சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு
விளக்கம்--1
தெற்காசிய நாடுகள்
அனைத்தினது அரசியல் கட்டுமானங்களும் tதமது தேசியத் தன்மையை இழந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
குருதியின இன வெறித்தன(racist
fanatic-
ப(f)னாரிஸ்க்), தேசிய இன வெறித்தன (Ethnic fanatic- ப(f)னாரிஸ்க்),
சாதிய வெறித்தன(cast
fanatic-
ப(f)னாரிஸ்க்),
மொழி வெறித்தன(Linguistic fanatic),
மத வெறித்தன(Religious
fanatic-
)
அரசியல்களே இந் நாடுகளின் ஆதிக்க அரசியல்களாகக்
காணப்படுகின்றன. இதனால், ஒரு தேச அரசின் (Nation
State) ஆளுமையின் கீழ் வாழும்
அனைத்துச் சமூகக் குழுமங்களினதும் தேசிய ஜனநாயக உரிமைகளை மதிக்கும் தேசிய அரசியல்(National politics) இருக்கவேண்டிய இடத்தில், ஒவ்வொரு இனக் குழுமங்களும்
தத்தமது சொந்த இனக் குழுமத்தின்(Ethnic
Group) நலனை மட்டுமே கணக்கில்
கொள்ளும் இனவாத தேசிய அரசியலே(Ethno-Nationalistic
Politics) மேலோங்கி நிற்கிறது.
குறிப்பாகச் சொல்வதானால்;
பாகிஸ்தானில்
உருது-சுனி இஸ்லாமிய வெறித்தனமும் - ப(f)னாரிஸம்,
பங்காளதேஷில் சுனி இஸ்லாமிய வெறித்தனமும்- ப(f)னாரிஸம்,
இந்தியாவில் பார்ப்பனிய-இந்து-சமஸ்கிருத
வெறித்தனமும்- ப(f)னாரிஸம்,
இலங்கையில் சிங்கள-பௌத்த வெறித்தனமும்- ப(f)னாரிஸம்,
மைமரில் பௌத்த வெறித்தனமும்- ப(f)னாரிஸம் கோலோச்சிவருகின்றன.
தம்மைத் தேசிய அரசுகளாகத்
கூறிக்கொள்ளும் பாக்கிஸ்தான், வங்காளதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மைமர், இந்திய ஆகிய நாடுகளினது அரசுகள் முற்றுமுழு இனவாதத் தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளாக (Ethno-Nationalist Fanatic State) உருவெடுப்பதில் அபார வெற்றிபெற்றுள்ளன.
புறத்திலிருந்தோ,
மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களால் இவ் இனவாத-தேசிய
வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளை தேச அரசுகளாக (Nation State) மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை தகர்ந்து
வருகின்றது; இவ்வகை சீர்திருத்தங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவருகின்றதா
என்று எண்ணத்தோன்றுகிறது. இந்த உண்மையை அனைத்து வல்லரசுகளும் புரிந்து கொண்டுவிட்டன
போலும்.
இதனால்தான்,
இவ் இனவாதத்-தேசிய அரசுகளுடன் நட்புக்கொள்வதில், அனைத்து வல்லரசுகளும் பல்வேறு விட்டுகொடுப்புகளுடன்,
ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டுக் கொண்டு முனைப்புக்காட்டி வருகின்றன. மேற்கூறிய இனவாத-தேசிய
வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகள், தமது நாடுகளின் தேசிய இனங்களையும்,
சிறுபான்மை மதக்குழுக்களையும், ஒடுக்கப்பட்ட சாதியைனரையும் அடக்கிவருகிறார்கள்; கூடவே
தத்தமது நாட்டின் தேசப்பற்றையும் தமதுகாலில் போட்டு மிதித்து, வல்லரசுகளின் அடிவருடிகளாகத்
தம்மையும், தமது நாட்டின் வளங்களையும் ஆக்கிக் கொண்டுள்ளார்கள். உலக முதலாளித்துவத்தின்
மிகப்பெரும் ஆதர்வுகளுடனும் பிரயத்தனங்களுடனும் “தேச அரசுகளாக” அடையாளப்படுத்தப்பட்டுள்ள
இவ் இனவாத-தேசிய அரசுகளை (Ethno-Nationalist State),--இலகுவாக
வேறுபடுத்திப் புரிந்து கொள்வதற்காக இவ்வித அரசுகளையே நாட்டரசுகள் என அழைக்கிறேன்
--- இந் நாட்டரசுகளை இந் நாடுகள்ளின் பாராளுமன்ற ஜனநாயக வழிமுறைகளில் தேச அரசுகளாக
மாற்றியமைத்தல் என்பது இனியென்றுமே சாத்தியமற்றது.
இதனால்,
இவ் இனவாத-தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளின் சாம்பல் மேட்டில் பல் தேச அரசை
(multi nation state) அல்லது பல தனித்தனி தேச அரசுகளை உருவாக்கு வதைத்தவிர
மாற்றுவழியெதுவும் இல்லை என்ற நிலை உருவாகிவருகிறது. ஆனால், இது சாத்தியமாக வேண்டுமானால்,
நாட்டுப் பற்றாளர்களி னதும் (Patriotic
forces), தேசிய இனங்களிடையே
சம உரிமைக்கான போராளிகளினதும் (Federalists), தனித் தேச அரசு உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள
போராளிகளினதும் (National
Libertionalists) ஒருங்கிணைவு
ஒரு கட்டாய நிபந்தனையாகும். ஆனால், இவ்வித ஒருங்கிணைவுக்கு ப் பதிலாக, இதற்கு எதிரான
நிலையே இப்பிராந்திய பொதுவான போக்காகயுள்ளது. எடுத்துக்காட்டாக:
நேப்பாளம்:
தனது
நாட்டின் பிரதான ஒடுக்கப்பட்ட தேசிய இன குழுமமான மாதேசியையும், தாறுஸையும் (Tharus) பிற ஒடுக்கப்பட்ட
சாதியக் குழுமங்களையும் குறிப்பாக தலித்துகளையும் கண்டுகொள்ளாததால் நேபாளப் புரட்சி
பாரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்தது. நேப்பாள தேச அரசை மலரவைப்பதற்காக எடுத்துக்
கொண்ட வீரமிக்க முயற்சிகள் தோல்விகண்டன. இதன் மூலம் இந்திய ‘தேசிய அரசின்’ அகண்டபாரதக் கொள்கையும், இப்பிராந்தியத்தை பார்ப்பனிய-பௌத்தமயப்படுத்தும்
கொள்கையும் வெற்றிபெற்றுள்ளன.
பின்வரும்
கட்டுரைகள் நிலமையைப் புரிந்து கொள்ள துணைபுரியும்
Why The Madhesi
People Revolted In Nepal – Analysis
Nepals
New Constitution: An Analysis From The Madheshi Perspective
தமிழீழம்:
இலங்கைத் தேசப் பற்றாளர்களையும், ஒடுக்கப்பட்ட
பிற தேசிய இனங்களையும், தேசிய இனங்களிடையே சம உரிமை கோரிய போராளிகளையும், கண்டுகொள்ளாததால்
தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய இராணுவ அழிவையும் , அரசியல் பின்னடைவையும் சந்தித்தது.
தமிழர்கள் பாரிய அழிவைச் சந்தித்தனர். அதேபோல், அடுத்தபக்கதில் இலங்கையின் ஒடுக்கப்பட்ட
தேசிய இனங்களின் தேசிய ஜனநாயக
உரிமைகளைக் கண்டுகொள்ளாததாலும்,
சிங்கள இனத்தின்
நலன் மட்டுந்தான் நாட்டுநலன் என்றும் தேசிய நலன் என்றும் கருதியதாலும் சிங்கள மக்களால்
முன்னெடுத்துச் செல்லப்பட்ட நாட்டுப்பற்று இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும் மிகப்பெரும்
அழிவுகளையும், பாரிய அரசியல் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன.
மியான்மர்:
இராணுவ எதேச்சதிகாரத்துக்கு
எதிராக, படிப்படியான பெரும் ஜனநாயக் எழுச்சியை நடத்திக் காட்டிய மியான்மர் ஜனநாயகப்
போராளிகள், அங்குள்ள தேசிய இனக் குழுமங்களின் எழுச்சிகளையும் அவற்றின் மீதான அடக்குமுறைகளையும்
கண்டு கொள்ளவில்லை. அடுத்தபுறத்தில், எச்சூலிலும் தமது கைகளில் உள்ள ஆயுதங்களின் வாய்களைப்
பொத்தாமல், இதே எதேச்சாதிகாரத்துக்கு எதிராக நீடித்த ஆயுதப் போராட்டம் நடத்திவரும்
இத் தேசிய இனக் குழுமங்கள் தமது நாட்டில் –மியான்மர்- நடைபெற்ற ஜனநாயக எழுச்சியைக்
கண்டுகொள்ளவில்லை. அதாவது இவர்கள் நாட்டுப்பற்றாளர்களாக நடந்துகொள்ளவில்லை. இதனால்,
இன்று இவ் இரு எழுச்சிகளும் மிகப்பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. மியான்மர் இராணுவம்
மீழவும் தன்னை பலப்படுத்தியுள்ளது.
மியான்மர் தெற்காசியப்
பிராந்திய நாடல்ல. அது தென்கிழக்குப் பிராந்திய நாடாகும். இருந்தும், மைமரில் நடைபெறும்
தேசிய இன விடுதலைப்போராட்டங்களை தெற்காசிய நான்காம் உலகநாடுகள் ஒரு முன்னுதார ணமாகக்
கருதலாம். இதனால் மைமரின் நிலை இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா அரசு மைமரைத்தான்
தந்து வழிகாட்டியாகக் கொண்டுள்ளது என்பதை மறக்கவேண்டாம். மஹிந்த தனிப்பட்ட முறையில்
அமைக்க முற்பட்ட இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கியது மியான்மர் அரசு என நம்பப்படுகிறது.
இதே வலைப்பூவில்
உள்ள “Some facts on Myanmar”
என்ற கட்டுரையையும் பார்க்கவும்.
ஆர்வமுள்ளவர்கள்
கீழ்க்கண்ட இணைய முகவரிக் கட்டுரைகளையும் படிக்கவும்.
http://www.irinnews.org/Report/94149/Analysis-Dramatic-developments-but-challenges-ahead-for-Myanmar
http://www.irrawaddy.org/research_show.php?art_id=444 http://www.irrawaddy.org/article.php?art_id=23115&page=2 ]
http://www.irinnews.org/Report/95008/MYANMAR-Karen-groups-cautious-on-peace-initiative
http://www.irinnews.org/Report/91221/MYANMAR-Border-guard-plan-could-fuel-ethnic-conflict ]
http://www.dvb.no/news/burma-conflict-due-to-misunderstanding-thein-sein/20528 ]
http://www.unhcr.org/pages/49e489646.html ]
http://irinnews.org/Report/95150/MYANMAR-UN-convoy-reaches-Kachin-displaced ]
http://www.irinnews.org/Report/95158/AID-POLICY-Will-pressure-make-Chinese-aid-more-transparent [ http://www.irinnews.org/Report/94955/MYANMAR-Humanitarian-cost-of-economic-development ]
http://www.irrawaddy.org/research_show.php?art_id=444 http://www.irrawaddy.org/article.php?art_id=23115&page=2 ]
http://www.irinnews.org/Report/95008/MYANMAR-Karen-groups-cautious-on-peace-initiative
http://www.irinnews.org/Report/91221/MYANMAR-Border-guard-plan-could-fuel-ethnic-conflict ]
http://www.dvb.no/news/burma-conflict-due-to-misunderstanding-thein-sein/20528 ]
http://www.unhcr.org/pages/49e489646.html ]
http://irinnews.org/Report/95150/MYANMAR-UN-convoy-reaches-Kachin-displaced ]
http://www.irinnews.org/Report/95158/AID-POLICY-Will-pressure-make-Chinese-aid-more-transparent [ http://www.irinnews.org/Report/94955/MYANMAR-Humanitarian-cost-of-economic-development ]
பாக்கிஸ்தான்:
பலுஸ்திஸ்தானும்
(Balochistan),
அசாட் காஷ்மீரும், கில்கிர் (Gilgit Baltistan)பால்ரிஸ்ரானும், சிந்தும்(Sindh), பக்குனிஸ்ரானும்(Pakhtunistan) தனிநாடு கோருகின்றன.
தாம் ஒரு தனித்தேசமென்றே அவர்கள் தங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர். பழங்குடியனர் மேலும்
விரிவான அதிகாரப் பங்கீடு கேட்கிறார்கள் (தலிபான் இயக்கம்). ஆப்கானிஸ்தாநன் -பாக்கிஸ்தான்
எல்லையால் பிரிக்கப்பட்ட பழங்குடியினர் தமது எல்லைகள் மீழ்வரையப்படக் கோருகிறாரகள்.
கிறிஸ்துவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அஹ்மாடி Ahmadi எனும் இஸ்லாமியப் பிரிவு சணி, சியா ஆகிய
இரு பகுதியினராலும் பாக்கிஸ்தான் ‘சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே ஒடுக்கப்பட்கிறார்கள்.
ஹிந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
சணி, சியா பேதம்
தீவிரமடைந்து வருகிறது. இன்னும் பல தேசிய இனமுரண்பாடுகள் மோதல் நிலையில் உள்ளன. இவற்றைவிட இராணுவ ஆட்சிக்கும்,
ஜனநாயக ஆட்சிமுறைக்கும் இடையேயான முரண்பாடுகள் பனிப்போர் நிலையில் உள்ளன.
பாக்கிஸ்தானின்
ஆளும் தேசிய இனம் பாக்கிஸ்தானி பஞ்சாபியாகும் (Pakistani Punjabis). இவ் இனவாத தேசிய அரசு ஐந்து தேசிய இனங்களையும், நான்கு மதப்பிரி வினரையும்
அடக்கியாள்கிறது? இதுதான் தேசிய அரசா?
இவ்வளவு முரண்பாடுகள் இருந்தும் பாக்கிஸ்தான்
இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடக்கூடிய ஒரு பரந்த முன்னணி ஏற்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.
பங்காளதேஷ்:
பங்காளதேஸ்தான் முஸ்லீம் அதிகளவில் வாழும் நாலாவது பெரிய நாடாகும்.
இதில் முஸ்லீம்கல் 90%விழுக்காட்டினராகும்.
வட-மேற்கு பங்காளதேஸில் வாழும்
மிகத்தொன்மை யான, மிகப்பெரிய ஆதிக்குடிகளான சண்டால்ஸ்(Santals), என்போர்களும், (சிட்டாகொங் மலைத்தொடரில்
பல தசாப்தங்களாக நடந்துவரும் நேரடி இராணுவ அடக்கு முறை இதற்கான ஆதாரமாகும்.) அஹ்மாடி(Ahmadi), பௌத்த, கிறிஸ்துவ. இந்து, மற்றும் சியாபிரிவு இஸ்லாமியர்களும், தொடர்
அடக்குமுறைக்கு உள்ளாகிவருகிறார்கள். இதோ ஒரு தகவல்: 1947இல், பங்காளதேசின் இந்து மக்கள்
தொகை 31 %மாக இருந்தது, 1961இல் 19%ஆகி, 2002இல் 14%ஆகி, 2011 இல் 8.5% மாகி, 2015இல்
10.7% மாகியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பை இஸ்லாமிய ஒருமுனைவாதிகள் விரும்பவில்லை.
இந்தியாவில் RSS போல்
பங்காளதேசத்தில் Jamaat-e-Islami (JeI) எனும்
அமைப்பும், அதன் மாணவர் அணியான Islami Chhatra Shibir (ICS) எனும்
அமைப்பும் அரசாங்கத்தின் மறைமுக ஆத்ரவுடன் செயற்பட்டுவருகின்றன. இவர்கல் தமது
நாட்டில் ஷரியா-அரசை Shariah-state உருவாக்க கங்கணம் கட்டியுள்ளார்கள்.
மதசார்பற்ற அரசு தன்னை அழைத்துக்கொள்ளும் இன்றைய அரசு இதற்க்குத் துணைபோகிறது.
மேலும்
அறிய விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படித்துக்கொள்ளலாம்.
இதுவரை
கூறப்பட்ட நாடுகளின் அரசுகள் அனைத்தும் இன- தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளேயாகும். (Ethno-Nationalist
Fanatic State). தேசிய அரசுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாதவையாகும்.
இந்தியா:
காஷ்மீர், மிசோராம், மணிப்பூர், ஜார்க்கண்ட்,
திரிபுரா, அருணாசல பிரதேஷ், போடாலாண்ட், குர்காலாண்ட் போன்ற தேசிய இனக் குழுமங்கள்
தமது சமஸ்டி எழுச்சியையும் இந்திய தேசப்பற்றையும் பொருத்திச் செல்வதில் நிதானம் காட்டிவருவதால்,
அவர்கள் சமீபத்தில் பாரிய பின்னடைவுகள் எதையும் சந்திக்காமல் அனைத்து வளிகளிலும் படிப்படியாக
முன்னேறிவருகிறார்கள்.
இதில் காஷ்மீர் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களின் இவ் நிதான முன்னேற்றத்திற்கு இந்திய
நாட்டரசின் இயலாமையும் ஒரு காரணமாகும். அது எவ்விதம் என்பதை நோக்குவோம்.
இந்திய
“தேசிய” அரசின் இயலாமை:
இந்தியாவின்
ஒட்டுமொத்த அரசியல் கட்டுமானத்தையும் தனது மேலாதிக்கத்தில் கொணர்வதில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத
வெறித்தனம்- ப(f)னாரிஸம் (Brahmanetic–Hindutuva-Sanskrit
Fanatism) இன்னமும் வெற்றிபெறவில்லை. சங் பரிவாரங்கள் அதற்காக பகீரதப் பிராயத்தனம்
எடுத்து வருகிறார்கள். ஆனாலும் இன்னமும் வெற்றி பெறவில்லை. இதில் வெற்றிபெறாமல், பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத
இனவாத-தேசிய வெறித்தன அரசு எனும் (Brahmanetic–Hindutuva-Sanskrit
Ethno-Nationalist Fanatic State) நிலையை அடைய முடியாது. இவ்வித அடைவு இந்திய மண்ணில்
சாத்தியப்படாதென்றே தோன்றுகிறது. (“ஸ்ரீ லங்காவின் கிங் மேக்கரின் ஞானோபதேசம்” எனும்
கட்டுரையைப் படிக்கவும்- https://vidiyalgowri.blogspot.in/2017/05/blog-post_24.html)
இந்தியாவின் இத்
தனித்துவத்துக்கான காரணங்கள் : 1)
சாதிய
படிநிலை சமூகக் கட்டுமானம்:
இந்தியாவில் துரிதமாக
வளர்ந்துவரும் இந்திய முதலாளித்துவம் தன்னுடன் கூடவே சாதிய படிநிலை சமூகக் கட்டுமானத்தையும்
வளர்த்து வருகிறது. இந்தியளவில் வளர்ந்துவரும் இச்சாதிய படிநிலை சமூகக் கட்டுமானம்
இந்தியா துண்டாடப்படுவதையும் அனுமதிக்காது. இந்திய சாதிய படிநிலை சமூகக் கட்டுமானத்தின்
அதி உச்சியில் இருக்கும் ஒடுக்கும் சாதிகளும், இரண்டாம் நிலையில் இருக்கும் இடைச்சாதிகளும்,
அடித்தட்டில் நசுங்குண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளும் மத்திய அதிகாரத்துக்காக இந்தியளவில்தான்
அணிதிரண்டு வருகிறார்களேதவிர தேசிய இன அளவிலல்ல, அதாவது மாநில அளவிலல்ல. இதனால் இந்திய
அரசானது பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit
Ethno-Nationalist Fanatic State) உருவாவதில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.
சாதியம்(castism), தேசியம் (nationalism), தேசிய
இனவாதம் (ethnicity) ஆகிய மூன்றுக்கும் இடையேயான தொடர்புகளைப் புரிந்து கொள்ளும்போது
இவ் இயங்கியலை புரிந்து கொள்ளமுடியும்.
2)
இந்தியாவின் மேட்டுக்குடியினரை இந்தியளவில் செயற்படும் மேட்டுக்குடியினர், மாநில அளவில்
செயற்படும் மேட்டுக்குடியினர். இவ் இருவகையினரும் ஒருவரில் இருந்து ஒருவர் வேறுபட்டவர்கள்
என்பதுவும், இவ் வேறுபாடுகள் முரண்பாடுகளாக இருந்து வருகின்றன என்பதுவும் உண்மை. ஆனால்,
மேட்டுக்குடிகளிடையே உடன்பாடுகளும் உண்டு என்பதுவும் உண்மை.
எடுத்துக்காட்டாக;
1)
மூத்தண்ணன்
கொள்கை;
இந்தியளவிலான பார்ப்னிய-பனியார்-மார்வாடி மேட்டுக்குடிகளும், எல்லையோர மாநிலங்களான
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், திரிபுரா, அருணாச்சல் பிரதேஷ், டெல்லி
ஆகிய மாநில மேட்டுக்குடிகளும் இந்தியாவின்
“மூத்தண்ணன்” கொள்கையை விரும்புகின்றனர். இந்தியாவின்
வல்லரசுக்கனவு இவர்களுக்கும் இனிமையானது. இதனால் இவர்கள் அனைவருக்கும் பலமானதொரு மத்தியரசு தேவைப்படுகிறது.
2)
ஏகாதிபத்திய
சார்பு, நில்பிரபுத்துவ சார்பு நிலை:
சாதியக் கட்டுமானத்தின் மீள் உற்பத்தி, ஆண்மேலாதிக்க
மீள் உற்பத்தி, காப்ரேட் சார்புநிலை போன்ற விடயங்களிலும், ஜாதி இந்துக்களின் தலைமையிலான
அனைத்து மத்திய மேட்டுக் குடியினரும் இந்திய மேட்டுக்குடியினருடன் ஒத்த கருத்துடனேயே
உள்ளனர். பார்ப்பனர்களும் பார்ப்பனர் அல்லாத ஜாதி இந்துக்களும் இதில் ஒன்றுபட்டே உள்ளனர்.
ஆனால் அவ்வித ‘தேசிய’அரசு
பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசாக
(Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) இருக்கவேண்டும்
என்பது மேட்டுக்குடிகளின் ஒரு பகுதியான, பார்ப்பனிய-பனியா கூட்டின் விருப்பம், அவ்விதம்
இருக்ககூடாது என்பது மேட்டுக் குடிகளின் மற்றோர் பகுதியான பார்ப்பனியர்கள் அல்லாத சாதி
இந்துக்களின் விருப்பம்.
3)
பார்ப்பனியம்: மார்க்ஸியம் எவ்விதம்
உலகப் தொழிலாளர்களினதும், முரணற்ற மனித நேயர்களினதும் வழிகாட்டும் தத்துவமாகத் திகழ்கிறதோ,
தலித்தியம் எவ்விதம் சாதிரீதியான ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவமாகத் திகழ்கிறதோ. அது
போல், பார்ப்பனியந்தான் இந்திய மேட்டுக்குடிகளின் வழிகாட்டும் தத்துவமாகத் திகழ்கிறது.
இம்மேட்டுக்
குடிகளின் பார்ப்பனர் அல்லாதோர் பிரிவு, பார்ப்பனியர்களின் பதவி மேலாண்மைகளுக்கு எதிராக
தொடர்ந்து போராடிவந்துள்ளார்கள், இனியும் போராடுவார்கள், ஆனால் பார்ப்பனியத்துக்கு
எதிராக என்றுமே போராடியதுமில்லை, இனியும் போராடப்போ வதுமில்லை. பார்பனியர்களின் வழிகாட்டுதலுடன்
அனைத்து மேட்டுக் குடிகளாலும் தோற்றுவிக்கப்பட்ட பார்ப்பனியத்தை மேலும் வளர்த்தெடுக்கவும்,
அதை தமதாக்கிக் கொள்ளவுமே முயன்றுவருகிறார்கள். தமிழ் மேட்டுக்குடிகளால் தமதாக்கிக்
கொள்ளப்பட்ட பார்ப்பனியந்தான் சைவம்.
அதாவது, பாட்டாளிகள்
மட்டுந்தான் மார்க்ஸிஸ்டு களில்லை என்பது எவ்விதம் உண்மையோ, SC,ST_க்கள் மட்டுந்தான் தலித்திஸ்டுகளில்லை என்பது எவ்விதம் உண்மையோ,
பெண்கள் மட்டுந்தான் பெண்ணியவாதிக ளில்லை என்பது எவ்விதம் உண்மையோ, அதுபோலவே பார்ப்பனர்கள்
மாத்திரந்தான் பார்பனிஸ்டுகள் என்பதில்லை.
இந்தியாவின்
‘இந்து’ மேட்டுக்குடிகள்
அனைவருமே (பட்டியலின மேட்டுக்குடிகள் உட்பட) பார்ப்பனரகள் அல்லாத பார்ப்பனிஸ்டுகளாகப்
பரிணாமம் பெற்றுவரு கிறார்கள். பார்பனியத்தை ஒரு தத்துவமாக, ஒரு கருத்தோட்டமாக ஏற்றுக்கொண்ட
சாதிய, வர்க்க மேட்டுக்குடிகள் அனைவரும் பார்ப்பனிஸ்டுகளே. சக்கிலியர்களின் சமூக நீதியையிட்டு
சில தலித் தலைவர்கள் எடுத்துள்ள வளர்தடை நிலைப்பாடு இதற்கானதோர் எடுத்துக்காட்டாகும்.
“திடகாத்திரமான” ஜாதிய இந்துக்களாக விளங்குவதற்கும், வளர்வதற்கும் இந்த மாற்றம் அவசியமாகின்றது.
4)
மொழி
வேறுபாடு:
ஆனால்,
இந்த ஜாதி இந்துக்கள், பார்பனியர்களையும், பார்ப்பனியத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத்
தயராயில்லை. பார்ப்பனியத்தை சம்ஸ்கிருத நீக்கம் செய்ய முற்படுகிறார்கள். இது சாத்தியமற்றது.
ஏனெனில் பார்பனியத்தின் தாய்மொழி சமஸ்கிருதந்தான். இங்கு தான் மொழியின் பண்பாட்டரங்க
முக்கியத்துவம் முன்வந்து நிற்கின்றது. பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன
அரசின் உருவாக்கத்திற்கு மொழி பெரும் தடையாக அமைகிறது.
(Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மேட்டுக் குடிகள்
மொழிவிடயத்தில் ஒத்தகருத்துக்கு வரமுடியாமை இனவாத-தேசிய வெறித்தன அரச உருவாக்கத்திற்கு
பெருந் தடையாக உள்ளது.
இது
தான் இந்திய மேட்டுக்குடிகளின் முன்பின் முரண் நிலைப்பாடாகும். அதாவது, இந்திய நாட்டின்
தற்போதைய ‘தேச அரசு’ தொடரவேண்டும் என்பதில்
மேட்டுக் குடிகளிடையே ஒத்தகருத்து, ஆனால், நிலவும் நாட்டரசின் குணாம்சம் எவ்விதமாக
இருக்கவேண்டும் என்பதில் அவர்களால் ஒரு ஒத்த கருத்துக்கு வரமுடியாநிலமை.
இந்திய பார்பனரல்லா
மேட்டுக்குடியின் முன் பின் முரணான கொள்கைதான் மத்திய அரசுக்கும், ஜாதி இந்து மாநில
அரசுக்களுக்கிடையேயான உறவுகளை சீர்செய்ய முடியாமல் காலத்துக்குக் காலம் தெருச்சண்டைகளில் ஈடுபட்டுவருவதற்கான காரணமாகும்.
5)
மாநில
சுயாட்சிகள்:
பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத
இனவாத-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist
Fanatic State) மாறுவதற்கு தடையாக இருக்கும் மற்றோர் காரணி இந்தியாவின் மாநில சுயேட்சி
முறையாகும்.
இவைதான்
இந்தியாவின் தனித்துவங்களில் சிலவாகும்.
முடிவாக, பங்காள
தேஷ், பாக்கிஸ்தான், மியான்மர், ஸ்ரீ லங்கா ஆகிய அரசுகள், வல்லரசுகளின் பங்களிப்பினால்
இனவாத தேசிய அரசுகளாக மாறுவதில் முழுமையான வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், இந்திய அரசோ
ஒரு தேசிய அரசு என்ற நிலையை எப்போதோ இழந்துவிட்டது, ஆனாலும் இனவாத தேசிய அரசாக மாறுவதில் இன்னமும் முழுமையான
வெற்றிபெறவில்லை.
No comments:
Post a Comment