Sunday, 21 October 2018

அனைத்துலக நிலைமையால் இந்தியாவைவிட்டு வெளியேறவேண்டிய நிலையில் இருந்த பிரித்தானியா.


      பொதுவாகக் கூறப்படுவதைவிட மவுண்ட் பேட்டனிடம் அதிகத் தகுதிகள் இருந்தன. அவரது கடற்படை சீருடையை அலங்கரிக்கும் பதங்கள்களே இதற்கு சான்றாகும். பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஒரு தூணாக அவரை மக்கள் கருதினார்கள். ஆனால் நிர்வாகமோ மவுண்ட்பேட்டனையும் அவரது மனைவியையும் ஆபத்தான சீர்திருத்த வாதிகளாகக் கருதியது. தென்கிழக்கு ஆசியப்பகுதியில் தளபதியாக இருந்ததால் ஆசியாவின் தேசியஇயக்கங்கள்பற்றி இங்கிலாந்தில் ஒருசிலர் தெரிந்து வைத்திருந்ததைவிட அதிகமாகவே அவர் தெரிந்து வைத்திருந்தார். இந்தோசீனாவின் ஹோசிமின், இந்தோனேஷியாவின் சுகர்னோ, பர்மாவின் ஆங்சான், மலாயாவின் சீனக் கம்யூனிஸ்டுகள், சிங்கப்பூரின் கட்டுப்பாடற்ற தொழிற்சங்க வாதிகள் ஆகியோரின் ஆதரவாளர்களுடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. ஆசியாவின் எதிர்காலப் பிரதிநிதிகள் இவர்கள்தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால் தான் அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட வலியுறுத்தியபோதும் அதனைச் செய்யாமல் அரவணைத்துச் சென்றார். அவர் இந்தியாவுக்குச் சென்றால் எதிர்கொள்ள வேண்டிய தேசிய இயக்கம் மிகவும் பழமையானதாக இருக்கும்; மற்றெல்லாவற்றையும் விட வித்தியாசமானதாகவும் இருக்கும். கா்ல் நூற்றாண்டு காலம் இங்கே நடந்த உணர்ச்சிகரமான போரட்டங்கள், வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யம் அட்லி கட்சியின் மூலம் ஒரு முடிவுக்குவர வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆயுதம் தாங்கிய போராளிகள் மற்றும் மக்கள் எழுச்சியால் விரட்டப்படும் முன் இந்தியாவிலிருந்து உரிய நேரத்தில் பிரிட்டன் வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. பக்கம்--37
    ------------சமரசம் செய்யஇயலாத இவ்விரு தீவிர நிலைகளுக் கிடையே சிக்கிய பிரிட்டன், புதைமணலில் மெல்ல மெல்ல மூழ்குவதாகவும் இதிலிருந்து வெளிவர வழியே இல்லை என்றும் நினைத்தது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகள் பல தடவை தோல்வியுற்றன, நிலைமை மிகவும் மோசமானபோது, அப்போதைய வைஸ்ராயும், பெருந்தன் மையும் உறுதியும் மிக்க ஃபீல்ட் மார்ஷல் ஆர்க்சிபால்ட் வேவல் (Sir Archibald Wavell) அட்லி அரசுக்கு கடைசி கட்டப் பரிந்துரைகளை அளித்தார். எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்டால், நாங்கள் எங்களுக்கு வசதியான நேரத்தில் எங்கள் இஷ்டம் போல் எங்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறுவோம் எங்கள் முயற்சியில் எவராவது தலையிட்டால் அது போராகக் கருதப்பட்டு படைவலிமை முழுவதையும் பயன்படுத்தி அதனை சந்திப்போம்என்று பிரிட்டன் அறிவிக்க வேண்டும் எனபதுதான் அந்த யோசனை.
---------------- வெகுதூரத்திலிருந்து ஆட்சி செய்தார்கள் என்பது அவர்களின் பலவீனமாக இருந்தது. தாங்கள்தான் உயர்ந்த வர்களென்ற இறுமாப்பு ஆளப்படுகின்றவர்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்தியது. இனப்பெருமையால் இறுமாந்திருந்த அவர்களின் குணம்பற்றி அந்த நூற்றாண்டின் இறுதியில் நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி ஒருவர் ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டது போல் வேறெவரும் சொல்லியிருக்க முடியாது. ங்கிலேய அதிகாரியின் தனித்த பங்களாவின் தோட்டக் காரனுக்கு உதவியாளாக இருப்பவர் முதல் மாகாணத் தலைநகரில் வசிக்கும் பத்திரிகை ஆசிரியர் இடையிட்டு, மன்னராட்சியில் வைஸ்ராய்க்கு அடுத்தபடியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைமை ஆணையர் முடிய மேலிருந்து கீழ்வரை இந்தியாவில் இருந்த ஒவ்வொரு ஆங்கிலேயனுக் கும் ஒரு எண்ணம் இருந்தது. ஆளவும் அடிமைப் படுத்தவும் கடவுளால் விதிக்கப்பட்ட ஓர் இனம் நம்முடையது என்ற எண்ணம்தான் அதுஎன்று அவர் கூறினார்.
            முதல் உலகப்போரில் இந்த இனத்தைச் சேர்ந்த 6,80,000 பேர் படுகொலை செய்யப்பட்டதால் இந்தியா பற்றி அவர்கள் கொண்டிருந்த கனவுகள் முடிவுக்கு வந்தன. எல்லைப்புறப் பாதுகாவலராகவும், மாவட்டங்களின் நிர்வாகி யாகவும், பரந்த மைதானங்களில் போலோ விளையாடுவதற்காகுள்ளக்குதிரைகள் மீது சவாரிசெய் பவர்களாகவும் இருக்கவேண்டிய ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரும் ஃப்ளான்டர்ஸ் (Flanders) போர்க்களத்தில் மடிந்தார்கள். 1918லிருந்து ஐசிஎஸ் அதிகாரிகளை நியமிப்பதும் சிரமமாயிற்று. இதனால் நிர்வாகம் மற்றும் ராணுவத்தில் இந்தியர்கள் அதிகாரிகளாக வருவது ஏற்கப்பட்டது; எண்ணிக்கை அதிகரித்தது.
            1947 புத்தாண்டு தினத்தின்போது 400 மில்லியன் (40 கோடி) மக்கள்மீது ஆட்சி செலுத்தினாலும் இந்தியாவில் வெறும் ஆயிரம் ஐசிஎஸ் அதிகாரிகள்தான் பிரிட்டனைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். லண்டனில் நடந்த ரகசிய உரையாடலாலும், வலுமிக்க வரலாற்றின் நீரோட்டத்தாலும் வெளியேறப்போகிற, காலத்துக்கு ஒவ்வாத, மேன்மை தங்கிய பிரிவின் கடைசிக் குழுவாக இவர்கள் இருந்தார்கள். ------பக்கம்-48
வரலாற்றுச் சிறப்பமிக்க அந்த அறிவிப்பை அட்லி படிக்கத் தொடங்கியதும் குளிர் நிறைந்திருந்த அவ் அறையில் ஒரு வித கிளர்ச்சி உருவானது. மேன்மை தங்கிய மன்னரின் அரசு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறதுஅட்லி உரையைத் தொடங்கினார். ‘1948 ஜூன் மாதத்துக்கு முன்னால் ஒரு தேதியில் பொறுப்பு மிக்க இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவர்களின் உறதியான விருப்பம்என்று அவர் கூறினார்.
                அவரது வார்த்தைகள் மக்களவையில் இருந்த உறுப்பினர்களின் மனதில் பதிந்த போது அங்கு அசைவற்ற அமைதி நிலவியது. வரலாற்றின் தவிர்க்க முடியாத விளைவு இது; பிரிட்டன் தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டதுதான் இது என்பதெல்லாம் அங்கு சூழ்ந்த சோகத்தைக் குறைக்கப் பயன்படவில். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வெறும் பதினான்கு மாதங்கள்தான் இருக்கப் போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து விட்டதுதான் இதற்குக் காரணம். பிரிட்டிஷார் வாழ்க்கையில் ஒரு சகாப்தம் முடியப் போகிறது. வரலாற்றில் மாபெரும் உறவு துண்டித்தல்?’ தொடங்கப்போகிறது என்று அடுத்த நாள் காலையில் மான்செஸ்டர் கார்டியன் இதழ் குறிப்பிடக் கூடும்.’ -94

பிரித்தானியர் தம்மீது தாமே போட்டுக்கொண்ட தீக்குழம்புகள்.

      இந்தியாவில் சாகசத்துக்குப் பிரிட்டிஷார் அளித்த மனித விலையின் கணக்கைக் காட்ட கல்லறைகளைத் தவிர வேறு சாட்சியம் தேவையில்லை. வரிசைவரிசையாக அமைந்த கல்லறைகளிலும் மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தவை சிறியஅளவிலான கல்லறைகள்தான். ஒவ்வொரு கல்லறை யிலும் இவ் வகையிலானவை மலைக்கச்செய்யும் எண்ணிக் கையில் இருந்தன. இவை குழந்தைகளின் கல்லறைகள் தங்கள் தாய்நாடான இங்கிலாந்தில் இருந்திருந்தால் ஒரு போதும் சந்தித்திருக்க வேண்டாத தாங்கமுடியாத வெப்பத்தாலும் நோய்களாலும்தான் அந்தக் குழந்தைகளும் சின்னஞ் சிறார்களும் இறந்தனர். பக்கம்--47
முஸ்லீம் மக்களின் ஆதங்கம்; இந்து தேசியம் என்ற சிலுவையில் நம்மை நாமே அறைந்து கொள்ளக் கூடாது.
            இறை நம்பிக்கை கொண்ட எல்லோரும் சகோதரர்கள் என்பதுதான் இஸ்லாம் மார்க்கமென்று கருதிய முஸ்லீம்க ளுக்கு இச் சாதியமுறை ஒரு சாபமாகவே தோற்றியது. இதனால்தான் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கருணையும், வரவேற்பும், சகோதரத்துவமும் நிறைந்த இஸ்லாம் மதத்துக்கு மாறி மசூதிகளுக்குச் சென்றனர். தவிர்க்க முடியாதபடி, இவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். தங்களின் சொந்தமதம் தங்களை ஒதுக்கப்பட்ட பிறவியாகவே நடத்தியதால் இஸ்லாமின் சகோதரத்துவம் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது.  பக்கம்--57
                ---------பிரிட்டிஷ் ஆட்சி அனுமதித்த மிகவும் குறைவான சலுகைகளைக்கூட தங்களது முஸ்லீம் எதிராளிகளுடன் பகிரந்துகொள்ள குறுகிய மனம் கொண்ட உள்ளூர் காங்கிஸ் தலைவர்கள் மறுத்துவிட்டார்கள். இது முஸ்லீம்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதனால் முஸ்லீம்கள் மனதில் ஒருவகை அச்சம் வளரந்தது. சுதந்திர இந்தியாவில், பெரும்பான்மையினரான இந்துக்கள் ராஜ்யத்தில், தாங்கள் அமுக்கப்படுவோம், ஒரு காலத்தில் முகலாய சக்ரவர்த்திகள் ஆட்சிசெய்த பூமியில் எந்த அதிகாரமும் அற்ற சிறுபான்மையினராக வாழ்வது சிரமம்என்று அவர்கள் நினைத்தனர்.
                இந்த அழிவிலிருந்து தப்பிக்கும் வழியாக இவர்கள் மனதில் தோன்றிய ஒரு வழிதான் துணைக்கண்டத்தில் தனியாக ஒரு முஸ்லீம் நாட்டை உருவாக்குவது என்பது. இந்திய முஸ்லீம்கள் அவர்களுக்கென்று சொந்தமான ஒரு நாட்டை அமைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் முறைப்படி முதன் முதலில் உருவானது கேம்பிரட்ஜ் நகரின் ஹம்பர்ஸ்டோன் சாலையில் 3ஆம் எண் கொண்ட முக்கியத் துவம் பெறாத ஒரு ஆங்கிலேயரின் குடிசை வீட்டில்தான் தட்டச்சுக்குப் பயன்படும் காகிதத்தில் நாலரை பக்கத்தில் இத் திட்டம் உருவானது. இதனை உருவாக்கியவர் நாற்பது வயதான இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஒரு பட்டதாரி மாணவர். அவரது பெயர் ரஹமத் அலி. அவரது உத்தேச திட்டத்தின் தலைப்பில் இடப்பட்டிருந்த தேதி 28 ஜனவரி 1933. இந்தியா ஒரேநாடு என்ற எண்ணம் அறிவுக்குப் பொருந்தாத ஒரு பொய்என்று அலி எழுதினார். முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்ற பஞ்சாப், காஷ்மீர், சிந்து, ஃபிரண்டைர்; பலுச்சிஸ்தான் என்ற இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களிலிருந்து முஸ்லீம் நாடு உருவாக்கப்பட வேண்டுமென அவர் கோரினார். அவரது புதிய நாட்டுக்கான பெயரைக்கூட அவர் முன் மொழிந்திருந்தார். புதிய நாட்டில் இடம் பெறவேண்டிய மாகாணங்களின் பெயர்களை உள்ளடக்கியதாக அப்பெயர் இருந்தது. அதுதான் பாகிஸ்தான்- புனிதர்களின் பூமி’.
                நகைப்புக்குரிய உருவகமாக இருந்தாலும், ஆவேசத்துடன் அவரது திட்டத்தை இப்படி முடித்திருந்தார். இந்து தேசியம் என்ற சிலுவையில் நம்மை நாமே அறைந்து கொள்ளக் கூடாது’.
(பஞ்சாபிலிருந்து PA காஷ்மீரிலிருந்து KI சிந்துவிலிருந்து S பலுச்சிஸ் தானிலிருந்து TAN என்று பாகிஸ்தான் (Pa-ki-s-tan) என்று பெயர் உருவாக்கப்பட்டது. மொ.ர்). பக்கம் 61
            ---------------------   ஆகஸ்ட் 16 விடியற்காலையில் இந்தக் குடிசைகளிலிருந்த முஸ்லீம் கும்பல் மதவெறி கோஷங்க எழுப்பிக் கொண்டு வெளிக்கிளம்பியது. மனித மண்டை ஓட்டைப் பிளக்கத் தகுதியான குண்டாந்தடிகள், இரும்புக் குழாய்கள், மண்வெட்டிகள் போன்ற ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தன. ஆகஸ்ட் 16நேரடி நடவடிக்கை நாள்என்ற முஸ்லீம் லீக் விடுத்த அறைகூவலை ஏற்றே அவர்கள் வந்தார்கள். தங்களுக்கென்றுபாகிஸ்தானைப் பெறத் தேவைப் பட்டால் நேரடி நடவடிக்கையில்இறங்கவும் இந்தியாவின் முஸ்லீம்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை பிரிட்டனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உணர்த்து வதற்காகவே இந்த அறைகூவல்.
                தங்கள் வழியில் தென்பட்ட இந்துக்கள் யாராயிருந் தாலும் அவர்களைக் கொடுமையாகத் தாக்கிக் கூழாக்கினர். அந்த உடல்களை நகரின் திறந்தநிலை சாக்கடைகளில் அமுக்கினர். இதைக்கண்டு அச்சம்கொண்ட காவல் துறை யினர் ஏதும் செய்யாமல் அங்கிருந்து மறைந்து விட்டனர். நகரின் பல பகுதிகளிலிருந்து விண்ணில் எழுந்த புகை மூட்டம் உயர்ந்துநிற்கும் கருப்புத் தூண்கள் போல் தோன்றின. இந்துக்களின் கடைவீதிகள் முழுதும் எரிக்கப் பட்டதன் விளைவு இது.
                இதையடுத்து பாதுகாப்பற்ற முஸ்லீம்களை கசாப்பு செய்ய தங்கள் குடியிருப்புகளிலிருந்து இந்து மதக் கும்பல் புயல்போல் கிளம்பியது. கல்கத்தா நகரின் வன்முறை வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை; 24 மணி நேரமும் மனிதர்களின் கோரத் தாண்டவம் நடந்தது. நீர் உறிஞ்சிய மரக்கட்டைகள் போல உப்பிய சடலங்கள் ஹூக்ளி ஆற்றில் மிதந்து கடலை நோக்கிச் சென்றன. மற்ற உடல்கள் கொடூரமாக சிதைக்கப் பட்டு நகரின் வீதிகளில் குப்பைகள்போல் சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் பலவீனர்களும் ஆதரவற்றவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். நாற்சந்தி ஒன்றில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம் கூலிகளின் உடல்கள் வரிசையாகக் கிடந்தன. ரிக்சா கம்பங்களுக்கிடையே இருந்த முஸ்லீம் களைக் கண்ட இந்துக்கும்பல் இச்செயலை செய்தது. கொலைகள் நடந்து முடிந்திருந்த வேளையில் கல்கத்தா நகரம் வல்லூறுகளால் நிறைந்திருந்தது. அவலட்சணமான அந்தச் சாம்பல் நிறக் குழுகுகள் வானத்தில் வட்டமிட்டன. நகரில் இறந்து கிடந்த 6000 உடல்களைக் கொத்திக் கிழிக்க அவை கீழிறங்கி வந்தன.
                கல்கத்தாவின் கோரப்படுகொலைகள் என்று பின்னாளில் அறியப்பட்ட இச் சம்பவம் நவகாளியில் ரத்த ஆறு ஓடக் காரணமானது. இங்கே தான் காந்தி இருந்தார். மேலும் பீகாரிலும், இதற்கு நேர்எதிரில் துணைக் கண்டத்தின் மற்றொரு பகதியாக இருந்த பம்பாயிலும் ரத்தக் களரிகள் நிகழ்ந்தன.
                இந்தச் சம்பவங்கள் இந்திய வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டன. தங்களுக்குத் தனிநாடு என்பது மறுக்கப் பட்டால், இந்தியாவைப் புரட்டியெடுக்கும் கொந்தளிப்பு ஏற்படும் என்று பல ஆண்டுகளாக முஸ்லீம்கள் விடுத்து வந்த எச்சரிக்கைகளும் மிரட்டல்களும் இப்போது அச்சம் விளைவிக்கும் உண்மையாயின திடீரென்று ஏற்பட்ட கோரக் காட்சியால் இந்தியா பாதிக்கப்பட்டது. அந்த உள்நாட்டு யுத்தம்தான் காந்தியை சோர்வடையச் செய்து நவகாளியின் காடுகளில் பயணம் மேற்கொள்ள அனுப்பியது. பக்கம்62-6

காந்தியின் சாதி-பிராமணியரல்ல.
         காந்தியின் தந்தை பரம்பரை திவான். பம்பாய் அருகே கத்தியவார் என்ற சிறிய தீபகற்பப் பகுதியின் முதன்மை அமைச்சராக இருந்தார். சமயம் சார்ந்த பல நோன்புகளை நோற்று ஆழ்ந்த பக்திமானாக இருந்தார் அவரது அன்னை.
                பொதுவாக இந்து மதத்தின் பாரம்பரிய தத்துவங் களையும் சமயச்சடங்குகளையும் பராமரிப்பவர்கள் பிராமண ர்கள் என்று சொல்வார்கள். நவீன யுகத்தில் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகத் தலைவராய் வரப்போகிற காந்தி பிராமண சாதியில் பிறக்கவில்லை என்பதுதான் ஆச்சரிய மான விஷயம். தந்தை வைஸ்யகுலத்தவர். வியாபாரிகள் மற்றும் சிறுவணிகர்களைக் குறிக்கும் வர்ணம் இது. இந்து சமூக அளவுகோலில் இவர்கள் பாதிஅளவுக்கும் சற்று உயர்ந்தவர்கள். தீண்டத்தகாதவர்களுக்கும் கைவினைஞர் களான சூத்திரர்களுக்கும் மேலானவர்கள்; ஆனால் பிராமணர்களுக்கும் போர் வீரர்களான சைத்தியர்களுக்கும் கீழானவர்கள். பக்கம் 77

காந்தியின் கருத்தியல் கட்டுமானம் -பிராமணியமல்ல

            பைபிளில் இடம்பெற்றதொரு பகுதிதான் முதன்முதலில் காந்தியை அஹிம்சைபற்றி சிந்திக்கவைத்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத் தைக்காட்டு என்று கிறிஸ்து தனது சீடர்களுக்கு வழங்கிய அறிவுரை யால் அவர் மிகவும் கவரப்பட்டார். நிறைய வெள்ளையர்கள் அடித்தபோது அதையெல்லாம் தன்னடக்கத்துடன் தாங்கிக் கொண்ட அந்தக்குள்ள மனிதர் தமது கொள்கையை தாமே பின்பற்றியிருக்கிறார். கண்ணுக்குக் கண் என்ற கொள்கையைக் கடைப் பிடித்தால் பார்வையற்றவர்களின் உலகத்தைத்தான் உருவாக்கமுடியும் எனக் கூறினார். ஒரு மனிதனின் தலையைச்சீவுவதன் மூலம் அவனது பழக்கங்களை மாற்றிவிட முடியாது. வன்முறை என்பது வன்முறையாளனைக் காட்டுமிராண்டி யாக்குகிறது; வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடம் கசப்புணர்வை வளர்க் கிறது. நல்ல உதாரணங்களைக்காட்டி மனமாற்றத்தைத் தூண்டுவதும், மனிதபலத் தைக்கொண்டு மனிதர்களைப் பிரிப்பதற்குப் பதிலாக கடவுள் பலத்தைக் கொண்டு மனிதர்களை இணைப்பதுமான தத்துவத்தையே காந்தி தேடினார்.  பக்கம் 82
              ---------      சிறையில் இருக்கும் போது காந்தியின் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் உலகின் மிகச்சிறந்த நூல்களில் இரண்டாவதான ஹென்றி தேரோவின் சிவில் ஒத்துழையாமைஎன்ற நூலை அவர் படித்தார். அடிமை முறையைப் பாதுகாக்கும் அமெரிக்க அரசை எதிர்த்துக்கொண்டும் அது மெக்ஸிக்கோவில் நடத்தும் அநீதிப்போருக்கு எதிராகப் போராடிக் கொண்டும் இருந்த தேரோ (Thorou) நியாயமற்ற சட்டங்களைப் புறக்கணிக்கவும் தாங்க முடியாத கொடுமைகள் செய்யும் அரசுடன் ஒத்துழைப்பதை மறுக்கவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு என்றார். சட்டத்தை மதிப்பதைவிட நேர்மையாக இருப்பது மிகவும் பெருமைக்குரியது என்றும் அவர் கூறினார்.
              -----------------           மூன்றாவது நூல் டால்ஸ்டாயின் கடவுளின் ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதுஎன்பதாகும். ஒருவது நீதிக்கோட்பாடுகளை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத் தவேண்டும் என்ற டால்ஸ்டாயின் வற்புறுத்தலை காந்தி பெரிதும் மதித்தார். அஹிம்சை, கல்வி, உணவுப்பழக்கம், தொழில்மயம் ஆகியவற்றில் வியக்கத்தக்க இருவரும் வியக்கத்தக்க வகையில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். டால்ஸ்டாயின் மரணத்துக்கு முன் இருவரும் கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர். பக்கம் 82-83

காந்தியின் சாத்வீகம்

                இரண்டாம் உலகயுத்தம் மூளுவதற்கான நிலைமைகள் உருவாயின முன்னெப் போதையும்விட அஹிம்சை இப்போது முக்கியத்துவம் பெறுவதாக காந்தி கருதினார். மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக் கொள்வதிலிருந்து அதைனைக் காப்பதற்கான ஒரே தத்துவம், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வழிகாட்டு நெறியாக இருந்தது.
                முஸோலினி எத்தியோப்பியாவைக் கைப்பற்றியபோது உ்ங்களைக் கொன்றுகுவிக்க அனுமதித்துவிடுங்கள்என்று எத்தியோப்பியர்களிடம் காந்தி வலியுறுத்தினார். எதிர்த்துப் போரிடுவதைவிட இதன் விளைவு மிகவும் வலுவானதாக இருக்கும். ஏனெனில் முஸோலினி ஒரு பாலைவனத்தை விரும்பமாட்டார்என்றும் அவர் கூறினார். யூதர்களை நாஜிகள் கொன்று குவிப்பதுபற்றி மனம் வருந்தினார். மனித குலத்தின் பேரால் மனித குலத்துக்காக யுத்தம் நியாயப்படுத்தப்பட்டால், ஒரு இனம் ஒட்டுமொத்தமாக வேண்டுமென்றே படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க ஜெர்மனிக்கு எதிரான யுத்தமும் முழுமையாக நியாயப்படுத்தப்படும்என்று அவர் அறிவித்தார்.
                இன்னமும் போரில் நான் நம்பிக்கை வைக்கவில்லைஅவர் மேலும் கூறினார். யோவாவினால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் வலுவைக் காட்டுவதில், நிராயுதபாணிகளான ஆண்களும் பெண்களும் அமைதியாகவும் தீர்மானகரமாகவும் இருக்கவேண்டும்என்றும் அவர் யோசனை கூறினார். இந்த செயல் ஜெர்மானியர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி, மனித குல மாண்பை உணர வைக்கலாம்என்றும் அவர் கூறினார்.
                முடிவில் இரண்டாம் உலகயுத்தம் வெடித்துவிட்டது. புயலுக்குப்பின் தோன்றும் சூரிய ஒளிபோல, இந்த யுத்தத்தின் பேரழிவுக்குப்பின் தீரத்தின் வெளிப்பாடான தியாகம் நிறைந்த அஹிம்சை ஒளி பிறக்கவேண்டும் என்று காந்தி பிரார்த்தித்தார். சுயஅழிவு என்ற இறுக்கமான சுழற்சியிலிருந்து விடுபட மனிதகுலத்துக்கு இது வழிகாட்டட்டும் என்றும் அவர் கூறினார்.
                ரத்தம், கடின உழைப்பு, கண்ணீர், வியர்வைஆகியவற்றைக் கோரி தமது நாட்டு மக்களிடம் சர்ச்சில் வேண்டுகோள் விடுத்த வேளையில், தமது கொள்கையை சோதித்துப் பார்ப்பதற்குப் போதியளவு தீரம் ஆங்கிலேயர்களிடம் இருக்கிறது என்று நம்பிக்கை கொண்ட காந்தி வேறொரு யோசனையை முன்வைத்தார். ஹிட்லரையும் முஸோலினி யையும் அழையுங்கள் உங்கள் நாடுகளிலிருந்து விரும்பும் அளவுக்கு உங்கள் சொத்துக் களை எடுத்துச் செல்ல அவர்களை அனுமதியுங்கள்என்றும் விமானப் படை தாக்குதல் உச்சத்தில் இருந்த போது ஆங்கிலேயர்களுக்கு அவர் இப்படி எழுதினார்.
                உங்கள் அழகிய தீவிலிருந்து கண்ணைக் கவரும் கட்டிடங்களுடன் உங்களின் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் எடுத்துச்செல்லட்டும், அனைத்தையும் நீங்கள் கொடுத்து விட்டாலும், உங்களின் மனங்களையும் உயிர்களையும் ஒரு போதும் கொடுத்து விடமாட்டீர்கள்என்றும் காந்தி கூறினார். பக்கம் 100-101
                கிரப்ஸ் வந்துசேர்ந்த நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குப் பின்னால், காந்தி அவரிடம் சொன்னார்: இந்த யோசனை ஏற்கத்தக் கதல்ல; ஏனென்றால் இந்தியாவை நிரந்தரமாகத் துண்டாடும் திட்டமாக இது இருக்கிறதுஇந்திய மண்ணைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்தியர்களின் ஒத்துழைப்பை உடனடியாகப் பெறவேண்டியே (ஜப்பானுக்கு எதிராக) எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதாகப் பிரிட்டிஷார் தெரிவிக்கின்றனர். அஹிம்சை கொள்கையில் உறுதியோடிருந்த அந்த தேவதூதருக்கு இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை. ஜப்பான் எதிர்க்கப்பட வேண்டுமானால், காந்தியைப் பொறுத்தவரை அது அஹிம்சை வழியில் மட்டுமே. --102
                என்னிடம் ஒரு மந்திரம் உள்ளது. அந்த சிறிய மந்திரத்தை நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்ஆதரவாளர்களைப் பார்த்து காந்தி கூறினார். செய் அல்லது செத்து மடிநாம் இந்தியாவை விடுவிப்போம்; அல்லது அந்த முயற்சியில் செத்து மடிவோம்; நமது அடிமைத்தனம் நிரந்தரமாவதைக் காண நாம் உயிர்வாழக் கூடாது.
                பொழுது புலருமுன் காந்தி சுதந்திரம் பெறவில்லை; மாறாக பிரிட்டிஷ் சிறைக்குச் செல்ல மீண்டும் அழைப்பு வந்தது. மிகவும் கவனமுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி போர்க்காலம் முழுவதும் காந்தியையும் ஒட்டமொத்த காங்கிரஸ் தலைவர்களை யும் அள்ளிச்சென்று சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தெடர்ந்து ஆங்காங்கே வன்முறைகள் தலைதூக்கின. ஆனால் மூன்று வாரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
                மிகவும் முக்கியமான நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களை அரசியல் களத்தி லிருந்து அகற்றியதன் மூலம், காந்தியின் செயல் தந்திரத்தை முஸ்லீம் லீக் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் வாடியபோது, அவர்களின் எதிராளிகளான முஸ்லீம் தலைவர்கள் பிரட்டனின் போர் முயற்சிகளுக்கு ஆதரவு தெரவித் தனர். தங்களின் செயல்மூலம் பிரட்டிஷாரிடம் கணிசமான நன்மதிப்பைப் பெற்றனர். காந்தியின் திட்டம் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றத் தவறியது மட்டுமல்ல, நாட்டை விட்டுச் செல்லுமுன் இந்தியாவைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை உறுதிப்படுத்தவும் செய்து விட்டது. --103
                ஒருசில நாட்களுக்குப்பின் காந்தி தங்கியிருந்த குடிலுக்குள் பணக்கார ஆதராவாளர் வந்தார். காந்தியின் சீடர் ஒருவர் தலைகீழாகநின்று சிரசாசனம் செய்வ தையும், மற்றொருவர் எல்லையற்ற பரம்பொருளைத் தேடும் தியானத்தில் ஆழ்ந்திருப் பதையும் மூன்றாவது நபர் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதையும் மகாத்மாவே கூட அவரது கழிப்பறையில் அமர்ந்து அண்ட வெளியை வெறித்து நோக்கிக் கொண்டிருப் பதையும் அவர் கண்டார்.
                அவர் வாய்விட்டுச் சிரித்தார். கழிப்பறையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த காந்தி, ‘அவர் ஏன் சிரிக்கிறார்என்று கேட்டார். 
                வீட்டுரிமையாளர் சிரித்துக் கொண்டே சொன்னார்: ஓ பாபு! இந்த அறையைப் பாருங்கள். ஒருவர் தலைகீழாக நிற்கிறார், இன்னொருவர் தியானம் செய்கிறார், மூன்றாவது நபர் தூங்கிக் கொண்டிருக்கிறார், நீங்களோ கழிப்பறையில் இருக்கிறீர்கள்-இவர்கள்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரப் போகிறவர்களா!  பக்கம்----105

நூல் விபரம்:-- “நள்ளிரவில் சுதந்திரம்ஆக்கியோர்—டொமினிக் லேப்பியர்& லேரி காலின்ஸ். அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 002

                      இந்தியாவின் தேசபிதாபற்றிய சில குறிப்புகள்.       “நள்ளிரவில்சுதந்திரம்” எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...