Wednesday, 5 June 2019

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.


விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.
பாகம் 1
இந்தியரசின் இவ் அறிவிப்புக்கு என்னதான் காரணம்? தமிழீழ அரசை அமைப்பதற் -கான முயற்சியில் புலிகள் ஈடுபட்ட வண்ணமேயுள்ளார்களாம்; அதற்குத் துணை -போகும் நடவடிக்கைகளில் ஈடபடக்கூடியவர்கள் இந்தியாவிலும் உள்ளார்களாம்; இவ்விதம் துணைபோகும் நடவடிக்கைகளை சட்டவிரோதமான தாக்குவதுதான் இத் தடை நீட்டிப்பிற்கான காரணமாம். இதுதான் காரணமாக இருந்தால் தடை நீட்டிப்பில் எந்தத் தவறுமில்லை. அந்நிய நாடொன்றின் உள்நாட்டு விவகாரங் -களில், அந்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாகத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை. இந்திய அரசுக்கும் இல்லை இந்திய மக்களுக்கும் இல்லை. அவ்விதம் தலையிடுவதாக இருந்தால் அது அனைத்துலக, (U.N.O) அல்லது குறிப்பிட்ட சில நாடுகளுக்கான அமைப்புகளின் (SCO) ஊடாக மட்டுமே முடியும். தேசிய தன்னாட்சி உரிமை தேச இறமை என்பன கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் செயற்படும் தமிழ் இனவிய தேசியவாதக் குழுக்களில் சில தமிழ்நாட்டைத் தாயகவும் தமிழீழத்தை சேயாகவும் குறிப்பிட்டிருந்தன, அத்துடன் சேர்த்து தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் இணைக்கும் கடல் பகுதியை ‘தமிழ்க் கடல்’ எனவும் பிரகடனப் படுத்தியிருந்தனர். தமிழீழத் தேசியம் இவர்களின் தத்துக் குழுந்தையா என்ன? யார் யாருடனோ பேரம்பேசி தமிழீழத்தை தத்தெடுத்து விட்டார்களா? தமிழீழக் கடற்பரப்பினுள் உள் நுழைந்த தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் கைது செய்ததையும்; தி.மு.க ஆட்சிக் காலத்தில், இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை, மீண்டும் இந்தியா மீட்டுக் கொள்ளவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததுவும், அது இன்னமும் தொடர்வதையும் யாவரும் அறிவர் இந் நடவடிக்கையையிட்டு தமிழீழத் தேசியம் எவ்விதம் செயற்பட்டது? கச்சதீவு தமிழீழ தேசத்துக்கே உரியது என்பதே தமிழீழத்தின் நிலைப்பாடாகும். தமிழீழத்தின் தேசிய தன்னாட்சியுரிமையில் கைவைக்கும் உரிமை யாருக்குமேயில்லை. அவ்விதம் கைவைப் -பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், அது யாராக இருந்தாலும் என்ன?
வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா ஆகிய நாடுகளின் தேசியத்தை உருவாக்குவதில் சீனாவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப் பெரும் பங்கிருந்தது. ஆனால், அதற்காக சீனா இந்நாடுகளை தனது சேய் என்று என்றுமே சொன்னதில்லை. சீன, வியட்நாம் ஆகிய இருநாடுகளுக்கிடையிலும் தற்போது கடல் பரப்பினில் தீவுக்கூட்டம் ஒன்றின் இறமை தொடர்பான உராய்வுகள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் தத்தமது இறமைகளை விட்டுக் கொடுக்காத முறையில் தமக்குள்ளான முரண்பாடுகளை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தமிழ் இனத் தேசியவாதிகள் தமிழீழத்  தேசியத்தின் இறமையை ஏற்றுக்கொள்ளத் தயராய் இல்லை.
தமிழீழத்தின் போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் வயிற்றுப் பிழைப்பு நடத்திவருகிறார்களே தவிர, தமிழீழத் தேசியத்தின் வளர்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தப் பங்கும் வகிக்கவில்லை.
(1) இந்திய சமாதானப் படைக்கும் (IPKF), விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையேயான யுத்தத்தின் போது, IPKFஐ இலங்கையில் இருந்து வெளியேற்ற இவர்கள் கொடுத்த ஆழுத்தங்கள் என்ன? இவ் யுத்தத்திற்கு காரணமான இந்திய தேசிய காங்கிரஸுடனான நட்பைத் தொடர்ந்து பேணிவருவது ஏன்?
(ஆ) 1983இல் இருந்து முள்ளிவாய்க்கால் பேரழிவுவரை நடந்த இனப் படுகொலைகளை -யிட்டு இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? 1983 நடவடிக்கைகளையிட்டு இந்திய மத்தியரசும், இந்திய காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழர்க -ளுக்கு சாதகமான சில நடவடிக்கைகள் எடுத்தன. ஆனால் அவை, திராவிட இன தேசியவாதிகளினதோ, தமிழினத் தேசியவாதிகளினதோ அரசியல் நிர்ப்பந்தங்களாலல்ல. இந்தியத் தேசியத்தின் இறமை கருதி மத்தியரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் 10 வருடங்கள் கடந்தும் ஸ்ரீ றிலங்கா அரசாங்கத்தால், ஐ.நா சபையால் பிரேரிக்கப்பட்ட சாதாரண துயர் துடைப்பு நடவடிக்கை -களை இட்டுங்கூட கூட எதுவும் நடைபெறவில்லை. ஐ.நா சபையின் பிரேரணணகளில் எதையும் இந்திய மக்களிடையே குறிப்பாக தமிழ் மக்களிடைய ஜனரஞ்சகப் படுத்தி, அது தொடர்பாக இந்திய மத்தியரசுக்கு மக்கள் அழுத்தங்களை கொடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின தேசிய வாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்வோர்கள் வகுப்பறையின் பின் வரிசை மாணவர்கள் ‘வந்துள்ளேன் சார்’ ‘வந்துள்ளேன் சார்’ என உரத்த குரலில் எம்பிநின்று கூச்சல் போடுவது போல் இவர்களின் தமிழீழ தேசிய உணர்ச்சியும் அடங்கிவிடுகிறது. அவ்வளவு தான்.
(இ) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக (1977 இல் இருந்து) இலங்கையில் இருந்து தமிழ் அகதிகள் வெளியேறிய வண்ணமே உள்ளார்கள். சமீபத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இவ் வெளியேற்றம் இன்னமும் அதிகரிக்கப்போவது நிச்சயம். இவ்விதம் வெளியேறியவர் -களில், இந்தியாவில் உள்ளவர்களைத் தவிர, பிற நாடுகளின் அகதிகளுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது. ஒன்றில் குடியுரிமை, அல்லது Green card உரிமை, அல்லது சட்டவிரோதக் குடியேறிகளல்ல என்ற உத்தரவாதத்துடன் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் உரிமை கிடைத்துவிட்டது.(அவுஸ்ரேலியா மட்டும் விதிவிலக்காக -வுள்ளது) ஆனால் இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகள் இன்னமும் “கள்ளத்தோணி -களாகவே” கருதப்படுகிறார்கள். சட்டவிரோதக் குடியேறிகள்” என்பதுவே இவர்களுக்கான சட்டரீதியான அங்கிகரமாகும். எப்போதும் நாடுகடத்தப்படலாம், எப்போதும் சிறைபிடிக்கப் -படலாம், எப்போதும் தடுப்புமுகாமில் அடைக்கப்படலாம், விசேட காரணங்கள் எதுவும் கூறத்தேவையில்லை “சட்ட விரோதக் குடியேறிகள்” என்ற அடையாளமே போதுமானது. இதுதான் இந்திய ஜனநாயகம்.
இத்தனைக்கும் இலங்கையில் வாழும் மலையகத்தமிழர்களில் ஒரு பகுதியினரை பிரஜா -உரிமை யற்றவர்கள் ஆக்கியது இலங்கை, இந்திய அரசுகளேயாகும். இலங்கைச் சட்டம் இவர்களை பதிவுப்பிரஜைகளென அடையாளங் காட்டுகிறது. இவர்களில் பலர் இந்திய அகதி முகாம்களிலும் உள்ளார்கள். இவர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி இந்தியப் பிராஜா உரிமை வழங்கவேண்டியது இந்தியரசின் கடமையாகும். ஆனால், எதுவும் ஆகவில்லை.
இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கான நிரந்தரத் தீர்வுதான் என்ன? இந்தியத் தேசியத்தின் அரசியல் தேவைதான் இதை நிர்ணயிக்கின்றதா? இலங்கை, தமிழீழம் ஆகிய தேசங்களின் இறையான்மையில் தலையிடுவதற்காவென நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மக்கள் அணிதான் இவ் அகதிகளா? தமிழ் நாட்டின் நிலைப்பாடும் இதுதானா? அகதிகளின் உரிமைப் பிரச்சனை உலகளாவிய ஒரு மனிதாபிமான உரிமைப் பிரச்சனை என்பதை நிளைவு கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டு தமிழ் இனவாதிகளின் குறிக்கோள் என்ன? அவர்களின் நிரந்தர மௌனத்துக் -கான காரணம் என்ன? அவர்கள் வெறும் அரசியல் வயிற்றுப்போக்குவாதப் போலிகள் என்பதற்கு அகதிகளை ஒட்டிய அவர்களின் நிலைப்பாடு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறிலங்கா அரசால், இந்திய மீனவர்களின் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை எதிர்த்துப் போராட திராணியற்ற, முதுகெலும்பற்ற திராவிட இனத் தேசியவாதிகளும், தமிழ் இனத் தேசியவாதிகளும் தமிழீழ தேசியத்திற்கு துணை நிற்பார்களென இந்தியரசு கருதுவது உண்மையல்ல. ஆகையினால் இத் தடை அவர்கள் மீதான அச்சத்தால் ஏற்பட்டதல்ல. உண்மை வேறெங்கோ இருக்கிறது. அதை ஆராய்வோம்.
இன்றைய இந்தியத் தேசிய அரசின் (அது BJP அரசாக இருக்கலாம் காங்கிரஸ் அரசாக இருக்கலாம்) உடனடிக் குறிக்கோள் (2018-2025 வரை); தான் தெற்காசிய வல்லரசாக மாறவேண்டும் என்பதுதான் உலகின் பிற வல்லரசுகளுடன் (U.S, N.A.T.O, ருஷ்யா, சீனா) தான் நட்பாக இருக்கவேண்டும், அவற்றின் தெற்காசியச் செயற்பாடுகள் அனைத்தும் தன்னூடாக அமையவேண்டும், தன்னை மீறி அமையக்கூடாது என்பதுதான் இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இதில் எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் இன்றைய இந்தியத் தேசியரசு தயாரியில்லை. தனது இன்றைய அரசியல் குறிக்கோளுக்கு எதிரான அனைத்துத் தெற்காசிய அரசியல் போக்குகளையும் இன்றைய இந்தியத் தேசியரசு வெறுக்கின்றது. இப்போக்குகளை தெற்காசிய அரசியல் களத்தில் இருந்து முற்றாக தூக்கியெறிய வேண்டும் என்பதே இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இவ் அரசியல் போக்குகளில் ஒன்றாக விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது பட்டியலில் சேர்ந்துள்ளது. தடைக்கான உண்மையான காரணம்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவேயாகும்.
இது இரண்டாம் பாகமாக வெளியாகும்.
தடை தொடரும் என்ற முடிவுக்குப் பின்னால் பெரும் அரசியல் காரணங்கள் எதுவுமே -யில்லையென்றும், ராஜீவ் காந்தி கொலையால் ஏற்ப்பட்ட கடுங்கோபம் இன்னமும் இந்திய அரசியல் இயக்கங்களைவிட்டு மறையாததுதான் அதற்கான காரணம் என்று கூறுவோரும் உண்டு. சிரிப்புக்கிடமான விளக்கம்.
‘தேசத்தின் தந்தை’ எனவும், ‘மஹாத்மா’ எனவும் பிரகடனப்படுத்தப்பட்ட காந்தியைக் கொன்ற இயக்கத்தை தேசபக்தி இயக்கமென தூக்கிக் கொண்டாடுவது யார்? இந்தியாவின் சுதந்திரத்துக்காக தீவிரமாகவும், மாறுபட்ட முறையிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் போராடிய சுபாஷ் சந்திரபோஷிற்கு நடந்தது என்ன? அவரின் அவலத்துக்கான காரணம் யார் அல்லது எது என்பதுகூட இன்னமும் வெளிவரவில்லை. தேசியத் தலைவர்களுக்கு இந்திய அரசியல் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான். அடுத்ததாக இந்திராகாந்தி அவர்களின் கொலை. சீக்கியர்களுக்கு எதிராக இந்திராவால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைக்கான எதிர்வினையே இந்திராகாந்தி அவர்களின் மரணமாகும். நடத்தியது ஒரு சீக்கியரே. இதற்கான சீக்கியர்களையோ, பஞ்சாபிகளையோ அல்லது அவர்கிளைடையே காணப்படும் பஞ்சாபிய தேசிய இயக்கங்களையிட்டோ ‘இந்திய தேசியவாதிகள்’ தமது தொடர் கோபத்தை வெளிப்படுத்தவில்லையே, ஏன்?
அது போன்றதுதான் ரஜீவ் காந்தி அவர்களின் கொலையும். ஏனெனில், தமிழீழ தேசியப் பொருளாதார, தமிழீழ இராணுவப் பாதுகாப்பு ஆகிய இருவிடயங்களிலும் பிரபாகரன் தற்சார்பு கோட்பாட்டை மிக இறுக்கமாகவும், வழுவல் நழுவல் இன்றியும் பின்பற்றினார். யாரையும், எதற்காகவும் சார்ந்து நிற்கவில்லை. இது விடயத்தில் அவர் ஓர் உலகளாவிய முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இந் நிலைப்பாட்டை இந்தியரசு வரவெற்றது. தனது தெற்காசிய ஆதிக்க நிலைக்கு பிரபாகரன் தடையாக இருக்கமாட்டார் என்பதையும், வெற்றிகொள்ள உதவியாகவும் இருப்பார் என நம்பியது. இதனால் தமது சொந்த நாட்டின் தமிழ் நாடு தேசத்தின் இறையாண்மை பற்றி எதுவித அக்கறையுமற்ற சில ‘போராளிகள்’ (வை.கோ, நெடுமாறன் போன்றவர்கள்) வழர்வதையும் வாழ்வதையும் ஊக்கப்படுத்தியது. இவர்களின் ஊடாக புலிகள் இயக்கத்தை ‘இந்தியத் தேசியத்தின்’ துணைப்படையாக மாற்ற முற்பட்டது. ஆனால், இந்திய அரசு தோற்றுப்போனது. இத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதுபோனமையின் விளைவதான் விடுதலைப் புலிகள்-IPKF மோதலாகும். அங்கும் பிரபாகரன் வென்றுவிட்டார்.
ஆனால் பிரபாகரனுக்கு பின்னைய விடுதலைப் புலிகள் இயக்கம்; இன்று, அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய சார்பு நிலையை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்றைய நிலைப்பாடு, மூலோபாய வகைப்பட்டதா அல்லது தந்திரோபாய வகைப்பட்டதா என்பது புரிய இன்னும் சில காலம் எடுக்கலாம். அனால், இந்தியரசும் அதன் புலனாய்வுப் பிரிவுகளும் வி.பு.இ அமெரிக்க-மேற்கு முகாமைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை முடிவெடுத்துவிட்டன. ஆகவே தடை நீடிக்கப்படுகிறது.
குறிப்ப:- இன்றையத் தெசிய அரசு எனும் பதத்தின் அர்த்தம் BJP அரசாக இருந்தாலும் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதேயாகும்
தொடரும்
பாகம் 2 :- விடுதலைப் புலிகள் மீதான தடையும்
தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவும்.
இக்கட்டுரையாக முழுமையாக புரிந்து கொள்வதற்காக அடிக்குறிப்பு ஒன்று இணைக் கப்படும். இது பாகம் 3ஆக அமையும். பாகம் 2 நான்கு நாளில் வெளிவரும். பாகம் 3, இன்றிலிருந்து 10 நாட்களில் வெளிவரும். வாசகர்களின் கருத்துப் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.
அடிக்குறிப்புகள்: I
(1) பாக்கிஸ்தான் உருவாகிய தகவல்
(2) லோக்மான் திலகரின் இயக்கம் பற்றிய குறிப்புகள்
(3) சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இயக்கம்
(4) காந்தி பிரித்தானியத் தொடர்பு
(5) இஸ்லாமியர்களால் இந்தியா ஆளப்பட்டது பற்றிய குறிப்புகள்
(6) சிலுவை யுத்தம்
(7) ஒரு நாடு இரு தேசங்கள்
(8) பங்காள தேஷ உருவானது பற்றி
(9) பங்காள தேஷில் இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கை
(10) காஷ்மீர் விவகாரம்
(11) இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக மாறிய விபரங்கள்
(12) SEATO பற்றி
(13) U.N.O தடை பற்றிக் கூறல்
(14) இந்திய-பாக்கிஸ்தானிய யுத்தங்கள்
(15) இம்ரான் கானின் ஆட்சி
(16) S.C.O-பாக்கிஸ்தான் இந்திய இணைப்பு
(17) One way One road?-பாக்கிஸ்தான் ஊடாகச் செல்ல-துறைமுகம் விபரம்
(18) சீன-பாக்கிஸ்தான் கடன்
(19) I.M.F
(20) பலுஸ்திஸ்தான்
(21) BRIC
(22) ஆப்பானிஸ்தான்
      (23) இஸ்ரேல் பாலஸ்தீனிய உறவு
நன்றி.

Friday, 24 May 2019

கொழும்புக் குண்டுவெடிப்பின் காரணகாரியத் தொடர்புகள்.


கொழும்புக் குண்டுவெடிப்பின் காரணகாரியத் தொடர்புகள்.
மேலோட்டமாகத் தெரியும், காரணம்:-
கிறிஸ்துவ ஆலயங்களில் சிலவற்றிலும், கொழும்பு நகரின் பிரபல ஹோட்டல்கள் சிலவற்றிலும் நடந்த குண்டுவெடிப்புகளுக்கான காரணகாரியத் தொடர்புகளைத் தேடும் அரசியல் ஆய்வுகள், விவாதங்கள் இன்னமும் தொடர்கின்றன. கிறிஸ்துவ ஆலயங்களிலன குண்டு வெடிப்புகளான காரணத்தை இஸ்லாமிய இயக்கத்தின் மீது சுமத்தி அனைவரும் அமைதி அடைந்து விட்டார்கள் போலும். சுவிஸ்லாண்டில் இஸ்லாமிய பள்ளிவாசலின் மீதான குண்டுவெடிப்புக்கான பதில் தாக்குதலே இலங்கைக் குண்டு வெடிப்புகள் என காரணமும் கற்பித்தாகிவிட்டது. ISIS எதற்காக இலங்கையை தேர்ந்தெடுத்தது? ஹோட்டல் -களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தமிழ்-சிங்கள-இஸ்லாமிய இன மோதல்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், நான்காவது அணியாக கிறிஸ்தவர்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் ISIS-க்கு ஏன் ஏற்பட்டது? சிங்கள கிறிஸ்துவர்கள், தமிழ் கிறிஸ்துவர்கள் என்பதுடன், பறங்கியர் (Burghers) எனும் ஒரு தனியான இனக் குழுமம் இலங்கையில் உண்டு என்பதையும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டும். இவர்கள்  கிறிஸ்தவர்கள். ஆகவே சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், பறங்கியர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய ஐந்து இனக்குழுமங்கள் மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
அவ்விதமானல் இலங்கையை ஒரு இன, மத போராட்டக் களமாக மாற்றவேண்டும் என்பதுதான் ISIS-யின் குறிக்கோளா? இவ்விதமானதோர் குறிக்கோள் ISIS-க்கு உண்டாக முடியுமா? உண்டாக வேண்டிய அவசியம் என்ன? அவசியம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்விதமானால் ISIS பயன் படுத்தப்பட்டிருக்கின்றது என்று கருதலாமா? பயன்படுத்த்யது யாராக இருக்கும்? இலங்கைக்கு வெளியில் அவர்களைத் தேட வேண்டாம், தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். தேடுவோம்:
காரணம் 1)  சிங்கள சமூகத்தில் ஆழப் புதைந்திருக்கும் கரவாஸ்-கொவிகம முரண்பாடு.
இதன் அர்த்தம், ISISஐ பயன் படுத்தியவர்கள் இலங்கைக்குள்ளேயே உள்ளார்கள். யார் அவர்கள்? வேறுயாருமல்ல பௌத்த, சிங்கள தேசியவாதிகள்தான். ஏன்? விவரத்துள் செல்ல முன்பாக சிந்திக்க வைப்பதற்காக ஒரே ஒரு கேள்வி. 70% பௌத்தர்களைக் கொண்ட (சிங்கள இனத்தில்) சிங்கள கிறிஸ்தவர்களை விலத்திவைத்த பௌத்த சிங்களத் தேசிய -வாதம் எப்போது தோன்றியது? ஏன் தோன்றியது?
தோற்றுவித்தவர் அநகாரிக தர்மபாலா எனும் பௌத்த துறவி. இவர் ஒரு முன்னாள் கிறிஸ்தவர். கரவாஸ் எனும் சிங்களப் பிரிவைச் சேர்ந்தவர். கிறிஸ்துவ அதிகார பீடத்தினதும் காலனியல் வாதிகளினதும் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே கரவாஸ் சிங்களவர்களாகும். இவர்களுக்கும் ‘நியம’(தூய) சிங்களப் பௌத்தர்களாக அழைக்கப்படும் ‘உடரட்ட’(மலை) சிங்களவர்களுக்கும், (கொவிகம) இடையேயான முரண்பாடுகளின் செயற்பாடுதான் சிங்கள தேசியத்தின் வரலாறாகும். சிங்கள பௌத்த தேசியம் அல் (non) பௌத்த சிங்கள தேசியம் ஆகிய இரண்டினதும் கலவையே சிங்கள தேசியமாகும்.
ஐரோப்பியரின் ஆதிக்கத்தில் இருந்து இலங்கை “சுதந்திரம்” அடையும்வரை இலங்கையின் பெரும்பகுதி நிலப்பரப்பு கரவாஸ் சிங்களவர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. “சுதந்திரத்தின்” பின் இரு சாராருக்கும் இடையே இருந்த முரண்பாட்டில் ஒரு சமரசம் ஏற்படுத்தப்பட்டது. ஏற்படுத்தியவர்கள் பிரித்தானியர்கள். இது ஒரு வகைத் திணிப்பாகவே நடந்தது.
1950-களில்தான் வெளிப்படையான அரசியல் அரங்கினில் கரவாஸ் தேசியவாதம் பின்தள்ளப்பட்டு சிங்கள-பௌத்த தேசியவாதம் பிரதான அரசியல் போக்காக மாறுகிறது. இவ்விதம் பிந்தள்ளப்பட்டதற்காக இலங்கைப் பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்கா சுடுக் கொல்லப் படுகிறார். இருந்தும் இம் முரண்பாடு சிங்கள அதிகாரவர்க்கத்துள் இன்னமும் மிக தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டேயுள்ளது.
1950களின் பின் 1960-கள்வரை இவ்விரு அதிகார பீடங்களுக்கும் இடையே மூன்று இராணுவச் சதிகள் ஏற்கனவே நடந்துள்ளன. கரவாஸ்பகுதி தோல்வி கண்டுவிட்டது.  இலங்கையின் பிரதம மந்திரி (கொவிகம) ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவின் வாக்குரிமை -யைப் பறித்தது, கரவாசிய  J.R.ஜெயவர்த்தனாவேயாகும். ஐரோப்பிய முகாமினது குறிப்பாக அமெரிக்கா-பிரித்தானிய, மற்றும் NATO-வினது ஆதரவைப் பெற்றது கரவாஸ் பகுதியேயாகும். இந் நிலைமை இன்றுவரை தொடர்கிறது.
 சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள், தொடர்ச்சியாக நடைபெற்று -வரும் இவ் இராணுவ சதியின் மற்றோர் முன்னெடுப்பாகும். மஹிந்த ராஜபக்க்ஷவை பிரதம மந்திரியாகக்கொணர எடுத்தசதி முயற்சியின் தொடர்ச்சிதான் கொழும்பு குண்டுவெடிப்பாகும். மஹிந்த ராஜபக்‌ஷ, ஜே.வி.பி தலைவர் ஆகிய இருவரும் கரவாஸ் பிரிவைச் சேர்ந்தவர்களே. ஆனால் இவர்கள் இருவரும் கொவிகம சிங்களவர்களின் தலைவர்களாகவும் வருவதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். ஆனாலும்  கொவிகம சிங்களவர் கள் இவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த, S.W.R.D பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகாபண்டாரநாயக்காவுக்கும் (இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி) மஹிந்த ராஜபக்‌ஷ்விற்கும் இடையேயான பிணக்கிற்கு இதுவும் ஒரு காரணமாகும். ராஜபக்‌ஷவை பிரதமராக்குவது என்பது, கரவாஸை(றணில் விக்கிரசிங்க) மேலும்  தனிமைப்படுத்துவது என்பதேயாகும். ஆனால். கொவியாஸ் தோல்வி கண்டு விட்டது, . கரவாஸ் அதிகாரபீடம் காப்பாற்றப்பட்டுவிட்டது. அத்தோல்வியின் விளைவுதான் இக் குண்டு வெடிப்புகளாகும்.
சிறிலங்காவின் ஆட்சி அதிகாரக் கட்டுமானதில் கரவாஸ் ஆதிக்கத்தை மேலும் பலவீனப்படுத்துவதற்காகத்தான் ISIS பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதுதான் ஒரே காரணமா? வேறு காரணங்கள் இல்லையா? அகக் காரணம் என்ற பக்கத்தில் இது ஒன்றுதான் உடனடிக் காரணியாகும். ஆனால் புறக்காரணம் என்ற பக்கத்தில் வேறோர் காரணமும் உண்டு.
காரணம் 2) தெற்காசிய இராணுவ சமநிலையை நேர்படுத்துதல்
இது, தெற்காசிய இராணுவ சமன்பாட்டைப் பொறுத்ததோர் பிரச்சனையாகும்.
தெற்காசிய இராணுவச்சமநிலை யென்பதென்ன? தராசின் ஒரு நெம்பில் இந்தியரசும் மறு நெம்பில் பாக்கிஸ்தான், வங்காளதேஷ், சிறிலங்கா, பர்மா, மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய அரசுகளும் உள்ளன. இன்றைய நிலையில் இந்தியாவின் நெம்புதான் அதிக சுமையுடன் காணப்படுகிறது; கீழ் நோக்கிச் சாய்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஜப்பான் ஆகிய நாடுகள் இத் தராசின் தற்போதைய நிலையை பேணவே முயற்சிக்கின்றன. சீனாவும், ருஷ்யாவும், BRICS இனதும் SCO வினதும் பங்களிப்பின் மூலம் இத் தராசின் ஓர் அரசுப் (இந்திய அரசுப் பக்கம்) பக்கத்தையும், பல் அரசுப்பக்கத்தையும் சம நிலைக்குக் கொண்டுவரவே விரும்புகின்றன. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சிறிலங்கா அரசு, பக்கிஸ்தான் அரசின் துணையுடன் பல் அரச தட்டில் ISIS -ஐயும் ஏற்ற முற்படுகின்றது.
இதன் மூலம் பௌத்த சிங்கள தேசியவாதம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்த முற்படுகின்றன.
முதல் மாங்காய்:- உள்நாட்டில், ஐரோப்பிய முகாமுடன் நெருங்கி உறவாடிவரும் கரவாஸ் அணியைப் பலவீனப்படுத்துவது. றணில் விக்கிரமசிங்க அணியையும், தமிழீழத் தேசியத்தின் இரு அணிகளையும்.
இரண்டாவது மாங்காய்:- தெற்காசிய இராணுவ சமநிலையில் இந்திய ஆதிக்க நிலையைப் பலவீனப் படுத்துதல்.
மூன்றாவது மாங்காய்:- இந்தியரசுக்கும் தமக்கும் இடையே அடிக்கடி நடக்கும் இராணுவ சூதாட்டத்தில் ISIS-ஐயும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ளல்.
காரணம் 3) இலங்கை இஸ்லாமியர் நிலை:-
1915-இல் இருந்தே இஸ்லாமியர்கள், ஒரு மதப்பிரிவென்ற முறையில் அடக்கப்பட்டே வந்துள்ளனர். சிங்கள பௌத்த தேசியத்துடன் முரண்பட்டு நிற்பதுவும், இலங்கைத் தமிழ்த் தேசியத்துடன் ஒரு நட்புறவைப் பேணுவதுமே இவர்களின் பொதுவான போக்காக இருந்து வந்துள்ளது. மலையத் தமிழர்களுடன் என்றுமே இவர்களுக்கு எந்த முரண்பாடும் இருந்ததி -ல்லை. ஆனால் தமிழீழ தேசிய இனவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பின்னர் இவர்கள் தம்மைத் தனித்தேசியமாக வழர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இத் திசைநோக்கித் துரிதமாக வளரவும் ஆரம்பித்தார்கள். 20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியிலேயே பாக்கிஸ் -தானை தளமாகக் கொண்ட வஹாபிஸத்துடன் இணைந்து கொண்டார்கள். புலி எதிர்ப்பை மனதில் கொண்டு சிறிலங்கா அரசும் கண்டுங் காணாத ஒரு போக்கைக் கடைப்பிடித்தது.  இவர்களின் வளர்ச்சிக்குத் துணைபோகவும் செய்தது. ஆகவே இஸ்லாமியத் தேசியவாதக் குழுக்கள் ISISஆல் தோற்றுவில்லப்பட்டவையல்ல.. ஆனால் பரஸ்பர நன்மை கருதி நண்பர்களாகியிருக்கலாம். இவ்விரு நண்பர்களும் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக் -கவில்லை என்பதையும், அதேபோல் சிறிலங்கா அரசு ISIS உடன் எந்த முரண்பாட்டையும் வழர்ந்துக்கொள்ள விரும்பவில்லை என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
முடிவாக:- எதுஎப்படியோ பௌத்த-சிங்கள தேசியவாதம் தனது எதிரியை நண்பனாக்கிக் கொண்டுள்ளது. எதிரியை நண்பனாக்கிக் கொண்டும், நண்பரை எதிரிகளாக்கிக் கொண்டும் அல்லல்படுவது இனவியத் தேசியவாதங்களின் பொதுவான குணாம்சமாகும் ஆகையினால் -தான் இனவியல் தேசியவாதங்கள் சாத்தியமில்லை, அல்லது வேலைக்காகாது எனும் கருத்து முன்வைக்கப்பட்டுவருகிறது.

‘சாத்தியமில்லாத இனவியத் தேசியம்’  எனும் கட்டுரையைப் படிக்கவும். https://vidiyalgowri.blogspot.com/2019/05/ethnonationalism.html


கரவாஸ்-கொவியா முரண்பாடு பற்றிய விரிவான விளக்கத்தையும், இலங்கையின் இஸ்லாமியர் ஒரு தனித்தேசியமாக உருத்திரண்டுவரும் நிலைபற்றியும் தெற்காசிய இராணுவ சமநிலைபற்றியும் விரிவாக, அறிந்து கொள்ள கீழ்வரும் 3 கட்டுரைகளையும் வாசிக்கவும்.
கட்டுரை I
3-2) மஹிந்த இராணுவம் எதற்காகப் பலப்படுத்தப்படுகிறது.
3-2-1) இராணுவச் சதிக்கு அஞ்சியா?
கட்டுரை II
3-2-5) இஸ்லாமிய ஆயுத குழுக்களுக்கு அஞ்சியா?
கட்டுரை III
3-2-6) ஆசிய வல்லரசுகளின் கடும்போக்கிற்கா?
இக்கட்டுரைகள் இரண்டும் பின் வரும் நூலின் சில பகுதிகளாகும்.
“வடிவங்கள் மாறலாம்! போராட்டம் தொடரும்......” -சமூகவியல் ஆய்வு,
ஆசிரியர்-கைமண்.
பதிப்பு-மறுநிர்மாணம்,
First Edition: July 2011, Publishers-Maru Nirmanam ©
கைமண் எனது புனைபெயராகும். நூல் பெறவிரும்புவோர், கீழ்வரும் marunirmanam@gmail.com, மற்றும் vidiyalillam@yahoo mail.co.in முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்.
நூலின் PDF பிரதி உண்டு. e-mail இல் அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்ளவும்.
இம் மூன்று கட்டுரைகளும் PDF வடிவிலும் உண்டு. உள்ளதனால் முகநூலிலோ, டுவிட்டரிலோ அனுப்பிவைக்க முடியாதுள்ளது. ஆகவே ஈ-மெயிலில் அனுப்புகிறோம். உங்கள் மெயில் முகவரியை அனுப்பி வைக்கவும். நன்றி.
-------------------------------------------------------------------------

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...