Thursday, 15 June 2017

தெற்காசிய பிராந்திய, ‘தேசிய அரசுகள்’ ஒரு மாயை.


சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு   விளக்கம்--1

தெற்காசிய நாடுகள் அனைத்தினது அரசியல் கட்டுமானங்களும் tதமது தேசியத் தன்மையை இழந்த நிலையிலேயே காணப்படுகின்றன. 
குருதியின இன வெறித்தன(racist fanatic- ப(f)னாரிஸ்க்), தேசிய இன வெறித்தன (Ethnic fanatic- ப(f)னாரிஸ்க்), 
சாதிய வெறித்தன(cast fanatic- ப(f)னாரிஸ்க்)
மொழி வெறித்தன(Linguistic fanatic)
மத வெறித்தன(Religious fanatic- ) 
அரசியல்களே இந் நாடுகளின் ஆதிக்க அரசியல்களாகக் காணப்படுகின்றன. இதனால், ஒரு தேச அரசின் (Nation State) ஆளுமையின் கீழ் வாழும் அனைத்துச் சமூகக் குழுமங்களினதும் தேசிய ஜனநாயக உரிமைகளை மதிக்கும் தேசிய அரசியல்(National politics) இருக்கவேண்டிய இடத்தில், ஒவ்வொரு இனக் குழுமங்களும் தத்தமது சொந்த இனக் குழுமத்தின்(Ethnic Group) நலனை மட்டுமே கணக்கில் கொள்ளும் இனவாத தேசிய அரசியலே(Ethno-Nationalistic Politics) மேலோங்கி நிற்கிறது. குறிப்பாகச் சொல்வதானால்;
பாகிஸ்தானில் உருது-சுனி இஸ்லாமிய வெறித்தனமும் - ப(f)னாரிஸம்
பங்காளதேஷில் சுனி இஸ்லாமிய வெறித்தனமும்- ப(f)னாரிஸம்
இந்தியாவில் பார்ப்பனிய-இந்து-சமஸ்கிருத வெறித்தனமும்- ப(f)னாரிஸம்
இலங்கையில் சிங்கள-பௌத்த வெறித்தனமும்- ப(f)னாரிஸம்
மைமரில் பௌத்த வெறித்தனமும்- ப(f)னாரிஸம் கோலோச்சிவருகின்றன. 
தம்மைத் தேசிய அரசுகளாகத் கூறிக்கொள்ளும் பாக்கிஸ்தான், வங்காளதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மைமர், இந்திய ஆகிய  நாடுகளினது அரசுகள் முற்றுமுழு இனவாதத் தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளாக (Ethno-Nationalist Fanatic State) உருவெடுப்பதில் அபார வெற்றிபெற்றுள்ளன.

புறத்திலிருந்தோ, மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களால் இவ் இனவாத-தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளை தேச அரசுகளாக (Nation State) மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை தகர்ந்து வருகின்றது; இவ்வகை சீர்திருத்தங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவருகின்றதா என்று எண்ணத்தோன்றுகிறது. இந்த உண்மையை அனைத்து வல்லரசுகளும் புரிந்து கொண்டுவிட்டன போலும்.
இதனால்தான், இவ் இனவாதத்-தேசிய அரசுகளுடன் நட்புக்கொள்வதில், அனைத்து வல்லரசுகளும் பல்வேறு விட்டுகொடுப்புகளுடன், ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டுக் கொண்டு முனைப்புக்காட்டி வருகின்றன. மேற்கூறிய இனவாத-தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகள், தமது நாடுகளின் தேசிய இனங்களையும், சிறுபான்மை மதக்குழுக்களையும், ஒடுக்கப்பட்ட சாதியைனரையும் அடக்கிவருகிறார்கள்; கூடவே தத்தமது நாட்டின் தேசப்பற்றையும் தமதுகாலில் போட்டு மிதித்து, வல்லரசுகளின் அடிவருடிகளாகத் தம்மையும், தமது நாட்டின் வளங்களையும் ஆக்கிக் கொண்டுள்ளார்கள். உலக முதலாளித்துவத்தின் மிகப்பெரும் ஆதர்வுகளுடனும் பிரயத்தனங்களுடனும் “தேச அரசுகளாக” அடையாளப்படுத்தப்பட்டுள்ள இவ் இனவாத-தேசிய அரசுகளை (Ethno-Nationalist State),--இலகுவாக வேறுபடுத்திப் புரிந்து கொள்வதற்காக இவ்வித அரசுகளையே நாட்டரசுகள் என அழைக்கிறேன் --- இந் நாட்டரசுகளை இந் நாடுகள்ளின் பாராளுமன்ற ஜனநாயக வழிமுறைகளில் தேச அரசுகளாக மாற்றியமைத்தல் என்பது இனியென்றுமே சாத்தியமற்றது.
இதனால், இவ் இனவாத-தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளின் சாம்பல் மேட்டில் பல் தேச அரசை (multi nation state) அல்லது பல தனித்தனி தேச அரசுகளை உருவாக்கு வதைத்தவிர மாற்றுவழியெதுவும் இல்லை என்ற நிலை உருவாகிவருகிறது. ஆனால், இது சாத்தியமாக வேண்டுமானால், நாட்டுப் பற்றாளர்களி னதும் (Patriotic forces), தேசிய இனங்களிடையே சம உரிமைக்கான போராளிகளினதும் (Federalists), தனித் தேச அரசு உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளினதும் (National Libertionalists) ஒருங்கிணைவு ஒரு கட்டாய நிபந்தனையாகும். ஆனால், இவ்வித ஒருங்கிணைவுக்கு ப் பதிலாக, இதற்கு எதிரான நிலையே இப்பிராந்திய பொதுவான போக்காகயுள்ளது. எடுத்துக்காட்டாக:

நேப்பாளம்:

தனது நாட்டின் பிரதான ஒடுக்கப்பட்ட தேசிய இன குழுமமான மாதேசியையும், தாறுஸையும் (Tharus) பிற ஒடுக்கப்பட்ட சாதியக் குழுமங்களையும் குறிப்பாக தலித்துகளையும் கண்டுகொள்ளாததால் நேபாளப் புரட்சி பாரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்தது. நேப்பாள தேச அரசை மலரவைப்பதற்காக எடுத்துக் கொண்ட வீரமிக்க முயற்சிகள் தோல்விகண்டன. இதன் மூலம் இந்திய ‘தேசிய அரசின்அகண்டபாரதக் கொள்கையும், இப்பிராந்தியத்தை பார்ப்பனிய-பௌத்தமயப்படுத்தும் கொள்கையும் வெற்றிபெற்றுள்ளன.

பின்வரும் கட்டுரைகள் நிலமையைப் புரிந்து கொள்ள துணைபுரியும்
Why The Madhesi People Revolted In Nepal – Analysis
Nepals New Constitution: An Analysis From The Madheshi Perspective

தமிழீழம்:

இலங்கைத் தேசப் பற்றாளர்களையும், ஒடுக்கப்பட்ட பிற தேசிய இனங்களையும், தேசிய இனங்களிடையே சம உரிமை கோரிய போராளிகளையும், கண்டுகொள்ளாததால் தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய இராணுவ அழிவையும் , அரசியல் பின்னடைவையும் சந்தித்தது. தமிழர்கள் பாரிய அழிவைச் சந்தித்தனர். அதேபோல், அடுத்தபக்கதில் இலங்கையின் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய  ஜனநாயக உரிமைகளைக் கண்டுகொள்ளாததாலும், 
சிங்கள இனத்தின் நலன் மட்டுந்தான் நாட்டுநலன் என்றும் தேசிய நலன் என்றும் கருதியதாலும் சிங்கள மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நாட்டுப்பற்று இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும் மிகப்பெரும் அழிவுகளையும், பாரிய அரசியல் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன.

மியான்மர்:  
இராணுவ எதேச்சதிகாரத்துக்கு எதிராக, படிப்படியான பெரும் ஜனநாயக் எழுச்சியை நடத்திக் காட்டிய மியான்மர் ஜனநாயகப் போராளிகள், அங்குள்ள தேசிய இனக் குழுமங்களின் எழுச்சிகளையும் அவற்றின் மீதான அடக்குமுறைகளையும் கண்டு கொள்ளவில்லை. அடுத்தபுறத்தில், எச்சூலிலும் தமது கைகளில் உள்ள ஆயுதங்களின் வாய்களைப் பொத்தாமல், இதே எதேச்சாதிகாரத்துக்கு எதிராக நீடித்த ஆயுதப் போராட்டம் நடத்திவரும் இத் தேசிய இனக் குழுமங்கள் தமது நாட்டில் –மியான்மர்- நடைபெற்ற ஜனநாயக எழுச்சியைக் கண்டுகொள்ளவில்லை. அதாவது இவர்கள் நாட்டுப்பற்றாளர்களாக நடந்துகொள்ளவில்லை. இதனால், இன்று இவ் இரு எழுச்சிகளும் மிகப்பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. மியான்மர் இராணுவம் மீழவும் தன்னை பலப்படுத்தியுள்ளது.
மியான்மர் தெற்காசியப் பிராந்திய நாடல்ல. அது தென்கிழக்குப் பிராந்திய நாடாகும். இருந்தும், மைமரில் நடைபெறும் தேசிய இன விடுதலைப்போராட்டங்களை தெற்காசிய நான்காம் உலகநாடுகள் ஒரு முன்னுதார ணமாகக் கருதலாம். இதனால் மைமரின் நிலை இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா அரசு மைமரைத்தான் தந்து வழிகாட்டியாகக் கொண்டுள்ளது என்பதை மறக்கவேண்டாம். மஹிந்த தனிப்பட்ட முறையில் அமைக்க முற்பட்ட இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கியது மியான்மர் அரசு என நம்பப்படுகிறது.
இதே வலைப்பூவில் உள்ள “Some facts on Myanmar” என்ற கட்டுரையையும் பார்க்கவும்.
ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைய முகவரிக் கட்டுரைகளையும் படிக்கவும்.
பாக்கிஸ்தான்:

பலுஸ்திஸ்தானும் (Balochistan), அசாட் காஷ்மீரும், கில்கிர் (Gilgit Baltistan)பால்ரிஸ்ரானும், சிந்தும்(Sindh), பக்குனிஸ்ரானும்(Pakhtunistan) தனிநாடு கோருகின்றன. தாம் ஒரு தனித்தேசமென்றே அவர்கள் தங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர். பழங்குடியனர் மேலும் விரிவான அதிகாரப் பங்கீடு கேட்கிறார்கள் (தலிபான் இயக்கம்). ஆப்கானிஸ்தாநன் -பாக்கிஸ்தான் எல்லையால் பிரிக்கப்பட்ட பழங்குடியினர் தமது எல்லைகள் மீழ்வரையப்படக் கோருகிறாரகள். கிறிஸ்துவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அஹ்மாடி Ahmadi எனும் இஸ்லாமியப் பிரிவு சணி, சியா ஆகிய இரு பகுதியினராலும் பாக்கிஸ்தான் ‘சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே ஒடுக்கப்பட்கிறார்கள். ஹிந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
                   
சணி, சியா பேதம் தீவிரமடைந்து வருகிறது. இன்னும் பல தேசிய இனமுரண்பாடுகள்  மோதல் நிலையில் உள்ளன. இவற்றைவிட இராணுவ ஆட்சிக்கும், ஜனநாயக ஆட்சிமுறைக்கும் இடையேயான முரண்பாடுகள் பனிப்போர் நிலையில் உள்ளன.
பாக்கிஸ்தானின் ஆளும் தேசிய இனம் பாக்கிஸ்தானி பஞ்சாபியாகும் (Pakistani Punjabis). இவ் இனவாத தேசிய அரசு ஐந்து தேசிய இனங்களையும், நான்கு மதப்பிரி வினரையும் அடக்கியாள்கிறது? இதுதான் தேசிய அரசா?
இவ்வளவு முரண்பாடுகள் இருந்தும் பாக்கிஸ்தான் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடக்கூடிய ஒரு பரந்த முன்னணி ஏற்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.
  
பங்காளதேஷ்:

பங்காளதேஸ்தான் முஸ்லீம் அதிகளவில் வாழும் நாலாவது பெரிய நாடாகும். இதில் முஸ்லீம்கல் 90%விழுக்காட்டினராகும்.
வட-மேற்கு பங்காளதேஸில் வாழும் மிகத்தொன்மை யான, மிகப்பெரிய ஆதிக்குடிகளான சண்டால்ஸ்(Santals), என்போர்களும், (சிட்டாகொங் மலைத்தொடரில் பல தசாப்தங்களாக நடந்துவரும் நேரடி இராணுவ அடக்கு முறை இதற்கான ஆதாரமாகும்.) அஹ்மாடி(Ahmadi), பௌத்த, கிறிஸ்துவ. இந்து, மற்றும் சியாபிரிவு இஸ்லாமியர்களும், தொடர் அடக்குமுறைக்கு உள்ளாகிவருகிறார்கள். இதோ ஒரு தகவல்: 1947இல், பங்காளதேசின் இந்து மக்கள் தொகை 31 %மாக இருந்தது, 1961இல் 19%ஆகி, 2002இல் 14%ஆகி, 2011 இல் 8.5% மாகி, 2015இல் 10.7% மாகியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பை இஸ்லாமிய ஒருமுனைவாதிகள் விரும்பவில்லை.  
இந்தியாவில் RSS போல் பங்காளதேசத்தில் Jamaat-e-Islami (JeI) எனும் அமைப்பும், அதன் மாணவர் அணியான Islami Chhatra Shibir (ICS) எனும் அமைப்பும் அரசாங்கத்தின் மறைமுக ஆத்ரவுடன் செயற்பட்டுவருகின்றன. இவர்கல் தமது நாட்டில் ஷரியா-அரசை Shariah-state உருவாக்க கங்கணம் கட்டியுள்ளார்கள். மதசார்பற்ற அரசு தன்னை அழைத்துக்கொள்ளும் இன்றைய அரசு இதற்க்குத் துணைபோகிறது.

மேலும் அறிய விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படித்துக்கொள்ளலாம்.
இதுவரை கூறப்பட்ட நாடுகளின் அரசுகள் அனைத்தும் இன- தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசுகளேயாகும். (Ethno-Nationalist Fanatic State). தேசிய அரசுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாதவையாகும்.

இந்தியா:

காஷ்மீர், மிசோராம், மணிப்பூர், ஜார்க்கண்ட், திரிபுரா, அருணாசல பிரதேஷ், போடாலாண்ட், குர்காலாண்ட் போன்ற தேசிய இனக் குழுமங்கள் தமது சமஸ்டி எழுச்சியையும் இந்திய தேசப்பற்றையும் பொருத்திச் செல்வதில் நிதானம் காட்டிவருவதால், அவர்கள் சமீபத்தில் பாரிய பின்னடைவுகள் எதையும் சந்திக்காமல் அனைத்து வளிகளிலும் படிப்படியாக முன்னேறிவருகிறார்கள்.

இதில் காஷ்மீர் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களின் இவ் நிதான முன்னேற்றத்திற்கு இந்திய நாட்டரசின் இயலாமையும் ஒரு காரணமாகும். அது எவ்விதம் என்பதை நோக்குவோம்.

இந்திய “தேசியஅரசின் இயலாமை:

இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் கட்டுமானத்தையும் தனது மேலாதிக்கத்தில் கொணர்வதில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத வெறித்தனம்- ப(f)னாரிஸம் (Brahmanetic–Hindutuva-Sanskrit Fanatism) இன்னமும் வெற்றிபெறவில்லை. சங் பரிவாரங்கள் அதற்காக பகீரதப் பிராயத்தனம் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் இன்னமும் வெற்றி பெறவில்லை. இதில் வெற்றிபெறாமல், பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசு எனும் (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) நிலையை அடைய முடியாது. இவ்வித அடைவு இந்திய மண்ணில் சாத்தியப்படாதென்றே தோன்றுகிறது. (“ஸ்ரீ லங்காவின் கிங் மேக்கரின் ஞானோபதேசம்” எனும் கட்டுரையைப் படிக்கவும்- https://vidiyalgowri.blogspot.in/2017/05/blog-post_24.html)

இந்தியாவின் இத் தனித்துவத்துக்கான காரணங்கள் :                                                            1) சாதிய படிநிலை சமூகக் கட்டுமானம்:
இந்தியாவில் துரிதமாக வளர்ந்துவரும் இந்திய முதலாளித்துவம் தன்னுடன் கூடவே சாதிய படிநிலை சமூகக் கட்டுமானத்தையும் வளர்த்து வருகிறது. இந்தியளவில் வளர்ந்துவரும் இச்சாதிய படிநிலை சமூகக் கட்டுமானம் இந்தியா துண்டாடப்படுவதையும் அனுமதிக்காது. இந்திய சாதிய படிநிலை சமூகக் கட்டுமானத்தின் அதி உச்சியில் இருக்கும் ஒடுக்கும் சாதிகளும், இரண்டாம் நிலையில் இருக்கும் இடைச்சாதிகளும், அடித்தட்டில் நசுங்குண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளும் மத்திய அதிகாரத்துக்காக இந்தியளவில்தான் அணிதிரண்டு வருகிறார்களேதவிர தேசிய இன அளவிலல்ல, அதாவது மாநில அளவிலல்ல. இதனால் இந்திய அரசானது பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன- ப(f)னாரிஸ்டிக் அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) உருவாவதில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. சாதியம்(castism), தேசியம் (nationalism), தேசிய இனவாதம்  (ethnicity) ஆகிய மூன்றுக்கும் இடையேயான தொடர்புகளைப் புரிந்து கொள்ளும்போது இவ் இயங்கியலை புரிந்து கொள்ளமுடியும்.
2) இந்தியாவின் மேட்டுக்குடியினரை இந்தியளவில் செயற்படும் மேட்டுக்குடியினர், மாநில அளவில் செயற்படும் மேட்டுக்குடியினர். இவ் இருவகையினரும் ஒருவரில் இருந்து ஒருவர் வேறுபட்டவர்கள் என்பதுவும், இவ் வேறுபாடுகள் முரண்பாடுகளாக இருந்து வருகின்றன என்பதுவும் உண்மை. ஆனால், மேட்டுக்குடிகளிடையே உடன்பாடுகளும் உண்டு என்பதுவும் உண்மை.
எடுத்துக்காட்டாக;
1)   மூத்தண்ணன் கொள்கை; 
இந்தியளவிலான பார்ப்னிய-பனியார்-மார்வாடி மேட்டுக்குடிகளும், எல்லையோர மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், திரிபுரா, அருணாச்சல் பிரதேஷ், டெல்லி ஆகிய மாநில மேட்டுக்குடிகளும் இந்தியாவின்  “மூத்தண்ணன் கொள்கையை விரும்புகின்றனர். இந்தியாவின் வல்லரசுக்கனவு இவர்களுக்கும் இனிமையானது. இதனால் இவர்கள் அனைவருக்கும்  பலமானதொரு மத்தியரசு தேவைப்படுகிறது.
2)   ஏகாதிபத்திய சார்பு, நில்பிரபுத்துவ சார்பு நிலை: 
சாதியக் கட்டுமானத்தின் மீள் உற்பத்தி, ஆண்மேலாதிக்க மீள் உற்பத்தி, காப்ரேட் சார்புநிலை போன்ற விடயங்களிலும், ஜாதி இந்துக்களின் தலைமையிலான அனைத்து மத்திய மேட்டுக் குடியினரும் இந்திய மேட்டுக்குடியினருடன் ஒத்த கருத்துடனேயே உள்ளனர். பார்ப்பனர்களும் பார்ப்பனர் அல்லாத ஜாதி இந்துக்களும் இதில் ஒன்றுபட்டே உள்ளனர். ஆனால் அவ்விததேசியஅரசு பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) இருக்கவேண்டும் என்பது மேட்டுக்குடிகளின் ஒரு பகுதியான, பார்ப்பனிய-பனியா கூட்டின் விருப்பம், அவ்விதம் இருக்ககூடாது என்பது மேட்டுக் குடிகளின் மற்றோர் பகுதியான பார்ப்பனியர்கள் அல்லாத சாதி இந்துக்களின் விருப்பம்.
3)   பார்ப்பனியம்:                                                   மார்க்ஸியம் எவ்விதம் உலகப் தொழிலாளர்களினதும், முரணற்ற மனித நேயர்களினதும் வழிகாட்டும் தத்துவமாகத் திகழ்கிறதோ, தலித்தியம் எவ்விதம் சாதிரீதியான ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவமாகத் திகழ்கிறதோ. அது போல், பார்ப்பனியந்தான் இந்திய மேட்டுக்குடிகளின் வழிகாட்டும் தத்துவமாகத் திகழ்கிறது.
இம்மேட்டுக் குடிகளின் பார்ப்பனர் அல்லாதோர் பிரிவு, பார்ப்பனியர்களின் பதவி மேலாண்மைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிவந்துள்ளார்கள், இனியும் போராடுவார்கள், ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிராக என்றுமே போராடியதுமில்லை, இனியும் போராடப்போ வதுமில்லை. பார்பனியர்களின் வழிகாட்டுதலுடன் அனைத்து மேட்டுக் குடிகளாலும் தோற்றுவிக்கப்பட்ட பார்ப்பனியத்தை மேலும் வளர்த்தெடுக்கவும், அதை தமதாக்கிக் கொள்ளவுமே முயன்றுவருகிறார்கள். தமிழ் மேட்டுக்குடிகளால் தமதாக்கிக் கொள்ளப்பட்ட பார்ப்பனியந்தான் சைவம்.
அதாவது, பாட்டாளிகள் மட்டுந்தான் மார்க்ஸிஸ்டு களில்லை என்பது எவ்விதம் உண்மையோ, SC,ST_க்கள் மட்டுந்தான் தலித்திஸ்டுகளில்லை என்பது எவ்விதம் உண்மையோ, பெண்கள் மட்டுந்தான் பெண்ணியவாதிக ளில்லை என்பது எவ்விதம் உண்மையோ, அதுபோலவே பார்ப்பனர்கள் மாத்திரந்தான் பார்பனிஸ்டுகள் என்பதில்லை.
இந்தியாவின் இந்துமேட்டுக்குடிகள் அனைவருமே (பட்டியலின மேட்டுக்குடிகள் உட்பட) பார்ப்பனரகள் அல்லாத பார்ப்பனிஸ்டுகளாகப் பரிணாமம் பெற்றுவரு கிறார்கள். பார்பனியத்தை ஒரு தத்துவமாக, ஒரு கருத்தோட்டமாக ஏற்றுக்கொண்ட சாதிய, வர்க்க மேட்டுக்குடிகள் அனைவரும் பார்ப்பனிஸ்டுகளே. சக்கிலியர்களின் சமூக நீதியையிட்டு சில தலித் தலைவர்கள் எடுத்துள்ள வளர்தடை நிலைப்பாடு இதற்கானதோர் எடுத்துக்காட்டாகும். “திடகாத்திரமான” ஜாதிய இந்துக்களாக விளங்குவதற்கும், வளர்வதற்கும் இந்த மாற்றம் அவசியமாகின்றது. 
4)   மொழி வேறுபாடு:
ஆனால், இந்த ஜாதி இந்துக்கள், பார்பனியர்களையும், பார்ப்பனியத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயராயில்லை. பார்ப்பனியத்தை சம்ஸ்கிருத நீக்கம் செய்ய முற்படுகிறார்கள். இது சாத்தியமற்றது. ஏனெனில் பார்பனியத்தின் தாய்மொழி சமஸ்கிருதந்தான். இங்கு தான் மொழியின் பண்பாட்டரங்க முக்கியத்துவம் முன்வந்து நிற்கின்றது. பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசின் உருவாக்கத்திற்கு மொழி பெரும் தடையாக அமைகிறது. (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மேட்டுக் குடிகள் மொழிவிடயத்தில் ஒத்தகருத்துக்கு வரமுடியாமை இனவாத-தேசிய வெறித்தன அரச உருவாக்கத்திற்கு பெருந் தடையாக உள்ளது.
இது தான் இந்திய மேட்டுக்குடிகளின் முன்பின் முரண் நிலைப்பாடாகும். அதாவது, இந்திய நாட்டின் தற்போதைய ‘தேச அரசுதொடரவேண்டும் என்பதில் மேட்டுக் குடிகளிடையே ஒத்தகருத்து, ஆனால், நிலவும் நாட்டரசின் குணாம்சம் எவ்விதமாக இருக்கவேண்டும் என்பதில் அவர்களால் ஒரு ஒத்த கருத்துக்கு வரமுடியாநிலமை.
இந்திய பார்பனரல்லா மேட்டுக்குடியின் முன் பின் முரணான கொள்கைதான் மத்திய அரசுக்கும், ஜாதி இந்து மாநில அரசுக்களுக்கிடையேயான உறவுகளை சீர்செய்ய முடியாமல்  காலத்துக்குக் காலம் தெருச்சண்டைகளில்  ஈடுபட்டுவருவதற்கான காரணமாகும்.
5)   மாநில சுயாட்சிகள்:  
பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மாறுவதற்கு தடையாக இருக்கும் மற்றோர் காரணி இந்தியாவின் மாநில சுயேட்சி முறையாகும். 
இவைதான் இந்தியாவின் தனித்துவங்களில் சிலவாகும்.

முடிவாக, பங்காள தேஷ், பாக்கிஸ்தான், மியான்மர், ஸ்ரீ லங்கா ஆகிய அரசுகள், வல்லரசுகளின் பங்களிப்பினால் இனவாத தேசிய அரசுகளாக மாறுவதில் முழுமையான வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், இந்திய அரசோ ஒரு தேசிய அரசு என்ற நிலையை எப்போதோ இழந்துவிட்டது, ஆனாலும்  இனவாத தேசிய அரசாக மாறுவதில் இன்னமும் முழுமையான வெற்றிபெறவில்லை. 

Wednesday, 14 June 2017

வேலனின் “தேசிய இனங்களின் காலம்”


இது எனது முகநூல் நண்பர் வேலன் அவர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட நூலுக்கான தலைப்பாகும். காலப்பொருத்தமான தலைப்பு. மிக அவசியமானதொரு தர்க்கம். எனது கருத்தும் இதுதான். நான் இதை நான்காம் உலகநாடுகளின் காலமென விரிவுபடுத்திக் குறிப்பிடுகிறேன். இப்பகுப்பு தேசிய இனங்களையும் உள்ளடக்கியதாகும். இருந்தபோதும் தேசிய இனங்களின் காலம்நூலை ஆவலுடன் படித்தேன்.

1050கள் இருந்து 1970கள் வரையான காலம் சோஷலிஸ நாடுகள் + மூன்றாம் உலகநாடுகளின் காலமாக இருந்தது. ஐக்கிய சோவியத் சோஷலிஸக் குடியரசின் (USSR) சிதைவுடன் இந்நிலமையில் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கின. USSR இன் வீழ்ச்சி மட்டுந்தான் காரணம் என்பதில்லை. ஏனெனில் இதே காலப்பகுதியில் செஞ்சீனா நிமிர்ந்த நெஞ்சுடனும் நேர்கொண்ட பார்வையுடனும் ஏகாதிபத்திய் உலகை எதிர்த்து நின்றது. இருந்தும் கூட, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் சோஷலி ஸ நாடுகளின் துணைப்படையாகச் செயற்பட்டு வந்த முன்றாம் உலக நாடுகள் தமது முற்போக்கு வகிபாக த்திலிருந்து பின்வாங்கத் தொடங்கியிருந்தன. இந் நாடுகளின் அரசுகள் இனவாத தேசிய அரசுகளாக வும், தத்தமது நாட்டு இனக்குளுமங்களை ஒடுக்கும் உள் காலனி அரசுகளாவும், தீவிர கம்யூனிஸ எதிர்ப்பு அரசுகளாகவும் மாறத்தொடங்கியிருந்தன. அதாவது ஒரு இனவாதா தேசிய அரசுக்குரிய குணாம்சங்களை வெளி ப்படுத்தி நின்றன. இக்காலப்பகுதியில், இருமுனை உலகம் (ருஷ்யா, அமெரிக்கா) ஒருமுனை உலகமாக மாறியிருந்தது. இதனால் மூன்றாம் உலக நாடுகளின்மீது அமெரிக்க செல்வாக்கு அதிகரித்தது. மூன்றாம் உலக நாடுகளில் ஏற்ப்பட்ட அகநிலை மாற்றத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஏகாதிபத்தியத்திற்கும் வல்லரசியத்திற்கும் எதிராக இருந்த உலகளாவிய அணி சிதைந்து போகி ன்றது. ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. இந்நிலையை உலகளாவிய எதிர்ப்புரட்சி வெற்றிபெற்றிருந்தகால மெனக் கூறலாம்.

வரலாறு வெற்றிடத்தை அனுமதிப்பதுவும் இல்லை, எதிர் புரட்சியின் வெற்றி நிலையானதுமல்ல. இதானால் அடுத்த புரட்சி அலை உலகளவில் உருவாகத்தொ டங்கியது. அதுதான் நான்காவது உலகநாடுகளின் போராட்ட அலையாகும். நான்காவது உலகமெனக் கூறுவது ஒடுக்கப்பட்ட அனைத்துவகை இனக்குளும ங்களையுமேயாகும். தேசிய இனங்கள், பழங் குடிகள், ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர், பாலின உரிமை மறுக்கப்பட்டோர், வெள்ளையனின் மொழியில் “கறுப்பர்”, ஒடுக்கப்பட்ட மதப்பிரிவினர், அகதிகள் ஆகிய அனைவருமே இதில் உள்ளடங்குவர்.

ஆகவே இதைத் தேசிய இனங்களின் காலமென மட்டும் வரையறுப்பது தவறானதாகும். இது ஒரு வாக்கிய ப்பிழையாக இருந்தால் திரித்திக் கொள்ளலாம். ஆனால் இந்நூலில் இது ஒரு கண்ணோட்டப்பிழையாகவே வெளிவந்துள்ளது.

காரணம்:- இது தேசிய இனக்களின் காலம் என்பதை நிரூபிக்க இலங்கையை ஒரு மாதிரியாக(sample-case study) எடுத்துள்ள இந்நூல்;
1. -- சாதிய இனக்குழுமங்களின் உரிமைக்கான போராட்டங்களை முற்றாகவே மறுக்கின்றது.

2.   -- இஸ்லாமியரின் தேசிய இனத் தனித்துவம் எந்த இடத்திலும் வலியுறுத்தப்படவில்லை. எள்ளி நகையாடும் போக்கு இளையோடி நிற்கின்றது.

3.   ---மலையகத் தமிழர்களின் தேசிய இனத் தனித்துவம்  பற்றியும் எதுவுமேயில்லை.

4.   --- வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயான பிரதேச வேறுபாட்டை வெறுக்கத்தக்க ஒரு போக்காகவே நோக்குகிறது. யாழ்குடாநாட்டின் சமூக உருவாக்கத்தையும் கிழக்கின் சமூக உருவாக்கத்தையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டால், சமூக விழுமியங்கள், சமூக நியமங்கள் ஆகியவற்றின் பக்கத்தில் யாழ்குடாநாடு தாழ்ந்தது, கிழக்கு உயர்ந்தது. வடக்கின் பண்பாட்டுக் குறியீடு ஆறுமுகநாவலர், கிழக்கின் குறியீடு விபுலானந்தர். மடுவும் மலயுமாக நிற்கும் இவ்விருவரையும் ஒப்பிட்டால் குடாவிற்கும், கிழக்கிற்கும் இடையேயான வேறுபாடு புரியும். ஆகவே, குடாவின் பண்பாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை கிழக்கிற்கு உண்டு. இதனால், கிழக்கு நடத்தும் போராட்டம் சமூகநீதிக் கண்ணோட்டதில் இருந்து பார்த்தால் முற்போக்கானதே. இதை அர்த்தமற்ற பிரதேசவேறுபாடென்று வகைப்படுத்திக் கொள்ளக்கூடாது.

5.   --இதே போன்றதுதான் குடாநாட்டிற்கும் வன்னிக்கும் இடையேயான வேறுபாடுமாகும். பிரதேச வேறுபாடுகள் செயற்கையானவையல்ல. சமூக உருவாக்கத்தில் உள்ள அசமத்துவமான வழர்ச்சியே அதற்கான காரணங்க ளாகும். தேசிய இன உருவாக்க நிகழ்வின் போது இவை தீர்க்கப்பட்டேயாகவேண்டும். ஆனால் அத் தீர்வு சமூகவளர்ச்சிக்குச் சாதகமான முறையில்தான் அமைய வேண்டுமே தவிர பாதகமான முறையிலோ அல்லது அதைத் தடுக்கக்கூடிய முறையிலோ அமையக்கூடாது.

6.   ---சிங்களத் தேசிய இனம் முற்றாகவே புறக்கணிக்கப்படுகிறது. இந்நூலாசிரியர் ஒரு தேசியவாதியாக, ஏன் தேசிய இனவாதியாக ஒரு இருந்திருந்தாலுங்கூட இவ்வித கேள்வி கேட்கமாட்டேன். அவர்களுக்கு இவ்வித கேள்வி புரிகிறதோ இல்லையோ என்பதல்ல பிரச்சனை. அவர்களிடம் அவ்வித கேள்வி கேட்பது தவறென்பதுதான் பிரச்சனை. தேசியவாதம், தேசிய இனவாதம், மார்க்ஸிஸம் ஆகியன கண்ணோட்டம் சார்ந்த பிரச்சனைகளாகும். பட்டறிவு, நூலறவு ஆகிய இரண்டினதும் துணைகொண்டு ஒருவர் தானே தனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் ஒன்றுதான் கண்ணோட்டமாகும். அதையாரும் யார்மீதும் திணிக்க முடியாது. இவ்விதம் திணிக்க முற்படுவது கருத்தியல் வன்முறையாகும். கருத்தியல் வன்முறை ஆயுத வன்முறைக்கு இட்டுசென்ற அவலத்தை கண்டவர்கள ல்லவா நாம்?

தோழர் வேலன், இந்நூலில் தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் எனப் பெருமையுடன் பல இடங்களில் சொல்லிக்  கொள்வதால்தான் இக்கேள்வி.  
           
தேசிய இனங்களின் காலம் பற்றிய மாதிரி ஆய்வில் சிங்களத் தேசிய இனம் உள்ளடக்கப்படாதது ஏன்? அவ்விதமானால் நூலின் தலைப்பை ஆழப்படும் தேசிய இனங்களின் காலம் எனக் குறிப்பிட்டி ருக்கலாம். 

சிங்கள-பௌத்த-பேரகங்காரவாதத்தின் அரசிய-பொருளிய-இராணுவ கட்டுமானத்தால் பிரயோகிக்கப்பட்டுவரும் உள்-காலனியல் அடக்குமுறை சொந்தக்காலில் நிற்கு மளவிற்கு சுயசக்தி கொண்டதல்ல. இது ஏகாதிபத்தி யத்தாலும், வல்லரசியத்தாலும் பேணிப்பாதுகாக் கப்பட்டுவரும் அதிகாரக் கட்டுமானமேயாகும். ஆகவே உள்-காலனியல் அடக்குமுறைக்கு எதிரான தேசிய இனப்போராட்டங்கள் படிப்படியாக வளர்ச்சியுற்று உள்-காலனியல் கட்டுமானத்துக்கு எதிரான போராட்டமாக மலரும். விடுதலைப்புலிகள் தோற்றதற்கான காரணம் இப்புரிதல் இல்லாமையேயாகும். எஜமானர்களைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களால் ஏவப்பட்ட நாய்களை மட்டும் கணக்கில் கொண்டிருந்ததுதான் அவர்களின் தவறு. எஜமானர்கள் களம் இறங்கிய பின்னர், எல்லோரும் சேர்ந்து எம்மை வஞ்சித்து விட்டர்களெனத் தேம்பிஅழுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அந்தஎல்லோரும் வேறுயாருமல்ல, பேரகங்கார வாதநாய்களின் எஜமானர்களாகும்.  
                  
இத்தவறுக்கான காரணம் என்ன? சிங்கள தேசிய இனந்தான் பிரதான எதிரியெனக் கருதியதேயாகும். இதுதான் தேசிய வாதிகளின் பொதுவான கருத்தாகும். ஒரு மார்க்ஸிஸ்ட் என்ற முறையில் தோழர் வேலனின் கருத்தும் இதுதானா? சிங்கள் தேசிய இனத்தையும் நான்காம் உலகத்துள் கொணர்வது எவ்விதம் என்பதுதான் ஒரு மார்க்ஸிஸ்டின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.                          
இது தேசிய இனங்களின் காலம் என்பதை நிறுவுவதற்கான ஒரு மாதிரி ஆய்வாக இலங்கை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதால்தான் இக்குறைபாடு கள் சுட்டிக்காட்டப்படுவது அவசியமானதாக வுள்ளது. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பிறிதோர் நூலை தோழர் வேலனிடம் இருந்து எதிர்பார்ப்போம்.
நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்நூலுக்கு “விடுதலைப் புலியிஸமும் ஓடுகாலித்தன இடதுசாரி யிசமும்” எனும் தலைப்பிட்டிருந்தால் அதிக பொருத்தமானதாக இருந்திருக்கும். மேற்சொன்ன கேள்விகள் எதுவும் அவசியப்பட்டிருக்க மாட்டாது.

தோழர் வேலனால் முன்வைக்கப்படும் புலியிஸம் பற்றி நான் எதுவும் கூறவிரும்பவில்லை. அவரின் கருத்தை ஒட்டியும் வெட்டியுமான விவாதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணமேயுள்ளன. இனியும் தொடரும். அதுபற்றி விவாதிக்கப் பலர் உள்ளனர். ஆகவே, வேலனின் ஓடுகாலித்தன இடதுசாரியியம் பற்றிமட்டும் சில கருத்துக்களை முனவைக்க விரும்புகிறேன். அதுவும் இவ்விடத்திலல்ல. “மூன்றாம் உலக நாடுகளின் காலமும்-இலங்கையின் இடதுசாரி இயக்கங்களும்எனும் சிறுகட்டுரைவடிவில் முன்வைக்கின்றேன்.
   அரிநேசரட்னம் கௌரிகாந்தன் 15/06/2017


மாட்டுக்கறி வியாபாரத்துக்கான மாபெரும் சந்தை

‘வளர்ச்சியின்’ நாயகனான இந்தியப்பிரதமரின் மார்பில் ஏறவுள்ள மற்றோர் வீரப்பதக்கம்.
மாட்டு இறைச்சிக்குத் தடையெனப் பலராலும் கருதப்படும் நடவடிக்கைகளையே வீரப்பதக்கம் பெறுவதற்கான அவரின் நடவடிக்கையாகக் கருதுகிறேன். இந்தியளவிலும், உலகளவிலும் றெட் மீர்(Red meat)-மாடு,எருமை, ஒட்டகம் ஆகியனவற்றின் இறைச்சி- சந்தையிலும், இந்தியளவில் தோல் சந்தையிலும் எகிறிப்பாய்ச்சல் வளர்ச்சியை(boom) ஏற்படுத்தவுள்ள இந்தியப் பிரதமரை வாழ்த்துவதற்க்கு மலர்ச்செண்டுகளுடன் வரிசையில் காத்திருக்கின்றனர் இந்தியத் தொழில் அதிபர்கள். ஆகவே றெட்மீர் எனும் தொழில் துறையை சற்றுப்பார்ப்போம்.
இத் தொழில் நான்கு பிரிவுகளை உள்ளடக்கியதாய் உள்ளது. அவையாவன:
• இப்பிராணிகளை வளர்க்கும் தொழில்
• அப்பிராணிகளின் இறைச்சியையும் தோலையும் சந்தைக்கு ஏற்றமுறையில் பதப்படுத்தும் தொழில்.
• இறைச்சியையும் தோலையும் சந்தைப்படுத்தும் தொழில்.
• இவ் இறைச்சிக் கறி தீண்டப்படாத ஒரு உணவாகக் கருதப்படுவதால் சமைக்கப்பட்ட உணவுகள் தனிக்கடைகளில் தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே விற்கப்படுகிறது. இதை பிரியாணி கடைத்தொழில் என பெயரிட்டுக் கொள்வோம். 
பிரித்தெடுக்கப்படும் தோல், இந்நான்கு பிரிவினரிடம் இருந்து அன்னியமாகி தோல்பொருள் முதலாளிகளின் கைகளைச் சேர்கிறது.
அ) வளர்ப்புத் தொழில்: முன் சொன்ன நான்கு தொழில் பிரிவிலும் வளர்ப்புத் தொழிலே பிரதானமானது. குடும்பத் தொழிலே இங்கு மேலோங்கியுள்ளது. விவசாயிகளும், புற நகரப்பகுதிகளில் வாழும் ஏழைகளில் ஒருசாராரும் இத்தொழிலில் ஈடுபடுபட்டுவருகிறார்கள். விவசாயகளிலும் அதிகமானோர் வறிய விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளுமேயாகும். இத்தொழிலில் புரளும் மூலதனம், மானியமாகவோ, கடனாகவோ, “விலையற்றதாகவோ”, சீதணமாகவோ பெறப்பட்டனவேயாகும். இதில் புரளும் மூலதனம் மீள் முதலீடாகத் திரளும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. வாய்க்கும் வயிற்றிற்குமான தொழிலாகவேயுள்ளது. இருந்தும் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதில் கால்நடை வளர்ப்பு பிரதான பங்காற்றிவருகிறது. இத்தொழில் சாதி, மத, இன, மொழி, வர்க்க பேதமின்றி நடந்துவருவது குறிப்பிடக்கூடிய விடயமாகும். 
ஆ)பதப்படுத்தலும் சந்தைப்படுத்தலும்:
இவை இரண்டும் தனித்தனித் தொழில்களேயாகும், ஆனாலும் இவை உடல் உழைப்பில் ஈடுபடும் நடுத்தரவர்க்கத்தின் கீழணிகளாலேயே செய்யப் படுகின்றன. அதுவும் ஒரே ஆளே இருதொழில்களையும் செய்துவருகின்றனர். கடை உரிமையாளனும் அவனே, தொழிலாளியும் அவனே. தொழில் பிவினை உருவாகு மளவிற்கு இத்தொழில் வளரவில்லை. வளர்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. சிறு உற்பத்தியாகவே காலா கலாமகத் தொடர்ந்துவருகிறது. பெரும் போக்கான உற்பத்திக்கு இங்குவாய்ப்பில்லை. இதனால் இத் தொழில் குடும்பத் தொழிலாகவே உள்ளது. கூலிக்கு அமர்த்தும் அளவிற்கு இங்கு லாபமில்லை. இத் தொழில் சாதிமத பேதத்திற்கு உட்பட்டது. இதனால் தான் இத்தொழில் நிலையங்கள் ஒதுக்குப்புறம்பான இடங்களில்தான் அமைந்திருக்கின்றன. 
ஆனால், இத் தொழில் ஏற்றுமதிக்கென அமையும்போது நிலமை வேறு. அனைத்துவேலைகளும் கூலிகளை க்கொண்டே செய்யப்படுகிறது. பெரும் போக்கான இவ் உற்பத்தியின் உபரி அன்னியச் செலவாணியாகக் குவிகிறது. இவ் உற்பத்தி உடமையாளர்கள் சாதிமத பேதத்திற்கு அப்பாற் பட்டவர்கள். ஜெயின் சமூகத்தினர் சிலரும் உடமையாளர்களாக இருப்பதாகத் தகவல்.
தொகுப்பு: இத் தொழில்துறை மிகவும் பின்தங்கியதாகவும், மிக மந்தமான ஒரு வளர்ச்சியைக் கொண்டதாகவும் உள்ளது. இம் மந்த நிலைக்குக் காரணம் இயற்கை, கால்நடைவளர்ப்புக்குப் பாதகமாக உள்ளதென்பதல்ல. இயற்கை வளங்கள் மிக நன்றாகவே உள்ளன. 

சந்தைப்படுத்தலுக்கான வழிவகை வளாமாக இல்லாததுவும் சந்தைவாய்ப்பின்மையுமே பிரதான காரணங்களாகும். ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும் மொத்த இறைச்சி உற்பத்தியிலும் உணரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் பல தடைகள் உள்ளன. சிதறுண்டிருக்கும் இறைச்சி உற்பத்தியை வளர்க்கவேண்டுமானால் மூன்று வழிகள் உண்டு. அரசு நேரடையாகத்தலையிடவேண்டும், அல்லது கூட்டுறவு அமைப்புகளிடம் ஒப்படைக்கவேண்டும், அல்லது பெரும் தனியார முதலீட்டுக்கு அனுமதி வழங்கவேண்டும். அப்போதுதான் இறைச்சி உற்பத்தியில் பாரிய எகிறி ப்பாய்தல் ஒன்று (boom) ஏற்படும். உபரியும், மூலதன மறு உற்பத்தியும் தனியார் கைகளுக்குப் போனாலும் ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட இறைச்சித் தொழிலில் பூதாகரமான வளர்ச்சியைக் காணக்கூடிதாய் உள்ளது.
வளர்ச்சியின் நாயகனான மோடி பென்னாம்பெரும் சந்தையுள்ள இவ் வளமான, மலிவான சரக்கு(இறைச்சி) வீணே தேங்கியிருப்பதைக் கண்டு மனம்நோகாமல் இருக்க வாய்ப்பில்லை. “கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்தபலா” என அவரது கவியுள்ளம் வெந்து புண்ணாகியிருக்கும். ஒரு தொழில் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு உபரியைக் குவிக்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதையும், அவ் உபரி அரசின் வல்லரசுத் தனத்தை வளர்க்கவோ அல்லது பெரும் முதலாழிகளின் சொத்துக் குவிப்பை அதிகரிக்க கூடியதாகவோ இருக்கவேண்டுமென்பதை கீதைவாக்காகக் கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ரெட் மீட் உற்பத்தி-விநியோகத்தையும் அந்நிலைக்கு கொணர கங்கணம் கட்டிவிட்டார். இறைச்சி உற்பத்திக்கு நல்ல காலம் பிறக்கட்டும்.

கால்நடைவளர்ப்பு முன்கூறிய மூன்று வழிகள் அத்தனையையும் பின்பற்ற- லாம். விவசாயிகளை அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தானே கால்நடைகளைக் கொள்வனவு செய்வது; கால்நடை வளர்ப்பாளர்- களின் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து, அவை தமது கால்நடைகளை அரசுக்- கோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட தனியார் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கோ விற்பது; இறைச்சிக்காகவென் பெரிய, சிறிய கால்நடைப்பண்ணைகள் அமைத்து, அவற்றை சொந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்துவதுடன் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியா நிலையை அடைந்துவிட்ட கால்நடை- களை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து அவற்றைவளர்ப்- பதற்கான அனுமதியையும் வளங்குதல். இப்பண்ணைகள் பதப்படுத்தும் நிலையங்களாகவும் இருத்தல் அல்லது அவை தமது கால்நடைகளை அரசுக்கோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட தனியார் பதப்படுத்தும் நிறுவனங்- களுக்கோ விற்பது. 
இவ்வரசின் கீழ், பதப்படுத்தல் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் கூட்டுறவு ஏற்படவாய்ப்பில்லை. இவ் அரசின் இந்து சனாதனக் கண்ணோட்டமும், இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டமும் அதை அனுமதியாது. ஆகவே, இவ்விரு துறைகளையும் அரசே பொறுப்பெடுக்கலாம் அல்லது முதலாழிக- ளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம். ஆனால், ஏகபோகத் தனியார்மயத்தை ஆதரிக்கும் இவ்வரசு, உற்பத்தியில் தான் எந்தப் பொறுப்பையும் ஏற்கவும் மாட்டாது, கூட்டுறவு முறையையும் உருவாக்கமாட்டாது. உற்பத்தி, பதப்படுத்தல், சந்தைப்படுத்தல் ஆகிய மூன்றையும் பெரும் தனியார் முதலாழிகளிடமே ஒப்புவிக்கும். இதனால், ‘தேசமும்’ ‘தேசப்பொருளாதாரமும்’ ஆஹா! ஓஹோ!! என்று வளருமென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. 

ஆனால், தனியார் துறையூடாக ஏற்படுத்தப்படும் இவ்வித மாற்றத்தால், விவசாயிகள் நிலை என்னவாகும்? அவர்கள் தமது இறைச்சிக்கான கால்நடை- களை இழப்பார்கள் அல்லது அவற்றின் மீதான அவர்களின் உரிமை சேதப்- படுத்தப்படும். இன்னவிலைக்கு இன்னார்க்குத்தான் விற்கலாமென கட்டாயப்படுத்தப்படக்கூடும். 
பதப்படுத்துவோரினதும், விற்பனைசெய்வோரினதும் நிலைமை என்னவாகும்? மதரீதியாகவும், சாதிரீதியாகவும் ஒடுக்கப்பட்ட அவர்கள் மந்தமான தொழில் முயற்சிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வேலைதேடி வீதிகளில் அலையும் சுதந்திர புருஷர்களாக்கப்படுவார்கள். 

பிரதமரால் இரட்சிக்கப்பட்ட இறைச்சியின்(றெட் மீர்ரின்) நிலை என்னவாகும்? உற்பத்தி பெருகும், மதிப்பூட்டப்பட்ட இறைச்சி உள்நாட்டுச் சந்தைக்கும், உலகச் சந்தைக்குமான சரக்காக மாறும். இதுவரை இவ் இறைச்சிகளை தீட்டென ஒதுக்கிவைத்தவர்களும் தின்னக்கூடிய அளவுக்கு இதன் சமூக மதிப்பு உயர்த்- தப்படும். விளம்பரதாரர்கள் அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவார்கள். மாட்டுக் கொழுப்பில் வறுத்தெடுத்த(toasted) நொறுக்குத்தீனிகளை பார்பனப்- பிள்ளைகளும் ஆசையுடன் உண்ண வில்லையா? இவ் இறைச்சியில் இருக்கும் வளமிக்க பல உணவுவகைகள் அகற்றப்படும்(கொழுப்பு, B complex). நாகரீக மதிப்பேற்றப்பட்ட(fashionable value) இறைச்சிச் சக்கையை உயர்தர சைவ உணவாளர்களும் வாங்கி ப்புசிப்பார்கள், தன் ஊன் வழர்ப்பதற்காக பிற உயிர்க- ளைக் கொல்லக்கூடாது என்ற கொள்கை யாளர்களும் புசிப்பார்கள். ஆனால், நாகரீக மதிப்பேற்றப்பட்ட இவ் இறைச்சிகளின் உயர்விலையின் காரணத்தால், இதுவரை இவ் இறைச்சியைத் தின்றுவந்த ‘இழிசனர்கள்’, ‘சுத்த சைவர்களாக’ மாறக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். புரதக் குறைபாட்டால் உடல்நிலை குன்றிப்போவார்கள்.
எவ்விதமோ, ஒரு மந்த நிலைத் தொழில், துரித வளர்ச்சி நிலைத் தொழிலா- கப் போகிறது; ஒரு உபரிஉருவாக்க ஆற்றலற்ற தொழில் உபரியை அள்ளிக் குவிக்கும் தொழிலாகப் போகிறது. தனது மூலப்பொருளான தோலைப் பெறுவதில் பல இன்னல்களை எதிர்கொண்டி ருக்கும் தோல் பொருள் தொழிலகள் துரித வளர்ச்சிபெறும். இவ்வளவும் போதாதா பிரதமருக்கு பதக்கமளிக்க? பெரு முதலாழிகளுக்கு இதைவிட சிறந்த வாய்ப்பை வேறுயார் ஏற்படுத்திக் கொடுப்பர்?

அரினேசரட்னம் கௌரிகாந்தன்/30/05/17




Tuesday, 13 June 2017

மூவகைப் பேய்களையும் கட்டிப்போடுங்கள்

கீழ்க்கண்ட கட்டுரைக்கான பின்னூட்டல்
அந்த பேயை கட்டிப் போடுங்கள் - Daily Ceylon

"இனவாதம், மதவாதம், பாஸிஸவாதம் ஆகியவற்றைப் பரப்பிக்கொண்டு திரியும் பேய் சுதந்திரமாக அன்றி, சிறைச்சாலையொன்றிலேயே இருக்கவேண்டும். " மிகச் சரியான கூற்று.
ஆனால், இப்பேய்களைக் குறிக்க இவ்வளவு அடைமொழிகள் அவசியமில்லைஇனவாதமும் மதவாதமும் ஒன்றே. ஆகவே இனவாதிகள் என்ற ஒன்றே போதுமானது. மத அடிப்படை இனவாதிகள், குருதியின அடிப்படை இனவாதிகள்மொழி அடிப்படை இனவாதிகள், மரபின அடிப்படை இனவாதிகள் எனக் குறிப்பிடலாம். ஆக்கிரமிக்கும் இனங்களிடம் இருந்து வந்தாலும், ஆக்கிரமிக்கப்படும் இனங்களில் இருந்து வந்தாலும், அனைத்து இனவாதங்களும் ஒன்றே. அனைத்து வகை இனவாதிகளும் பேய்-பிசாசுக் கூட்டங்கள்தான்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயற்பட்ட தமிழீழ இனவாதத்தையும், தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்ட இஸ்லாமிய இனவாதத்தையும் மறந்துவடமுடியுமா? அல்லது மன்னித்துவிடமுடியுமா?                                                                                                        இரண்டாவது, இப் பேய்-பிசாசுகளை வகைப்படுத்த பாசிஸமெனும் பதத்தை பிரயோக்கிப்பது அவசியமற்றதாகும். இனவாதம் என்பதே ஒரு குறிப்பிட்ட இனக்குழுமம் பிற இனக்குழுமங்களின் மீது இராணுவ எதேச்சதிகாரம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஒரு இனக்குளுமத்தின் தானெனும் அஹங்காரத்தின் வெளிபாடாகும். இந்த இனக்குழும அகங்காரம் தானெனும் தனிநபர் அஹங்காரமாக முதிர்ச்சி பெறுகிறது
வர்க்க ஒடுக்குமுறையையைவிட இது கொடூரமானது. வர்க்க ஒடுக்குமுறை உற்பத்திப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டது. ஆனால், இனவாத அடக்கு முறைகள் உற்பத்திசக்திகளின் அழிவுக்கு இட்டுச்செல்வது. முதலாளித்துவ ஒடுக்குமுறைகளைவிட ஆபத்தானது. அழிவு மனப்பான்மை கொண்டது. பாசிஸத்திலும் விட பிற்போக்குத்தனமானது. ஆகவே இனவாதிகள் என்ற பதத்தை சரியாக புரிந்துகொள்வோ மானல் அப்பதமே போதுமானது. அதைப் பாசிஸத்துடன் குளப்பத் தேவையில்லை.
ஆகவே ஒரு புறத்தில்   அனைத்துவகை இனவாதங்களிற்கும் எதிரான ஒரு கருத்தியல் போராட்டத்தையும், மறுபுறத்தில் அனைத்துவகை இனவாத அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு முழுமையான அரசியல் போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வதே இனவாதங்களிற்கு எதிரான போராளிகளின் கடமையாகும்.
துட்டகமுனுவால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிங்கள-பௌத்த பேரகங்காரவாதம்.
சைவ சமயத்தை பிராமணியப்படுத்துவதில் முழுமையான வெற்றி பெற்ற, தமிழ் மக்களிடையே நிலமானிய சமூக அமைப்பின் வளர்ச்சிக்கு மகுடம் சூட்டிய, பிற இனக்குழுமங்களை அடக்கியாழ்வதில் பேருவகை கொண்ட சோழமரபு பேரகங்காரவாதம்;
சுனி இஸ்லாமியக் கோட்பாடுகளை முன்வைக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத பேரகங்காரவாதம்;
ஆகிய மூன்றுவகைப் பேரகங்காரவாதங்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளன என்பதை நினைவில் கொள்வோம்.

Sunday, 4 June 2017

ஆரிய இனவாதமும் திராவிட இனவாதமும் ஒரெ குட்டையில் ஊறிய மட்டைகளா?

 Arinesaratnam Gowrikanthan-

ஆரிய இனவாதமும் (racism),
திராவிட இனவாதமும்(racism) ஒரே தாயின் கருவில் பிறந்த இரணைப்பிள்ளைகள் என நீங்கள் கூறவருவது புரிகிறது. அதில் உண்மையும் உள்ளது


ஆனால், காலனியகால அதிகாரப் பகிர்வின் போதும், “சுதந்திர இந்திய தேசத்தின் அதிகாரப் பகிர்வின் போதும் ஆரியம் ஆளும் இனவாதமாகியது. இந்துத்துவமெனும் மத ப்(f)னாரிஸ வடிவம் கொண்டது. பார்ப்பனியத்தைத் தனது சித்தாந்தாந்தமாக ஏற்றுக்கொண்டது. பார்ப்பனியர்களை அதிகார சாதியாக நிலைநிறுத்தியது


அடுத்த பக்கத்தில், திராவிட இனவாதமோ ஆளப்படும் இனவாதமாகியது. இதுவும் பார்ப்பனியத்தை தனது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டது

ஆனால், பார்ப்பனர்கள் அதிகார சக்தியாக இருப்பதை மூர்க்கமாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பு பல சமூக சீர்திருத்தங்களை அவசியப்படுத்தியது. இவ்வித சீர்திருத்தங்களில் ஒன்றுதான் சமூக நீதீ இ்யக்கமாகும்


பார்ப்பனியர்கள் அல்லாத ஜாதி இந்துக்களை சமூகத்தின் அதிகாரசக்தியாக மாற்றுவதே திராவிட இனவாதத்தின் குறிக்கோளாகும். வல்லரசுகளுடன் நண்பர்களாக இருப்பது, இந்திய புவிப்பரப்பையும் அதன் மக்களையும் அந்நியர்களுக்கு விற்பது, சாதிய படிநிலை சமூகத்தைப் பாதுகாப்பது, வர்க்க ஒடுக்குமுறையை மேலும் மேலும் அதிகரிப்பது, விதேசியர்களுடன் கைகோர்த்தவண்ணம் தேசிய எழுச்சிகளை அடக்குவது அல்லது சமரசப்போக்கிற்க்கு உள்ளாக்குவது ஆகியவை இரு இனவாதங்களின் பொதுவான அம்சமாகும்.


அதாவது மூலோபாய ரீதியில் நோக்கினால் இரு இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான. இரு அணியினரும் சமதர்மத்துக்கு எதிரானவர்கள்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை


ஆனால், உத்திரீதியில் நோக்கினால் திராவிட இனவாதிகளிடம் சில முற்பொக்குச் சீர்திருத்த குணாசங்கள் உண்டு.



இது   ரவீந்திரனின் கீழ்க்கண்ட பதிவுக்கான பின்னூட்டலாகும்.



ரவீந்திரனின் பதிவு:



சி.பி.எம்.ன் விவாதத்திலும் சரி புதிய கலாச்சாரத்தின் விவாதத்திலும் ஏகாதிபத்தியம் பற்றியோ காலனியாதிக்கம் பற்றியோ விவாதிகவில்லையே ஏன்
பிரிட்டீஷ் ஆட்சி இங்கு ஏற்படுவதற்கு முன்பு இந்து முஸ்லீம்களுக்கு இடையில் சண்டையோ கலவரமும்ஏ ற்படவில்லை. அவர்களின் ஆட்சியில்தான் இந்த மதங்களுக்கு இடையில் கலவரம் உருவாக்கப்பட்டது இதற்கு சேவை செய்த கோட்பாடுதான் ஆரிய இனவியல் கோட்பாடு. பார்ப்பனர் எதிர்ப்பை முதன்மை படுத்தி காலனியாதிக்க எதிர்பை திசைதிருப்பினார்கள் அதற்கு பயன்பட்ட கோட்பாடுதான் திராவிட இனவியல் கோட்பாடாகும்
இப்படி நாம் சொல்வதால் ஆரிய மற்றும் திராவிட மரபு இனங்கள் இங்கு இருந்ததை நாம் மறுப்பதாக எடுத்துக்கொள்வது தவறாகும். இங்கு அந்த மரபு இனங்கள் இருந்தது உண்மை
உற்பத்தி வளர்ச்சிப்போக்கில் அந்த இனங்கள் ஒன்று கலந்து உபரி உற்பத்தியை யார் கைப்பற்றுவது என்ற சூழலில் மக்களிடம் வேறுபாடுகள் ஏற்பட்டபோது வர்ணங்களாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர் பின்பு சாதிகளாக பிளவு படுத்தப்பட்டனர். இதில் பார்ப்பன சாதியினர் நிலவுடமை சக்திகளாக ஆதிக்க நிலையில் இருந்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்களும் ஆதிக்கசக்திகளாக இருந்தனர். இவர்களை எதிர்த்து விவசாயிகள் போராடியுள்ளனர். இந்தவகையில் இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடவேண்டும் எமக்கு கருத்து வேறுபாடு இல்லை
ஆனால் உள்ளூர் ஆதிக்க சக்திகள் பார்ப்பனர்கள் மட்டும்தான் என்பது உண்மை இல்லை. ஆகவே அதனை நாம் ஏற்க முடியாது. அதேபோல் நமது நாட்டை கொள்ளையடித்து வரலாறுகாணாத அளவு வறுமையையும் தற்கொலை சாவுக்கும் காரணமான அன்னிய காலனியாதிக்க கூட்டத்தை எதிர்த்த போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களையும் நாம் ஏற்க முடியாது
இதுபோன்ற காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கோட்பாடுதான் இனவியல் கோட்பாடாகும். இந்த கோட்பாட்டை ஐரோப்பியர்கள் இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய ஆப்பிரிக்க தென்அமெரிக்க நாடுகளில் உருவாக்கி அங்கெல்லாம் தற்போதும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி புதியகாலனியத்தை பாதுகாக்கிறார்கள்
ஆதிக்க சக்திகள் பார்ப்பன சாதியிலும் உண்டு.பிற சாதியிலும் உண்டு. ஆதிக்க சக்திகள் வர்க்கமாகவே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் ஆகவே பார்ப்பன எதிர்ப்பு பேசுபவர்கள் வர்க்கப் போராட்டத்தை மறுக்கிறார்கள். அவர்கள் வர்க்க எதிரிகளை மக்களுக்கு சுட்டிகாட்டுவதில்லை. ஆகவே சமூக பிரச்சனைகளை அறிவியல்பூர்வமாக தீர்ப்பதற்கான மார்க்சியத்தை மறுக்கிறார்கள்.


https://www.facebook.com/ravindran.ravindran.700/posts/468420413500829

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...