும் கட்டுரையில் தனியாக ஆராய்வோம்.
                    
குறிப்பு:-திருநாவின்பேட்டி https://www.facebook.com/majura.amb/videos/1997023233669691/கேட்க முடியவில்லைஅதையோட்டிய விவாதங்களில் சிலவற்றை மட்டும் பார்த்தேன் https://www.facebook.com/annamsinthu.jeevamuraly/posts/2499589263385321.
               முடிவுக்கு வரமுடியவில்லைஆனால்திருநாவை எதிர்ப்பவர்கள் திருநா இந்திய “ஆள்” எனற கருத்தை முவைக் கிறார்கள்அது உரமானதாகவுமுள்ளதுதிருநாவை ஆதரிப்பவர்கள்திருநாவை எதிர்ப்பவர்களின் சித்தாந்த நிலைப்பாட்டைத்தான் எதிர்க்கிறார்களே தவிர திருநாவின் அரசியல் நிலைப்பாட்டை நியாயப் படுத்தும் எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லைதிருநா இந்திய ஆதரவு நிலைப் பாட்டை எடுக்கிறார் என்பது உண்மையானால், எந்த அரசியல் களத்தில் இருந்து ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை.
      மேற்குறிப்பிட்ட முகநூல் பதிவுக்கான பின்னூட்டலை ஒரு     கட்டுரையாக விரித்துள்ளேன்.



Monday 5 November 2018

எனது தீபாவளி ஆதங்கங்கள்


எனது தீபாவளி ஆதங்கங்கள்

இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏமாறப்போகிறோம்!

வர்க்க சர்வாதிகார ஆட்சிகள் தோன்றுவதற்கு முன்னரான ஜனநாயக குடியரசு (மன்னராட்சிக்கு முன்னைய அரச வடிவங்கள்) மன்னர்களில் ஒருவரே நரகாசுரனாகும். இவ் வரலாற்று நாயகனை அழித்தொழித்த நாளே தீபாவளியாகும். இவ் அழித்தொழிப்பு இரு வளிகளில் முக்கியத்துவம் மிக்கதாகின்றது.

1)   ஆரிய – பிராமணிய – சதுர்வர்ண வந்தேறு குடி ஆக்கிரமப்பளர்கள் பழங்குடிமக்களின் இராச்சியத்தை வெற்றிபெற்ற நாள். இனவாதப் பார்வையில் இது இந்தியக் குடிகளுக்குக் கிடைத்த மிகப்பெரும் தோல்வியாகும்.

2)   நிலப்பிரபுத்துவ-அடிமைத்துவ மன்னராட்சி முறைமையின் அரசு, ஜனநாயகக் குடியரசு முறைமையின் அரசை வெற்றிபெற்ற தினம். வர்க்கக் கோணத்தில் பார்த்தால் இதுதான் மக்களுக்குக் கிடைத்த பாரிய தோல்வியும், அடிப்படைத்தோல்வியுமாகும். நிரந்தரத் தோல்வியென்றுகூடச் சொல்லலாம்.

மக்களுக்குக் கிடைத்த இவ்விரு பாரிய தோல்விகளையும் இட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்வது இயல்புதானே.  இம் மகிழ்ச்சியை தாம் மட்டும் கொண்டாடிவந்த இவ் ஆக்கிரமிப்பாளர்கள், காலப்போக்கில் இதை மக்களின் மகிழ்ச்சியாக மாற்றுவதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். இன்றும் அம்மகிழ்ச்சியைத் தக்கவைத்து வருகிறார்கள்.

தொடர்ந்துவரும் தமது ஆக்கிரமிப்புப் பயணத்தில் தம்மால் அழித்தொழிக்கப்பட்ட ஜனநாயகக் குடியரசு மன்னர்களும், அவர்களின் அடையாளங்களும் இழிவாகச் சித்தரிக்கப்படும்; சிலரின் மரணநாள் மக்களின் வெற்றித்தினமாகக் கொண்டாடப்படும். இச் சித்தரிப்புகளும் கொண்டாட்டங்களும் புராணங்களாகவும், சமூக மரபுகளாகவும் ஆக்கப்படும்.

இவ்விதம் ஆக்கப்பட்டவர்களில் ஒரு சிலர்:
 1) இராவணன் – இராமயணம்.
2) நரகாசுரன்   
3) ஐயப்பன் (ஐயப்ப புராணம்)
4) தாய்வழிச் சமூகத்தில் ஜனநாயகக் குடியரசு இராணியாக இருந்த குவேனி (மஹாவம்சம்)
5) காளியாத்தா-வங்கம்-
புராணங்களால் நாயகர்களாக்கப்பட்ட வரலாற்றுத் துரோகிகள்:

1) அனுமான்( ஒரு பழங்குடிக் சமூகக் குழுமத்தை அழிப்பதற்கு இராமனுக்குத் துணைபுரிந்த ஒரு குலத்துரோகி- (இராமயணம்) ;

 2) கண்ணனும் (கிருஷ்ணன்) கர்ணனும். பாரத யுத்தம் அப்போதைய வர்த்தகக் குழுமத்துக்கும், விவசாயக்குழுமத்துக்கும் இடையே நடந்த யுத்தமாகும். முன்னையது வளரும் நிலையிலும், பின்னையது வளர்ந்து ஆதிக்கம் பெற்ற நிலையிலும் இருந்தது. அதாவது வர்த்தகக் குழுமத்தில் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. இத் தடைக்கு எதிரான யுத்தமே பாரதப்போராகும். இதில் கண்ணன் (கிருஷ்ணன்) விவசாயக் குழுமத்தைச் சேர்ந்தவன். கர்ணன் வர்த்தகக் குழுமத்தைச் சேர்ந்தவன். ஆனால், பாரதப் போரில் இருவரும் தத்தமது குழுமத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள். இதினால் இருவரும் தத்தமது குழுமத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.

கண்ணன் (கிருஷ்ணன்) எது வளர வேண்டுமோ, எது வளர்ப்போகிறதோ அப்பக்கம் நிக்கிறான். ஆகையான் அவனின் துரோகம் முற்போக்கானதாகின்றது. ஒரு மருத்துவச்சி என்ற முறையில் சமூக வன்முறையை நாடுகிறான். பல ஆண்டுகளிற்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் சொன்னதை கர்ணன் அன்றே சொல்லிவிட்டான். கர்ணனைப் போற்றுவோம். ஆனால் ஒரு மருத்துவச்சி என்ற முறையிலா கர்ணனின் பங்களிப்பை மூடிமறைத்து, ஆனைத்தையும் படைப்பவன் என்ற நிலைக்கு கண்ணனைச் சிறுமைப்படுத்தியதை ஏற்றுக் கொள்ளமிடியாது.

கர்ணன்; செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் எனும் முழக்கத்தின் கீழ், வளரக்கூடிய ஒரு சமூகப்போக்கிற்கு துரோகம் செய்கிறான். சொந்த ஆசாபாசங்களையும், தனிநபர்களுக்கான சேவைகளையும் சமூகநலனுக்கு கீழ்படுத்துகிறான். இதுதான் உண்மையிலேயே சமூகத் துரோகமாகும். இத் துரோகத்தை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு உண்மை நிகழ்வைப் பற்றிய தவறான பார்வயைக் கொடுக்கும் மகா பாரதம் மிழ் எழுதப்படவேண்டும்.

குருதியினத் தேசியவாதங்களும் புராணங்களும்:

இந்திய உபகண்டத்தில் கோரமாகத் தலைவிரித்தாடும் சனாதன தர்ம பேரகங்காரவாதம், மஹாவம்சப் பேரகங்கார வாதம், வஹாபிசப் பேரகங்காரவாதம் ஆகிய முப்பெரும் பேரகங்காரங்களும் சமூகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான சித்தாந்த, பண்பாட்டு ஆயுதங்களாக கொண்டிருப்பது, புராணங்களையேயாகும். ஆகவேதான் இவை புராணத் தேசியவாதமென அழைக்கப்படுகின்றது.

ஆகவே, பேரகங்காரவாத புராணங்களின் சாம்பல் மேட்டின்மீது அக்கிரமிப்புக்கு எதிரான வரலாற்றுக் காவியங்களை (பழையதும், புதியதும்) கட்டியெழுப்புவோம். மூவகைப் பேரகங்கார வாதங்களிடம் இருந்தும் தெற்காசியாவை மீட்டெடுப்போம்.

முற்போக்காளர்களெனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள்கூட தீபாவளி கொண்டாடும் நிலையில் இருப்பதுதான் எனது ஆதங்கமாகும்.

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...