தொகுப்பாசிரியர் குறிப்பு
விகார-காம வெறித்தனங்களால், தெற்காசிய சமூகம் பொது அரங்கினில் வைத்து நிர்வாணமாக் கப்பட்டு அவமானத்தால் கூனிக்குறுகி நிற்கும் நிலை உலகமறிந்தது. இவ் வெறித்தனங்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. இதைத் தடுக்கும் வல்லமை இன்றைய அதிகார அங்கங்களில் யாருக்கும் இல்லை, எதற்கும் இல்லை என்பதைக் காணக்கூடியதாய் உள்ளது. தடுக்கும் வல்லமை உள்ளவர்களாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிற மத நிறுவனங்களும் அரச நிறுவனங் களும் அரசும், அரசியல் கட்சிகளும், பண்பாட்டு அரங்கினில் செயற்படும் அரச-சார்பற்ற, அரச-சார் தொண்டு நிறுவனங்களும், கலை-இலக்கிய படைப்பாளர்களும் படைப்பு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் விகாரக் காமமெனும் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது சாமாநியனுக் -குக்கூடப் புரிகிறது.
இதுதான் யாதார்த்த நிலையானால், என்னதான் தீர்வு? சமூகம் கெட்டுச் சீரழிவதை தடுக்கவே முடியாதா? போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் உதயமாகி வருகின்றது. “மாதர் தம்மை இழிவுசெய்யும் கொடுமையைக் கொளுத்தவோம்” எனும் இத்தொகுப்பு இக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறுவதற்கான முயற்சியல்ல. மாறாக இக்கேள்விகளை ஆழமாகவும், அறிவுபூர்வமாகவும் ஆக்கிக் கொள்வதற்கு துணைபுரியும் முயற்சியேயாகும். இந்நூலின் மூலம் விகாரக் காமத்தின் காரண காரியத் தொடர்புகள்பற்றி நடைபெறும் வாத-விவாதங்களில் வாசகர்களையும் ஈடுபடுத்து -வதும், விவாதிப்பவர்கள்
இடையே தொடர்பை ஏற்படுத்துவதே நூலின் உடனடிக் குறிக்கோளாகும். இல் குறிக்கோளுக்குத் துணைபுரியக் கூடிய பல சிறு சிறு கட்டுரைகள் தொடர்ந்து எனது வலைத்தளங்களில் ஏற்றம் பெறும்.
தெற்காசிய சமூகம் பல் மதங்களையும், பல் சாதிகளையும் பல் தேசியங்களையும், பல் தேசிய இனங்களையும், பல் இனக் குழுமங்களையும், பல் மொழிகளையும் கொண்டதோர் சமூகக் கட்டுமானமாகும். இவை அனைத்துக்கும் மேலாக, பல வர்க்கங்களையும் பல்வேறு வகையிலான வர்க்க உறவுகளையும் கொண்டதோர் சமூகமாகும். இவ்வளவு வேறுபாடுகளின் மத்தியிலும் தெற்காசிய சமூகம் வளர்திசை (Possitive) மாற்றத்துக்கு உள்ளாகி வருவதை மறுக்க முடியாது. இம்மாற்றம் படிப்படியானதாகவும், ஏற்ற இறக்கத்தைக் கொண்டதாகவும், முன்னேறுதல் பின் வாங்குதல் ஆகிய இரட்டைத் தன்மை கொண்டதாகவும் வளர்ந்து வருகிறது. ஆனால் வளர்ச்சியே ஒட்டுமொத்த ஒட்டமாகவும் பொதுவிதியாகவும் உள்ளது.
இன்றைய தெற்காசிய
வளர்திசைப் போராட்டங்களுக்கான கருத்தியல்களாவன:
1) வர்க்கப் போராட்ட இயல்
2) பெண்ணியம்
3) மதசார்பின்மை இயல்
4) சாதிய விடுதலைவியல்
5) நாட்டுப் பற்றியல்
6) தேசிய இயல்
இதில் வர்க்கப்போபராட்ட இயலென்பது; அனைத்துவகைத் தொழிலாளர்கள், விவசாயிகள், சுய தொழில்களில் ஈடுபட்டிருக்கும் சிறு உற்பத்தியாளர்கள், (உடல் உழைப்பாளர், மூளை உழைப் -பாளர்), ஆகியோர், தமது பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொழில் சார்ந்த அரசியல் உரிமைகளுக் -காகவும் நடத்திவரும் போராட்டங்களுக்கான கருத்தியலாகும். இவ் இயல்தான் தெற்காசியாவின் பிற ஐவகைப் போராட்ட இயல்களுக்குமான மைய இயலாகும். இது தனக்குள் பல் தன்மை மிக்கதாக இருந்தாலும், இதுதான் மைய இயலாகும்.
இதைத்தான் ‘விடியல்’, ஒரியல்
மைய ஐந்தியல் கோட்பாடு எனும் கருத்தியலாக முன்வைக் கின்றது. இவற்றுள் வர்க்கப் போராட்ட இயல் (மைய இயல்), பெண்ணியம் (2வது இயல்), மதசார்பின்மை இயல் (3வது இயல்), சாதிய விடுதலை இயல் (4வது இயல்) ஆகிய நான்கும் நூறு பூக்கள் பூத்துக் குலுங்கும் வாசனை மிகு அழகிய பூந்தோட்டமாகும். ஆனால் நாட்டுப் பற்றியல் (5வது
இயல்), தேசியவியல் (6வது
இயல்) இவ்விரு இயல்களிலும் பூத்துக் குலுங்கும் பூக்களில் பெரும்பான்மையாவை துர்நாற்றம்மிகு விஷப்பூக்களேயாகும். இருக்கும் தோட்டத்தில் மைய இயல் ஆதிக்கத்திற்கு வரும்வரை இக்கொடிய விஷப்பூக்களை அகற்றமுயலவேண்டும்.
இத் தொடர்முயற்ச்சி, இலகுவான விடயமல்ல. அது மிகக் கடுமையான முயற்சி, ஆனால் கைவிடப்படவோ, பின்தள்ளி வைக்கபடவோ முடியாத கடமையாகும். ஆனால் ஏனைய மூன்று இயல்களையும் (பெண்ணியம், மதசார்ப்பின்மை இயல், சாதிய விடுதலை இயல்) மைய இயலைநோக்கி வளர்த்தெடுப்பதன் மூலம் மையஇயலின் சமூகவேர்களைப் பலப்படுத்திக் கொள்வது அவ்வளவு கடினமான முயற்சியல்ல. இது தெற்காசிய அரசியல் மண்ணில் இருந்து தேசியவியலினதும், நாட்டுப்பற்றியலினதும் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவும்.
இதை மந்தில்கொண்டே பெண்ணியம் தொடர்பான கருத்தியல் கட்டுமான உருவாக்க வேலை களில் ஈடுபட ‘விடியல்’ முடிவெடுத்துள்ளது. இது
தொடர்பான முதலாவது நூலே இதுவாகும்.
“தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்” எனும் இரண்டாவது தொகுப்பு நூல்
85 பக்கங்களுக்கு அதிகப்படாத இரு பாகங்களாக விரைவில் வெளிவரும். வேலைகள் முடிந்துவிட்டன. பணத்திற் காக சுணங்குகிறது. “போற்றுவோம்! போற்றுவோம்! காதலைப் போற்றுவோம்!!”, “தலித்தியமும் பெண்ணியமும்” “இஸ்லாத்தில் பெண்ணியம்”, “பௌத்தப் பெண்ணியம்” “இந்தியக் கிறிஸ்தவப் பெண்ணியம்” “சைவப் பெண்ணியம்” ஆகியவை விடியலின் அடுத்தடுத்த தொகுப்புகளாக வெளிக்கொணரப்படும். பலனுள்ள படைப்புகளயும், விமர்சனங்களையும் ஒத்துழைப் புகளையும், நன்கொடைகளையும் வேண்டி நிற்கிறோம்.
‘விடியல்’ நிதிவளமற்றதோர் அமைப்பானதால் இந்நூல் தவிர்ந்த பிற அனைத்தும் PDF Format இல் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும்.
நன்றி.
இந்நூலை வெளிக்கொணரவும், தமிழ்நாட்டின்
பெண்ணிய ஆர்வலர் அனைவரும் பங்கேற்கக் கூடியதான வெளியீட்டு விழாவை நடத்தவும்
முன்வந்த S.L.R.Publication
ற்கும்
விடியலின் நன்றிகள்.
எனது வலை முகவரிகள்:
மின் அஞ்சல்: Vidiyalillam@yahoo.co.in, Vidiyal.gowri@gmail.com
முகநூல்: Arinesaratnam Goerikanthan
யக்ஞம் முகநூல் பக்கம்:
டுவிட்டர்: gowrikanthan@arigowri
Linkden: Kanthan Gowrikanthan
வலைப்பூ: http://vidiyalgowri.blogspot.in
No comments:
Post a Comment