மே தினச் சூளுரைகள்
பாட்டாளி வர்க்க எழுச்சிக்கான அடையாள நாளான மே தினத்தில் ” “விடியலும்” தனது
நிலைப்பாட்டை முன்வைக்கின்றது.
தத்தமது நாடுகளில் பாட்டாளிவர்க்க
சர்வாதிகார அரசை நிறுவியுள்ளவர்களுக் கும்,
நிறுவும் முயற்சியில் அரசியல் அமைப்புரீதியாக ஈடுபட்டு வருபவர்களுக்கும், அரசியல் அமைப்புரீதியாக
இல்லாவிட்டாலும் குழுக்களாகவும், தனிநபர்களாகவும் நிலவும்
பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசுகளின் செயற்பாடுகளுக்கும், அவ்வித அரசை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவாகச் செயற்பட்டு
வருபவர்களுக்கும் “விடியல்” தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தனது நேசக்கரங்களையும் நீட்டுகிறது.
தம்மை சோஷலிஸ்டுகளாகக் கூறிக்கொண்டும், தாம் அவ்விதம்
இருப்பதாகக் காட்டிக் கொண்டும் இருப்பவர்கள் ஏராளம். இன்றைய தெற்காசிய சூழலில், ஒரு சோஷலிஸ்டின் பிரதான செயற்பாடு வர்க்க சர்வாதிகார அரசின் அமைவில் பங்களிப் -பாளனாக இருக்கவேண்டும்
என்பதேயாகும். உலகின் எப்பகுதியை எடுத்துக் கொண்டா -லும் இதுதான் ஒரு சோஷலிஸ்டின்
அடிப்படைக் குணாம்சமாகும். ஆனால், இவ் அடிப்படைக் குணாம்சம்
தெற்காசியாவில் பிரதான குணாம்சமாகவும் ஆகியுள்ளது. ஆகிவருகிறதெனக் கூறினால் அது
மழப்பல்வாதமாகும்,
ஆகியுள்ளது என்பதே உண்மை -யாகும். இதனால் தான், ‘விடியல்’
தெற்காசிய அரசியலின் சிந்தாந்தக் கட்டுமானம் “ஓரியல்மைய ஐந்தியல் கோட்பாடு” எனும்
கோட்பாட்டை முன்வைத்து வருகின்றது. இங்கு மைய இயல் என்பது சோஷலிஸம் (பாட்டாளிவர்க்க இயல் எனவும் கூறலாம்); பிற ஐந்து இயல்களும்:-
1. நாடடுப் பற்றியல் (Patriotism)
2. தேசிய இயல் (Nationalism)
3. சாதிய ஒழிப்பியல் (Cast eradionism)
4. மதச் சார்பின்மை இயல் (Secularism)
5. பெண்ணியம் (Feminism)
தெற்காசியா, இவ் அறுவகைப் போராட்டத்தின் கொதிகலனாக இருப்பதை யாரும் மறுக்க
முடியாது.
இதைவிட,
சுற்றுச் சூழல் பாதுகாப்பியல் (environment
protectionism)
எனும் ஒரு கோட்பாடும் உண்டு.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் முக்கியத்துவம் மிக்கதோர் சமூக
இயக்கமாகும். ஆனால், இவ் போராட்டம் சோஷலிஸத்தை தனது மையவியலாகக் கொள்ளவேண்டுமென்பது கட்டாயமல்ல. இவ்விதம் இல்லையானால் இப்போராட்டம் வளர்தடைத் திசையை(Negative) நோக்கிச் செல்லுமென அஞ்சவேண்டியதுமில்லை. வர்க்க சார்பற்ற இயற்கை ஆர்வலர்களும், மிதவாத(Moderate)
பூர்ஷவாக்களும், இப் போராட்டத்தை வளர்திசைத்(Positive) தன்மை பெற்றதாகப் பாதுகாத்து வருகிறார்கள், தொடர்ந்தும் பாதுகாத்து
வருவார்கள். இப்போராட்டம் ஒரு அரசியல் அதிகாரவர்க்கத்தை தோற்றுவிக்காது என
நம்பலாம்.
ஆனால்,
ஏனைய ஐந்தியல் மையப் போராட்டங்களும் அவ்விதமானவை யல்ல. இவை இரட்டைத் தன்மை பெற்றவை; வீரியமிக்க வளர்திசைக்
குணாம்சங் -களும், சமூகத்தின் வளர்ச்சியை
சிதைத்து சின்னாபின்னமாக்கும் வளர் தடைக் குணாம் -சங்களும் கொண்டவை; மக்களில் பெரும்பான்மையோரை தம்மை நோக்கி ஈர்க்கும் தன்மையும் கொண்டவை; இவ் ஐந்தியல்களும் ஒன்றைவிட்டு இன்னொன்றைப் பிரிக்க முடியாதளவு நெருக்கமான
உறவு கொண்டவை; மக்களைத் தம்மை நோக்கி, ஈர்ப்பதில் இவ் ஐந்து இயல்களும் பெரும் முற்போக்கு பாத்திரம் வகித்தாலும், இவ் ஈர்ப்பு வர்க்க பேதங்களைக் கடந்ததாக இருப்பதால் இவ் ஐந்தியல்
போராட்டங்களும் வளர்தடைத் தன்மைபெறுவதுவும் துரிதமாக நடைபெறத் தொடங்குகிறது. இவ்
வளர்த்தடைத் தன்மை படிப்படியாக மக்கள் விரோத, சோஷலிஸ விரோத புதிய
அரசியல் அதிகார அடுக்கு -களைத் தோற்றுவிக்கின்றது. இவ்ஐந்தியல் போராட்டங்களும்
வளர்ததடைத் தன்மை பெறுமானால், தெற்காசிய சமூகத்தின் முற்போக்கு இயக்கங்கள்
அனைத்துமே செயலிழந் து, இச் சமூகம் பிற்போக்கியங்களின் விளைநிலமாகிவிடும். சோஷலிஸத்திற்கான போராட்டமும் கூட மந்தகதி அடைந்து விடும்.
1960களின் பின்,
அதாவது சோஷலிஸத்தின் உலகளாவிய வீழ்ச்சியின் பின், அதைத் தொடர்ந்து அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் உலகளாவிய அளவில் வெற்றிபெற் -றதன்
பின், இவ் ஐவகைப் போராட்டங்களினதும் வளர்தடைத் தன்மை துரிதமாக
வளரத்தொடங்கியுள்ளது. ஏகாதிபத்தியங்கள் இவ்வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன.
ஆப்ரிக்காவும் தெற்காசியாவுந்தான் அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாகும். இவ்
ஐந்தியல் போராட்டங்களையும் மீளவும் சோஷலிஸத்துக்கான போராட்டங்களின் நண்பர்கள்
என்ற நிலைக்கு கொணரவில்லையானால், இவ் ஐந்தியல்களும்
சமூகவிரோத வெறித்தனங்களாக மாற்றமுறும்.
1) ஆக்கிரமிப்பு எதிரர்ப்புத்
தன்மை கொண்ட நாட்டுப்பற்றியல், ஆக்கிரமிப்பியலாக, நாடுகளுக்கு இடையேயான யுத்தவியலாக மாறும்.
2) மக்கள் ஜனநாயகத்
தன்மைகொண்ட தேசிய இயல் இனவியத் தேசிய (ethno
nationalism) வெறியாக மாறும்.
3) மதவாத நிராகரிப்பு
மதசார்பின்மை இயல்.
(அ) வரட்டுத்தனமான கடவுள்
நிராகரிப்புக் கோட்பாடாக மாறலாம் (இன்றைய தி.க), அனைத்து மதங்களையும் நிராகரித்து
அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைக்கூடிய ஒரு புதிய மதவாத இயக்கம் ஒன்று
உருவாகலாம். (இவ்விதம் தோன்றிய மதவாத மதசார்பின்மை இயல் தான் இஸ்லாம்),
(ஆ) அலலது மதச் சீர்திருத்த இயக்கங்கள் உருவாகலாம். (சித்தாத்தரின்-பௌத்தம், விபுலானந்தர்,
வள்ளலார் ஆகியோர்) இவை காலப் போக்கில் புதிய மதவாதிகளை
உருவாக்கலாம்.
4) சாதிய ஒழிப்பியல் (அ)
ஒடுக்கப்பட்ட சாதியினரிடையே இருந்து ஒரு மேட்டுக்குடி உருவாகும். இம்
மேட்டுக்குடி ஒட்டுமொத்த சாதியக் கட்டுமான மேட்டுக்குடியுடன் தன்னை இணைத்துக்
கொள்ளும். இவர்கள் மெள்ளமெள்ள சாதிய ஒழிப்பினைக் கைவிட்டு சாதிய சமத்துவஇயலை
நோக்கி வேகமாக பயணிப்பார்கள். சாதிய சமத்துவ இயலின் மறுபக்கம் சாதிகள்
இருக்க -வேண்டும் என்பதாகும். பாராளுமன்ற அரசியல் மேட்டுக்குடிகளாகவர எத்தனிக்கும் (பலர் அதில் வெற்றி
பெற்றுள்ளார்கள்) அனைத்துத் தலைவர்களும் இவ்விதமானவர்களே.
ஆ) ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஓரிரு பிரிவினர் தாமே ஒடுக்கும் சாதிப்பிரிவினராக
மாறுவது.
5) பெண்ணியம்:-
முதலாளித்துவம் மனம்,
உடல், உட்பட அனைத்தையும்
வர்த்தகப் பண்டமாக்கி விடுவதில் மிகப்பெரும் வெற்றிபெற்று வருகிறது. காதலும், காமமும்,
“பெண்மையும்” இதற்கு விதிவிலக்கல்ல.
இவ் வர்த்தகத்தில் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடும் உரிமை வேண்டுமெனும்
கருத்தும் பெண்ணியத்தின் ஒரு போக்காக வளர்ந்து வருகிறது. இது தடுக்கப்படவேண்டும்.
தந்தைவழி சமூகத்தால் திணிக்கப்பட்ட விகாரக் காமத்தையும், பாலிய வன்முறைகளயையும்,
பாலிய சமத்துவமின்மையையும் சமூகத்தின் அனைத்து
அரங்குகளிலும் உடைத்தெறிவதே பெண்ணியத்தின் பிரதான குறிக்கோளாக இருந்த நிலை
தொடரவேண்டும்.
சோஷலிஸ்டுகளின் தெற்காசியச் சமூகக் கடமையாக ‘விடியல்’ பின்வரும் சூளுரைகளை முன்வைக்கின்றது.
1) சோஷலிஸ சிந்தனையையும், சோஷலிஸ சமூக சக்தியையும் வளர்த் தெடுப்ப -தையே எமது பிரதான உடனடிக் கடமையாகக்
கொண்டு செயற்படுவோம்.
2) முன்கூறிய ஐந்து இயல்களுக்கான
அணிகளுள் உள்ள சோஷலிஸட் எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக எதுவித சமரசமின்றி
கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங் -களை முன்னெடுப்போம்.
சோஷலிஸ்ட் அல்லாதவர்களுக்கு எதிராகவல்ல, சோஷலிஸ எதிர்ப்பாளர்களுக்கு
எதிராக, அனைத்துப் பிற்போக்குவாதிகளுக்கும் எதிராகவல்ல, சோஷலிஸ எதிர்பாளர் -களுக்கு எதிராக என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
3) (அ) சாதி ஒழிப்பியல், பெண்ணியம் ஆகிய இரு துறைகளிலும் சோஷலிஸ்டுகள் தமது தலைமையிலான போராட்ட இயக்கங்களை
அமைப்பதற் கானசமூக சூழல் உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்வோம்.
(ஆ) ஆனால் ஏனைய மூன்று
துறைகளிலும் அதற்கான சமூக சூழல் இன்னமும் பரலாகத் தோன்றவில்லை. ஆகவே எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதையிட்டு விடியலால் எதுவும் கூறமுடியாதுள்ளது. இம்
மூன்று அணிகளிலுமுள்ள மக்கள் ஜனநாயக அணீயினருடனும், தேசிய ஜனநாயக அணியினருடனும் அரசியல் நட்புறவை வளர்த்துக் கொள்வோம்!
No comments:
Post a Comment