httஅமைப்பு முறையின்றி மார்க்சியம் படிப்பது மார்க்சியம் தெரிந்த உதிரிகளைத்தான் உருவாக்கும்!!!
இக்கூற்று இரு
விதமான மார்க்சியர்கள்பற்றிக் கூறுகின்றதா?
இருவிதமான மார்க்சியர்கள்
இருக்கமுடியாது. மார்க்சிசம் வர்க்கபேத சமூகத்தை விமர்சிப்பதற்கான ஒரு அறிவிவியல் ஆயுதம்
மட்டுமல்ல, அது வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குமானதோர் அறிவியல் ஆயுதமுமாகும்.
விமர்சிப்பது தவறல்ல, விமர்சிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடுவதுவும் தவறல்ல. அது அவனின்
உரிமை, நீ கற்றதின் படிதான் நில் என்று அவனை யாரும் அல்லது எதுவும் நிர்பந்திக்க முடியாது.
அதற்காக அவனை இழிசனனாகக் கருதமுடியாது. உதிரி பாட்டாளிவர்க்கம் எவ்விதம் இழிவானதல்லவோ,
அவ்விதமே இவர்களும் இழிவானவகள் அல்ல. அவர்கள் மார்க்ஸிஸ்ட அல்ல, அவ்வளவுதான். அவர்களின்
புத்திஜீவித்தனத்தை மார்க்சியர்கள் முடிந்தால் பயனபடுத்திக்கொள்ளலாம் அவனின் சம்மதத்துடன்.
தொழிலாளிவர்க்கத்தின்
தொலைதூர, நீடித்த, நிரந்தர சமூக-அரசியல் இலட்சியத்திற்காக தன் அர்ப்பணிப்புடனும், சுய
சிந்தனையுடனும், தன்னிச்சைத்தனத்தைக் களைந்து, அமைப்புரீதியான ஒழுங்குகளின் கீழ் செயல்படுபவனே
மார்க்சிஸ்ட் ஆகும். அமைப்புரீதியான ஒழுங்குகள் என்பது இயங்குநிலையிலுள்ள ஏதாவதோர்
மார்க்சிய அமைப்புடன் இணைந்ததாகத் தான் இருக்கவேண்டியது என்பதல்ல; ஒவ்வொரு தெற்காசிய
நாடுகளிலும் ஆகக் குறைந்தது ஐந்துக்கு மேற்பட்ட மார்க்ஸிய அமைப்புகள் உள்ள இன்றை நிலையில்,
பல பத்து தனிநபர் மார்க்ஸிஸ்டுகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந் நாடுகளின் சமதர்மப்
புரட்சி தொடர்பான ஒரு பொது நெறி உருவாகுவரை இந்த நிலை தொடரும்.ps://www.facebook.com/manokaran.karan.79/posts/1509225512581899
No comments:
Post a Comment