“புதிய திசைகள்” பதிவுக்கான
எனது பின்னூட்டல். மிகப்பலனுள்ள ஒரு பதிவு.
மதவாதமும்-தேசியவாதமும் தொடர்பான ஒரு
விவாதத்தைத் தொடங்கிவைக்க முன்வந்தமைக்காக புதிய திசைகளுக்கும், மதவாத பயணத்தைத்
தொடங்கிவைத்ததன்மூலம் மதவாதம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட உதவிய மறவன்புலவு
சச்சிதானந்தன் அவர்கட்கும் எனது நன்றிகள்.
மதவாதமும்–தேசியவாதமும் பற்றிய
கருத்துக்களை சிங்கள மார்க்ஸி யர்கள் பலவருடங்களுக்கு முன்னரேயே
முன்வைத்திருந்தனர். மார்க்ஸியர்கள் எதைக் கூறினாலும் அது தீட்டானதாகவே இருக்கும்
என்ற பொதுப்புத்தியுடைய தமிழ்த் ‘தேசியர்கள்’ அதைக் கண்டுகொள்ளவில்லை. அம்பேத்கர் மதவாதமும்–தேசியவாதமும்
பற்றி பல கருத்துக்களை வைத்திருந் தார் இவையும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. துரதிர்ஸ்டவசமாக,
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகூட மதவாதம் பற்றிய
விவாதத்தைத் தொடரவில்லை. இதனால், ஆலய நுளைவுப் போராட்டம் சைவச் சடங்குகளின்
சுத்துகரிப்புத் தன்மையையும் பெற்றிருந்தது. இரு வருடங்களுக்கு முன்னர் எதுவரை
எனும் இணையச் சஞ்சிகையில் மதமும்-தேசியமும் எனும் தொடர் கட்டுரை வெளிவந்திருந்தது.
அதுவும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. சச்சிதானந்தன் மதவாதத்திசையில் பயணிக்கத்
தொடங்கியபின்னர்தான் தமிழீழ தேசியத்தில் மதவாதத்தின் பங்களிப்புபற்றிய
விழிப்புணர்வு ஆரம்பமாகியுள்ளது.
காலச்சுணக்கத்திற்கான காரணம் என்னவாக
இருக்கும்? இவ்விவாத த்தில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
முதலாவது காரணி:-1950களில் இருந்து தமிழ்த்
தேசியவாதப் பொதுப் புத்தி சைவ-வெள்ளாள சித்தாந்த வகைப்பட்டதாகவே இருந்துவருகின்றது.
சைவம் பிராமணிய மதக் குடும்பத்தில் ஒன்றேதவிர
சைவமும் இந்துவும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.
சைவ-சித்தாந் தமே மேலானது என்பதே சைவ-சித்தாந்திகளின் கருத்தாகும். ஒப்புநோக்கில்
அதில் உண்மையில்லாமலில்லை. இதனால் இந்துத்துவத்துடனான தொடர்பை தமிழ் ‘தேசிய’
பொதுப்புத்தி தவிர்த்தே வந்தது.
2வது
காரணி:- தமிழீழத்தை வெள்ளாள ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப் பதைத் தொடரவேண்டுமானால்,
சைவ-சித்தாந்தத்தை தீட்டுப்படவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும்
அவசியமாகின்றது. இதனால் தேசியவாதத் திற்கும் மதவாதத்திற்கும் இடையேயான தொடர்புகள்
பற்றிய தர்க்கத்தை வெளிக் கொணர்வதை முடிந்தவரை தடுத்தே வருகிறார்கள். சிங்கள
மார்க்ஸியர்களில் சிலரும், இனசமத்துவத்தை விரும்பும் சிலரும் ஸ்ரீ லங்கா அரசை
சிங்கள-பௌத்த பேரினவத அரசு என்று வியாக்கியானம் கூற ‘தமிழ் தேசியவாதிகளோ’ அவ் அரசை
சிங்கள பேரினவாத அரசு என்றே வியாக்கியானம் செய்தனர். அதன் மத அத்திவாரம் மிகத்
தெழிவாகத் தெரிந்தும் அதை எடுத்துக்காட்டுவதைத் தவிர்த்தே வந்தனர். தேசியவாதத்திற்கும்
மதத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில்
அவர்கள் மிகவும் ஏச்சரிக்கையாக இருந்துவருகிறார்கள்.
மூன்றாவது
காரணி:
பௌத்த இந்தியாவின் வீழ்ச்சிக்குப் பின் பௌத்தம் பிராமணிய மதத்தால் உள்வாங்கப்
பட்டுவிட்டது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக்கப்பட்டார். அதன்படி புத்தர் இராமனின் தம்பியாகிறார்.
பௌத்தம் பிராமணிய மதத்தின் தாய்க் கிளைகளில்
ஒன்றாகிறது. ஆனால், சைவம் பார்ப் பிராமணிய மதத்தின் கிழையல்ல, அது பிராமணிய குடும்பமதங்களில்
ஒன்றா கும். ஆகவே பௌத்த மதவாதத்துடன் மோதுவதென்பது இந்துத்துவத்துடனான மறைமுக மோதலிலேயே
முடிவடையும். அது மட்டுமல்ல சித்தாந்தத்தத் துறையில் பௌத்தம் முற்போக்கானது. ஆகவே தோற்க்கப்போவது
சைவமாகவே இருக்கும். பௌத்தம் பிராமணிய நால்வர்ணக் கோட்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின்
ஊடாக வளர்ந்த மதம, இஸ்லாம் Tribalisim
ட்றைபலிஸத்திற்கு
எதிரான போராட்டத்தின் ஊடாக வளர்ந்த மதம் ஆகவே இவ்விரு மதங்களினது சித்தாந்தங்கள் முற்போக்கானவை.
இந்து, சைவ மதங்களோ வ்ர்ணாச்சிரமத்தை பாதுகாப்பதற்காக பிறந்த மதம், ஆகவெ இவற்றின் சித்தாந்தங்கள்
பிற்போக் கானவை.
இன்னும் பல காரணங்கள் உண்டு. தொடர்வோம்.
இவ்விடத்திலல்ல, வெவ்வேறு இடங்களில்.
இக்கட்டுரை மதவாதங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு
அறைகூவல் விடுத்துள்ளது. சோஷலிசப் புரட்சியன் போது முனவைக்க வேண்டிய வேலைத் திட்டதை
இன்றைய நிலையில் முன்வைப்பது காலப்பொருத்தமற்றது. இன்றைய அறைகூவல் தேசியம், மதநீக்கம்
செய்யப்படவேண்டும் என்பதேயாகும். அதாவது மதவியத் தேசியவாதமே
இன்றைய எதிரியாகும்; மதமல்ல. புதிய திசைகள் தனது இவ்வேலைத்திட்டத்தை மேலும்
நெறிப்படுத்தி முன்னெடுத்துசெல்ல வாழ்த்துக் கள்.
No comments:
Post a Comment