Friday, 24 May 2019

கொழும்புக் குண்டுவெடிப்பின் காரணகாரியத் தொடர்புகள்.


கொழும்புக் குண்டுவெடிப்பின் காரணகாரியத் தொடர்புகள்.
மேலோட்டமாகத் தெரியும், காரணம்:-
கிறிஸ்துவ ஆலயங்களில் சிலவற்றிலும், கொழும்பு நகரின் பிரபல ஹோட்டல்கள் சிலவற்றிலும் நடந்த குண்டுவெடிப்புகளுக்கான காரணகாரியத் தொடர்புகளைத் தேடும் அரசியல் ஆய்வுகள், விவாதங்கள் இன்னமும் தொடர்கின்றன. கிறிஸ்துவ ஆலயங்களிலன குண்டு வெடிப்புகளான காரணத்தை இஸ்லாமிய இயக்கத்தின் மீது சுமத்தி அனைவரும் அமைதி அடைந்து விட்டார்கள் போலும். சுவிஸ்லாண்டில் இஸ்லாமிய பள்ளிவாசலின் மீதான குண்டுவெடிப்புக்கான பதில் தாக்குதலே இலங்கைக் குண்டு வெடிப்புகள் என காரணமும் கற்பித்தாகிவிட்டது. ISIS எதற்காக இலங்கையை தேர்ந்தெடுத்தது? ஹோட்டல் -களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தமிழ்-சிங்கள-இஸ்லாமிய இன மோதல்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், நான்காவது அணியாக கிறிஸ்தவர்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் ISIS-க்கு ஏன் ஏற்பட்டது? சிங்கள கிறிஸ்துவர்கள், தமிழ் கிறிஸ்துவர்கள் என்பதுடன், பறங்கியர் (Burghers) எனும் ஒரு தனியான இனக் குழுமம் இலங்கையில் உண்டு என்பதையும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டும். இவர்கள்  கிறிஸ்தவர்கள். ஆகவே சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், பறங்கியர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய ஐந்து இனக்குழுமங்கள் மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
அவ்விதமானல் இலங்கையை ஒரு இன, மத போராட்டக் களமாக மாற்றவேண்டும் என்பதுதான் ISIS-யின் குறிக்கோளா? இவ்விதமானதோர் குறிக்கோள் ISIS-க்கு உண்டாக முடியுமா? உண்டாக வேண்டிய அவசியம் என்ன? அவசியம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்விதமானால் ISIS பயன் படுத்தப்பட்டிருக்கின்றது என்று கருதலாமா? பயன்படுத்த்யது யாராக இருக்கும்? இலங்கைக்கு வெளியில் அவர்களைத் தேட வேண்டாம், தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். தேடுவோம்:
காரணம் 1)  சிங்கள சமூகத்தில் ஆழப் புதைந்திருக்கும் கரவாஸ்-கொவிகம முரண்பாடு.
இதன் அர்த்தம், ISISஐ பயன் படுத்தியவர்கள் இலங்கைக்குள்ளேயே உள்ளார்கள். யார் அவர்கள்? வேறுயாருமல்ல பௌத்த, சிங்கள தேசியவாதிகள்தான். ஏன்? விவரத்துள் செல்ல முன்பாக சிந்திக்க வைப்பதற்காக ஒரே ஒரு கேள்வி. 70% பௌத்தர்களைக் கொண்ட (சிங்கள இனத்தில்) சிங்கள கிறிஸ்தவர்களை விலத்திவைத்த பௌத்த சிங்களத் தேசிய -வாதம் எப்போது தோன்றியது? ஏன் தோன்றியது?
தோற்றுவித்தவர் அநகாரிக தர்மபாலா எனும் பௌத்த துறவி. இவர் ஒரு முன்னாள் கிறிஸ்தவர். கரவாஸ் எனும் சிங்களப் பிரிவைச் சேர்ந்தவர். கிறிஸ்துவ அதிகார பீடத்தினதும் காலனியல் வாதிகளினதும் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே கரவாஸ் சிங்களவர்களாகும். இவர்களுக்கும் நியம’(தூய) சிங்களப் பௌத்தர்களாக அழைக்கப்படும் உடரட்ட’(மலை) சிங்களவர்களுக்கும், (கொவிகம) இடையேயான முரண்பாடுகளின் செயற்பாடுதான் சிங்கள தேசியத்தின் வரலாறாகும். சிங்கள பௌத்த தேசியம் அல் (non) பௌத்த சிங்கள தேசியம் ஆகிய இரண்டினதும் கலவையே சிங்கள தேசியமாகும்.
ஐரோப்பியரின் ஆதிக்கத்தில் இருந்து இலங்கை சுதந்திரம்அடையும்வரை இலங்கையின் பெரும்பகுதி நிலப்பரப்பு கரவாஸ் சிங்களவர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. சுதந்திரத்தின்பின் இரு சாராருக்கும் இடையே இருந்த முரண்பாட்டில் ஒரு சமரசம் ஏற்படுத்தப்பட்டது. ஏற்படுத்தியவர்கள் பிரித்தானியர்கள். இது ஒரு வகைத் திணிப்பாகவே நடந்தது.
1950-களில்தான் வெளிப்படையான அரசியல் அரங்கினில் கரவாஸ் தேசியவாதம் பின்தள்ளப்பட்டு சிங்கள-பௌத்த தேசியவாதம் பிரதான அரசியல் போக்காக மாறுகிறது. இவ்விதம் பிந்தள்ளப்பட்டதற்காக இலங்கைப் பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்கா சுடுக் கொல்லப் படுகிறார். இருந்தும் இம் முரண்பாடு சிங்கள அதிகாரவர்க்கத்துள் இன்னமும் மிக தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டேயுள்ளது.
1950களின் பின் 1960-கள்வரை இவ்விரு அதிகார பீடங்களுக்கும் இடையே மூன்று இராணுவச் சதிகள் ஏற்கனவே நடந்துள்ளன. கரவாஸ்பகுதி தோல்வி கண்டுவிட்டது.  இலங்கையின் பிரதம மந்திரி (கொவிகம) ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவின் வாக்குரிமை -யைப் பறித்தது, கரவாசிய  J.R.ஜெயவர்த்தனாவேயாகும். ஐரோப்பிய முகாமினது குறிப்பாக அமெரிக்கா-பிரித்தானிய, மற்றும் NATO-வினது ஆதரவைப் பெற்றது கரவாஸ் பகுதியேயாகும். இந் நிலைமை இன்றுவரை தொடர்கிறது.
 சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள், தொடர்ச்சியாக நடைபெற்று -வரும் இவ் இராணுவ சதியின் மற்றோர் முன்னெடுப்பாகும். மஹிந்த ராஜபக்க்ஷவை பிரதம மந்திரியாகக்கொணர எடுத்தசதி முயற்சியின் தொடர்ச்சிதான் கொழும்பு குண்டுவெடிப்பாகும். மஹிந்த ராஜபக்‌ஷ, ஜே.வி.பி தலைவர் ஆகிய இருவரும் கரவாஸ் பிரிவைச் சேர்ந்தவர்களே. ஆனால் இவர்கள் இருவரும் கொவிகம சிங்களவர்களின் தலைவர்களாகவும் வருவதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். ஆனாலும்  கொவிகம சிங்களவர் கள் இவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த, S.W.R.D பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகாபண்டாரநாயக்காவுக்கும் (இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி) மஹிந்த ராஜபக்‌ஷ்விற்கும் இடையேயான பிணக்கிற்கு இதுவும் ஒரு காரணமாகும். ராஜபக்‌ஷவை பிரதமராக்குவது என்பது, கரவாஸை(றணில் விக்கிரசிங்க) மேலும்  தனிமைப்படுத்துவது என்பதேயாகும். ஆனால். கொவியாஸ் தோல்வி கண்டு விட்டது, . கரவாஸ் அதிகாரபீடம் காப்பாற்றப்பட்டுவிட்டது. அத்தோல்வியின் விளைவுதான் இக் குண்டு வெடிப்புகளாகும்.
சிறிலங்காவின் ஆட்சி அதிகாரக் கட்டுமானதில் கரவாஸ் ஆதிக்கத்தை மேலும் பலவீனப்படுத்துவதற்காகத்தான் ISIS பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதுதான் ஒரே காரணமா? வேறு காரணங்கள் இல்லையா? அகக் காரணம் என்ற பக்கத்தில் இது ஒன்றுதான் உடனடிக் காரணியாகும். ஆனால் புறக்காரணம் என்ற பக்கத்தில் வேறோர் காரணமும் உண்டு.
காரணம் 2) தெற்காசிய இராணுவ சமநிலையை நேர்படுத்துதல்
இது, தெற்காசிய இராணுவ சமன்பாட்டைப் பொறுத்ததோர் பிரச்சனையாகும்.
தெற்காசிய இராணுவச்சமநிலை யென்பதென்ன? தராசின் ஒரு நெம்பில் இந்தியரசும் மறு நெம்பில் பாக்கிஸ்தான், வங்காளதேஷ், சிறிலங்கா, பர்மா, மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய அரசுகளும் உள்ளன. இன்றைய நிலையில் இந்தியாவின் நெம்புதான் அதிக சுமையுடன் காணப்படுகிறது; கீழ் நோக்கிச் சாய்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஜப்பான் ஆகிய நாடுகள் இத் தராசின் தற்போதைய நிலையை பேணவே முயற்சிக்கின்றன. சீனாவும், ருஷ்யாவும், BRICS இனதும் SCO வினதும் பங்களிப்பின் மூலம் இத் தராசின் ஓர் அரசுப் (இந்திய அரசுப் பக்கம்) பக்கத்தையும், பல் அரசுப்பக்கத்தையும் சம நிலைக்குக் கொண்டுவரவே விரும்புகின்றன. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சிறிலங்கா அரசு, பக்கிஸ்தான் அரசின் துணையுடன் பல் அரச தட்டில் ISIS -ஐயும் ஏற்ற முற்படுகின்றது.
இதன் மூலம் பௌத்த சிங்கள தேசியவாதம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்த முற்படுகின்றன.
முதல் மாங்காய்:- உள்நாட்டில், ஐரோப்பிய முகாமுடன் நெருங்கி உறவாடிவரும் கரவாஸ் அணியைப் பலவீனப்படுத்துவது. றணில் விக்கிரமசிங்க அணியையும், தமிழீழத் தேசியத்தின் இரு அணிகளையும்.
இரண்டாவது மாங்காய்:- தெற்காசிய இராணுவ சமநிலையில் இந்திய ஆதிக்க நிலையைப் பலவீனப் படுத்துதல்.
மூன்றாவது மாங்காய்:- இந்தியரசுக்கும் தமக்கும் இடையே அடிக்கடி நடக்கும் இராணுவ சூதாட்டத்தில் ISIS-ஐயும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ளல்.
காரணம் 3) இலங்கை இஸ்லாமியர் நிலை:-
1915-இல் இருந்தே இஸ்லாமியர்கள், ஒரு மதப்பிரிவென்ற முறையில் அடக்கப்பட்டே வந்துள்ளனர். சிங்கள பௌத்த தேசியத்துடன் முரண்பட்டு நிற்பதுவும், இலங்கைத் தமிழ்த் தேசியத்துடன் ஒரு நட்புறவைப் பேணுவதுமே இவர்களின் பொதுவான போக்காக இருந்து வந்துள்ளது. மலையத் தமிழர்களுடன் என்றுமே இவர்களுக்கு எந்த முரண்பாடும் இருந்ததி -ல்லை. ஆனால் தமிழீழ தேசிய இனவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பின்னர் இவர்கள் தம்மைத் தனித்தேசியமாக வழர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இத் திசைநோக்கித் துரிதமாக வளரவும் ஆரம்பித்தார்கள். 20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியிலேயே பாக்கிஸ் -தானை தளமாகக் கொண்ட வஹாபிஸத்துடன் இணைந்து கொண்டார்கள். புலி எதிர்ப்பை மனதில் கொண்டு சிறிலங்கா அரசும் கண்டுங் காணாத ஒரு போக்கைக் கடைப்பிடித்தது.  இவர்களின் வளர்ச்சிக்குத் துணைபோகவும் செய்தது. ஆகவே இஸ்லாமியத் தேசியவாதக் குழுக்கள் ISISஆல் தோற்றுவில்லப்பட்டவையல்ல.. ஆனால் பரஸ்பர நன்மை கருதி நண்பர்களாகியிருக்கலாம். இவ்விரு நண்பர்களும் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக் -கவில்லை என்பதையும், அதேபோல் சிறிலங்கா அரசு ISIS உடன் எந்த முரண்பாட்டையும் வழர்ந்துக்கொள்ள விரும்பவில்லை என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
முடிவாக:- எதுஎப்படியோ பௌத்த-சிங்கள தேசியவாதம் தனது எதிரியை நண்பனாக்கிக் கொண்டுள்ளது. எதிரியை நண்பனாக்கிக் கொண்டும், நண்பரை எதிரிகளாக்கிக் கொண்டும் அல்லல்படுவது இனவியத் தேசியவாதங்களின் பொதுவான குணாம்சமாகும் ஆகையினால் -தான் இனவியல் தேசியவாதங்கள் சாத்தியமில்லை, அல்லது வேலைக்காகாது எனும் கருத்து முன்வைக்கப்பட்டுவருகிறது.

சாத்தியமில்லாத இனவியத் தேசியம்  எனும் கட்டுரையைப் படிக்கவும். https://vidiyalgowri.blogspot.com/2019/05/ethnonationalism.html


கரவாஸ்-கொவியா முரண்பாடு பற்றிய விரிவான விளக்கத்தையும், இலங்கையின் இஸ்லாமியர் ஒரு தனித்தேசியமாக உருத்திரண்டுவரும் நிலைபற்றியும் தெற்காசிய இராணுவ சமநிலைபற்றியும் விரிவாக, அறிந்து கொள்ள கீழ்வரும் 3 கட்டுரைகளையும் வாசிக்கவும்.
கட்டுரை I
3-2) மஹிந்த இராணுவம் எதற்காகப் பலப்படுத்தப்படுகிறது.
3-2-1) இராணுவச் சதிக்கு அஞ்சியா?
கட்டுரை II
3-2-5) இஸ்லாமிய ஆயுத குழுக்களுக்கு அஞ்சியா?
கட்டுரை III
3-2-6) ஆசிய வல்லரசுகளின் கடும்போக்கிற்கா?
இக்கட்டுரைகள் இரண்டும் பின் வரும் நூலின் சில பகுதிகளாகும்.
வடிவங்கள் மாறலாம்! போராட்டம் தொடரும்......-சமூகவியல் ஆய்வு,
ஆசிரியர்-கைமண்.
பதிப்பு-மறுநிர்மாணம்,
First Edition: July 2011, Publishers-Maru Nirmanam ©
கைமண் எனது புனைபெயராகும். நூல் பெறவிரும்புவோர், கீழ்வரும் marunirmanam@gmail.com, மற்றும் vidiyalillam@yahoo mail.co.in முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்.
நூலின் PDF பிரதி உண்டு. e-mail இல் அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்ளவும்.
இம் மூன்று கட்டுரைகளும் PDF வடிவிலும் உண்டு. உள்ளதனால் முகநூலிலோ, டுவிட்டரிலோ அனுப்பிவைக்க முடியாதுள்ளது. ஆகவே ஈ-மெயிலில் அனுப்புகிறோம். உங்கள் மெயில் முகவரியை அனுப்பி வைக்கவும். நன்றி.
-------------------------------------------------------------------------

Wednesday, 22 May 2019

`நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே!’


 `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே!’’
சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம் 

சீமான் நான்கு விவகாரங்களை வைத்தே எப்போதும் முன்னே வருகிறார். காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள், ஈழம்! இந்த நான்கு பிரச்னையும் தீர்ந்துவிட்டால் சீமானும் தீர்ந்துவிடுவார்.


`நாம் தமிழர்’ கட்சியின் பொறுமையான வளர்ச்சி, எதிர்பார்த்ததுதான்... ஆனால், எதிர்பாரா திசையில் நடக்கிறது. அதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்ட வேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்தக் கட்டுரை. எனவே, கட்டுரை முழுமையும் பொறுமையாகப் படித்துவிட்டு விவாதிக்கத் தொடங்குங்கள், தமிழ்ப் பிள்ளைகளே!

`அடக்க முடியாத கோபத்தினை உன் ஆழ்மனதினுள் தேக்கி வை. ஒரு காலம் வரும். அப்போது ஒருவனையும் விடாதே. மொத்தமாய்க் கருவறு!’ - அடால்ப் ஹிட்லர்

இந்தப் பொன்மொழியைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி. அவர் பெயரெல்லாம் அநாவசியம். ஏனென்றால், நாம் தமிழர் கட்சியில் இருக்கும் எல்லோரும் சீமானின் வடிவங்களே! எல்லோரும் ஒரே முகம் காட்டுவார்கள், ஒரே குரலில் ஒலிப்பார்கள், ஒரே விளைவை கொண்டுவருவார்கள். இப்படியிருக்க, தனியாக ஒருவரை மட்டும் அடையாளப்படுத்திப் பேசுவதால் என்ன ஆகிவிடப்போகிறது?

சமூக வலைதளத்தில் மட்டுமே தாக்கம் செலுத்திவந்தவர்கள், சமீபகாலமாகச் சமூகத்திலும் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலும் நாம் தமிழருக்குத் தட்டிகள் காணப்படுகின்றன. அவர்கள் வளர்கிறார்கள். அவர்களின் சித்தாந்தம் வேரூன்றி வருகிறது. அவர்களின் அரசியல் கிளைவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆண்ட, ஆளும் கட்சிகளின்மீது ஆற்றாமையும் ஆத்திரமும் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், அவர்களின் பின்னால் திரள்கிறது. அவர்கள் தலைவனின் ஆவேசப்பேச்சுகள் அதற்கான வழிகளை மேலும் எளிதாக்கிக் கொடுக்கிறது. வளசரவாக்கத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், `அண்ணனின் பேச்சுதான் எனக்குக் காலைவேளை சுப்ரபாதம்’ என்கிறான். அருகிலிருப்பவன், `அண்ணனின் பேச்சுதான் எனக்கு இரவுநேர தாலாட்டு’ என்கிறான். ஆம், கண்ணுக்குத் தெரியும் தொலைவுக்கு வந்துவிட்டார்கள், ஒரு முரட்டுச் சித்தாந்தத்தோடு. இனியும், அவர்களை மையத்துக்கு அழைத்துவந்து விவாதிக்காமலோ, விமர்சிக்காமலோ கடந்துசெல்வது அறப்பிழை ஆகிவிடும். அறியாமையும் ஆவேசமும் மட்டுமே கொண்ட ஒரு மேய்ப்பனுக்குப் பின்னால், `ம்மே’வெனக் கத்திக்கொண்டு செல்லும் ஆட்டுக்குட்டிகளைக் கருத்தில் கொண்டேனும், எதிர்க்குரல் எழுப்பவேண்டியுள்ளது.
சீமான் எவர், எப்படிப்பட்டவர், எத்தகைய பின்புலம்கொண்டவர் என்ற ஆராய்ச்சியும் அநாவசியம். `அடையாள அரசியல்’ என்ற ஒன்றை மட்டுமே படைக்கலமென ஏந்தி களத்துக்கு வந்திருக்கிறார். ஒருவகையில், சீமான் `குட்டி மோடி'. சந்தேகமா? மோடிக்கு மதம். சீமானுக்கு இனம். மோடிக்கு பாகிஸ்தான். சீமானுக்கு கர்நாடகம். மோடிக்கு அத்வானி. சீமானுக்கு பாரதிராஜா. மோடிக்கு மோகன் பகவத். சீமானுக்கு மணியரசன். மோடிக்கு ராஜாக்கள். சீமானுக்கு கார்த்திகள். மோடி, சீமான் இருவருமே `கண்மூடித்தன கனவுகளும், இல்லாத இலக்குகளும்' கொண்டவர்கள். உசுப்பேத்தி உயர்வதையே உயரிய நோக்காகக் கொண்டவர்கள்.
நாம் தமிழர் கட்சியைக் `காலத்தின் கட்டாயம்’ என்கிறார்கள், சிலர். ஆம், இதுநாள்வரை இங்கே ஆதிக்கம் செலுத்திவரும் அரசியல் கட்சிகளுக்கு, ஒரு மாற்று தேவைப்படுகிறது என்பது உண்மையே. இப்போது எழுந்துவரும் ஒரு தலைமுறை புதிதாக ஒரு சக்தியை எதிர்நோக்குகிறார்கள் என்பதும்கூட உண்மையே. ஆனால், அதற்காகச் சர்வாதிகாரத்தையும் வெற்றுப்பீற்றலையும் சாதிப்பற்றையும் மட்டுமே அச்சாகக் கொண்டு சுழல்பவர்களை `மாற்று’ என்று எப்படி ஏற்பது?
`நாம் தமிழர் அவசியமான தமிழ்ச் சீர்திருத்த அமைப்பு’ என்றும் சொல்கிறார்கள், சிலர். இதையும் ஏற்க முடியாது. தமிழ்மீது அளவற்ற பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் நாம் தமிழர்கள், இதுவரை தமிழுக்காகச் செய்த அளப்பரிய பணிகள் எத்தனை? அவர்களின் வேகமும் செயல்திறனும், தமிழ் வளர்ச்சியிலும் பண்பாட்டு மீட்பிலும் கொஞ்சமேனும் இருந்திருந்தால், நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பாக ஏற்கலாம். ஆனால், இவர்களின் தமிழ்ப் பற்றெல்லாம் மேடையோடு இறங்கிவிடுகிறதே! பண்பாட்டு மீட்பும், `முப்பாட்டன் முருகன்’ என்பதோடு முடிந்துவிடுகிறதே! அதிலும், மாற்றுத்தரப்பை வசைபாடுவதற்கும், இளைஞர்களின் இதயங்களில் வெறியுணர்ச்சியை வளர்ப்பதற்குமே, அந்தத் தமிழ்ப்பற்று பயன்படுகிறது. இவர்களுக்கு, `தமிழ்ப்பற்று’ ஓர் அரசியல் முகமூடி. அவ்வளவுதான்! ஆக, நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பு என்று சொல்வது, அண்ணனின் ஆமைக்கறி, அரிசிக்கப்பலைவிடப் பெரிய நகைச்சுவை ஆகும்.
திராவிடச் சித்தாந்தம் பேசினாலும், `தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார் பெரியார். கொள்கை முழக்கமாக அல்ல, அரசியல் முழக்கமாகவே அதை முன்வைத்தார். ஆனால், நாம் தமிழர்கள் அந்த நிலைப்பாட்டைக்கூட எடுப்பதற்கு, அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படித் தமிழினத்தை விடுவிப்பார்கள்? அதுவும் இல்லாமல், எப்போது `மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி' எனச் சொன்னார்களோ, அப்போதே `திராவிட இயக்கங்களின் நீட்சிதான் நாங்களும்’ என்று காட்டிவிட்டார்கள். அதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா கேட்டார், `மாநிலச் சுயாட்சிக்குத்தான் ஏற்கெனவே இங்கொரு கட்சி இருக்கிறதே. நீங்கள் எதற்கு?’ என்று.
ஆயிரம் இருந்தாலும், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அத்தனை சமூக மாற்றங்களைச் செய்தன. இவர்களிடம், இப்போதுவரை வெறும் காத்து மட்டும்தான் வருகிறது!
நாம் தமிழர் கட்சியின் பிரதான பிரச்னையே, சீமான்தான்! ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணியுடன் மோத விடுவாராம். ஆட்சிக்கு வந்தால், தனி நீதிமேலாண்மை செய்வாராம். காக்கிச்சட்டையைக் கழட்டிவிட்டு, நீலச்சட்டை கொடுத்துவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடுமாம். இதெல்லாம் கம்மி. மற்றதை எல்லாம் கேட்டால் இன்னும் சிரிப்பு வரும்.

தன்னை `அடுத்த பிரபாகரன்’ என்று அறிவித்துக்கொள்வதிலும், அவருக்கு அலாதிப்பிரியம். அவர் அறிய வேண்டியது ஒன்றுண்டு. ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரே ஒரு பிரபாகரன்தான்! பிரபாகரன் `தனிநாடு' கேட்டார். விடுதலை வேட்கை சூடினார்; படை உருவாக்கினார்; போர்க்களம் கண்டார். இலங்கை அரசின் அங்கமாக இருக்க முயன்றவரில்லை, அவர். அதாவது, ஒருசில மாகாணங்களுக்கு மட்டும் முதலமைச்சராக முயலவில்லை, அவர். ஆனால், அண்ணன் இங்கே முதலமைச்சர் வேட்பாளராகவே களமிறங்குவாராம். புலம்பெயர் தமிழர்கள் தரப்பில், `புலிகளின் தொடர்ச்சியாக இருக்க நீங்கள் புலிகளாக இருக்கவேண்டும்’ என்ற குரல்கள் கேட்கின்றன. அண்ணன் அதற்கு என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறது.

இன்னொருவரின் அடையாளத்தை அபகரிப்பது, கயமைத்தனம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடம் போட்ட அவரின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவுக்கும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடம் போடும் சீமானுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 
சீமானுக்கு உண்மையிலேயே சமூக மாற்றத்தின் மீது விருப்பம் இருந்தால், தமிழகத்தின் சாதிநிலை பற்றிப் பேசவேண்டும். சும்மா, `எல்லோரும் தமிழர்கள்' என்று ஜல்லியடிக்கவோ, ஜகா வாங்கவோ கூடாது. முதலில், தமிழனைத் தமிழன் சுரண்டுவதை நிறுத்தட்டும், சீமான். தமிழனைத் தமிழன் தாக்குவதைத் தடுக்கட்டும், சீமான். தமிழன் என்பதற்காகவே அடாவடி கந்துவட்டி ஆசாமியை ஆதரித்த சீமான், தமிழன் என்பதற்காக எவ்வளவு கொடியவனையும் ஆதரிக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? ஏன்... தமிழன் தப்புப் பண்ணவே மாட்டானா? தமிழனைத் தமிழனே ஒடுக்குவதுதான், இங்கே பெரிய பிரச்னையே!
அப்புறம், அந்த `அன்பான சர்வாதிகாரம்’! மதுவில் நல்ல மது கெட்ட மது உண்டா? வன்புணர்வில் நல்லதென்றும் கெட்டதென்றும் உண்டா? அப்புறம் எப்படிச் சர்வாதிகாரத்தில் மட்டும் அன்பான சர்வதிகாரம்... அன்பற்ற சர்வாதிகாரம் இருக்க முடியும்? சர்வாதிகாரம் என்றாலே அன்பற்றதுதான், அழிவை நோக்கியதுதான்!
  
`எதுவும் சரியில்லை, அனைத்தையும் மாற்ற வேண்டும்' எனக் கிளம்புபவனின் நோக்கமும், பாதையும் இங்கு நிச்சயம் ஆராயப்பட வேண்டும். காரணம், சர்வாதிகாரிகளின் வரலாறு அப்படி.   சர்வநாசம் என்பதே சர்வாதிகாரிகள் அளிக்கும் விளைவு. அதுவும் சீமானுக்கு, தன்னைச் சர்வாதிகாரி என அறிவித்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. இது, இன்னும் ஆபத்து! `நான் சர்வாதிகாரிதான். நேர்மையாளன் சர்வாதிகாரியாகத்தான் இருப்பான்’ என்று பேசுகிறார். மறைந்த தலைவர்களான தேசப் பிதா காந்தி சர்வாதிகாரியா, பண்டிட் ஜவஹர்லால் நேரு சர்வாதிகாரியா, இல்லை, லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான் சர்வாதிகாரியா? என்ன பிதற்றல் இதெல்லாம்?! நாட்டை நல்வழியில் செலுத்தத் தேவையான கொள்கை 'நவீன ஜனநாயகம்' என்பதே. அத்தனை முன்னோர் இன்னுயிர் ஈந்தளித்த 'ஜனநாயகத்தை' இழப்போமானால், அழிவை வம்படியாக வரவேற்கிறோம் என்றே அர்த்தம். 
சீமானைச் சில கேள்விகள் மூலம் தர்க்கமாக அடிக்கும் நபர்களை, கண்டபடி திட்டித் தீர்க்கிறார்கள். உடனே, `தமிழனல்ல' எனும் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்கள். தம்பிகளே... உங்களுக்கு ஒரு கேள்வி... கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவன் தலைவனா?!

சரி, எவர் தமிழர், எவர் வந்தேறி? எதைவைத்து அதை அறிந்துகொள்வது என்று எவரும் குழம்ப வேண்டாம். அதாவது, நாம் தமிழர் கட்சிக்காரர்கள் மட்டுமே தமிழர்கள். மற்றவர்களெல்லாம் வந்தேறி! இனிமேல் யாராவது, `நான் தமிழன்' என்பதை நிரூபிக்க வேண்டுமானால், `நாம் தமிழர்' கட்சியில் சேர வேண்டும். அண்ணனும் போனால் போகிறதென்று `தமிழன்' எனும் அந்தஸ்தை அருள்வார்! இதெல்லாம் அந்த முப்பாட்டன் முருகனுக்கே அடுக்காது!

எப்போதோ ஓர் இளைஞன் எழுதியிருந்தான், `வேண்டுமானால் பாருங்கள், சீமான் எதிர்காலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் தமிழனல்ல என்பார். இயக்குநர் அமீரையும் வந்தேறி என்பார்’ என்று. இதோ, சரியாக `சாப்பிடும்’ இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். இயக்குநர் சமுத்திரக்கனியைத் தமிழனல்ல என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். நாளை வேல்முருகனாக இருக்கலாம், நாளை மறுநாள் அது அமீராக இருக்கலாம். என்றாவது ஒருநாள், தம்பிகள் அண்ணனையே `தமிழனல்ல’ என்று முத்திரை குத்தப்போகிறார்கள். `என் வினையே என்னைச் சுட்டது’ என்று, `புஹாஹாஹா’ சிரிப்புடன் புலம்பப்போகிறார்.

`ஐ.பி.எல். போராட்டம்’ நினைவிருக்கிறதா? அப்போது ஒரு முக்கிய வாக்கியம் உச்சரிக்கப்பட்டது. அதாவது, `உள்ளே போனவனெல்லாம் தமிழனல்ல' என்ற குரல் எழுந்தது. இது, ஒரு சோறுதான். இவர்கள் அதிகாரம் அடைந்தால், இன்னும் அண்டா அண்டாவாக அதுபோன்ற சோற்றைக் கொட்டுவார்கள். கேட்டால், `சோழன் ஆட்சியில் இப்படித்தான் நடந்தது உறவே’ என்று சமாளிப்பார்கள். ஆண்ட பரம்பரை பெருமை பீற்றித் திரியும் ஒரு கூட்டம், அதையும் நம்பிக்கொண்டு தலைகொடுக்கத் தயாராகும். ஆமாம், அதென்ன தியரி? ‘இதைச் செய்தால்தான் தமிழன்... அதைச் செய்தால்தான் தமிழன்...' என்று. தமிழனெனும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்ப்பாலுடன் கலந்தே ஊட்டப்பட்டது. அந்த உணர்வை, `நிரூபி... நிரூபி...' என்று கட்டளையிட, இவர்கள் யார்? அனைத்துக்கும் மேலே, தன்னைத் தமிழனாக/தமிழச்சியாக உணரும் எவரும் தமிழரே. அப்படி உணர்பவரை `தமிழரல்ல' என்பது, மிகப்பெரிய வன்முறை.
ஒரு கூட்டத்தில் சீமான் பேசுகிறார். `இந்த மண் எனக்குச் சிக்கினால், செத்தீர்கள்’ என்கிறார். இப்படி, தலைவனே `செத்தீர்கள்’ என்று பேசுவதால்தான், தலைவனைப் பின்பற்றுபவர்கள் `கருவறுப்போம்’ என்று பேசித் திரிகிறார்கள். `சத்தமாகப் பேசுபவன் எல்லாம் சரியாகப் பேசுவான்’ என்ற மாயையிலிருந்து விடுபடும்வரை, இதற்கு விடிவில்லை. 

சற்றே கவனித்தால் தெரியும். சீமான் நான்கு விவகாரங்களைவைத்தே எப்போதும் முன்னே வருகிறார். காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள், ஈழம்! இந்த நான்கு பிரச்னையும் தீர்ந்துவிட்டால் சீமானும் தீர்ந்துவிடுவார். ஆக, சீமான் தீர விடமாட்டார். அவையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீமானுக்கு நல்லது. ஆகவே அறிய வேண்டும்... சீமான் தீவிரத்தை விரும்புகிறாரே ஒழிய, தீர்வை அல்ல!
முடிக்கும் முன், நறுக்கென்றும் நச்சென்றும் நாலு வரிகள், அன்புத் தம்பிகளான `நாம் தமிழர்களுக்கு’! அன்புகொள்ளுங்கள். அரசியல் பழகுங்கள். மாற்றுத்தரப்பை மதியுங்கள். மக்களாட்சியின் மகத்துவத்தை மனதில் நிறுத்துங்கள். 
டாட்!
`நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே!’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம் 
https://m.facebook.com/story.php?story_fbid=285793732308877&id=100026347567020

https://www.vikatan.com/news/tamilnadu/157630-a-humble-request-to-seeman.html?fbclid=IwAR1KbHM8akhio71Db05WGHlvSfYd4JRJQxRjYlf1L5ILFg-2SGI3V468ikk


விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்


விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருமாம்.
தடை தொடரும்!!
இந்தியரசின் அறிவிப்பு என்னதான் காரணம்? தமிழீழ அரசை அமைப்பதற்கான முயற்சியில் புலிகள் ஈடுபட்ட வண்மேயுள்ளார்களாம்; அதற்குத் துணைபோகும் நடவடிக்கைகளில் ஈடபடக்கூடியவர்கள் இந்தியாவிலும் உள்ளார்களாம்; இவ்விதம் துணைபோகும் நடவடிக்கைகளை சட்டவிரோதமான தாக்குவதுதான் இத் தடை நீடிப்பிற்கான காரணமாம்.
இதுதான் காரணமாக இருந்தால் தடை நீடிப்பில் எந்தத் தவறும் இல்லை. அந்நிய நாடொன்றின் உள்நாட்டு விவகாரங்களில், அந் நாட்டு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாகத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை. இந்திய அரசுக்கும் இல்லை, இந்திய மக்களுக்கும் இல்லை. அவ்விதம் தலையிடுவதாக இருந்தால் அது அனைத்துலக, (U.N.O) அல்லது குறிப்பிட்ட சில நாடுகளுக்கான அமைப்புகளின் (SCO) ஊடாக மட்டுமே முடியும். தேசிய தன்னாட்சி உரிமை தேச இறமை என்பது கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் செயற்படும் தமிழ் இனவிய தேசியவாதக் குழுக்களில் சில தமிழ்நாட்டைத் தாயகவும் தமிழீழத்தை சேயாகவும் குறிப்பிட்டிருந்தன, அத்துடன் சேர்த்து தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் இணைக்கும் கடல் பகுதியை தமிழ்க் கடல்எனவும் பிரகடனப் படுத்தியிருந்தனர். தமிழீழத் தேசியம் இவர்களின் தத்துக் குழுந்தையா? யார் யாருடனோ பேரம்பேசி தமிழீழத்தை தத்தெடுத்து விட்டார்களா? தமிழீழக் கடற்பரப்பினுள் உள் நுழைந்த தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் கைது செய்ததையும்; தி.மு.க ஆட்சிக் காலத்தில், இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்ச தீவை, மீண்டும் இந்தியா மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா அவர்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததுவும், அது இன்னமும் தொடர்வதையும், யாவரும் அறிவர் இந் நடவடிக்கையையிட்டு தமிழீழத் தேசியம் எவ்விதம் செயற்பட்டது? கச்சதீவு தமிழீழ தேசத்துக்கே உரியது என்பதே தமிழீழத்தின் நிலைப்பாடாகும். தமிழீழத்தின் தேசிய தன்னாட்சியுரிமையில் கைவைக்கும் உரிமை யாருக்குமேயில்லை. அவ்விதம் கைவைப்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், அது யாராக இருந்தாலும்.
வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா ஆகிய நாடுகளின் தேசியத்தை உருவாக்குவதில் சீனாவுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப் பெரும் பங்கிருந்தது ஆனால், அதற்காக சீனா இந்நாடுகளை தனது சேய் என்று என்றுமே சொன்னதில்லை. சீனா, வியட்நாம் ஆகிய இருநாடுகளுக்கிடையிலும் தற்போது கடல் பரப்பினில் தீவுக் கூட்டம் ஒன்றின் இறமை தொடர்பான உராய்வுகள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் தத்தமது இறமைகளை விட்டுக் கொடுக்காத முறைியல் தமக்குள்ளான முரண்பாடு -களை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் காணப்படும் தமிழ் இனத் தேசியவாதிகள், தமிழீழத்  தேசியத்தின் வளர்ச்சியில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை. தமிழீழ போராட்டத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
(1) இந்திய சமாதானப் படைக்கும் (IPKF), விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையேயான யுத்தத்தின் போது, IPKFஐ இலங்கையில் இருந்து வெளியேற்ற இவர்கள் கொடுத்த அழுத்தங்கள் என்ன?
(ஆ) 1983-இல் இருந்து முள்ளிவாய்க்கால் பேரழிவுவரை நடந்த இனப் படுகொலை -களையிட்டு இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? 1983 நடவடிக்கைகளை -யிட்டு இந்திய மத்தியரசும், இந்திய காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழர்களு -க்கு சாதகமான சில நடவடிக்கைகள் எடுத்தன. ஆனால் அவை, திராவிட இன தேசியவாதிகளினதோ, தமிழினத் தேசியவாதிகளினதோ அரசியல் நிர்ப்பந்தத் தங்களாலல்ல. இந்தியத் தேசியத்தின் இறமை கருதி மத்தியரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் 10 வருடங்கள் கடந்தும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்திடம், சமர்பிக்கப்பட்ட ஐ.நா சபையின் பிரேரணணகளில் சாதாரண துயர் துடைப்பு நடவடிக்கைகளை இட்டும் கூட எதுவும் நடைபெறவில்லை. இவற்றை, இந்திய மக்களிடையே குறிப்பாக தமிழ் மக்களிடைய ஜனரஞ்சகப் படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின தேசிய வாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்வோர்கள் வகுப்பறையின் பின் வரிசை மாணவர்கள் வந்துள்ளேன் சார்’ ‘வந்துள்ளேன் சார்என உரத்த குரலில் எம்பிநின்று கூச்சல் போடுவது போல் இவர்களின் தமிழீழ தேசிய உணர்ச்சியும் அடங்கிவிடுகிறது. அவ்வளவு தான்.
(இ) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக (1977 இல் இருந்து) இலங்கையில் இருந்து தமிழ் அகதிகள் வெளியேறிய வண்ணமே உள்ளார்கள். சமீபத்திய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இவ் வெளியேற்றம் இன்னமும் அதிகரிக்கப்போவது நிச்சயம். இவ்விதம் வெளியேறியவர்களில், இந்தியாவில் உள்ளவர்களைத் தவிர, பிற நாடுகளின் அகதிகளுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது. ஒன்றில் குடியுரிமை, அல்லது Green card உரிமை, அல்லது காத்திருப்புப் பட்டியலில் சேர்த்தல் கிடைத்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இருக்கும் தமிழீழ அகதிகள் இன்னமும் கள்ளத்தோணிகளாகவேகருதப்படுகிறார்கள். சட்டவிரோதக் குடியேறிகள்என்பதுவே இவர்களுக்கான சட்டரீதியான அங்கிகாரமாகும். எப்போதும் நாடுகடத்தப்படலாம், எப்போதும் சிறைபிடிக்கப் படலாம், எப்போதும் தடுப்பு முகாமில் அடைக்கப்படலாம், விசேட காரணங்கள் எதுவும் கூறத்தேவையில்லை சட்ட விரோதக் குடியேறிகள்என்ற அடையாளமே போதுமானது. இதுதான் இந்திய ஜனநாயகம்.
இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கான நிரந்தரத் தீர்வுதான் என்ன? இந்தியரசின் அரசியல் தேவைதான் அதை நிர்ணயிக்கின்றதா? இலங்கை, தமிழீழம் ஆகிய தேசங்களின் இறையான்மையில் தலையிடுவதற்கென நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மக்கள் அணியா இவ் அகதிகள்? அகதிகளின் உரிமைப் பிரச்சனை உலக -ளாவிய ஒரு மனித உரிமைப் பிரச்சனை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டு தமிழ் இனவாதிகளின் குறிக்கோள் என்ன? அவர்களின் நிரந்தர மௌனத்துக்கான காரணம் என்ன? அவர்கள் வெறும் போலிகள் என்பதற்கு அகதிகளை ஒட்டிய அவர்களின் நிலைப்பாடு சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறிலங்கா அரசால், இந்திய மீனவர்களின் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை எதிர்த்துப் போராட திராணியற்ற, முதுகெலும்பற்ற திராவிட இனத் தேசியவாதிகளும், தமிழ் இனத் தேசியவாதிகளும் தமிழீழ தேசியத்திற்கு துணை நிற்பார்களென இந்தியரசு கருதுவது உண்மையல்ல. ஆகையினால் இத் தடை அவர்கள் மீதான அச்சத்தால் ஏற்பட்டதல்ல. உண்மை வேறெங்கோ இருக்கிறது. அதை ஆராய்வோம்.
இன்றைய இந்தியத் தேசிய அரசின் (அது BJP அரசாக இருக்கலாம் காங்கிரஸ் அரசாக இருக்கலாம்) உடனடிக் குறிக்கோள் (2018-2025 வரை); தான் தெற்காசிய வல்லரசாக மாறவேண்டும் என்பதுதான் உலகின் பிற வல்லரசுகளுடன் (U.S, N.A.T.O, ருஷ்யா, சீனா) தான் நட்பாக இருக்க வேண்டும், அவற்றின் தெற்காசியச் செயற்பாடுகள் அனைத்தும் தன்னூடாக அமையவேண்டும், தன்னை மீறி அமையக் கூடாது என்பதுதான் இன்றைய இந்தியத் தேசிய அரசின் குறிக்கோளாகும். இதில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் இன்றைய இந்தியத் தேசிய அரசு தயாரியில்லை. தனது இன்றைய அரசியல் குறிக்கோளுக்கு எதிரான அனைத்துத் தெற்காசிய அரசியல் போக்குகளையும் இன்றைய இந்தியத் தேசியரசு வெறுக்கின்றது. இப்போக்குகளை தெற்காசிய அரசியல் களத்தில் இருந்து முற்றாக தூக்கியெறிய வேண்டும் என்பதே இன்றைய இந்தியத் தேசியரசின் குறிக்கோளாகும். இவ் அரசியல் போக்குகளில் ஒன்றாக விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது பட்டியலில் சேர்ந்துள்ளது.
தடைக்கான உண்மையான காரணம் இதுதான். இது தொடர்பாக தனியாக ஆராய்வோம். இந்தியப் பிரதமரைக் கொண்டது பிரதான காரணம் இல்லையா? இல்லை. தொடர்வோம்.
குறிப்ப:- இன்றையத் தெசிய அரசு எனும் பதத்தின் அர்த்தம் BJP அரசாக இருந்தாலும் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதேயாகும்.

Monday, 20 May 2019

சுயமரியாதை இன்றேல் சுதந்திரம் இல்லை


சுயமரியாதை இன்றேல் சுதந்திரம் 

இல்லை


சுயமரியாதையும் இல்லாத, தனிமனித சுதந்திரம் கூட இல்லாத, அகதிகள் என்றோர் புதிய சமூகத்தட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இது உலகளாவிய ஒரு சமூகத்தட்டாகும். இதர்க்கு தேச எல்லைகள் கிடையாது. தேச எல்லைகளுக்குள் கட்டுப்பட்டிருக்கும் மக்கள் குழாம்களுக்கு உள்ள சமூக அரசியல் கட்டுமானங்கள் எதுவுமே இவர்களுக்கு இல்லை. உலகெங்கணும் வாழும் அகதிகள் தமது சொந்த நாட்டின்( தம்மை அகதிகளாக்கிய நாட்டின்) அரசியலுடன் ஒன்றிப்போனவர்க ளாகவோ அல்லது பகைத்துக் கொண்டவர் களாகவோ வாழ்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. பட்டும் படாத நிலையே உள்ளது. அவ்விதம் ஒன்று இல்லையே என்பதற்காக எவரையும் இட்டுக் கவலைப்படவும் முடியாது. இவர்கள் வாழும் நாடுகளில் உள்ள இவர்களின் குருதியினத்தவராலோ, மரபினத்தவராலோ இவர்கள் தழுவிக்கொள்ளப்படவுமில்லை. அங்கும் அந்நியமானவர்களாவே நிற்கிறார்கள். இவர்கள் தஞ்சம் அடைந்துள்ள நாடுகளில் இருந்துகூட இவர்கள் துரத்தப்படலாம். வேறு நாடுகளுக்குத் துரத்தப்படலாம். கடந்த பத்து வருடங்களாக, இவர்களை வெளியேற்றிய எந்தவொரு நாடும் இவர்களை திருப்பிக் கூப்பிட்டதாக இல்லை. அகதிகள் உருவாக்கம் இனி நடக்காது என்று கூறுவதற்கும் இல்லை. அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே யுள்ளன. இவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள வர்க்கப் பிரிவுகளுடன் இணையும் நிலையிலும் இவர்கள் இல்லை. இங்கும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. இவர்களின் வரலாற்றுக் கடமைகளும் சமூகக் கடமைக ளும் என்ன?


முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் காலத்தில் தேச உரிமைகளும், தேச அங்கிகாரமும் இல்லாத ஒரு மக்கள் குழாம் உருவானது. இவர்களை பின்நாளில் தேசிய இனங்களாக வளர்ச்சி பெறவைப்பதில் முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னைய கால மார்க்ஸிய தத்துவாதிகளும், அரசியல் தலைவர்களும் பெரும் பங்காற்றினார்கள். இதன்மூலம் ஒரு பெரும் உலக நெருக்கடிதீர்த்துவைக்கப்பட்டது.ஆனால்,இன்றைய நிலையில் அகதிகள் பிரச்சனைக்கான தீர்வைக்காண்பதில் எவருக் கும் அக்கறையில்லா நிலையே தெரிகிறது. ஐ.நா சபை அகதிகளைப் பரமரிப்பதிலும், அகதிகள் உருவாவதற்கான காரணங்களைத் தவிர்ப்பதிலுலும் பட்டும்படாத முறையிலான அக்கறைகாட்டிவந்தது. ஆனால், பாலஸ்தீனிய அகதிகள் விடயத்தில் ஐ.நாவின் தலையீட் டைக் கண்டித்து அமெரிக்கா ஐ.நாவில் இருந்து விலகிக் கொண்டது. இது அகதிகளுக்கு பெரும் பாதிப்பாகும். அகதிகளின் செவிலித்தாய் பலவீனப்படுத்தப் பட்டுவிட்டாள். அதேபோல், மக்கள் சீனத்துக்கும், மியான்மருக்கும் இடையே நடந்த சமீபத்திய பேச்சுவார்த் தையின் போது மியான்மரில் இருந்து வெளியே -ற்றப்பட்ட அகதிகளின் நிலைபற்றிப் பேசப்படவேயில்லை. இலங்கை-மக்கள் சீன உறவிலும் அதுவே நடக்கின்றது.


அகதிகள் விடயத்தில் முதலாழித்துவ வாதிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அகதிகள் விவகாரத்தில் ஒரு அரசியல் தீர்வும், அத்தீர்வை நியாயப்படுத்தக் கூடிய ஒரு தத்துவார்த்தப் பார்வையும் அவசியம். அதை உருவாக்குவதற்கான விவாதங்கள் அவசியமாகின்றன. தம்மை வஞ்சித்த முதலாழித்துவத்தையும் அதன் உலகளாவிய வலைப்பின்னலையும் தூக்கி எறியவும், அறுத்தெறியவும் அகதிகள் தயாராகவேணடும். அதுதான் அவர்களின் அகதிகள் நிலைக்கான ஒரே தீர்வாகும். உலக கம்யூனிஸ இயக்கம் இதற்கான பாதையை வகுப்பதில் நாட்டங்காட்டவேண்டும். உலகின் எந்தவொரு பகுதியிலும் பரதேசிகள் என்று எவரும் இருக்கக்கூடாது.


அகதிகளின் உருவாக்கலில் செழிப்பைக் காணும் அனைத்துத் தேசங்களும் ஒழிந்து போகட்டும்!அக்திகளற்ற ஒரு உலகம் உருவாகட்டும்!


Sunday, 19 May 2019

சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு


சமதர்ம குவிமைய ஐந்தியல்

கோட்பாடு-ஒரு பார்வை

மீழ் வலியுறுத்தல்

அனைத்துத் தெற்காசிய நாடுகளின் அரசியல் கட்டுமானங்களினதும் தேசியத் தன்மை சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இன வெறித்தன(Fanatic), சாதிய வெறித்தன, மொழி வெறித்தன, மத வெறித்தன அரசியலே இந் நாடுகளின் தேசிய அரசியலின் ஆதிக்க அரசியலாக காணப்படுகின்றன.
அரசியலரங்க மேலாண்மை:
பாக்கிஸ்தானில் உருது-இஸ்லாம் வெறித்தனம்(Fanatism); பங்காளதேஷில் இஸ்லாமிய வெறித்தனம்; இந்தியாவில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத வெறித்தனம்; இலங்கையில் சிங்கள-பௌத்த வெறித்தனம். கூடவே, தெற்காசிய நாடுகளில் சுனி-சியா வெறித்தனமும் கருக்கொண்டுள்ளது, ஆனால் இன்னமும் பிரசவமாகவில்லை. தெற்காசியா இச் சுனாமிக்குத் தப்பிக்கும் என்று கூறுவதற்கில்லை. பாக்கிஸ்தான், பங்காளதேஷ், மியன்மார் ஆகிய மத வெறித்தன அரசுகள், சுனி-சியா வெறித்தனத்தின் சிறந்த மருத்துவச்சியாகச் செயற்பட்டு வருகிறார்கள்.
அரச நிறுவன மேலாண்மை:
பாக்கிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளினது அரசுகளும், முற்றுமுழு இன-தேசிய வெறித்தன அரசுகளாக (Ethno-Nationalist Fanatic State) உருவெடுப்பதில் அபார வெற்றி பெற்றுள்ளன. புறத்திலிருந்தோ, மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ மேற்கொள்ளப்படும் எவ்வகைச் சீர்திருத்தங்களாலும் இவ் இனவியத்-தேசிய வெறித்தன அரசுகளை தேசிய அரசுகளாக (Nation States) மாற்றிவிட முடியாது. அக்காலம் மலையேறிவிட்டது. இவ்வகை சீர்திருத்தங்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் விலுக்கு இறைத்த நீர் போலவே முடியும். இந்த உண்மையை ஒடுக்கப்பட்ட இனவியத்-தேசிய குழுமங்களின் அரசியல் தளபதிகள் (Ethno-Nationalist Groups’ Political commanders)  புரிந்து கொண்டார்களோ இல்லையோ, அனைத்து வல்லரசுகளும் புரிந்து கொண்டு விட்டன.
இதனால், இம்மூன்று அரசுகளுடனும் நட்புக் கொள்வதில், அனைத்து வல்லரசுகளும் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முனைப்புக்காட்டி வருகின்றனர். மேற்கூறிய இனவியத்- தேசிய வெறித்தன அரசுகள், தமது நாடுகளின் தேசியங்களை மட்டும் அடக்கவில்லை; தத்தமது நாட்டின் தேசப்பற்றையும் தமது காலில் போட்டு மிதித்து, ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாகத் தம்மையும், தமது நாட்டையும் ஆக்கிக் கொண்டுள்ளன. இதனால், இவ் அரசுகள் நாட்டுப் பற்றாளர்களாலும் (Patriots), இனவியத்- தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளாலும் (Ethno-National Groups), தனித் தேச உருவாக்கத்தில்(Nation state) ஈடுபட்டுள்ள மக்கள் ஜனநாய்கப் போராளிகளாலும் அழிக்கப்படவேண்டிய அரசுகளாக மாறிவிட்டன. மிகப்பெரும் பிரயத்தனங்களுடன் “தேச அரசுகளாக” வேடமிடப்பட்டுள்ள இவ் இனவியத்--தேசிய அரசுகளை (Ethno-Nationalist State), ஜனநாயக வழிமுறைகளில் தேச அரசுகளாக (Nation State) மாற்றியமைத்தல் என்பது இனி என்றுமே சாத்தியமற்றது.
இதனால், இவ் இன-தேசிய வெறித்தன அரசுகளின் சாம்பல் மேட்டில் புதிய தேச அரசை அல்லது பல் தேச அரசுகளின் கூட்டை(Federation) உருவாக்குவதைத் தவிர மாற்று வழியெதுவும் இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. ஆனால், இது சாத்தியமாக வேண்டுமானால், நாட்டுப் பற்றாளர்களினதும் (Patriotic forces), இனவியத்-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளினதும் (Ethno-National Groups), தனித் தேச உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனநாயகப் போராளிகளினதும் ஒருங்கிணைவு ஒரு கட்டாய நிபந்தனையாகும்.
இனவியத்-தேசிய குழுமங்களைக் கண்டு கொள்ளாததால் நேபாளப் புரட்சி பாரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்தது; நாட்டுப் பற்றாளர்களையும், இனவியத்-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளையும், மக்கள் ஜனநாயகப் போராளிகளையும் கண்டுகொள்ளாததால் தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய இராணுவ அழிவையும் , அரசியல் பின்னடைவையும் சந்தித்தது, தமிழர்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்தனர்; பெரும் ஜனநாயக எழுச்சியை நடத்திக் காட்டிய மியான்மர், அங்குள்ள இனவியத்- தேசிய குழுமங்களின் எழுச்சியைக் கண்டு கொள்ளவில்லை. அதுபோல் இவ் இனவியத்- தேசிய குழுமங்கள் தமது நாட்டில் –மியான்மரில் நடைபெற்ற ஜனநாயக எழுச்சியைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் இன்று இவ் இரு எழுச்சிகளும் மிகப்பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. மியான்மர் எனும் இஸ்லாமிய அகதிகளை இன ஒழிப்புச் செயவதில் சிங்கள பௌத்த இனவாதிகளுக்குத் தாம் சளைத்தவர்களல்ல என்பதைக் காட்டிவிட்டது. இந்தியாவில் காஷ்மீர், மிசோராம், மணிப்பூர், ஜார்க்கண்ட்,  திரிபுரா போன்ற இனவியத்-தேசிய குழுமங்கள் தமது சமஸ்டி எழுச்சியையும் இந்திய தேசப்பற்றையும் பொருத்திச் செல்வதில் நிதானம் காட்டிவருவதால், அவர்கள் சமீபத்தில் பாரிய அழிவுகள் எதையும் சந்திக்காமல் அனைத்து வழிகளிலும் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான்வாழ் இனவியத்-தேசிய குழுமங்களினது நிலையும் இதுதான். இதுவரை கூறப்பட்ட நாடுகளின் அரசுகள் அனைத்தும் இனவியத்- தேசிய வெறித்தன அரசுகளேயாகும். (Ethno-Nationalist Fanatic State). தேசிய அரசுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாதவை.
இந்தியரசின் தனித்துவம்:
ஆனால் இந்தியரசு இவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் கட்டுமானத்தையும் தனது மேலாதிக்கத்தில் கொணர்வதில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத வெறித்தனம் (Brahmanetic–Hindutuva-Sanskrit Fanatism) இன்னமும் வெற்றி பெறவில்லை. வெற்றியின் முதல்படிநிலையையே  அடையமுடியாமல் இருக்கும் நிலையில், பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இனவியத்-தேசிய வெறித்தன அரசு எனும் (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) நிலையை அடைய முடியாது. இவ்வித வெற்றி இந்திய மண்ணில் சாத்தியப்படாதென்றே தோன்றுகிறது. ஏனெனில், இனவியத்-தேசிய வெறித்தன அரசின் முழுமையான ஆதிக்கம் எப்போது சாத்தியமாகுமானால், அரசின் இராணுவம் முழுமையாக அல்லது கிட்டத்தட்ட முழுமையாக, அல்லது கிட்டத்தட்ட முழுமையாக குறிப்பிட்ட அவ் இனவியத்-தேசியத்தின் கைகளில் குவியும் போது மாத்திரமே இது சாத்தியமாக்கும். அதற்கான வாய்ப்பு இந்தியாவில் இல்லை. குறிப்பாக, சீக்கியர்களும், நேபாளியர்களும், வங்காளிகளும், தமிழர்களும், கேரளாக்காரர்களும், வட கீழ் மாகாணத்தவர்களும் இந்திய இராணுவத்தில் இருக்கும் வரை இது சாத்தியமில்லாதது. 
 இந்தியாவின் தனித்துவத்துக்கான பிற
 காரணங்கள் :                                                            1) இந்தியாவில் துரிதமாகவும், பெரும் தடங்கல்கள் இன்றியும் வளர்ந்துவரும் ஏகாதிபத்திய-நிலபிரபுத்துவ- முதலாளித்துவக் கூட்டு தன்னுடன் கூடவே சாதியக் கட்டுமானத்தையும் வளர்த்து வருகிறது. இந்திய-அளவில் வளர்ந்துவரும் இச்சாதியக் கட்டுமானம் இந்தியா துண்டாடப்படுவதையும் அனுமதிக்காது, இந்திய அரசு பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) உருவாவதையும் அனுமதிக்காது.                                                                         2) இந்தியாவின் அனைத்துவகை மேட்டுக்குடியினரும்(குறிப்பாக- பார்ப்பனிய-பனியார்-மார்வாடிக் கூட்டும், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், திரிபுரா, அருணாச்சல் பிரதேஷ், டெல்லி ஆகிய மாநில மேட்டுக்குடிகளும் இந்தியாவின்  “மூத்தண்ணன்” கொள்கையையே அனைவரிலும் விட அதிகமாக விரும்புகின்றனர். இந்தியாவின் வல்லரசுக்கனவின் அடித்தளம் இவர்கள்தான். இவர்களுக்கு ஒரு பலமான மத்திய-அரசு வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதோரும் இதில் ஒன்றுப்பட்டே உள்ளனர். ஆனால் அவ்வித அரசு பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத கூட்டு இனவியத்-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) இருக்கவேண்டும் என்பது பார்ப்பனிய-பனியா கூட்டின் விருப்பம், அவ்விதம் இருக்கக் கூடாது என்பது பார்ப்பனியர்கள் அல்லாத சாதி-இந்துக்களின் விருப்பம். இவை இரண்டும், இணைவு காணமுடியாத நிரந்தரமான எதிரும் புதிருமான விருப்புகளாகும். ஆகையினால், இலங்கை போன்றோ, பாக்கிஸ்தான் போன்றோ முழும்மையானதொரு இராணுவசர்வாதிகார அரசாக பரிமாணம் பெறும் வாய்ப்புகள் இந்திய இனவியத்-தேசிய வெறித்தன அரசுக்கு இல்லை                                                3) மார்க்ஸியம், எவ்விதம் உலகத் தொழிலாளர்களினதும், பிற உழைக்கும் மக்களினதும், முரணற்ற மனித நேயர்களினதும், இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவில், இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத முறையில் இயற்கையை மனைத ஆழுமையின் கீழ் கொணர்வது என்று சிந்திக்கும் மனிதர்களினதும், வழிகாட்டும் தத்துவமாகத் திகழ்கிறதோ அது போல், பிராமணியந்தான் இந்திய மேட்டுக்குடிகளின் வழிகாட்டும் தத்துவமாகும். இம் மேட்டுக் குடிகளின் பார்ப்பனர் அல்லாதோர் பிரிவு, பிராமணியர்களின் பதவி மேலாண்மைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள், ஆனால் பிராமணியத்துக்கு எதிராக போராடுவதில்லை, என்றுமே போராடியதுமில்லை. பிராமணியர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிராமணியத்தைத் தமதாக்கிக் கொள்ளவே முயன்றுவருகிறார்கள். இது சாத்தியமில்லாதது. நிற பேதத்தையும் விட சாதிபேதம் மிகக் கெட்டியானது.
பிராமணர்கள் மாத்திரந்தான் பிராமணிஸ்டுகள் என்பதில்லை. இந்தியாவின் மேட்டுக்குடிகள் அனைவருமே (பட்டியலின மேட்டுக்குடிகள் உட்பட) பிராமணியர்கள் அல்லாத பிராமணிஸ்டுகளாக பரிணாமம் பெற முயற்சித்து வருகிறார்கள். பிராமணியத்தை ஒரு தத்துவமாக, ஒரு கருத்தோட்டமாக ஏற்றுக்கொண்ட சாதிய, வர்க்க மேட்டுக்குடிகள் அனைவரும் பிராமணிஸ்டுகளாகிவிடுவார்கள் என நம்புகிறார்கள். “திடகாத்திரமான” ஜாதிய இந்துக்களாக விளங்குவதற்கு இந்த மாற்றம் அவசியமாகின்றது. 
ஆனால், இந்த ஜாதி இந்துக்கள், பிராமணியயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயராயில்லை. பிராமணியத்தை சம்ஸ்கிருத நீக்கம் செய்ய முற்படுகிறார்கள். இது சாத்தியமற்றது. ஏனெனில் பார்பனியத்தின் தாய்மொழி சம்ஸ்கிருதமே. இங்குதான் மொழி முக்கியத்துவம் பெறுகிறது. பிராமணிய-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசின் உருவாக்கத்திற்கு மொழி பெரும் தடையாக அமைகிறது. (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மேட்டுக் குடிகள் மொழி விடயத்தில் ஒத்த கருத்துக்கு வரமுடியாமை, இன-தேசிய வெறித்தன அரச உருவாக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளது.
இந்திய பிராமணியரல்லா மேட்டுக்குடியின் முன் பின் முரணான கொள்கைதான் மத்திய மாநில அரசுக்களுக்கிடையேயான உறவுகளை சீர்செய்ய முடியாமல்  காலத்துக்குக் காலம் தெருச்சண்டைகளில்  ஈடுபட்டுவருவதற்கான காரணமாகும்.                                                                    4)  பிராமணி-இந்து-சம்ஸ்கிருத இனவாத-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மாறுவதற்கு தடையாக இருக்கும் மற்றோர் காரணி இந்தியாவின் மாநில சுயாட்சி முறையாகும். 
இதுவரை கூறிய காரணங்களால் தெற்காசியப் பிராந்தியம் பின்வரும் போராட்டங் களின் கொதிகலனாக மாறிவரும் நிலை தொடர்ந்து வளர்ந்து சென்ற வண்ணமே யுள்ளது.
Ø  நாடுகள் தமது சுதந்திரத்துக்காக நடத்தும் போராட்டங்கள்……நாட்டுப்பற்றியல்(Patriotism)
Ø  இனவாதத்-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராட்டங்களும்-சமஸ்டிஇயல் (Fedaralism), அவர்களின் தனித் தேச உருவாக்கத்திற்கான போராட்டங்களும்………தேசப்பற்றியல் (Nationalism)
Ø  மதசார்பின்மைக்கான போராட்டங்கள்……மதசார்பின்மையியல் (Secularism)
Ø  சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், பாரபட்சங்களுக்கும் எதிரான போராட்டம்……சாதிமறுப்பியல்(Anti-Casteism)
Ø  ஆண் பேரகங்கார ஒழிப்புப் போராட்டம். ……பாலின சமத்துவ இயல் Gender Equalitarianism
Ø  சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலுக்கும் சூறையாடல்களுக்கும் எதிராக உழைக்கும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டங்கள்……. வர்க்கவியல் அல்லது சமதர்மவியல்( Classism/Socialism)
ஆக எமது பிராந்தியத்தில் அறுவகைப் போராட்டங்களும், இவ் அறுவகை போராட்டங்கள் தொடர்பான அறுவகை இயல்களும் உள்ளன. இப் போராட்டங்களினதும், இவ் இயல்களினதும் இருத்தலும் அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளும் இயல்பானவையும் தவிர்க்க முடியாதனவையுமாகும். இவ் வேறுபாடுகள் பகைமையானதாக மாறாது, ஏனெனில், இவை அனைத்துக்கும் அடிப்படையாகத் திகழ்வது வர்க்க ஒடுக்குமுறையேயாகும். இன்னோர் வார்த்தையில் கூறினால் இவை அனைத்தும் வர்க்க ஒடுக்குமுறையை முறைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்தனி அடக்குமுறைகளாகும். ஆகவே இவ் அறுவகை அடக்குமுறைகளுக்கெதிரான அறுவகைப் போராட்டங்களும், அறுவகை இயல்களும் ஒன்றையொன்று தழுவிச் செல்லவேண்டியது கட்டாயமானதாகின்றது. தழுவிச் சென்றால் மட்டும் போதாது இவ் ஆறு இயல்களிலும் ஓரியல் அனைத்து இயல்களினது குவிமையமாக விளங்குகின்றது. அக் குவிமைய இயல் எது என்பதே கேள்வி. மூன்று சாத்தியப்பாடுகள் உண்டு. 1) சமதர்ம குவிமையம் 2) நாட்டுப்பற்றியல் குவிமையம் 3) தேசப்பற்றியல் அல்லது சமஸ்டியியல் குவிமையம்.
முன்சொன்ன அறுவகைப் போராட்டங்களும் முன்பின் முரணற்ற முறையில் முன்செல்ல வேண்டுமானால், சமதர்மமே குவிமைய இயலாக அமையவேண்டும். ஏனெனில். இவ் ஐவகை அடக்குமுறைகளும் வர்க்க ஒடுக்குமுறையை முறைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்தனி அடக்குமுறைகளாக இருப்பதே இதற்கான காரணமாகும். இதுதான் சமதர்ம மைய ஐந்தியல் கோட்பாடென முன்வைக்கப்படுகின்றது.
அனைத்துவகைப் போராளிகளும் சமதர்மந்தான் தமது குறிக்கோள் என்றே கூறிக்கொள்கிறார்கள். சொல்லளவில் சமதர்மத்தை நிராகரிப்பார் யாருமிலர். இது அவர்களின் மனதின் மொழியாக இருந்தால், இக்கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். அதேபோல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுவதுதான் தமது குறிக்கோள் என்று அனைத்துவகை இடதுசாரிகளும் கூறிக்கொள்கிறார்கள். மக்களின்  விடுதலையை நிராகரிக்கும் இடதுசாரியென யாருமிலர். இது அவர்களின் மனதில் இருந்துவரும் கூற்றாக இருந்தால், அவர்களுக்கேஉரிய இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் முன்முயற்சியாளர்களாகவும், எடுத்துக்காட்டாளர்களாகவும் திகழ வேண்டும்.
அறுவகைப் போராளிகளும் “சமதர்ம மைய ஐந்தியல் கோட்பாட்டை” முறையாகப் பின்பற்றினால்தான், தெற்காசியா எங்கணும் கோரத்தாண்டவம் ஆடித்திரியும் பண்பாட்டுத் தேசியவாதம் எனும் இனவாதத்-தேசிய வெறியாட்டத்தை Ethno-Nationalist Fanatism வெற்றிகொள்ளமுடியும். அணு ஆயுத பயன் பாட்டில் இருந்து எமது பிராந்தியத்தை மீட்கமுடியும்.







In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...