எனது தீபாவளி ஆதங்கங்கள்
இன்னும்
எத்தனை நாட்களுக்கு ஏமாறப்போகிறோம்!
வர்க்க சர்வாதிகார ஆட்சிகள் தோன்றுவதற்கு முன்னரான ஜனநாயக குடியரசு
(மன்னராட்சிக்கு முன்னைய அரச வடிவங்கள்) மன்னர்களில் ஒருவரே நரகாசுரனாகும். இவ் வரலாற்று
நாயகனை அழித்தொழித்த நாளே தீபாவளியாகும். இவ் அழித்தொழிப்பு இரு வளிகளில் முக்கியத்துவம்
மிக்கதாகின்றது.
1) ஆரிய
– பிராமணிய – சதுர்வர்ண வந்தேறு குடி ஆக்கிரமப்பளர்கள் பழங்குடிமக்களின் இராச்சியத்தை
வெற்றிபெற்ற நாள். இனவாதப் பார்வையில் இது இந்தியக் குடிகளுக்குக் கிடைத்த மிகப்பெரும்
தோல்வியாகும்.
2) நிலப்பிரபுத்துவ-அடிமைத்துவ
மன்னராட்சி முறைமையின் அரசு, ஜனநாயகக் குடியரசு முறைமையின் அரசை வெற்றிபெற்ற தினம்.
வர்க்கக் கோணத்தில் பார்த்தால் இதுதான் மக்களுக்குக் கிடைத்த பாரிய தோல்வியும், அடிப்படைத்தோல்வியுமாகும்.
நிரந்தரத் தோல்வியென்றுகூடச் சொல்லலாம்.
மக்களுக்குக் கிடைத்த இவ்விரு பாரிய தோல்விகளையும் இட்டு ஆக்கிரமிப்பாளர்கள்
மிகுந்த மகிழ்ச்சி கொள்வது இயல்புதானே. இம்
மகிழ்ச்சியை தாம் மட்டும் கொண்டாடிவந்த இவ் ஆக்கிரமிப்பாளர்கள், காலப்போக்கில் இதை
மக்களின் மகிழ்ச்சியாக மாற்றுவதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். இன்றும் அம்மகிழ்ச்சியைத்
தக்கவைத்து வருகிறார்கள்.
தொடர்ந்துவரும் தமது ஆக்கிரமிப்புப் பயணத்தில் தம்மால் அழித்தொழிக்கப்பட்ட
ஜனநாயகக் குடியரசு மன்னர்களும், அவர்களின் அடையாளங்களும் இழிவாகச் சித்தரிக்கப்படும்;
சிலரின் மரணநாள் மக்களின் வெற்றித்தினமாகக் கொண்டாடப்படும். இச் சித்தரிப்புகளும் கொண்டாட்டங்களும்
புராணங்களாகவும், சமூக மரபுகளாகவும் ஆக்கப்படும்.
இவ்விதம் ஆக்கப்பட்டவர்களில் ஒரு சிலர்:
1) இராவணன் – இராமயணம்.
2) நரகாசுரன்
3) ஐயப்பன் (ஐயப்ப புராணம்)
4) தாய்வழிச் சமூகத்தில் ஜனநாயகக் குடியரசு இராணியாக இருந்த
குவேனி (மஹாவம்சம்)
5) காளியாத்தா-வங்கம்-
புராணங்களால் நாயகர்களாக்கப்பட்ட வரலாற்றுத் துரோகிகள்:
1) அனுமான்( ஒரு பழங்குடிக் சமூகக் குழுமத்தை அழிப்பதற்கு இராமனுக்குத்
துணைபுரிந்த ஒரு குலத்துரோகி- (இராமயணம்) ;
2) கண்ணனும் (கிருஷ்ணன்)
கர்ணனும். பாரத யுத்தம் அப்போதைய வர்த்தகக் குழுமத்துக்கும், விவசாயக்குழுமத்துக்கும்
இடையே நடந்த யுத்தமாகும். முன்னையது வளரும் நிலையிலும், பின்னையது வளர்ந்து ஆதிக்கம்
பெற்ற நிலையிலும் இருந்தது. அதாவது வர்த்தகக் குழுமத்தில் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.
இத் தடைக்கு எதிரான யுத்தமே பாரதப்போராகும். இதில் கண்ணன் (கிருஷ்ணன்) விவசாயக் குழுமத்தைச்
சேர்ந்தவன். கர்ணன் வர்த்தகக் குழுமத்தைச் சேர்ந்தவன். ஆனால், பாரதப் போரில் இருவரும்
தத்தமது குழுமத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள். இதினால் இருவரும் தத்தமது
குழுமத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.
கண்ணன் (கிருஷ்ணன்) எது வளர வேண்டுமோ, எது வளர்ப்போகிறதோ அப்பக்கம்
நிக்கிறான். ஆகையான் அவனின் துரோகம் முற்போக்கானதாகின்றது. ஒரு மருத்துவச்சி என்ற முறையில்
சமூக வன்முறையை நாடுகிறான். பல ஆண்டுகளிற்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் சொன்னதை கர்ணன்
அன்றே சொல்லிவிட்டான். கர்ணனைப் போற்றுவோம். ஆனால் ஒரு மருத்துவச்சி என்ற முறையிலா
கர்ணனின் பங்களிப்பை மூடிமறைத்து, ஆனைத்தையும் படைப்பவன் என்ற நிலைக்கு கண்ணனைச் சிறுமைப்படுத்தியதை
ஏற்றுக் கொள்ளமிடியாது.
கர்ணன்; செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் எனும் முழக்கத்தின் கீழ்,
வளரக்கூடிய ஒரு சமூகப்போக்கிற்கு துரோகம் செய்கிறான். சொந்த ஆசாபாசங்களையும், தனிநபர்களுக்கான
சேவைகளையும் சமூகநலனுக்கு கீழ்படுத்துகிறான். இதுதான் உண்மையிலேயே சமூகத் துரோகமாகும்.
இத் துரோகத்தை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு உண்மை நிகழ்வைப் பற்றிய தவறான பார்வயைக் கொடுக்கும் மகா
பாரதம் மிழ் எழுதப்படவேண்டும்.
குருதியினத் தேசியவாதங்களும் புராணங்களும்:
இந்திய உபகண்டத்தில் கோரமாகத் தலைவிரித்தாடும் சனாதன தர்ம பேரகங்காரவாதம்,
மஹாவம்சப் பேரகங்கார வாதம், வஹாபிசப் பேரகங்காரவாதம் ஆகிய முப்பெரும் பேரகங்காரங்களும்
சமூகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான சித்தாந்த, பண்பாட்டு ஆயுதங்களாக கொண்டிருப்பது,
புராணங்களையேயாகும். ஆகவேதான் இவை புராணத் தேசியவாதமென அழைக்கப்படுகின்றது.
ஆகவே, பேரகங்காரவாத புராணங்களின் சாம்பல் மேட்டின்மீது அக்கிரமிப்புக்கு
எதிரான வரலாற்றுக் காவியங்களை (பழையதும், புதியதும்) கட்டியெழுப்புவோம். மூவகைப் பேரகங்கார
வாதங்களிடம் இருந்தும் தெற்காசியாவை மீட்டெடுப்போம்.
முற்போக்காளர்களெனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள்கூட
தீபாவளி கொண்டாடும் நிலையில் இருப்பதுதான் எனது ஆதங்கமாகும்.
No comments:
Post a Comment