தமிழீழ
உள்நாட்டு யுத்தமும்
அதன் காரண காரியத் தொடர்புகளும்.
தமிழ் மாணவர் பேரவையின் காலத்தில்
இருந்து, தமிழீழ அரசின் ஆளுமைகள் உயிர் நீக்கமும் பதவி நீக்கமும் செய்யப்பட்ட நாள்வரை
நடந்த உள்நாட்டு யுத்தம்பற்றி மாவீரர் நினைவுகளும் மாவீரர் நாளும். https://vidiyalgowri.blogspot.com/2018/11/blog-post_28.html என்ற
எனது முன்னைய கட்டுரையில் கூறியிருந்தேன். அக் கட்டுரை இவ் உள்நாட்டு யுத்தத்திற்கான
காரணம் விடுதலைப் புலிகள் இயக்கம் மாத்திரமே என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக ஓர்
விமர்சனம் வந்துள்ளது. ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விமர்சனம். இக்கட்டுரையில் அவ்விதத்
தொனி வருகிறதேதவிர எனது கருத்து அவ்விதமில்லை. இந்திய சமாதானப் படையுடனான யுத்தத்தில்
விடுதலைப்புலிகள் வெற்றிபெறும்வரை, NLFT தவிர்ந்த அனைத்து இயக்கங்களும், உள்நாட்டு
யுத்தங்களில் ஈடுபட்டவண்ணமே இருந்துள்ளன. ஒவ்வொரு இயக்கமும் மாறிம்மாறி தற்காப்புனிலையிலும்
தாக்குதல் இருந்தே வந்துள்ளன. IPKF உட்னான யுத்தத்தின் வெற்றியின் பின்னர், புலிகள் இயக்கம் தாக்குதல்
நிலைக்குச் சென்றது, மீத இயக்கங்கள் அனைத்தும் தற்காப்பு நிலைக்குச் சென்றன. கூனிக்
குறுகி நிலைதாடுமாறி நிற்கும் நிலைக்கு உள்ளாகின. முள்ளிவாய்க்கால் இனஒழிப்புக் கொலைவரை
புலிகளின் இராணுவப்பரிவு வெற்றிப் பெருமிதத்துடன் மார்தட்டித் திரிந்தது. ஆகவே தமிழீழ
உள்நாட்டு யுத்தத்திற்கான முழுப்பழியையும் விடுதலைப் புலிகள் மீது போடமுடியாது. ஆடு
வெட்டமுன்னர் புடுக்குக்குச் சண்டைபிடித்து ஆட்டையே எதிரியிடம் பறிகொடுக்கும் சாதனையைப்
புரிந்தது புலிகள் மட்டுமல்ல, அனைத்து இயக்கங்களுந்தான். ஆனால் இவ் உள்நாட்டு யுத்தத்தில்
புலிகளின் அரசியல் பார்வைவேறு, பிற இயக்கங்களின் அரசியல் பார்வைவேறாகும். இது பற்றி
இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.
முன்னைய கட்டுரையில் தெழிவில்லாத அடுத்த
விடயம். இக்கட்டுரையின் வாசகன் உள்நாட்டு யுத்தம் பற்றிய ஒரு தூய்மைவாத அல்லது அத்துமீறல்வாத
கண்ணோட்டத்தைப் பெறக்கூடிய விதத்தில் அமையக் கூடிய ஆபத்து உண்டு. எவ்விதம் என்பதை நோக்குவோம்.
நான்கு காரணங்களைக் கூறலாம்.
1) முதலாளித்துவ
பேரகங்காரவாத பாரளுமன்ற ஜனநாயகத்தின் இருத்தல்.
2) காலனியாதிக்கத்திற்கு
முன்பிருந்தே தொடரும் அல்-முதலாளித்துவ நடுத்தர-சிறு உடமை விவசாய, தமிழ் மரபுகள்.
3) மூலதனக்
குவியலுக்கு பெரும் தடையாக இருக்கும் தமிழீழப் பொருளாதாரக் கட்டுமானம்.
4) தமிழீழப்
போராட்டக் களம் பாசிஸத் தேசியவாதமும், அல்-பாசிஸத் தேசியவாதமும் தமக்குள் மூர்க்கமுடன்
களமாக இருப்பது.மோதிக்கொள்ளும் களமாக இருப்பது.
1 ) முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின்
இருத்தல்:-
மஹாவம்ச பேரகங்காரவாத முதலாளித்துவ ஜனநாயகத்தில்
நம்பிக்கையில்லா நிலையிலேயே தமிழ் மக்களிடையே ஆயுதப்போராட்டத்தின் அவசியம் பற்றிய கருத்து
மலரத் தொடங்கியது. இது மக்கள்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கருத்தல்ல. தமிழ் எம்.பிக்களை
பாரளுமன்றத்தில் இருந்து துரத்தியது, பாராளுமன்றத்தை தமிழ்மக்களின் நலனுக்கு எதிரானதொன்றாக
மாற்றியது ஆகிய நடவடிக்கைகள் மக்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி துரிதமாக நடத்திச் சென்றன.
ஆனால், பாரளுமன்ற ஜனநாயகத்தின்(பா.ஜ) மீதான நம்பிக்கையின்மை
எடுத்த எடுப்பில் ஆயதப்போராட்ட இயக்கமாக மாறியமை, ஆயுதப் போராட்டத்தின் அடுத்தகட்ட
வளர்ச்சிக்குப் பாதகமானதாகவே அமைந்தது. இவ் நம்பிக்கையின்மையின் அடுத்த கட்டம் மக்கள்
திரள் திரளாகவும், தொடர்ச்சியாகவும் வீதிக்கு இறங்கிப் போராடுவதாக அமையவேண்டும். இன்று
இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், ஐரோப்பிய நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக
தொடர்ந்து நடைபெற்றுவரும் மக்கள் திரள் போராட்டங்கள், சீனாவில் நடந்த அபினி எதிர்ப்பு
யுத்தம், இந்தியாவில் நடந்த உப்புச்சத்தியாகிரகம், அந்நியப் பொருள்கள் எதிர்ப்பு இயக்கம் ஆகியனவற்றைக்
குறிப்பிடலாம். இவ்விதமான எந்தவோர் இயக்கமும் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசத்தில் நடைபெறவில்லை.
சத்தியாகிரகக் காலத்தில் நடைபெற்றது. ஆனால் இது ஆயுதப்போராட்டத்துக்கான முன்னுரையல்ல.
மீண்டும் மக்கள் பாரளுமன்ற ஜனநாயகத்துள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டார்கள்.
ஆனால், 70களின் நிலமை அவ்விதமல்ல.
மக்கள் தயார், ஆனால் அவர்களுக்கான சந்தர்ப்பம் வளங்கப்படவில்லை. மக்களின் பங்களிப்புகள்
இல்லாமலேயே, மக்களை இயல்பாகவே விழிப்ப்டையச் செய்யாமலேயே, அவர்களைப் ஆயுதப்போராட்ட
சூளலுக்குப் பயிற்றுவிக்காமலேயே, ஆனாலும் மக்களின் ஆதரவுடன் ஆயுதப்போராட்ட சகாபதம்
ஆரம்பமாகியது. வகைதொகையின்றிக் காணப்பட்ட பாரளுமன்ற ஜனநாயக தலைவர்களும், சீடர்களும்
அவசர அவசரமாக தமது முகங்களில் முகமூடி அணிந்து கொண்டார்கள். ஆயுதப்போராட்டத்தை அடக்குவதற்கு
அல்லது அதை சீர்குலைப்பதற்கு தம்மால் ஆனவற்றைச் செய்யத்தொடங்கினார்கள். மக்களின் விழிப்புணர்வின்மையைத்
தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கு காட்டிக்
கொடுப்புகள், ஊடுருவல்கள், அரசியல் திசைதிருப்பல்கள், சதிகள், உள்ளிருந்தே அறுத்தல்
என பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
உள் நாட்டு யுத்தத்திற்கான காரணிகளில்
இதுவும் ஒன்றாகும். தொடங்கும் போதான தவறுகளின் விளைவுகளால் இளைக்கப்பட்ட அடுத்தகட்ட
தவறாகும்
2) காலனியாதிக்கத்திற்கு முன்பிருந்தே தொடரும் அல்-முதலாளித்துவ நடுத்தர-சிறு
உடமை விவசாய, தமிழ் மரபுகள்.
தொடரும்
No comments:
Post a Comment