Monday, 15 October 2018

Southasian Monsoon, தெற்காசிய வசந்தம்.

Southasian Monsoon, தெற்காசிய வசந்தம்.
                        தெற்காசிய சோஷலிஸ்ட் ஜனநாயக                     மாணக்கர்களை                                                          Southasion Socialist  Students-களை அணுகுவதற்குரிய குழுவாகும்.       Socialist                         Democratic இன் தமிழ் பெயர் என்ன?       தமிழ்படுத்துவது சற்று சிரமமாக உள்ளது.

        எனது சிக்கல்களை முன்வைக்கிறேன், தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

        ஏனெனில் Socialism எனும் ஆங்கிலப் பதத்தைக் குறிப்பிட பயன்பாட்டிலுள்ள எத்தமிழ் பதத்துடனும் என்னால் இணங்கிப் போக முடியவில்லை. இன்று பயன்பாட்டிலுள்ள தமிழ் பதங்கள் சமதர்மம், சமஉடமை, சம உரிமை, சமநீதி என்பனவேயாகும். இவை தவறானவை.
(1) சம உடமை:- Socialism, சமூகத்தில் காணப்படும் உறுப்பினர்களின் உடமைகளின் (தனிச் சொத்துக்கள்) உரிமையை சமனாக்குகிறது எனும் அர்த்தம் தொனிக்கிறது.
       இது மிகத் தவறானது. சோசலிஸம் சமூகத்தில் காணப்படும் தனிச்சொத்துக்களின் உரிமையை சமனாக்குகிறது என்றே சொல்லவருகிறது. சோசலிஸம், தனிச் சொத்துக் குவித்தலுக்கு எதிரானதே தவிர, சொத்துக் குவித்தலுக்கு எதிரானதல்ல. மாறாக சோஷலியத்தின் முதற்படி   பண்ட உற்பத்திச் சொத்துக்கள் அரசின் கைகளில் குவிவதையும், கூட்டுறவுகளின் கைகளில் குவிதலையும் ஊக்கிவிக்கிறது, மனிதர்களைப் பண்ட உற்பத்திச் சொத்துகள் உடமையில் இருந்து விடுவிக்கிறது. இவ்வித சொத்துக்களை கூட்டுடமையாக் குகிறது, சமூக உடமையாக்குகிறது. சோஷலிஸத்திற்கு சம உடமை எனும்  அர்த்தத்தை கொடுத்தது மூலதனக் குவியலால் அல்லலுறும் அதேவேளை அதிலிருந்து விலகவும் விரும்பாத, முட்டி முதலாளித்துவ வாதிகளேயாகும். சோஷலிஸம் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமே தவிர குட்டி முதலாழித்துவ தத்துவமல்ல.
        சமதர்மம், சமநீதி, சமஉரிமை, ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம்; சோஷலிஸ சமூகத்தின் பொருளாதார அல்லது பண்பாட்டு அல்லது அரசியல் கட்டுமானங்களில் தமக்குள்ள அதிகாரத்தை வைத்துக்கொண்டு, தமக்கென்றோர் தனியான தர்மத்தையும், தனியான நீதியையும் தனியான உரிமையையும் வைத்துள்ளவர்களின் அதிகாரங்களைப் பறித்தல்தான் சோஷலிஸ சமுதாயத்தில் நடைபெறும் நேர்மையான வலிமையான வர்க்கப் போராட்டமாக இருக்கும். இதில் வென்றால்தான் சோஷலிஸ சமூகம் கம்யூனிஸ சமூகமாக மாறும்  தனது இலட்சியத்தை அடையும். இதனால் சமதர்மம், சமஉடமை, சமநீதி போன்ற பதங்களால் சோஷலிஸத்தைப் புரிந்து கொள்ளல் மிகத் தவறானது. இவ்வித புரிதல் சோஷலிஸ சமூகத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை நிராகரிப்பதாகும்; இவ் வர்க்கப் போராட்டத்திற்கு அவசியமான மகத்தான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிராகிப்பதாகவும் அமையும். இதுதான் ருஷ்யாவில் நடந்த மிகப்பெரும் தவறாகும். தெற்காசிய பிராந்திய அனைத்துத் தேசியவாதிகளும் சமதர்மம், சமஉடமை, சமநீதி பற்றியெல்லாம் முழங்கித் தள்ளுவதில் சளைத்தவர்களல்ல, அதேவேளை இவர்கள் மகத்தான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுக்கு எதிராகவும் உள்ளார்கள்.
      ஆகவே, சோஷலிஸத்திற்கான தமிழ் சொற்பதமெதுவும் கிடைக்காததால், அவ்வித மொன்று உருவாகும்வரை சோஷலிஸம் எனும் ஆங்லிலப் பதத்தையே பயன்படுத்துகிறேன்.
                 சோஷலிஸ ஜனநாயகம் எனச்  சொல்வதேன்?
     தெற்காசிய முதலாளித்துவம் தனது முதிர்ச்சியை அடைந்து விட்டது. இதன் வளர்ச்சி ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்ரேலிய முதலாளித்துவத்தைப் போன்றதல்ல. இந் நாடுகளின் முதலாளித்துவங்களையும்விட தெற்காசிய முதலாளித்துவம் நவீனமானதும், சக்தி மிக்கதுவு மாகும். இப்பிராந்திய முன்-முதலாளித்துவ சமூகக் கட்டுமானத்துடன், குறிப்பாக பண்பாட்டு கட்டுமானத்துடன் நெருங்கிய உறவுகொண்டதாக உள்ளது முன்-முதலாளித்தவ, முதலாளித்துவ சமூகக் கட்டுமானங்கள் அந்நியோன்யமாக, ஒருவருடன் ஒருவர் பின்னிப் பிணைந்தவர்களாக உள்ளனர். இதுதான் தெற்காசிய முதலாளித்துவத்தின் பலமும், பலவீனமுமாகும். யுத்தகாலத் தில் தோன்றிவளர்ந்த முதலாளித்துவங்களைவிட யுத்த-பின்கால முதலாளித்துவமான தெற்காசிய முதலாளித்துவம் கெட்டியானதும், நீண்டகாலம் நிலைத்து நீங்காகக் கூடியதும் தொடர்ந்து வளரக்கூடியதுமாகும்.
     மதவாதத்துடன் பின்னிப் பிணைந்ததோர் சுதந்திரமுதலாளித்துவத்தை வேறெங்கும் காணமுடியாது. தனது சொந்தநாட்டின் சோஷலிஸத்தைத் தின்று வளர்ந்த ருஷ்யா முதலாளித்துவத்துடனான கூட்டு தெற்காசிய முதலாளித்துவத்தை மேலும் சக்திப்படுத்தும். இக் காரணங்களால் தெற்காசியப் புரட்சி இனியும் புதிய ஜனநாயகப் புரட்சியாகவோ, மக்கள் ஜனநாயகப் புரட்சியாகவோ இருக்க முடியாது. இவ்வித புரட்சிகளால் தெற்காசிய முதலாளித்துவத்தை அசைத்துப் பார்க்கவும் முடியாது.
        அப்பனுக்குப் பாடம்சொல்லிக் (ஐரோப்பிய, அமெரிக்க முதலாளித்துவம்) கொடுக்கும்அளவிற்கு தெற்காசிய முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றுவருகிறது.
        ஆகவே தெற்காசிய முதலாளித்துவ சர்வாதிகார அரசை அடித்துவீழ்த்தி அதன் சாம்பல்மேட்டில் ஓர் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவதுதான் தெற்காசிய புரட்சியின் உடனடிக் குறிக்கோளாகும்.
     கொழுந்துவிட்டெரியும் தேசியஇனப் போராட்டங்களின் மைதானந்தான் தெற்காசிய அரசியற்களமாகும். இது மகிழ்ச்சி கொள்ளக்கூடியதொரு விடயமே ஆனாலும், இவ் தேசிய இனப் போராட்டங்கள் சோஷலிஸத்தை நோக்கிப் பயணிக்காமல் விடுமானால் இப்போராட் டங்கள் தெற்காசிய முதலாளித்துவத்தை மேலும் பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது. தமிழீழப் போராட்டம், பலுதிஸ்தான் போராட்டம், காஷ்மீர் போராட்டம் ஆகியன இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள். சோஷலிஸ தமிழீத்தை, சோஷலிஸ பலுஸ்தீனத்தை, சோஷலிஸ காஷ்மீரை நோக்கிப் பயணிப்பதை விட குறுக்கு வழி எதுவுமில்லை. இதனால்தான் சோஷலிஸ ஜனநாயகப் புரட்சியெனும் முழக்கம் முன்வைக்கப்படுகிறது.     
 எதற்காக தெற்காசியப் பார்வை?
காரணங்கள் மூன்று:-
     (1) பொதுவான தனித்துவமான பண்பாட்டு, சித்தாந்தக் கட்டுமானம். அறமும் போராட்டமும்என்ற நூலையும், பின்வரும் கட்டுரையையும்  https://vidiyalgowri.blogspot.in/2017/07/munnurai1blog-post.html
     (2) தேசங்கள் இல்லா தெற்காசியா:-
        தெற்காசியாவில் தேசங்கள்என்று எதுவுமேயில்லை. இருப்பதெல்லாம் நாடுகளே. https://vidiyalgowri.blogspot.in/2017/06/ எனும் கட்டுரையைப் பார்க்கவும். இந் நாடுகளிடையே சமத்துவ உறவுகள் இல்லை. சனாதன குருதியின பேரகங்கரவாதக் குணாம்சங்கொண்ட இந்தியதேசியமே தெற்காசிய நாடுகளின் பெரியண்ணனாகஅல்லது கங்காணியாகஇருந்து வருகிறது. தனது இந்நிலையைத் தக்கவைக்க கடுமையாகச் செயற்பட்டும் வருகிறது. தெற்காசியாவின் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய எவ்வித அதிர்வுகள் எந்த மூலையில் நடந்தாலும் அதனால் அதிகம் மனம் வருந்துவதும், இதய படபடபக்கு உள்ளாவ்துவும், இவ் இந்திய அரசாகத்தான் உள்ளது. அதற்காகத்தான் தெற்காசியப் பார்வை அவசியப்படுகிறது.
     (3) உலகளாவிய முன்னணி :-
            அமெரிக்க ஆதிக்க, டாலர் ஆதிக்க ஓர் மைய உலகிற்கு எதிரான உலகளாவிய முன்னணியொன்று உருவாகிவருகிறது
     SCOவும், BRICSஉம் இதில் தலைமைப்பாத்திரம் வகித்துவருகின்றன. இவ் இரு முன்னணி களும் தமக்குள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டும் வருகின்றன. இவ் இரு அமைப்பிலும் இந்திய அரசு பெரும்பங்கு வகிக்கும்நிலை உருவாகிவருகிறது. வரவேற்க்கக் கூடிய இம் மாற்றத்தை முன்தள்ளிச் செல்ல தெற்காசிய நாடுகளினதும், தேசிய இனங்களினதும் பங்களிப்பு அவசியமானது. தெற்காசியாவின் அகநிலையைப் பொறுத்தவரை, தெற்காசிய தேசிய இனங்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் குழுமங்களினதும் எதிரியாக இருந்துவரும், இந்திய மத்தியரசு, தெற்காசிய மக்களின் நண்பனாக மாறவேண்டிய ஒரு அனைத்துலக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அதைப் புரிந்துகொண்டு வளர்திசைப் பாதையில் செயற்படுவதற்கான எத்தனத்தை எடுக்கவும் தொடங்கிவிட்டது. தெற்காசிய தழுவிய பார்வை இருந்தாலேயே இதைப் புரிந்துகொண்டு அதர்கொப்ப செயல்படமுடியும்.
மாணவர்கள் எனக் கூறுவது ஏன்?
   மாணவர்களை, மாணவர்கள் என்று அழைக்காமல் வேறு எவ்விதம் அழைப்பது?  “தெற்காசிய வசந்தம்”         ஒருஅரசியல் அமைப்புமல்ல, அரசியல் அமைப்பின் ஒரு அங்கமுமல்ல; அரசியல் அமைபை உருவாக்கும்     குறிக்கோளைக் கொண்டதுமல்ல. தெற்காசியப் புரட்சிதொடர்பான ஒரு சித்தாந்தை முன்நிறுத்துவதுடன்         தனது கடமையை நிறுத்திக்கொள்கிறது. இதற்கப்பால் இதனிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். இச்             சித்தாந்தை ஏற்றுக்கொண்ட பல அரசியல் குழுக்கள் தெற்காசியாவில் செயற்பட்டுவருகின்றன. இவற்றில்       பல தமக்குள் ஒன்றுபட்டும் வருகின்றன, பேதமுற்றும் வருகின்றன. சாதியஒழிப்பு அல்லது சாதியசமத்துவ     இயக்கங் களுக்குள்ளும், தேசியஇன விடுதலை இயக்கங்களுக்குள்ளும் கூட இச் சித்தாந்தம், அனுபவம்         தந்த  பாடங்களாக மிக மெதுவாக பரவ ஆரம்பித்துள்ளன. இச் சித்தாந்தத்துக்கான தேடல்                     அரம்பித்துவிட்டதைக் காணக்கூடியதாய் உள்ளது. தேடுவோர்கள் அனைவரும் மாணவர்களே. வெவ்வேறு       தோட்டத்தில்(இயக்கத்துள்) வளர்ந்தாலும் நூறல்ல ஆயிரம் பூக்கள்(மாணவர்கள்) மலர ஆரம்பித்துள்ளன.       இப்பூக்களின் தற்காலிக சந்திப்புக் களமே “தெற்காசிய வசந்தம்” ஆகும். “தெற்காசிய வசந்தம்” தனியான         தோட்டமல்ல, அனைத்து மலர்களும் தத்தமது தோட்டத் திலேயே வளரட்டும். விரும்புவர்கள் 
   இப்பாடசாலைக்கு வந்துபோகட்டுமே. அவ்வளவுதானே......?

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...