Friday, 18 August 2017

தமிழீழச் சாதியத்தைக் களைந்தெறிய என்னசெய்ய வேண்டும்?

தமிழீழச் சாதியத்தைக் களைந்தெறிய
என்னசெய்ய வேண்டும்?

       50 வருடகால வரலாறுள்ள சிங்களப் பேரகங்கார வாதத்தையே நம்பத்தயாரில்லை, 300வருடகால வரலாறுள்ள சைவ-வெள்ளாள பேரகங்காரவாதத்தை நம்பச்சொல்லிக்கேட்பது என்னநியாயம்?

       சாதியச்சிந்தனைகள், சாதியச்சமூகஒழுங்குகள்-சமூகநியமங்கள்-ஆகியனவற்றின் தொகுப்பையே சாதியமெனக்குறிப்பிடுகிறேன். பௌத்த- சிங்கள பேரகங்காரவாதத்தினால் தமிழீழவர்கள் அனைவருமே அடக்கப்பட்டிருப் பதனால் சாதிய முரண்பாட்டைப் பகமைமுரண்பாடாக வளரவிடாமல் தடுப்பதற்கான வாய்புகள் உண்டு. ஆகவெ சாதியத்தை சிநேக முரண்பாடாக்கி அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதலே நாம் செய்யவேண்டிய உடனடிச்செயலாகும். அல்லது குறுகியகால வேலைத் திட்டமாகும்.
     இதைச் செய்வதில் வெற்றிபெறுவோமென்ற நம்பிக்கையுடன், அனைவரும் ஒன்றிணைந்து சாதிய அடக்குமுறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொணரப் போராடுவோம். சாதியஅடக்குமுறையின் சமூகவேர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாதோரில் பலர், பொதுஇடங்களிலான தீண்டாமை ஒழிப்புடன் தமது சாதியசமத்துவ இயக்கத்தை நிறுத்திக்கொள்வதே பொதுவழமையாக இருந்துவருகிறது. இதனால், இதுவரையான தீண்டாமை ஒழிப்புநடவடிக்கைகள் சாதியத்தை சீர்செய்வதாகவே இருந்துள்ளன. தீவிர சீர்த்ருத்தவாதிகளின் நடவடிக்கைகள் சாதியஒழிப்புப் போலிகளை அம்பலமாக்கியுள்ளது. மிகப்பலரோ ஏதோ செய்யவேண்டும் என்பதற்காக செய்பவர்களாகவே உள்ளனர். சாதியதைக் களைவதற்கான நுளைவாயில்களில் ஒன்றுதான் தீண்டாமைஒழிப்பாகும். இதனால்தான் தீண்டாமையை ஒழிக்க எனும் தலைப்பு தவிர்க்கப்பட்டு சாதியத்தை களைந்தெறிய எனும் தலைப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.
      தீண்டாமைஒழிப்பு எனும் நுளைவாயில் போராட்டத்தோடு நிற்பதல்ல, அதையும்தாண்டி சாதியத்தைக்களைவதே எமது குறுகியகால வேலைத்திட்டமாக இருக்கவேண்டுமெனக் கூறுவதற்கு மற்றோர்காரணமும் உண்டு. அது எமக்கிடையேயானதோர் அரசியல் போராட்டமாகும். அவ் அரசியல் என்ன?
தேசஅரசு உருவாக்கத்தின் தோல்விகள்:
 தேசஅரச உருவாக்க முயற்சிகள் 
       இலங்கைமண்ணில் இருநாட்டரசுகள். இதில் மூத்தவரான ஸ்ரீலங்கா நாட்டரசு, 2009ஆம் ஆண்டு, இளையவரான தமிழீழ நாட்டரசை வீழ்த்தியது.     
1950களின்பிற்பகுதியில் இலங்கைத் தேசஅரச உருவாக்க முயற்சிகள் நடைபெறுவதாக நம்பப்பட்டது. இடதுசாரிகளின் உதவியுடன் S.W.R.D.பண்டாரநாயக்கா அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் அவரின் முயற்சி எதிர்பார்த்தபடி அமையவில்லை. தேசஅரச உருவாக்கத்திற்கு எதிர்மாறாக,  ‘ஸ்ரீ லங்கா நாட்டரசு’ உருவாவதற்கான அரசியல் அடித்தளம் இடப்பட்டது. சுமார்பத்து வருடங்கள்கடந்து ஸ்ரீமாவோவின் தலைமையில் ‘ஸ்ரீ லங்காநாட்டரசு’ உருவாக்கம் முழுமைபெற்றது.
        1970களின் முற்பகுதியில் இந்நாட்டரசுக்கு மாற்றாக ‘இடதுசாய் (left leaned) நாட்டரசொன்றை உருவாக்கு வதற்கான முயற்சியொன்று நடைபெற்றது. ஆனால், வலது நாட்டரசு இராணுவம் இம்முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிந்தது.
        1980களின் பிற்பகுதியில் இலங்கையில் மற்றோர் தேசஅரசு உருவாவதற்கான சூளல் கனிந்துவந்தது. ஆனால், இந்தியரசின்தலியீடு, விடுதலைப்புலிகளின் தீவிரவலதுசாரிப்போக்குடன் கூடிய தனிநபர் எதேச்சதிகார வெறி ஆகியவற்றால் இச்சூளல் பறிபோனது.
             1990களின் பிற்பகுதியில் பிரபாகரன் தலைமையில் மற்றோர் அரசு உருவாக்கப்பட்டது. துர்அதிர்ஸ்டவசமாக, இவ்அரசும் ஸ்ரீலங்கா அரசைப்போலவே ஒரு நாட்டரசகாவே அமைந்தது. இலங்கைமண்ணில் இருநாட்டரசுகள். இதில் மூத்தவரான ஸ்ரீலங்கா நாட்டரசு, 2009ஆம் ஆண்டு, இளையவரான தமிழீழ நாட்டரசை வீழ்த்தியது             
 வீழ்ந்தும் விழாத தமிழீழ அரசு:
       வீழ்ந்தது அரசின் பௌதீகக்கட்டுமானம் மாத்திரமேயாகும். அரசுஎனும் சமூகக்கட்டுமானம் இன்றுவரை வீழவில்லை.
      ஆனால், வீழ்ந்தது அரசின் பௌதீகக்கட்டுமானம் மாத்திரமேயாகும். அரசுஎனும் சமூகக்கட்டுமானம் இன்றுவரை வீழவில்லை. வீழாத இச் சமூகக் கட்டுமானம் மீண்டும் பௌதீகக் கட்டுமானமாக மலரப்போவது உறுதி. ஆனால் அவ்விதம் மலரவுள்ளஅரசு , சோழமரபுத் தமிழீழ நாட்டரசாக இருக்குமா அல்லது இதுவரை தமிழுலகம் கண்டிராதா தமிழீழத் தேச அரசாக இருக்குமா?  என்பது நிச்சயமில்லை. இருவகைக் கண்ணோடம் கொணடவர்களும் நம்மிடையே உள்ளார்கள். தேசிய அரச உருவாக்கத்தில் நாட்டமுடையோர், சாதியத்தை சீர்திருத்திப் பொட்டிட்டுப்பூவிட்டு பாதுகாப்பதை விரும்பமாட்டார்கள். சாதியத்தை முற்றாகக் களைந்தெறியும் பார்வையில் இருந்தே அணுகுவாரகள். ஆகவே எமது வேலைத்திட்டங்கள் சாதியத்தைக் களைந்தெறிவதாக இருக்கவேண்டும். களைந்தெறிய என்ன செய்யவேண்டுமென்பதை முறைப்படுத்துவோம்.
1.      பண்பாட்டுப் புரட்சி:-
திரைமறைவிலான, சாதிய வரைமுறைகளற்ற புணர்ச்சியும், கண்டிப்பான சாதிய வரைமுறைகளுடனான குடும்பமும் சேர்ந்த இந்த அருவருப்பான  நடைமுறைதான் அகமணமுறையென அழகாக அழைக்கப்படுகிறது.
முதலாளித்துவ ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கு உட்பட்ட பண்பாடுகளுக்காக மட்டும் போராடினால் போதாது. தமிழீழப் புலம் பெயர்ந்தோர் (டயஸ்பறாவினர்) முதலாளித்துவ ஜனநாயகச் சமூகக் கட்டமைப்பினில் வாழ்ந்தாலும், அவர்கள் தமது சாதிய உணர்வுகளைக் கைவிடாதிருக்கும் உண்மையை மறுப்பவர் ஒரு பொய்யராகத்தான் இருக்க முடியும். எமது சமூகத்தில் சாதியத்தைப் பாதுகாக்கும் கருத்தியல் கட்டுமானத்தை இனங்காணவேண்டும். இனங்காணப்பட்ட கருத்தியல் கட்டுமானத்துக்கெதிராக வெளிப்படையான, எதுவித சமரசமுமற்றதோர் சித்தாந்தப் போராட்டம் நடத்தப்படவேண்டும். இச் சித்தாந்தப் போராட்டம் ஒரு பண்பாட்டுப் புரட்சியாக அமையவேண்டும். சுவாமி விபுலானந்தரை அடையாளமாகக் கொண்டு, ஆறுமுக நாவலருக்கும் வள்ளலாருக்கும் இடையே நடைபெற்ற ’ “அருட்பா- மருட்பா” சித்தாந்தப் போராட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடரப்படவேண்டும். ஆறுமுக நாவலரும் விபுலானந்தரும் இரு எதிர்எதிர்த் துருவங்கள் என்ற உண்மை வெளிக் கொணரப்படவேண்டும். அவ் உண்மைக்கு உயிர் கொடுக்க வேண்டும். விடுதலைப் போராட்டக் கலைஇலக்கிய படைப்புகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களுக்கும் கொடுபடவேண்டும். சைவத்துக்கும் பௌத்தத்துக்கும், சைவத்திற்கும்-இராமனுஜருக்கும் இடையே நடந்த சித்தாந்தப் போராட்டங்கள் நினைவுபடுத்தப்படவேண்டும். இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, அயோத்திதாஸப் பண்டிதர், பெரியார், நாரயண குருசாமி. அய்யன் காளி. அம்பேத்கர், சிங்காரவேலர் ஆகியோரை துணைக்கழைத்துக் கொள்ளவேண்டும்.
2.      தீண்டாமை ஒழிப்பு:-     
இந்து முறைப்படி பக்தி, கிரியா, ஞானம், யோகம்,ஆகிய நான்கு வழிபாட்டு மார்க்கங்கள் உள்ளன. இதில் பக்தி என்பது கடவுளில் பக்தியாக இருப்பது. கிரியா என்பது தெய்வதொண்டு. ஞானம் என்பது அறிவுசார்ந்த துறையீடுபாடு. யோகம் என்பது தெய்வத்துடன் அல்லது பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலத்தல். இதில் பக்தி தவிர ஏனைய மூன்று மார்க்கங்களும் தீண்டப்படாதவர்களால் தீண்டப்படக்கூடாத மார்க்கங்களாகும்.                                                                                                                                    
இன்று  நம் மண்ணில் காணப்படும் தீண்டாமையை  ஐந்துவகையாகப் பிரிக்கலாம். அவையாவன:-
   1--- பொது நிறுவனங்களில் தனியார் மீது பிரயோக்கிக்கப்பட்டுவரும் தீண்டாமை. (கோவில், கடைகள், திரைப்பட அரங்குகள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள், தோட்டவேலை, வீட்டுவேலை , கலைக்கூடங்கள் இத்தியாதிகள்……) இதுவரையான தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் தனியார்துறையைத் தீண்டவில்லை.                   
 2)---- ஒட்டுமொத்த சமூகத்தின் மீதானதீண்டாமை:-    
        ) ஒடுக்கப்பட்ட சாதியினரின் நில(காணி) கொள்வனவு உரிமை மீதான தீண்டாமை.                                                                                                                                                
) குடியிருப்புகள், சுடலை, ஆகியவற்றில் காணப்படும் தீண்டாமை:---- தீண்டப்படாதவர்களுக்கென தனியான குடியிருப்புகள், தனியான சுடலை. இவைபிற சமூகத்தினரால் தீண்டப்படாதவைகளாகும்.                                     
 3)….வழிபாட்டு உரிமையில் தீண்டாமை:----- ஆகமக் கோவில்கள் அமைக்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.                                                                            
 :--4)… தெய்வங்களில் தீண்டாமை:----- சிறு தெய்வங்களையும், குல தெய்வங்களையும் மாத்திரமே இவர்கள் தமது கோசில்களில் வழிபடலாம்.                                                                     
  5)..வழிபாட்டுமுறையில் தீண்டாமை:--- இந்து முறைப்படி பக்தி, கிரியா, ஞானம், யோகம்,ஆகிய நான்கு வழிபாட்டு மார்க்கங்கள் உள்ளன. இதில் பக்தி என்பது கடவுளில் பக்தியாக இருப்பது. கிரியா என்பது தெய்வதொண்டு. ஞானம் என்பது அறிவுசார்ந்த துறையீடுபாடு. யோகம் என்பது தெய்வத்துடன் அல்லது பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலத்தல். இதில் பக்தி தவிர ஏனைய மூன்று மார்க்கங்களும் தீண்டப்படாதவர்களால் தீண்டப்படக்கூடாத மார்க்கங்களாகும்.                                                                                                                                  
  6)… ஆன்ம ஈடெற்றத்தில் தீண்டாமை: ------இறந்தபின் பிறவிப் பெருங்கடலைக் கடந்த ஆன்மா பின்வரும் நான்கு நிலைகளில் ஏதோவொன்றை அடையும். அவையாவன: இறைநிழல், இறைவீடு, இறையுடனிருத்தல், இறையுடன்கலத்தல். இதில் பக்திமார்க்கிகள் இறை நிழலை அடைவார்கள். ஏனைய மூன்றையும் அவர்கள் மனதாலும்தீண்டக்கூடாது. சைவ சித்தாந்தம் சொல்கிறது.                                                                                                                                   
   7)… பல்வேறு சாதிகளுக்கிடையேயான தீண்டாமை:------ இனவிருத்தி நடவடிக்கைக்களில் சாதிகளுக்கிடையில் தீண்டாமைச் சுவரொன்று காலங்காலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான புணர்சியை  இச்சுவர் தடுக்கவில்லை.  லிங்க, யோனிப் பொருத்தம் பொருட்படுத்தப் படுவதில்லை. பொருந்தாவிட்டாலும் பறவாயில்லை.  உடல் வன்முறையையும் சமூக வன்முறையையும் துணைக்களைத்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வகைப் புணர்வுகள்  இனப்பெருக்க நோக்குடனானதாக இருக்கக் கூடாது. அதாவது குடும்பத்தை உருவாக்கக்கூடாது.  திரைமறைவிலான, சாதிய வரைமுறைகளற்ற புணர்ச்சியும், கண்டிப்பான சாதிய வரைமுறைக ளுடனான குடும்பமும் சேர்ந்த இந்த அருவருப்பான நடைமுறைதான் அகமணமுறையென அழகாக அழைக்கப்படுகிறது. தீண்டாமைகளின் அடிப்படையும், மிகக் கொடியதும் இதுதான். இத்தீண்டாமையை பாதுகாப்பதற்கான அரண்கள்தான் பிற அனைத்துத் தீண்டாமைகளுமாகும்.
ஆகவே தீண்டாமை ஒழிப்புப் போராட்டமானது இவ் ஏழு துறைகளிலும் நடத்தப்படவேண்டும். அப்போதுதான் சாதியத்தைமுற்றாகக் களைந்தெறிய முடியும்.  ஒன்றுபாக்கியில்லாமல் இவ் ஏழுவகைத் தீண்டாமைகளும் அடிமைச்சாதியினரின் மீது பிரயோகிக்கப்படுகின்றன. இதன் அர்த்தம் குடிமைச்சாதிகள் தீண்டாமையில்இருந்து விடுபட்டவர்கள் என்பதல்ல. முன்கூறிய மூன்று வகை தவிரபிற தீண்டாமைகள் குடிமைச்சாதிகளின்மீதும் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன.
3) குடிமைச் சாதிகள் மீதான தீண்டாமை:
சுதந்திரப்பொருளாதாரம் (பொருளாதாரத்தடைநீக்கம்) இன்னமும் குடிமைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. முதலாளித்துவ ஜனநாயகக்கனிகளை மோர்ந்துதான் பார்த்துள்ளார்களே தவிர, சுவைத்துப்பார்க்கவில்லை.
பொருளாதாரத் தடைநீக்கம்:-------
அடிமை குடிமைச் சாதியினரினரது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தலும், கடல்சார்ந்த சாதியப்பிரிவினரது சுதந்திர இடப்பெயர்வுக்கான தடைகளை நீக்கலும்.   அடிமைச் சாதிகளுக்கான  சைவ-வெள்ளாளப் பதம் ‘பஞ்சமர்’, குடிமைச் சாதிகளுக்கான பதம் குடிமைகள். இதில் கோவியர் தலைமைப் பிரிவினராகும். குடிமைச் சாதிகளில்,வண்ணார்’ ‘அம்பட்டர்’ ….. ஆகிய இரு சாதியினருக்கும் நிலவுரிமையும் தொழில் தேர்வுரிமையும் மறுக்கப்படுகிறது. தலைமைப் பிரிவினர், நிலஞ்சார்ந்த உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்,ஆனாலும் நில உரிமை கட்டுப்பாடுகள் மிக்கதாகவே உள்ளன. பின்னையவர்கள் கைவினைஞர்கள். குடிமைகள்இவ் இரு மறுப்புகளிலும்(தடைகள்) இருந்தும் சமீபத்தில் மிக மெதுவாகவும், அதிக பிராயத்தனத்துடனும் விடுபட்டு வருகிறார்கள். ஆனால், சுதந்திரப்பொருளாதாரம் (பொருளாதாரத்தடைநீக்கம்) இன்னமும் குடிமைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. முதலாளித்துவ ஜனநாயகக்கனிகளை மோர்ந்துதான் பார்த்துள்ளார்களே தவிர, சுவைத்துப்பார்க்கவில்லை.                                                                                            கடல் சார்ந்த சாதிப்பிரிவினரான கரையார், முக்குவர், திமிலர், பரவர் ஆகியோர் கடற் தொழில் சார்ந்தவர்கள். அத் தொழில் சார்ந்த அனைத்து உட்பிரிவுத் துறைகளிலும், கடல் பிரதேச தொழில் துறைகளிலும் இவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் நிலஉடைமைச் சுதந்திரம் இவர்களுக்கு மறுக்க ப்படுகின்றது. கடலில் தனியுரிமை கொண்டாட முடியாது. தனியுடமைமுறை அங்கு இன்னமும் தோன்றவில்லை. இது சுதந்திர மறுப்பல்ல. கடல்சார் நிலப்பரபினைத்தவிர்த்து இவர்களால் வேறெங்கும் நிலம்வாங்கமுடியாது. அவ்உரிமை இவர்களுக்கு இல்லை. யாழ்தேசவழமை அதற்குத் தடைவிதிக்கிறது. அதுபோல் திரைகடல் ஓடித்திரவியம் தேடும் இவர்களால், தொழில்தேடி குடாநாட்டின் உட்பகுதிகளுக்குச் செல்லும் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இதனால் கடற்தொழில் குன்றிய நேரத்தில் வேலையின்றித்தவிக்கும் மீனவர்களும், கடற்தொழிலால் உள்வாங்கப்படாத தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படு கிறார்கள். ஆண்டான்-அடிமை வலைப்பின்னலை உடைத்துக்கொண்டு இவர்களால் விவசாயத் தொழிலில் ஈடுபடமுடியாது. அதேபோல் கைவினைத் தொழில் கதவுகளும் இவர்களுக்கு அடைக்கப்பட்டேயுள்ளன. அவையனைத்தும் குலத் தொழிலல்லவா? வர்த்தகம், அரசஉத்தியோகம் ஆகிய இரு தொழில்கள் தவிர்ந்த பிற தொழில்களை இவர்கள் தீண்டக்கூடாது. இது கடல்சார்ந்த சாதியப் பிரிவினர்மீதான தீண்டாமை.
புதிய ஜனநாயகப் புரட்சியும்
பொருளாதாரத் தடையும்:  
    இதில்இருந்து நாம்தெரிந்து கொள்வது; ‘அடிமைகளும்’, ‘குடிமைகளும்தொழில் விருப்பத்தேர்வு சுதந்திரமும், நிலவுரிமைச்சுதந்திரமும் முற்றாக மறுக்கப்பட்டவர்கள் .கடல்சார் சாதிப்பிரிவினர் கடற்சார் பரப்பிற்கு அப்பால் இவ்இரு சுதந்திரங்களும் முற்றாக மறுக்கப்பட்டவர்கள். ஆனால், வெள்ளாளர்கள் தமிழீழப் புவிப்பரப்பில் இவ்விரு சுதந்திரங்களையும் தடங்குதடையின்றி முழுமையாக அனுபவித்துவருகிறார்கள். சமூகத்தில் காணப்படும் அனைத்து நிறுவனங்களும், அனைத்து சமூக நியமங்களும் இவ்வளர்ச்சியைப் பேணிப்பாதுகாப்பனவாகவே இருந்துவருகின்றன. இந்நிலைமையின் வரலாறு சுமார்முன்நூறுவருடங்களாகும். இதனால், இம் மூன்று சமூகத்தினரது பொருளாதாரவளர்ச்சிக்காக, தமிழீழ தேச அரசாங்கம் தனிவிசேட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அதேநேரத்தில் இச்சமூகங்கள் தமது பொருளாதாரவளர்ச்சிக்காகத் தனித்துவமான நடவடிக்கைகள் எடுப்பதுவும் ஊக்கிவிக்கப்படவேண்டும். அதற்கெனத்தனியான சிவில்அமைப் புகள் அமைக்கப்படவேண்டும். இது அவசியமான ஒருசமூக நியமமாக ஏற்றுக்கொள்ளப் படவேண்டும். தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே எடுக்கப்படவேண்டிய புதிய ஜனநாயகப் புரட்சிக்கான பொருளாதார நடவடிக்கைகளாக இவை ஏற்றுக்கொள்ளப் படவேண்டும்.
பண்பாட்டரங்கம், பொருளாதார அரங்கம் ஆகிய இரண்டிலும் செய்யப்படவேண்டியது என்ன என்பதைப் பார்த்துவிட்டோம் இனி அரசியல் அரங்கிற்க்குச் செல்வோம்.
அரசியல்அரங்கச் செயற்பாடு:
தேசவிடுதலைப் போராட்டம் சாதிமான்களின், அல்லது சாதிய சமத்துவவாதிகளின் தலைமையில்தான் நடைபெறவேண்டு மென்பதில்லை. பிளவுகள் பூசிமெளுகப் படவும்கூடாது, கட்டாயப்படுத்தித் தீர்க்கப்படவும்கூடாது. இயல்பானதொரு ஐக்கியம் ஏற்படவேண்டும். ஐக்கியம் உருவாகவேண்டுமே தவிர, ஐக்கியத்தை வலிந்து உருவாக்கக்கூடாது
    300வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் இப்பிளவை, தேசியவிடுதலை யுத்தத்தின்பெயரால் ஓரிரு ஆண்டுகளில் தீர்த்துவிடமுடியாது. கட்டாயப் படுத்தி ஒட்டவைக்கக்கூடாது ஒட்டவைக்கவும் முடியாது. அது ஒட்டவும் மாட்டாது. 1983 இல்இருந்து  2009வரையான அனுபவத்தில் இதைக் கண்டுகொண்டுவிட்டோம். முன்சொன்ன மூன்று பிரிவினரும் தமக்குள் ஒன்றிணைந்து தேச விடுதலைக்காகப் போராட முடியும். தேசவிடுதலைப் போராட்டம் சாதிமான்களின், அல்லது சாதிய சமத்துவவாதிகளின் தலைமையில்தான் நடைபெறவேண்டுமென்பதில்லை. பிளவுகள் பூசிமெளுகப்படவும் கூடாது, கட்டாயப்படுத்தித் தீர்க்கப்படவும்கூடாது. இயல்பானதொரு ஐக்கியம் ஏற்படவேண்டும். ஐக்கியம் உருவாகவேண்டுமே தவிர, ஐக்கியத்தை வலிந்து உருவாக்கக்கூடாது. ஐக்கியத்துக்கான முயற்சி ஒருபரிணாம வளர்ச்சியாக அமையவேண்டுமே தவிர, அது ஒரு திணிப்பாக அமையக்கூடாது. இதுவேநமது வழிமுறையாக இருக்கவேண்டும்.
இதை எவ்விதம் சாத்தியப்படுத்துவது?
தமிழீழத் தேசியவாதிகளாகிய நாம் ‘சாதியம் களைவோம்-தமிழீழத் தேசியம் காப்போம்எனும் பெயரில் தனியானதொரு வெகுஜனஇயக்கமொன்றை உருவாக்க வேண்டும். தமிழீழத் தேசியத்தையும், சாதியக்களைவையும் ஏற்றுக்கொண்டோர் அனைவரும், சாதி,மத,இன, பேதமின்றி இதில் உறுப்பினராக்கப் படவேண்டும்.
       மேற்கூறியமூன்று ஒடுக்கப்பட்டசாதிப் பிரிவினரும் தனித்தோ ஒன்றுகூடியோ சாதிய சமத்துவத்திற்கான அரசியல் அணிகளை அல்லது சிவில்அமைப்புகளை அல்லது பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவிப்பதுவும், செயற்படுத்துவதுவும் அனுமதிக்கப்படவேண்டும். தேசியவிடுதலை யுத்தத்தின்பெயரால் அவைதடுக்கப்படக்கூடாது. இவ் அமைப்புகள் தேசிய விடுதலை தொடர்பாக என்னநிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள் என்பது ஒருபொருட்டல்ல, அவை சாதியசமத்துவத்திற்காக போராடுகின்றனவா என்பதே பொருட்படுத்தப்படவேண்டிய விடயமாக இருக்கவேண்டும். 50 வருடகால வரலாறுள்ள சிங்களப் பேரகங்கார வாதத்தையே நாம் நம்பத்தயாரில்லை, 300வருடகால வரலாறுள்ள சைவ-வெள்ளாள பேரகங்காரவாதத்தை நம்பச்சொல்லிக்கேட்பது என்னநியாயம்? பல அநாவசியமான பாரிய இழப்புகளை ஏற்படுத்திய தீவிர வலதுசாரிவிலகலை 20வருடங்களாக பொறுத்துக்கொண்ட எம்மால் இவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ளமுடியாதா?
     இதுவொரு புறமிருக்க, தமிழீழத் தேசியவாதிகளாகிய நாம் ‘சாதியம் களைவோம்-தமிழீழத் தேசியம் காப்போம்எனும் பெயரில் தனியானதொரு வெகுஜனஇயக்கமொன்றை உருவாக்கவேண்டும். தமிழீழத் தேசியத்தையும், சாதியக்களைவையும் ஏற்றுக்கொண்டோர் அனைவரும், சாதி,மத,இன, பேதமின்றி இதில் உறுப்பினராக்கப் படவேண்டும். இவ் இயக்கம் முன்கூறிய சாதியஇயக்கங்களுடன் இணைந்து செயற்படுவதில் எந்தத்தயக்கமும் காட்டக்கூடாது. இவ்இயக்கத்தின் வளர்ச்சி பிறசாதிய இயக்கங்களில்பெரும் பான்மையானவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியுமானால்அதுதான் இயல்பான ஐக்கியத்திற்கான களமாக அமையும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் அமைக்கப்பட்ட “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்இதற்கோர் முன்மாதிரியாகும்.
போதும், நிறுத்திக் கொள்கிறேன். சாதியம்களைய என்ன செய்யலாம் என்பதற்கான வேலைத்திட்டத்தையும், அதற்கானசிறு விளக்கத்தையும் கொடுத்தேன். சந்தர்ப்பம் கிடைத்தால் தொடர்கிறேன்.
ஆண்ட பரம்பரைக் கொட்டம் அடக்கி சாதியமில்லாத் தமிழீழம் படைப்போம்!
தமிழீழத்தாகம் தமிழீழத் தேசம்!! என முழங்குவோம்!!!

முடிந்தது 16/08/17 

No comments:

Post a Comment

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் - இந்தியளவில்

2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் இந்தியளவில் I - அக உறவுகளில் I - அ ) வளர்திசை        நிகழ்வு 2018 இல் நடைபெற்ற தேர்தல்களின்...