மிக மலினப்படுத்தப்பட்டதோர்
ஆய்வு.
1960களின்
முற்பகுதிவரை இந்தியாவில் பாரளுமன்ற ஜனநாயகம்(PD) என்றொன்று இருந்தது. முதலாளித்துவ
ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இது(PD)
நிறையவே உதவியுள்ளது. ஆனால் 60களில்
இந்திய முதலாளித்துவமானது, நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் செல்லத் தொடங்கியது.
உலகள விலான சமதர்ம கட்டுமானத்தின் வீழ்ச்சி இவ் நகர்வை வேகப்படுத்தியது. இந்திய முதலாளித்துவம்
உலக ளாவிய நிதிமூல தனத்தின் எடுப்பார் கைப்பிள்ளையானது. 1990வரையான கட்டம் “இந்திய
தேசிய முதலாளித்துவம்!?” காப்ரேட் முதலாளித்துவமாக மாறுவதற்கான மாறுநிலைக் கட்டமாகும்.
மன்மோகன் சிங்கின் புதிய பொருளாதரக் கொள்கையானது முழுமைபெற்ற காப்ரேட் முதலாளித்துவத்தை
தோற்றுவித்தது. காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் இம் முதலாளித்துவத்தை பேணிப்பாதுகாத்து
வளர்த்துவருகிறார்கள்
பொருளாதார அரங்கிலான இம்மாற்றம் அரசியல்
அரங்கையும் பண்பாட்டரங் கையும் முற்றாக மாற்றிவிட்டது. அம் மாற்றம் எது?
முதலாவது: பாரளுமன்ற ஜனநாயகம் இருந்த இடத்தில் காப்ரேட்
பணநாயகம் ஆட்சிக்கு வந்துள்ளது. பாரளுமன்றம் திருடர்கள் குகையாகவும், காப்ரேட்களால்
இயக்கப்படும் அரசியல் கட்சிகளின் போலி வாய்த்தர்க்கக் களமாகவும் மாறியுள்ளது. அரசியல்
கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவானது வாக்குப் பொறுக் கித்தனமானதாகவும்,
மக்கள் சுவைகவர்(Populist) அரசியலாகவும் தரந்தாழ்ந்துவிட்டது.
கட்சிகள் வள்ளல்களாவும் மக்கள் பிச்சைக்காரர்களாவும் ஆக்கப்பட்டுவிட்டார்கள். கோட்பாடு,
கொள்கை, அரசியல் வேலைத்திட்டங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகிய இத்தியாதிகளெல்லம்
வழக்கொழிந்து போய்விட்டன. கட்சிகள் தம்மைத்தாமே போற்றிக்கொள்வதுவும், ஒன்றையொன்று தூற்றிக் கொள்வதுவும்
மாத்திரமே வழமையாகிவிட்டன.
இரண்டாவது: ஆரம்பத்தில் பிரித்தானிய காலனியலாதிக்கத்தை
எதிர்த்தும் அதன் பின்னர் ஏகாதிபத்தியங்களின் நவ-காலனியல் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்தும்,
பிராமணிய-பனியார்ஸ் ஆதிக்கத்தை எதிர்த்தும்(அரசியல், பொருளாதார, சமூக அரங்கு களில்)
நடந்த போராட்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. அவற்றின் இடத்தில் நாடு முழுமையும்
பல்தர குருதியினவாதங்கள்(blood
related racism)ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் இந்திய வடிவங்களாவன:
மதக் குருதியினவாதம், ஆண் அகங்காரவாதம், மரபுவழி(மனுநீதி)க் குருதியினனாதம், சாதியவாதம்,
நிறக் குருதியின அஹங்காரவாதம், மொழிவளிக்
குருதியினவாதம், குருதியின வாதத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பற்றுவாதம் (தேசபக்திவாதம்),
சாதியஅகங்கார வாதம், ஆகியனவே அவையாகும். நேரு, சுபாஸ் சந்திரபோஷ், பகவத் சிங், வாஞ்சிநாதன்,
வ.உ.சி, சுப்ரமணி சிவா, பாரதி, அரவிந்தர், விவின் சந்திரபோஷ், காம்ராஜர் ஆகிய ஏராளமானோரால்
அடையாளப் படுத்தப்பட்ட சுதந்திரத் தேசிய இயக்கம் தொலைந்து போய்விட்டது; அதுபோல், அயோத்திதாஸர்,
ஐயங்காளி, அம்பேத்கர் ஆகிய பெரும் படையினரால் அடையாளப் படுத்தப்படும் பிராமணிய எதிர்ப்பு
இந்தியத் தேசியமும் தொலைந்து போய்விட்டது; அதே போல் “தேசிய முதலாளித்துவ” வளர்ச்சிக்கு
பெரும் தடையாக இருந்த நிலபிரபுத்துவ விழுமியங்களை வீழ்த்துவதற்காக நாரணய குருசாமி,
ஈ.வே.ரா பெரியார், இரவீந்திரநாத் தாகூர், ஜோதிலால் பூலே போன்ற பெரும் படையணியால் நடத்தப் பட்டுவந்த
பகுத்தறிவுப் போராட்டமும் தொலைந்து போய்விட்டன. இவ் அனைத்து போராட்ட அரங்குகளிலும்
போராடிவந்த இடதுசாரிக ளும்கூட தொழிற்சங்வாதத்தால் தொலைந்து போய்விட்டனர்.
இவற்றை சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்திய
சமூகசிந்தனையும், இந்திய அரசியலும், இந்திய பண்பாட்டு விழுமியங்களும், குருதியினத்
தேசியவாதம், பணநாயகம், தொழிற் சங்கவாதம் ஆகிய சிமிழ்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்டன.
மக்கள் எப்போது இச்சிமிழ்களுக்குள் இருந்து வெளிவந்து உணர்வு பூர்வமாக போராட முன்வருகிறார்களோ
அதுதான் இந்தியப் புரட்சியின் பிரசவக் குரலாக இருக்கும்.
இது கீழ்வரும் யு.ஆர்.எல் உள்ள கட்டுரை பற்றிய
மதிப்பீடாகும்.
http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2017/32662-2017-03-14-04-43-9?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29
No comments:
Post a Comment