2018 இன் மகிழ்வுகளும் துயரங்களும் இந்தியளவில்
I- அக உறவுகளில்
I-அ) வளர்திசை நிகழ்வு
2018 இல்
நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள்,
தீவிரவாத
சதுர்வர்ண இந்தியத் தேசியம்
தேர்தல் அரங்கினில் இந்தியா எங்கணும் பரவலாக வீழ்ச்சியடைந்து வருவதை எடுத்துக்
காட்டுகிறது. வரவேற்கத் தக்கது,
மகிழ்ச்சிக்
குரியது.
I-ஆ) வளர்தடை நிகழ்வு
ஆனால், அடுத்த பக்கத்தில்
இவ்வீழ்ச்சி தேர்தல் அரங்கிற்குள் மட்டுப்படுத்தபட்டதாகவே காணப்படுகின்றது.
தேர்தல் அரங்கிற்கு அப்பாலுள்ள அரசியல் அரங்கினில், சதுர்வர்ணத்துவா / சனாதனத்துவா வீரியம் பெற்று வருகிறது. சபரிமலை நிகழ்வுகள், பாபர் மசூதி அழிப்புக்கான
எழுச்சிகள், முத்தலாக் சட்ட மசோதா
விவகாரம் ஆகியவை அகிலேஷ் யாதவின் அடா வாடித்தனங்கள், மாட்டு இறைச்சி தடை
விவகாரங்கள், தீண்டாமை சட்ட மசோதா
விவகாரம், ஆகியவை குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய எடுத்துக் காட்டுதளாகும். பாராளுமன்ற ஜனநாயகத்தால் எம்மை ஒன்றும்
செய்துவிட முடியாது என்று சதுர்வர்ணத்துவாவால் / சனாதனத்துவாவால் சவால் விடப் பட்ட ஆண்டாக 2018ஐக் கருதலாம். இச் சவாலை
பாராளுமன்ற ஜனநாயக் கட்சிகளால் சமாளித்த முடியாது என்பதுவும் நிரூபிக்கப்
பட்டுவிட்டது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட முறை இதற்கோர்
எடுத்துக் காட்டாகும். 2019-ஆம்
வருடம், சதுர் வர்ணத்துவாவிற்கு
எதிரான வீதிச் சண்டைகள் நடைபெறும் ஆண்டாக அமையப்போவது நிச்சயம். சபரிமலை அதற்கோர்
எடுத்துக்காட்டு. ஒரு வளர்திசை நிகழ்வுப்போக்கு தன்னுடன் கூடவே ஒரு வளர்தடை
நிகழ்வுப் போக்கையும் அழைத்து வந்துள்ளது. சவாலை ஏற்றக்கொள்வோம்.
I-இ) வளர்தடை நிகழ்வு
சதுர் வர்ண தேசியவாதத்தின்
(ச.தே) தீவிரவாத அணியான பி.ஜே.பி பாராளுமன்ற ஜனநாயக அரங்கினில் பலவீனப்பட்டாலும், அதற்க்கு மாற்றாக சதுர்
வர்ண தேசியவாதத்தின் மிதவாத அணியான காங்கிரஸ்தான் வருமோ என்ற நிலை தோன்றியுள்ளது.
இவ்விதம் நடந்தால் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் மேடை துன்பியல் மேடையாக மாறிவிடுவது
நிச்சயம்.
I-ஈ) வளர்திசை
நிகழ்வு
இருந்தும், இத் துன்பியலை எதிர்
கொள்வதற்கான மிகப் பெரும் சவாலும் இவ்வாண்டில் தோன்றியுள்ளது. மாநிலக் கட்சிகள்
ஒன்றி ணைந்து இந்தியத் தேசிய அரசியல் அரங்கமாக மாறுவோம் என்பதே அச் சவாலாகும். இது
சதுர் வர்ண தேசியவாதத்தின் இரு அணிகளுக்கும் எதிரான மிகப் பெரும் கவாலாகும். சதுர்
வர்ண தேசியவாதத்திற்குப் பதிலாக இந்தியத் தேசியத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகும்.
இந்திய அரசியல் சாசனத் தின்படி இந்தியாவை வழிநடத்திச் செல்வதற்கான முயற்சியாகும்.
இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை நோக்கிய பயணம் ஆரம்பிக்கப் போகிறது
என மகிழலாம்.
ஆனால் இம் மகிழ்வுக்கு எதிரான ஓர் துயர
சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. வளர்ந்து
வந்த மதசார்பற்ற தமிழ்த் தேசியத்தை, சதுர்வர்ண / மதவாத
இந்தியத் தேசியத்துடன் இணைத்துவிட்ட அண்ணாவின் பாதையில் தம்பி ஸ்ராலினும்
பயணிக்கத் தொடங்கியுள்ளது தான் அத் துயர் சம்பவ மாகும். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய
இருகட்சிகளும் இவர்களுடன் இணைந்துள்ள கூட்டணிகளும் சதுர் வர்ண / மதவாத
இந்தியத் தேசியத்துடன் தம்மை இணைத்துக் கொள்வதில் போட்டா போட்டி போடுவதே
தமிழ்நாட்டின் அரசியலாக மாறியுள்ளது.
இவர்களுக்கிடையேயான மோதலில்
பக்கம் சாராமல் மூன்றாவது அரசியல் அணி ஒன்று வளர்வது நிச்சயம் என்பதை 2018ஆம் ஆண்டு நிச்சயம்
செய்துவிட்டது. அதுதான் பா.ம.க-வாகும். ஆனால், சதுர்வர்ண/மதவாத தேசியவாதத்திற்கும்
பா.ம.கவுக்கும் உள்ள தொடர்பின் தன்மையை புரிந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகள் எதுவும் 2018ல் நடைபெறவில்லை. சபரிமலை
விவகாரத்தில் இவர்களின் நிலைப்பாடும் அடக்கி வாசிப்பதாகவே இருந்து ள்ளது. மதவாத /
சதுர்வர்ணத் தேசிய வாதத்திற்கு எதிரானதோர் அரசியல் அணியாக எழும் என எதிர்பார்க்க
முடியாதுள்ளது.
அவ்விதமானால் தமிழ்நாட்டின் பாராளுமன்ற
ஜனநாயக அரசியல் மேடையில் மதசார்பின்மைத் தேசியத்தின் பிரதிநிதிகள் யாருமே இல்லை
என்ற நிலை உருவாகுமா?
அல்லது
புதிய அரசியல் அணி தோன்றுமா?
புதிய
அணிகள் தோன்றுவதற்கான முனைகள் வெளிவர ஆரம்பித்து விட்டன, ஆனால் அவை தனித்துவமாக
வளரக்கூடிய ஆற்றல் உள்ளவை என்பதை நிச்சயப் படுத்துவதற்கான அடையாள்ங்கள் எதுவும் 2018-இல் தெரியவில்லை. ஆகவே 2019, மதசார்பற்ற தமிழ்
தேசியத்தின் கைக்குழந்தை நிலையாக இருக்கலாம். குழந்தையின் வளர்ச்சி எவ்விதம்
இருக்கும் என்பதை 2020 இல்
நிச்சயமாக கூற முடியும்.
இதன்படி, ப.ஜ., காங்கிரஸ் ஆகிய இரு சதுர்வர்ண
/ மதவாத
இந்தியத் தேசியக் கட்சிகளுக்குபம் பதிலாக மாநிலக்கட்சிகளின்
கூட்டமைப்புத்தான் இந்திய தேசியக் கட்சியாக மாறும் நிகழ்வில் தமிழ்நாடு
எதிர்பாத்திரமே வகிக்கப் போகிறதெனக் கூறலாம். இதற்காக, 2019 மாநில
கட்சிகளின் கூட்ட மைப்பு முயற்சி தோல்வியுறும் ஆண்டாக அமையுமென அறுதியிட்டுக்
கூறமுடியாது.
பாராளுமன்றமும் மக்களும் எதிர் எதிர்
நிலையில் எனும் பகுதி (I-2) இதை விளக்குகிறது.
I-உ) வளர்திசை நிகழ்வு பாராளுமன்றமும் மக்களும்
எதிர் எதிர் நிலையில்
I-2-அ) இந்தியா
எங்கணும் ஏறத்தாழ அனைத்து பாராளுமன்ற ஜனநாயகக் கட்சிகளும் அறங்கெட்ட கட்சிகளாக
மாறிவிட்டன. தமிழ்நாட்டிலேயே பெரியார், காமராஜர், கக்கன், அண்ணா போன்ற தலைவர்கள்
நிரந்தர இறந்த காலமாக மாறிவிட்டார்கள். கட்சிக்காகாவும், தலைவர்களுக்காகவும், அவர்களுக்கு துணைபுரியும்
அதிகாரிக்களுக்காவும் தவறான வழியில் பணம் திரட்ட (ஊழல், லஞ்சம், கொள்ளை) வடிமையாகிவிட்டன; மக்களுக்கான அனைத்துத்
திட்டங்களிலும் ஊழல், பொறுப்பின்மை சர்வ
சாதாரணமாகி விட்டன; நீதி, நியாயம், நடுநிலை உண்மை பேசல், பொறுப்புக் கூறல் என்பன
இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன; ஆட்சிபீடங்கள்
கொள்ளையர்களும், காமுகர் களும், ஏமாற்றுப் பேர்வழிகளும்
ஒளிந்துகொள்ளும் இடங்களாக மாறிவிட்டன.
(ஆட்சித் தூண்களில் ஒன்றான) உயர் அதிகாரத்துவ பீடத்தின் உச்சியில் இருந்து - (IPS, IAS, IFS, MS, இத்தியாதிகள்) உள்ளங்கால் வரை (கிளார்க், காவலாளி) அனைவரும் பணம் பிடுங்கிப் பிசாசுரகளாக மாறிவிட்டன. கல்வி நிர்வாகமும் இதேதான். அரசியல் வாதிகள், அதிகாரிகள். பாதுகாப்பிப் பிரிவினர், ஊடகங்கள், அனைவரும் நெருங்கிய கூட்டாளி
களாக, தமக்குள் இசைபட வாழ்பவர்களாகவும்; தமக்குக் கிடைக்கும் முறைகேடான வரவுகளை தமக்குள் முறையாக பகிர்ந்து வாழ்பவர்களாகவும் உள்ளனர். ஒட்டு மொத்த நிலைமையும் இதுதான் எனக் கூறமுடியாது, ஆனால் இதுதான் பொதுவானதும் சக்தி மிக்கதவுமான ஓட்டமாக உள்ளது. அனைத்துப் பிரிவிலும் எதிரோட்டங்களும் உள்ளன. ஆனால், அவ் எதிரோட்டங்கள் அரசியல் அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவது ஒரு பொதுவான மரபாக மாறிவிட்டது. இருந்தும் எதிரோட்டங்களும் தொடர்கின்றன.
இவ் எதிரோட்டங்கள், அரசின் சிவில் நிர்வாகக் கட்டுமானத்தில் வெடிப்பை அல்லது விரிசலை உருவாக்கத் தொடங்கி விட்டன. 2018, இப்போக்கை நிரூபிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. இவ் வெடிப்பு ஒட்டப்பட முடியாதது என்பதையும் நிரூபித்து விட்டது. அரசு என்ற ஒட்டுமொத்த கட்டுமானத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்கு இவ்வெடிப்பு நிச்சயம் துணைபுரியும். இவ் வெடிப்புக்கு காரணமாய் இருக்கும் நல்லறமும், நேர்மையும், துணிச்சலும் மிக்க அதிகாரிகளையும் ஊழியர்களையும் பாராட்டுவோம், அவர்களின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்.
இது விடயத்தில், அரச துறைகளில் புத்தி ஜீவிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மடிப்புக் கலையா ஆடைத் தொழிலாளர்களின் நிலையோ வரவேற்கக் கூடியதாக இல்லை. தமது துறைகளில் நடைபெறும் அறமீறல்களையிட்டு இவர்கள் கண்டுகொள்வதேயில்லை. எந்தப் “புத்திஜீவித்” தொழிற்சங்கங்களும் இதுவரை இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கவே
யில்லை. தொழிலாளிவர்க்கத்துக்குரிய வர்க்க உணர்வும், சமூக உணர்வும், அரசியல் உணர்வும் அற்ற ‘சம்பள உயர்வுக்காக அங்கலாய்க்குக் கூட்டமாக காணப்படுகிறார்கள். இக் கூட்டத்தின் இவ்வித சிந்தனைதான் அல்லது சித்தாந்தந்தான் ‘தொழிற்சங்கவாதம்’ எனப்படுகிறது. இதே நிலைதான் 2019-ற்கும் தொடரும், 2018 இதைத்தான் கூறுகிறது.
சமூகப் புரட்சியில் நாட்டமுள்ளோர், தொழிற்சங்க வாதத்தின் ஆபத்தைப் புரிந்து கொள்ளட்டும். அதற்கெதிரான வெலைத் திட்டத்தையும் தமது 2019 திட்டத்தில் சேர்த்துக் கொள்ளட்டும். தொழிற்சங்க வாதத்தின் பாசமிகு வளர்ப்புத்
தாயாகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (C.P.I.(M), C.P.I) தம்மைத் திருத்திக் கொள்ளட்டும்.
தமது, அறநெறி மீறல் நடவடிக்கைகளினால் சிவில் நிர்வாகக் கட்டுமானங்களின் மீதும் இராணுவக் கட்டுமானம் தவிர்ந்த அரச கட்டுமானங்
களின் மீதுமான (குறிப்பாக அரசியல் கட்டுமான) வெறுப்பு அதிகரித்து வருகின்றது, இவற்றின் மீதான நம்பிக்கைகள் குறைந்து வருகின்றன இவ் வெறுப்பும், நம்பிக்கை குறைவும் மக்களை அந்நியப்படுத்தி வருவது பொதுவானது. இவ் அந்நியமாதல் துரிதமாக வளர்ந்தும் வருகிறது. 2018 இதற்கான சிறந்த ஆதாரமாக உள்ளது.
ஆனால் இவ் அந்நியமாதல் மக்களிடையே எவ்விதமான பதில் செயற் பாடுகளை ஏற்படுத்தும் என்பதைத் தெளிவாகக் கூறுவதற்கான நிகழ்வுகள் இன்னமும் போதியளவு நடைபெறவில்லை. இருந்தும் சில பதிற்செயற் பாடுகளை பட்டியலிடலாம்.
(1)
வாக்குகளை
விற்றல் (வளர் தடை எதிர்வினை) :
ஓட்டுக்கு யார் அதிகம் பண தருகிறானோ அவனுக்கே ஓட்டு என்பது இவ் அந்நியமாதலின் ஒருபதிற் செயல்பாடாகும். இது மக்களின் சமூக வளர்ச்சிக்கு ஒட்டுமொத்தமாகவே தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும்
(2) மக்களின் சுய
எழுச்சிகள்: (வளர்திசை எதிர்வினை)
அரசியல் கட்சிகளை எதிர்பார்க்காமலே, ஒரு சில இடங்களில் அரசியல் கட்சிகளை முற்றாக நிராகரித்து நடைபெறும் மக்கள் எழுச்சிகள். மக்கள் தமது பிரச்சனைகளை இனங்கண்டு, எந்த அரசியல் கட்சிகளினது ஆசீர்வாதத்தையோ, துணையையோ எதிர்பார்க்காமல், தமது சக்தியை படிப்படியாக எளர்த்துக் கொள்ளக்கூடிய முறையில் அணிதிரண்டு வருவது.
(3) சுய அரசியல்
அமைப்புகள்: (வளர்திசை எதிர்வினை)
இக்கட்சிகளுக்கு வெளியே தத்தமது சிந்தனைக்கு ஒப்பு அரசியல் பார்வை சிந்தனை உணர்வு உள்ளவர்கள், பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பாலுள்ள, இக்கட்சிகளுக்கு வெளியே தத்தமது சிந்தனைக்கு ஒப்பு தனித்தும், இணையக் குழுக்களாகவும், சமூக அரசியல் குழுக்களாகவும் செயற்பட ஆரம்பித் துள்ளமை.
(4) அதிகரிக்கும்
கடவுள் நம்பிக்கை: (வளர்தடை எதிர்வினை)
சமூக சக்திகள் எதிலுமே நம்பிக்கையற்ற நிலையில், தம்மீதும் நம்பிக்கையற்ற நிலையில் கடவுளை நோக்கிச் செல்லும் ஒரு கூட்டம். 2018 இக் கூட்டத்தின் அதிகரிப்பை எடுத்துக் காட்டியுள்ளது. இது ஒன்றும் ஆபத்தானதல்ல. இவர்கள் சமூக
உள்ளடக்கம் உள்ள நல்லதுக்கும் வரமாட்டார்கள் கெட்டதுக்கும் வரமாட்டார்கள்.
(5) சமூக உதிரிகளின்
வளர்சசி (வளர்தடை எதிர்வினை)
எந்த சமூகப் போக்கு இவர்களை சமூகத்தில் இருந்து அந்நியமாக்கியதோ, எந்த சமூகப் போக்கால் இவர்கள் அவதிப்பட்டார்களோ, எந்த சமூகப் போக்கின் மீது இவர்கள் கோபங்கொண்டார்களோ, காலப்போக்கில் அதே சமூகப் போக்கை தாமதாக்கிக் கொள்ளல். அறங்கெட்ட சிவில் அதிகாரங்களினதும், அரசியல் அதிகாரங்களினதும் எடுபிடிகளாகவும், பாதந் தாங்கிகளாகவும் மாறுதல். இந்திய சமூகத்தில் இது ஒரு பெரும் அணியாக உள்ளது. இந்த அணி வளர்ச்சியடைந்தும் வருகிறது. இது மிகவும் ஆபத்தான அணியாகும் சமூகத்தின் சாதாரண மட்டத்தில் காணப்படும் கொலை, கற்பழிப்பு, காம வெறியாட்டம், தெருச் சண்டைகள், கட்சிச் சண்டைகள்.
கருணைக்கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள் இத்தியாதி களுக்கான காரணம் இவ்வணிதான்.
எதிர்வினை 2-இனதும், எதிர்வினை 3-னதும் வளர்ச்சிதான் எதிர்வினை 4-இன், உதிரிமக்கள் திரளின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவரும்.
2018-ம் ஆண்டு உதிரி மக்கள் திரளின் ஆண்டாக இருப்பதை வேதனை
யுடன் ஒத்துக் கொள்ளவேண்டும். எதிர் வினை 4-ற்கும், எதிர்வினை 2 மற்றும் எதிர்வினை 3-க்கும் இடையேயான முரண்பாட்டின் ஊடாகத்தான் எதிர்வினை 4, சமூக பலமிழந்த நிலைக்கு உள்ளாகும் என்பதை எதிர்பார்ப்போம்.
தொடரும்.............
No comments:
Post a Comment