Wednesday, 12 June 2019

விடுதலைப் புலிகள் மீதான தடையும் , இந்திய அவாவும்.


விடுதலைப் புலிகள் மீதான தடையும்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவும்.
தயவுசெய்து கீழ்கண்ட இரு கட்டுரைகளினதும் தொடர்ச்சியாக இக்கட்டுரையைத் தொடரவும்
(1) பாக்கிஸ்தான்-இந்திய மோதல்
(1).அ) பாக்கிஸ்தான் உருவாக்கம(1)
பிரிட்டிஷ் காலனியல் வாதிகளால் பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டதன் குறிக்கோளே தெற்காசியாவில் இந்துத்துவ இந்தியா ஒரு தனி வல்லரசாக என்றைக்குமே உருவாகக் கூடாது என்பதுதான். பிரிட்டிஷார், லோகமான் திலகரின் தலைமையிலான(2) இந்தியா -வையும் விரும்பவில்லை. சுபாஷ் சந்திரபோஷ் தலைமையிலான(3)  இந்தியாவையும் விரும்பவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான தீவிர இந்துத்துவ நிலைப்பாடு எடுத்த திலகரின் இயக்கத்தை முடியடிப்பதற்காகவே காங்கிரஸ் தீவிரவாதம் மிதவாதம் என் இரு பிரிவாக்கப்பட்டது. காங்கிரஸின் மிதவாதப்பிரிவை வளர்ப்பதற்கான வேலைத் திட்டத்துடன் மோகன்தாஸ் கரம்சந் காந்தி பிரித்தானியரால் அனுப்பிவைக் கப்பட்டார். லண்டனில் வைத்தே(4) இவ் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
அதேபோல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான, சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸில் இருந்து விரட்டப்பட்டதும், அவர் வெளிச்செல்ல நிர்பந்திக்கப்பட்டதும் மோகன்தாஸ் கரம்சந் காந்தியின் கைங்கரியமே. சுபாஷ் சந்திரபோஸ் விரட்டப்பட்டதன் நோக்கம், இந்தியா தம்மைவிட்டுப் பிரிந்து ஜப்பான், ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளின் பாசிஸக் கூட்டுடன் இணையக் கூடாது என்பதேயாகும்.
ஐரோப்பியர் இந்தியாவை ஆக்கிரமிக்க முன்னர் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி புரிந்து வந்தது இஸ்லாமிய மன்னர்களேயாகும்.(5) எந்தவொரு இஸ்லாமிய மன்னர்களும் பிரித்தானியர்களிடம் சரணடையவில்லை. போரிட்டுத் தோற்றார்கள். சிலுவை யுத்தத்தின்(6) தொடர்ச்சி இந்தியாவிலும் நடைபெற்றது எனவும் கூறலாம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நவகாலனிய இந்தியா, இந்துத்துவ இந்தியாவாக இருப்பதையும் விரும்பவில்லை, மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவாக இருப்பதையும் விரும்பவில்லை. இது ஏகாதிபத்தியங் -களின் பொதுவான குணாம்சமாகும்.
இவர்கள், காலனி நாடுகளில் மரபுவழி மதவாத/இனவாதத் தேசியங்கள் சுயாதீனமாக அதிகாரத்துக்கு வருவதையும் விரும்பமாட்டார்கள். மதசார்பற்ற ஜனநாயக தேசியர்கள் அதிகாரத்துக்கு வருவதையும் விரும்பமாட்டார்கள். மதவாதத்/இனவாதத் தேசியவாதிகளே அதிகாரத்துக்கு வரவேண்டும், அதற்காக அவர்களை ஊக்குவிப்பார்கள்; அதேநேரம் அவர்கள் தம்மை மீறாமலும் பார்த்துக் கொள்வார்கள்; மீறினால் இவ்வகைத் தேசியவாதிகள் கட்டுப்படுத் தப்படுவார்கள் இல்லையேல் அழிக்கப்படுவார்கள். இதுவே ஏகாதிபத்தியங்களின் கொள்கையாகும். இன்றும் இதுவே தொடர்கிறது.
அக் கொள்கையின்படி 1940களில் இந்திய நாட்டைக் கூறுபோட்டார்கள். இதற்காக;
அம்பேத்கார்(7) அவர்களின் தலைமையிலான இந்திய ஜனநாயக சக்திகளால் முன்வைக்கப்பட்ட ஒரு நாடு இருதேசங்கள்எனும் தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கையை முறியடித்தார்கள்.
சாவக்கரின்(8)  “ஒரு நாடு, ஒரு தேசம்”,  என்னும் இந்துத்துவ தேசியவாதக் கொள்கையையும் தூக்கியெறிந்தார்கள்.  
இவை இரண்டுக்கும் மாற்றாக, “இரு நாடுகள், இரு தேசங்கள்” எனும் பிரிவினைவாதக் கொள்கையை முன்வைத்தார்கள். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை இந்தியாமீது திணித்தார்கள். இதற்காக மோகன்தாஸ் கரம்சந் காந்தி காந்தியையும்  ஜவர்லால் நேருவையும் தம்முடன் நெருக்கமாக இணைத்துக் கொண்டார்கள்.
இதன் மூலம், பிரித்தானியா தெற்காசியாவை இரு பகமைத் மதவாதத் தேசியவாதக் கூறுகளாக (வஹாபிஸம், இந்துத்துவம்) நிரந்தரமாகப் பிரிப்பதில் மட்டும் வெற்றிகாண -வில்லை;  இந்துத்துவ தேசியவாதத்தை இரு கூறுகளாக நிரந்தரமாக பிரிப்பதிலும் வெற்றி -பெற்றார்கள். ஒன்று தீவிரவாத இந்துத்துவம்(RSS(9))- குறியீடுIcon சவாக்கர், மற்றையது மிதவாத இந்துத்துவம் (காங்கிரஸ்) குறியீடுIcon காந்தி- .
இந்தியப் புவிப்பரப்பு பாக்கிஸ்தான், பங்காளதேஷ், இந்தியா எனும் மூன்று துண்டுகளாக் -கப்பட்டன. இதில் பாக்கிஸ்தானும், வங்காள தேஷும் இணைக்கப்பட்டு-பாக்கிஸ்தான் எனும் நாடுஉருவாக்கப்பட்டது. ஒரெ மதப்பிரிவினர் என்பதைத் தவிர ஒரு தேசமாக திரள்வதற் -கான வேறு எக்காரணமும் இருக்கவில்லை. உண்மையில் பாக்கிஸ்தான் ஒரு தேசமாக இருக்கவில்லை. அது இருநாடுகளின் இணைப்பான ஒரு நாடாகும்.. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் வளர்ந்தன.
பங்காளதேஷ் தனித் தேசமாக ஆவதற்கான போராட்டங்கள் வளரத் தொடங்கின, இந்தியரசின் நேரடி இராணுவ துணையுடன் வங்காளதேஷ் தனித் தேசமாகியது. (10)  
இந்தியரசின் இந்நடவடிக்கை தனது இரு குறிக்கோள்களை நோக்கியதாக இருந்தது.
முதலாவது: பாக்கிஸ்தானைப் பலவீனப்படுத்துவது.
இரண்டாவது: வங்காளதேஷை தனது இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் கொணர்வது. முதலாவது குறிக்கோளில் பாதிவெற்றி. பாக்கிஸ்தான பலவழிகளிலும் பலவீனப்பட்டது, ஆனால் பாக்கிஸ்தானை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்த முடியவில்லை.
பாக்கிஸ்தானின் இராணுவப் பலவீனங்கூட, தற்காலிகமானதே. “பலவீனப்படுத்தப்பட்ட” பாக்கிஸ்தான் நிரந்தர அணு ஆயுத நாடாக மாறியது. (11)
அதேநேரம் இரண்டாவது குறிக்கோள் 100%மும் தோல்வி. பங்காளதேஷின் இஸ்லாமி -யத்தன்மையை மாற்றுவதற்காக இந்துத்துவ இந்தியா பங்காளதேஷில் மேற்கொண்ட டவடிக்கைகள் பங்காளதேஷ் இஸ்லாமியரிடையே மாத்திரமல்ல, இந்திய இஸ்லாமிய -ரிடையேயும் இந்துத்துவ இந்தியத் தேசியத்தின் மீது வெறுப்பை உருவாக்கியது. தெற்காசிய இஸ்லாமியர்களுக்கும் இந்துத்துவ இந்திய தேசியத்திற்கும் இடையேயான உறவு மேலும் கசப்புமிக்கதாக மாறியது. (12)
காஷ்மீர் விவகாரம்(13) தொடர்பாக பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவின் தீவிர முறுகல்நிலை கருத்தியல் நாட்டமுள்ள அரசியல் ஆர்வலர்கள் அனைவ -ரும் அறிந்ததே. இன்று இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளாகும். இதனால், தெற்காசியாவில் ஓர் அணுஆயுத யுத்தம் மூழக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. பாக்கிஸ்தான் இரு துண்டுகளாக்கப்படும்வரை பாக்கிஸ்தான் அரசுக்கும் மேற்கு வல்லரசுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்துவந்தன. பாக்கிஸ்தானை இராணுவமயப் படுத்துவதற்காகவே மேற்கு நாடுகளின் தலைமையில் SEATO(14) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மேற்கு நாடுகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையேயான இராணுவ உறவு பலவீனப்பட்டே உள்ளது. U.N.Oவின் சமீபத்திய தடை பலவீனப்படுத்தலின் உச்சகட்டமாகும். (15) இதன் அர்த்தம் பாக்கிஸ்தான் இராணுவ ரீதியாகப் பலவீனப் பட்டுப்போயுள்ளதென்பதல்ல. இந்திய-பாக்கிஸ்தானிய யுத்தங்களின் போது(16) இருந்ததை விட, பாக்கிஸ்தான் இன்று அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியில் பலப்பட்டேயுள்ளது.
(1) அரசியல் - (அ) இராணுவ எதேச்சதிகாரம் இலைமறை காய் நிலைக்கு உள்ளாகி, இராணுவத்தின் துணையுடனான ஜனநாயகம்ஆட்சி பீடமேறியுள்ளது. (17)
(1-ஆ) எதிர்பார்க்கும் இந்திய எதிர் பாக்கிஸ்தான் அணு மோதலில் பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்ததுவும் அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதும்.
(1-இ) S.C.O வின் நிரந்தர உறுப்பினராகச் சேர்ந்துள்ளதுவும், இதன் மூலம் S.C.O வின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒழக சம்மதித்தவும்; இந் நிபந்தனைகளில் ஒன்று உறுப்பினர்களிடையே இராணுவ மோதல் இருக்கக் கூடாது என்பதுவுமாகும். இந்தியாவும் இணைந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். (18)
2) பொருளாதார ரீதியாக:       (1) சீன அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் one way one road(19) திட்டத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி இணைந்துள்ளதாகும். இதன் மூலம் மேற்காசியாவுக்கான பெரும் வர்த்தக துறைமுகமாகவும், தரைவழிப் பாதையாகவும் பாக்கிஸ்தான் மாறவுள்ளது. இது பாக்கிஸ்தானின் பொருளாதாரக் கட்டுமானத்துக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் நெம்புகோலாகும். இருந்தும் உடனடிப்பலனும், நீடித்த பயனும் அடையப் போவது சீன மக்கள் ஜனநாயகக் குடியரசேயாகும். இதனால் பாக்கிஸ்தான் பொருளதாரத்தின் பாதுகாப்பிற்கு சீனா பல நன்மைகளைச் செய்துள்ளது, இனியும் செய்யவுள்ளது. கடன் தள்ளுபடியும், கடன் வழங்கலும் இவற்றுள் சிலவாகும்.(20) (I.M.F) உலக நிதி நாணயம்(21) ஆச்சரியப்படும் அளவிற்கு இவ் உதவிகள் அமைந்துள்ளன.
3) இராணுவ ரீதியாக:-

(1) ஐ.நா.சபையில் உலகப் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட Jaish-e-Mohammed தலைவர் Masood Azhar

இவ் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். பாக்கிஸ்தான் சியாட்டோவில் இருந்து விலகிய நாள் முதல் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற கருத்தையும், பாக்கிஸ்தான் அரசு சில பயங்கரவாதி இயக்கங்களின் வளர்ப்புத் தந்தை என்ற கருத்தையும் அமெரிக்கா, நேட்டோ (NATO(22)), இந்தியா ஆகிய மூன்று அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக, Masood Azhar தடைசெய்யப்பட வேண்டிய பயங்கரவாதத் தலைவர் என ஐ.நா சபை கொள்ளவேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 2019ஆம் ஆண்டில் இக்கருத்து வெற்றிபெற்றது. ஆனால் இதையொட்டி பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை யாராலும் எடுக்கப்பட -வில்லை என்பதையும், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.
அமெரிக்கா தொடர்ந்து பாக்கிஸ்தானைக் கண்டித்து வருகிறது. ஆனால், நடவடிக்கைகள் இல்லை. இதற்கான காரணங்கள் மூன்று.
(1) ஆப்கானிஸ்தானிய அரசுக்கு எதிரான தலிபான் போராளிகளை அடக்குவதற்கான கொரில்லாக்களை, அமெரிக்காவும், இந்தியாவும் பாக்கிஸ்தானில் வளர்த்து வருகின்றன.
(2) பலுஸ்திஷ்தானின்(23) தனிநாட்டுக் கோரிக்கைக்காகப் போராடும் கொரில்லாக்கள் அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஆதரவைப் பெற்றிருப்பதுடன், அமெரிக்க ஆதரவு கொரில்லாக்கள் ஈரானியப் படைகளையும் அடிக்கடி தாக்கி வருகிறார்கள்.
ஆகவே பாக்கிஸ்தானின் இராணுவக் கட்டுமானத்தில் ஆழவேரூன்றியுள் கொரில்லாத்துவத்தை அப்புறப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ இல்லை. பாக்கிஸ்தானை அரசியல் ரீதியாகத் தனிமைப் படுத்துவதற்கான ஒரு அரசியல் நடவடிக்கையே இதுவாகும்.
வேறோர் காரணமும் உண்டு. தெற்காசிய இராணுவச் சமநிலையில் ஓர் அமைதியை ஏற்படுத்தும் நிலையில் அமெரிக்காவோ நெட்டோவோ இல்லை. அவர்களின் குறிக்கோள் தெற்காசியப் பிராந்தியம், பாக்கிஸ்தானிய இராணுவ-இந்திய இராணுவ பதட்ட பூமியாக தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதேயாகும். இந்நிலையை உருவாக்கியதே இவர்கள்தான் என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால் இன்று பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத நாடுகளாகி விட்டன. இவர்களிடையேயான இராணுவ மேலாண்மைக்கான மோதல் அணு ஆயுத யுத்தமாக மாறுமானால் தெற்காசிய இராணுவ சமநிலை மாத்திரமல்ல, உலக இராணுவ சமநிலையே மாற்றமுறும். இம் மாற்றம் இவ்விரு வல்லரசுகளின் (USA & NATO) இருத்தலையேகூடப் பாதிக்கலாம். ஆகவே பாக்கிஸ்தான்-இந்தியா ஆகிய இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைக்கு இத் தீர்மானம் உதவக்கூடும் என எண்ணுகிறர்கள். தாமே மூட்டிவிட்ட தீயை தாமே தணிக்கப் பார்க்கிறார்கள்; அணைக்க அல்ல, ணிக்க.
அதேநேரம், சீனா, ருஷ்யா ஆகிய இரு வல்லரசுகளின் நோக்கம் தீயைத் தணிப்பதல்ல, அதை முற்றாக அணைப்பதேயாகும். ஐ.நா.வின் இத்தீர்மானத்துக்கு இவ்விரு வல்லரசு களும் ஆதரவு தெரிவித்ததன் உள்நோக்கம் இதவாகத்தான் இருக்கலாம்.
     U.S, NATO கூட்டா, அல்லது BRICS(24), SCO கூட்டா வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    SCOவில் இந்தியாவும் உள்ளது பாக்கிஸ்தானும் உள்ளது. அப்போதுதான் தெற்காசி -யாவில் இந்து-முஸ்லீம் பகமைப்போக்குத் தணியும். அப்போதுதான் தெற்காசியாவில் இராணுவச் சமநிலை ஏற்படும். அப்போதுதான், அணு ஆயுதப் பதற்றநிலையில் இருந்து தெற்காசியா விடுபடும். இவ் உயர்ந்த குறிக்கோளுடன்தான் U.S, NATO கூட்டுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதப்படும், பிரபாகரனுக்குப் பிந்தைய விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதானால், அது வரவேற்கக்கூடியதே.
   ஆனால், உண்மை அதுவல்ல என்பதை ஆப்கானிஸ்தானைப்(25) பொறுத்தும் பலுஸ்திஸ்தான் குறித்தும் இஸ்ரேல்-பலஸ்தீன உறவு(26) குறித்தும் இந்துத்துவ இந்திய தேசியத்தின் நடவடிக்கைகள் அம்பலமாக்கியுள்ளன. U.S, NATO கூட்டின் போடுதடியான ஆப்பானிஸ்தான் அரசை தலிபான்களிடம் இருந்து பாதுகாக்கவேண்டிய அவசியமும், அவசரமும் இந்திய தேசியஅரசுக்கு ஏன் ஏற்பட்டது?
   தெற்காசிய பிராந்தியத்துள் நுழைவதற்கான வாசல்கள் எதுவுமற்றப் போன நிலையில் மேற்கு வல்லரசுகள் ஆப்கானிஸ்தானையே நம்பியிருக்கின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் பாதுகாப்பாகச் செயற்பட முன்வந்துள்ளது ஏன்? பலுஸ்தீஸ்தா -னைப் பிரித்தெடுப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டது ஏன்? ஈரானுக்கு எதிராகவும் பாக்கிஸ்தானுக்கு எதிராகவும் ஒரு அமெரிக்க ஆதரவு கொரில்லாத் தளத்தை பலுஸ்தீஸ்தானத்திலும், பாக்கிஸ்தானிலும் உருவாக்குவது ஏன்? இஸ்ரேல்-பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நெருக்கடியை ஏற்படுத்திவந்த ---------------- நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக அறிவித்தது. இதன் காரணமாக இஸ்ரேல்-பாலஸ்தீன உறவு மீழவும் ஒரு இராணுவ மோதலாக மாறியுள்ளதை இந்தியா அறியவில்லையா? இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு உலகளாவிய யுத்த முனையை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும், ஆப்கானிஸ்தான் அரசுடனும் முன்னணி அமைத்திருப்பது ஏன்?
SAARC(27) கை உடைத்து  BIMSTEC(28)  எனும் அமைப்பை தெற்காசிய நாடுகளின் மீது திணிப்பது ஏன்? தெற்காசிய நலனையும், அமைதியையும் புறக்கணித்து அமெரிக்க நலனின் தெற்காசிய பிரதினிதியாகச் செயற்படுவது ஏன்?
தொடரும்

அடிக்குறிப்புகள்: I
(1)   பாக்கிஸ்தான் உருவாக்கம்
(2) லோக்மான் திலகரின் தலைமையிலான் இந்தியா.
(3) சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்தியா.
(4) காந்தி பிரித்தானியத் தொடர்பு
(5) இஸ்லாமியர்களால் இந்தியா ஆளப்பட்டது பற்றிய குறிப்புகள்
(6) சிலுவை யுத்தம்
(7) அம்பேத்கார்(7)
(8) சாவக்கரின்(8)
(9) RSS(9))-
(10) வங்காளதேஷ் தனித் தேசமாகியது. (10)  
(11)  பாக்கிஸ்தான் நிரந்தர அணு ஆயுத நாடாக மாறியது. (11)
(12)  இஸ்லாமியர்களுக்கும் இந்துத்துவ இந்திய தேசியத்திற்கும் இடையேயான உறவு     மேலும் கசப்புமிக்கதாக மாறியது. (12)
 (13) காஷ்மீர் விவகாரம்(13)
(14) SEATO பற்றி(14)
(15) U.N.O தடை பற்றிக் கூறல்(15)
(16) இந்திய-பாக்கிஸ்தானிய யுத்தங்கள்(16)
(17) இம்ரான் கானின் ஆட்சி(17)
(18) S.C.O-பாக்கிஸ்தான் இந்திய இணைப்பு(18)
(19) one way one road(19)
(20) சீன-பாக்கிஸ்தான் கடன்.(20)
(21) I.M.F.(21)
(22) (NATO(22)
(23) பலுஸ்திஸ்தான்(23)
(24) BRICS(24)
(25) ஆப்பானிஸ்தான்(25)
(26) இஸ்ரேல் பாலஸ்தீனிய உறவு(26)
(27) SAARC(27)
(27) BIMSTEC(28)  




Wednesday, 5 June 2019

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.


விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.
பாகம் 1
இந்தியரசின் இவ் அறிவிப்புக்கு என்னதான் காரணம்? தமிழீழ அரசை அமைப்பதற் -கான முயற்சியில் புலிகள் ஈடுபட்ட வண்ணமேயுள்ளார்களாம்; அதற்குத் துணை -போகும் நடவடிக்கைகளில் ஈடபடக்கூடியவர்கள் இந்தியாவிலும் உள்ளார்களாம்; இவ்விதம் துணைபோகும் நடவடிக்கைகளை சட்டவிரோதமான தாக்குவதுதான் இத் தடை நீட்டிப்பிற்கான காரணமாம். இதுதான் காரணமாக இருந்தால் தடை நீட்டிப்பில் எந்தத் தவறுமில்லை. அந்நிய நாடொன்றின் உள்நாட்டு விவகாரங் -களில், அந்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாகத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை. இந்திய அரசுக்கும் இல்லை இந்திய மக்களுக்கும் இல்லை. அவ்விதம் தலையிடுவதாக இருந்தால் அது அனைத்துலக, (U.N.O) அல்லது குறிப்பிட்ட சில நாடுகளுக்கான அமைப்புகளின் (SCO) ஊடாக மட்டுமே முடியும். தேசிய தன்னாட்சி உரிமை தேச இறமை என்பன கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் செயற்படும் தமிழ் இனவிய தேசியவாதக் குழுக்களில் சில தமிழ்நாட்டைத் தாயகவும் தமிழீழத்தை சேயாகவும் குறிப்பிட்டிருந்தன, அத்துடன் சேர்த்து தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் இணைக்கும் கடல் பகுதியை தமிழ்க் கடல்எனவும் பிரகடனப் படுத்தியிருந்தனர். தமிழீழத் தேசியம் இவர்களின் தத்துக் குழுந்தையா என்ன? யார் யாருடனோ பேரம்பேசி தமிழீழத்தை தத்தெடுத்து விட்டார்களா? தமிழீழக் கடற்பரப்பினுள் உள் நுழைந்த தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் கைது செய்ததையும்; தி.மு.க ஆட்சிக் காலத்தில், இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை, மீண்டும் இந்தியா மீட்டுக் கொள்ளவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததுவும், அது இன்னமும் தொடர்வதையும் யாவரும் அறிவர் இந் நடவடிக்கையையிட்டு தமிழீழத் தேசியம் எவ்விதம் செயற்பட்டது? கச்சதீவு தமிழீழ தேசத்துக்கே உரியது என்பதே தமிழீழத்தின் நிலைப்பாடாகும். தமிழீழத்தின் தேசிய தன்னாட்சியுரிமையில் கைவைக்கும் உரிமை யாருக்குமேயில்லை. அவ்விதம் கைவைப் -பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், அது யாராக இருந்தாலும் என்ன?
வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா ஆகிய நாடுகளின் தேசியத்தை உருவாக்குவதில் சீனாவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப் பெரும் பங்கிருந்தது. ஆனால், அதற்காக சீனா இந்நாடுகளை தனது சேய் என்று என்றுமே சொன்னதில்லை. சீன, வியட்நாம் ஆகிய இருநாடுகளுக்கிடையிலும் தற்போது கடல் பரப்பினில் தீவுக்கூட்டம் ஒன்றின் இறமை தொடர்பான உராய்வுகள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் தத்தமது இறமைகளை விட்டுக் கொடுக்காத முறையில் தமக்குள்ளான முரண்பாடுகளை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தமிழ் இனத் தேசியவாதிகள் தமிழீழத்  தேசியத்தின் இறமையை ஏற்றுக்கொள்ளத் தயராய் இல்லை.
தமிழீழத்தின் போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் வயிற்றுப் பிழைப்பு நடத்திவருகிறார்களே தவிர, தமிழீழத் தேசியத்தின் வளர்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தப் பங்கும் வகிக்கவில்லை.
(1) இந்திய சமாதானப் படைக்கும் (IPKF), விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையேயான யுத்தத்தின் போது, IPKFஐ இலங்கையில் இருந்து வெளியேற்ற இவர்கள் கொடுத்த ஆழுத்தங்கள் என்ன? இவ் யுத்தத்திற்கு காரணமான இந்திய தேசிய காங்கிரஸுடனான நட்பைத் தொடர்ந்து பேணிவருவது ஏன்?
(ஆ) 1983இல் இருந்து முள்ளிவாய்க்கால் பேரழிவுவரை நடந்த இனப் படுகொலைகளை -யிட்டு இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? 1983 நடவடிக்கைகளையிட்டு இந்திய மத்தியரசும், இந்திய காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழர்க -ளுக்கு சாதகமான சில நடவடிக்கைகள் எடுத்தன. ஆனால் அவை, திராவிட இன தேசியவாதிகளினதோ, தமிழினத் தேசியவாதிகளினதோ அரசியல் நிர்ப்பந்தங்களாலல்ல. இந்தியத் தேசியத்தின் இறமை கருதி மத்தியரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் 10 வருடங்கள் கடந்தும் ஸ்ரீ றிலங்கா அரசாங்கத்தால், ஐ.நா சபையால் பிரேரிக்கப்பட்ட சாதாரண துயர் துடைப்பு நடவடிக்கை -களை இட்டுங்கூட கூட எதுவும் நடைபெறவில்லை. ஐ.நா சபையின் பிரேரணணகளில் எதையும் இந்திய மக்களிடையே குறிப்பாக தமிழ் மக்களிடைய ஜனரஞ்சகப் படுத்தி, அது தொடர்பாக இந்திய மத்தியரசுக்கு மக்கள் அழுத்தங்களை கொடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின தேசிய வாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்வோர்கள் வகுப்பறையின் பின் வரிசை மாணவர்கள் வந்துள்ளேன் சார்’ ‘வந்துள்ளேன் சார்என உரத்த குரலில் எம்பிநின்று கூச்சல் போடுவது போல் இவர்களின் தமிழீழ தேசிய உணர்ச்சியும் அடங்கிவிடுகிறது. அவ்வளவு தான்.
(இ) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக (1977 இல் இருந்து) இலங்கையில் இருந்து தமிழ் அகதிகள் வெளியேறிய வண்ணமே உள்ளார்கள். சமீபத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இவ் வெளியேற்றம் இன்னமும் அதிகரிக்கப்போவது நிச்சயம். இவ்விதம் வெளியேறியவர் -களில், இந்தியாவில் உள்ளவர்களைத் தவிர, பிற நாடுகளின் அகதிகளுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது. ஒன்றில் குடியுரிமை, அல்லது Green card உரிமை, அல்லது சட்டவிரோதக் குடியேறிகளல்ல என்ற உத்தரவாதத்துடன் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் உரிமை கிடைத்துவிட்டது.(அவுஸ்ரேலியா மட்டும் விதிவிலக்காக -வுள்ளது) ஆனால் இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகள் இன்னமும் கள்ளத்தோணி -களாகவேகருதப்படுகிறார்கள். சட்டவிரோதக் குடியேறிகள்என்பதுவே இவர்களுக்கான சட்டரீதியான அங்கிகரமாகும். எப்போதும் நாடுகடத்தப்படலாம், எப்போதும் சிறைபிடிக்கப் -படலாம், எப்போதும் தடுப்புமுகாமில் அடைக்கப்படலாம், விசேட காரணங்கள் எதுவும் கூறத்தேவையில்லை சட்ட விரோதக் குடியேறிகள்என்ற அடையாளமே போதுமானது. இதுதான் இந்திய ஜனநாயகம்.
இத்தனைக்கும் இலங்கையில் வாழும் மலையகத்தமிழர்களில் ஒரு பகுதியினரை பிரஜா -உரிமை யற்றவர்கள் ஆக்கியது இலங்கை, இந்திய அரசுகளேயாகும். இலங்கைச் சட்டம் இவர்களை பதிவுப்பிரஜைகளென அடையாளங் காட்டுகிறது. இவர்களில் பலர் இந்திய அகதி முகாம்களிலும் உள்ளார்கள். இவர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி இந்தியப் பிராஜா உரிமை வழங்கவேண்டியது இந்தியரசின் கடமையாகும். ஆனால், எதுவும் ஆகவில்லை.
இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கான நிரந்தரத் தீர்வுதான் என்ன? இந்தியத் தேசியத்தின் அரசியல் தேவைதான் இதை நிர்ணயிக்கின்றதா? இலங்கை, தமிழீழம் ஆகிய தேசங்களின் இறையான்மையில் தலையிடுவதற்காவென நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மக்கள் அணிதான் இவ் அகதிகளா? தமிழ் நாட்டின் நிலைப்பாடும் இதுதானா? அகதிகளின் உரிமைப் பிரச்சனை உலகளாவிய ஒரு மனிதாபிமான உரிமைப் பிரச்சனை என்பதை நிளைவு கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டு தமிழ் இனவாதிகளின் குறிக்கோள் என்ன? அவர்களின் நிரந்தர மௌனத்துக் -கான காரணம் என்ன? அவர்கள் வெறும் அரசியல் வயிற்றுப்போக்குவாதப் போலிகள் என்பதற்கு அகதிகளை ஒட்டிய அவர்களின் நிலைப்பாடு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறிலங்கா அரசால், இந்திய மீனவர்களின் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை எதிர்த்துப் போராட திராணியற்ற, முதுகெலும்பற்ற திராவிட இனத் தேசியவாதிகளும், தமிழ் இனத் தேசியவாதிகளும் தமிழீழ தேசியத்திற்கு துணை நிற்பார்களென இந்தியரசு கருதுவது உண்மையல்ல. ஆகையினால் இத் தடை அவர்கள் மீதான அச்சத்தால் ஏற்பட்டதல்ல. உண்மை வேறெங்கோ இருக்கிறது. அதை ஆராய்வோம்.
இன்றைய இந்தியத் தேசிய அரசின் (அது BJP அரசாக இருக்கலாம் காங்கிரஸ் அரசாக இருக்கலாம்) உடனடிக் குறிக்கோள் (2018-2025 வரை); தான் தெற்காசிய வல்லரசாக மாறவேண்டும் என்பதுதான் உலகின் பிற வல்லரசுகளுடன் (U.S, N.A.T.O, ருஷ்யா, சீனா) தான் நட்பாக இருக்கவேண்டும், அவற்றின் தெற்காசியச் செயற்பாடுகள் அனைத்தும் தன்னூடாக அமையவேண்டும், தன்னை மீறி அமையக்கூடாது என்பதுதான் இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இதில் எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் இன்றைய இந்தியத் தேசியரசு தயாரியில்லை. தனது இன்றைய அரசியல் குறிக்கோளுக்கு எதிரான அனைத்துத் தெற்காசிய அரசியல் போக்குகளையும் இன்றைய இந்தியத் தேசியரசு வெறுக்கின்றது. இப்போக்குகளை தெற்காசிய அரசியல் களத்தில் இருந்து முற்றாக தூக்கியெறிய வேண்டும் என்பதே இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இவ் அரசியல் போக்குகளில் ஒன்றாக விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது பட்டியலில் சேர்ந்துள்ளது. தடைக்கான உண்மையான காரணம்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவேயாகும்.
இது இரண்டாம் பாகமாக வெளியாகும்.
தடை தொடரும் என்ற முடிவுக்குப் பின்னால் பெரும் அரசியல் காரணங்கள் எதுவுமே -யில்லையென்றும், ராஜீவ் காந்தி கொலையால் ஏற்ப்பட்ட கடுங்கோபம் இன்னமும் இந்திய அரசியல் இயக்கங்களைவிட்டு மறையாததுதான் அதற்கான காரணம் என்று கூறுவோரும் உண்டு. சிரிப்புக்கிடமான விளக்கம்.
தேசத்தின் தந்தைஎனவும், ‘மஹாத்மாஎனவும் பிரகடனப்படுத்தப்பட்ட காந்தியைக் கொன்ற இயக்கத்தை தேசபக்தி இயக்கமென தூக்கிக் கொண்டாடுவது யார்? இந்தியாவின் சுதந்திரத்துக்காக தீவிரமாகவும், மாறுபட்ட முறையிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் போராடிய சுபாஷ் சந்திரபோஷிற்கு நடந்தது என்ன? அவரின் அவலத்துக்கான காரணம் யார் அல்லது எது என்பதுகூட இன்னமும் வெளிவரவில்லை. தேசியத் தலைவர்களுக்கு இந்திய அரசியல் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான். அடுத்ததாக இந்திராகாந்தி அவர்களின் கொலை. சீக்கியர்களுக்கு எதிராக இந்திராவால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைக்கான எதிர்வினையே இந்திராகாந்தி அவர்களின் மரணமாகும். நடத்தியது ஒரு சீக்கியரே. இதற்கான சீக்கியர்களையோ, பஞ்சாபிகளையோ அல்லது அவர்கிளைடையே காணப்படும் பஞ்சாபிய தேசிய இயக்கங்களையிட்டோ இந்திய தேசியவாதிகள்தமது தொடர் கோபத்தை வெளிப்படுத்தவில்லையே, ஏன்?
அது போன்றதுதான் ரஜீவ் காந்தி அவர்களின் கொலையும். ஏனெனில், தமிழீழ தேசியப் பொருளாதார, தமிழீழ இராணுவப் பாதுகாப்பு ஆகிய இருவிடயங்களிலும் பிரபாகரன் தற்சார்பு கோட்பாட்டை மிக இறுக்கமாகவும், வழுவல் நழுவல் இன்றியும் பின்பற்றினார். யாரையும், எதற்காகவும் சார்ந்து நிற்கவில்லை. இது விடயத்தில் அவர் ஓர் உலகளாவிய முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இந் நிலைப்பாட்டை இந்தியரசு வரவெற்றது. தனது தெற்காசிய ஆதிக்க நிலைக்கு பிரபாகரன் தடையாக இருக்கமாட்டார் என்பதையும், வெற்றிகொள்ள உதவியாகவும் இருப்பார் என நம்பியது. இதனால் தமது சொந்த நாட்டின் தமிழ் நாடு தேசத்தின் இறையாண்மை பற்றி எதுவித அக்கறையுமற்ற சில போராளிகள்’ (வை.கோ, நெடுமாறன் போன்றவர்கள்) வழர்வதையும் வாழ்வதையும் ஊக்கப்படுத்தியது. இவர்களின் ஊடாக புலிகள் இயக்கத்தை இந்தியத் தேசியத்தின்துணைப்படையாக மாற்ற முற்பட்டது. ஆனால், இந்திய அரசு தோற்றுப்போனது. இத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதுபோனமையின் விளைவதான் விடுதலைப் புலிகள்-IPKF மோதலாகும். அங்கும் பிரபாகரன் வென்றுவிட்டார்.
ஆனால் பிரபாகரனுக்கு பின்னைய விடுதலைப் புலிகள் இயக்கம்; இன்று, அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய சார்பு நிலையை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்றைய நிலைப்பாடு, மூலோபாய வகைப்பட்டதா அல்லது தந்திரோபாய வகைப்பட்டதா என்பது புரிய இன்னும் சில காலம் எடுக்கலாம். அனால், இந்தியரசும் அதன் புலனாய்வுப் பிரிவுகளும் வி.பு.இ அமெரிக்க-மேற்கு முகாமைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை முடிவெடுத்துவிட்டன. ஆகவே தடை நீடிக்கப்படுகிறது.
குறிப்ப:- இன்றையத் தெசிய அரசு எனும் பதத்தின் அர்த்தம் BJP அரசாக இருந்தாலும் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதேயாகும்
தொடரும்
பாகம் 2 :- விடுதலைப் புலிகள் மீதான தடையும்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவும்.
இக்கட்டுரையாக முழுமையாக புரிந்து கொள்வதற்காக அடிக்குறிப்பு ஒன்று இணைக் கப்படும். இது பாகம் 3ஆக அமையும். பாகம் 2 நான்கு நாளில் வெளிவரும். பாகம் 3, இன்றிலிருந்து 10 நாட்களில் வெளிவரும். வாசகர்களின் கருத்துப் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.
அடிக்குறிப்புகள்: I
(1) பாக்கிஸ்தான் உருவாகிய தகவல்
(2) லோக்மான் திலகரின் இயக்கம் பற்றிய குறிப்புகள்
(3) சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இயக்கம்
(4) காந்தி பிரித்தானியத் தொடர்பு
(5) இஸ்லாமியர்களால் இந்தியா ஆளப்பட்டது பற்றிய குறிப்புகள்
(6) சிலுவை யுத்தம்
(7) ஒரு நாடு இரு தேசங்கள்
(8) பங்காள தேஷ உருவானது பற்றி
(9) பங்காள தேஷில் இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கை
(10) காஷ்மீர் விவகாரம்
(11) இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக மாறிய விபரங்கள்
(12) SEATO பற்றி
(13) U.N.O தடை பற்றிக் கூறல்
(14) இந்திய-பாக்கிஸ்தானிய யுத்தங்கள்
(15) இம்ரான் கானின் ஆட்சி
(16) S.C.O-பாக்கிஸ்தான் இந்திய இணைப்பு
(17) One way One road?-பாக்கிஸ்தான் ஊடாகச் செல்ல-துறைமுகம் விபரம்
(18) சீன-பாக்கிஸ்தான் கடன்
(19) I.M.F
(20) பலுஸ்திஸ்தான்
(21) BRIC
(22) ஆப்பானிஸ்தான்
      (23) இஸ்ரேல் பாலஸ்தீனிய உறவு
நன்றி.

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...