Saturday, 3 November 2018

பிரியத்தான் வேண்டுமா?


எல்லாமே ஒற்றை ஆட்சியின் மறுவடிவங்கள் தான் !
பகிரப்பட்ட இறையாண்மை என்று ஓன்று இல்லை ,
உள்ளக சுயநிர்ணய உரிமை என்று ஓன்று இல்லை , என்பதனை தெளிவு படுத்த கூடிய புதிய வெகுஜன அமைப்புகள் தேவை !
தெளிவு படுத்த கூடிய புதிய வெகுஜன அமைப்புகளின் தடையாக குமரவடிவேல் குருபரன் , S A ஜோதி, திரு நாய்க்கரசு , நிலாந்தன் , ஜதீந்திரா , கருணாகரன் ..... போன்ற கருத்துருவாக்கிகளை களத்தில் பண பலத்துடன் கருத்தியல் தளத்தில் இறக்கியுள்ளது !!  எனும் முகநூல் பதிவிற்கான பின்னூட்டல்
  ----------------------------------------------------------------------------------    

        முகநூலை ஒரு புதிய கருத்துருவாக்கத்திற்காக, அல்லது ஒரு கருத்து நிராகரிப்பிற்காக, அல்லது நிலவும் கருத்தை வளர்த்தெடுப்பதற்காக பயன்படுத்தல் என்பது மிக மிக அரிதாக உள்ளது. இப் பரிதாப நிலையில், ஒரு கருத்து நிராகரிப்புக்கான வாதத்தை தொடக்கியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
 “உள்ளக சுயநிர்ணய உரிமை என்று ஓன்று இல்லை , என்பதனை தெளிவு படுத்த கூடிய புதிய வெகுஜன அமைப்புகள் தேவை !  என எதற்காகக் கூறுகிறீர்கள். ஒரு கருத்து முதலில் கருத்துமட்டத்தில்(hypothesis) முன்வைக்கப்படவேண்டும். ஆனால், அது நடைமுறை மட்டத்தில்தான் சரியா, தவறா என்பது நிரூபணமாகும். ஆகவே, நடைமுறையில் அது சரியா தப்பா என்பதை நிரூபிப்பது வெகுஜன அமைப்புகள்தான்.
முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் இன்றைய காலம் வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட “தேசிய”, “நாட்டுப்பற்றிய”, “தேசிய இனவிய” [ “National”, Patriotic” and “Ethno”] வெகுஜன இயக்கங்கள் தோன்றியுள்ளன; சில வெற்றி பெற்றுள்ளன, பல இன்னமும் தொடர்கின்றன, சில அழித்துபோய்விட்டன, சில மற்றொன்றாக உருமாறியுள்ளன. கருத்தாளர்கள் (theorizers) இவற்றில் இருந்துதானே தமது கருத்துருவாக்கத்தை ஆரம்பிக்கவேண்டும்?
எல்லாமே ஒற்றை ஆட்சியின் மறுவடிவங்கள் தான் !என்பதில் உள்ள எல்லாமே என்பது எவை? அரசுகளின் “தேசிய”, “நாட்டுப்பற்றிய”, “தேசிய இனவிய” [ “National”, Patriotic” and “Ethno”] தன்மைகளை கணக்கில் கொள்ளவில்லையா? அரசுகளின் வர்க்க சுபாவத்தை கணக்கில் கொள்ளவில்லையை? உலகளாவிய நோக்கில் நீங்களே இதற்கான பதிலைக் கூறுங்கள்.
தெற்காசிய நோக்கிலான எனது நிலைப்பாட்டை நான் கூறுகிறேன்.  பகிர்வைப் பார்க்கவும்
எல்லாமே ஒற்றை ஆட்சியின் மறுவடிவங்கள் தான் ! எனும் உங்கள் கூற்று நேபாளம் தவிர தெற்காசியாவின் அனைத்து அரசுகளுக்கும் பொருத்தமானதே. இவ் அனைத்து அரசுகளும் தேசிய இனங்கள் உட்பட அனைத்துவகை சமூக மக்கள் குளுமங்களினதும் சிறைக்கூடுகளே. பகிரப்பட்ட இறையாண்மை என்றொன்று இங்கில்லை. இதனால் தேச அரசென்றொன்று இங்கில்லை. இருக்கும் அரசுகள் அனைத்தும் நாட்டரசுகளேயாகும். [ _________- எனும் கட்டுரையைப் பார்க்கவும்.] ஆதாவது நீங்கள் கூறியுள்ளதைப்போல் “பகிரப்பட்ட இறையாண்மை என்று ஓன்று இல்லை ,உள்ளக சுயநிர்ணய உரிமை என்று ஓன்று இல்லை என்பதே எனது கருத்துமாகும்.

ஆனால், இரு கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.

முதலாவது:- புதிய வெகுஜன அமைப்பு கட்டாயம் என்பதல்ல. 12 நாடுகளைக் கொண்ட தெற்காசிய 22 ற்கு மேற்பட்ட தேசங்களைக் கொண்ட பிராந்தியமாக மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் நிதர்சனமாகிவிட்டன. இவ்விருபத்தி இரண்டு எதிர்காலத் தேசஙகளிலும். சுமார் 35 க்கு மேற்பட்ட பகிரங்கமான வெகுஜன அமைப்புகள் உண்டு. ஆகவே தேசிய இனவாத அடக்குமுறைக்கு எதிரான புதிய வெகுஜன அமைப்புகள் தேவை என்பது தவறு.
இரண்டாவது: இவ் 22  தேசங்களும், சிலவேளைகளில் அதற்கு மேற்ப்பட்ட தேசங்களும் தனித்தேசங்களாக மலர்ந்துதான் ஆகவேண்டும் எனும் கருத்துடன் நான் சிறிதளவும் உடன்படவில்லை. ஒரு தேசிய இனவாதக் குழுமத்தின் தன்மையையும், அதன் வளர் நிலையையும் தீர்மானிக்கும் காரணிகள் இவையாகும்:-
1)    உள்ளும், புறமும் நடக்கும் வ்ர்க்கப்போராட்டங்கள்.
2)    பேரகங்காரவாத அரசுகளுக்கு ஏற்படும் அரசிய, இராணுவ, பொருளாதார இழப்புகள்.
3)    பல் முனைமைய உலகை அமைப்பதற்கான போராட்டத்தில் தெற்காசியப் பிராந்தியம் பெறப்போகுக் வெற்றிதோல்விகள்.
4)    தெற்காசியப் பிராந்திய நிலப்பிரபுத்துவ மூத்தண்ணன் நிலைப்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பெறப்போகும் வெற்றி தோல்விகள்.
இவ் நான்கு மாறிலிக் காரணங்களுந்தான் தெற்காசியாவில் எத்தனை தேசங்கள் அமையப்போகின்றன என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாகும்.




No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...