Saturday, 4 May 2019

சாத்தியம் இல்லாத ethno தேசியம்


சாத்தியம் இல்லாத ethno தேசியம்

------------------------------------------
எனது குறிப்பு: கட்டுரையின் தலைப்பு “சாத்தியம் இல்லாத தேசியம்” என்றே இருந்த்து. ஆனால் கட்டுரையின் எவ்விடத்திலும் ‘தேசியம்’ பற்றிய விளக்கம் இல்லை. ஆசிரியர் கருத்தில் கொண்டுள்ளது ethno தேசியத்தையே. அனைத்து இடங்களிலும் ethno தேசியம் எனும் பதத்தைப் பிரயோகித்துள்ளேன். ethno   தேசியத்தின் இயல்புகள் பற்றிய மிகச் சரியான விளக்கமுள்ள கட்டுரையாகும்.
ethno எனும் ஆங்கிலப் பதம் எதற்கு? (இங்கும் மூன்று பதங்கள் புழக்கத்தில் உள்ளன, அவையாவன ethnoethnic, ethno-centric) இனவாதத் தேசியம், அல்லது இனவியத் தேசியம் அல்லது இனவாத மையத் தேசியம் எனப் பயன்படுத்தலாமே?
தேசியர், தேசியவாதி என இருசொற்கள் உண்டு. தேசியர் நேர்மறைச் சொல்லாகும். தேசியவாதி எதிர் மறைச் சொல்லாகும். ethnoதேசியம் ஓர் எதிர்மறை/வழர்தடை அரசியல் நெறியாகும். இவ்விதம் நோக்கில் இந்நெறியைப் பின்பற்றுவோர்களை இனவியத் தேசியவாதிகள், அல்லது இனவாதத் தேசிய வாதிகள் அல்லது இனவாதமையத் தேசியவாதிகளென அழைக்கலாம். இம் மூன்றிலும் எது அதிகப் பொருத்தப் பாடானது என்பதில் தெளிவுக்கு வரமுடியவில்லை. ஆகவே ethno எனும் பதத்தையே பயன்படுத்துகிறேன்.
தேசியர்கள், ethno தேசியத்தில் இருந்து விலகியே, வெளிவந்தேயாக வேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் இக் கட்டுரை, வெளிவந்தபின் எவ் அரசியல் நெறியைப் பின்பற்றுவது என்பதையிட்டு எதுவுமே கூறவில்லை. இனித்தான் தேடவேண்டும் என்கிறார். தேசியத்தையே முற்றாக நிராகரிக்கிறாரா என்ற சந்தேகம் எழகிறது. இது கட்டுரையின் குறையாக இருந்தாலும் ethno தேசியமும், தேசியவாதமும் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டுமென்பதை இக்கட்டுரை மிகச்சரியாகவும் தெளிவாகவும் முன்வைக்கின்றது.
ஊக்கிவிக்கப்பட வேண்டியது தேசியம், முற்றாக அழிக்கப்பட வேண்டியது ethno தேசியம்.
தேசியம், ethno தேசியம் ஆகிய அரசியல் நெறிகள்பற்றியும்; தேசியர்கள், தேசியவாதிகள் ஆகிய அரசியலாளர்களையும் பற்றிய விவாதம் தொடரட்டும்……….
------------------------------------------------------------------------- 

மறந்து போவதும்ஒருவருடைய வரலாற்றைத் தவறாகப் புரிந்து கொள்வதுந் -தான் ethno தேசியத்தை உருவாக்குவதற்கு மிக அவசியமான காரணிகளாகின்றன. எனவேதான்வரலாற்று ரீதியான ஆய்வுகளில் ஏற்படும் முன்னேற்றம் ethnoதேசிய அடையாளத்திற்கு ஆபத்தாக இருக்கிறது.  – எர்னெஸ்ட் ரெனான்
பெட்டகத் தன்மையிலானதாக (modularஇருந்தாலும், குறிப்பிட்ட வரலாற்று ரீதியான -தாக இருந்தாலும்ethnoதேசியங்கள் ஒரு பொதுக்குணாம்சத்தைப் பகிர்ந்து கொள்கின் -றன. அதாவதுethnoதேசியமென்பது தான்தோன்றித்தனமான ஒரு அரசியல் வடிவமாக இருக்கின்றது. எதுவொன்றைக் காட்டிலும் தேசஎல்லைகள் பற்றிய கதையே இத்தகைய தான்தோன்றித் தனத்தை உறுதிப்டுத்துவதா க உள்ளது. ethnoதேசியமானது மேலாண்மை செய்யமுடியாதபடி ஓட்டைகளைக்கொண்டதாக ஆகிவிடுகிறது. பிரஹாம் ஷென்டல் 2005)
1. முன்னுரை
நாட்டு எல்லைகள் சேர்க்கைகளாலும் உடைப்புகளாலும் ஒன்றிணைப்புகளாலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இருப்பினும் ethnoதேசியம் எப்போதும் அதன் தான்தோன்றித்தனத்தை மூடிமறைக்க முயல்வதோடுஅதுதான் உண்மையானது என்பதுபோல் அதை மீட்டெடுக்கவும் முயல்கிகிறது. இத்தகைய தான்தோன்றித்தனத்துக்கும் உண்மைக்கும் இடையே எப்போதும் காணப்படும் பொருந்தாத் தன்மைதான் ethnoதேசத்தின் வடிவத்தை (Nation-form) ஒரு கற்பனாவாதமாக மாற்றுகிறது. இந்தக் கற்பனாவாதத்தைத் துரத்திக்கொண்டு போவதென் பதுஎப்போதுமே, அடையவே முடியாதவொரு வன்முறைச் செயல்திட்டம் மட்டுமே. நான் இக்கருத்தை வளர்த்தெடுக்கும்முன் ethnoதேசியம் செயற்படும்விதத்தை விளக்க இந்தியாவின தும் இலங்கையினதும் கதைகளைச் சொல்லவிரும்புகிறேன். இவை, ethnoதேசிய வடிவமென்பது நீடித்த பதற்றங்களுக்கும், வன்முறைகளுக்கும் மூலாதாரமாக இருப்பதைத் தொகுத்துக் கொடுக்கின்றன.
இந்தியாவிலிருந்து தொடங்குகிறேன். இது, அண்மையில் சுதந்திரம் பெற்ற தொரு நாடுஅதன் ethno தேசியத்தன்மை குறித்தும் அதற்கெதிராகச் சாத்தியப்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்தும் பதற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் கதையாகத்தான் இருக்கிறது. 1960ஆம் ஆண்டு அதாவது பிரிட்டிஷாரின் காலனியாட்சிலிருந்து சுதந்திரம் பெற்று பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு— மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில்தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவொன்றை உருவாக்க வேண்டு -மென பரிந்துரைக்கப்பட்டது. 'உணர்வுரீதியான ஒருமைப்பாட்டுக்கான குழுஎன அழைக்கப்பட்ட இக் குழுவின் முக்கியபொறுப்பு, 'தேசிய வாழ்க்கையில் உணர்வுரீதியான ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக் கவும்பலப்படுத்தவும் கூடிய முறையில் கல்வியின் பங்கு குறித்து ஆராய்வது…' (MoE 1962) என இருந்தது. இத்தகைய பொறுப்பு இந்தியத் தேசியம் என்றொன்று இன்னமும் உருவாகவில்லை என்பதை யும்அவ்வாறொன்று புத்தமைக்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்வதாகத்தான் இருக்கிறது.
சரியாகச் சொல்வதென்றால் இக்குழுவின் நோக்கம்ஒருபடித்தான (sameness) அல்லது ஒற்றைமயவாத (homogeneity) தேசியத்தை எவ்வாறு உற்பத்தி செய்வதென்ற கேள்வியைக் கொண்டதாக இருக்கிறது. இக்கேள்வி எதை வெளிப்படுத்து கிறதென்றால்இந்தியத் தேசியம் என்பது ஏற்கனவே உள்ளதுதான் என்று கூறினாலும்அது அவ்வாறல்ல எனபதை ஏற்றுக்கொள்வதாகத்தான் இருக்கிறது. ஒரு தேசியத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக -ளைக் காட்டும்போது இக்குழு இவ்வாறு முன்வைத்தது:
ethnoதேசியம் திடமான உளவியல் அடிப்படையைச் சார்ந்திருப்பதோடுசம்பந்தப்பட்ட மக்கள் ஒத்த அனுபவங்களைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அதைவிட முக்கியமாக— அவர்களுடைய அனுபவங்களை ஒத்தமுறையில் அர்த்தப்படுத்தவும் வேண்டியுள்ளது. அரசியல் மற்றும் பிற நிகழ்வுகள் வேறுபட்ட இனக் குழுமங்களுக்கு வேறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்குமானால்அவை எதிர்ப்பிற்கும் சிதைவிற்கும் மூலாதாரமாகத் தொடர்ந்து இருந்துகொண்டு இருப்பதோடு… (மேலது: 2)
ethnoதேசியவாதம்ஒத்த அனுபவங்களுக்கு அழுத்தம் கொடுப்பதோடு இவ் அனுபவங்களை வேறுபட்ட முறைகளில் அர்த்தப்படுத்துவதை வலிந்து மறுக்கிறது. இது சொல்லவரும் செய்தி மிக எளிமையா -னது: ஒன்றுபோல் சிந்தனை செய்.” வேறுவார்த்தைகளில் சொல்வதென் றால்ethnoதேசியவாத ஒழுங்கமைப்பில் வேறுபாடுகளுக்கு இடமேது -மில்லை என்பதுதான். இதற்குஇக்குழு தேசிய கீதம் எவ்வாறு பாடப்படவேண்டும் என்று முன்வைத்ததைச் ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 'தேசிய கீதம் பாடப்படும் முறையில் எத்தகைய வேறுபாடுகளையும் அனுமதிக்க முடியாதுஎன்று கோரும் இக்குழு, 'இது பாடப்படும் முறையில் வேறுபாடுகளற்று இருப்பதற்கு… தேசிய கீதத்தை இசைக் கருவிகளைக் கொண்டு வாசிப்பதாக இருந்தாலும்பாடலாகப் பாடுவதாக இருந்தாலும் அகில இந்திய வானொலி நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் அடிப்படையாகக் கொள்ளவேண்டும் (மேலது:73என்ற ஆலோசனையை முன்வைத்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்ஒருபடித்தானதன்மை தான் ethnoதேசிய வாதம் தேசியவாதத்தின் மூலாதாரமாக முன்வைக்கப்படுகிறது.

ஒருபடித்தான தன்மையும் ஒற்றைமயவாதப் பண்பும்தான் ethnoதேசிய வாதத்தின் மூலாதாரமாகவும் சாராம்சமாகவும் இருக்க முடியுமென்பதற்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டியுள்ள -தால்ஒரு ethnoதேச உருவாக்கத்தில் வேறுபாடுகள் குறித்த பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் வென்றெடுக்க வேண்டிய பிரச்சினைகளாக இக்குழு பார்க்க வேண்டியுள்ளது. இதனால் தான்எல்லா அடையாளங்களும் அண்மையில் தோன்றிய இந்துவத் தேசியத்திற்குப் (ethnoதேசியவாதம்)பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டன. அதாவது  பகுதிகளைச் சார்ந்த அடையாளம் வட்டார வாதமென்றும்சாதி சார்ந்த அடையாளம் சாதியவாதமென் -றும்மதஞ்சார்ந்த அடையாளம் மதவாதமென்றும் அர்த்தப் படுத்தப்பட்டன. இத்தகைய வேறுபட்ட அடையாளங்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதாவதுethno தேசிய வாத அடையாளத்தை, இந்தியநாட்டின் ஒரு பகுதியினரின் அடையாளத் தைக் கொண்டு உடைத்துப் பார்க்க முயல்கிறேன்.

தமிழர்களில் ஒரு பகுதியினரின் பார்வை
தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உணர்வுரீதியான ஒருமைப்பாடுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில்தென்னகத்தில் தமிழ் பேசுபவர்களில் ஒரு பகுதியினர் வேறுவிதமான அரசியல் மொழியைப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள்மையநீரோட்ட ethnoதேசியவாதிகள்  விரும்பியதைப் -போல் இந்தியாவை அணுக மறுத்ததோடுதிராவிட நாடடென்ற தமது சொந்தத் ethnoதேசியத்தில் தமது  எதிர்காலத்தை வேண்டிநின்றார்கள். இவ்வாறு தனித்த அடையாளமாக தென்னிந்தியா கோரியதை ஏற்க மறுத்த இக் குழு, இந்தியாவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை இணைப்பதற்கு சாத்தியப்பட்ட சில கொண்டு-கொடுத்தல்களைக் கடந்த காலங்களில் முன்வைத்தது.
இன்று வரையிலும் தென்னக முனிவராகவே பார்க்கப்படும் அகத்தியரின் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இவர் வடக்கிலிருந்து விந்திய மலையைக் கடந்து தென்னகத்துக்குச் சென்றவர் என்றாலும்அவர் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பவேயில்லை… வடக்குக் காடுகளில் உள்ள ஆசிரமங்களில்தான் முதன்முதலாக உபநிஷத்துகள் உச்சரிக்கப்பட்டன என்றாலும்வேதத் தத்துவம் அதன் படைப்பூக்கமிக்க ஆழமான பார்வைகளுக்கு கேரளாவில் தோன்றிய சங்கராச்சாரியாருக்குத்தான் கடமைப்பட்டிருக்கிறது. அதுபோலவேஇராமன் மற்றும் கிருஷ்ணன் நினைவுகளோடு தொடர்புடைய அயோத்தியாமதுராபிருந்தாவன் போன்றவை வடக்கிலுள்ள புனிதத் தலங்களாகவே இருக்கின்றன. இருந்தும், தெற்கின் ஊடாக இலங்கைசென்ற இராமனின் பயணம் ஒரு இந்துவின் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துள்ள -தென்பதோடுகாஞ்சி, இராமேஸ்வரம் போன்ற புனிதத் தலங்களும் இதே அளவிற்கு முக்கியத்துவம் கொண்டவைதான் என்பதையெல்லாம் அறியாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? (மேலது: 8)
வரலாறும் தொன்மமும் (இங்கு தொன்மமே வரலாறாகின்றது) இத்தகைய முறையில் கலக்கப்பட்டு முன்வைக்கப்படுவதை, ஒரு வாதத்திற்கு உண்மைதானென்று ஏற்றுக்கொண்டாலும்துரதிர்ஷ்டவசமாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவோ அல்லது இந்திய  ethnoதேசியவாதமோ எதிர்பார்ப்பதுபோல் தமிழர்களில் ஒருசாரார் இத்தகைய முறையில் அதனை உணரவோ அர்த்தப்படுத்தவோ இல்லை. உதாரணத்திற்குஇராமனின் தெற்குநோக்கிய பயணத்தை எடுத்துக்கொள்வோம். தென்னகம் முற்றிலும் வேறுவிதமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. செலிக் ஹாரிசன் நமக்கு நினைவூட்டுவதுபோல்,
திராவிடமும் இந்துத் தொன்மத்தின் சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒன்றிணைக்கும் சக்திபடைத்ததாக மிகவும் பெருமையுடன் போற்றப்பட்ட அதே இராமாயணம்தான் ஆரியத்தின் அறமற்ற தன்மையை நிரூபணம் செய்யக்கூடிய அடிப்படைப் பிரதியாக முன்வைக்கப்பட்டது. திராவிடப் பிரச்சாரத்தில்சீதையை அபகரித்துச்சென்ற காட்டுவாசியான இராவணனை வீழ்த்துவதற்காக இராமன் மேற்கொண்ட தெற்குநோக்கிய படையெடுப்புஉருவக ரீதியாக இந்தியப் பூர்வகுடிகளான திராவிடத்தின் மீதான ஆரியப் படையெடுப்பே தவிர வேறெதுவுமில்லை எனப் பார்க்கப்பட்டது. பார்ப்பனரல்லாத பல தமிழர்களுக்குதென்னகத்துக் காடுகளில் இராமன் எதிர்கொண்ட அரக்கர்படை வேறு யாருமல்லதிராவிடர்கள்தான். இப்படியாக இக் காவியம் முழுக்க முழுக்க இனரீதியான அவமதிப்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. (ஹாரிசன் 1960)
தெற்கு வடக்கு இடையேயான தோழமை உறவென எதைக்கொண்டு இக்குழு நிலைநிறுத்த முயன்றதோ, அவ்வுறவுஅதே கடந்தகாலம் பற்றிய வேறுவிதமான வாசிப்புகளை மௌனமாக்குவதன் வழியாகத்தான் சாத்தியப்படுகிறது. மௌனமாக்குவதுதற்காலிகமாக ஒரு ethnoதேசியத்தை மீட்டெடுக்க உதவலாம். ஆனால், அழுத்தப்பட்டது எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என்பதால்இது எப்போதும் பதற்றத்துக்கான மூலாதாரமாக இருக்கிறது.

விலக்கி வைக்கும் கருத்தமைவுகள்

வடக்கு-தெற்கு ஒருமைப்பாடுபற்றி இக்குழு முன்வைப்பதில் மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒருமைப்பாடுபற்றி இக்குழு கோருவதையெல்லாம் மீறிஇக் கதை பல்வேறு பகுதிகளுக்கும் இடையே ஒரு சமனற்ற நிலையை உருவாக்குவதோடுவிலக்கி வைக்கும் கருத்தமைவைக் கொண்டதாகவும் இருக்கின்றது. பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஒருமைப்பாடு என்பதற்கான மாதிரி வடிவங்கள் எல்லாம் அகத்தியர்உபநிஷத்துகள்இராமன்—  வடக்கிலிருந்துதான் வருகின்றன. தென்னகத்தின் பங்கு என்பது இதை ஏற்றுக்கொண்டு தன்வயப்படுத்திக்கொள்வதாக மட்டுமே இருக்கிறது. முதல் பார்வையில் கொண்டு-கொடுத்தல்பரிமாற்றங்கள்போல் தோன்றுவது உண்மையில் ஒருவழிப் பாதையில் வருவதாகத்தான் இருக்கிறது. இப்படியாகஒருமைப்பாட்டின் கதை என்று கொடுக்கப்படுவது பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான சமனற்ற நிலையைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன. மீண்டும்இக் கதைகளையெல்லாம் 'அறியாதவர்கள் யாராவது இருக்க முடியுமா?' என்று முன்வைக்கப் -படுவதன் மூலமாக அனைவருக்கும் பொதுவானதாகக் கோரப்படுவதுமிக இயல்பாக 'ஒரு இந்துவின் நினைவுகள்என்று அழைக்கப்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
பல்வேறுபகுதிகள் பல்வேறு மதஞ்சார்ந்து இருக்கும்போது (இப்படித்தான் இருந்தனஇப்போதும் இருக்கின்றன) இந்து அல்லாதவர்களுக்கு இந்த ஒருமைப்பாட்டில் எத்தகைய பங்கும் இருக்கப்போவதில்லை. இவர்கள் நிச்சயமாக வேறுவிதமான நினைவுகளைச் சுமந்துகொண்டிருப்பார்கள்இவ் நினைவுகள் அங்கீகரிக்க ப்படுவதற் -குத் தகுதியற்றவையாக நடத்தப்படுகின்றன. வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால்ஒருமைப்பாடென்று இங்கு கோரப்படுவது உண்மையில் விலக்கிவைப்பதாகிறது. எல்லாவற்றையும் மீறிஉணர்வுரீதியான ஒருமைப்பாட்டுக்கான குழு பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஒருமைப்பாடென்ற கதையை இவ்விதந்தான் முன்வைக்க முடிந்தது.

  ethnoதேசஉருவாக்கச் செயல்(Nation-work)  வேலைக்கு ஆகாதுபோல் தெரிகிறது.

எவ்விதமானாலும்பல்வேறு பகுதிகளுக்கும் இடையேயான ஒருமைப்பாடெனக் கோரப்படுவதுசமகால யதார்த்தங்களோடு ஒத்துப்போவதில்லை. இக்குழு எதிர்கொண்டதொரு சங்கடம் என்னவென்றால்இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மொழிரீதியான வேறுபாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான். அதாவது, 'தேசியப் பெருமைதேசிய உணர்வு ஆகிய இரண்டிற்குமாக எந்த இந்திய மொழி இந்த நிலத்தின் மொழியாகவும்கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான மொழியாகவும்இந்தியக் கூட்டமைப்பில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் கற்றுத்தரத் தகுதியுடைய மொழியாகவும் இருக்கிறதென்ற கேள்விக்கு இன்னமும் விடை காணமுடியாமல் இருக்கிறது' (MoE, முன்னர் குறிப்பிட்ட அறிக்கை:49). 'இந்திய நிலத்தின் மொழிஎன்பதுதான் இங்கு திறவுச்சொல். இவ்வார்த்தை ethnoதேசியத்தின் உத்தேசமான ஒருபடித்தன்மையை வலியுறுத்துவதோடு ஒற்றைமயவாதத்திற்கான ஏக்கத்தையும் உறுதிப்படுத்துகிறது. இக் குழு பின்வருமாறு கோருகிறது:
பெருவாரியான நம் மக்களால் இந்தி மொழி பேசப்படுகிறது என்பதோடுஇந்தியாவில் பேசப்படும் பிற எல்லா மொழிகளோடும் இந்தி நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது போலவேஇந்த மொழிகளும் இந்தியோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன. ஆகவேஇந்தியை இந்தியாவின் பொது மொழியாகத் தெரிவுசெய்வது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு பொது மொழியாக இருப்பதோடு மொத்த நாட்டையும் ஒன்றிணைப்பதற்கு வழிவகுக்கக் கூடியதாகவும் இருக்கும். (மேலது: 49-50).
எம் மொழி தேசியமொழியாக இருக்கவேண்டுமென்ற கேள்வியை இக்குழு பெரும்பான்மை என்ற விதியின் மூலம் மிக அவசரமான ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. என்றாலும்இதன் தொடர்ச்சியாக  இன்னுமதிக வேலைகள் ethnoதேசியத்ததிற்கு இருக்கவே செய்தன. அதாவது 'பிரச்சினையின் மையம் என்னவென்றால்இந்திபேசாத பகுதிகளில் இந்திகற்பதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்பதுதான்…' (மேலது: 52) என இக்குழு, ஒப்புக்கொள்கிறது. ethnoதேசியச்செயல்' வேலைக்கு ஆகாதுபோல் தெரிகிறது.
ethnoதேசியத்தின் ஒருபடித்தான(sameness தன்மைக்கான தேடல் பற்றியும்அது உருவாக்கும் நீடித்த பதற்றம் பற்றியும் விவரித்தேன். இப் பதற்றத்தினால் நேரக்கூடிய விளைவுகளின் பக்கம் செல்வோம். இலங்கையை உதாரணமாகக் கொள்வோம்.

பதற்றத்தின் விளைவுகள்

1981, மே 31ஆம் தேதி இரவு ஸ்ரீ லங்காவின் வட பகுதியில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட யாழ்ப்பாண நகரம் மிகமோசமானதிட்டமிட்ட தேசியஇன அழித்தொழிப்புக்குச் சாட்சியாகியது. யாழ்ப்பாணத்தின் பெருமையாக இருந்த யாழ் பொது நூலகம் ஸ்ரீ லங்கா போலீஸ் படையினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அடுத்தநாள் காலை நூலகத்தைப் பார்க்கச் சென்ற பலரில் எ.வி.ஜே. சந்திரகாந்தனும் ஒருவர். அவர் பெரும் துயரத்தோடு இவ்வாறு எழுதுகிறார்:
1981,ஜூன் முதல் தேதி காலை எட்டு மணியளவில் நூலக வளாகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் எல்லா வயதினர்பல்வேறு தொழில் புரிபவர்கள் என்று எல்லாத் தமிழர்களும்— ஒன்றுகூடி  விலைமதிப்பில்லாச் செல்வத்தை இரவு முழுவதும் தீ நாக்குகள் விழுங்கியதன் அறிகுறியாகக் கனன்று கொண்டிருப்பதையும் புகை மூட்டத்தையும் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது போலவே நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். நூலகத்தைத் தீயிட்டு எரித்த சிங்களப் போலீஸ்காரர்கள் சில நூறடி தள்ளிஎரிக்கப்பட்ட நூலகத்தைப் பார்த்ததாற் போல் இருந்த யாழ் மைதானத்தில் ஒரு கூரையின்கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். (சந்திரகாந்தன் 2001)
இந்த மோசமான நிகழ்வின் முக்கியத்துவம் பக்கம் திரும்பும் சந்திரகாந்தன் இவ்வாறு தொடர்கிறார்:
இது தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையாக இருந்தாலும்இந் நூலகம் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டிலும் அரிதான புத்தகங்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்தது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக சிங்களர்தமிழர்இஸ்லாமியர் என்று எல்லோரும் படிப்பதற்கும் ஆய்வுசெய்வதற்கும் பொதுவான தலமாகவும் திகழ்ந்துவந்தது. இப்படியாக இனங்களுக்கு இடையே முன்னர் நிலவிவந்த சகிப்புத்தன்மையின் அற்புதமான குறியீடாக இருந்துவந்த இந் நூலகத்தின் மதில்களுக்குள் பௌத்த-சிங்களத் தீவிரத்தன்மை கொண்ட அநகாரிக்க தர்மபாலாவும்இந்து-தமிழ் சீர்திருத்தவாதி ஸ்ரீஸ்ரீ ஆறுமுக நாவலரும் அருகருகே இணக்கத்தோடு வாழ்ந்து வந்தார்கள்அவர்களுடைய எழுத்துகளின் ஊடாக. மிக நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த தேக்குமரப் புத்தக அலமாரிகளில் எழுத்தாளர்கள்அரசியல் தலைவர்கள்மத மறுமலர்ச்சியாளர்கள்சட்ட வல்லுனர்கள்தமிழ்க் கூட்டமைப்புவாதிகள்சிங்களத் தேசியவாதிகள் என்று தங்களுடைய காலத்தில் மிகத் தீவிரமாகக் கருத்துமோதல் கொண்டவர்கள் எல்லோரும் நிச்சலமான அமைதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். சகவாழ்வுக்கான நம்பிக்கையென்று ஏதேனும் கொஞ்சமாவது இருக்குமானால் அதுவும் இப்போது இவர்களோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகிவிட்டது. (மேலது: 160)
சந்திரகாந்தன் முன்வைக்கும் சில குறிப்பிட்ட தகவல்களையும் தொனியையும் ஒருவர் ஏற்க மறுக்கலாம். உதாரணத்திற்குஆறுமுக நாவலரை சமூக சீர்திருத்தவாதி என எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தில்லை. சிலர் அவரைச் சைவக் குறுங்குழுவாதியாகவும் பார்க்கலாம். இருந்தும்சந்திரகாந்தனின் விவரணையிலுள்ள உருவகரீதியான நோக்கத்தையும் முக்கியத்துவத்- தையும் எவராலும் நிராகரிக்க முடியாது. நூலகம் என்பது பன்முகத்தன்மை கொண்டதோர் இடம். அது கடந்த காலங்களிலிருந்து பல குரல்களையும் எதிர்காலம் குறித்துப் பல பார்வைகளையும் தன்னுள் கொண்டிருக்குமொரு இடமாகும். இத்தகைய வேறுபாடுகள் 'ஒன்றுபோல்என்பதற்குப் பதிலாக தேசத்தின் 'பன்முகத்தன்மையைகொண்டாடுகிறது. இதனாலேயே, நூலகஎரிப்பு, தேசத்தின் பதற்றத் -துக்கான ஒரு மூலாதாரமாகின்றது. ஒரு ethnoதேசியம், ஒற்றைமயவாதத் தன்மையை அடைவதற்குஅனகாரிக்கா தர்மபாலா போன்ற அதன் கூட்டாளிகள் ஆறுமுக நாவலரோடு இணைந்திருக்க விரும்பினால் அவரையும் சேர்த்துப் பலி கொடுக்க எவ்விதத் தயக்கத்தையும் காட்டாது.
2ethnoதேசியவாதத்தின் இரண்டக நிலையின் மையம்
இவ்விரு கதைகளும்ஒற்றைமயவாதத்திற்கும், (homogeneity)  மேலெழுந்துவரும் பன்மயவாதத்திற்கும் இடையேயான முரண்பாடுகள்தான் ethnoதேசியவாதத்தின் இரண்டக(???????) நிலையின் மையமாகவுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இத் தேசியவாதமானது இவ் இரண்டக நிலையிலிருந்து என்றைக்குமே வெளியேறமுடியாத தவிர்க்கவொண்ணா சிக்கல்பற்றியும்வன்முறையைப் பிரயோகிக்கும் அதன் உள்ளார்ந்த பண்பு பற்றியும் சற்று சிந்திப்போம்`
 உலகளாவியதன்மை குறித்து தேசியம் கோருவதையெல்லாம் மீறிethnoதேசிய உருவாக்கமென்பது அடிப்படையில் வேறொன்றேயாகும். அதாவதுethnoதேசிய உருவாக்கச் செயலென்பது மொத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல் முகமூடி அணிந்துவரும், அதற்கெதிரானதோர் பகுதிதான்.
இந்தியாவில்இந்தி பேசும் பகுதிகள்தான் ethnoதேசியவாதத்தின் சாராம்சமாக முன்வைக்கப்படுகின்றன. அதனால் இந்திதான் 'இந்த நிலத்தின்மொழியென்றும், 'தேசியப் பெருமை மற்றும் தேசிய உணர்வுகொண்ட மொழியென்றும் கோரப்படுகிறது. இலங்கை விஷயத்திலும் அதேதான். கார்த்திகேசு சிவத்தம்பி சிங்கள 'ஒற்றையதிகாரவாதிகள்' (Unitariansபற்றி இவ்வாறு எழுதுகிறார்:
மற்ற சமூகங்களை வரலாற்றுரீதியாக மறுதலிப்பதோடு மட்டுமல்லாமல்இலங்கையின் கலாச்சாரம் என்று வரும்போது பிற சமூகமக்களையும் அவர்களுடைய கலாச்சாரத்தையும் அவர்களுடைய வாழ்க் -கை முறைகளையும் சேர்த்தே மறுதலிக்கிறார்கள். இலங்கையின் இசைநடனம்இலக்கியம் என்று வரும்போது அது சிங்கள நடனம் அல்லது இலக்கியமாகத்தான் இருக்கிறதேயொழிய தமிழ் இசைதமிழ் நடனம்தமிழ் இலக்கியம் குறித்து இங்கு எக் குறிப்புகளும் இருப்பதில்லை. (சிவத்தம்பி 2005: xx)
எல்லோரும் அறிந்திருப்பது போன்றுந்தியாவிற்கு இந்தி என்றும்இலங்கைக்கு சிங்களம் என்றும் முன்நிறுத்தப்படுவது எதிர்க்கப்பட்டனஎதிர்க்கப்படுகின்றன.
ஒரு பகுதிமட்டும் முழுமைக்குமானதாக உருமாற்றம் கொள்வதுபல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. எர்னஸ்டோ லக்லாவ் நமக்கு நினைவூட்டுவதுபோல்,க்
ஜனநாயகம் என்றொன்று சாத்தியப்படுகிறது என்றால் அதற்கான காரணம் முழுமையென்பதற்கு உடல் என்றொன்று, உள்ளடக்கம் என்றொன்று கிடையாது என்பதனால்தான். மாறாகபல்வேறு இனக்குழுமங்கள் தத்தமது தனித்துவத்தைத் தற்காலிகமாகவேனும் முழுமைக்குமானதாகப் பிரதிநிதித்துவப்படுத்த தமக்குள்ளாக மோதிக்கொள்கிறார்கள்” (லக்லாவ் 1996: 35).
முழுமைக்குமான பாத்திரத்தை ஏற்பதற்காகப் பல்வேறு இனவாதத் தேசிய அடையாளங்கள் தொடர்ந்து தமக்குள் மோதிக் கொள்வதும் போட்டிபோட்டுக் கொள்வதுவுந்தான் ஜனநாயகத்தின் சாரமாக இருக்கிறது. இது ethnoதேசியவாத வடிவத்திற்குப் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏனெனில்நாம் முன்னரே பார்த்ததுபோன்றுethnoதேசியவாத வடிவமானது ஒருபடித்தான sameness தன்மையையும் ஒற்றைமயவாதத் homogeneity தன்மையையும் கொண்டிருப்பதற்கான அவாவைக் கொண்டதாக இருக்கிறது. தேசத்தின் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படாத அடையாளங்கள்தம்மைத் தீர்க்கமாக முன்னிறுத்தும்போது பிற ethnoதேசிய வடிவம் எதிர்கொள்ளும் பதற்றத்தை கார்த்திகேசு சிவத்தம்பிசிந்திப்பதுபோல் கேட்கிறார்: 'ஒருவேளை அவர்கள், தமிழர்கள் எல்லோரும் சிங்களர்களாக மாற வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் போலும்.'
கா.சிவத்தம்பி சொல்வது சரிதான். ஸ்ரீ லங்கா அரசு ஓரளவிற்கு இதில் வெற்றிபெற்றுள்ளது. உதாரணத்திற்கு1983இல், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையிலிருந்து உயிர்தப்பி நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்த கமலாவின் அனுபவத்தை எடுத்துக்கொள்வோம்:
நியூஸிலாந்துக் கடையொன்றில் கமலாவின் மகள் அவரை அம்மா என்று அழைத்தபோதுஉடனடியாக அவளுடைய சகோதரன், “நான் வீட்டிற்கு வெளியே அம்மாவென்று அழைக்கக்கூடாது என்றும் மம்மி என்றுதான் அழைக்கவேண்டுமெனவும் சொல்லியிருக்கிறேன் அல்லவா?” எனக் கடிந்துகொண்டார். இப்படியாக அவர் தமிழராக இருப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக 'மம்மிஎன்ற சிங்கள வார்த்தையை உபயோகிக்க விரும்புகிறார்.2
வன்முறை மீதான அச்சவுணர்வுதான் கமலாவின் குடும்பத்தாரை தமிழ் வழிமுறைகளைப் பின்பற்றா- ததற்குகுறிப்பாக பொதுஇடங்களில்காரணமாகி இருக்கின்றது. சிங்களத் தன்மைகளைப் பின்பற்று -வதான பாவனைசிங்களத் தன்மையை ஏற்றுக்கொள்வது என்பதைக் காட்டிலும் தமிழ்த் தன்மைகளை நிலைநாட்டுவதாகத்தான் அர்த்தமாகிறது. இப்படியாக ஒற்றைமயவாத (homogeneity) இனவாதத் தேசியத்தின் மீதான கற்பனாவாத அவாவன்முறையூடாகக்கூட நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இது ethnoதேசியத்தை எப்போதுமே நீடித்த பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. வில்லியம் கனோலி மிக அற்புதமாகச் சொல்லியிருப்பதுபோல், '
ethnoதேசியவாதத் தேசியம் எப்போதும் தோல்வியின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருக்கிறது.' (கனோலி 1999: 90)

இடைவிடாத வலியுறுத்தல்         

ethnoதேசியம் எப்போதும் தோல்வியின் விளிம்பிலேயே இருப்பதனால்இது வலுக்கட்டாயமாகத்தான் தன்னை நிலைநாட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. இடைவிடாத இச் செயல்பாட்டிற்குதேசிய அடையாளம் அல்லாத வேறொரு அடையாளமும் தேவைப்படுகின்றது என்பதுதான் இங்கு நகைமுரண். அதாவதுமற்றமையாக்கப்படுவதற்குத் தகுதிபடைத்த அடையாளங்கள் அதற்குத் தேவைப்படுகின்றன. ஒரு தேசியமாகத் தனது இருப்பிற்கு எத்தனிக்கும்போதுஇந்திய இனவாதத் தேசியத்திற்கு அதன் மற்றமையாக இஸ்லாமியர்களும், சிங்கள இனவாதத் தேசியத்திற்கு அதன் மற்றமையாகத் தமிழர்களும் தேவைப்படுகிறார்கள். பிரித்தெடுக்கமுடியாதபடி பிற அடையாளங்களோடு பிணைக்கப் பட்டிருந்தாலும் எப்போதும் நழுவிக்கொண்டேயிருக்கும் ஒற்றைமயவாதம் (homogeneityமீதான ethnoதேசிய வடிவம் அதன் ஒற்றைமயத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு இருவிதங்களில் குறுக்கீடு செய்கிறது.
இக்குழு இவ்வாறு எழுதுகிறது:
இந்தி பேசாத மக்கள் தமது தனிப்பட்ட நலன்களைப் பின்னுக்குத் தள்ளிபொது நலன்களுக்கு முக்கியத்துவம் தர முன்வருவது நம்மை நெகிழ வைப்பதாக இருக்கிறது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு ஒப்பிடும்போது இது இவர்களுக்குப் பாதகமாகத்தான் உள்ளதென்றாலும்இந்தியை அதிகாரப்பூர்வமான மொழியாக இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். (MoE 1962: 51-52)
1983, ஆகஸ்டில் ஸ்ரீ லங்காவின் அரசியல் சாசனத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டுவந்த 6வது திருத்தமும் இசைவாக்குதலுக்கு ஒத்ததாகத்தான் இருக்கிறது. இத்திருத்தம்இலங்கை நாடாளுமன்றத்திலும் பிற அரசுத் துறைகளிலும் உள்ள தமிழர்கள் 'ஒற்றையதிகார இலங்கை அரசைஏற்றுக்கொள்வதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. (வில்சன் 2000: 112)
சுருக்கமாகச் சொல்வதென்றால்ethnoதேசிய ஒழுங்கமைப்பில் இந்தியத் தமிழர்கள் இந்தி பேசுகிறவர்களாக மாறவேண்டும்இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களாக மாறவேண்டும். இசைவாக்குதல் என்ற இந்த யுக்தியின் வெற்றியானதுஅடிப்படையில் வெறுப்பும் தேசிய வன்முறையும் சார்ந்துமே இருக்கின்றது. வில்லியம் கனோலி சொல்வது சரியாகத்தான் இருக்கிறது:
ஒரு பக்கத்திலிருந்து பார்ப்பதற்கு இசைவுத்தன்மையை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகள்போல் தெரிவதுமறுபக்கத்திலிருந்து பார்க்கும்போது வலியின் ஊடாகவே இச் சகஜமாக்கும் யுக்தி எப்போதும் முன்னெடுக்கவும்முறைப்படுத்தவும் படுகிறது . (கனோலிமுன்னர் குறிப்பிட்ட நூல்: 14)
இசைவாக்குதல் யுக்தி வேலைசெய்ய மறுக்கும்போது ethnoதேசியம் தனது இறையாண்மைத் தோற்றத் -தைக்கொண்டு தேசிய ஒழுங்கமைப்புக்குப் பொருந்திப் போகாதவர்களெனத் தான் கருதுகிறவர்களை யெல்லாம் தண்டிக்கும் விதமாக வன்முறையைப் பிரயோகிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான ஸ்ரீ லங்கா அரசின் வன்முறைகளும்வடகிழக்கு மற்றும் காஷ்மீருக்கு எதிரான இந்திய அரசின் வன்முறைகளும் நன்கு ஆவணப் -படுத்தப்பட்ட உதாரணங்களாக இருக்கின்றன.

ethnoதேசிய வடிவத்தின் 'இயற்கையான தன்மை

இங்கு முக்கியமானது என்னவென்றால்அரசியல் அமைப்பாக்கத்தில் தேசிய வடிவம் 'இயற்கையானதுஎன்று ஸ்தூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால்இத்தகைய வன்முறைகள் வன்முறைகளாகவே கருதப்படுவதில்லை. 2007லான இலங்கை 'சண்டே டைம்ஸ்பத்திரிகையின் தலையங்கம் இதற்கான சான்றாகும். விடுதலைப் புலிகள் கொழும்பு விமான நிலையத்தின்மீது வான்தாக்குதல் நடத்தியதைப் பற்றிய தலையங்கத்தில், 'இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று அதாவது 1942,ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த வான்தாக் -குதலுக்குப் பிறகுசென்ற ஞாயிறு இரவு நடந்த வான் தாக்குதலைப்போல் வேறுஎப்போதும் இலங்கையில் நடந்ததேயில்லை'யென எழுதியது. 'சண்டே டைம்ஸ்', இனவாதத் தேசியத்தின் ஆகச் சிறந்த பாரம்பரியத்தில் வரலாற்றைத் தவறாகப் பெற்றுள்ளது. அதுதமிழர்கள் நிறைந்த கிழக்கு மாகாணம் தொடர்ந்து குண்டு வீச்சுக -ளுக்கு உள்ளாகி வந்ததைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அரசின் வன்முறைகள் சகஜமானது எனப் பார்க்கப்படுவதால்உண்மையான தேசமாக வேறொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் இவர்களின் கரிசனைக்கு உரியனவாக இருப்பதில்லை.
சுருக்கமாகச் சொல்வதென்றால்இனவாதத் தேசியத்தின் நகைமுரண் பண்பானது அதாவது ஒற்றைமய -வாதத்தின்(homogeneityமீதான அதன் அவாவும்அதன் தனித்துவத்தை வெளிப்படுத் -துவதற்கு வேறுபாட்டைக் கொண்டிருக்கவேண்டிய நிர்பந்தமும்— வேறுவழியில்லாமல் பழிவாங்கும் பாதை தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாததாக்குகிறது. மிகச்சரியாக இங்குதான் அர்ஜுன் அப்பாதுரை 'சிறிய எண்ணிக்கைகளின் அச்சம்என்று குறிப்பிடுவது முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பான்மை-சிறுபான்மை பற்றிய கேள்வியை விவாதிக்கும் விதமாக அர்ஜுன் அப்பாதுரை இவ்வாறு எழுதுகிறார்:
மிகச்சரியாகச் சொல்வதென்றால், பெரும்பான்மையினர் எப்போது வேட்டைக்காரர்களாகவும் இனஅழிப்பாளர்களாகவும் மாறுகிறார்கள் என்றால்பெரும்பானமையினரின் நிலைப்பாட்டிற்கும் கறை -படியாத ethnoதேசிய முழுமையென்ற தொடுவானத்திற்கும் அதாவது கலப்பு ஏதுமில்லாத ethnoதேசியக் கலாச்சார பார்வைக்கும்இடையே காணப்படும் இடைவெளியைச் சிறுபான்மையினர் நினைவூட்டும்போதுதான். இதுதான் பெரும்பான்மையினர் சிறுபான்மை -யினருக்கு எதிராக வலிப்பு வந்ததுபோல் வன்முறையைப் பிரயோகிக்கக் காரணமாகின்றது… (அப்பாதுரை 2006: 8)
இவ்வாறுசிறுபான்மையினர் உருவாக்கும் அச்சம் என்பதைக் காட்டிலும் தேசிய வெளியில் அவர்களின் இருப்பே பிரச்சினைக்குரிய தொன்றாக மாறிவிடுகிறது.
இருந்தும், இனஅழிப்பினால் ஒரு முழுமையான கறைபடியாத ethnoதேசியத்தை உருவாக்கிவிட முடியாது. ஏனெனில்ethnoதேசியத்தைக் கறைபடுத்தும் அடையாளங்கள் ஒருபோதும் ஏற்கனவே அறியப்பட்டதொன்றாக இருப்பதில்லை. அவை 'உருப்பெற்றுக் கொண்டிருக்கும்தளத்தைச் சார்ந்ததாகவும்இன்னும் 'உருப்பெறாததளத்தைச் சார்ந்ததாகவும் இருக்கின்றன. இவை திடீரென்று வானிலிருந்து தோன்றுவதுபோல் தோன்றுகின்றன. இந்தியாவின் நகர்ப்புற இளைஞர்கள் காதலர்தினம் கொண்டாடுவது போன்ற சிறுசிறுமுன்னெடுப்புகள்கூட ethnoதேசியத்தை பதற்றத்திற்கும் வன்முறைக் -கும் உள்ளாக்கக்கூடிய மூலாதாரங்களாக மாறிவிடுகின்றன. காதலர்தினம் போன்றவற்றைக் கொண்டாடுவதுஇந்தியாவின் ethnoதேசியக் கலாச்சாரமென அழைக்கப்படும் இந்துத்துவா கலாச்சாரத் -துக்கு அந்நியமானதாக இருக்கின்றதென இந்துத்துவா தேசியவாதிகள் வாதிடு -கிறார்கள். அந்நியத் தன்மை தமது தேசியத்தை அசுத்தப்படுத்துவதோடு முழுமையாவதற்குத் தடையாகவும் இருக்கிறது. இதனால்ethnoதேசியங்கள் வன்முறை இயல்பு கொண்டனவையாகவே இருக்கின்றன.

3. ethnoதேசிய வடிவத்திற்கு அப்பால்

ethnoதேசியம் ஒரு சாதகமான அரசியல் அமைப்பாக இருப்பதற்குச் சாத்தியமே இல்லாத -தைக் கணக்கில் கொண்டால்  நாம் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இதனை வைத்துப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மீறி— நம்முடைய படைப்பூக்கமிக்க செயற்பாடுகளும் அரசியல் செயற்பாடுகளும் ethnoதேசியத்திற்கு அப்பால் புதியதானபன்முகத்தன்மை மிக்கஒரு அரசியல் வடிவத்தைக் கண்டடைய நிர்ப்பந்திக்கின்றது.
இப் புதிய அரசியல் வடிவம் என்னவாக இருக்கமுடியும் என்பதில் நான் அவ்வளவு தெளிவாகஇல்லை. அது வருங்காலத்தின் கையில் இருக்கிறது. என்றாலும்நாம் ethnoதேசியத்திற்கு அப்பால் ஒரு அரசியல் அமைப்பைக் கற்பனை செய்துபார்க்கவேண்டும். கடந்த காலங்களில் ethnoதேசியத்தை விமர்சித்தவர்கள் நமக்குக் சில துப்புகளைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். யாருடைய கவிதை இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோ அவரையும் இரவீந்திரநாத் தாகூரையும்— இருபதாம் நூற்றாண்டுத் தென்னிந்திய தமிழ்ப்பகுதிகளில் அரசியல் பொதுப்புத்தியைத் தீவிரமாக மாற்றியமைத்த பெரியாரையும் ethnoதேசியத்தின் மீதான விமர்சனத்திற்கான இரு உதாரணங்களாக எடுத்துக்கொள்ளகிறேன். இவர்களின் இவ்விமர்சனங்கள் தேசஎல்லைகளைத் தகர்த்தெறிந்துகற்பனாவாதத்தின் தொடுவானத்தில் நிலை -பெறுகின்றன. நாம் இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இரவீந்திரநாத் தாகூர்பெரியார் இருவருமே தேசஉருவாக்கத்தில் பங்காற்றியவர்கள்தாம். 1905ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்துசுதேசி இயக்கம் நடத்திய அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டத் -திற்காக தாகூர் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பெரியார் 1920இல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்துஐந்து வருடங்கள் கழித்து 1925இல் அதனைவிட்டு வெளியேறிவிட்டார். தமிழ்ப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்திற்குப் போற்றத்தக்க அளவில் பெரியார் பங்காற்றியுள்ளார். முதல் உலக யுத்தத் தினால் ஏற்பட்ட பேரழிவும்மிகப்பெரியளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் ethno தேசியத்திற்கெதிரான நிலைப்பாட்டை தாகூர் எடுக்கக் காரணங்களாக அமைந்திருக்கலாம் (தாம்சன் 1992). பெரியார்சாதிய ஒடுக்கு முறைப் பிரச்சினை 'தேசிய ஒருமைப்பாட்டிற்கு இடையூறாக இருக்கும்என்பதனால் இந்தியத் தேசிய காங்கிரஸ் இப்பிரச்சினையை எடுக்க மறுத்ததைத் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்மீண்டும் திரும்பவேயில்லை. இப்படியாகஇருவருக்குமே தேசியம் வேறுபாடுகளை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதில்தான் அக்கறையாக இருந்துள்ளனர்.
தாகூரின் அவநம்பிக்கை
தாகூர் இந்துத்துவாத் தேசியவாதத்தின் மீது நம்பிக்கையிழந்தது ஏறக்குறைய நிபந்தனையற்ற ஒன்றாக அமைந்தது.
ethnoதேசியம் பற்றி அவர் எழுதுவது, …மனிதக் கண்டுபிடிப்புகளிலேயே தேசியம் என்பதுதான் மனிதனை மரத்துப்போக வைக்கும் சக்திகொண்டதொரு கருத்தாக இருக்கிறது. தேசியம் என்ற சீற்றத்திற்குப் பலியான அனைத்து மக்களும் அதன் நெறிபிறழ்ந்த தன்மையைப்பற்றிய பிரக்ஞையில்லாமல்அதனால் ஒழுங்கமைக் கப்பட்ட திட்டத்தை நச்சான சுயநலம்சார்ந்து நடைமுறைப் படுத்துகிறார்கள். (தாகூர் 1992: 73)
இப்படியாகethnoதேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலந்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. இத்தகு தேசியவாதத்தை எத்தகைய நியாயமுமில்லாத ஒன்றாக அவர் பார்த்தார்.  அதற்கான காரணம்எந்தவொரு ethnoதேசியவாதத் திட்டத்தின் மையமாக எப்போதுமே இருந்துவருவதும்இப்போதும் இருப்பதுவும் அதிகாரத்திற்கான முனைப்புதான் என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில்,
 ' ethno தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே  தவிரஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. அது தன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…'.
தாகூரைப் பொறுத்தமட்டில்காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை அடையவேண்டும் என்ற வேட்கைதான் தேசிய லட்சியத்தின் அடிப்படையாக இருந்தாலும்கூடஅதை நியாயப்படுத் துவதற்கு அது மட்டுமே போதுமானது இல்லை. அவரின் கூற்று:
'நம் காலத்தில் அரசியல் சுதந்திரம் பெற்றவர்கள் எல்லாம் உண்மையில் சுதந்திர பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை என்பதை நாம் மறந்து -விடக்கூடாது. இவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் மட்டுமே. இவர்கள் எத்தகைய கட்டுப்பாடுகளுமற்ற தங்களின் உணர்ச்சிகளின் உந்துதலால்சுதந்திரம் என்ற போர்வையில் அடிமைத் தனத்திற்கான பிரம்மாண்டமான நிறுவனங்களையே உருவாக்கியிருக்கிறார்கள்' (மேலது: 93).
'அடிமைத்தனத்திற்கான மிகப் பிரம்மாண்டமான நிறுவனங்கள்என்று அவர் குறிப்பிடுவதைethno தேசிய அரசு மற்றும் அதன் நடைமுறைகளைத்தான் என நான் யூகித்துக் கொள்கிறேன்.

வெகுமக்கள் தலைவராக இருந்த பெரியார் ஒரு கவிஞரின் நுண்ணுணர்வுகளைப் பெற்றிருக்கவில்லை, இதனால் உருவக ரீதியாக 'ஆன்மிக லட்சியவாதம்என்றெல்லாம் பேசவில்லை. சாராம்சத்தில் அவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்த காரணத்தினால் 'ஆன்மிகம்என்பது அவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் இருந்திருக்கலாம். அவர்ethnoதேசியவாதத்தின் அதிகார இயங்கியலைசமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கும் அது எத்தகைய மாறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கமுடியுமென முன்வைப்பதன் மூலமாககலைத்துப்போடுகிறார். மையநீரோட்ட இந்துத்துவ தேசியவாதிகளால் முன்வைக்கப்பட்ட சுயராஜ்யக் கோரிக்கையைக் குறிப்பிட்டு இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்: 'பறையனுக்கு பார்ப்பான் ஆள்வதா சுயராஜ்யம்எலிக்கு பூனை ஆள்வது சுயராஜ்யமாகுமாஉழவனுக்கு மிராசுதாரனும்தொழிலாளிக்கு முதலாளியும் ஆள்வது சுயராஜ்யமாகுமா? சுருக்கமாகச் சொல்வதென்றால்தேசியவாதிகள் முன் பெரியார் வைக்கும் கேள்வி, 'சுதந்திரத்தின் போர்வையில் அடிமைத்தனம்என்று இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிடுவதற்கு உள்ளடக்கத்தைக் கொடுப்பதாகவும் தெளிவுபடுத்துவதாகவும் அமைகிறது.

பெரியார் எழுப்பும் கேள்வியை இன்னும் சற்று விரித்துப்பார்க்க விரும்புகிறேன். முதலாவதாகஅதிகாரமிக்க அல்லது அதிகாரமற்ற பல்வேறுவகை அடையாளங்களைக் கொண்டுவருவதன் மூலமாகதேசியம் என்று அழைக்கப்படுவதற்குள் காணப்படும் ஒருபடித்தான (sameness தன்மையை அல்லது ஒற்றைமயவாதத்தை (homogeneity) விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார். இரண்டாவதாகஎண்ணிக்கையில் அடங்காப் படிநிலைகளைக் கொண்டிருப்பதால் தேசியத் தன்னாட்சி என்ற அரசியல் திட்டம் சாத்தியமே இல்லாததொன்று எனப் பார்த்தார். மூன்றாவதாக,
அதிகாரத்தின் பல்வேறு வடிவங்களுக்குப் பலியானவர்களின் பல்முனை எதிர்ப்புகளுக்கு இடமளிக்கும் ஒரு அரசியல் வடிவத்தை அவர் வேண்டினார்.
ethnoதேசியவாதம்தான் தேர்ந்தெடுத்த ஒர் கடந்தகாலத்தை தனது உண்மையான மூலாதாரமாகக் கொண்டாடுகிறதென்றால்தாகூரும் பெரியாரும் ethnoதேசியத்தின் சுமையிலிருந்தும் எல்லைசார்ந்த குறுகிய பார்வையிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டுஅதற்கும் அப்பால் பரந்துகிடக்கும் உலகிலிருந்து தமக்கான அறிவு மற்றும் அரசியல் மூலாதாரங்களைத் தேடினார்கள். இவர்களுக்கு எல்லைக்கோடுகள் ஒரு பொருட்டாக இருந்ததில்லைகருத்துகளைக் கொண்டாடினார்கள். காலனிய எதிர்ப்புப்போராட்டம் அதன் உச்சத்திலிருந்த காலத்திலேயே காலனியம் குறித்து, 'மேற்கின் ஆன்மா -விற்கும் மேற்கின் தேசியத்திற்கும் இடையேயான மோதலில் இந்தியா சிக்கியுள்ளதுஎன தாகூர் எழுதினார் (தாகூர்முன்னர் குறிப்பிட்ட நூல்: 58). இவரைப் பொறுத்தமட்டில்மேற்கின் ஆன்மா ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால்மேற்கின் தேசியம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.
இதுபோன்றே பெரியார், “மக்கள் அரசனின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்றும் அரசன் என்பவன் கடவுள் போன்றவனென்றும் நம்பிக்கொண்டிருந்த 'இந்து இந்தியாவிற்குஆட்சியாளர் என்பவர்  மக்களுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவர் மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டு -மென்றும் 'ஆங்கில இந்தியாகற்றுக் கொடுத்தது” என வாதிட்டார். தாகூரைப் போலவேஇந்தியாவில் ஆங்கிலேயர்களின் தோல்விக்குக் காரணம் 'இந்தியாவை என்றென்றைக்குமாக தங்களுடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆளவேண்டுமென்றும்இந்நாட்டின் செல்வத்தைத் தாராளமாகக் கொள்ளையடித்துத் தங்கள் நாட்டிற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்றும்சிந்தித்த அவர்களின் தேசியவாதப் பேராசைதான் என்கிறார். மேலும்பல்வேறு வடிவங்களிலான ஒதுக்குதலையெல்லாம் உள்ளடக்கும்விதமாக உருவகவழக்கில் 'திராவிடன்என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது மிகக் குறுகிய தளத்திலான தேசிய எல்லைகளைக் கடந்து ஒருவர் சமத்துவத்திற்காக நிற்பார் என்றால் அவரையும் உள்ளடக்குவதாக இருந்தது. அவர், 'பிறப்பின் அடிப்படையில் சமத்துவமின்மை இருக்க முடியாது என்றும்அத்தகைய சமத்துவமற்ற நடைமுறைகளை எதிர்ப்பார்கள் என்றால் ஜப்பானியர்களைக் கூட நாம் திராவிடர்களாக ஏற்றுக்கொள்ளலாம்என்றார். (ராமசாமி 1991: 8)

4) ethnoதேசியவாத அரசியலுக்கு மாற்றான அரசியலுக்கான அடிப்படைகள்

இதை ethnoதேசியவாதம் குறித்து ஆழமாகச் சிந்தித்த சிந்தனையாளர்கள் பற்றி மிக எளிமைப்படுத்தப் -பட்டஒருசில வழிகளில் தட்டையான வாசிப்பு என்றுகூடச் சிலர் சொல்லலாம். இருந்தாலும்ethno தேசியவடிவத்திற்கு அப்பாற்பட்டதோர் அரசியலைக் கற்பனை செய்வதற்கான ஒர்சில அடிப்படைகளை இது உருவாக்கிக் கொடுக்கிறது. முதலாவதாக,
மாற்று அரசியலென்பது வேறுபட்ட அதிகார வடிவங்களுக்கு இடையேயான முடிவே -யில்லாத மோதல்களை உள்வாங்கிக் கொள்வதிலும், வேறுபாடுகளைச் சமூக யதார்த் -தத்தின் அடிப்படையாக அங்கீகரிப்பதிலும்தான் உள்ளது. இரண்டாவதாகethnoதேசியத் -தின் குறுகிய எல்லைவாதத்தைக் கடந்துசாத்தியமான ஒரே அரசியல் வடிவமென அதைப் பார்த்துப் பழக்கப்பட்டுப்போன நம்பிக்கையைக் கலைத்துப் போடுவதன் மூலமாகத்தான் சாதகமான வடிவத்திற்கான அடிப்படைகள் பற்றி நம்மால் சிந்திக்க முடியும்.
மீண்டும் தாகூரிடம் திரும்புகிறேன். ethnoதேசியவாதத்தோடு தனக்கேஏற்பட்ட உரசலைப் பகிர்ந்துகொண்டு அதைக் கடந்துபோவதற்கும் நம்மைத் தூண்டுகிறார்.
தேசத்தை வணங்குவது, கடவுள்மீதான பெருமதிப்பைக் காட்டிலும்மனிதத்தன்மையைக் காட்டிலும் மேலானதென்று குழந்தைப்பருவம் முதலே எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும்நான் இப் போதனைகளைக் கடந்து வளர்ந்து -விட்டேன் என்றே நம்புகிறேன். மேலும்மனிதத்துவ லட்சியங்களைக் காட்டிலும் நாடு மேலானதென்று நமக்குக் கற்றுக்கொடுக்கும் கல்விமுறையை எதிர்ப்பதன் மூலமாகத்தான் நம் நாட்டினர் உண்மையான இந்தியாவைப் பெறுவார்கள் என்பதே என்னுடைய திடமான நம்பிக்கையாக உள்ளது. (தாகூர்முன்னர் குறிப்பிட்ட நூல்: 83)
'மனிதத்துவ இலட்சியங்கள்.ஆம்மனிதத்துவத்தை ஒற்றைமயமாக்கும் பொறியிலிருந்து தப்பிப்பதற்குபன்மையில் இருந்துதான் இன்னும் சரியாகச் சொல்வதென்றால்ethnoதேசியவடிவத்தையும் அதன் வன்முறைகளையும் கடந்துதான்— நம்முடைய கற்பனைகளை நாம் தொடங்க முடியும்.
 (2007, மே டொரண்டோ பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேசத் தமிழாய்வுக் கருத்தரங்கிலான தலைமை உரையை அடிப்படையாகக்கொண்ட இக்கட்டுரை EPW, மார்ச் 7, 2009 இதழில் Nation Impossible என்ற தலைப்பில் பிரசுரமானது).  தமிழில்: ராமாநுஜம்.(நன்றி: அகம் புறம்: கலை இலக்கியப் பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்ஏப்ரல்-செப்டம்பர் 2015)

எனது குறிப்பு: கட்டுரையின் தலைப்பு “சாத்தியம் இல்லாத தேசியம்” என்றே இருந்த்து. ஆனால் கட்டுரையின் எவ்விடத்திலும் ‘தேசியம்’ பற்றிய விளக்கம் இல்லை. ஆசிரியர் கருத்தில் கொண்டுள்ளது ethno தேசியத்தையே. அனைத்து இடங்களிலும் ethno தேசியம் எனும் பதத்தைப் பிரயோகித்துள்ளேன். ethno   தேசியத்தின் இயல்புகள் பற்றிய மிகச் சரியான விளக்கமுள்ள கட்டுரையாகும்.
ethno எனும் ஆங்கிலப் பதம் எதற்கு? (இங்கும் மூன்று பதங்கள் புழக்கத்தில் உள்ளன, அவையாவன ethnoethnic, ethno-centric) இனவாதத் தேசியம், அல்லது இனவியத் தேசியம் அல்லது இனவாத மையத் தேசியம் எனப் பயன்படுத்தலாமே?
தேசியர், தேசியவாதி என இருசொற்கள் உண்டு. தேசியர் நேர்மறைச் சொல்லாகும். தேசியவாதி எதிர் மறைச் சொல்லாகும். ethnoதேசியம் ஓர் எதிர்மறை/வழர்தடை அரசியல் நெறியாகும். இவ்விதம் நோக்கில் இந்நெறியைப் பின்பற்றுவோர்களை இனவியத் தேசியவாதிகள், அல்லது இனவாதத் தேசிய வாதிகள் அல்லது இனவாதமையத் தேசியவாதிகளென அழைக்கலாம். இம் மூன்றிலும் எது அதிகப் பொருத்தப் பாடானது என்பதில் தெளிவுக்கு வரமுடியவில்லை. ஆகவே ethno எனும் பதத்தையே பயன்படுத்துகிறேன்.
தேசியர்கள், ethno தேசியத்தில் இருந்து விலகியே, வெளிவந்தேயாக வேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் இக் கட்டுரை, வெளிவந்தபின் எவ் அரசியல் நெறியைப் பின்பற்றுவது என்பதையிட்டு எதுவுமே கூறவில்லை. இனித்தான் தேடவேண்டும் என்கிறார். தேசியத்தையே முற்றாக நிராகரிக்கிறாரா என்ற சந்தேகம் எழகிறது. இது கட்டுரையின் குறையாக இருந்தாலும் ethno தேசியமும், தேசியவாதமும் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டுமென்பதை இக்கட்டுரை மிகச்சரியாகவும் தெளிவாகவும் முன்வைக்கின்றது.
ஊக்கிவிக்கப்பட வேண்டியது தேசியம், முற்றாக அழிக்கப்பட வேண்டியது ethno தேசியம்.
தேசியம், ethno தேசியம் ஆகிய அரசியல் நெறிகள்பற்றியும்; தேசியர்கள், தேசியவாதிகள் ஆகிய அரசியலாளர்களையும் பற்றிய விவாதம் தொடரட்டும்……….




No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...