“இரு தேசங்கள் ஒரு நாடு” எனும் கோட்பாடு தேசிய
வலது விலகள்களின்(deviationists) சரணடைவுக் கோட்பாடா?
நான்
அறிந்தவரை ”ஒரு நாடு இரு தேசங்கள்” எனும் அரசியல்
முழக்கம் பாக்கிஸ்தானின் தந்தை என அழைக்கப்படும் ஜின்னா அவர்களால் முன்வைக்கப்பட்டதாகும்.
இது இந்திய நாட்டின் மதவழிக் குளுமங்களிடையெ சமத்துவத்தையும்,முகப்பாடையும் பேணுவதற்கான
ஒரு அரசியல் கோட்பாடாகும். இம்முழக்கம் முன்வைக்கப்பட்ட காலகட்டத்தில் பிரித்தானிய
காலனியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா என்றோர் நாடு இருந்தது, இவர்களால் நடத்தப்பட்ட
ஒரு காலனியல் அரசும் இருந்தது. ஜின்னா ஆரம்பத்தில் தனிப் பூகோளப்பரப்பையும் தனியான
அரசையும் கொண்ட இஸ்லாமியத் தேசத்தைக் கோரவில்லை. இந்திய நாடெங்கணும் பரந்துவாழும் இஸ்லாமியர்களைத்
தனித் தேசியமாகவும், இந்துக்களை மற்றோர் தேசியமாகவும் கருதினார். இவ்விரு தேசியங்களும்
சமத்துவ உரிமையின் அடிப்படையில் இணைந்து இந்திய நாட்டை அமைக்கவேண்டும் என்பதே அவரின்
கோட்பாடாகும்.
இதே
காலப்பகுதியில் “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் முழக்கமும் வலுப்பெற்று வளர்ந்து வந்தது.
சவாக்கர் அவர்களால் முனவைக்கப்பட்ட இந்த இந்துத் தேசியக் கோட்பாடுதான் எதிர்கால இந்தியாவின்
முதன்மைக் கோட்பாடாக வளரவுள்ளது என்பதற்கான அரசியல் மற்றும் சமூக ஆதாரங்கள் மிகத் தெழிவாகத்
தெரிய ஆரம்பித்தன. இதனால், தோன்றவிருக்கும் “சுதந்திர” இந்தியா மதசார்பின்மை, மதநல்லிணக்கமின்மை,
சதுர்வர்ண சாதியக்கட்டுமானத்தின் மீழ் உருவாக்கம் ஆகிய முப்பெரும் பிசாசுகளின் விளைநிலமாகத்தான்
இருக்கப்போகிறது என்பதுதான் ஜின்னாவின் புரிந்து கொள்ளலாக இருந்ததுபோதும். இதன் எதிர்
விளைவு ஜின்னாவை தனியான இஸ்லாமிய தேசம் என்ற நிலைக்கு கொண்டுபோய்ச் சேர்த்தது. இந்து
தேசத்திற்க்கு எதிரான இஸ்லாமியர்களின்ன் எதிர்ப்பு கொளுந்து விட்டெரியத் தொடங்கியது.
பிரித்தானிய காலனியல்வாதிகள் இந்நெருப்புக்கு எண்ணை ஊற்றினார்கள். இஸ்லாமியரின் அகநிலையும்
இதற்கான காரணமாக இருந்தது. இஸ்லாமியர்களிடையே இயல்பாகவே காணப்பட்ட மத சகிப்புத்தன்மை
யின்மை, மத மைய சமூகமற்றும் அரசியல் சிந்தனைப்போக்கு, சதுர்வர்ண சாதிய எதிர்ப்புணர்வு,
இந்தியாவின் ஆட்சியை இழந்ததால் ஏற்ப்பட்ட மனவெதும்பல்கள் ஆகியவையே அவ் அகநிலைகளாகும்.
முடிவு இந்தியா என்ற நாடு இரு நாடுகளாகின. இரு தேசங்களுக்கு பொதுவானதாக இருந்த இந்தியா
என்ற நாடு இல்லாமல் போனது. இந்நாட்டின் அரசு இல்லாமல் போனது. அவை இருந்த இடத்தில் இந்திய
அரசு, இஸ்லாமிய அரசு என இரு அரசுகள் உருவாகின.
இரு
மதவாதத் தேசங்களின் உருவாக்கத்தினால், இந்துத் தேசத்துள் வாழும் இஸ்லாமியர்கள், பிறமத்ததினர்,
தலித்துக்கள், பழங்குடியினர் ஆகியோர் தமது தேசத் தகுதியை (Nation Hood) இழந்தார்கள்,
அதேபோல் இஸ்லாமியத் தேசத்துள் வாழும் இந்துக்கள், பிறமதத்தினர், பழங்குடியினர் ஆகியோர்
தமது தேசத் தகுதியை இழந்தார்கள்.
இதேகாலப்பகுதியில்
வாழ்ந்த அம்பேத்கரும் இந்து தேசியத்தின் வளர்ச்சியை மிகத் துணிச்சலாக எதிர்த்தார்.
அதுதான் ஆட்சிபீடம் ஏறப்போகிறது என்பதை அவர் மிகத்துல்லியமாகப் புரிந்துகொண்டார். ஆனாலும்
தலித்தியம் கோரும் தலிஸ்தித்தான் தனிநாட்டுக் கோரிக்கையை இன்றுவரை முன்வைக்கவில்லை.
இந்திய நாடெங்கணும் வாழும் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதே தலித்தியத்தின்
குறிக்கோளாகும். இந்தியாவை பார்ப்பனிய நீக்கம் செய்வதற்காகத்தான் போராடுகிறார்களேதவிர
இந்தியத் தேசியப்பரப்பில் மற்றோர் நாட்டை உருவாக்கப் போராடவில்லை.
எவ்விதமோ
“ஒரு நாடு இரு தேசங்கள்” எனும் கோட்பாட்டின் இன்றைய நிலை இவ்விதமாகத்தான் உள்ளது. பல
தேசங்களைக் கொண்ட ஒரு நாடு மறைந்து விட்டது. பல தேசங்களைக் கொண்ட மூன்று நாடுகள் உருவாகிவிட்டன.
இருந்தும், பல தேசியங்களும், பல தேசிய இனங்களும், முழுமையான சமூக மற்றும் அரசியல் சமத்துவம்
அற்ற நிலையில் வாழும் தலித், பழங்குடியைன மற்றும்
மிகப்பின்தங்கிய சாதிப்பிரிவினரும் வாழும் இந்திய நாட்டில், ஒரு நாடு என்ற முறையிலான
வளர்திசை அரசியல் கட்டுமானமும், ஒரு நாடு என்ற முறையிலான வளர்திசை அரசக் கட்டுமானமும்,
ஒரு நாடு என்ற முறையிலான வளர்திசை சிவில் சமூகக்
கட்டுமானமும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நாடு என்ற முறையிலான வளர்திசை பண்பாட்டுக்
கட்டுமானமும் இன்னமும் இல்லாது போய்விடவில்லை. வளர் தடைத் தன்மைகொண்ட மதவாதக் கட்டுமானங்களுக்கு
எதிராக அவை சக்தி மிக்க போராட்டங்களை ஒன்றுமாறி ஒன்றாக காலைடைவெளி இல்லாமல் நடத்திக்கொண்டே
இருக்கின்றன. இவ்விதமான போராட்டங்களின் ஊடாக மேற்கூறிய கட்டுமானங்கள் படிப்படியாக வளர்ந்தும்
வருகின்றன. இவ் வளர்ச்சியைத் தடுப்பார் எவரும் இலர்.
ஆனால்
இலங்கையின் நிலையோ இதற்கு எதிர்மாறானதாகவே உள்ளது. இலங்கை நாட்டில், ஒரு நாடு என்ற
முறையிலான வளர்திசை அரசியல் கட்டுமானமும், ஒரு நாடு என்ற முறையிலான வளர்திசை அரசக்
கட்டுமானமும், ஒரு நாடு என்ற முறையிலான வளர்திசை
சிவில் சமூகக் கட்டுமானமும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நாடு என்ற முறையிலான வளர்திசை
பண்பாட்டுக் கட்டுமானமும் நிலவுகிறது என்பதைத் துணிந்து கூறமுடியாமல் உள்ளது. இவை இறந்து
வருகின்றன என்பதை காணக்கூடியதாய் உள்ளது. சிங்ஹள-பௌத்த, சைவ-வேளாளா, இஸ்லாமிய மதத்
தேசிய மேலாதிக்க வெறி(supremacist) த் தேசியவாதிகள் இலங்கையின் நாட்டுப்பற்றை கண்கொண்டும்
பார்க்கப்படக்கூடாத தீட்டாக கருதிச் செயல்படும் இன்றைய இலங்கையில் ”இரு தேசம் ஒரு நாடு”
எனும் கோரிக்கை செல்லுபடியாகுமா? இது இல்லாவிடத்துக்கு வழிகாட்டுவதாகாதா? போன்ற கேள்விகள்
எழுகின்றன? பதில் காணமுற்படுவோம்.
தொடர்-
2
நாடு
என்று கூறக்கூடிய கட்டுமானங்களில் பிரதானமானவை
அனைத்துமே சிதைவடைந்துள்ள நிலையில் “ இரு தேசம் ஒரு நாடு” எனும் கோட்பாடு ஒரு வலதுசாரி
விலகலா” எனும் கட்டுரையின் இரண்டாவது தொடர்.
முதல்
பகுதியில் இக்கோட்பாட்டின் தெற்காசிய மூலம் இந்தியா என்பதையும், அவ் இந்தியாவில் நாடு
என்ற கட்டுமானம் இருந்த இடத்தில் இந்து தேசம், இஸ்லாமிய தேசம் இனும் இரு கட்டுமானங்கள்,
தோன்றியிருப்பதையும், இருந்த போதும் இந்திய நாடு எனும் கட்டுமானம் இன்னமும் பலம்பெற்ற
ஒரு எதிரோட்டமாக இருந்து வருகிறது என்பதையும், அதே வேளை இலங்கையெனும் நாட்டுக்கான கட்டுமானம்
இருந்த இடத்தில் சிங்ஹள-பௌத்த தேசம் எனும் கட்டுமானம் ஆளக் காலூன்றி, முழு இலன்கையையும்
தனது சிறைக்கூடமாக்கியுள்ளதையும், இதனால் இலங்கை நாடு எனும் கட்டுமானங்களில் பிரதானமானவை
அனைத்துமே சிதைவடைந்து காணப்படுவதையும் சென்ற தொடரில் நோக்கினோம். இன்றைய இலங்கையில்
”இரு தேசம் ஒரு நாடு” எனும் கோரிக்கை செல்லுபடியாகுமா? இது இல்லாவிடத்துக்கு வழிகாட்டுவதாகாதா?
போன்ற கேள்விகள் எழுகின்றன? பதில் காணமுற்படுவோம். என நிறுத்தினோம்.
தொடர்
2 ற்குத் தொடர்வோம். விவாதத்திற்குரிய இக்கோட்பாட்டின்
முன்வைப்பில் ஒரு குளப்பம் நிலவுகிறது. இக்கோட்பாட்டை “இரு தேசம் ஒரு நாடு” என அழைப்பதா
அல்லது “ஒரு நாடு இரு தேசம்” என அழைப்பதா என்பதுவே அக்குளப்பமாகும். இவை இரண்டும் ஒரே
கோட்பாட்டைக் குறிப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுண்டு.
இரண்டும் வெவ்வேறு கோட்பாடுகள் என்பதே எனது கருத்தாகும்.
“ஒரு
நாடு இரு தேசம்” என்பது நாட்டை முதன்மைப்படுத்துகிறது. நாட்டின் நலனில் நின்றே தேசத்தின்
நலனை அணுகுகிறது. இங்கு நாட்டுப் பற்றே (patriotism) முதன்மைப்படுத்தப் பட்டுகிறது. தேசியப்பற்று
(nationalism) அதற்குக் கீழ்படுத்தப்படுகிறது. “ஒரு நாடு
இரு தேசம்” என்றால் நாட்டுப்பற்றே உயர்ந்ததாகின்றது. இலங்கையின் பிரத்தியேக நிலையை
கணக்கில் கொண்டால், நாடு என்பது இலங்கை, தேசம் என்பது ஸ்ரீ லங்காவும் தமிழீழமுமாகும்.
இதன் படி “ஒரு நாடு இரு தேசம்” கோட்பாட்டாளரகள் தமது நாடு தொடர்பான சிந்தனையுள்ளவர்களாக
(இது முதன்மையானது) இருக்கும் அதேவேளை தமது தேசம் தொடர்பான சிந்தனையுள்ள வர்களாகவும்
இருக்கவேண்டும்.
அதே
நேரத்தில் இதற்கு எதிர்மாறாக, “இரு தேசம் ஒரு நாடு” எனும் கொட்பாடு, இரு தேசங்களின்
நலன்களை நாட்டு நலனுக்கு கீட்பட்டுத்துகின்றது என்று கூறலாமா? இல்லை, இல்லவேயில்லை.
நாட்டு நலனில் அக்கறையுள்ள அரசியல் உணர்வாளர் அந்நாட்டில் உள்ள அனைத்து தேச, இன, தேசிய
இன, மத, சாதிய, பாலினப் பிரிவுகளினதும் நலநில் அக்கறையுள்ளவராக இருப்பார். இவ் அனைத்து
நலன்களினதும் கூட்டுத்தொகுப்புத்தான் நாட்டுநலனாகும். ஆனால், இலங்கையில் வாழும் தேசியப்பற்றாளன் ஒன்றில்
சிங்ஹள-பௌத்த தேசியப் பற்றாளனாக இருப்பான் அல்லது தமிழீழத் தேசியப்பற்றாளனாகத்தான்
இருப்பான். நாட்டுப்பற்றை நிராகரித்த தேசியப் பற்றாளன் தனது தேசத்தைத்தவிர மற்றைய தேசத்தை
வெறுப்பவனாகவே இருப்பான். ஒன்றில் தமிழீழ வெறுப்பாளனாக இருப்பான் அல்லது சிங்ஹள பௌத்த
தேச(ஸ்ரீ லங்கா) வெறுப்பாளனாக இருப்பான். ஆகவே அவன் இரு தேச நலன்களையும் நாட்டு நலனுக்கு
உட்படுத்தவில்லை மாறாக தனது சொந்த தேச நலனை மட்டுமே முதன்மைப்படுத்துபவனாகும்.
சில
எடுத்துக்காட்டுகள்:
1) இஸ்லாமியர்களை துன்புறுத்துவதுவும் அவர்களின்
தேசியத்தைப் (Nation Hood) தமது தேச
நலனுக்கு அவசியமானதானால் அதச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் இரு தேசியங்களும் எந்த
தயக்கமும் காட்டுவதில்லை.
2 தமது தேச நலனுக்கு அவசியப்படுமானால் இலங்கை
நாட்டு நலனுக்கு எதிரான எந்த அந்நிய சக்திகளுடனும் இணைவதில் இலங்கையின் இரு தேசியங்களும்
எந்த தயக்கமும் காட்டுவதில்லை. நாட்டின் வளர்ச்சியில் நாட்டமுள்ள ஊடக ஜனநாயகத்தின்
கழுத்தை நெரிப்பது தமது தேசிய நலனுக்கு அவசியமானதானால் அதைச் செய்வதில் இலங்கையின்
இரு தேசியங்களும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.
4 மரபுவழி கொத்தடிமைக் கூலிகளை நவீன பண்ணையடிமைக்
கூலிகளாக மாற்றுவது (மலையகத் தொழிலாளர்களை) தமது தேசிய நலனுக்கு அவசியமானதானால் அதைச்
செவதற்க்கு இலங்கையின் இரு தேசியங்களும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.
5 யுத்த விதிமுறை மீறல்கள் செய்வது (குறிப்பாக
சரணடைந்த துருப்புக்களை படுகொலை செய்தல்), மக்களை தொடர்ந்து திகில் நிலையில் வைத்திருப்பது
தமது தேசிய நலனுக்கு அவசியமானதானால் அதைச் செவதற்க்கு இலங்கையின் இரு தேசியங்களும்
எந்த தயக்கமும் காட்டுவதில்லை.
ஆகவே “இரு தேசம் ஒரு நாடு” எனும் கோட்பாடு,
சிங்ஹள-பௌத்த மேலாண்மைவாதிகளின்(supremacist)
“ஒரு தேசம் ஒரு நாடு” எனும் கோட்பாட்டின் மீது அணியப்பட்ட பட்டாடையேயாகும். அதாவது
ஜனநாயக வேடம் தரித்த ஒரு supremacist
கோட்பாடே “இரு தேசம் ஒரு நாடு” ஆகும்.
அடுத்த பக்கத்தில், “ஒரு நாடு இரு தேசம்”
எனும் கோட்பாடு ஜனநாயகத் தன்மைமிக்க முற்போக்குக் கோட்பாடாகும். இதுதான் இலங்கையில்
காணப்படும் தேசிய, தேசிய இன, மத, சமூகக் குளுமங்கள் அனைத்தும் ஒருவரோடு ஒருவர் இசைபடவும்,
பகிர்ந்துண்டும் வாழக்கூடிய ஒரு சமூகக் கட்டுமானத்தை ஏற்படுத்தக் கூடிய வலுவான கோட்பாடு
இதுவேயாகும்.
இலங்கையில் ”இரு தேசம் ஒரு நாடு” எனும் கோரிக்கை
செல்லுபடியாகுமா? இது இல்லாவிடத்துக்கு வழிகாட்டுவதாகாதா? போன்ற கேள்விகள் எழுகின்றன?
இது இல்லாவிடத்துக்கு வழிகாட்டுவதாக அமையவில்லை. பொல்லாத இடத்துக்கு வழிகாட்டுவதாகவே
அமையும். தமிழீழத்திற்கு இன்னோர் மஹிந்த-கோத்தபாயா கூட்டு தேவையா?
“இரு தேசம் ஒரு நாடு”, “ஒரு நாடு இரு தேசம்”
எனும் கோட்பாடுகள் பற்றிய விவாதத்திற்கு மீளவும் ஒரு தடவை வருவோம். தற்போது, இலங்கை
உடபட தெற்காசிய வரலாற்றுப் பின்னணியில் “நாடு”, “தேசம்” என்பனவற்றின் அரசியல் உள்ளடக்கம்
என்ன என்பதை நோக்குவோம். அப்போதுதான் “ஒரு நாடு இரு தேசம்” எனும் கோட்பாட்டின் அடிப்படையிலான
வேலைத்திட்டத்தை வகுப்பது எனபது பற்றிய விவாதத்துள் செல்லமுடியும்.
No comments:
Post a Comment