ஸ்ரீ லங்காவின் இன்றைய நெருக்கடியில் இந்தியா என்ன செய்யக் கூடும் என்பதை
ஆராய்வதற்கு இரு விதமான களங்கள் உண்டு. முதலாவது: உள்நாட்டுக் களம்; இரண்டாவது தெற்காசியக்
களம்.
உள்நாட்டுக் களம்:- உள்நாட்டுக் களத்தில் இந்தியா என்ன விதமான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பது இன்னமும் 08/11/2018வரை பகிரங்கத்திற்கு வரவில்லை. இந்தியாவுக்கே இன்னமும் தெரியவில்லை. இந்தியா தடுமாறுகிறது போலும். இலங்கையில் நடப்பது ஒரு அரசியல் நெருக்கடிபோல்
தோற்றமளித்தாலும் உண்மையில் அதுவோர் இராணுவ எதிர்ப்புரட்சியேயாகும். இதை இந்தியா நன்கறியும். அமெரிக்காவும் அறியும், நேட்டோவும் அறியும், SCO வும் அறியும். அதேபோல் எந்த நாட்டின் இராணுவமும் இவ் இராணுவ எதிர்ப்புரட்சியில் நேரடியாகத் தலையிடமாட்டாது என்பதையும் அனைவரும் அறிவர். தன்னாலும் அது முடியாது என்பதை இந்தியாவும் நன்கறியும். முடியாதென்பதல்ல பிரச்சனை, மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
இன்று நேற்றல்ல முள்ளியவளை இனப்படுகொலையின் போதே இராணுவம் இவ் இராணுவ எதிர்ப்புரட்சியில் வெற்றிபெற்று விட்டது. அவ் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதில்
ஒரு சிறு விட்டுக்கொடுப்பைக்கூட இராணுவம் செய்யவில்லை. தமிழீழப் பிரதேசம் இன்னமும்
நேரடி இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்த்தான் உள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அங்குசெயற்படவில்லை.
இதனால், தெற்காசியாவின் மிகச்சிறந்த பேரகங்காரவாத இராணுவ மென்ற பாராட்டுதலையும் அங்கிகாரத்தையும்
அமெரிக்கா உட்பட உலகநாடுகளிடம் இருந்து பெற்றுவிட்டது. இவ் இராணுவம் பலவீனப்படுமானால்
இலங்கை இறமைபெற்ற நாடாக மாறிவிடும் என்பது அனைத்து வல்லரசுகளுக்கும் தெரியும். ஆகவே
இவ் இராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில்
எவரும் இறங்கத் துணிய மாட்டார்கள். மாறாக முடிந்தால் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொணரமுயலாம்.
அவ்வித மானால் நடைபெற்றுவரும் இவ் அரசியல் சர்ச்சைக்கான காரணம் என்ன? யார்? எது?
ஸ்ரீ
லங்கா இராணுவமேதான் என்பதே இதற்கான பதிலாகும். இலங்கையை உண்மையிலேயே ஆழ்வது இராணுவந்தான்
என்றால், இவ்வித அரசியல் நெருக்கடியை உருவாக்கவேண்டிய காரணம் என்ன? பலவுண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.
1வது காரணம்:- ஐ.நா சபையால் இராணுவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட கௌரவச் சிதைவை தடுத்துநிறுத்துவதில்
“சிறிசேன-றணில்” அரசாங்கம் காட்டிவரும் இயலாமைத்தனம்.
1989 மே 16 கோரக்கொலைகளுக்காக
ஸ்ரீ லங்கா இராணுவத்தின் மீது ஐ.நா சபை குற்றஞ் சாட்டியுள்ளது. அக் குற்றச்சாட்டு இன்னமும்
தொடர்கிறது. சமீபத்தில் றோஹின்ய இஸ்லாமியர்களை இன ஒழிப்புச் செய்ததற்காக சம்பந்தப்பட்ட
இராணுவ அதிகாரி மீது, உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக ஐ.நா சபை சமீபத்தில்
அறிவித்துள்ளது. இத் தகவல் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது போல்
இருந்திருக்கலாம். கையாலாகாத சிறிசேனா-றணில் அரசாங்கம் இருந்துமென்ன இல்லாவிட்டாலென்ன
என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
2வது காரணம்: வாடகைக்கு அமர்த்தப்பட்ட தமிழ்த் தேசிய மிதவாதிகளின் கையாலாகத்தனம்.
தமிழீழ மக்களிடையேயும், மலையகத் தமிழ் மக்களிடையேயும் மீளவும் தோன்றக்கூடும்
என எதிர்பார்க்கப்பட்ட, “தலைதூக்கக்கூடும்” என எதிர்பார்க்கப்படும் “தீவிரவாதத்தை”க்
கட்டுப்படுத்துவதற்காகவும், தமிழ்தேசிய மிதவாதத்தை (அதுவும் கொழும்புசார் மிதவாதத்தை)
அனைத்துத் தமிழீழ மக்களின் அரசியலாக ஜனரஞ்சகப் படுத்துவதற் காகவும் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களே
இன்றைய தமிழ் எம்பிக் களும், மாகாணசபை உறுப்பினர்களுமாகும். இதற்காக இம் மிதவாத அரசியல்த்
தலைவர்களுக்கு அளப்பரிய “நவீன் அடிமைத்தன அரசியல் அந்தஸ்தும்” பொருளாதாரச் சலுகைகளும்
வழங்கப்பட்டன. ஆனால் இம் மிதவாத தமிழ்த் தலைவர்கள் தமது எஜமானர்களின் எதிர்பார்ப் புகளை
எள்ளவும் நிறைவேற்றவில்லை. தமது வர்க்க நலனை அதிலும் குறிப்பாக தமது கொழும்புசார்,
ஐரோப் பியசார் வர்க்க நலனை உயர்த்திக் கொள்வதிலேயே நாட்டங்காட்டி னார்கள். தாம் நினைத்தைவிட
தம்மை உயர்த்தியும் கொண்டார்கள்.
ஆனால், அடுத்தபக்கத்தில் தமிழ் பேசும் மக்களோ தம்மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான
போராட்டங்களை மெதுவாக, ஆனாலும் மிகப் பரவலாகவும், முறைப்படுத்தப்பட்ட முறையிலும் வளர்த்தெடுக்கத்
தொடங்கிவிட்டார்கள். இம் மக்கள் எழுச்சிகள் தான்தோன்றித்தனமானதோ, எந்த அரசியல் ஸ்தாபனங்களின்
சுயநலனுக்காக ஆனதோ அல்ல. அவை அமைப்புரீதியாக வளர்ந் துவருகிறன. சிறைக்கைதிகள் விடுதலைக்காகவும்,
கிழக்கு மாகாண குடிநீர்கொள்கைக்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு நில மீட்புக் கெதிரா கவும்,
நடைபெற்றுவரும் போராட்டங்கள் அவற்றில் சிலவாகும். விலைபோன மிதவாதிகள், இப்போக்கை தடுத்து
நிறுத்துவதில் கையாலாகதவர்களாகவே உள்ளனர். கையாலாகதவர்களைக் கழட்டி விடுவது தப்பா?
இது இராணுவத்தின் வாதம்.
3வது காரணம்:இஸ்லாமி யர்களைக் கையாளும் விவகாரம்.
தமிழீழம் எழுச்சி பெற்றதன் பின்பான காலத்தில் இருந்து இன்றுவரையான காலத்தில்
தமிழீழத்தில் மூன்று வகையான இஸ்லாமிய இன ஒழிப்புநடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
முதலாவது: IPKF ஆல் நடத்தப்பட்டது. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளல்
அவ்வளவு சிரமமானதல்ல. இந்தியரசின் இஸ்லாமிய போபியா(Phobia) பற்றி அறியாதவர்கள் இருக்க
முடியாது.
இரண்டாவது: தமிழ்ழ அரச உருவாக்கத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தால்,
உலகறியவும் இரகசியமாகவும் நடத்தப்பட் டவை. இதற்கான காரணகாரியத் தொடர்பை அவர்களும் சொல்ல
வில்லை, எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் இராணுவ எதேச்சதிகாரப்
போக்காக இருக்கலாம் எனக் கருதுகிறேன். அல்லது ஏதோவோர் அந்நிய சக்தியின் தேவைக்காக நடந்திருக்கலாம்.
மூன்றாவது: சிறிசேன-ரணில் மிதவாத அரசாங்கத்தால்
சமிபகாலமாக இலங்கை முழுவதிலும் நடந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புத் தாக்கு தல்கள். இதற்குப்
பின்னால இருப்பது றணிலின் கட்சியே என்பதை சிறிசேனாவே ஒத்துக்கொண்டுள்ளார். றணில் மீதான
குற்றச்சாட்டில் இதுவும் ஒன்று. இதற்கான காரணம் என்ன? அல்லது காரணங்கள் என்ன? யுத்தத்தில்
பின்பான காலத்தில் இலங்கை முதலாளித்துவம் துரிதமாக வளர்ந்து வருகிறது. அந்நிய மூலதனங்களின்
பாய்ச்சல் மிகவும் துரிதமாகவும் அதிகமாகவும் ஏற்பட்டுவருகிறது. இவ் வளர்ச் சியில் சிங்களவர்களைத்தவிர
வேறு எவரும் பங்குகொள்ளக்கூடாது என விரும்புவது இயல்பானது; அதுதான் பேரகங்காரவாதமாகும்.
ஆகவே இவ்விருப்பத்தை நிறைவேற்றுவதில் இஸ்லாமியர்கள் எதிரிகளாக இருக்கக்கூடும் எனபதுதான்
காரணமாக இருக்கும். அவ்விதம் இருந்தால் இத் தாக்குதல்களில் இராணுவத்துக்கும் பங்கு
இருக்கும். றணிலின் மீது பழிபோடுவதற்கான காரணம் என்ன? ஆதாரங்கள் இல்லை ஆனாலும் ஊகிக்கலாம்.
ஊகம் : பிரித்தானியருக்குப்
பின்பான இலங்கை எவ்விதம் தமிழ் பேசும் மக்களின் சித்திரவதை(அரசியல்) சிறைக்கூடமாக இருந்து
வருகின்றதோ, அது போலவே பிரித்தானியருக்குப்பின்பான இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையும்
இருந்து வருகின்றது. பிரித்தனியரின் தூண்டுதலால் பாக்கிஸ்தான் தனிநாடாகப்பட்டாலும்,
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் சிறைவாச(அரசியல்) நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
உறவுகள் மேலும் கசப்பானதாகவே மாறின. அமெரிக்காவால் ஊதிவளர்க்கப்பட்ட இந்திய- பாக்கிஸ்தான்
முரண்பாடு, இந்தியவாழ் இஸ்லாமியர்களின் நிலையை மேலும் மோசமடைய வைத்தது. இந்திய இஸ்லாமியர்கள்
பகைமைநாட்டின் ஏஜெண்டுகளெனக் கணிக்கப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டது. ஆக, இந்தியாவில்
நிலவும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுக்கான காரணம் பிரித்தானியாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுமேயாகும்.
பிரித்தானியரின் வழிகாட்டலில் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் ஆரம்பிக்கும்வரை,
இந்திய தேசியவாதம் தீவிரத்தன்மை மிக்கதாகவும், இந்துமதம் சார்ந்ததாகவுமே செயற்பட்டுவந்தது.
இதை எதிர்கொள்வதற்காகவே, பிரித்தானியர், காந்தியின் தலைமையில் மிதவாதத் தேசியத்தையும்,
ஜின்னாவின் தலைமையில் இஸ்லாமியத் தீவிரவாதத் தேசியத்தையும் வழர்த்துவந்தனர். இது அன்று.
இன்று, இந்தியாவுக்குத் தொல்லைகொடுப்பதற்காக
இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கான முயற்ச்சி நடக்கிறதா என்றோர் கேள்வி
எழுகிறது. றணிலின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் (UNP) தோறுவித்தது பிரித்தானியர்தான்.
அன்றிலிருந்து இன்றுவரை அக்கட்சி பிரித்தானிய, அமெரிக்க நலன் பேண் கட்சியாகவே செயற்பட்டுவருகின்றது.
இன்று இவர்கள் றணிலுக்காக பரிந்துபேச வருவதைக் காணவில்லையா? UNP ஒரு கல்லில் இருமாங்காய
விழுத்த முற்படுகிறது. முதலாவது, சிறிலங்கா இராணுவத்தை தொடர் நெருக்கடிக்குள் வைத்திருப்பது,
இதன் மூலம் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் இறமைக்கு நெருக்கடி கொடுப்பது, அதாவது அமெரிக்க,
பிரித்தானிய தலையீட்டிற்கு வழிவகுப்பது. இரண்டாவது, இஸ்லாமியப் பேரகங்காரவாதத்தை வளர்ப்பதுவும்
அதை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவது, இதன்மூலம் இந்திய- ஸ்ரீ லங்கா நட்புக்கு
குந்தகம் ஏற்படுத்துவது.
பாக்கிஸ்தானின் பலுதிஸ்தான் தேசிய எழுச்சியையும்,
இந்தியாவின் காஷ்மீர் தேசிய எழுச்சியையும் பயன்படுத்தி இந்திய- பாக்கிஸ்தானிய நட்புக்கு
குந்தகம் விளைவிப்பதுவும்; றோஹின்யா முஸ்லீம்களுக்கு அகதி அந்த்ஸ்தது வளங்கும் விவகாரத்தில்
இந்தியாவின் நிலையைப் பயன்படுத்தை இந்தியாவை இஸ்லாமிய நாடுகளிடையே இருந்து, குறிப்பாக
சவுதி அரேபியாவில் இருந்து தனிமைப்படுத்த முற்படுவதுவும்; ஆசியாவில் வஹாபிஸத்தை பரப்புவத்ற்கான
ஒரு கொரில்லா தளமாக இந்தோனேசியாவைப் பயன்படுத்தி வருவதுவும் இந்தியாவிற்கு எதிராக வஹாபிஸத்தை
ஊக்குவிக்கும் அமெரிக்க செயற்பாட்டிற்கான உதாரணங்களாகும்.
4வது காரணம்: ஸ்ரீ லங்காவின் அரசியல் அரங்கின், ஆதிக்க நிலையிலிருந்த மஹிந்த
ராஜபக்ஷவின் தலைமையிலான பேரகங்காரவாதக் கூட்டை சற்றே தள்ளிவைப்பதே மைத்திரி-றணில்
கூட்டின் உடனடிக் குறிக்கோளாக இருந்தது. பத்து வருட காலத்திற்கு மேலாக நிலவிவந்த யுத்தகால
முறுகல் நிலை இலங்கை முதலாளித்துவத்தின் சுமுகமான வளர்ச்சியை பாதித்திருந்தது. சண்டையும்
சமாதானமும் மாறிமாறி இருந்தால்தான் பேரகங்கார முதலாளித்துவம் செழிப்பாக வளரும். இது
ஒரு இராணுவ பிரச்சனை மட்டுமல்ல், பொருளாதரப் பிரச்சனையும் பொருளாதாரத்திற்கு வளிவகுக்கும்
அரசியல் பிரச்சனையுமாகும். ஆனால், இச் சமாதானம், சண்டைக்கான தகமையை இழந்துவிடாத முறையிலானதாக
அமையவேண்டும். மஹிந்தவின் இணக்கத்துடன் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் சம்மதத்துடன், இராணுவ
பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் சமாதானம் உருவாக்கப்பட்டது. மைத்திரி-றணில்-சம்பந்தன்
கூட்டரசாங்க உருவாக்கப்பட்டது. தேசிய பேரகங் காரவாதச் செயற்பாடுகளும், இனவெறி மதவெறி
https://vidiyalgowri.blogspot.com/2018/03/f-f.html எனும் கட்டுரையைப் பார்க்கவும். அரசியல் உசுப்பல்களும் நிறுத்தப்பட்டன
அல்லது அடக்கிவாசிக்கப் பட்டன. மஹிந்தவின் அரசியலை மைத்திரி-றணில்-சம்பந்தன் கூட்டு
பவுத்திரமாகப் பாதுகாத்து வந்தது. இராணுவத்தின் அனுசரணையுடன் என்பது மீழவும் அழுத்தமாகக்
கூறப்படவேண்டும்.
ஆனால், இனவெறியின் தற்காலிக முடக்கம் அல்லது மிதவாத ஆடைபோர்க்கப்பட்ட இனவெறி,
இலங்கை முதலாளித்துவம் எதிர் பார்த்த நன்மைகளை இலங்கையின் முதலாழித்துவத்திற்குச் செய்ய
வில்லை. முன் கூறியது போல் தமிழ் மிதவாதிகளால், தமிழ் முதலாளித்துவம் பல நன்மைகளைப்
பெற்றுள்ளது உண்மை. ஆனால், தமிக்ஷ் மிதவாதம் பெற்ற இவ் வரப்பிரசாதங்கள் நிலைத்து நிற்க
மாட்டா. இன்னோர் 1983 இவற்றைச் சூறையாடிவிடும். வெளிநாடுக
ளில் சொத்துக்கள் குவித்த தமிழ் மிதவாதிகளின் சொத்துக்கள் மட்டும் தப்பும். அது வெறுவிடயம்.
எமது தர்க்கம் சிங்களமிதவாதம் எவ்விதம் தோற்றுப்போனது எனபதுதான்.
இன, மத வெறி உசுப்பல்களின் தணிவு( அதாவது தேசியவாதத் தின் தணிவு) இலங்கை மக்கள்
மத்தியில் வர்க்க உணர்வை வளர்ச்சி பெறவைத்தது.
குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில். தமிழர்களிடையே நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, சிங்கள மக்கள் மத்தியில் இருந்தும் குரல்கள் எழுந்தன.
மலையக மக்கள்மத்தியில் இருந்து அடிப்படை ஊதியம் தொடர்பான கோரிக்கை எழுந்ததுவும், மகாவலி
அபிவிருத்தித் திட்டம் தமிழர்களை மட்டும் வஞ்சிக்கவில்லை, சிங்களவர்களையும் வஞ்சிக்கினறது
என தமிழ், சிங்கள அமைப்புகள் கூட்டாக அறிக்கை விட்டதுவும் அனைவரும் அறிந்த சிலவிடயங்
களாகும். இன்னும் பல உண்டு. இவற்றையெல்லாம் கண்ணுற்ற, ஸ்ரீ லங்கா இராணுவத் தளபதி, இவ்வருட
ஆரம்பத்தில், இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு நிலை என பகிரங்கமாக அறிக்கை விட்டதை
நினைவில் கொள்ளவும்.
இதன் விளைவு, சிங்கள, தமிழ் மிதவாதம் இரண்டுமே ஒழிக! மஹாவம்சப் பேரகங்கார வாதத்
தீவிரவாதம் மீண்டும் ஓங்குக!! என இராணுவம் முழங்கத்தொடங்கியுள்ளது. இராணுவத்தினால் வழிநடத் தப்படும்
இவ் அரசியல் பொம்மலாட்டங்கள் மூலம் இம்முழக்கம் வெற்றிபெறவில்லையானால்,
இராணுவத்தின் துப்பாக்கிகள் முழங்கும். இராணுவம் தனது இறைமையை விட்டுக்கொடுப்பதற்கான
நிலையில் இல்லை, அதற்கான தேவையும் அதற்க்கு இல்லை. அவ்விதம் முழங்குமானால் உடனடிநிலையில்,
அல்லது முதள் கட்டநிலையில் அது தமிழ், சிங்கள மிதவாதிகளுக்கு எதிரானதாகவே இருக்கும்.
இதுதான் இன்றைய “அரசியல் நெருக்கடிக்கான” தீர்வாக இருக்கும். இத்தீர்வில் இந்தியாவின்
நேரடிப் பங்கு எதுவும் இருக்காது.
ஆனால், அமையவிருக்கும் தீர்வு தெற்காசிய இராணுவ, நிதியிய சமநிலையை(பொருளாதார
அல்ல)-Financial, தேற்காசியாவிற்கு பாதிப்பானதாக மாற்றுமானால், இந்தியாவும் சீனாவும்
மூர்க்கமாகத் தலையிடும். இதில், சீனாவின் தலையீட்டைவிட இந்தியாவின் தலையீடே அதிகமானதாகவும்
துரித பயனை எதிர்பார்த்ததாகவும் இருக்கும். அது பற்றி தெற்காசிய இராணுவ, நிதியிய
சமநிலைகளும் இலங்கை அரசியலும் எனும்
கட்டுரையில் தனியாக ஆராய்வோம்.
குறிப்பு:-திருநாவின்பேட்டி https://www.facebook.com/majura.amb/videos/1997023233669691/கேட்க முடியவில்லை. அதையோட்டிய விவாதங்களில் சிலவற்றை மட்டும் பார்த்தேன் https://www.facebook.com/annamsinthu.jeevamuraly/posts/2499589263385321.
|
முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், திருநாவை எதிர்ப்பவர்கள் திருநா இந்திய “ஆள்” எனற கருத்தை முவைக் கிறார்கள். அது உரமானதாகவுமுள்ளது. திருநாவை ஆதரிப்பவர்கள், திருநாவை எதிர்ப்பவர்களின் சித்தாந்த நிலைப்பாட்டைத்தான் எதிர்க்கிறார்களே தவிர திருநாவின் அரசியல் நிலைப்பாட்டை நியாயப் படுத்தும் எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை. திருநா இந்திய ஆதரவு நிலைப் பாட்டை எடுக்கிறார் என்பது உண்மையானால், எந்த அரசியல் களத்தில் இருந்து ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை.
|
மேற்குறிப்பிட்ட முகநூல் பதிவுக்கான பின்னூட்டலை ஒரு கட்டுரையாக விரித்துள்ளேன்.
|
No comments:
Post a Comment