Wednesday 10 October 2018

வரலாற்று ஆய்வாளரா அல்லது அரசியல் விமர்சகரா?


வரலாற்று ஆய்வாளரா அல்லது அரசியல் விமர்சகரா?
முகநூல் பதிவுக்கான பின்னூட்டல்
    தி.மு.க தலைவர் கருணாநிதியை, அன்றைய கருணாநிதி இன்றைய கருணாநிதி என இரு கருணாநிதிகளாகப் பிரிப்பதில் நீங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறீர்கள். இன்றைய கருணாநிதியைப் பற்றிய அரசியல் முடிவை வைத்துக்கொண்டு இரு கருணாநிதிகளையும் முற்றாகவே நிராகரிக்கும்(தூக்கி எறியும்) போக்கை கண்டித்து வருகிறீர்கள். உங்களின் முயற்சி வரவேற்கத்தக்கது. வரலாற்றை வளர்த்து வருவதில் தமக்கு முன்னையவர்கள் செய்தது அனைத்துமே தவறு அல்லது துரோகம், தாம்தான் வரலாற்றின் ஏகபோக நாயகர்கள், தம்மால்தான் வரலாறு சரியான திசையில் எழுதப்படப்போகிறது எனும் பாசிஸக் கருத்துக்கு எதிரான உங்களின் நிலைப்பாடு வரவேற்க்கத்தக்கது.

       அரசியல் அரங்கிலோ, தத்துவார்த்த அரங்கிலோ செயற்பட்ட பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் (அல்லது தலைவர்கள்) (அனைவருமல்ல) தமது வாழ்நாளில், ஆரம்பகட்டத்தில் இருந்ததற்கு நேரெதிரான  தன்மை பெற்றவர்களாக மாறியுள்ளது இயல்பானது.
1-       ஹெஹல்: சமூகக் கட்டமைப்புப் பற்றிய தத்துவஞானத்தில் இணையற்றவரான கார்ல் மார்க்ஸை தனது சீடனாகக் கொண்டிருந்த ஹெஹல் பின்னர் ஹிட்லரினதும் முசோலியினதும் தத்துவார்த்த ஆசானாக மாறினார்.(அவரல்ல அவரின் கருத்துக்கள்).
2-  பிளக்நோவ்: ருஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் ஆரம்பகர்த்தாக்களிலில் பிரதானமானவராகவும், லெனினின் ஆசானாகவும் திகழ்ந்த பிளக்நோவ், பின்நாளில் லெனினால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விக் பிரிவிக்கு எதிரானவராக மாறினார். எதிர்ப்புரட்சியாளரானார்.
  ஹிட்லர், முசோலினி: இன்றுவரை உலகின் பிற்போக்குவாதிகளின் முன்உதாரணியாகவும், முற்போக்கு வாதிகளின் வெறுக்கத்தக்க தலைவர்களாகவும் இருக்கும் ஹிட்லரும் முசோலினியும் தமது ஆரம்பநாட்களில் இடதுசாரிக்கருத்துக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். முசோலினி, இத்தாலியில் இடதுசாரி அமைப்பொன்றின் பிரதானியாகவும் இருந்துள்ளார். முதலாம் உலக யுத்த அழிவிலிருந்து இத்தாலியை மீட்டெடுக்கும் முயற்சியில் இத்தாலிய இடதுசாரி அமைப்புடன் முன்னணியும் அமைத்துள்ளார். யுத்த அழிவுகளில் இருந்து ஜெர்மனியை மீட்டெடுப்பதில் ஹிட்லரின் பங்கு சாதாரணமானதல்ல.
4     கம்பூச்சிய மன்னர்: கம்பூச்சியாவை கம்யூனிஸ்டுகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக, கம்பூச்சிய கம்யூனிஸ்டுகளை அடக்கி அவர்களை காடுகளுக்குள் விரட்டையடித்த மன்னர், அமெரிக்க இராணுவச் சதியின் பின்னால், தானும் தலைமறைவாகி, தன்னால் தலைமறைவு நிலைக்குத் தள்ளப்பட்ட கம்யூனிஸ்டுகளுடன் முன்னணி அமைத்து, கம்பூச்சிய அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தைத் தொடர்ந்தார்.

5       ஜவர்லால் நேரு:  பிரித்தானிய காலனியலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, உலகளாவிய அளவில், பிரித்தானிய வல்லரசுடன் ஒரு நட்புறவை ஏற்படுத்துவதில் அதீத அக்கறை காட்டிவந்த காந்தியின் நம்பகரமான சீடராக இருந்தது நேருவேயாகும். காந்தி படேலையும் நிராகரித்தார், சுபாஷ் சந்திர போஷையும் நிராகரித்தார், இந்து முன்னணியையும் நிராகரித்தார். நேருவின் மேலேயே அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அதே நேரு சோவியத் யூனியனின் வளர்ச்சியின் பின், அமெரிக்க-ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிரான உலகளாவிய அரசியல் அரங்கமாகச் செயற்பட்ட நடுநிலைநாடுகளின் கூட்டமைப்பில் பிரதான பாத்திரம் ஏற்றுச் செயற்பட்டார். சீனா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளின் நெருக்கமான நண்பனாக மாறினார்.
6     வா வே சு ஐயர்: இன்று ஐயரின் 93ஆவது நினைவுநாளாகும். ஆரம்பத்தில் பிரித்தானியருக்கு எதிரான ஆயுதக் குளுக்களில் தீவிர பங்காளியாக இருந்தவர். சவாக்கர், வாஞ்சிநாதன் ஆகியோரின் நெருந்கிய நண்பர். காந்தியுடன் நேரடியாக முரண்பட்டவர். தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு நிறையவே பங்காற்றியுள்ளார். பின்நாளில் சனாதன தர்மியாக மாறினார்.
7-   திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர். ஜனாத விமுக்தி பெரமுனை எனும் “இடதுசாரி” சிங்கள பேரகங்காரவாத இயக்கத்தை தீவிரமாக எதிர்த்தவர்; இதற்காக தனது கணவரையே பறிகொடுத்தவர்; தமிழர்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்தவர்; தமிழீழத் தேசியக் கொடியையையும்-விடுதலைப் புலிகளின் கொடி-, ஸ்ரீ லங்காவின் தேசியக்கொடியையும் ஒரே மேசையில் பறக்கவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சம நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியவர். ஆனால், பின்நாளில் “சமாதானத்துக்கான யுத்தம்” எனும் பெயரில், இதற்குமுன்னர் இலங்கையில் நடந்திராதளவிற்கான பெரும் யுத்தத்தையே நடத்தியவர்.
  ஒருகாலத்தில் சமூக வளர்திசைப் பாத்திரமும், இன்னோர்காலத்தில் வளர்தடைப்பாத்திரமும் வகித்த ஏராளமான பிரமுகர்களைக் காணலாம். அது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஒரு வரலாற்று ஆய்வாளன் தனது ஆய்வில் பக்கச்சார்பின்மை கொண்டவனாக இருக்கவேண்டும். ஒரு பிரமுகரின் சரி பிளை இரண்டையும் வெளிக்கொணரவேண்டும். அதேபோல் ஒரு சமூக ஜனநாயக (பாரளுமன்ற ஜனநாயகத் தைக் கூறவில்லை) அரசியல்வாதி, தனக்கு முன்னால் ஏராளமானோர் ஆக்கிய வளர்திசைப் பங்களிப்புகளில் இருந்துதான் தனது பங்களிப்புத் தொடர்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்காக அவர்களுக்கு அவன் நன்றி சொல்லிக்கொள்ளவேண்டும். அதுதான் வரலாற்று மேடையிலான அறிவியல் கண்ணோட்டமாகும்.
    அதுமடுமல்ல, தலைவர்கள்/பிரமுகர்கள் பற்றிய மதிப்பிட்டில் இன்னொன்றும் கவனிக்கப் படவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பரிணாமங்கள் கொண்ட தலைவர்களும் உள்ளனர். கருணாநிதி அதில் ஒருவர். ஒரு இலக்கியவாதி என்ற முறையில் அவர் போற்றப்படவேண்டியவர். அவரின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருந்தாலும் இலக்கியப் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படவேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை எடுத்துக்கொண்டால், ஒரு அரசியல் தலைவன் என்ற முறையிலும், அரசிய-இராணுவ தளர்க்கத்தன் என்ற முறையிலும் அவரின் பங்களிப்புகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவல்ல. ஆனால், இராணுவ தளர்க்கத்தன் என்ற முறையில் அவர் ஓர் எடுத்துக்காட்டு. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்ததுபோன்றதோர் யுத்த பாடநூலையே உலகிற்கு முன்வைத்துள்ளார். வள்ர்திசைத் தன்மைகள்பெற்ற தனித்திறன்கள்பற்றி அக்கறை செலுத்து வதுவும் வரலாற்று மேடையிலான அறிவியல் கண்ணோட்டமாகும்.
   ஆனால் அல்லது அதேவேளை மீண்டும் அழுத்திக் கூறுகிறேன் ஆனால் அல்லது அதேவேளை இக்கண்ணோட்டம் சமகால அரசியல் மேடைக்கு எள்ளவும் பொருந்தாது. அங்குதான் ஆழிசெந்தில் நாதனாகிய உங்கள் கருத்துடன் நான் முரண்படுகிறேன். ஒரு அரசியல் பிரமுகர்/தலைவர், சமகால அரசியலில் என்ன பங்கு வகிக்கிறார், சமகால அரசியலில் அவர் என்ன விதமான ஆழுமையைச் செலுத்துகிறார் என்பதைப் பொறுத்தே அரசியல் மேடையிலான அவர்பற்றிய சமகால மதிப்பீடு அமையும். சமகால அரசியல் மேடையில் கருணாநிதி வகிக்கும் பாத்திரம் என்ன? இன்றைய கருணாநிதி யார்? அவரின் அல்லது அவரை முன்வைத்த இன்றைய அரசியல் நிலைப்பாடும், செயற்பாடுகளும் வளர்தடைத் தன்மைமிக்கதா? வளர் திசைத் தன்மைமிக்கதா? ஏற்றுக்கொள்ளக் கூடியதா? நிராகரிக்கப்படவேண்டியதா? அல்லது சமரசம் செய்யப்படவேண்டியதா?
விவாதத்தைத் தொடர்வோமா?
முகநூல் பதிவுக்கான பின்னூட்டல்

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...