Open Letter 1
இணையதள தோழர்கள், நண்பர்கள், இணைய அறிமுகங்கள் ஆகிய அனைவர்க்கும்
வணக்கம்!
அன்புடையீர்;
புதிய இணைய குழு அமைவு பற்றிய அறிவித்தல்.
பெயர்- தெற்காசிய வசந்தம். Southasian Socialist Democratic Students.-SSDS
அங்குராப்பண திகதி:- 21-ஜனவரி-2018 (தோழர் லெனின் பிறந்தநாள்)
குழுபற்றிய சுருக்கமான அறிமுகம்,:-
அமைப்பாளன் என்ற முறையில் 1998ற்கு பின்பான எனது பொது நிலைப்பாட்டை கீழ்கண்ட எனது இணைய தளங்களில் கண்டுகொள்ளலாம்.
**தெற்காசியப் புரட்சி
தொடர்பான எனது நிலைப்பாடு:
ஓரியல்மைய
ஐந்தியல் கோட்பாடு.
*** அச்சுவடிவில்
வெளிவந்த எனது நூல்கள்:-
**** அடிப்படைத் தகவல்கள்:
பெயர்:- தெற்காசிய சோஷலிஸ்ட் ஜனநாயக மாணக்கர்கள். Southasion Socialist
Democratic Students. செல்லப் பெயர்:- தெற்காசிய வசந்தம். https://vidiyalgowri.blogspot.com/2018/10/southasian-monsoon.html
Socialist பதத்தை தமிழ்படுத்தாதது ஏன்?
எனது
சிக்கல்களை முன்வைக்கிறேன், தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
ஏனெனில் Socialism எனும் ஆங்கில பதத்தைக் குறிப்பிட பயன்பாட் டிலுள்ள எத் தமிழ் பதத்துடனும் என்னால் இணங்கிப் போக முடியவில்லை. இன்று பயன்பாட்டிலுள்ள
தமிழ் பதங்கள் சமதர்மம், சமஉடமை, சம உரிமை,
சமநீதி என்பனவேயாகும். இவை தவறானவை.—
சோஷலிஸஜனநாயகம் எனச்
சொல்வது ஏன்? தெற்காசிய முதலாளித்துவம்
தனது முதிர்ச்சியை அடைந்து விட்டது. இதன் வளர்ச்சி ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்ரேலிய முதலாளித்துவத்தைப்
போன்றதல்ல.
https://vidiyalgowri.blogspot.com/2018/10/southasian-monsoon.html
கட்டுரையைத் தொடரவும்.
எதற்காகத் தெற்காசிய
பார்வை?
கட்டுரையைத் தொடரவும்.
எதற்காக அமைப்பின்
பெயர் மாணாக்கர்கள் என அமைகிறது? https://vidiyalgowri.blogspot.com/2018/10/southasian-monsoon.html கட்டுரையைத் தொடரவும்.
அமைப்பு வடிவமும் திட்டமும்:-
இணைவதற்கான ஆர்வத்துடன்,
கேட்டுக் கொள்பவர்களுக்கு மட்டுமே முழுமையான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். 28-நவம்பர்-2018இல் (தோழர் பிரெட்டிக் ஏங்கல்ஸ்
பிறந்த நாள்) இருந்து மின்-அஞ்ஞல் வாயிலாக மட்டுமே
அனுப்பிவைக்கப்படும்.
இணைய
விரும்புவர்கள் நேரடியாகவோ அல்லது
தெரிந்தவர்களுடாக தெரிந்தவர்களாகவோ, அல்லது வேறு விதமாமாகத் தெரிந்தவர்களாகவோ இருக்கவேண்டும். இவ்விதமிருந்தால் இத்திட்டம் அவர்கள் கொடுக்கும்
மின்-அஞ்சலுக்கே அனுப்பி வைக்கப்படும்.
குழு அமைவு:- 28-நவம்பர்-2018இல் அனுப்பப்பட்ட திட்டத்தை பெற்றுக்கொண்டவர்களுடனான
உரையாடல், 18-டிசம்பர்-2018_இல் (தோழர் ஸ்ராலின் பிறந்தநாள்)
ஆரம்பமாகும். உரையாடல், நேரிலோ அல்லது இணைய
வாயிலாகவோ நடத்தப்படும். உரையாடலேதவிர விவாதங்களல்ல.
இவ் உரையாடல்கள்,
4-ஜனவரி-2019 (இயற்பியல் விஞ்ஞானி ஐசன் நியூட்டன் பிறந்த நாள்),
வரை தொடரும்.
உறுப்பினர்
சேர்க்கை:- 8-ஜனவரி-2019 இல் இருந்து 18-ஜனவரி-2019 வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.
21-ஜனவரி-2019 இல் குழு அங்குராப்பணம் செய்யப்படும்.
கால
ஒழுங்கு சுருக்கமாக:-
1)
புதிய இணைய குழு பற்றிய அறிவித்தல். அனுப்பியது:
8/10/18
2)
குறிப்பான திட்டம் அனுப்பிவைக் கப்படும் திகதி:-
28/11/2018
3)
ஆர்வலர்களுடனான உரையால் :- 18/12/18 இருந்து
04/01/19 வரை.
4)
உறுப்பினர் சேர்க்கை நாட்கள் 8-01-2019 இருந்து 18-01-2019
வரை
5)
குழு அங்குராப்பணம்-21-01-2019
முடிவாக:-
சிரமம் தரக்கூடாது என்பதற்காகத்தான் அனைத்து விடயங்களையும் URL இல் தந்துள்ளேன். ஆர்வமிருந்தால் போய்ப் பார்க்கலாம்,
தொடரலாம். கசடுகளைக் கற்காமல், எதையும் கசடறக் கற்று முடிவுக்கு வருவதே சிறந்தது.
வருவது யார்வாயால் என்பதில் கவனம் செலுத்தாமல், முன்வைக்கப்பட்ட பொருளின்
மெய்ப்பொருள் காணமுற்பட்டு முடிவெடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
அரிநேசரத்தினம் கௌரிகாந்தன் 16/10/2018
No comments:
Post a Comment