Thursday 6 July 2017

அறவழிப் போராட்டம்- வன்முறைப்போராட்டம் ஒடுக்குமுறையாளர்களின் கற்பிதங்கள்

வரவிருக்கும் அறமும் போராட்டமும்எனும் எனது நூலுக்கான முன்னுரையின் முதல்பகுதி
         சங்கிலித்தொடர் போன்ற முரண்பாடுகளுள் சிக்கித்தவிக்கும் தெற்காசி- யச் சமூகத்தில், எந்தப்பக்கம் திரும்பினாலும் செவிப்பறைகளில் வந்து மோதும் ஒலி அறவழிப்போராட்டம், அறவழிப்போராட்டம், அறவழிப்போரா ட்டம் என்பதாகவே உள்ளது. ஆகவே, இத்தலைப்பைப் பார்த்த உடனேயே இந்நூலும் அறவழிப் போராட்டம்பற்றிதான் பேசப்போகிறதோவென எண்ணவேண்டாம். நிச்சயமாக இல்லை. அறவழிப்போராட்டம் பற்றிப் பேசவில்லை, அது ஒரு கற்பிதமே. அக் கற்பிதங்கள்பற்றி முதலில் பேசுவோம்.
சுதந்திரப் போராட்டத்தின் போதான மூவகைப் போராட்டவடிவங்கள்
பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு(பா.ஜ.) உட்பட்ட போராட்டம் பா.ஜ-க்குப் புறம்பான போராட்டம் என்று கூறினால் அது புரிகிறது. ஒரு கட்சிப் பா.ஜ. நாடுக ளிலும், பல கட்சிப் பா.ஜ.நாடுகளிலும், பா.ஜ-கத்துக்கு உட்பட்ட போராட்டங்களே குடிமைச் சமூக நியமங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இந்நாடு களில் ஆளும் வர்க்கங் களும், வர்க்க மேன்நிலையடைந்து வரும் வர்க்கங்களும், இவ்வர்க்கங்களின் அரசியல் கட்சிகளும், மக்கள் பா.ஜ நியமங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாகவுள்ளன, இது ஏனெனப்புரிகிறது. ஆனால் அறவழிப் போராட்டமென அழுத்தி அழுத்திக் கூறப்படுவதேன் என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இல்லாத் தொ ன்றை  எவ்விதம் புரிந்துகொள்ளமுடியும்.

          காலனியல் எதிர்ப்புப் போராட்டத்தின்போது தெற்காசிய நாடுகளில் பா.ஜ ஆட்சிமுறை இருக்கவில்லை. காலனியல் இராணுவ எதேச்சாதிகர ஆட்சிமுறையே இருந்துவந்தது. காவனியல் ஆட்சியாளர்களுக்கு மனுப்பண்ணுவதும், மனுப்- பண்ணுவதற்கான மாநாடுகள் கூட்டுவதுமே ஆட்சியாளர்களால் அங்கிகரிக்கப்பட்ட போராட்ட வடிவங்களாக இருந்துவந்தன. இவ்வடிவம் இலாயக்கற்றது எனவுணர்ந்த காலனியல் எதிர்ப்பாளர்கள் தமக்கான சொந்தப் போராட்ட வடிவங்களை உருவாக்கிக் கொண்டார்கள். வடிவங்கள் மாறினாலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இவ்விதம் உருவாக்கப்பட்ட வடிவங்கள் மூன்றாகும். ஒன்று காலனியல் வாதிகளிடம் மன்றாடும் மாநாடுகளும் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளும்; இரண்டாவது எதிரி யின் இரத்தத்தைச் சிந்தவைக்கா ஆயுதங்களற்ற வன்முறைப் போராட்டம்; மூன்றாவது எதிரியின் இரத்தத்தைச் சிந்தவைத்த ஆயுத வன்முறைப் போராட்டம். ஆயுதங்களற்ற வன்முறை ப்போராட்டமானது, இரு பிரதான கிளைகளைக் கொண்டிருந்தது. ஒன்று சத்தியாகிரகிரஹ இயக்கம், மற்றையது சட்ட மறுப்பு இயக்கம். இவை இரண்டும் ஆயுதங்களற்ற வன்முறை இயக்கங்களாகும். ஆயுத வன்முறையாளர்கள் இவ்விரு வடிவங்களையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் ஆயுத வன்முறைக்கே அதிக அழுத்தம் கொடுத்துவந்தனர். வரலாற்றின் இயக்கப் போக்கில் தனி நபர்களின் பாத்திரம் பற்றிய கோட்பாட்டில் தனிநபர் களை மாத்திரமே தீர்மானகரமான சக்தியாகக் கருதும் எம்.கே.காந்தி அவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்திற்கே அதிக அழுத்தம் கொடுத்தார். சட்டமறுப்பு இயக்கமோ மக்கள்திரளின் மனஉறுதியைச் சார்ந்திருந்தது, சத்தியாகிரக இயக்கமோ தனிநபர்களின் மனஉறுதியைச் சார்ந்திருந்தது. 
காந்தியின் தனிநபர் முதன்மை வாத சிந்தனைக்கு சத்தியாகிரக வடிவமே இசைவானதாக இருந்தது.

பயங்கரவாதப் போராட்டக் குணாம்சங்களின் அடிப்படை, அவை தனிநபர் முதன்மைவாத சிந்தனையை மூலமாகக் கொண்டிருப்பதேயாகும். இவ்விதம் நோக்கில் தனிநபரை மையமாகக்கொண்ட சத்தியாகிரகமும் ஒரு பயங்கரவாதப் போராட்டந்தான். இரத்தஞ்சிந்தா பயங்கரவாதிகள் (அஹிம்சா வாதிகள்), தம்மை வதைத்துக்கொள்வதன் மூலம் அரசியல் அழுத்தத்தை உருவாக்குகிறார்கள். இரத்தஞ்சிந்தும் பயங்கரவா திகளோ தம்மையும் பிறரையும் வதைப்பதன் மூலம் அரசியல் அழுத்தத்தை உருவாக்குகிறார்கள், இருவகைப் பயங்கரவாதிகளும் மக்களின் போராடங்களுக்கு எதிரானவர்கள். 
சத்தியாகிரஹிகள், பயங்கரவாதிகள் ஆகிய இருசாராரும் தனிநபர்-முதன்மைவாத சிந்தனையாளர்களே.

காங்கிரசின் தோற்றத்தின் பின்பான காலனியல் எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் மனுப்பண்ணுதல், சத்தியாகிரகத்தையும் உள்ளடக்கிய சட்ட மறுப்பு, ஆயுதப்பயன்பாடு ஆகிய மூன்றுவகை வடிவங்களும் இந்திய அளவில் ஒருமுகப்படுத்தப்பட்ட போராட்ட வடிவங்களாக இருந்துள்ளன. அதேகாலப்  பகுதியிலும், அதற்க்கு முன்னைய காலப்பகுதியிலும், நிலப்பிரபுவத்துவ எதிர்ப்பு ஆயுதப்போ ராட்டங்களும், மக்கள்திரள் ஆயுதக்கிளர்ச்சிகளும் பெருமளவில் நடைபெற்றுள்ளன. கதர்புரட்சி இதற்கோர் சிறந்த எடுத்துக் காட்டாகும். இம்மூன்று வடிவங்களுள், ஆயுதப்போராட்ட வடிவத்தை தனிமைப்படுத்துவதற் காகவும், பிறமக்கள்திரள்ப் போராட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற் காகவும் வன்முறைப் போராட்டம் என்றோர் பதம் உருவாகப்பட்டு, அது கெட்ட சொல்லாகவும் அடையாளப்படுத்தப்பட்டது. காலனி-யல் ஆதிக்கவாதிகளும் இதை ஆதரித்தார்கள். பின்னர் இக் கெட்டசொல்லுக்கெதிராக இன்னோர் சொல் உருவாக்கப்பட்டது. அது புனிதமானதென அடையாளப் படுத்தப்பட்டது. அச்சொல்தான், அறவழிப் போராட்டமாகும். இப்பகுப்பு அன்று ஓரளவிற்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால், இன்று அது எந்தளவுக்கும் பொருந்தமற்றதாகிவிட்டது

காலனியல் சகாப்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான அல்லது முதலாளித்துவ ஜனநாயகத்தின் உலகளாவிய விஸ்தரிப்பின் பின்னரான போராட்ட வடிவங்களை பயங்கரவாதம்/தீவிரவாதம்/றடிகலிஸம் என அடையாளப்படுத்துதல் மேட்டுக்குடி- யோர் மாட்டேயான பொதுவழமையாக இருந்துவருகிறது. இப்பதங்கள் உலகளவில் அனைத்து ஒடுக்குமுறையாளர்களாலும் ஏற்று- க்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் போராட்ட வடிவங்களை அடையாளப்படுத்த உலகளவில் ஏற்றுக்கொ- ள்ளப்பட்ட பொதுப்பதம் எதுவுமேயில்லை. மக்கள் யுத்தம், மக்கள்திரள் போராட்டம், அமைதிவழிப் போராட்டம் வெகுஜன எழுச்சிகளென பற்பல பதங்கள் உள்ளன. இருந்தும் அவை, அறவழிப்போராட்டம் என்ற பதத்தால் அறிமுகப் படுத்தப்ப டுவதில்லை. இந் நிலையும், இதற்கான அரசியல் காரணங்களும் புரிகிறது.

அறப்போராட்டம், அறவழிப்போராட்டம் என்பதென்ன?

அப்படியொன்று உள்ளதாகத் தெரியவில்லை. அதேபோல் வன்முறைப் போராட்டம் என்பதென்ன? வன்முறையில்லா அல்லது வன்முறையைத் தவிர்த்த போராட்டம் என்றொன்று இருந்தால்தானே வன்முறைப் போராட்டம் என்றொன்று இருக்கும். வன்முறையில்லாப் போராட்டம் ஏதாவது உண்டா? பாசாங்குப் போராட்டங்களைத் தவிர அனைத்து வகைப் போராட்டங்களும் தம்மட்டில் தாமே ஒரு வன்முறைதான்.

நிலத்தில் புதைக்கப்பட்ட விதை தனது முளையை வெளியே தள்ளுவதற்-காக நிலத்துடன் ஜீவமரணப்போராட்டம் நடத்துகிறது. இது நிலத்திற்கு எதிரான வன்முறை. முட்டைக்குள் முடங்கிக்கிடக்கும் குஞ்சு தான் வெளியே வருவதற் காக இதுவரை தன்னைப் பாதுகாத்துவந்த தனது ஓட்டுக்கு எதிராகப் போராடுகிறது. இது ஓட்டுக்கு எதிரான வன்முறை. இதை நம்பிக்கைத்- துரோகமென யாரும் சொல்வதில்லை. தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைப் பாலூட்டிகள் அதிலிருந்து வெளிவருவதற்காக கர்ப்பப்பை வாசலை இறுக மூடியிருக்கும் தசை நார்களுக்கு எதிராகப் போராடுகின்றன. இது தாயின் கர்ப்பப்பைக்கு எதிரான வன்முறை. இதைத் தாய்த்துரோகமென யாரும் சொவதில்லை. பறைவகள், நாலுகால் பிராணிகள், மனிதர்கள் ஆகிய இனங்களைச் சேர்ந்த எந்தத் தாயானாலும் தனது குஞ்சை, குட்டியை, குழந்தையைத் தாக்கவரும் எதிரிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடுகின்றன. இது ஆபத்து விளைவிக்கும் அந்நியருக்கு எதிரான வன்முறை. தாவரங்கள் தமது இனத்தைப் பெருக்குவதற்காக தமது வித்துக்களை இயற்கையிடம் இருந்து பாதுகாக்க வித்துக்களுக்கு எத்தனை கவசங்களை வழங்கியுள்ளன. இவை இயற்கையின் பிற அங்கங்களுக்கெ திரான வன்முறை. அனைத்து விலங்குகளினதும் அவயங்களும் (உடல் உறுப்புகளும்) அவற்றின் தற்காப்புக்கும், பிற உயிரிப் பொருட்களைத் தாக்குவதற்கான ஆயுதங்களாகவும் பயன்படுத்த ப்படுகின்றன. இது தமக்கு எதிரானவர்க ளுக்கெதிரான வன்முறை. இப்போராட்டங்களில் எது அறவழிப்போராடம், எது வன்முறைப் போராட்டமெனப் பிரித்துக் காட்டமுடியுமா?

பிற உயிர் வாழ்வனவற்றிற்குப் பொருந்தக்கூடிய இக்கேள்வி, மனிதனுக்குப் பொருந்தாதெனெ விவாதிக்கலாம். மனிதர்கள் மட்டும்தான் சமூக-விலங்காக வாழும் நிலையில், இல்-சமூக விலங்கின வாழ்க்கையை சமூக விலங்கின வாழ்க்கையுடன் ஒப்பிடவே முடியாதென்றும், சமூக விலங்கினமான மனிதர் தமக்கென்று தனியான அறத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார்க- ளென்றும் கூறலாம். ஏற்றுக்கொள்ளக்கூடிய விவாதந்தான். ஆனால் மனிதர் சமூக விலங்குகளாக மாறும் நிகழ்வு இன்னமும் முழுமையடையவில்லை யென்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

வெளிப்பாடு 1

மனிதர்களின் அத்தியாவசிய, உடல் தேவைகளான பசி, தாகம், காமம் ஆகியன நிறைவேற்றப்படாத வேளையில் தோன்றும் உடல் உபாதைகளால் பத்தையும் (சமூக-அறங்கள்) மறந்திவிடும் மனித இழிநிலை, காமவெறியின்போது மனிதத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும் நிலை. மண்-பொன்-பெண் ஆசைகள் எல்லை மீறும்பொது மனிதர்கள் விலங்குகளாக மாறுதல், ஆகியவை மனிதர்கள் இன்னமும் இல்-சமூக விலங்கியல் குணாம்சத்தை வெளிப்படுத்தி வருவதை மறுக்க முடியுமா? இன்றைய சமூக-விலங்கின மனிதர்கள் தமது முன்னோர்களான இல்-சமூக விலங்கின மனிதர்களின் மரபணுக்களை இன்னமும் காவித்திரிவதை மறுக்கமுடியுமா?  இத்தகைய உணர்வுகளால் உந்தப்பட்டு நடைபெறும் போராடங்களின்போது வன்முறையின்மையை எதிர்ப்பார்ர்க முடியமா? பாதிப்பை ஏற்படுத்துபவர்களும் வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள், பாதிக்கப்பட்டவர்களும் வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

வெளிப்பாடு 2

சமூக மனிதனென்ற முறையில் மனிதர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுமங்களாகவோ நடத்தும் போராட்டங்களும் இவ்விதமானதாகவே உள்ளன. ஒவ்வொரு தனிமனிதரும் தம்தமது வாழ்க்கையில் முன்னேறுவதற்காகவும், தனதும், தனது குடும்பத்தினதும் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்- காகவும் அல்லது இருக்கும் நிலையை தக்கவைப்பதற்காகவும் தம்மால் இயன்றவரை போராடி வருகின்றார்கள்.

இப் போராடங்களை அறவழிப் போராட்டமென்றோ, வன்முறைப் போராட்டமென்றோ தனித்தனியாக வகைப்படுத்தலாமா? ஒவ்வொரு போராளியும் ஒரு அறநெறியைப் பின்பற்றவே செய்கிறார். தனது அறநெறி வினைத்திறன் மிக்கதா இல்லையா என்பதை எதைக்கொண்டு அவர் அளவிடுகிறார்? தனது முன்னேற்றத்திற்கு அது துணைபுரிகின்றதா இல்லையா என்பதை வைத்துக்கொண்டுதான். பெரும்பான்மை யோரின் நிலை இதுதான். சமூக நலனை உரைக்கல்லாகக் கொண்டு அது முற்போக்கா, பிற்போக்கா வென அளவிடுபவர்கள் மிகச் சிலரே. அச் சிலர் சமூக ஆர்வ லர்களென அழைக்கப்படுகிறார்கள். ஆகவே ஒவ்வொருவர் நடத்தும் போராட்டத்திலும் ஒரு அறநெறி உண்டு. லஞ்சம்வாங்குவதும் கொடுப்பதும்கூட, அறமாக கருதப்பட வில்லையா? இன்றைய நிலையில் இது அதிகளவினர் ஏற்றுக்கொண்ட அறமாக உள்ளது.

அதுபோல், ஒவ்வொரு போராட்டத்திலும் ஒரு வன்முறை உண்டு. அதை வைத்துக்கொண்டு அப்போராட்டத்தை வன்முறைப்போரட்டமெனக் கூற முடி-யாது. ஏனேனில், ஒவ்வொரு போராட்டங்களும் தன்மட்டில் தானேயொரு அறமாகவும், தானேயொரு வன்முறையாகவும் உள்ளது. அறமில்லாத போராட்டமுமில்லை. வன்முறையில்லாத போராட்டமுமில்லை. எந்தவொரு போராட்டத்திலிருந்தும் அறத்தையும் வன்முறையையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்க முட-யாது. H2Oவில் இருந்து Hஐப் பிரித்தாலும் சரி, Oவைப் பிரித்தாலும் சரி H2O இல்லாமல் போகும். ஆனால் Hஉம், Oவும் அழியாது. ஆனால், எந்தவொரு போராடத்திலிருந்தும் அறத்தைப் பிரித்தாலும் சரி, வன்முறையைப் பிரித்தாலும்சரி, போராடம் அழியும். போராட்டம் இன்றேல் அறமுமில்லை, வன்முறையும் இல்லை.

மனிதர்கள் குழுமங்களாக நடத்தும் போராட்டங்களின் நிலையும் இதுதான். ஆகவே போராடத்தில் பொதிந்துள்ள அறமும், வன்முறையும் எத்தன்மை பெற்றது என்பதுதான் கேள்வியாக அமைகிறது. அதைப் பொறுத்துத்தான் போராட்டங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இதனால், இந்நூல், அறவழிப்போராட்டம், வன்முறைப்போராட்டமெனும் கற்பித்தங்க ளைப்பற்றி இங்கு பேசவரவில்லை.
நூலின் பேசு பொருள்

மாறாக, அறமும் போராட்டமும் எனும் இந்நூல், இருவிடயங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒன்று, இந்திய உபகண்டத்தில் அறத்துக்காக நடந்த போராட்டங்களின் வரலாற்றையும், அப்போராட்ட வழிமுறைகளையும், அப்போராட்டங்களின் தத்துவார்த்தப் பின்னணியையும் பற்றிப் பேசுகிறது. இரண்டாவது, ஒவ்வொரு போராட்டங்களிலும் பொதிந்திருந்த, பொதிந்திருக்கும் அறங்களை ஆய்வுக்கு உள்ளாக்குகின்றது.

எந்தப் போராட்டமாயினும் சரி, அப்போராட்டத்தின் வழிவகைக்கும் கூட ஒரு அறமுண்டு. அப்போராட்டத்தின் குறிக்கோளும் ஒரு அறத்தை உருவாக்கவ- தாகவே அமையும். வன்முறை ஒரு வழிவகைதான். அவ்வன்முறைக்கும் ஒரு அறம் உண்டு. எல்லா அறமும் ஒன்றல்ல. நல்லறம், தீயறமென இருவகைகள் உண்டு. அதுபோல், இரத்தம் சிந்தும் வன்முறையானாலும் சரி, சிந்தா வன்முறை- யானாலும்சரி, அனைத்து வன்முறைகளும் ஒன்றல்ல, அவையும் இரு வகைப்படும்.

சமூக நலனுக்கும் மக்களின் நலனுக்கும் நன்மை விளைவிக்கும் வன்முறை; இவ் இரண்டிற்கும் தீமை விளைவிக்கும் வன்முறை, மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பத ற்கான வன்முறை; மக்களின் பிரச்சனைகளைக் குழப்புவதற்கான வன்முறை, சமூக சமநிலையை மக்களுக்குச் சாதகமாக மாற்றியமைப்பதற்கான வன்முறை; மக்களுக்குப் பாதமான சமூக சமநிலையை தக்கவைப்பதற்கான வன்முறை; மக்களின் சமூக வளர்ச்சிக்குச் சாதகமானதொரு சமூகசூழலை தோற்றுவிப்பதற்கான வன்முறை; வளர்ச்சிக்குத் தடையான சமூகசூழலை ஏற்படுத்துவதற்கான வன்முறை என வன்முறைகளை வெவ்வேறு சோடிகளாகப் பிரிக்கலாம்.

நல்லறம், தீயறமென பெயர்கள் உள்ளதுபோல், வன்முறைகளை வகைப்- படுத்துவதற்கான தனித்தனியான பெயர்கள் உண்டா என்பது தெரியவில்லை. சாதாரண வார்த்தைகளில்: மக்கள் வன்முறை- மக்கள் விரோத வன்முறை என்றோ; நன் வன்முறை - கொடூர வன்முறை என்றோ; மதப் பிரயோகத்தில்: ஆசிர்வதிக்கப்பட்ட வன்முறை - சபிக்கப்பட்ட வன்முறை என்றோ அழைக்கலாம். புத்திஜீவ மதப்பிரயோக த்தில்: வளர்திசை வன்முறை, வளர்தடை வன்முறையென அழைக்கலாம். மக்களுக்குப் பழக்கமான மொழியில் சொல்வதானால் எம்.ஜி,ஆர். (கதாநாயகன்) வன்முறை – நம்பியார் (வில்லன்) வன்முறை என அழைக்கலாம்.

இந்நூல், போராட்டங்களின் ஆக்கக்கூறுகளில் ஒன்றான அறம் பற்றித்தான் பேசுகிறதே தவிர மற்றோர் ஆக்கக்கூறான வன்முறைபற்றி விரிவாகப் பேசவில்- லை. அறத்தையும் வன்முறையும், ஒன்றின் இருத்தலை மற்றொன்று நிராகரிக் கும் இரு துருவங்களாகப் பார்க்கும் பொதுப் புத்தியை நூல் நிராகரிக்கிறது. மாறாக, இவ்விரண்டையும் ஒன்றின் இருத்தலை மற்றொன்று வேண்டி நிற்கும் காந்தத்தின் இரு முனைகளாகவே பார்க்கிறது என்பதை முன்னுரையில் கூறுவது அவசியமானதாக உள்ளது.

அறம், வன்முறை ஆகியனபற்றிய பொதுப்புத்தியில் இருந்து விலகி நின்று வாசிக்கவும்.



No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...