ஜனநாயகத் தலைமையென நான் குறிப்பிடுவது,
ஸ்ரீ லங்கா பாராளுமன்றத்தையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளையும் மையமாகக்
கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளையேயாகும்.
இலங்கை “சுதந்திரம்” அடைவதற்கு
சற்றுமுன்னா லிருந்து, இன்று வரையான காலகட்டம்வரை இலங்கையின் வடகிழக்கு மாகாணத் தமிழரின்
தேசிய ஜனநாயகம் தொடர்பாக இருவிதமான அரசியல் போக்குகள் செயற்பட்டுவருகின்றன. இவ் இருவிதங்கள்
கொள்கையும், கொள்கையை அமூல்படுத்துவதற்கான மார்க்கத்தையும் உள்ளடக்கியதாய் இருந்து
வருகின்றன.
முதலாவது போக்கு(தாரளவாதப் போக்கு-liberists):
சிங்கள பௌத்த பேரகங்கா வாதத்துடன்(இனி வரும் பகுதிகளில் இதைக் கொழும்பு என அழைப்போம்)
ஒரு சமரச உறவைப்பேணுவது. இப்போக்கை தாராளவா தப்போக்கு என அடையாழப்படுத்திக் கொள்வோம்.
இவர்களைத் தேசிய இன தாராளவாதிகளென அழை- த்துக் கொள்வோம்.
இரண்டாவது போக்கு:
மூலோபாய ரீதியாக
கொழும்புடன் நீயா? நானா என்றவகைப் பகமையைப் பேணுவதும், இலங்கையின் அனைத்துத் தேசிய
இனங்களுடனும் உனக்காக நானும் எனக்காக நீயும் என்ற வகை நட்பைப் பேணுவதுமாகும். இவர்களைத்
தேசிய இனப் போராளிகள் என அழைப்போம்.
இவ் இரண்டைத்தவிர வேறுபோக்குகள்
இல்லையா என்ற கேள்வியெழும். உள்ளன. அவை நிரந்தரமான வையல்ல. காலப்போக்கில் அவை இவ்விரு
போக்கில் ஏதோ ஒன்றின் துணைஅங்கமாக மாறும், அல்லது சங்கமித்துவிடும் அல்லது மறைந்து
போய்விடும்.
தேசிய இன உருவாக்கம் என்பது பின்வரும்
ஐந்து சமுகத் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கிதொரு அரசியல் நகர்வாகும். அவையாவன:
1---மொழிச்- சுதந்திரம், 2---நிலப்பரப்பு, 3---பொதுச்சந்தை, 4---பண்பாட்டுச் சுதந்திரம்,
5)---இறமை- யைப் பேணக்கூடிய ஒரு அரச கட்டுமானம்.
1--மொழிச் சுதந்திரம்:- இலங்கையின்
தேசிய இனங்களின் உருவாக்க வரலாற்றில் ஆரம்பத்தில் மொழிச் சுதந்திரம் ஒரு உந்துசக்தியாக
திகழ்ந்தாலும், காலப் போக்கில் அதன் முக்கியத்துவம் குறைந்து விட்டது.
2--பண்பாட்டுச் சுதந்திரம்:
அதேபோல்,
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் நிலப்பரப்பில் பௌத்த விகாரகளைக் கட்டுவதுதான் பண்பாட்டுச்
சுதந்திரப் பறிப்பாக இருந்து வருகிறது. இது உண்மையிலேயே நிலப்பரப்பின் சுதந்திரத்துடன்
தொடர்புபட்டதொரு விவகாரமேயாகும். மற்றும்படி பண்பாட்டுச் சுதந்திரப் பறிப்பும் ஒரு
பெரிய விவகாரமல்ல.
3)---நிலப்பரப்புச் சுதந்திரம்:
இலங்கையின் தேசிய இன உருவாக்கத்திலுள்ள பிரதான தடை நிலப்பரப்புச் சுதந்திரமின்மையேயாகும்.
பிரித்தானிய காலனியல் காலத்திலிருந்து இன்றுவரை நிலப்பரப்புச்சுதந்திரம் அற்ற மக்களாகவே
இலங்கையின் தேசிய இனங்கள் இருந்துவருகின்றன. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நிலப்பரப்புகள்
என்றும் பறிக்கப்படலாம் என்ற நிலையே உள்ளது. அகதிகள் எவ்விதம் ஒரு மிதவை நிலை குடிமக்களாகவுள்ளனரோ,
அதேபோல- வே இலங்கையின் மூன்று ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் உள்ளனர். சிங்களத் தேசிய
இனம் தமது நிலம் பறிபோகுமோவென்று அஞ்சும் நிலையிலில்லை. ஆனால் அத் தேசிய இனம் முழுமையான
நிலச்சுதந்திரத்துடன் உள்ளதெனக் கூறமுடியாது.
4)---பொதுச்சந்தை:
மிக மதிநுட்பமாகத்
திட்டமிடப்பட்டு கொழும்புதான் இலங்கைத் தீவு முழுமையினதும் பொதுச்சந்தையாக வளர்க்கப்பட்டு
வருகிறது. இப்போக்கு- த்தான் இலங்கையின் தேசிய இனங்களின் உருவாக்கத்திற்கு மிகப்பெரும்
தடையாக இருந்துவருகிறது. கொழும்பை பொதுச்சந்தையாக வளர்த்தெடுப்பதற்- கான திட்டத்தின்
ஒரு பகுதிதான் நில சுதந்திரப்பறிப்புமாகும். கொழும்புமைய சந்தைப்பொருளாதாரம் ஒடுக்கப்பட்ட
மூன்று தேசிய இனங்களினதும் தேசிய இனவளர்ச்சியை மட்டும் பாதிக்கவில்லை. சிங்களத் தேசிய
இனத்தின் தேசிய இறமையையும் பாதிக்கின்றது. இவ் வளர்ச்சிப் போக்கையிட்டு சிங்களமக்கள்,
கோபமுடனும், வெறுப்புடனுமேயுள்ளனர். சிங்கள மக்களின் இக்கோபத்தை திசைதிருப்புவதற்காகத்தான்
சிங்கள-பௌத்த பேரகங்காரவாத அரசும் அரசியல் கட்சிகளும் இனவாத வன்முறைத்தீயை அணையவிடாது
எண்ணையூற்றி கொழுத்திக் கொண்டேயுள்ளார்கள்.
5)---இறமையைப் பேணக்கூடிய ஒரு
அரச கட்டுமானம்:
இது தனியரசாக இருக்கலாம் அல்லது
தேசிய ஜனநாயகத்தைப் பேணக்கூடிய ஒருவகை அதிகாரப் பரவலாக்கலாக்க அரச கட்டுமனமாக இருக்கலாம்.
தற்பொதைய ஸ்ரீ லங்கா அரசு இவ்வித இறமைக்கு முற்றிலும் எதிரானது. சிங்கள தேசிய இனத்தின்
இறமைக் குக்கூட பாதுகாப்பு வழங்காத தற்போதைய ஸ்ரீ லங்கா அரசு, இலங்கையின் ஒடுக்கப்பட்ட
தேசிய இனங்களின் இறைமையில் அக்கறைசெலுத்துமென எதிர்பார்க்க முடியாது.
இனி தாராளவாதப் போக்காளர்களின்
செயற்பாடுபற்றிப் பார்ப்போம்.
தாராளவாதிகளின் செயற்பாடு:
மொழி
உரிமையையும், பண்பாட்டு உரிமை- யையும் பாதுக்காக்கிறோம் என்ற பெயரில் அப்பப்போ சில
அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இதன் நோக்கம் வாக்குப் பொறுக்குவது தவிர வேறொன்றா கவும்
இருக்காது. தமிழ்த் தேசிய இனத்துக்கான பொதுச்சந்தைபற்றி இவர்களுக்கு எந்த நாட்டமும்
இதுவரை இருந்ததுவுமில்லை, இன்றுமில்லை, இனியும் இருக்கப்போவதுவுமில்லை. ஏனெனில், இவர்கள்
கொழும்பைத் தமது குடியிருப்பாகக் கொண்ட அல்லது கொள்ள முயற்சிக்கின்ற சமூகத்தட்டின்
அரசியல் பிரதி நிதிகளாகவே உள்ளனர். ஆகவே இவர்கல் கொழும்பை மையமா- கக்கொண்டு உருவாக்கப்பட்டுவரும்
இலங்கை முதலாளித்துவ அணியின் இழநிலை பங்குதாரர்களாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
கொழும்புடனான சமரசப் போக்கிற்கான காரணம் இதுதான். இதனால் நிலப்பரப்புச் சுதந்திரம்
பற்றிக்கூட இவர்களுக்கு பாரிய கவலை எதுவுமில்லை. கொழும்பு தமக்குப் பாதுகாப்பா னது என்பதே
இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இத்தாராளவாதப் போக்கினர் அன்று கொழும்பை
மையங்கொண்டிருந்தார்கள். 1980களின் பின்னர் இவர்கள் கொழும்பையும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ
நாடுகளையும் மையங்கொண்டுள்ளா ர்கள். நிலப்பரப்பு சார்ந்து சிந்திக்காத ஒரு தேசிய இனம்,
இறைமையைப் பேணக்கூடிய ஒரு அரசு கட்டுமானம்பற்றி பொருட்படுத்தவே மாட்டாது. இவை தான்
தாராளவாத அரசியல்வாதிகளின் பொதுப் போக்கா கும். இவர்கள்தான் சமரசவாதிக்ளெனவும் அழைக்க ப்படுவர்.
இச்சமரசவாதம் தமிழீழத் தேசிய இனத்தின் ஒரு சாராரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்
அவசிய மானது. இவ்வித ஒரு சமூகத்தட்டு இருந்து கொண்டே யிருக்கும். கொழும்பு மையப் பொருளா தாரத்தின்
வளர்ச்சியுடன் கூடவே இச்சமுகத்த ட்டும் வளர்ந்து கொண்டேயிருக்கும். தலைவர்களை மாற்றுவதன்
மூலம் இப் போக்கை மாற்ற முடியாது. விரும்பினால் தாராள வாதப்போக்கை மக்கள் மத்தியில்
சந்தைப்படுத்தக்கூடிய திறமைசாலி யாரென தேடலாம். ஆனால், தாராளவாதப்- போக்கின் தலைவர்
ஒரு தாராளவாதியாகவே இருப்பார். சிங்கள அரசியல்வாதிகளிடையே ஏற்படுத்தப்பட்ட தனிநபர்மாற்றம்
என்னத்தைச் சாதித்தது? பேரகங்- காரப் போக்கு பேரங்காரவாதமாகவே தொடர்கிறது வெவ்வேறு
ரூபத்தில்.
இரண்டாவது போக்கினரான தேசிய இனப்போராளிகள்
பற்றி பிறிதோர் சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.
No comments:
Post a Comment