அம்பேத்கர்ரைப் பாதுகாப்போம்!!
எதற்காக இம் முழக்கம்? யாரிடமிருந்து அவரைப் பாதுகாக்கா வேண்டியுள்ளது? அரசியல்,
பண்பாட்டரம்க்கினில் அரங்கினில் பிராமணிய வாதிகளென அழைக்கப்படும் சனாதானிகளிடமிருந்து
/ நால் வர்ணக் கோட்பாட்டாளர்களிடம் இருந்து
பாதுகாக்கவேண்டியுள்ளது. அவர்களின் தாக்குதல்களில் இருந்தல்ல, அவர்களின் அரவணைப் புகளில்
இருந்து.
அவர்களின் அரவணைப்பு முயற்சிகளில் என்ன
தப்பு? அவர்களே பேசட்டும்.
அவர்; இந்தியக் குடியரசின் யாப்பை ஆக்கியவர்;
அவர்; இந்திய நிதி மூலதனத்தின் செயற்படுநெறியை
வகுத்தளித்தவர்;
அவர்; கௌதம புத்தரைத் தொடர்ந்து, பெண் அடக்குமுறைக்கெதிராக
கருத்தியல் போராட்டம் நடத்தியவர். இப் போராட்டம் இல்லையேல் பார்ப்பனியப் பெண்கள் இன்னமும்
அடிமைகளாகவே இருந்திருப்பர்.
தெற்காசிய முழுமையும் கம்யூனிஸ்டுகளின்
வசம் போய்விடுமோ என்ற அச்சத்தில் “சுதந்திர இந்திய அரசாங்கத்தை” இந்தியர்களுக்குப்
பரிசாக அளித்த, பிரித்தானிய அரசுடனான நட்பைப் பாதுகாப்பதில் குறிப்பிடக் கூடியளவு பங்காற்றியவர்.
இவ் அம்பேத்காரை நாம் எம்மவரென உரிமை கொண்டாடுவதில் தப்பேதும் உண்டோ?
மிதவாத பிராமணியவாதியான ஜவர்லால் நேருவும், அம்பேத்கரும் நண்பர்களாக இருந்துள்ளதையும் தீவிர பிராமணிய வாதிகளாகிய
நாம் அம்பேத்கருடன் நட்புக்கொள்ள முனைவதையும் வேறு படுத்திப்பார்ப்பது ஏன்?
இக் கேள்விகள் நியாயமானவையே. இவை ஆக்கபூர்வமான, வளர்திசைத் தன்மை
மிக்ககேள்விகளே. ஆனால், இக்கேள்விகளைக் கொண்டு அம்பேத்கரை பிராமணியவாதியாக அல்லது பிராமணிய வாதிகளின்
நண்பனாக ஆக்க முற்படுவது அங்கிகரிக்க முடியாதது.
யார் இந்த அம்பேத்கர்? மீழவும் தொகுப்போம்:
1. 1) தான் இந்துவாகச் சாகமாட்டேன் எனப் பகிரங்கப்
பிகடனம் செய்தவர், தன்னோடு பல்லாயிரக்கணக்கானோரை இணைத்து பௌத்த மதம் மாறியவர்.
2. 2 ) புத்தரைப் போன்றே இவரும் நான்கு வேதங்களையும்
ஏற்க மறுத்தவர்.
3. 3) நால் வர்ணக் கோட்பாடுதான் இந்திய சமூகத்தில்
நிலவும் பெண் அடக்குமுறைக்கான பிரதான காரணமென்பதையும், பெண் அடக்கு முறையின் இருத்தல்தான்
நால்வர்ண கோட்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்குகின்றது என்பதையும் கௌதமபுத்தர் புரிந்து
கொண்டதைப் போல் அம்பேத்கரும் புரிந்து கொண்டிருந்தார்.
சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து
விடுபட அந்நிய மதங்களை நாடாமல் பௌத்த நெறியை நாடியதற்க்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
புகுத்தப்பட்ட இரு பெரும் மதங்களும் பெண் அடக்குமுறை விடயத்தில் பிரமாணியத் துவத்திற்கு
சளைத்தவைகளல்ல. மூன்றும், ஆண்மேலாதிக்கம் எனும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகளே.
4. 4) பிராமணியத்துவத்தால் மடைமாற்றம் செய்யப்பட்டு
தோற்றுவிக் கப்பட்ட பௌத்த மதங்கள் இரண்டுக்கும்(ஹினாயான, மஹாயான) எதிரான கருத்தியல்
போராட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்தவர். மூல பௌத்தமே உண்மையாதெனப் பறைசாற்றி, அதை வழர்க்க
முற்பட்டவர்.
5. 5) தலித் உரிமைகளைக் கருத்தில் கொண்டு அம்மக்களுக்கு
இரட்டை வாக்குரிமையை முன்வைத்தவர். இதை மறுத்த காந்தியுடன் வெளிப்படை யானதோர் அரசியல்
போராட்டம் நடத்தியவர். இது தலித் தேசியத்தைப் பற்றிய அம்பேத்கரின் சிந்தனையில் இருந்து
உருவான திட்டமேயாகும். காந்தி இதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டார். ஆகவே தனது உயிரைக்
கொடுத்தாவது இதை எதிர்க்க முடிவெடுத்தார்.
6. 6) சுய ராஜ்யப் போராட்டக் காலத்தில் அப்போராட்டத்தை
ஏற்க்க மறுத்தவர். அச் சுராஜ்யம் சதுவர்ணக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்ட
தாகவே இருக்கும் என்பதே அவர் கூறிய காரணமாகும். இதனால், இப் போரட்டக் காலத்தில் இந்திய
தேசியக் காங்கிரஸுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அதுவும் பிரமாணித்துவ கட்சிதான்
என்பதை அவர் நன்கு புரிந்திருந்தார்.
7. 7) காங்கிரஸுடன் தன்னை இனங்காட்டிக் கொள்ளாதவர்
மட்டுமல்ல. இஸ்லாமியரின் தேசிய உரிமை தொடர்பான விடயத்தில், சவாக்கர் அணியினரால் முன்வைக்கப்பட்ட
“இரு தேசம் ஒரு நாடு” எனும் அரசியல் கோட்பாட்டை எதிர்த்தவர். இந்துக்களுக்கு முன்னுரிமை
கொடுத்து பிற மதப்பிரிவினரை மதிக்காத ஒரு தேசிய இயக்கம், ‘இரு தேசம் ஒரு நாடு” எனக்
கூறுவது ஒரு ஏமாற்றே என விழக்கியவர். ஆகவே,
ஜின்னாவின், ‘இரு தேசம், இரு நாடு” எனும் கோரிக்கைக்காகவே வாதாடினார்.
8) தனது அனைத்து நடவடிக்கைகளிலும் தலித் தேசியத்தை
முன்வைத்தவர். தலித் தேசியத்தை ஒரு மொழிவளித் தேசியமாகவோ, பிரதெச வழித் தேசியமாகவோ
உருவாக்க முடியாது. ஏனெனில் அம்மக்கள் திரளுக்கென குறிப்பிட்டதொரு மொழியோ, குறிப்பிட்ட தொரு
பிரதேசமோ இல்லை.
ஒரு பொது மதவளித் தேசியமாகவும் உருவாக்க முடியாது. ஏனெனில் இவர்கள் மத்தியில் காணப்பட்ட குலதெய்வ வழிபாட்டு ஒரு பொதுமதமாக உருவாக வில்லை. பிராமணியம் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை. இத் தெய்வங் கள் பிராமணியக் கடவுளர்களின் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டார்கள். அத்துடன், இந்தியாவில் நிலவும் மூன்று பெரிய மதங்கங்களில் எந்த மதமும் இந்தியாவை சாதிகளற்ற, மதவெறியற்ற சமுதாயமாக ஆக்கும் கோட்பாடுகள் அற்றவையாகும். பிராமணியத்தால் ஆதிக்கம் செலுத்தப் பட்டாலும், இந்தியளவிலான ஆதிக்கநிலைக்கு வரமுடியாத நிலையிலுள்ள சைவமும், பிற சமயங்களுங்கூட அவ்விதமே.
ஒரு பொது மதவளித் தேசியமாகவும் உருவாக்க முடியாது. ஏனெனில் இவர்கள் மத்தியில் காணப்பட்ட குலதெய்வ வழிபாட்டு ஒரு பொதுமதமாக உருவாக வில்லை. பிராமணியம் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை. இத் தெய்வங் கள் பிராமணியக் கடவுளர்களின் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டார்கள். அத்துடன், இந்தியாவில் நிலவும் மூன்று பெரிய மதங்கங்களில் எந்த மதமும் இந்தியாவை சாதிகளற்ற, மதவெறியற்ற சமுதாயமாக ஆக்கும் கோட்பாடுகள் அற்றவையாகும். பிராமணியத்தால் ஆதிக்கம் செலுத்தப் பட்டாலும், இந்தியளவிலான ஆதிக்கநிலைக்கு வரமுடியாத நிலையிலுள்ள சைவமும், பிற சமயங்களுங்கூட அவ்விதமே.
ஒரு சமூக மக்கள் திரள் தன்னையொரு தேசிய
இனமாக உருவாக்கிக் கொள்வதற்கு, அவசியமான திரள்வுகளில் மரபுவளிப் பண்பாடும் ஒன்றாகும்.
இதனால், அம்பேத்கர், தலித்துகளை ஒரு தெசிய இனமாக உருவாக்கிக் கொள்வதற்கு பௌத்த நெறியைத்
தேர்ந்தெடுத்தார். பௌத்த நெறியின் துணையுடன் தலித்துகள் மத்தியில் நிலவிவந்த குலதெய்வ
வழிபாட்டு முறையை தள்ளிவைக்கலாம் எனக் கருதினார். தலித் தேசியத்தின் அடையாளமாக பௌத்தத்தை
ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். பௌத்ததை ஒரு மதமாக அல்ல அதையொரு சமூக வாழ்வியல் நெறியாகக்
கருதினார். தலித் தேசியத்திற்கும், பிராமணியத் தேசியத்திற்கும் இடையேயான போராட்டத்தை
பௌத்தநெறிக்கும், நால் வர்ணக்கோட்பாட்டிற்கும் எதிரான போராட்டமாகத் தொடர விரும்பினார்.
பாராட்டப்படவேண்டிய அரசியல் மூலோபாயம்.
ஆனால் அம்பேத்கரின் குறிக்கோள் நிறைவேறவில்லை.
சந்தர்ப்பம் கிடைத் தால் அதை வேறொரிடத்தில் அலசுவோம். இரத்தினச் சுருக்கமாக அடிப் படைக்
காரணத்தை முவைக்கின்றேன். பொருள்முதல்வாதி அல்லாதவர் களால் முவைக்கப்படும் சமூக வாழ்வியல்
நெறிகள் அவை எவ்வளவு முற்போக்காக இருந்தாலும், காலப்போக்கில் ஒரு மதமாக மாறிவிடும்.
இது வர்க்க ஒடுக்குமுறை சமூகத்தின் இயல்பாகும். இதனால் பௌத்த நெறியும் ஒரு மதமாக மாறியது.
யேசுக்கிறிஸ்துவுக்கும், முகமது நபிக்கும் நடந்ததுதான் புத்தருக்கும் நடந்தது. கன்பூயிசிஸஸுக்கும்
இந்நிலை நடந்திருக்கும் ஆனால் சீனக் கம்யுனிஸ்டுகள் தடுத்துவிட்டார்கள்.
புத்தருக்குப் பின்னைய பௌத்தம், புத்தரால்
முன்வைக்கப்பட்ட சமூக வாழ்வியல் நெறிக் கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளை கொண்ட தானதாக
மாறியது. இலங்கை, மலேசியா, கம்பூச்சியா, திபெத் ஆகிய நாடுகளின் பௌத்தஅரசுகள் தத்தமதுநாடுகளில்
செய்துவரும் இனஒழிப் புகள், வர்க்க ஒடுக்கு முறைகள், மனிதக் கொலைகள் கொஞ்ச நஞ்சமா?
புத்தர் ஒரு பரமபௌதீகவாதி. சமூக நிகழ்வுகள்
பற்றிய காரண-காரிய தொடபுகளுடனான ஆய்வில் புத்தர் இயங்கியல் பார்வை உள்ளவராக இருந்துள்ளார்.
ஆனால் பொருள்முதல் பார்வை இருக்கவில்லை, பரம பௌதீகப் பார்வையே இருந்துள்ளது. அம்பேத்கரின்
குறிக்கோள் நிறை வேறாததற்கான காரணம் இதுவேயாகும். இதுபற்றித் தொடர்வோம்.
9. 9) சாதிவாரியான இட ஒதுக்கீட்டை இந்தியாவின்
நிரந்தர விதியாக மாற்றியவர். இவ் விதி எந்தவர்ணத்திலும் சேர்த்துக்கொள்ளப்படாத (சமூக
அந்தஸ்து முற்றாக நிராகரிக்கப்பட்ட அடிமைகள்) தலித்துக்களுக்கு மட்டும் நன்மைபயக்கக்
கூடியதல்ல. நான்காவது வர்ணமாக விதிக்கப்பட்ட சூத்திரர்களுக்கும் (சமூக அந்தஸ்து நிராகரிக்கப்படாத
அடிமைகள்) பயன் படக்கூடியதே.
இந்திய சாதியமைப்பு ஒரு நிமிர்த்திவைத்த
சமபக்க முக்கோணமாகும். இம் முக்கோண உச்சியின்
கால்பங்கு பிராமணர், ஷைத்திரியர், வைஷியர் ஆகியோரை உள்ளடக்கியது. இதன் மீத முக்கால்பங்கும்
இருவகை அடிமைகளாலும் ஆக்கப் பட்டவை. இதில் அடித்தளம் தலித்துகள், அவர்களுக்கு மேல்
சூத்திரர்கள். ஆகவே இட ஒதுக்கீட்டின் காரணத்தால், அடித்தட்டில் உள்ளவர்கள் படிப்படியாக
முக்கோணத்தின் உச்சத்தை நோக்கி நகர்வார் கள், இதனால் காலப்போக்கில் சமபக்க முக்கோணம்
தனது வடிவை இழக்க ஆரம்பிக்கும், எவ்வித தடையுமின்றி இடஒதுக்கீடு தொடருமானால், இந்தியச்
சாதிக் கட்டுமான வரைபடம் வட்ட வடிவானதாக மாறக்கூடும். அதாவது சாதிகள் இருக்கலாம் அல்லது
இல்லாது போய்விடலாம் நிச்சயமில்லை, ஆனால் தொழிலை வைத்துக் கொண்டு சாதிகளைப்பிரிப்பது
சிரமமானதாகிவிடும்.
இருந்தும், இடஒதுக்கீடு தனியார் உடைமைகளுக்கும்
விஸ்தரிக்கப்படும் போதுமட்டுமே இது சாத்தியமாகும். பிராமணியவாதிகளின் தலைமை யிலான அரசியல்
தலைமைகள் தனியாருடமையை ஊக்குவிப்பதற்கான காரணங்களில், தலித்துக ளுக்கும், சூத்திரர்களுக்குமான
தொழில் வாய்ப்பை இல்லாமல் செய்வதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
முதலாளித்துவ வளர்ச்சி சாதியத்தை இயல்பாகவே
ஒழித்துவிடும் எனக் கருதுவது, தெற்காசியச் சமூகச் சூழலில் மிகமிகத் தப்பானதாகும். சாதியத்தை
ஒழிக்க தனியான வேலைத்திட்டங்கள் அவசியம். முதலாழித் துவ வளர்ச்சி பெற்ற அமெரிக்காவுக்கே
இன்னமும் மார்ட்டீன் லூதர் கிங்குகள் தேவைப்படும்போது, இந்தியாவின் நிலை எப்படியிருக்கும்,
இன்னும் பல அம்பேத்கர்கள் தேவையாக உள்ளது.
ஆகவே இடஒதுக்கீட்டை தனியார் துறைக்கும்
விஸ்தரிப்பதற்கான போராட்டம் தொடரவேண்டும். அதாவது அம்பேத்கரை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச்
செல்லவேண்டும்.
10. 10 நிதி மூலதனத்தின் செயற்பாட்டிற்கு சாதகமாக
அம்பேத்கர் செயற் பட்டதுவும் சூத்திரர்களினதும், தலித்துக்களினதும், பழங்குடி மக்களினதும்
தொழில்வளர்ச்சியை மனதில் கொண்டேயாகும். நிலமும், நிதியும் மூவர்ணத்தினரின் கைகளிலேயே
குவிக்கப்பட்டிருந்தன. இன்றும் கூட இந்நிலை தொடர்கிறது, சிற்சில அபிவிருத்திகளுடன்.
இவர்கள் கைகளிலி ருந்த நிதி, தொழில் முலதனச் சுபாவம் கொண்டதல்ல. ஓரளவிற்க்கு வர்த்தகசுபாவமும், பெருமளவிற்கு லேவாதேவிக்
குணாம்சமும் கொண்டதாகும். தொழில் வழர்ச்சிக்கான மூலதனத்தின் தேவையை பூர்த்திசெய்வதில்
அம்பேத்கர் அதிக நாட்டங்காட்டிய அம்பேத்கர் நிதிமூலதனச் சுதந்திரமானதாக்க முயற்சித்தார்.
தொடரும்………
08/12/2018----சனிக்கிழமை
No comments:
Post a Comment