Friday, 23 March 2018


Anarchism அராஜக வாதம் :
               

        இதில், பொருளாதார அராஜகவாதம், அரசியல் அராஜகவாதமென இருவகையுண்டு. அரசியல் அராஜகவாதம் பற்றியே இந்நூல் “இத்தாலிய ஜேர்மானிய பாசிஸவாதத்தின் நாசகாரப் பரிமாணங்கள்” பேசுகிறது. அரசு என்ற ஒன்றின் இருத்தலுக்கு எதிரான தத்துவம்தான் அராஜகவாதம். அரசற்ற ஒரு சமூகமே இவர்களின் குறிக்கோளாகும். சரியோ, தப்பா அரசின் ஊடாக மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் எதேச்சதிகாரமும் ஆணையுரிமைத் திணிப்புமே என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். எவ் அரசாக இருந்தாலும் அரசுகள் பற்றிய இவர்களின் நிலைப்பாடு இதுதான். அரசுகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கு பற்றுவார்கள். கற்பனாவாத புரட்சிகர முழக்கங்களையும் முன்வைப்பார்கள். ஆனால், இப் போராட்டங்கள் அனைத்தும் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நிலவிவரும் சமநிலையைக் குலைப்பதாக அமையுமேதவிர, புதிய சமநிலையை உருவாக்குவதாக அமையாது. மாறாக நிலவும் சமூக அமைதியைமேலும் குளப்புவதாகவே அமையும்.      
        நிலவும் முதலாளித்தவ அரசில் முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதையும் ஏற்பதில்லை, பாட்டாளிவர்க்க அரசு உருவாக்கப்படவேண்டும் என்பதையும் ஏற்ப தில்லை. அரசு அழியவேண்டும், என்பதுதான் இவர்களின் ஒரே முழக்க மாகும். இம் முழக்கத்தின் உள்நோக்கம் பாட்டாளிவர்க்க அரசு உருவாக்கக் கூடாதென்பதேயாகும்.

         இதனால் எதேச்சதிகாரம் பற்றியும், பாசிஸம் பற்றியும், தேசிய இனப் பேரகங்காரங்கள் (ethno-national chauvinism) பற்றியும் ஒன்றில் கடுங்கோபமாகப். பேசிக் கொள்வார்கள் அல்லது அவற்றின் கொடுமைகளை -யிட்டு அழுதுவடிவார்களே தவிர அவற்றிற்கு எதிரான செயற்பாடுகளில் இறங்கமாட்டார்கள். அங்கும் குளப்பவாதிகளாகவே நடந்து கொள்வார்கள்.

         பாட்டாளிவர்க்கம் தனக்கான அரசியல் அதிகாரத்தை நிறுவுவதற்கு முற்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அராஜக வாதத்திற்கும் மார்க்ஸியத்திற்கும் எதிரான போராட்டம் தொடர்கிறது.

     இந்த அராஜகவாத உளறல்களை-அவற்றின் இன்றைய வடிவத்தில் பக்கூனின் சொல்லத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே-மார்க்ஸ் எதிர்த்துவந்துள்ளார் என்பதை நான் விசேஷமாகச் சொல்வதும் அவசியமா? சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் மொத்த உள்வரலாறுமே அதை நிரூபிக்கும், 1867ம் வருடத்திலிருந்தே அராஜகவாதிகள் மிகக்கீழ்த்தரமான முறைகளின் மூலம் அகிலத்தின் தலைமையைக் கைப்பற்ற முயற்சிசெய்து வந்தார்கள்; அவர்களின் பாதையில் மார்க்ஸ்தான் பெருந்தடையாக இருந்தார். மேலதிக விளக்கம் பெற இங்கே சொடுக்கவும்:

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ், “லெனின்-அராஜகவாதமும், அராஜகவாத-சிண்டிக்கலிஸமும்எனும் நூலைப் படிக்கவும். சில பகுதிகள் இங்கே தரப்படுகிறது. பெயரளவில் மட்டுமே புரட்சியாளர்களான அராஜகவாதிகள் பற்றிய ஏங்கெல்ஸின் கூற்று.

     ஆணையுரிமைமற்றும் மையப்படுத்தல் என்ற சொற்கள் மிகவும் அதிகமான அளவுக்குத் தவறாகக் கையாளப்படுகின்றன என்று நான் கருதுகிறேன். புரட்சியைக் காட்டிலும் அதிகமான எதேச்சாதிகார மானது எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு புரட்சியிலும் நடைபெறுவதைப் போல வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களின்மூலம் ஒருவருடைய சித்தத்தை மற்ற வர்கள் மீது திணிக்கின்ற பொழுது ஆணையுரிமை கொண்ட ஒரு நடவடிக்கை நிறைவேற்றப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. மையப்படுத்தலும் ஆணையுரிமையும் இல்லாத காரணத்தால்தான் பாரிஸ் கம்யூன் அழிக்கப்பட்டது. வெற்றியடைந்த பிறகு ஆணை யுரிமை, இதரவைகளை உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானா லும் செய்யுங்கள்; ஆனால் போராட்டத்தின் போது நம்முடைய எல்லாச் சக்திகளையும் ஒரே fasciotpy;* நாம் ஒன்றுசேர்க்க வேண்டும், ஒரே தாக்குதல் முனையில் அவற்றைக் குவிக்கவேண்டும். ஆணையுரிமையும் மையப்படுத்தலும் சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கண்டனம் செய்யப்பட வேண்டியவை என்று என்னிடம் சொல்லும் பொழுது அவ்வாறு சொல்பவர்களுக்குப் புரட்சி என்றால் என்னவென்று தெரியாது அல்லது அவர்கள் பெயரளவில் மட்டுமே புரட்சியாளர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது... (-பக்.98)
        
    அராஜகவாதத்தின் அன்றைய காலகட்ட தத்துவார்த்த தலைவனான பக்கூனின் தத்துவத்தை சமூகக்கலைப்புவாதமென ஏங்கெல்ஸ் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்.

     பக்கூனினுக்கு அரசே முக்கியமான தீமை என்பதால் அரசை, அதாவது எந்த அரசையும்-அது குடியரசாகவோ, முடியரசாகவோ அல்லது வேறு எந்த ஒன்றாகவோ இருந்தாலும்-உயிரோடு வைத்திருக் -கக் கூடிய எதையும் செய்யக்கூடாது. ஆகவே எல்லா அரசியலிலிருந்தும் முற்றிலும் ஒதுங்கி நிற்க வேண்டும். ஒரு அரசியல் நடவடிக்கையை நிறைவேற்றுவது-குறிப்பாக, ஒரு தேர்தலில் பங்கெடுப்பது-இந்தக் கோட்பாட்டுக்குத் துரோகம் செய்வதாகும். பிரச்சாரம் செய்ய வேண்டும் அரசின் மீது வசவுகளைப் பொழியவேண்டும். ஸ்தாபனங்களைக் கட்டவேண்டும்; எல்லாத் தொழிலாளர்களும் (ஆகவே பெரும்பான்மையினர்) வென்றெடுக்க ப்பட்ட பிறகு எல்லாஅதிகாரிகளையும் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும். அரசை ஒழிக்க வேண்டும், அதனிடத்தில் அகிலததின் ஸ்தாபனத்தை நிறுவவேண்டும். இந்த மகத்தான நடவடிக்கைக்குச் சமூகக்கலைப்பு என்று பெயர்; இதிலிருந்து புதிய ஊழி தொடங்குகிறது. (-பக்.100)
        
  அராஜகவாதிகள் மக்கள் சுயமாக ஸ்தாபனப்படுவதை விரும்பவில்லை ஏங்கெல்ஸ் இவ்விதம் சுட்டிக்காட்டுகிறார்

     ஸ்தாபனத்தை அழித்து விடுங்கள், நீங்கள் விரும்பக்கூடிய அளவுக்குத் தண்ணீர் கலங்கிப் போயிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தொழிற்ங்கங்களை அழித்து விடுங்கள், வேலை நிறுத்தங்களின் மீது யுத்தத்தை அறிவியுங்கள், தொழிலாளி வர்க்க ஒருமைப்பாட்டை வீண் சொற்றொடராக மாற்றுங்கள்-பிறகு உங்களுடைய அகம்பாவமான, உபயோகமற்ற, சித்தாந்தவாதச் சொற்றொடர்களை உபயோகிப்பதற்கு ஏற்ற சுதந்திரமான களத்தைக் காண முடியும். ஆனால் உங்கள் பிராந்தியத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நான்குவருடங்கள் அரும் பாடுபட்டுக் கட்டியிருப்பதை-அகிலம் முழுவதிலுமே அதுதான் மிகச் சிறந்த ஸ்தாபனம் என்பதில் சந்தேகமில்லை-நீங்கள் அழிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமே.. (-பக்.121)

         ஏதேச்சதிகாரம் ஒழிக, ஜனநாயகம் ஓங்குக எனும் உரத்து முழங்கும் அராஜகவாதிகளின் உண்மை முகத்தை ஏங்கெல்ஸ் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார்.

     ஆனால் எதேச்சாரிகார அரசு ஒரேயடியாக -அதைப்பெற்றெடுத்த சமூக நிலைமைகள் ஒழிக்கப் -படுவதற்கு முன்பாக- அழிக்கப்பட வேண்டுமென்று எதேச்சாதிகார எதிர்ப்பாளர்கள் கோருகிறார்கள். அதிகாரத்தை ஒழிப்பதே சமூகப்புரட்சியின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள். இக் கனவான்கள் எக்காலத்திலாவது புரட்சியைப் பார்த்திருக்கிறார்களா? புரடசிதான் எல்லாவற்றிலும்விட மிகவும் எதேச்சாதிகாரமானது. மக்கள் தொகையின் ஒருபகுதி துப்பாக்கிகள், ஈட்டிகள், பீரங்கிகளை க்கொண்டு (இவை எதேச்சாதிகார சாதனங்கள்தான்) மறுபகுதி யின்மீது தன்னுடைய சித்தாத்தைத் திணிக்கின்ற நடவடிக்கை யேயாகும். வெற்றியடைந்த கட்சியினர் - அவர்களுடைய போராட்டம் வீணாகாமலிருக்க வேண்டுமென்றால்- பிற்போக்காளர்களிடம் தன்னுடைய ஆயுதங்கள் ஏற்படுத்துகின்ற பயங்கரத்தின் மூலமாக இந்த ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும். பாரிஸ் கம்யூன் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக ஆயுதமேந்திய மக்களின் இவ் அதிகாரத்தை உபயோகித்திரா -விட்டால் அது ஒரேயொரு நாளாவது நிலைத்திருக்குமா? அதற்குமாறாக, அதை இன்னும் தாராளமாகப் பயன்படுத்தாதற்காக நாம் அதைக் கண்டிக்கவேண்டாமா? -பக்.147)

              அராஜகவாதிகள் தன்னையும், தன்னால் முன்வைக்கப்படும் மக்கள் அரசையும் எவ்விதம் வெறுக்கிறார்கள் என்பதை மார்க்ஸ் பக்கூனின் கூற்றில் இவ்விதம் சுட்டிக் காட்டுகிறார்:

      தொழிலாளர்கள் - இறுதி லட்சியமாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் உடனடியான. பிரதான நோக்கம் என்ற அளவில் - ஒரு மக்கள் அரசைநிறுவவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுகின்ற லஸ்ஸால் மற்றும் மார்க்சின் தத்துவத்தைப்பற்றி நமது ஆழமான வெறுப்பை நாம் ஏற்கனவே எடுத்துக்கூறியிருக்கிறோம். பாட்டாளிவர்க்கம் ஆளும்வர்க்கமாக மாற்றப்பட்டு விடுவதுதான்அது என்று அவர்கள் விளக்கம் தருகிறார்கள். பாட்டாளிவர்க்கம் ஆளூம்வர்க்கமாக இருக்குமென்றால் அது யாரை ஆட்சிசெய்யு மென்ற கேள்வி எழுகிறது. இன்னொரு பாட்டாளி வர்க்கம் ஒன்று இருக்கும்; அது இப்புதிய அரசுக்குகீழ்ப்படுத்தப்பட்டிருக்கும் என்பது  தானே இதன் பொருள்  (பக்.211)

      எங்கே அரசு இருக்கிறதோ அங்கே ஆதிக்கமும்இருப்பது உறுதி; ஆகவே அடிமைத்தனமும்இருக்கும். பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிமைத்தனம் இல்லாத ஆதிக்கத்தை நினைத்துப்பார்க்க முடியாது; அதனால்தான் நாங்கள் அரசுக்குஎதிரிகளாக இருக்கிறோம் -பக்.114)

     பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக மாற்றப்பட்டு விடுவதுஎன்றால் என்ன அர்த்தம்?”      மார்க்சியவாதிகள் மற்றும் அவரக ளைப் போன்ற ஜனநாயக மரபினருடைய இக் கடைசி வார்த்தை ஒருபொய்; அது ஆளும் சிறுபான்மையினருடைய எதேச்சாதி காரத்தை மூடி மறைக்கிறது; பொது மக்களின் பொய்யான சித்தத்தின் வெளியீடாகத் தோன்றுவதன் மூலம் அது இன்னும் அதிக அளவுக்கு ஆபத்தானது. (-பக்.216)………… மக்கள் அரசு உள்பட ஒவ்வொரு அரசுமே ஒரு பக்கத்தில் எதேச்சாதிகாரத்தையும் மறுபக்கத்தில் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்துகின்ற நுகத்தடியே என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளுமாறு நாம் செய்திருக்கிறோம்.  (-பக்.220)

         அராஜகவாதிகளின் மற்றோர் குணாம்சந்தான் அனைவர்க்கும் ஜனநாயகவாதமெனும் வேடதாரித் -தனமாகும். ஏங்கெல்ஸ் இதை இவ்விதம் கூறுகிறார்:

      அராஜகவாதிகள் விஷயத்தைத் தலைகீழாக்குகிறார்கள், பாட்டாளி வர்க்கப்புரட்சி, அரசு என்ற அரசியல் ஸ்தாபனத்தை ஒழிப்பதிலிருந்து தொடங்கவேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாட்டாளிவர்க்கத்தின் வெற்றிக்குப்பிறகு வெற்றியடைந்த தொழிலாளி வர்க்கம் உடனடியாக உபயோகிக் -கத் தகுந்ததாக இருக்கும் ஒரேஸ்தாபனம் அரசுதான். அதை மாற்றியமைத்துக் கொள்வது அவசியமானது. ஆனால் அத்தருணத்தில் அரசை அழிப்பதென்பது வெற்றியடைந்த தொழிலாளிவர்ககம் தான் புதிதாக அடைந்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உபயோகிக்க க்கூடிய ஒரேயுறுப்பை அழித்து விடுவதாக அமையும். அவ்வுறுப்பை உபயோகித்துத்தான் முதலாளித்துவ எதிரிகளை நசுக்கமுடியும்; சமூகத்தின் பொருளாதாரப்புரட்சியை - அது இல்லையென்றால் மொத்த வெற்றியுமே தோல்வியிலும் பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு நடைபெற்றதைப் போலத்தொழிலாளி வர்க்கத்தின் படுகொலை யிலும் முடிந்துவிடும் - நிறைவேற்ற முடியும். (-பக்.249, 250)

         அராஜகவாதிகள் புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதற்கு எதிரா னவர்கள் என்பதை லெனின் இவ்விதம் கூறுகிறார்
 மேலேயிருந்துவருகின்ற அனைத்து புரட்சிகரமான நடவடிக்கை களும் தீமையே, எல்லாமே கீழேயிருந்து அமைக்கப்பட்டு நிறை வேற்றப்படவேண்டுமென பக்கூனின்வாதிகள் பல வருடங்க ளாகவே போதித்து வந்திருக்கிறார்கள்என்கிறார் ஏங்கெல்ஸ். (-பக்.272, 273)
     
     ஆகவே கீழேயிருந்து மட்டும்எனும் கோட்பாடு அராஜகவாதக் கோட்பாடு.
     ஜனநாயகப் புரட்சியின் சகாப்தத்தில் இக் கோட்பாடு வெறும் பிதற்றல் என்பதை எங்கெல்ஸ் எடுத்துக்காட்டுகிறார். அப்படியானால் புரடசிகரமான அரசாங்கங்களை ஏற்படுத்துவது தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகம் செய்வதே என்ற காரிய ரீதியான முடிவுக்கு இயற்கையாகவும் தவிர்க்க முடியாதவகையிலும் இட்டுச்செல்கிறது. ஒரு புரட்சிகரமான அரசாங்கத்தை நிறுவுவதென்பது தொழிலாளி வர்க்கத்துக்கு மற்றோர்மோசடி, மற்றோர் துரோகம்என்ற முடிவுக்குத்தான் பன்கூனின்வாதிகள் வந்தார்கள்; அதை ஒரு கோட்பாட்டளவுக்கு உயர்த்தினார்கள்.
குறிப்பு:- நூலின் சொலகராதிப் பகுதியில் தொடர்கிறது.


No comments:

Post a Comment

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் - இந்தியளவில்

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் இந்தியளவில் I - அக உறவுகளில் I - அ ) வளர்திசை        நிகழ்வு 2018 இல் நடைபெற்ற தேர்தல்களின்...