“தேசவிடுதலைப் போராட்டம். தேச விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிணாமங்களைக் கொண்டது.” மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். இடதுசாரி அமைப்புகளையும், தேச விடுதலை அமைப்புகளையும் இனங்காண்பதற்கான மிகச் சிறந்த அளவுகோல். தேச விடுதலையை அங்கிகரிக்காத இடதுசார்கல் இடதுசார்களல்ல, அவர்கள் திருத்தல்வாதிகள். ஏகாதிபத்தியத்தை எதிர்க்காதவர்கள் இலைமறை காய்நிலை ஏகாதிபத்திய தாசர்களே. பௌத்த-சிங்கள பேரகங்காரவாத அரசுக்கு அப்பாலும், டெல்லி பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு அப்பாலும் உலகைக் காணமறுப்பவர்களை எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம். ஆனால், சோஸலிசப் புரட்சியை ஏற்காத ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசவிடுதலைப்போராளிகளின் இருப்பு சாத்தியமானது. இருந்தும் அவர்களின் வளர்திசைப் பங்கு குறுகிய ஆயுள் கொண்டதாகவே இருக்கும். சோஷலிஸப் புரட்சிக்கு அஞ்சி இவர்கள் ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர்ந்து கொள்வார்கள். சியாங் கே செக், நாசர், கேர்னல் கடாபி, என் குறுமா போன்றாவர்கள் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
https://www.facebook.com/suba.rajan.353/posts/624332997769758
எனும் ம்கநூல் பதிவுக்கான பின்னூட்டல்
https://www.facebook.com/suba.rajan.353/posts/624332997769758
எனும் ம்கநூல் பதிவுக்கான பின்னூட்டல்
No comments:
Post a Comment