Thursday, 11 October 2018

எதற்காக இந்த கப்பல் பரிசு?


எதற்காக இந்த கப்பல் பரிசு?


      எல்லை தாண்டும் மீனவர்களும்இலசுமணன் கோட்டைத் தாண்டும் ஸ்ரீ லங்கா அரசும்----2

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டுவதைத் தடுப்பதுவும், மீனவர்களின் எல்லைதாண்டலைக் காரணங்காட்டி ஸ்ரீ லங்கா அரசுஇலட்சுமணன் கோட்டைத் தாண்டுவதைத் தடுப்பதுவும் இந்திய மத்திய அரசினது கடமையேயாகும். அதற்கான அரசியல் நிர்ப்பந்ததை ஏற்படுத்துவதற்க்கு மாநில அரசு கடமைப்பட்டதாகும். இவை இரண்டுமே முறையாக நடைபெறுவதாகத் தெரியவில்லை. இதற்கான காரணங்கள் பற்றி பல்வேறுவிதமான புரிதல்கள் நிலவுகின்றன. அவையாவன:-

) இந்தியரசின் இயலாமை அல்லது பொறுப்பற்ற தன்மை.


) ஸ்ரீ லங்கா அரசுக்கும் இந்தியரசுக்கும் இடையேயான இணக்கப்போக்கு.


-1) தமிழர்களின் தேச உரிமைகளை (Nation hood) மறுப்பதிலான இணக்கப்போக்கு.


-2) பாரம்பரிய மீனவர்களையும் மீன்பிடியையும் விழிம்புநிலைக்கு உள்ளாக்குவதிலான இணக்கப்போக்கு.


) இரு அரசுகளுக்கும் இடையேயான ஒத்துப்போகாத் தன்மை.


-1) சீன-ஸ்ரீ லங்கா நட்பு.


-2) அமெரிக்க-இலங்கை நட்பு.


) இலங்கைக்கும் இந்திய அரசுக்கும் இடையே நிலவும் பகைமைத்தன்மை.


-1) இலங்கையின் இறையாண்மை தொடர்பாக.


-2) இலங்கையின் பன்முகத்தன்மை தொடர்பாக.



ஒவ்வொன்றாக நோக்குவோம்.



        ) இந்தியரசின் இயலாமை அல்லது பொறுப்பற்ற தன்மை.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கணிப்பீடாகும். இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரச வல்லரசாக வளர்ப்பதில் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் உட்பட இந்தியாவின் அனைத்து அதிகாரக் கட்டுமானங்களும் மிகவும் சுறுசுறுப்பாகவே உள்ளன. இக்கைங்கரியத்தை நிறைவேறுவதில் இந்திய காப்ரட்களின் ஆளுமையில் எந்தக் குறைப்படும் தென்படவில்லை. தனது வல்லரசுத்தனத்தை செலுத்த முடியாதளவிற்கான இயலாமை என்பது ஒரு அகநிலைப் பிரச்சனையேயாகும். அவ்விதமான ஒரு அகநிலையில் இந்திய அரசிய-பொருளாதார கட்டுமானம் இல்லை. மாறாக, சாம, தான, பேத, தண்டம் எனும் சாணக்கியத்தனத்தை பிரயோகிப்பதில் இந்தியரசு முன்யோசனையுடனேயே செயல் படுகிறது என்றே சொல்லலாம். இலங்கைக்கும் இந்தியரசுக்கும் இடையேயான பகைமைத்தன்மை எனும் பகுதியில் இதை விளங்கிக்கொள்வோம்.

        -1) தமிழர்களின் தேச உரிமைகளை (Nation hood) மறுப்பதிலான இணக்கப்போக்கு.
இவ்வித இணக்கப்போக்குத்தான் எல்லைதாண்டும் மீனவர்கள் துன்பப்படுவதற்கான காரணம் எனச் சந்தேகம் எழுவது நியாயமானதே. ஆனால் அவ்விதம் இல்லை என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் உண்டு. 1950களில் இருந்து இன்று வரையான காலம்வரை, தமிழ்நாட்டின் தேச உரிமைகள் மறுக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு ஒரு வீரியம் குறைந்த எதிரோட்டமாகவே உள்ளது. அதுவும் இவ்வாதங்கம் காலத்துக்குக்காலம் எழுவதும், புஷ்வாணமாகிப் போவதும், நிலைதடுமாறித் தள்ளாடுவதுமாகவே தொடர்ந்து இருந்துவருகின்றது. அதே போது இந்தியத் தேசியத்துடன் தன்னார்வத்துடன் சங்கமிக்கும் போக்கே வீரியமிக்கதாகக் காணப்படுகிறது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தேசியம் இன உரக்கக்கூறுவோர்களில் ஏகப்பெரும்பான்மையினர் உண்மையிலேயே தமிழ்நாட்டுத் தேசியத்திற்க்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே உள்ளனர். ஆனால், இப் புஷ்வாணங்களை நிஜம் எனக்காட்டி இந்தியத் தேசியத்துடன் சரணடைவதில் முன்னேறிவரும் தமிழ் கட்சிகள் தமது வாக்குவங்கிகளை பெருக்கிக் கொள்வது மட்டும் தவறாமல் நடந்து வருகின்றது. ஆகையினால் தமிழ்நாட்டுத் தேசியம் பற்றி அச்சம் கொள்ளவேண்டிய நிலையில் இந்தியத்தேசியம் இல்லை. உண்மையிலேயே அவர்கள் அச்சம் கொள்ளவும் இல்லை. ஆகவே இதுஒரு காரணமல்ல

           தமிழீழத் தேசியம் தமிழ்நாட்டில் ஒரு பெரும் தேசியத்தீயை ஏற்படுத்திவிடக்கூடுமோ என்றோர் அச்சம் இந்தியத்தேசியத்திற்க்கு ஏற்படக்குடும். இவ்வச்சம் தமிழ்நாட்டு மேட்டுக்குடியினருக்கும் உண்டு. ஆனால் 1983இல் இருந்து முள்ளிவாய்க்கால் அழிவுவரையான(2009) காலம் வரையான தமிழ்நாட்டின் எத்ரிவினையானது இது அநாவசியமான அச்சம் என்பதை நிரூபித்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் தமிழீழப் போராட்டத்துக்கு தம்மாலான ஒத்துழைப்புகளை வளங்கத் தயாராய் உள்ளார்கள் என்பது அன்றிலிருந்து இன்றுவரை உண்மையாக உள்ளது. அவர்களில் சிலர் தமிழீழப்போராளிகளுடன் இணைந்து போராடவருமளவிற்கு சென்றுள்ளார்கள். ஆனால் இது தமிழ்நாட்டுத் தேசிய இயக்கத்தை இங்கு உருவாக்கவில்லை. இந்தியத் தேசியத்துடனான சங்கமம் சமவுரிமை பெற்றதாக அமையவேண்டும் என்பதே இந்தியத் தமிழர்களின் பிரதான போக்காக உள்ளது. ஆகவே தமிழர்களை அடக்குவதற்காக இரு அரசுகளும் சேர்ந்து செயல்படுகின்றன என்று சந்தேகப்படுவது தப்பானது.

          -2) பாரம்பரிய மீனவர்களையும் மீன்பிடியையும் விழிம்புநிலைக்கு உள்ளாக்குவதிலான இணக்கப்போக்கு.

         -2-1) கடற்பரப்பிலான மீன்பிடி உரிமையை அந்நியர்களின் ஏகபோகமாக்குதல்.
இரு நாட்டு அரசுகளும் இதுவிடயத்தில் ஒத்த கருத்துடனேயே செயல்படுகின்றன. தத்தமது எல்லைக்குள் அமையும் கடற்பரப்பும், கடலடிவளங்களை எடுத்துக்கொள்வதற்கு மாத்திரம்(Exclusively Economic Zone) அனுமதிக்கப்பட்ட சர்வதேச கடற்பரப்பும் பாரிய மீன்பிடி முதலீட்டுடன் செயற்படும் பெரும் அந்நிய கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன. ஜப்பான் , சீனா போன்ற நாடுகளும் இதில் உள்ளடங்கும். இவை நவீன யந்திர, தொழில் நுட்ப செறிவு(intencive), மற்றும் மூலதனச் செறிவு முதலீடுகளாகும். ஆகவே இவ்வகை மீன்பிடித்தொழிலானது உடல் உழைப்புச் செறிவு பாரம்பரிய மீனவர்களை செல்லாக் காசாக்கிவிடுகின்றது. ஆகவே வேண்டாப்பொருளாகிவிட்ட இவர்களை கடற்பரப்பில் இருந்தே துரத்துவது அவசியமானதாகின்றது. மீனவர் ஒழிப்பு ஒன்று காலத்தின் கட்டாயமாகின்றது. இந்தியரசு திட்டமிட்டுக் கொடுக்க இலங்கையரசு அமூல்படுத்துகிறது. இந்தியரசு செயலற்ற அரசில்லை என்பது புரிகிறதுதானே. அதேபோல் மீனவர்களை எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் தமிழ்நாட்டுத் தமிழ்த்தேசியம் மூர்க்கக்குணம் கொள்ளவேமாட்டாது என்பதுவும் இந்தியத் தேசியத்திற்க்குத் தெரிந்துள்ளது. அவ்விதமிருக்க எதற்காகத் தமிழ்நாட்டுத் தமிழ்தேசியத்தையிட்டு இந்தியத் தேசியம் அச்சப்படவேண்டும்?

        -2-2) கடற்கரைகளில் இருந்து மீனவர்களைத் துரத்தியடித்தல்.
எண்ணிக்கையளவிலும், குணாம்சளவிலும் மிகத் துரிதமாக வளர்ந்துவரும் சுற்றுலாத்துறை, மாற்று மினுற்பத்தித்துறை, அணு உலைத்துறை, இறால், பாசி போன்ற கடல் உயிர் பண்ணைக்கட்டுமானங்கள், கப்பல்கட்டுமானத்துறை, கடல்மார்க்க போக்குவரத்துத் துறை, கடற்படைக் கட்டுமானங்கள், கடல் கண்காணிபுவலயங்கள் ஆகியற்றிற்க்கு பாதுகாப்பான, விரிந்து பரந்த, அமைதியான தூங்குநிலை கடற்பரப்புகள் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. வளர்ந்துவரும் முதலாளித்துவக் கட்டுமானத்துக்கு கடற்கரை நிலப்பசி எடுத்துள்ளது. இந்திய, இலங்கை மேட்டுக்குடிகள் இவர்களின் பசிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர வறிய நடுத்தர மீனவர்களின் வருமான பசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் என்னென்ன வளிகளிலெல்லாம் முடியுமோ அவ்வவ்ளிகளில் மீனவர்கள் கடற்கரையைவிட்டுத் துரத்தப்பட்டுவருகிறார்கள்


இந்திய மீனவர்களின் எல்லைதாண்டும் பிரச்சனையை ஸ்ரீ லங்கா அரசு வரம்பு மீறிக் கையாள்வதற்கான காரணங்களில் இதும் ஒன்று என்று நிச்சயமாகக் கூறலாம். மஹிந்த தமிழின அழிப்பை அச்சமின்றி கையாண்டது போல் றணில் விக்கிரமசிங்ஹ மீனவர் அழிப்பை அச்சமின்றிக் கையாள்வதற்காக இந்திய அரசு அளித்த பரிசுதான் சமீபத்திய போர்க்கப்பலாகும்.
03/09/2015 புதன் கிழமை

       கச்சதிவு மீட்பு எல்லை தாண்டுவதற்க்குத் தீர்வாகுமா?

Top of Form
                                                                                                                                                                              -தொடரும்.

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...