உரிமையியல்
பிரச்சனையை குற்றவியலாக்குவதா-அது என்ன?
முத்தலாக் சட்டம் தொடர்பாக
கீற்று இதழில் (U.R.L-- http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-aug19/37718-2019-08-02-09-35-37 ) வெளியாகியிருந்த
முத்தலாக்
தடையா முஸ்லிம் அச்சுறுத்தலா? தலைப்பிட்ட கட்டுரை முத்தலாக் தடை
மசோதா சட்டம், ([Muslim Women (Protection
of Rights in marriage) Act, 2019] நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சட்டமாகியுள்ளது.)
இஸ்லாமிய ஆண்களை சிறைக்குள் அடைப்பதற்கான
குறிக்கோளுடன் கொணரப்பட்டது என்ற கருத்தை முன்வைத்துள்ளது. இஸ்லாமிய ஆண்கள் தமது
இஸ்லாமிய மனைவியரை விவகாரத்து செய்வதானால்
மூன்று தடவை ‘தலாக்’ கூறினால் போதும் என்றோர் ‘வழமை’, ‘பண்பாடு’, ‘மரபு’ இஸ்லாமிய சமூகத்திரிடையே
நிலவுகிறது. இது இந்திய இஸ்லாமியர்களிடையே மாத்திரந்தான் நிலவுகிறதா? இல்லை, சிற்சில வேறுபாடுகளுடன் இஸ்லாமியர்களிடையே
உலகளாவிய அளவில் நிலவும் மரபாக உள்ளது.
பெண்களின் சமூக உரிமைகள், குடும்ப உரிமைகள், பொருளாதார உரிமைகள், அரசியல் உரிமைகள் தொடர்பான
பல உரிமை மறுப்புகள் இஸ்லாமியரிடையேயும் நிலவகின்றன என்பது உண்மை. எந்த நாட்டு
இஸ்லாமியர்களும் இதற்கு விதிவிலக்கானவர்களல்ல. ஆனால் பிறமதப் பிரிவுகளிடையே
நிலவுவதைவிட இஸ்லாமியர்களிடையே அதிகமானதாக உள்ளது. அதாவது இஸ்லாமியப் பெண்கள்
அனுபவிக்கும் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் பிற சமூகப் பெண்களுக்கான உரிமைகளுடன்
ஒப்பிடும்பொது மிகக் மிகக் குறைவானது. பிற மதக்குழுமங்களுடன் ஒப்பிடும்போது
இஸ்லாமியப் பெண்களின் ஜனநாயக உரிமைகள் மறுப்பு இஸ்லாமிய மதத்துடன் மிக இறுக்கமாகப்
பிணைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும். இதனால், இஸ்லாமிய சமூகத்தில்
பெண்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் மத சீர்திருத்திற்கு எதிராகவும் அமைவது
தவிர்க்க முடியாதது. ஆனால் இஸ்லாமிய மத மாறாமரபியல் வாதிகள் இதை விரும்பமாட்டார்கள்.
அதிகாரம் எதுவுமற்ற நிலையில் உள்ள இஸ்லாமிய உழைக்கும் மக்களுக்கும்
அதிகாரத்திலுள்ள இஸ்லாமிய ஆளும் வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடுகளை
மழுங்கடிக்கவும், திசைதிருப்பவும் மத
மாறாமரபியல் வாதம் ஒரு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. இதனால் இஸ்லாமிய பெண்களின் ஜனநாயக
உரிமைகனபப் பற்றிப் பேசுவோர்கள் அனைவரும் அல்லாவின் எதிரிகளாகவும் விரோதிகளாகவும்,
இறை மறுப்பாளர்களாகளாவும் முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள் இஸ்லாமிய
சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப் படுகிறார்கள், பிறராக இருந்தால் இஸ்லாமிய
சமூகக் குழுமத்திற்கும் அந்தப் பிறரினது சமூகக் குழுமத்திற்கும் இடையே ஒரு தீவிர
பகமை உறவு வளர்க்கப்படுகிறது.
தெற்காசியாவில் பாக்கிஸ்தான், வங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு ஆகிய நான்கு
நாடுகளும் முஸ்லீம் நாடுகள். இங்கு பிற மதக் குழுமங்கள் வாழ்ந்தாலும் அவர்கள் குரல்வளை
நசுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இருந்தும் அவர்களின் குரல் வெளிவரவே செய்கிறது.
இந் நாடுகளின் இடதுசாரி இயக்கங்கள் மிக மிகப் பலவீனமானவர்களாகவே உள்ளனர். அவர்கள்
அல்லாவின் எதிரிகளாகக் காட்டுவதில் இந் நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் வெற்றி
பெற்றுள்ளன. இதனால் இந் நாடுகளில் வாழும் இஸ்லாமிய மக்களிடையேயான ஜனநாயக
உரிமைக்கான போராட்டம் வெறுமனே அந்நாடுகளின் உள்ளாட்டுப் பிரச்சனையாக
சுருக்கப்படுகின்றது.
ஆனால் தெற்காசியாவின் பிற நாடுகளின் நிலை
அவ்விதமல்ல. குறிப்பாக இலங்கையையும், இந்தியாவையும் எடுத்துக்
கொள்ளலாம். இவ்விரு நாடுகளும் இன்று நடைமுறையில் மத ஆதிக்கத்திற்கு உட்பட்ட
நாடுகளாகவே உள்ளன. இலங்கையில் மஹாவம்ச பௌத்தமும், இந்தியாவில் சனாதன
இந்துத்துவமும் ஆட்சியில் உள்ளன. ஆனால் கொள்கையளவில் இவ்விரு நாடுகளும் பல்-தேச
அரச நாடுகளாகும் (Multi-Metion State Countries)
இதுதான்
கொள்கையளவிலும், அரசியல் சாசன அளவிலும்
ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளாகும், ஆனால் நடைமுறை அவ்விதம் இல்லை. இதனால், அரசியல் சாசனத்தின் படியான
அரசை (Multi-Nation State) உருவாக்குவதற்கான
போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.
பல்-தேச அரசை உருவாக்குவதற்கான போராட்டம், ஒரு அரசு உருவாக்கம்
தொடர்பான பிரச்சனை மாத்திரமல்ல;
அதற்கு
அப்பாலும் உள்ளது. அரச உருவாக்கம் ஒரு முடிவல்ல (end). அது பாதை ஒரு (Means) மாத்திரமேயாகும், இறுதிக் குறிக்கோள் பண்பட்ட
ஒரு சமுதாய உருவாக்கமே யாரும். இது அனைத்து வகையான ஒடுக்கு முறைகளில் இருந்தும்
விடுபட்ட ஒரு சமூகமாக இருக்கும். பல்-தேச அரசின் (multi-nation state) இறுதிக் குறிக்கோள்
இதுதான். இதன் அர்த்தம் இலங்கை,
இந்திய
பல்-தேச அரசுகள் தம்முடன் கூடவெ ஒரு பல்-தேச பண்பாட்டுக் கட்டுமானத்தையும்
உருவாக்கி வரும். இன்று நிலவும் அனைத்துப் பிற்போக்குப் பண்பாட்டுக் கூறுகளும்
தூக்கியயெறியப்படும், புதிய பண்பாட்டுக் கூறுகள்
உருவாக்கப்படும். பல்தேச அரசை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் அனைவரும்
மரபுவழித் தீயபண்பாட்டுக் கட்டுமானங்க ளையும், விழுமியங்களையும் தூக்கியெறியவும், புதிய ஜனநாயகப் பண்பாட்டுக்
கட்டுமானங் களையும், விழுமியங் களையும் உருவாக்கவும் கடமைப்பட்டவர்கள்; அவ்வுரிமை அவர்களுக்கு
உண்டு.
இக் கோணத்தில் இருந்துதான் முத்லாக்
சட்டம் நோக்கப்பட வேண்டும். அது நிச்சயம் தூக்கியெறியப்பட வேண்டும். அரச வன்முறை
அவசியப்பட்டால் பிரயோகிக்கப்பட வேண்டும்.
உரிமையியலும், குற்றவியலும் ஒரு நாணயத்தின் இரு
பக்கங்கள், உரிமையை மறுப்பவர்கள், உரிமையை நடைமுறைப்
படுத்துவதில் தடங்கல்கள் ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்
குற்றவியலுக்குள் சேர்க்கப்பட வேண்டியவர்களே.
அதேநேரம் தீபத்தை
வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம். தீயைக் கொண்டு மூடரெல்லம் ஊரைக் கூட
எரிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்; இந் நினைவு தீபமே வேண்டாம்
என்ற நிலைக்கு இட்டுச் செல்லக்கூடாது. மாறாக மூடர்களின் கைகளில் உள்ள
தீப்பந்தங்களைச் செயலிழக்க வைக்க என்ன
செய்யலாம் என்ற நிலைக்கு இட்டுச் செல்லவேண்டும்.
அ.கௌரிகாந்தன் 12/08/19
No comments:
Post a Comment